• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Recent content by SudhaSri

  1. S

    பகலிரவு பல கனவு - 26

    பகலிரவு பல கனவு - 26 பல நாட்கள் கழித்து தனது தோட்டத்தில் உலவிக் கொண்டிருந்தான் பிரபாகரன். வாழ்க்கையை இயல்பு நிலைக்குக் கொண்டு செல்லும் முயற்சியின் முதல் படியாக அன்று அதிகாலையில் எழுந்து தோட்டத்திற்கு வந்துவிட்டான். தென் மேற்குப் பருவமழை தேனியில் தனது முதல் சாரலைத் தூவிக் கொண்டிருந்தது...
  2. S

    இறுதி அத்தியாயம்

    அத்தியாயம் -19 திருப்புல்லாணி. அன்று பொழுது விடிந்த போது, அந்த சின்னஞ்சிறு ஊர் முழுவதும் மகிழ்ச்சி பொழிவுடன் காணப்பட்டது. சேதுபதி சீமையில் அமைந்துள்ள இத்தலம் இதிகாச பெருமை பெற்றது இங்கு ‘நன்னூல் நெறிப்படுத்திய புல்லில் கருணையங் கடல் துயிறனன் கருங்கடல் நோக்கி’ என கம்பராமாயணம் கடல் சீரிய...
  3. S

    அத்தியாயம் - 18

    அத்தியாயம் -18 இராமநாதபுரம்‌ அரண்மனை. அந்தப்புர வளாகத்தில்‌ உள்ள மகாராணியாரது அறை. ஹம்சதூளிகா மஞ்சகி கட்டிலில்‌ ஒரு புறத்தில்‌ சாய்த்து வைக்கப்பட்ட தலையணைகள்‌ மீது முதுகைச்‌ சாய்த்தவாறுமகாராணியார்‌ அமர்ந்திருந்தார்‌. பல மாதங்களாக நலிவுற்ற நோயாளி போன்ற தோற்றம்‌. அருகில்‌ நின்று...
  4. S

    அத்தியாயம் - 17

    அத்தியாயம் -17 இராமநாதபுரம்‌ அரண்மனை. இராமதாதபுரம்‌ கோட்டைத்‌ தளபதியும்‌ பிரதானியும்‌ அமர்ந்துநாட்டு நிலைமை பற்றிக் கலந்துரையாடிக்கொண்டிருந்தனர்‌. அப்பொழுது சிறைச்சாலை. சேர்வைக்காரர்‌ வந்து இருவருக்‌கும்‌ வணக்கம்‌ சொன்னார்‌. "என்ன செய்தி?" என்று தளபதி கேட்டார்‌. "அந்தக் கம்பளத்து...
  5. S

    அத்தியாயம் - 16

    அத்தியாயம் -16 இராமநாதபுரம் கோட்டை. நீராவி மாளிகை. மாலையில் மன்னர் தமது இருக்கைக்குச் சென்ற போது பிரதானியும் பணியாளர்களும் காத்திருந்தனர். மன்னரை வணங்கிய பிரதானி நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பொறுப்பாளர்கள் மற்றும் குடிமக்களிடம் இருந்து வந்திருந்த ஓலைகளை வாசித்துக் காண்பித்தார். சில...
  6. S

    அத்தியாயம் - 15

    அத்தியாயம் -15 இராமநாதபுரம் அரண்மனை. அந்தப்புரத்தின்‌ மேற்கு மதிலையாட்டி அமைந்தநந்தவனம்‌. தெற்கே இருந்து தவழ்ந்து வந்த மாலைத்‌ தென்றல்‌ அங்குள்ள மலர்களின்‌ மணத்தைப்‌ பறித்து அந்தப்‌ பகுதி முழுவதும்‌ பரப்பி மணம்‌ கொள்ளச்‌ செய்தது. ஏற்கனவே அங்கு அமர்ந்து தனிமையை நுகர்ந்து கொண்டிருந்த...
  7. S

    அத்தியாயம் -14

    அத்தியாயம் -14 அன்று வெள்ளிக்கிழமை. சாயங்காலம்‌ பூஜை முடிந்தவுடன்‌ ராமநாத சுவாமியும்‌ பர்வதவர்த்தினி அம்பாளும்‌ சிவிகையர்‌ சுமந்த சப்‌பரத்தில்‌ புதிய இரண்டாம்‌ பிரகாரத்தில்‌ உலா வந்தனர்‌. சிறப்பான அலங்காரங்களுடன்‌ முதன்முறையாக, புதிய இரண்டாம்‌ பிரகாரத்தில்‌ எழுத்தருளிய தெய்வத் திருமேனிகளை...
  8. S

    அத்தியாயம் - 13

    அத்தியாயம் -13 இராமேஸ்வரம் அரண்மனையில் உள்ள ஓர் அறையில் சில இருக்கைகளும்‌, கட்டில்களும்‌ ஆங்காங்கு காணப்பட்டன். அவைகளின்‌ மேல்‌ பகுதியினை முழுவதுமாக பஞ்சினால்‌ நிறைத்து, சீனப்‌ பட்டுத்‌ துணியினால்‌ மூடப்பட்டு இருந்ததால்‌ அவை கூடத்திற்கு அழகு சேர்த்தன. ஒரு. மூலையில்‌ மெதுவாக எரிந்து புகையாகி...
  9. S

    அத்தியாயம் -12

    அத்தியாயம் -12 ஆற்றங்கரைத்‌ தோப்பு. வீரசிம்மனும் அவனது "மகாராஜாவும்‌" இந்த தோப்பிற்கு வந்து மூன்று நாட்களாகிவிட்டன. அவர்கள்‌ இங்கு வருவதற்கு முன்னால்‌ தங்களது தோணியை நிறுத்தி பாம்பன்‌ தீவில்‌ இறக்கிவிடப்பட்ட தனுக்‌ காத்த குமாரத் தேவர் திட்டமிட்டபடி இங்குவந்து சேராதது அவர்களுக்குக் கவலை...
  10. S

    அத்தியாயம் -11

    அத்தியாயம் -11 தம்மைக்‌ கொல்ல இரண்டாவது முறையாக முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை நினைத்துப்‌ பார்த்தபோது மன்னருக்குப் பயம்‌ ஏற்படாவிட்டாலும்‌, தமது ஆட்சியில் கண்காணிப்புக்‌ குறைவும்‌, ஆட்சிக்கு எதிராக சதியும்‌ உருவாகி இருப்பதுதான்‌ அவரது உள்ளத்தை மிகவும்‌ அழுத்தியது. மதுரை நாயக்க...
  11. S

    அத்தியாயம் -10

    அத்தியாயம் - 10 இராமேஸ்வரம் அரண்மனை. மாலை நேர மாலை மயங்கும் நேரம் அக்கினி தீர்த்தக் கரையை மறைத்தவாறு வளர்ந்துள்ள தென்னந்தோப்பின் இளங்குருத்துகளை தழுவி குளிர்ச்சியையும் மென்மையையும் எடுத்து வந்தது தென்றல். தமது உட்பரிகையில் அமர்ந்தவாறு தெற்கு கடலை கவனித்துக் கொண்டிருந்தார் சேதுபதி மன்னரைத்...
  12. S

    பகலிரவு பல கனவு -25

    பகலிரவு பல கனவு - 25 பிரபாகரனின் தினசரி வாழ்க்கை காலை ஐந்து மணிக்கே தொடங்கிவிடும். இரவு பத்து மணிக்கு முன்னால் வீடு வந்து சேர்வது என்பது மிகவும் அரிதான நிகழ்வு. பதினெட்டு வயதில் இருந்தே கடினமாக உழைத்து முன்னேறியவன். நிற்காமல் ஓடிக் கொண்டிருந்தவன், அவனது கடைகளின் எண்ணிக்கை கூடியதில் கால்களில்...
  13. S

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் – 9 திருச்சுழியல் திருமேனி நாதர் திருக்கோயில்‌ . திருச்சுழியல் கிராமம் கன்னடப் படையினரோடு கிடைத்த வெற்றிக்குப் பரிசாக சேதுபதி மன்னருக்கு வழங்கப் பட்டிருந்தது. மதுரையில் இருந்து இராமநாதபுரம் செல்லும் வழியில் சேதுபதி மன்னர் திருமேனி நாதனை தரிசித்துச் செல்லலாம் என்று வந்திருந்தார்...
  14. S

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் -8 கடந்த ஒரு வாரமாகவே, மதுரை கோட்டை கிழக்கு வாசலில்‌ இருந்து திருமலை நாயக்க மன்னரது மாளிகை செல்லும்‌ வழியெங்கும்‌, இரவும்‌ பகலுமாக, நடைபற்ற அலங்கார வேலைகள்‌, சோடனைகள்‌, பந்தல்‌ அமைப்புகள்‌, ஆடம்பர வளைவுகள்‌ எனப்‌ பல்வேறு ஒப்பனைப்‌ பணிகள்‌, அன்று அதிகாலையில்தான்‌ முடிவடைத்தன. அரண்மனை...
  15. S

    பகலிரவு பல கனவு -24

    பகலிரவு பல கனவு -24 கட்டிலில் கால் நீட்டி அமர்ந்து விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தவனின் கண்கள் தற்செயலாக கடிகாரத்தின் மீது படிந்தது. அது காலை முடிந்து பகல் வரப்போகிறது என்று காட்டியது. சற்று நேரமாகவே வயிறு, என்னைக் கவனி என்று கூப்பாடு போடத் தொடங்கி இருந்தது. நேற்று சாயங்காலம் குடித்த...
Top Bottom