என்னை இந்த பூமி சுற்றிவர ஆசை - 4
அந்த கான்பரன்ஸ் ஹால் நிறைந்து வழிந்தது. பார்ட்டி ஏற்பாடுகள் பற்றிய கடைசி கட்ட ஆலோசனை என்று அனைத்து அலுவலர்களையும் கூட்டி இருந்தனர். கடந்த ஒரு வாரமாக வெறும் மீட்டிங் மீட்டிங் என்று அட்டென்ட் செய்து அலுத்துப் போய் விட்டாள் மலர்விழி. இதில் யார் அவளுக்கு முதல் வரிசையில் இடம் கேட்டது. என்ன கொடுமை சார் இது என்று தலையெழுத்தை நொந்தபடி தான் அமர்ந்திருந்தாள்.
இப்போது அவளிடம் யாராவது பேசினால் ஆயிரம், இரண்டாயிரம் என்று தான் பேச ஆரம்பிப்பாள். என்ன ஆயிரங்களோடு நின்று விடாமல் கோடிக்கணக்கில் அவளது பேச்சு வார்த்தை நீளும். இன்னும் பிம்பிளிக்கி பிளாப்பி என்று சொல்லாதது தான் பாக்கி.
இப்போதும் மண்டைக்குள் பாண்டியராஜன் வந்து ஆயிரம், இரண்டாயிரம் என்று ஆரம்பித்து வைக்க தலையை வேகமாக உலுக்கிக் கொண்டவள் அந்த ஹாலை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். ஒரே ஒரு ஆனந்தம் அவளுக்கு, அந்த அலுவலகத்தில் அனைவரும் ஷாருக் கான், சல்மான் கான், ஹ்ரித்திக் ரோஷன்களாகவே வலம் வந்தனர்.
அவளுக்கு அதிலும் ஒரு வருத்தம் என்ன என்றால் அவர்களில் பலரது வயதும் ஒரிஜினல்களைப் போலவே இருந்தது தான். அவளது வயதுக்கு செட் ஆன பலரும் ஏற்கனவே கமிட் ஆகி இருந்தனர். இன்னும் அவள் சிலரைப் பார்க்கவில்லை.
“அடப் போங்கடா.. கேர்ள்ஸ மட்டும் யங்கா சூஸ் பண்ணிட்டு அவங்களுக்கு எந்த ஆப்ஷனும் இல்லாமல் எல்லாரும் அங்கிளாவே இருந்தா எங்க மனசு என்ன பாடுபடும். இருக்கிற ஒன்னு இரண்டும் வெளியே கமிட் ஆகி இருக்கு. நமக்கு எப்படி டைம் பாஸ் ஆகுறது? டூ பேட்.. சீக்கிரம் இதுக்கு ஏதாவது செஞ்சே ஆகணும்” என்று வாசலைப் பார்த்துக் கொண்டிருந்தவளின் விழிகளில் அவன் விழுந்தான்.
இவள் நினைத்த அத்துணை ஹீரோக்களுடன் கூடவே சில பல ஹாலிவுட் ஹீரோக்களையும் சேர்த்த கலவையாக இருந்தவன் ஆறரை அடிக்கும் மேல் உயரமாக இருந்தான். சுருக்கமாகச் சொல்லப் போனால் தற்போது கதைகளில் வரும் ஆன்டி ஹீரோவுக்கான பத்து பொருத்தமும் பக்காவாக பொருந்தியவனாக அவனது தோற்றம் இருந்தது.
எச்ஆர் மேனேஜருடன் சிரித்துப் பேசியபடி வந்தவன் அங்கே அனைவருக்கும் தெரிந்தவனாக இருந்தது கண்டு மலர்விழி ஆச்சர்யம் அடைந்தாள். ‘யாராக இருக்கும்?’ என்று தலைமுடியைப் பிய்க்காத குறையாக யோசித்தவளின் காதில், “அவன் தான் ரஞ்சன் கோஸ்வாமி. ஆபரேஷன்ஸ் ஹெட். நம்ம எல்லாருக்கும் பாஸ்” என்று முணுமுணுத்தாள் ரேணுகா.
‘வாட்!! பாஸாஆஆஆஆஆ!!!! இந்த சின்ன வயசுலயே இவ்வளவு பெரிய போஸ்ட்டா?? மூளைக்காரன் தானோ? இல்ல… ஷார்ட் கட்ல வந்திருப்பானா??’ மலர்விழியின் மூளை ஆளை ஆராயாமல் அவனது வேலையை ஆராய்ந்தது.
‘அடச்சீ.. இத்தனை நேரம் வருத்தப்பட்டதுக்கு கடவுளா பார்த்து ஒரு ஹேண்ட்சம் ஹீரோவ அனுப்பி வச்சிருக்கார். நீ என்னடான்னா…’ என்று அவளது மனசாட்சி காரி துப்ப பார்வையை அவன் புறம் திருப்பினாள். அந்தோ பரிதாபம்! அவள் முதல் வரிசையில் இருந்தாள் என்பதையே மறந்து போனாள். அந்த ரஞ்சன் கோஸ்வாமியின் பார்வையும் அவள் மேல் தான் இருந்தது. இவளைக் கண்டு நக்கலாகச் சிரித்தது போல ஒரு தோற்றம்.
‘சே.. சே.. நானெல்லாம் ஒரு சின்ன துரும்பு மாதிரி. பாஸ் எதுக்கு நம்மள பார்த்து சிரிக்கணும், அதுவும் நக்கலா.. இதுவரைக்கும் ஒரு இன்ட்ரோ கூட கிடையாது. நான் யாருன்னு கூட அவருக்கு தெரிஞ்சிருக்காது’ தனக்குத் தானே புலம்பிக் கொண்டே வெளியே அமைதியாக அமர்ந்து கொண்டாள். ரஞ்சனுக்கு மலர்விழி பற்றி எந்த அளவுக்குத் தெரியும் என்பத அவனுக்கு மட்டுமே தெரியும்.
அந்த கான்பரன்ஸ் அடுத்து நடக்கப் போகும் ஒரிஜினலுக்கு ஒத்திகை போல இருந்தது. கம்பெனியின் வரலாறு, வளர்ச்சி அதன் தூணாக நின்றவர்கள், நிற்பவர்கள் என்று இரண்டு மணி நேரம் காதில் ரத்தம் வராதது தான் பாக்கி.
கிட்டத்தட்ட இருநூறு பேர் அங்கே கூடி இருந்தனர்.
இந்தியாவில் மொத்தம் பத்து நகரங்களில் அவர்களின் தேர்வு மையங்கள் இருந்தன.
சில தேர்வுகள் குறிப்பிட்ட நாளில் மட்டுமே தான் நடைபெறும் என்பதால் மையத்தை தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் மூடுவது சாத்தியம் இல்லை. மேலும், அங்கே பணி செய்யும் அனைவரும் கம்பெனியின் நிரந்தர அலுவலர் அல்ல.
மையம் இருக்கும் நகரம் மற்றும் நடைபெறும் தேர்வுகளைப் பொறுத்து நான்கு முதல் ஐந்து நிரந்தர அலுவலர் இருப்பது வழக்கம். மற்றவர்கள் எல்லாம் பகுதி நேர வேலைக்காக வருபவர்கள். எந்த நேரத்திலும் மையத்தில் இரண்டு நிரந்தர அலுவலராவது இருக்க வேண்டும் என்பது சட்டமாக்கப்பட்டிருந்தது. ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் கம்பெனியின் நிரந்தர அலுவலர் தான் பொறுப்பாக முடியும்.
அதனால், இந்தியாவைத் தலைமையாகக் கொண்ட அனைத்து நாடுகளின் மையங்களின் மேலாளர்கள் மட்டுமே இந்த விழாவுக்கு வரவழைக்கப் பட்டிருந்தனர். அடுத்த வருடம் நடைபெற இருக்கும் விழாவை முன்கூட்டியே திட்டமிட்டு தேர்வு மையங்களுக்கு விடுமுறை அளித்து அனைவரையும் வரவழைக்கலாம் என்பது மேலிடத்து முடிவு.
மிகவும் கடினமான வேலை தான் என்றாலும் முயற்சி செய்யலாம் என்று அனைவரும் யோசனை அளித்திருந்தனர்.
மீட்டிங் முடிந்ததும் சத்தம் இல்லாமல் வெளியேறிவிட முயன்ற மலர்விழியை விகாஸ் அழைத்தான்.
அவனருகில் நின்ற ரஞ்சனைப் பார்த்தவள், “போச்சுடா” என்று முனகிக்கொண்டே சென்று அவனருகில் நின்றாள்.
“மலர்! மீட் அவர் பாஸ் மிஸ்டர்.ரஞ்சன் கோஸ்வாமி. உன் கிட்ட ஏதோ பேசணும்னு சொன்னார்” என்று அறிமுகப்படுத்தி வைத்தான் விகாஸ்.
“விகாஸ்! அந்த எக்ஸ்பென்ஸ் ஃபைல் எல்லாருக்கும் அனுப்பணும்னு ஒரு லிஸ்ட் கொடுத்தேனே..” என்று ரஞ்சன் இழுத்ததில், “ஹான்.. யெஸ் ரஞ்சன்! இதோ அஞ்சு நிமிஷத்துல அனுப்பிடறேன்” என்று கிளம்பி விட்டான் விகாஸ்.
கிட்டத்தட்ட அந்த ஹாலே காலியாக, “மிஸ். மலர்விழி ராஜ்மோகன்!” என்று ஸ்பஷ்டமாக அழைத்தவனை ஆச்சரியமாக பார்த்தாள் அவள்.
“என்ன ஆச்சரியம்? ஏதோ வில்லனைப் பார்க்கிற மாதிரி, ம்ம். நான் ஐஐடி மெட்ராஸ் ப்ராடக்ட் ஓகே. ஏதோ கொஞ்சம் தமிழ் தெரியும்” என்று சிரித்தான்.
“அப்புறம் வேலை எல்லாம் எப்படி, பிடிச்சிருக்கா? ரொம்ப பணம் செலவாகுதுன்னு கவலைப் பட்டது மாதிரி தெரிஞ்சது. நமக்கெதுக்கு அந்தக் கவலை எல்லாம்? கம்பெனி செலவழிச்சா நல்லா ஜாலியா என்ஜாய் பண்றத விட்டு.. பீ சியர்ஃபுல்.. ஓகே” என்று சொல்லி விட்டு வாசலை நோக்கி நடந்தான்.
“ஓகே பாஸ்!”
“ஹா.. ஹா.. பாஸா… கால் மீ ரஞ்சன்.. பீ சியர் ஃபுல் அன்ட் பீ கேர் ஃபுல்” என்று வேகமாக நடந்து விட்டான்.
“கேர் ஃபுல்லா?? எதுக்கு இப்படி சொல்லிட்டு போறான்?? ஆமா… இவன் எதுக்கு நம்ம கிட்ட வந்து இப்படி பேசிட்டு போறான்.. ஒன்னுமே புரியலையே!” என்று தனது தலையைப் பலமாக உலுக்கியபடி தனது இடத்திற்குச் சென்றாள் மலர்விழி.
**********
ஒரு ப்ளாக் கலர் ஜீன்ஸ் அன்ட் லைட் ப்ளூ கலர் ஷார்ட் குர்த்தியில் கிளம்பினாள் மலர். கையில் ஒரு நாளுக்கான உடைகளுடன் ஒரு சிறிய பேக்கேஜ். இவள் யோசிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் டிரஸ் கோட் எல்லாம் கம்பெனியில் கொடுத்து விட்டார்களே.
“ஃப்ளவர்! என்ன ரொம்ப டல்லடிக்கற? யாராவது இப்படி ஓசில அதுவும் தாஜ்ல தங்கற சான்ஸ மிஸ் பண்ணுவாங்களா? பீ ஹேப்பி அன்ட் என்ஜாய் தி பார்ட்டி” என்று வாழ்த்திய கார்த்திக் கண்களால் கவனம் என்று எச்சரிக்கை விடுத்ததை தங்கை கவனமாக உள்வாங்கிக் கொண்டாள்.
“இது மாதிரி கார்ப்பரேட் வேர்ல்டுல பார்ட்டீஸ் எல்லாம் சகஜம் தானே. எப்படியும் ஒரு கான்பரன்ஸ் இருக்கும். பெரிய பெரிய பதவியில் இருக்கிற நிறைய பேரோட இன்ட்ரோ கிடைக்கும். இவ்வளவு ஷார்ட் பீரியட்ல உனக்கு கம்பெனியோட வைஸ் பிரசிடென்டையே பார்க்க சான்ஸ் கிடைக்கப் போகுது. காம்பயரிங் பண்ற சான்ஸ தான் மிஸ் பண்ணிட்ட. மத்த இவன்ட்ஸ் எல்லாம் மிஸ் பண்ணாமல் இரு” என்று மாப்பிள்ளைக்கு ஒத்து ஊதினான், அங்கே இருந்த ஈஸ்வர்.
“இது சரியில்லையே.. இரண்டு பேரும் எப்படி எனக்கு சப்போர்ட் பண்றீங்க.. என்ன விஷயம்? என்னால ஏதாவது காரியம் ஆகணுமா?”
“உன்னாலயா.. வேலையா.. நோ.. நோ.. அதெல்லாம் ஒன்னும் இல்லை. நம்ம ஃப்ளவர்னு ஒரு.. ஒரு.. இதுல.. சொன்னது தான்..“ என்று கார்த்திக் திணற
“எதுல.. ஜன்னீ.. எனக்கு இப்போ ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.. இவங்க ரெண்டு பேரும் இப்போல்லாம் ஒன்னாவே சுத்தறாங்களே என்ன காரணம்னு தெரியுமா. ஏதோ பொண்ணை அடிக்கடி மீட் பண்றாங்க, அதுவாவது தெரியுமா“ என்று ஒரு சண்டையை ஆரம்பித்து விட்டாள் மலர்.
“ஹேய் மலர் எங்கே உன் மொபைலைக் கொண்டா.. அதுக்குள்ள ஆப்பிளா.. அதுவும் லேட்டஸ்ட் மாடல் வேலைக்குப் போய் இரண்டு மாசம் தானே ஆகுது. வெள்ளைக்காரன் வாரிக் கொடுக்கிறான். கொடுத்து வச்ச மகராசி” என்று அவளது மொபைலை வாங்கிய ஈஸ்வர் அண்ணன் தங்கையின் சண்டை முடிவுக்கு வரும் முன் அவனது வேலையைக் கச்சிதமாக முடித்திருந்தான்.
“பிராண்டுக்கு ஒரு மொபைல் வச்சிருக்க ஆளெல்லாம் என்னைப் பேசக் கூடாது” என்று ஒற்றை விரலால் அவனை மிரட்டியபடி கிளம்பினாள் மலர்விழி.
“போயிட்டு வரேன் மா” என்று சுந்தரியிடம் சொல்லிக் கொண்டவளின் குரல் தடுமாறியது.
“ஷ்ஷ்.. மலர்… என்ன பிரச்சினை உனக்கு? ஏன் இப்படி பிஹேவ் பண்ற? ஒரே ஒரு நாள் உள்ளூர்ல தான் ஸ்டே பண்ணப் போற. ஒரு ஃபோன்ல நாங்க வந்துடுவோம், அப்புறம் என்ன பயம்?” அவளது கார் வரை வந்த ஈஸ்வர் கேட்க
“தெரியல ஈஸ்வர். சம்திங் டெல்ஸ் மீ, ஏதோ நடக்கப் போகுதுன்னு. யாருக்கு, என்னன்னு தெரியலை. கொஞ்சம் பயம்மா இருக்கு. என்னோட இம்மீடியட் பாஸ் கிட்டத்தட்ட இந்த பார்ட்டிக்கு ப்ளான் போட ஆரம்பிச்சதுல இருந்து சரியில்லை. ரொம்ப நல்ல மனுஷன். என்ன பிரச்சினைன்னு நான் எப்படி கேட்க முடியும்? ஆனால் ஏதோ பிரச்சினைல இருக்கார்னு தெரியுது, கம்பெனில தான் ஏதோ நடக்குது.”
“இது உனக்கு தேவையில்லாத பயம். அப்படியே கம்பெனில ப்ராப்ளம்னு வந்தாலும் உன்னோட சம்பந்தம் இல்லாத எதுலயும் நீ தலையிட முடியாது, தலையிடக் கூடாது. அன்டர்ஸ்டான்ட்” என்று சொன்னாலும் கார்த்திக்கும் ஈஸ்வரும் ஒருவரை ஒருவர் அர்த்தத்துடன் பார்த்துக் கொண்டனர்.
“இதுக்கு நாம எதுவும் பண்ண முடியாது.. அப்புறம்...வேறென்ன கவலை உனக்கு?”
“உள்ளூர்ல இருக்கிற எல்லோருக்கும் ரூம் போட்டது எல்லாம் ஓகே. ஆனால் அதெல்லாம் அவங்கவங்க பேர்ல இல்லை. மொத்தமா கம்பெனி பெயர்ல இருக்கு. அது கூட ஓகே. ஆனால் அதை கோ-ஆர்டினேட் பண்ணி யார் எங்கே தங்கலாம்னு ஹெல்ப் பண்ண யாரையும் அசைன் பண்ணல”
“ஹப்பாஆஆஆ… இந்த குட்டி மூளைக்குள்ள எவ்வளவு பெரிய கவலையெல்லாம் வருது. நீ யோசிச்ச மாதிரி அவ்வளவு பெரிய கம்பெனில வேற யாரும் யோசிக்க மாட்டாங்களா? ஹோட்டல் ஸ்டாஃப கூட இதுக்காக ஏற்பாடு செய்து வச்சிருக்கலாம். சொல்லப் போனால் அவங்களுக்கு தானே கரெக்டா ரூம்ஸ் எல்லாம் தெரியும்”
“நீ சொல்றது சரிதான்.. இருந்தாலும்… “
“அப்படி உனக்கு ஏதாவது டவுட்ஸ் இருந்தால், அங்கே இருக்க முடியாதுன்னு தோணினா நைட் எந்த டைமா இருந்தாலும் கால் மீ. ஓகே. வீட்டுக்கு வந்துடலாம். இப்போ தைரியமா கிளம்பு” என்று அவளை அனுப்பி வைத்து விட்டு பெருமூச்சு ஒன்றை வெளியிட்டனர் கார்த்திக்கும் ஈஸ்வரும்.
“கார்த்திக்! இவ சொல்வதைப் பார்த்தால் பிரச்சினை இங்கே தான் இருக்கும் போல இருக்கே”
“மே பி.. ஆனால் இதெல்லாம் ஒரு அரசியல் தான். டென்டர் வரும் போது இதை நீ வச்சுக்கோ, அதை நான் வச்சுக்கறேன். உன் வழியில் நான் தலையிட மாட்டேன் என் வழியில் நீ தலையிடாதேன்னு ஒரு மறைமுகமான ஒப்பந்தம் தான் டாப் லெவல்ல இருக்கும். இது தெரியாமல் கீழே வேலை செய்யற எம்ப்ளாயீஸ் தான் நேர்மை நியாயம்னு உயிரை விடறதெல்லாம் நடக்கும்” என்று வான்வெளியை வெறித்தான் ஈஸ்வர்.
“ஈஸ்வர்!!!!” அதிர்ச்சியடைந்த கார்த்திக்கைக் கண்டு சோகையாகப் புன்னகைத்த ஈஸ்வர் கமல் சக்சேனாவின் விஷயத்தில் இதுவரை தனது கண்டுபிடிப்புகளை பகிர்ந்து கொண்டான். இப்படியும் நடக்குமா என்று தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான் கார்த்திக்.
“நாம வேணும்னா ஒரு ரவுண்டு ஜஸ்ட் லைக் தட் தாஜுக்குப் போயிட்டு வரலாமா கார்த்திக்? ரெஸ்டாரன்ட் ஓபன்ல தான் இருக்கும். ஏதாவது விஷயம் கிடைச்சா நல்லா இருக்கும்” என்று கார்த்திக் பதில் சொல்ல நேரம் கொடுக்காமல் அழைத்துச் சென்று விட்டான் ஈஸ்வர். அங்கே அவர்கள் தேடிவந்தது கிடைத்ததோ இல்லையோ புதிய விஷயம் ஒன்று தெரியவந்தது.
***********
ஹோட்டல் தாஜ், மும்பையின் வெகு முக்கியமான லேன்ட்மார்க்குகளில் ஒன்று. “XYZ edu services celebrating x years of services” என்ற பதாகை அனைவரையும் வரவேற்றது.
காலையில் கான்பரன்ஸ் நல்லபடியாக முடிந்தது. தலைமை அலுவலகத்தில் இருந்து வந்திருந்த அதிகாரிகளையும் இங்கே இருக்கும் அலுவலர்களையும் இணைக்க ஒரு பாலமாக இருந்தது அந்த கான்பரன்ஸ். அதன் பிறகு பிரம்மாண்டமான முறையில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சாயங்காலம் தொடங்கிய கெட் டுகெதர் என்று பெயரிடப்பட்டிருந்த நிகழ்ச்சியில் எல்லாரும் தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டனர். பலரும் குடும்பத்துடன் வந்திருந்தனர்.
அதன் பிறகு கார்ப்பரேட் உலகுக்கே உள்ள வகைகள் சில விளையாட்டுகள், பின்னர் கலர் கலராகத் தண்ணீர் சப்ளை தொடங்கியது. ஹாட் கோல்ட் என்று ஆளுக்கொரு கண்ணாடி டம்ளருடன் காணப்பட்டனர். கூடவே அதற்கான உணவு வகைகளும் வந்து சேர்ந்தன.
ஆரம்பத்தில் இருந்தே விகாஸ் தனது மனைவி மற்றும் மகளுடனே இருந்தான். நேரம் செல்லச் செல்ல அவன் முகத்தில் ஒரு பதட்டம் அப்பட்டமாகத் தெரிந்தது. சுற்றும்முற்றும் பார்த்தவன், “ஜானு! நீங்க இரண்டு பேரும் கிளம்புங்க. யார் கேட்டாலும் உங்க அம்மா ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகி இருக்காங்க. எமர்ஜென்சின்னு சொல்லு. சீக்கிரம்..” என்று அவர்களைக் கிளப்பினான்.
“டாட்! ப்ளீஸ்! எதுக்கு இப்படி பொய் சொல்லணும்? நான் பார்ட்டி ஃபுல்லா இருக்கத்தான் போறேன்” என்ற மகளை இழுத்துக் கொண்டு போய் கார் வரை விட்டு வந்தான். வேறு வழியின்றி அவன் பின்னால் ஓடினாள் அவன் மனைவி.
“ஹப்பாடா” என்பது போல நிம்மதிப் பெருமூச்சு விட்டவனை மொபைல் அழைத்தது. அவசரத்தில் ஸ்பீக்கரை ஆன் செய்து விட்டான்.
“தப்பு பண்ணிட்ட விகாஸ்… எத்தனை நாளைக்கு இப்படி தப்பிக்க முடியும்? நான் சொன்னது போல இரண்டுல ஒரு விஷயம் நடக்கணும். இல்லேன்னா…”
“ஸ்கவுன்டரல்… தைரியம் இருந்தால் நீ யாருன்னு முன்னாடி வந்து நின்னு பேசு. அதை விட்டு என் ஃபேமிலிய வச்சு எதுக்கு என்னை மிரட்டற? எனக்கு இது இல்லேன்னா இன்னொரு கம்பெனி… இப்படி ஷார்ட் கட்ல போய்த்தான் சம்பாதிக்கணும்னு எந்த அவசியமும் இல்லை. நான் சென்ஸ்”
யாரும் அருகில் இல்லை என்று நினைத்து அவன் பேசிய பேச்சை மூன்று பேர் கேட்டிருந்தனர். சத்தம் இல்லாமல் அங்கிருந்து தள்ளிச் சென்ற மலர்விழி ரெஃபிரஷ் ஆகி வருகிறேன் என்று ரூமிற்குச் சென்றாள்.
“நம்மள எவ்வளவு ஈஸியா நினைச்சுட்டான்.. அவன் எதுக்கும் ஒத்துக்க மாட்டேங்கறான். என்ன பண்ணலாம்? இன்னைக்கே எதையும் ப்ளான் பண்ணினா ரிஸ்க் ஜாஸ்தி” என்று யாரோ பேசிக்கொண்டு இருந்தார்கள்.
“ஜஸ்ட் சிம்பிளா ஒரு ஆக்சிடன்ட் பண்ணு.. இன்னைக்கு வேண்டாம் நாளைக்கு பண்ணு…”
“ஆ…” என்று அலறப் போனவள் வாயை இரு கைகளாலும் மூ
டிய படியே அமைதியாக ரூமூக்குள் சென்றாள். சற்று நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு மறுபடியும் ஹாலில் வந்து அமர்ந்து கொண்டாள்.