குறுநகை போதுமடி! 16
“ஏய், கொல்லங்கோடு க்யூன் நீ, நீ போய் அழலாமா?”
“...”
“ம்ப்ச்.. ஷியா…”
“ஸாரி கபீஷ். காலேஜ் படிக்கறதுல இருந்தே நிறைய நாள் அம்மா, அப்பாவைப் பிரிஞ்சுதான் இருந்திருக்கேன். ஆனா.. இப்ப இது வேற ஃபீலா இருக்கு… என்னமோ அவா கிட்ட இருந்து என்னைத் தனியா பிரிச்சு விட்டுட்ட மாதிரி… ப்ச், இப்ப எதுக்கு முறைக்கறேள்?”
“உனக்கு என்னோட இருக்க வேணாமா, என் மேல நம்பிக்கை இல்லையா?”
“படுத்தாதீங்கோளேள், ப்ளீஸ்” என அவனைத் தள்ளியவள் உடனேயே அவன் மேல் சரியவும், கபிலன் சிரித்தான்.
“டீ போடலாம், வா” என எழுப்பி கிச்சனுக்கு அழைத்துச் சென்றான். அவன் டீ போட சியாமளா சமையலறை சாமான்களை மேலோட்டமாக ஸ்டாக் எடுத்தாள்.
டீ, காஃபி போடத் தேவையான பாத்திரங்கள், ஒரு லோட்டா, ஒரு தம்ளர், குட்டியோ குட்டியாய் ஒரு குக்கர், இரண்டு உருளைக்கிழங்கு அல்லது ஒரு வாழைக்காய் மட்டுமே பொரியல் செய்யும்படியான ஒரு ஃப்ரையிங் பேன், அரை லிட்டர் பிடிக்கும் படியான இரண்டு குட்டி குக் & ஸர்வ் அடுக்குகள், ஸ்பூனை விடப் பெரிதாய் கரண்டியை விடச் சிறிதாய் மூன்று என அளவிலும் எண்ணிக்கையிலும் குறைந்த பாத்திரங்களே இருந்தன. அரிசி, பருப்பு டப்பாக்களும் அப்படியே.
ஃப்ரிட்ஜ், மிக்ஸி மற்றும் ஒற்றை கேஸ் அடுப்பு இருந்தது. ஆனால், சமையலறை என்னவோ பெரிய்ய்ய்யதாக இருந்தது.
‘அங்க அங்கிள் (சாரநாதன்) வீட்டு மாடில இருக்கற என்னோட சாமான் நிச்சயமா இதைவிட அதிகமா இருக்கும். இதுல என்னத்தை சமைச்சு சாப்பிட்டிருப்பார்?’
“தொந்தூஸ், டீ ரெடி” என சற்றே பெரிய ஒற்றைக் கோப்பை நிறையத் தேநீருடன் திரும்பிவன்,
“அங்க என்ன ஆராய்ச்சி?”
கோப்பையைக் கை பற்றிய சியாமளா “ம்… சொல்றேன், உங்களுக்கு டீ?”
“ஆளைப்பாரு, ரெண்டு பேருக்கும் இதான்” என்றவன் கட்டிலில் அமர,
‘இவருக்குன்னே அளந்து செஞ்ச மாதிரி ஒரு கட்டில்… நைட் ஃபுல்லா அசையவே முடியல… இதுல அடிபட்ட கால்ல இடிச்சுடுவேனோங்கற பயம் வேற’
“இப்ப என்ன யோசனை” என்ற கபிலனின் மொபைல் ஒலித்தது.
“சொல்லுப்பா”
“...”
“காட்! இதோ வரேன் பா” என்ற கபிலன், க்ரட்ச்சஸ் இன்றி வேகமாக அடி எடுத்து வைக்கப்போய்த் தடுமாற, சியாமளா பதறி விட்டாள்.
“கேர்ஃபுல் கபீஷ், அப்டி என்ன அவசரம்?” என்றவள், கிச்சனில் இருந்த க்ரட்ச்சஸைப் போய் எடுத்து வந்தவள், கார் சாவியைத் தன் கையில் எடுத்துக்கொண்டாள்.
காரை எடுத்தவுடன் மீண்டும் அலைபேசி ஒலித்தது.
ஆத்திரமாக “அப்பு, செழியன் மாமா முருங்கைப் பூ தேன் எடுக்கற இடத்துல இருப்பான். உடனே போய்க் கூட்டிக்கிட்டு வா” என்ற சாரநாதன் பட்டென அழைப்பைத் துண்டித்திருந்தான்.
“செழியன் அங்கிளை நான் அழைச்சிண்டு வரேன்” என்ற சியாமளா கபிலனை வீட்டில் இறக்கிவிட்டுச் சென்றாள்.
மஞ்சள், குங்குமம், பொட்டு அட்டை, கண்ணாடி, வெற்றிலை பாக்கு, பூ, வாழை, ஆப்பிள், மாதுளம் பழங்கள், தேங்காய், ஆரஞ்சு நிறப் பட்டுப்புடவை அதற்குத் தோதான அழுத்தமான கண்ணாடி வளையல்கள் என எல்லாம் திசைக்கு ஒன்றாக உருண்டு சிதறி இருக்க, அவற்றை வைத்திருந்த தாம்பாளம் தரையில் விழுந்து சுற்றிச் சுழன்று அடங்குவதைப் பார்த்தபடி…
“ஆத்தாளும் மவனும் நாதி இல்லாம கெடந்தவனைத் தூக்கி நடு வீட்ல வெச்சதுக்கு, இந்தா கை மேல பலன் கிடைச்சிருச்சுல்ல. நன்னி கெட்டப் பன்னிங்க” என்று அடிவயிற்றில் இருந்து காவேரி இரைவதைக் கேட்டபடி வீட்டினுள் நுழைந்த கபிலன், எதுவும் புரியாது சூழலை அவதானிக்க முற்பட்டான்.
நீலவேணி தளர்ந்து அமர்ந்திருக்க, செண்பா கோபத்துடிப்புடன் நிற்க, எதிர் முற்றத்தில் கபிலனின் வரவேற்புக்கு வந்த சின்னு ஆவேசமாகச் சிலிர்த்தபடி காணப்பட, அருகிலேயே இறுகிச் சிவந்த முகத்துடன் செழியனின் மகன் விஜய் எனும் விஜய மணிகண்டன் நின்றிருந்தான். அவனது சட்டை அப்பா சாரநாதனின் கையில் இருந்தது.
நிலமையை கணித்த கபிலன் ‘அப்பா விஜய்யை அடிச்சாரா?’ என்ற அதிர்ச்சியில் இருக்க, சின்னு,
“அவனை ஏன் மாமா அடிச்சீங்க? ஏன், என் தம்பிக்கு என்ன கொறைச்சல்… அதிக வயசா, பார்க்க நல்லா இல்லலையா? படிச்சிருக்கான். கை நெறய சம்பாரிக்கறான். ஒரே இனம், கட்டிக்கிற மொறை வேற. குந்தவையோட கூடவே வளர்ந்தவன். அவளைப் பொன்னாட்டம் பாத்துக்குவான். அவன் ஆசைப் படறதுல என்ன தப்புங்கறேன்?”
செண்பா “வாய மூடு சின்னு. யாரு கிட்ட என்ன பேசறோம்னு இல்லாம, பெரிய மனுஷி கணக்கா…”
மகளை இடை மறித்த காவேரி “தப்புதாண்டீ, தப்புதேன். ஒந்தம்பி செஞ்ச வேலைக்கு, ஒன்னோட நிறுத்தினது தப்புதேன். தெனவெடுத்தவன் தொடையில உப்பை வெச்சு நெரிக்காம... ரெண்டெழுத்து படிச்சு, நாலு காசு சம்பாதிச்சிட்டா ஒண்ணு மண்ணா சரிசமமா ஆயிடுவீகளோ? உங்களைத் தூண்டி இங்க அனுப்பிட்டு உங்கப்பனும் ஆத்தாளும் எங்கடீ போனாக? இன்னொருத்தன் காசுன்னா அம்புட்டு ஆவலாதி… பொடனிலயே ரெண்டு போடாம, என்ன தம்பி சிறுசுங்களைப் பேசவுட்டு வேடிக்கை பாக்குற?”
“யாருக்கு வேணும் உங்க காசு…” எனத் தொடங்கிய விஜய் சாரநாதனிடம் பட் பட்டென மீண்டும் பலமாக இரண்டு மூன்று அடி வாங்குவதைப் பார்த்தபடி முதலில் உள்ளே வந்த செழியன்,
“மாமா!” என்று கூவியபடி வேகமாக மகனின் அருகில் சென்றான்.
பின்னோடே வந்து “அங்கிள், என்னதிது, அவரை ஏன் அடிக்கறேள்?” என்ற சியாமளா கபிலனைக் கேள்வியாகப் பார்த்தாள்.
எல்லோரும் ஒரே நேரத்தில் பேசத் தொடங்கவும், வீதி வரை சத்தம் கேட்டதில், அடுத்த வீட்டில் இருக்கும் வள்ளி, “அப்பா..!” என உரத்து அழைத்த கபிலனுக்கும் அவனை அடுத்து நின்ற சியாமளாவிற்கும் இடையில் புகுந்து ஓடி வந்தவள், சாரநாதனின் கைத்தடம் பதிந்து சிவந்து வீங்கிய மகனின் முகத்தையும் நடப்பது புரிந்தும் புரியாது விழித்த கணவனின் முகத்தையும் கண்டு அதிர்ந்தாள்.
சின்னுவிடம் திரும்பிய வள்ளி “என்னடீ இதெல்லாம், புள்ளைங்களோட சேர்ந்து தூங்குறன்னு பாத்தா…. ஏன்டா விஜய், நீ மொத உறுதி செஞ்சுக்கிட்ட பொறவு அப்பா கிட்ட சொல்லி மாமாகிட்ட பேசுவோம், அவசரப்படாதன்னு எத்தினி வாட்டி சொன்…”
அதிர்ச்சியான செண்பா “அப்போ, விஜய்க்கு இப்புடி ஒரு எண்ணம் இருக்கறது முன்னாலயே உங்களுக்குத் தெரியும்… அப்படித்தானே அண்ணி?”
செழியன் “ஏ வள்ளி… இங்க என்ன நடக்குதுன்னே எனக்குப் புரியலை. விஜய் எதை உறுதி செய்யணும், எங்கிட்ட சாவகாசமா சொல்றதுக்கு என்ன இருக்கு, எதா இருந்தாலும் பட்டுனு சொல்ல வேண்டியதுதானே?”
நீலவேணியிடம் காவேரி, “ஒம் பேரன் லட்சணத்தைப் பாத்துக்கம்மா. ஒண்ணுந் தெரியாத மேனிக்கு நடிக்கறதைப் பாரு. ஏன்டா செழியா, ஒம் பொஞ்சாதியே மட்டைக்கு ரெண்டு கீத்தா சொன்ன பொறவுமாடா ஒனக்கு சந்தேகம்? மனசில இம்புட்டு வெச்சிக்கிட்டு, எதுவுமே தெரியாத மாதிரி வர்றதும்… ஒத்தாப்புன்ற பேருல உள்ளாற புகுந்து வேலை பாக்கறதும்…. ஆத்தாடீயாத்தா! ஏத்தா செண்பா, அண்ணி, அண்ணின்னு ரவிக்க, திருகாணி, குண்டூசின்னு எதை வாங்கினாலும் கடை பரப்புனியே, பாத்தியா உங்கண்ணியோட சாமர்த்தியத்த, என்ன ஒரு கைகாரத்தனம். நீயும் இருக்கியே…”
“...”
“உம் மவன் எம்பேத்திய பொண்ணு கேட்டு சம்பந்தம் பேச உம் மக பெரிய மனுஷியை தொணைக்குக் கூட்டிக்கிட்டு
பரிசச் சேலையோட வந்திருக்கான், விளங்கிச்சா?”
உண்மையாகவே அங்கு நடப்பதைப் பற்றி எதுவும் தெரியாத செழியன், திகைத்தான்.
“நெசமாவாடா விஜம், சின்னு, என்னம்மா இதெல்லாம்? ஏ வள்ளி, இது முன்னாலயே உனக்குத் தெரியுமாடீ? தெரிஞ்சா எங்கிட்ட சொல்லித் தொலைக்கறதுக்கென்ன?”
காவேரி “அட அட அட, தொரைக்கு எதுவுமே தெரியாது பாரு, என்னமா பசப்புறடா நீ! வேலை செய்யுற சாக்குல புருஷன் காட்லயும் பொஞ்சாதி வீட்லயும் நோட்டம் விட்டுட்டே இருந்து சமயம் பார்த்து மவனைத் தூண்டி விட்டுருக்கீக. கூலிக்கு வேலை செய்யிறவன்னு நினைக்காம சொந்தம்னு வீட்டுக்குள்ள புழங்க வுட்டதுக்கு எங்களுக்கு இது தேவைதான் ”
செழியன், சாரநாதனிடம் “மாமா, பெரியம்மா பாட்டு அபாண்டமா பேசிட்டே போறாங்க, ஏதாச்சும் சொல்லுங்க மாமா…”
“...”
நீலவேணியிடம் “நான் அப்படிப் பட்டவனா ஆத்தா, நீயாச்சும் சொல்லேன்”
“...”
செண்பா “அண்ணா, நீங்க கேள்வி கேட்க வேண்டியது செய்யுறதையும் செஞ்சுப்புட்டு கமுக்கமா இக்குற உங்க புள்ளைங்களைதான்”
சின்னு “எனக்கென்ன பயம், நானே சொல்றேன். அப்பா, நம்ம விஜய் வேலைக்கு போய் ஆறு மாசத்துக்கெல்லாமே குந்தவையை புடிச்சிருக்கு, கட்டிக்க ஆசைப்படறேன்னு எங்கிட்ட சொன்னான். அவங்க வேற இடத்துல மாப்பிள்ளை பார்க்கவும் அம்மா (வள்ளி) கிட்ட சொன்னோம். ஆனா, உங்க கிட்ட பேச பயந்து அம்மா சொல்லாமலே விட்டுட்டாங்க…”
செழியன் கனவு காண்பவனைப் போல் திகைத்துக் கேட்க, சியாமளாவிற்கு இதில் இன்னும் ஏதோ இருப்பதாகத் தோன்றியது. கபிலனைப் பார்க்க, அவன் கால் மாற்றி நிற்கவும் “நீங்க போய் சோஃபால உக்காருங்கோ கபீஷ்” என கிசுகிசுத்து முறைப்பை வாங்கிக்கொண்டாள்.
செழியன் “ஏன்டீ, உடனடியா இதை எங்கிட்ட சொல்லணும்னு உனக்குத் தோணலியா? ஏம்மா, சின்னு… எத்தினி நாசூக்கான சமாச்சாரம், நம்ம நிலமை என்ன, நமக்கு ஏலுமான்னு, நம்மை ஏத்துப்பாங்களான்னு யோசிக்காதைக்கு, என்னைக் கேக்காம நீங்களே பொண்ணை கேட்டா… இதெல்லாம் தேவையாடா விஜய்”
விஜய் “இல்லப்பா… குந்தவை கிட்ட…”
சாரநாதன் “ஏய்… எம்மவ பேரை இழுத்த… என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது. திரும்பத் திரும்பப் பேசி எங்கிட்ட மிதிபட்டு சாகாம ஊருக்குப் போய் சோலி கழுதையைப் பாரு, சொல்லிட்டேன். இந்தப் பேச்சு இதோட கடைசியா இருக்கட்டும். செழியா, சொல்லி வை”
சின்னு “நீங்க இப்படி பேசுவீங்கன்னு நான் நினைக்கவே இல்ல மாமா “
“...”
செண்பா “அருமை பெருமையா பொண்ணை வளர்த்தது, அம்பது, நூறுக்குக் கணக்குப் பாக்கறவனுக்குக் கட்டிக் குடுக்கவா? எம் மவ ஆசைப்பட்டதை செலவு செய்ய யோசிக்காம வாங்கித் தர ஒந்தம்பிக்கு வக்கு இருக்கா மொதல்ல?”
வள்ளி “என்ன செண்பா, இப்புடி பேசுற?”
தன்மானம் தூண்டப்பட்டதில் ரோஷமடைந்த விஜய் “ நீங்க குந்தவையை எனக்குக் குடுங்க, அவளை எப்படிப் பார்க்கணும்னு எனக்குத் தெரி…”
“ர்ர்ரப்ப்…”
சாரநாதன் பேச்சை முடிக்க விடாது விஜய்யை தன் பலம் கொண்ட மட்டும் ஓங்கி அறைந்திருந்தான்.
“அப்பா”! என்றபடி கபிலன் அருகில் செல்ல,
“மாமா!” என்று கத்திய செழியன், சாரநாதனின் கையைப் பிடிக்க, ஒரே உதறாக உதறியவன்
“செழியா, ஒம் மவேன் பேசினதுக்கு அவனை அடக்காம, என்னைத் தடுக்குற… இனிமேட்டும் நீ இங்க இருக்கறது சரி வராது. வேணாம். நீ கிளம்பு”
பதின்ம வயதுகளிலேயே பெற்றோரை இழந்து, ஆதரவற்று இங்கு வந்து, மாடு கறப்பது முதல், மூலிகை ஏற்றுமதி வரை ஏவிய வேலைகளை எல்லாம் செய்து, உறவு, நட்பு எல்லாம் இவர்களே என்றே பழகிய செழியனுக்கு முதலில் சாரநாதன் சொன்னது உரைக்கவே இல்லை.
இதை காவேரி, செண்பா, ஏன் நீலவேணி சொல்லி இருந்தால் கூட செழியனால் ஏற்க முடிந்திருக்கும். ஆனால்… சாரநாதன்?
பேச வாயெடுத்த சின்னுவைத் தடுத்தவன் “போகலாம்” என முதல் ஆளாக வெளியேறி விட்டான்.
சிறிது நேரம் வீட்டில் கடும் அமைதி நிலவ, செண்பாவிடம் சியாமளா “குந்தவை எங்க ஆன்ட்டீ?”
*******************
இரவு ஏழரை மணிபோல் சியாமளாவின் அலைபேசிக்கு அழைத்த நலம் காஸ்மெடிக் ஃபேக்டரியின் சரக்குகளை ஏற்றிச்செல்லும் டிரைவர் ஜெபராஜ்
“செழியன் ஸார் பேசி சொந்த வேலையா அவசரமா கோயமுத்தூர் வரை போகணும், வண்டி இருக்குமான்னு கேக்குறார், மேடம். ஸார், பெரிய ஸார் (சாரநாதன்) ரெண்டு பேருமே ஃபோனை எடுக்கலை. அதான் உங்களை கூப்பிட்டேன்… போகவா மேடம்?”
“...”
“ஹலோ, லைன்ல இருக்கீங்களா மேடம்…”
“ஒரு நிமிஷம்...” என்றவள், மொபைலை ம்யூட்டில் போட்டுவிட்டு எதையோ படித்துக் கொண்டிருந்த கபிலனிடம் கேட்க, ‘போகச் சொல்’ என சைகை செய்தான்.
“ஓகேதான் ஜெபராஜ், எப்ப போகணும்?”
“இன்னொரு பத்து, பதினஞ்சு நிமிஷத்துல கிளம்பிருவேன் மேடம். எட்டரை மணிக்கு கோவைக்கு வண்டி எடுத்துடுவேன்”
“ஓகே”
எட்டு மணி ஆனதும் பர்ஸில் இருந்த பணத்தை அள்ளி சட்டைப் பையில் வைத்துக்கொண்ட கபிலன் சியாமளாவிடம் “வண்டி எடு. வா, போகலாம்” என்றான்.
“இல்ல… அங்கிள்…”
நீ வரலைன்னா நான் நடந்து போய்க்கறேன்”
இவர்கள் சென்றபோது, வீட்டுக்குத் தேவையான, அதே நேரம் அளவான சாமான்களே இருந்ததால் TATA ACE வண்டியில் நிறைய இடமிருந்தது. எல்லோரும் சாமான்களோடு அந்த வண்டியிலேயே பயணிப்பதாக இருந்தனர்.
விஜய் மௌனமாக முகத்தைத் திருப்பிக்கொள்ள, சின்னு முறைத்து நின்றாள். அழுது சிவந்து, வீங்கி இருந்த வள்ளியின் முகத்தில் செழியனின் கைத்தடம் தெரிந்தது. செழியன் மட்டும் வரவேற்பாகத் தலையசைத்தான்.
வள்ளியின் அண்ணனும் அண்ணியும், அதாவது சின்னுவின் மாமனார், மாமியார் வந்திருந்தனர். அவள் பெற்றோருடன் சென்று நாலைந்து நாள் இருந்துவிட்டு கணவனிடம் செல்வாளாம்.
சியாமளா கேரளத்து நேந்திரன் வறுவலும், சுனந்தா செய்து தந்த மைசூர் பாகும் இருந்த பையை சின்னுவின் மகளிடம் கொடுத்தாள்.
வள்ளி பிறந்தது முதல் இதே ஊரில் இருப்பவள். இருவருக்கும் காதல் திருமணம். இன்றுவரை அடைக்கலம் கொடுத்த குடும்பத்திற்கு இருவருமே சுணங்காது உழைத்தவர்கள்.
இதுபோன்ற சங்கடமான சூழலில், செழியன் கையில் சேமிப்பு என பெரிதாக எதுவுமின்றி, எதிர்காலத்திற்கான பிடிப்புமின்றி, தற்காலிகமாகத்தான் எனினும், மகனின் வருமானத்தை மட்டுமே நம்பி செல்வது கபிலனுக்கு பரிதாபமாக, சற்றே குற்றவுணர்ச்சியாக இருந்தது.
“ஸாரி மாமா” என்றவன், வண்டி புறப்படும் தருணத்தில் தன்னிடம் இருந்த ரூபாய் நோட்டுகளை செழியனின் பாக்கெட்டில் திணித்தவன் “போய் சேர்ந்ததும் கால் பண்ணுங்க மாமா. நானும் பேசறேன்”
விவரம் புரியாத சின்னுவின் குழந்தைகள் பயணக் களிப்பில் குதூகலமாகக் கையசைக்க, வண்டி புறப்பட்டது.
******************
கபிலன், சியாமளா இருவருக்குமே முந்தைய நாள் இரவில் இருந்த கொண்டாட்ட மனநிலை எங்கோ சென்றிருக்க, கடமைக்கென உண்டனர். படிக்கும் விளக்கு மட்டும் எரிய, இருவருமே அவரவர் கோணத்தில் ஒரே விஷயத்தைப் பற்றிய சிந்தனையில் மூழ்கி இருந்தனர்.
மதியம்…
சியாமளா “குந்தவை எங்க ஆன்ட்டீ?”
காவேரி “அவ எங்க போகப்போறா, நடக்குற கூத்தைக் கண்டு பயந்து இங்கனதான் எங்கயாச்சும் ஒளிஞ்சிக்கிட்டு இருப்பா”
இதற்கு என்ன எதிர்வினையாற்றுவது எனப்புரியாது சியாமளா கபிலனைப் பார்க்க, அவன் தன் தந்தையைப் பார்த்தான்.
வந்ததில் இருந்து குந்தவையைக் காணாத சாரநாதனும் “அம்மு, நுங்கம்மா எங்க?” எனவும், செண்பா காவேரியைப் பார்த்தாள்.
“என்னடீ, மவளைக் கண்ணுல காங்கலியே, எங்கன்னு கேட்டா ஆத்தாளும் மவளும் ஜாடையில பேசிக்கிறீங்க?”
காவேரி “இந்தா, உம்மவ உங்க ரூம்புக்குள்ளதான் இருக்குறா. எத்தா, வெளிய வா”
சில நிமிடங்கள் சென்ற பின்பும் குந்தவை வெளியில் வரக் காணோம் என்றதும், சாரநாதன் சென்று அறைக்கதவைப் படாரெனத் திறக்க, அழுது சிவந்த கண்களும் கன்னமுமாய் “அப்பா”! என்று வெளியில் ஓடி வந்த மகளைக் கண்டு உருகித்தான் போனான்.
ஏதோ பயங்கரமான கொலை, குண்டுவெடிப்பு நடப்பதுபோல் குந்தவை அறைக்குள் பதுங்கி இருந்ததும், “அப்பா இருக்கேன்ல, நான் பார்த்துக்கறேன்டா” என்ற சாரநாதனின் சமாதானமும் காண சியாமளாவுக்கு வேடிக்கையாக இருந்தது.
அதோடு, வந்ததும் பெண் கேட்டதும் கூடவே வளர்ந்த சின்னுவும் விஜய்யும்தானே. பதில் சொல்லத்தான் கொள்ளு பாட்டி, பாட்டி, அப்பா, அம்மா எல்லோரும் இருக்கிறார்களே? அப்படியே முடிவை குந்தவை கையில் விட்டாலுமே வேண்டும் அல்லது வேண்டாம் என்றால் தீர்ந்தது. அதற்கேன் பதுங்கலும் அழுகையும்? என்ற கேள்வி அவளிடம்.
இந்த ஒரு வருடத்தில் சியாமளா அறிந்தவரை குந்தவை ஒன்றும் அத்தனை அப்பாவியோ திடமில்லாதவளோ இல்லை. இதே விஜய், சின்னுவுடன் பட்பட்டென பதில் பேசி அவள் வாயடிப்பதை சியாமளாவே பார்த்திருக்கிறாளே!
எல்லாரையும் விட அதிர்ச்சியும் அவமானமும் தாங்கிய செழியனின் முகம்தான் சியாமளாவை அதிகம் தொந்திரவு செய்தது.
தலையை உலுக்கியவள், புண்டு கபிலனின் தோளில் சாய, அணைத்து நெற்றியில் முத்தமிட்டவன் “ஸாரி மா”
“எதுக்கு?”
“ம்… நத்திங், நீ தூங்கு”
அவன் சொன்னதைக் கேட்டு மந்திரம் போட்டதுபோல் சியாமளா உறங்கி விட, கபிலன் விழித்திருந்தான்.
அவன் நினைவேடுகளில்
முற்பிறவியாகத் தோன்றிய ஒரு நிகழ்வில், அம்மா மாளவிகாவை தந்தை அடித்ததைப் பார்த்த நினைவு. அதன் பிறகு சாரநாதன் ஒருவரை அடித்து இன்றுதான் பார்த்தான்.
மதியம் நடந்ததை நினைத்துப் பார்க்கையில் குந்தவையின் மீது விஜய் ஆசைப்பட்டதில் தவறொன்றுமில்லை என்றே கபிலனுக்குத் தோன்றியது.
‘புடிச்சிருக்கு, புடிக்கலை… வேணும், வேண்டாம்னு கட் அண்ட் ரைட் டா சொல்றதை விட்டு இந்த
அப்பாவும் அவனை அடிச்சிருக்கத் தேவை இல்லை’
பெற்றோர் இருக்கையில் சின்னுவுடன் வந்து பெண்கேட்டது வேண்டுமானால் தான்தோன்றித்தனமாக, திமிர்த்தனமாகத் தெரியலாம். ஆனால், வள்ளிக்குத் தெரிந்தது, செழியனுக்குத் தெரிந்தால் கல்யாணப் பேச்சை எடுக்கவே சம்மதிக்கவே மாட்டான் என்ற பயத்தில், அவர்களே முந்திக்கொண்டது புரிந்தது.
‘தைரியம்தான்!’ என நினைத்துப் புன்னகைத்தான்.
‘இது போல நாராயணன் ஸார் கிட்டயும் சுனந்தா ஆன்ட்டீ கிட்டயும் நான் போய் பொண்ணு கேட்டு இருந்தா என்ன சொல்லி இருப்பாங்க? நவீன்?’’
‘என்னை மறுக்க அவங்களுக்கு இல்லாத காரணமா?’
ஆனாலும், சியாமளா வீட்டினர் இத்தனை அவதூறாகப் பேசி இருக்க மாட்டார்கள் என்றே தோன்றியது. அதிலும் நாராயணன் ஸாரின் நட்பான சுபாவத்திற்கு அடிப்பது எல்லாம்…. ம்ஹும்… சான்ஸே இல்லை. சியாமளா கூட ‘அப்பா எங்களை அடிச்சதே இல்லை. எப்பயாவது அதட்டினா உண்டு’ னு சொன்னாளே!’
‘தப்பிச்சேன்’!
‘அதோட, எப்படியும் என் தொந்தூஸ் என்னை விட்ருக்க மாட்டா!’
‘இருந்தாலும் இந்த அப்பா அவனை அடிச்சிருக்க வேண்டாம். அதைவிட, செழியன் மாமாவோட எத்தனை வருஷப் பழக்கம், கிட்டத்தட்ட அப்பா செய்யுற எல்லா வேலையும் பொறுப்பா எடுத்து செஞ்சவரைப் போய்…
செழியனின் செய்வதறியாது கலங்கிய தோற்றம் கண்ணுக்குள்ளேயே நின்றது. அதே நேரம், கபிலனுக்குத் தன் தந்தையைத் தானே குறை சொல்வதும் பிடிக்கவில்லை.
என்னவென்று இனம் புரியாது, ஆனால் நடந்ததில் எதுவோ ஒன்று மனதை உறுத்த, உறக்கமும் விழப்புமாய்த் தவித்தான்.
அறை இருளில் மூழ்கி இருக்க, நல்ல உறக்கத்தில் இருந்த சியாமளா, தன்னைச் சுற்றி வளைத்து நெருக்கிய கனத்திலும் மணத்திலும் நிகா புரியாது மூச்சு வாங்கியபடி “கபீஷ்…” எனத் திணற, கபிலன்
“எனக்காகடீ… ப்ளீஸ்”
********************
ஐந்து மாதங்கள் கடந்திருக்க, சியாமளாவின் பெற்றோர் ட்ரக்கில் அனுப்பி வைத்தவை, இவர்களே வாங்கியவை என தேவையான பொருட்களுடன்
கச்சிதமாக அமைந்திருந்தது வீடு.
கபிலனால் இப்போது க்ரட்சஸின் உதவியின்றி நன்றாக நடக்க முடிந்தது.
மூன்றாம் மாதம் சியாமளாவிற்கு தாலி பிரித்துக் கோர்க்க வேண்டும் என அவனது பெற்றோர் இருவருமே வலியுறுத்தினர்.
நீலவேணி சொல்லி, சாரநாதன் வீட்டில் எல்லோர் முன்பும் வைத்துக் கேட்டு விட, கபிலன் “அம்மா கூட சொன்னாங்கப்பா” என்றதை சாரநாதன், செண்பா இருவருமே ரசிக்கவில்லை.
நீலவேணி “அப்ப சடங்கை அவ வீட்ல வெச்சு நடத்துவாளா? நம்ம வூட்டு மருமவளுக்கு நாம செஞ்சாதானே நமக்கு மருவாதி?”
காவேரி “நீ ஒருத்தி மா.. எதுவும் புரியாம… ஒன்னுக்கு ரெண்டா தாலி கட்டிக்கிட்ட அவன் ஆத்தா கையால தாலி பிரிச்சுக் கோர்த்தா ஒம்பேரனுக்கும் அவேன் பொண்டாட்டிக்கும் ரெட்டை மருவாதிம்மா, ரெட்டை மருவாதி…”
காவேரி பேசப் பேசவே கபிலன் எழுந்து வெளியில் போய்விட, தர்ம சங்கடத்தைத் தவிர்க்க விரும்பிய சியாமளா
“எங்கள்ல கட்டின மாங்கல்யத்தைப் பிரிக்கற வழக்கம் இல்லை. நீங்க வேணா எங்க அம்மாவைக் கூடக் கேட்டுப் பாருங்கோ. பர்ஸனலா எனக்கும் இதுல இஷ்டம் இல்லை கேட்டேளா? அதோட, நான் ஊர்ல இருந்து வரும்போதே மாங்கல்யத்தை கொடில மாத்திண்டு வந்துட்டேன். இந்த ஃபங்ஷனுக்கு இப்ப அவசியமே இல்லை” என்று விட்டாள்.
ஆனால், மதுரை சித்திரைத் திருவிழாவில் மீனாக்ஷி திருக்கல்யாணத்திற்கு கோவிலுக்குள் சென்று தரிசிக்க முன்பதிவு செய்திருந்த கபிலன், மதுரைக்கரசியின் கல்யாணத்தைக் கண்குளிரக் கண்ட பரவசத்தோடு, சியாமளாவின் வீட்டு பாணியில் திருமாங்கல்யம் கோர்த்த தங்கச் சங்கிலி ஒன்றை சியாமளாவிற்கு அணிவித்தது, அவள் சற்றும் எதிர்பாராத சர்ப்ரைஸ்.
“ஷியா… எனக்கு இதுல எல்லாம் நம்பிக்கை இருக்கா இல்லையான்னு எனக்கே தெரியலை. நல்லதுன்னு பெரியவங்க சொன்னதை செய்யாம இருக்கவும் மனசில்லை. யாரையும் ஹர்ட் பண்ணவும் இஷ்டமி… ஏய்… என்னடீ பண்ற, கோவில்ல சாமிக்கு முன்னால மூணாவது வரிசைல உக்காந்திருக்கோம். டீவீல கீவீல வந்துடப் போகுதுடீ….”
கபிலனின் கையை இறுகப்பற்றி கலங்கிய கண்களை அவன் தோள் சட்டையில் துடைத்த சியாமளாவிற்கு கபிலன் தந்த முதல் பரிசு அது. அவன் கொடுத்த ப்ரைஸ், சர்ப்ரைஸை விட யாரையும் வருத்த விரும்பாத அந்த மனதில் மீண்டும் ஒருமுறை அவனிடம் வீழ்ந்தாள் சியாமளா.
இரண்டு முறை மதுரை சென்று வந்தனர். முதல் முறை ஜோடியாக வீடு வந்த மகனுக்கென விலாவாரியாக அசைவ விருந்து சமைக்க முற்பட்ட மாளவிகாவிடம் “அந்தப் பொண்ணை சங்கடப்படுத்தாத மாலு” என ஜெயச்சந்திரனும்,
“என்னம்மா நீ, அண்ணி ஃபர்ஸ்ட் டைம் வராங்க. அவங்க வெஜிடேரியன். அவங்களுக்காகதான் நீ ஸ்பெஷலா சமைக்கணும்” என ஆதியும் சொன்னதாகச் சொன்ன மாளவிகா “நல்ல வேளை, நான் கூட மறந்துட்டேன் மா” என்றாள்.
சியாமளாவிற்கு நல்லதொரு பட்டுப் புடவையும், ரூபி நெக்லஸ் செட் ஒன்றும் கொடுத்தனர்.
சியாமளாவிற்கு கபிலன் , தன் தந்தையின் குடும்பத்துடன் உறவின் விளிம்பில் விலகி நிற்பவன், தாயின் வீட்டில் எச்சரிக்கையுடன் நட்பின் எல்லையில் இருந்து பழகுவதாகத் தோன்றியது.
இரண்டு பக்கமுமே அவன் தன் கருத்துகளையோ, ஆலோசனைகளையோ சிதற விடுவதில்லை என்பதை கவனித்திருந்தாள்.
கபிலனின் பேச்சில் பெற்றோர் இருவரையுமே காயப்படுத்தி விடக்கூடாதென்ற கவனம் இருந்தது. ஜெயச்சந்திரனிடம் மிகுந்த மரியாதையுடனும் நட்புடனும் பேசினான்.
கபிலனுக்கு குந்தவையிடம் இருந்த அதே அன்பும் அக்கறையும் ஆதியிடம் சொல்லப் போனால், கொஞ்சம் மிகுதியாகவே இருந்தது. ஆனால் அவனது உணர்வுகள் அனைத்தும் அமைதியில் தொகைந்தே நின்றது.
இத்தனை நாட்களில் கபிலன் சியாமளாவிடம் தன் சின்ன வயது அனுபவங்களையோ, பெற்றோர் மீதோ, பாட்டி, அத்தை, செண்பா என மற்ற வீட்டினர் மீதோ குறை, நிறை என எதுவும் சொன்னதில்லை.
அதேபோல் அவன் விரும்ப மாட்டான் என நினைக்கும் விஷயங்களை சியாமளாவும் தொடுவதில்லை. சில நேரங்களில் , சியாமளா அவள் வீட்டில் சமைக்கும் ஐட்டங்களை பற்றிக் கேட்டும், கொண்டு போய்க் கொடுத்தால் அதை சுவைத்தும் சுவைக்காமலும் காரம் இல்லை, ‘மசாலா பத்தலை’ என காவேரி குறை சொல்வதை சியாமளா பொருட்படுத்துவதில்லை.
சாரநாதனும் குந்தவையும் தினமும் ஒருமுறையாவது இவர்கள் வீட்டுக்கு வந்து விடுவர்.
மற்றபடி, சியாமளாவுடனான கபிலனின் உலகம் அவர்களுக்கானதாய் மட்டுமே இருந்தது.
சியாமளாவும் கபிலனும் தலை தீபாவளிக்கென கொல்லங்கோடு சென்றனர்.
சென்ற முறை வீட்டில் இருந்து செய்யாத மாப்பிள்ளை உபசரிப்பு அனைத்தையும் செய்து ஆசையை நிறைவேற்றிக் கொண்ட சுனந்தா, சிறுவயது சியாமளாவின் விஷமம், துடுக்குப் பேச்சு, பள்ளியில் கிடைத்த சான்றிதழ்கள், பிறந்தது முதல் எடுத்த அவளது புகைப்படங்கள் என கடை பரப்பினார்.
கபிலனுக்கு சியாமளா அந்தக் காலக் கட்டத்திற்கான ஸ்டைலுடன் செல்லமாக வளர்க்கப்பட்டிருப்பது புரிந்தது.
சியாமளா இரண்டரை வயதில் தொப்பை தெரியும்படியான ஒரு டாப்பும் குட்டியான ஸ்கர்ட்டும் அணிந்திருந்த ஃபோட்டோ ஒன்றை உருவிக்கொண்டவன் “அப்பவே தொந்தூஸ்டீ நீ” எனக் கேலி செய்தான்.
*******************
ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் மழை பிய்த்து உதறியதில், நலம் மருத்துவமனையின் குடில்களில் ஏழெட்டு பேர்தான் இருந்தனர். மற்றபடி சளி, காய்ச்சல் மற்றும் வழக்கமான மருந்துகளை வந்து வாங்கிச் செல்பவர்கள்தான் அதிகம் இருந்தனர்.
சனி, ஞாயிறு இரண்டு நாளும் வீட்டிலேயே கழிய, திங்களன்று அதிகாலையிலேயே கிச்சனில் விளக்கெரிந்ததில் கபிலன் எழுந்து போய்ப் பார்க்க, சியாமளா ஃப்ரிட்ஜில் எதையோ தேடிக் கொண்டிருந்தாள்.
“ஷியா, நாலு மணி கூட ஆகலை, இங்க என்ன செய்யுற?”
“பசிக்கறது கபீஷ்”
“இப்பவா?”
“ம்… ஒரு வாரமாவே இப்டிதான் பசிக்கறது”
ஒரு வாழைப் பழத்தைக் கொடுக்க வேண்டாம் என்றாள்.
ரெண்டு ஸ்பூன் பைன் ஆப்பிள் ஜாமை விழுங்கியவளை கபிலன் வினோதமாகப் பார்த்தான். வந்து படுத்துக்கொண்ட இரண்டாவது நிமிடம் போய் வாந்தி எடுத்துவிட்டு படபடப்புடன் வந்தவள்,
“கபீஷ், ஐ திங்க் நா… நான் ப்ரெக்னென்ட்டா இருக்கேனோ?”
“ம்… என்னைக் கேட்டா?”
கபிலனின் கழுத்தைப் பிடித்தவள் “உன்னைக் கேட்காம…?” எனவும் சிரித்தான்.
“ஹாஸ்பிடல் போய் செக் பண்ணிக்கலாம். இப்ப தூங்கு” என அணைத்துக் கொண்டவனின் முகம் யோசனையைக் காட்டியது சியாமளாவிற்கு இருட்டில் தெரியவில்லை.

Author: VedhaVishal
Article Title: குறுநகை போதுமடி! 16
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.