• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

அத்தியாயம் - 7

SudhaSri

Administrator
Staff member
Jun 16, 2024
398
0
43
india
என்னை இந்த பூமி சுற்றிவர ஆசை - 7

“ஹாய் மலர்! என்ன இந்த நேரத்தில காஃபி குடிக்கிற? என்ன ஆச்சு?” தலைவலி என்று காபி குடிக்க வந்தவளின் தலைவலியை மேலும் ஏற்றுவதற்கென்றே அங்கே வந்து சேர்ந்தான் ரஞ்சன்.

“நத்திங் ரஞ்சன்! கொஞ்சம் தலை வலிக்கற மாதிரி இருந்தது. அதான் காஃபி குடிச்சா பெட்டரா இருக்கும்னு வந்தேன்.”

“நீ பேசி இன்னும் தலைவலியை ஏத்திவிடாதேன்னு சொல்றியா? நான் கிளம்பட்டுமா??” என்றவன் அவளது பதிலை எதிர்பாராமல் தானும் ஒரு காபியுடன் அங்கே அமர்ந்து கொண்டான்.

இப்போதெல்லாம் அடிக்கடி ரஞ்சன் மலர்விழியின் பாதையில் குறிக்கிடுவதாக அவளுக்குத் தோன்றியது. தினமும் ஒரு முறையாவது அவளிடம் பேசாமல் செல்வதில்லை. அந்த வாய்ப்பு அதுவாகவே அமைகிறதா இல்லை இவன் ஏற்படுத்திக் கொள்கிறானா என்பது தான் மலருக்குப் புரியாத புதிராக இருந்தது.

அவன் தனது செயல்களின் மூலம் நீ என்னவள் என்று உணர்த்த முயல்கிறான் என்பதை இவள் அறிந்தே இருந்தாள். இவள் மனமும் மெல்ல மெல்ல அவன் புறம் சாயத் தான் செய்கிறது. ஆனால் எதை வைத்து இவன் எனக்கானவன் என்று முடிவு செய்ய முடியும் என்பது தான் அவளுக்கு விளங்கவே இல்லை.

மலர்விழியைப் பொறுத்தவரை அந்தஸ்து ஒரு விஷயமல்ல. ஆனால் வெளியில் இனிக்கப் பேசும் ரஞ்சனின் ஒரிஜினல் முகமே இது தானா என்று அவளுக்குப் புரியவில்லை. காரணம் இல்லாமல் வருவது தான் காதல் என்றாலும் தன்னைச் சுற்றி நடப்பதை நினைக்கும் போது அவளுக்குத் தயக்கமாகவும் அதே நேரத்தில் பயமாகவும் இருந்தது.

இது போன்ற யோசனைகளில் ஆழ்ந்து அவளது காபி ஆறிப் போனது தான் மிச்சம். எதிரே அமர்ந்து அவளது முகத்தில் வந்து போகும் பாவங்களை பார்த்துக்கொண்டு இருந்த ரஞ்சனுக்கு அவள் மனது புரிந்தது.

“மலர்!” என்று மெல்ல அவளது கையைத் தொட்டான்.

“ஹான்… என்ன.. என்ன.. ரஞ்சன்?” என்று பதறியவளுக்கு கண்களால் சுற்றுப்புறத்தை உணர்த்தினான்.

“ஓ… ஐயாம் ஸாரி ரஞ்சன். ராத்திரி எல்லாம் தூக்கமே இல்லை. அதான் ஓவரா தலைவலி வந்துடுச்சு.”

ஏன் தூக்கமில்லை என்று கேட்க இது நேரமில்லை என்று நினைத்தவன், “ரொம்ப முடியலேன்னா லீவ் போட்டிருக்கலாமே? எதுக்கு இப்படி தலைவலியோட கஷ்டப்பணும்” என்றான். ‘காரணம் உனக்குத் தெரியாதா டா?’ என்று கேட்ட அவனது மனசாட்சியை தட்டி வைத்தான்.

“இல்ல… இன்னைக்கு **** சென்டர்ல ஒரு முக்கியமான எக்ஸாம். அதான், யாருக்கும் அசைன் பண்ணாம நானே மானிட்டர் பண்ணனும்னு வந்துட்டேன். இனிமேல் கொஞ்சம் ஃப்ரீ தான். தாங்க்ஸ் ஃபார் ஆஸ்கிங்” என்று எழுந்துவிட்டாள்.

தானும் உடன் எழுந்து நடந்தவன் அவனது அறை வரவும் சற்றே தயங்கி நின்றான். கேள்வியாகப் பார்த்த மலரிடம், “நான் உன் கூட கொஞ்சம் பேசணும் மலர். ப்யூர் பர்சனல். எப்போ எங்கே பேசலாம்னு முடிவு பண்ணி சொல்லு ஓகே!” என்று அறைக்குள் புகுந்து கொண்டான்.

திகைத்து நின்ற மலர்விழி அன்று மாலையே அந்த வாய்ப்பை அவனுக்கு அளிப்போம் என்று எண்ணவே இல்லை.

மாலை ஆறுமணி, அலவலக வாசலில் நின்று ஓலா, ஊபர் என்று ஊரில் இருக்கும் டாக்ஸிகளை எல்லாம் அழைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் மலர்விழி. சிவப்பு நிற மினி கூப்பர் ஒன்று அவளருகில் வந்து நின்றது. சட்டென்று பின்வாங்கியவள், அது ரஞ்சனின் கார் என்று அறிந்து ஆசுவாசம் அடைந்தாள்.

“ஹேய் மலர்! உன் கார் எங்கே? எதுக்கு இங்க நின்னுட்டு இருக்க?”

“தலைவலியால கார் எடுக்கலை. அதான் டாக்ஸிக்கு ட்ரை பண்ணிட்டு இருக்கேன்.”

“ஓ.. வாயேன்.. நான் ட்ராப் பண்றேன்.. “

“திஸ் இஸ் டூ மச் ரஞ்சன். உங்க வீடு ஜஸ்ட் ஆப்போஸிட் டைரக்ஷன்ல இருக்கு. எனக்காக எதுக்கு அலையணும். நான் பார்த்துக்கறேன். நீங்க கிளம்புங்க.”

அவன் எதுவும் சொல்லாமல் அவளைப் பார்க்க, அமைதியாக காரில் ஏறிக் கொண்டாள் மலர்விழி.

சற்று நேரம் அந்த காரில் கடும் அமைதி நிலவியது.

அந்த அமைதியைக் கலைத்த ரஞ்சன் மலர்விழியின் மீதான தனது விருப்பத்தை நேரடியாகத் தெரிவித்தான். “எங்க வீட்டுல நாலு பசங்க. நான் தான் கடைசி. ரொம்ப கஷ்டம் கிடையாது பட் மிடில் கிளாஸ் ஃபேமிலி தான், உன்னை மாதிரி கிடையாது” என்றவனைக் கேள்வியாகப் பார்த்தாள்.

“மலர்விழியோட அப்பா ராஜ்மோகன், அவங்க அப்பா சந்திரமோகன் அவங்க எல்லாம் என்ன பேக்ரவுண்ட்ல இருந்து வந்தவங்கனன்னு எனக்கு நல்லாவே தெரியும்.”

“ஓ.. ஆனால் நீங்க ஓவர் படிப்ஸ். எனக்கு இவ்வளவு தாங்காது”

“படிப்பு அண்ணா எல்லாம் கொடுத்தது. ஐஐடி மெட்ராஸ்ல இன்ஜினியரிங் முடிச்சிட்டு ஸ்டான்ட்ஃபோர்ட்ல எம்பிஏ பண்ணினேன். அப்புறம் சிலபல சர்டிபிகேஷன்ஸ். இப்போ அந்தேரில ஒரு த்ரீ பெட்ரூம் ஃப்ளாட் இருக்கு. இதோ இந்த கார் இருக்கு. பேரன்ட்ஸ் ஊர்ல தான் இருக்காங்க. இங்கே நான் தனி தான். நீயும் வந்தால் லைஃப் நல்லா இருக்கும்னு தோணுது” என்று தன் வாழ்க்கை வரலாற்றையே சுருங்கச் சொல்லி விட்டான். அவளோ “ஆ” வென்று பார்த்துக் கொண்டே இருந்தாள்.

“என்ன பார்க்கிற?”

“இல்ல… நானும் எத்தனையோ விதமான ப்ரபோஸல் கேள்விப்பட்டிருக்கேன். இப்படி ஒன்னு… சான்ஸே இல்லை… “ என்று உதட்டைப் பிதுக்கிச் சிரித்தாள்.

“ஹேய்.. என்ன.. என்னைக் கேலி பண்றியா? என்ன செய்யறது.. உன் மூஞ்சியை பார்த்தால் இப்படித் தான் பேச வரும் போலிருக்கு” என்று அவனும் சிரித்தான்.

அந்தச் சிரிப்பில் அவளும் இணைந்து கொண்டாள். அதுவே அவளது சம்மதத்தையும் தெரிவித்தது.

அவளது கைகளோடு தன் கைகளை இணைத்துக் கொண்டவன், “இவ்வளவு சீக்கிரம் ஒரு பொண்ணு கிட்ட நான் விழுவேன்னு நினைச்சதே இல்லை மலர்” என்றான்.

“வாட்!”

“பார்த்து கொஞ்ச நாளிலே பேசி பழகாமலே லவ் சொல்லியாச்சு. கிட்டத்தட்ட லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் மாதிரி இருக்கு இது.”

“இருக்கும்… இருக்கும்… “ என்றவள் அப்போது தான் கார் ஓரங்கட்டி நிறுத்தப்பட்டிருப்பதை உணர்ந்தாள்.

“கிளம்பலாம் ரஞ்சன், நீங்க எதிர்பார்த்த சம்மதம் தான் சீக்கிரம் கிடைச்சாச்சே” என்று சிரித்த மலர்விழியை ஒரு மர்ம புன்னகையோடு பார்த்தபடி காரை ஸ்டார்ட் செய்தான் ரஞ்சன். அந்தப் புன்னகையில் இருந்தது என்னவோ??

யாருடைய நல்ல வேளையோ?? விகாஸைப் பற்றி அவனிடம் தனது சந்தேகங்களைச் சொல்ல வேண்டும் என்று நினைத்த மலர்விழி அதனைச் சொல்லாமலே வீடு வந்து சேர்ந்தாள்.

**********

“மலர் ஒரு முக்கியமான விஷயம் சொன்னா ஈஸ்வர், அது கரெக்டா இருக்குமோன்னு தோணுது” என்றபடி உள்ளே வந்த கார்த்திக் கம்ப்யூட்டர் திரையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த ஈஸ்வரைக் கண்டு வேகமாக அவன் அருகில் வந்தான்.

திரை முழுவதும் கமல் சக்சேனாவின் பல இடங்களில் அவர் எடுத்துக் கொண்ட விதம் விதமான புகைப்படங்கள். அநேகமாக அவர் தனியே இருக்கும் புகைப்படங்கள் தான். க்ரூப் ஃபோட்டோ கண்களில் எல்லாம் கலியுகக் கண்ணன் போல இரு பெண்களுக்கு நடுவே தான் நின்றிருந்தார். அலுவலக நண்பர்களுடன் சென்ற அட்வெஞ்சர்களிலும் அப்படித்தான். சில புகைப்படங்கள் சென்சாருக்கு அப்பாற்பட்டவையாக இருந்தன.

இருவரும் சேர்ந்து அவரது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என்று சோஷியல் மீடியா அக்கவுண்டுகளை தீவிரமாக ஆராய்ச்சி செய்ததில் மேலும் சில அரிய புகைப்படங்கள் கிடைத்தன. அவை கமல் சக்சேனாவின் கலை(!??) ஆர்வத்தைப் பறை சாற்றுவதாக இருந்தன.

என்னடா இது, இவன் என்ன மாதிரியான மனுஷன்? தேவையில்லாமல் இந்த கேஸில் தலையைக் கொடுத்துவிட்டோமோ என்று ஒரு நிமிடம் ஈஸ்வர் திகைத்து விட்டான்.

“ஈஸ்வர்! என்ன மனுஷன்டா இவன்? என்ன அட்வெஞ்சர் எல்லாம் பண்ணி இருக்கான் பாரு. இதை வச்சு யாராவது இவனைப் போட்டுத் தள்ளி இருந்தாலும் ஆச்சர்யப்பட ஒன்னுமே இல்லை.”

“இப்போ இருக்கிற டெக்னிக்கல் வோர்ல்டுல அதுவும் ஏஐ எல்லாம் வந்த பிறகு எதையும் நிஜம்னு நம்பிட முடியாது கார்த்திக். நாம பார்க்கிறதெல்லாம் நிஜமா, இல்லை அவனுக்கு வேண்டாதவங்க யாரும் ப்ளே பண்றாங்களான்னு நாலையும் யோசிக்கணும். அவனை ட்ராப்ல மாட்டிவிட்டு கேஸை டைவர்ட் பண்றதுக்குக் கூட இப்படிப் பண்ணி இருக்கலாம்.”

“நீ சொல்றதும் சரிதான். இப்போ நாம என்ன பண்றது? அவன் மிஸஸ் கிட்ட என்ன பேசறது? அவங்க இவன் ரொம்ப நல்லவன்னு சூடம் அடிச்சு சத்தியம் பண்ணுவாங்க போல இருக்கே.”

“ஏதோ ஒரு இடத்தில சறுக்கிட்டா அவனை மொத்தமா வேற மாதிரி ஸ்டாம்ப் குத்திட முடியாது கார்த்திக். உண்மை வேற மாதிரி கூட இருக்கலாம்.”

“ஹூக்கும்.. நல்லவேளை நான் ஐடி பக்கம் போகலை. நிறைய வம்புல மாட்டி முழிக்கணும் போல.”

“ஆமா.. இவர் பெரிய ராமச்சந்திரன். என் தங்கச்சிய கேட்டாத்தானே தெரியும், மாப்பிள்ளையோட வண்டவாளம் எல்லாம். அடங்குடா.”

“சரிங்க சார். அடுத்து என்ன பண்றதா உத்தேசம்?”

“எனக்கும் ஒன்னும் புரியல டா. மிஸஸ்.சக்ஸேனா வேற ஏதோ முக்கியமான விஷயம் பேசணும், காலங்காத்தால ஃபோன் பண்ணி வீட்டுக்கு வாங்கன்னு சொல்லி இருக்காங்க. அங்கே என்ன பூதம் காத்துட்டு இருக்கோ தெரியலை.”

“சரி வா கிளம்புவோம்..”

அந்த அவசரத்திலும், “அப்படி ஒன்னும் தலைபோற காரியம் எதுவும் இல்லை அது. கொஞ்சம் வெயிட் பண்ணட்டும். நீ ரிலாக்ஸா உட்காரு. சூடா ஸ்ட்ராங்கா ஒரு காஃபி குடிக்கலாம்.”

“கரெக்ட் கூடவே ஏதாவது ஸ்நாக்ஸ் இருந்தால் நல்லா இருக்கும்.”

“இருக்கும் டா.. இருக்கும்.. எல்லாம் எங்க அத்தையைச் சொல்லணும் உங்களுக்கெல்லாம் நாக்கை நல்லா வளர்த்து வச்சிருக்காங்க” என்று அலுத்துக் கொண்டாலும் காஃபியுடன் சூடாக ஸ்நாக்ஸ் ஆர்டர் செய்து விட்டு ரிலாக்ஸாக அமர்ந்த ஈஸ்வருக்குத் திடீரென ஒரு விஷயம் ஞாபகம் வந்தது.

“ஹேய்! ஃப்ளவர் ஏதோ முக்கியமான விஷயம் சொன்னான்னு தானே நீ இங்கே வந்த. அதை மறந்தே போயிட்ட பாரு”

“அச்சோ! நல்ல வேளை ஞாபகப் படுத்தின டா. அவளும் ஆஃபீஸ்ல இது மாதிரி இஷ்யூ இருக்குமோன்னு சந்தேகப்படறா டா” என்று ஆரம்பித்து விகாஸைப் பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொண்டான்.

“ஓ… நாம நினைக்கிறத விட இது பெரிய நெட்வொர்க் மாதிரி தெரியுது. பார்ப்போம் எங்கே போய் முடியுதுன்னு. மலரை நீ நேரா ஹாஸ்பிடல் வரச் சொல்லு. இப்போ நாம கமல் சக்சேனா வீட்டுக்கு போயிட்டு அங்கே இருந்து ஹாஸ்பிடல் போகலாம். மலர் கிட்ட கிளியரா சொல்லி வை. நாம வர்ற வரைக்கும் ஜஸ்ட் ஹெல்த் பத்தி மட்டும் தான் பேசணும். வேற எதுவும் பேசவே கூடாதுன்னு”

“ஓகே ஈஸ்வர்.. வா என் கார்ல போயிடலாம்”

கமல் சக்சேனாவின் வீடு. ஈஸ்வரும் கார்த்திக்கும் நினைத்தது போல அவனது மனைவி அதிர்ச்சி எல்லாம் அடையவில்லை. இவர்கள் சாஃப்ட் காப்பியை காட்டினால் அவள் பங்குக்கு, ப்ரிண்ட் போட்ட ஃபோட்டோக்கள் சிலவற்றைக் காட்டினாள்.

அவற்றில் ஒரு பெண்ணை மட்டும் அவளுக்கு அடையாளம் தெரிந்தது.

“ஜிக்யாஸா, அவருடைய பிஏ. இப்போதும் அதே ஆஃபீஸ்ல தான் இருக்கா. நார்மலாவே அவ ட்ரஸ்ஸிங் சென்ஸ் இப்படித் தான் இருக்கும்” என்று பெருமூச்சு விட்டாள் அவள்.

“ஜிக்யாஸா… இந்த பெயர மலர் சொல்லி கேள்விப்பட்டு இருக்கேன் ஈஸ்வர். இப்போ அந்த ரஞ்சனுக்கு பிஏ அவ தான். விகாஸ் கூட அவளைக் கண்டு பயந்ததா சொல்லி இருக்கா” ஈஸ்வரின் காதைக் கடித்தான் கார்த்திக்.

“ஓ…” என்று எந்த சலனமும் இல்லாமல் அமைதியாக கேட்டுக் கொண்டான் ஈஸ்வர். சற்று நேரம் அங்கே அமைதி நிலவியது.

“நான் உங்களை வரச் சொன்னது இதுக்காக இல்லை. எனக்கு அவர் எல்லை மீறி நிறைய பேர் கிட்ட பழகி இருப்பார்னு தோணலை. கமலைப் பொறுத்தவரை சான்ஸ் கிடைச்சா கொஞ்சம் யூஸ் பண்ணிப் பார்க்கிறதுல தப்பென்னன்னு கேட்கற ரகம். அதுல தப்புன்னு உலகம் சொல்ற எல்லாமே அடங்கும்” என்றாள் படு கேசுவலாக.

“மேடம்!!!!”

“இதுல அதிர்ச்சி ஆக எதுவும் இல்லை ஈஸ்வர். சீசரோட மனைவி தான் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு இருக்கணும், சீசர் இல்லையே. இது தானே இந்த உலக நியதி” என்றாள் சோகையாக. அவளே மேலும் தொடர்ந்தாள்.

“நம்ம நாட்டைப் பொறுத்தவரை இறந்து போயிட்ட பிறகு எல்லாரும் புண்ணியாத்மா ஆகிடுலாங்க. எதுவுமே இல்லைன்னாலும் அவங்களைப் பத்தின நல்லதை மட்டுமே பேசணும், அவங்க செஞ்ச கொலையைக் கூட நாம பேசக் கூடாது. கேட்டா, அவனே போயிட்டான். இனிமேல் பேசி என்ன ஆகப் போகுதுன்னு கேள்வி வரும்.

அப்படியே நாம சும்மா விட்டுட்டா அதுக்கும் பேச்சு வரும், இவ எப்படி ஆளோன்னு”

அத்தனை விரக்தி அவள் வார்த்தைகளில். அவளது பார்வை அங்கே இருந்த கமலின் பெற்றோரை எரித்தது. அவர்கள் தான் ஏதோ பேசியிருக்க வேண்டும். நமக்கெதுக்கு அவர்கள் வீட்டு விவகாரம் என்று வந்த வேலையை கவனித்தான் ஈஸ்வர்.

“மேடம்! நீங்க வேற ஏதாவது புதுசா கண்டு பிடிச்சீங்களா?”

“ஹான்.. ஆமா.. இருங்க.. வரேன்” என்று உள்ளே போனவள் சில டைரிகளுடன் வந்தாள். ஈஸ்வர் டெல்லியில் இருந்து கொண்டு வந்த ட்ராவல் டைரிகள்.

அதில் எதுவும் இல்லை என்று தூக்கி போட்டானே, புதிதாக இவள் எதைக் கண்டுபிடித்திருக்கிறாள் என்ற கேள்வியுடன் பார்த்தான்.

ஒரு குறிப்பிட்ட பக்கத்தைத் திறந்து அவனிடம் நீட்டினாள். அந்தப் பக்கம் முழுவதும் ஒரே வரி தான் எழுதப் பட்டிருந்தது, “how can I exchange my kids?”

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் அதில் தேதியும் குறிப்பிடப் பட்டிருந்தது. கமல் இறந்ததற்கு பதினைந்து நாட்கள் முந்தைய தேதி. படித்து விட்டு யோசனையில் ஆழ்ந்தான் ஈஸ்வர்.

“அடுத்த பேஜ் போங்க ஈஸ்வர்” என்றாள் மிஸஸ்.சக்ஸேனா.

அந்தப் பக்கம் முழுவதும் “please take my wife and leave my kids” இதிலும் தேதி இருந்தது. அவன் இறப்பதற்கு பத்து நாட்கள் முந்தைய தேதி.

“இதெல்லாம் எதுக்காக நடந்த பேரம், யார் மிரட்டினாங்க, அவங்க தான் கொலை பண்ணினாங்களா, இல்லை இவர் ப்ரஷர் தாங்காமல் சூசைட் பண்ணிட்டாரா இந்த மாதிரியான டீடெயில்ஸ் எல்லாம் எனக்கு எதுவும் தேவையில்லை ஈஸ்வர். என் பசங்களுக்கும் தேவையில்லை. ஆனால் இதையெல்லாம் நீங்க கண்டிப்பா கண்டுபிடிக்கணும்.

வேற யாருக்கும் டேமேஜ் வர்றதுக்கு முன்னாடி நடந்தா நல்லா இருக்கும். கார்ப்பரேட் வேர்ல்டுல ஏன் அப்பாவி குடும்பங்களை டார்கெட் பண்ணனும்? ஆசை காட்டி குடும்பத்தில் குழப்பம் வரவழைச்சு, ம்ச்… குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கணும்னா அதே போல எண்ணம் இருக்கிறவங்க கூட கூட்டணி வைக்க வேண்டியது தானே.”

மழையெனப் பொழிந்தவளைத் தடுக்க அவர்களுக்கு வழி இருக்கவில்லை. அவர்களது மனதிலும் அதே கேள்விகள் தானே! அத்துடன், அங்கே இன்னும் ஒரு குடும்பம் இந்த ட்ராப்பில் மாட்டிக் கொண்டு விட்டதோ என்ற சந்தேகமும் இருக்கிறதே??

“மேடம்! ஒரே ஒரு கேள்வி, தப்பா எடுத்துக்காதீங்க. இது உங்க ஹஸ்பன்ட் கையெழுத்து தானே. ஆர் யூ ஷ்யூர்?” உறுதிப் படுத்திக் கொள்ள விழைந்தான் ஈஸ்வர். அவனுக்கு இன்னமும் கூட இதை எப்படி தவற விட்டோம் என்று யோசனையாகவே இருந்தது.

அவனை முறைத்துப் பார்த்தவள், அவனது பழைய டைரிகளையும் கொண்டு வந்து அவனிடம் கொடுத்து, “எங்க கொண்டு போய் கொடுக்கணுமோ கொடுத்து செக் பண்ணிக்கோங்க” என்றாள்.

அவளிடம் விடைபெற்று வெளியே வந்தவர்கள் தலை சுற்றிப் போய் நின்றார்கள்.

அங்கே மருத்துவமனையில் விகாஸைப் பார்க்கச் சென்ற மலர்விழிக்கும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. நேராக விகாஸின் மனைவியைச் சென்று பார்த்தவள், “மேடம்! விகாஸ் இப்போ எப்படி இருக்கார்? மூணு மாசத்துக்கு மேல ஆச்சே” என்று விசாரித்தாள்.

“எந்த முன்னேற்றமும் இல்லை மலர். என்ன பண்றதுன்னு எதுவும் புரியலை. திடீர்னு கோமான்னு சொல்றாங்க, திடீர்னு பேசறார்னு சொல்றாங்க. ஆனால் என் கிட்ட ஒரு வார்த்தை கூட பேசலை, இவ்வளவு ஏன் கண்ணைத் திறந்து என்னையோ என் பொண்ணையோ பார்க்கக் கூட இல்லை” என்று சொன்னவளை வியப்பாக பார்த்தாள் மலர்விழி.

“கைகால்ல பட்ட அடிக்கு எப்படி மேடம் கோமா வரைக்கும் போகும்?” மலர்விழி கேட்ட கேள்வியில் விகாஸின் மனைவி திடுக்கிட்டு விழிக்க, அங்கே இருந்த நர்ஸ், “என்னம்மா சொல்றீங்க? கைகால்ல அடியா? அந்த பேஷன்ட்டுக்குப் பின் மண்டைல சரியான அடி. அப்புறம் எப்படி நார்மலா இருக்க முடியும்?” என்று வெகு சாதாரணமாக கேட்டுவிட்டுப் போனாள்.

எந்த சலனமும் இல்லாமல் திருமதி.விகாஸ் நிற்க, மலர்விழி ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ந்தது போல நின்றாள்.