அத்தியாயம் -8
கடந்த ஒரு வாரமாகவே, மதுரை கோட்டை கிழக்கு வாசலில் இருந்து திருமலை நாயக்க மன்னரது மாளிகை செல்லும் வழியெங்கும், இரவும் பகலுமாக, நடைபற்ற அலங்கார வேலைகள், சோடனைகள், பந்தல் அமைப்புகள், ஆடம்பர வளைவுகள் எனப் பல்வேறு ஒப்பனைப் பணிகள், அன்று அதிகாலையில்தான் முடிவடைத்தன. அரண்மனை ஒப்பனைக்காரர்களும், சித்திரக்காரர்களும், தங்களது கைத்திறனையெல்லாம் அத்த கோட்டைவாசல் முசகப்பிலும், பந்தலிலும் தொங்கவிடப்பட்டிருந்த தொங்கு சீலைகளிலும் பலவித வண்ண பொம்மைகளிலும் காட்டியிருத்தனர்.
வண்ணக் கோலங்கள், மனத்தைக் கவர்ந்திழுக்கும் சித்திரங்கள், மதுரை நாயக்க மன்னரது படைகளும், மறவர் சீமைப் படைகளும், கன்னடியரைத் தாக்கி அழித்த நிகழ்ச்சிகளின் மறு பதிப்பு போன்ற உயிர் ஓவியங்கள் ஒரு புறம். மதுரை மன்னரும், சேதுபதி மன்னரும் அன்புடன் சத்தித்து உரையாடுதல், மதுரை மன்னருக்கு
எதிராக கலகம் செய்த எட்டையபுரம் பாளையக்காரரை, சேதுபதி மன்னர் விலங்கிட்டு திருமலை நாயக்கரின் அவைக்கு கொண்டு வருதல், மதுரையில் நவராத்திரி விழாபோன்ற வரலாற்றுக் காட்சிகளும் ஆங்காங்கு இடம் பெற்று இருந்தன.
பந்தல் கால்களிலும், பந்தல் முகப்புகளிலும், கோட்டை வாசலிலும், சோழவந்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட ஏழு அடி உயர வாழைமரங்கள், குலைகளுடண் தென்னம்பாளைகள், பனை நுங்குகளுடன் குலைகள் ஆகியவை ஒய்யாரமாய்த் தொங்கிக் கொண்டிருந்தன.
பந்தல்களில் தொங்கவிடப்பட்டிருந்த ஓவியச் சீலைகள் அந்தக் காலை நேரக் காற்றில் மெதுவாக அசையும் போது, அதில் தீட்டப்பட்டிருந்த மனிதர்களும் விலங்குகளும் உண்மையாகவே உயிருடன் அங்கே இருப்பது போன்ற பிரமையைத் தந்தன.
கோட்டை வாசலுக்கு மேற்கே அமைத்துள்ள வாத்திய மண்டபத்தில் இருந்து வாத்திய இசை, குழு இசையாக ஒலித்தன. சற்று நேரத்தில் கோட்டைவாயில் அரங்கத்தில் இருந்தும் அத்த வாத்திய ஒலி கேட்டது.
வடக்கே தல்லாகுளம் மைதானத்தில் தண்டு இறங்கி இருந்த நாயக்க மன்னரதும் சேதுபதி மண்னரதுமான படைகளின் முதல் அணி, பெரிய பெரிய யானைகள், அழகான குதிரைகள், ஒன்றன் பின் ஒன்றாக கோட்டை வாயில் வழியே கோட்டைக்குள் நுழைந்தன. அடுத்து நீண்ட ஈட்டிகளைப் பிடித்த வீரர்கள் அணிகள், வாள்கள் தாங்கிய வீரர்கள் அணிகள், பாசறைகளில் தங்கி இருக்கும்.
வீரர்களுக்கு மகிழ்ச்சி ஊட்டச் செய்த பாடகர்கள், நடனக்காரர்கள், பல மாயாஜால வேடிக்கைகள் நிகழ்த்தும் விப்ர நாராயணர்கள், மோடி வித்தைக்காரர்கள், கழைக்கூத்தாடிகள்.
இவர்களைத் தொடர்த்து மெய்க்காவல் அணி, அவர்களை அடுத்து மதுரைக் கோட்டைத் தளபதியும், கன்னிவாடி நாயக்கரும், தங்களது குதிரைகளில் இருபுறமும் அமர்ந்து வர, நடுவில் அழகிய வெள்ளை நிற அரபு நாட்டு பஞ்ச கல்யாணிக் குதிரையில் கம்பீரமாக அமர்ந்து வந்தார் இராமநாதபுரம் திருமலை ரகுநாத சேதுபதி மன்னர்.
கோட்டை வாசல் முகப்பில் ஆரத்திப் பொருட்களுடன். கூடி தின்ற சுமங்கலிகள் சேதுபதி மன்னரின் குதிரை முன் நின்று ஆரத்தி சுற்றவும், அங்கு திரளாகக் கூடியிருந்த பெண்கள் குலவையிட்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். வாசலில் குதிரையில் அமர்ந்தவாறு காத்து நின்ற மதுரை நாயக்கரது பிரதானி தனது வாளை உருவி நெஞ்சுக்கு நேராகப் பிடித்தவாறு மிகுந்த பணிவுடன் சேதுபதி மன்னருக்கு மரியாதை செலுத்திவிட்டு, அவருக்குமுன்னால் சென்று நாயக்க மன்னரது அரண்மனைக்கு வழிதடத்திச் சென்றார்.
வழியில் அரண்மனை வாசலுக்கு அருகில் இருந்த வாத்திய மண்டபம் அருகே, பிரதானி தமது குதிரையைவிட்டு இறங்கி, சேதுபதி மன்னர் குதிரையைவிட்டு இறங்குவதற்கு உதவ, செய்தார். மன்னரும், கன்னிவாடி நாயக்கரும் குதிரைகளில் இருந்து இறங்கியவுடன், அரண்மனை முகப்பில் இருந்து கொலு மண்டப படிக்கட்டுகள் வரை விரிக்கப்பட்டிருந்த சிவப்பு இரத்தினக் கம்பளத்தில் மூவரும் நடந்து சென்றனர். கொலு மண்டபத்தில் பொன்னாலான சிம்மாசனத்தில் அமர்ர்ந்திருந்த திருமலை நாயக்கரும் தனது கரங்களை கூப்பியவாறு சேதுபதி மன்னருக்கு வணக்கம் செலுத்தினார்.
அருகில் இருந்த மகாராணி அக்கம்மா தேவி, “தாலி காத்த தேவரே வருக!” என்று அழைத்தார். உணர்ச்சி மிகுதியால் ராணியின் குரல் நடுங்கியது. கரங்களைக் கூப்பி ராணியின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார் சேதுபதி மன்னர்.
"மகாராஜா நமஸ்காரம்!” உடல் நலிவினால் மிகவு சோர்ந்திருந்த நாயக்க மன்னரது முகத்தில் மகிழ்ச்சி பொங்கி வழிந்தது.
"வாருங்கள் சேதுபதி மன்னரே! மதுரை மானம் காத்த தேவரே! வாருங்கள்! கத்திரி நாயக்கரே! இப்படி அமருங்கள்" என பக்கத்தில் இருந்த இருக்கைகளை சுட்டிக் காண்பித்தார்.
அப்பொழுது அவையில் இருந்த அலுவலர்களும், பாளையக்காரர்களும் எழுந்து நின்று, "சேதுபதி மன்னர் வாழ்க" என முழங்கினர்.
சேதுபதி மன்னர் மட்டும் மதுரை மன்னர் அருகில் இருந்த அழகிய இருக்கையில் அமர்ந்து மதுரை மன்னரது உடல் நலம் பற்றி விசாரித்தார்.
“சேதுபதி மன்னரே! எனது உடல் நலிவு ஓடி மறைந்துவிட்டது. தாங்கள் இந்த மதுரைப் பேரரசுக்குத் தேடித் தந்துள்ள வெற்றியை நானும் எனது குடிமக்களும் மறக்கவே மாட்டோம். ஏற்கனவே படுத்த படுக்கையில் கிடந்த நான் இப்போது புதிய தெம்புடன் அமர்ந்திருக்கிறேன் பார்த்தீங்களா?”
“மிக்க மகிழ்ச்சி மகாராஜா! எல்லாம் அந்த இராமநாத சுவாமியின் நாட்டம்” என்று கரம் கூப்பினார் சேதுபதி மன்னர். மேலும் அவரே தொடர்ந்தார்.
"தங்களின் பாராட்டுதலுக்கு நன்றி. மதுரையும், இராமநாதபுரமும் எப்போழுதும் இணைந்தே இருந்து வந்துள்ளன. மதுரைச் சீமையில் அரசியல் பாதிக்கப்பட்டால் அது மறவர் சீமையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். மதுரை மன்னருக்கு ஏற்பட்ட இக்கட்டான நிலையைக் களைவதற்கு என்னால் இயன்றதைச் செய்தேன் என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி!" என்று சொல்லி முடித்தார்.
"மன்னரே! தங்களது நம்பிக்கை வீண்போகாது. தங்களது தெளிவான அரசியல் முடிவுகள் தென்னக வரலாற்றில் சிறப்பான இடத்தைப் பெறும்” என்று மகிழ்ச்சியுடன் கூறினார் திருமலை நாயக்கர்.
"இப்பொழுது தாங்கள் விருந்தினர் மாளிகை சென்று ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். மதிய விருந்தின் பொழுது மீண்டும் அளவளாவி மகிழ்வோம்." இவ்வாறு திருமலை மன்னர் சொன்னதும் அவரது அலுவலர் ஒருவர் வந்து சேதுபதி மன்னர் முன் வணங்கி நின்றார். திருமலை நாயக்கர் எழுந்து நின்று சேதுபதி மன்னரை விருந்து மண்டபத்திற்கு அனுப்பிவிட்டு தனது சொர்க்கவிலாசம் அரண்மனைக்கு சென்றார். கொலு மண்டபத்தில் இருந்த மற்றவர்களும் கலைந்து சென்றனர்.
விருந்தினர் மண்டபத்தில் இருந்த பணியாளர்களுக்குத் தக்க உத்தரவு கொடுத்து மன்னரது காலை சிற்றுண்டி வழங்க ஏற்பாடு செய்துவிட்டு அலுவலர் விடை பெற்று மாளிகையில் இருந்து வெளியறினார். குளியலை முடித்துவிட்டு வந்த சேதுபதி மன்னருக்கு புத்தாடைகளை அணிவித்து வாசனைத் தைலங்களை தடவிவிட்டு, சிற்றுண்டி எடுத்துவர சமையல் கட்டிற்குச் சென்றான் ராமுத் தேவன், மன்னரது அந்தரங்கப் பணியாளன்.
அந்த அறையில் இருத்த அழகிய இருக்கை ஒன்றில் சேதுபதி மன்னர் அமர்ந்த பொழுது எதிர்ச்சுவர் அருகில் இருந்த பெரிய நிலைக்கண்ணாடியில் மன்னரது முழு உருவம் தெளிவாக பிரதிபலித்தது. சேதுபதி மன்னரால் கண்ணாடியில் பிரதிபலித்த அவரது உருவத்தை நம்பவே முடியவில்லை. கடந்த மூன்று வார காலத்தில் கன்னடப் படையை வெற்றிகொண்ட மகிழ்ச்சி அவரது கண்கள், கன்னங்களில் அவர அறியாதவாறு அழகையும் பொலிவையும் மெறுகூட்டி இருந்தன.
ராமுத் தேவனுடன் வந்த அரண்மனை பணியாட்கள் சிற்றுண்டி தட்டுகளை எடுத்து வத்து சாப்பாட்டு அறையில் வைத்தனர்.
சிற்றுண்டிகளைச் சுவைத்த பிறகு மன்னர் படுக்கை அறைக்குள் சென்றார். ஏதோ சிந்தித்த வண்ணம் அங்கும் இங்கும் உலவிக் கொண்டிருந்தார். பின்னர் மாளிகையின் முதல் தளத்திற்குச் சென்று மதுரை மாநகரை உற்றுப் பார்த்தார்.
கிழக்கே திருமலை மன்னரது சொர்க்கவிலாசம்அரண்மனை, மேற்சே மதுரைக் கோட்டையின் உயரமான மேற்குவாசல், இவைகளுக்கு இடைய வானுயர்ந்து கம்பீரமாகக் காட்சியளிக்கும் மதுரை மீனாட்சி திருக்கோயிலின் ராஜ கோபுரங்கள், கருவறைக் கோபுரங்கள், அனைவரும் அமர்ந்து கற்ற கலைநெறி கழகங்கள், கற்றதையும் கேட்டதையும் சுவையோடு வடித்த காவியங்கள் அரங்கேறிய தமிழ்ச் சங்கம், அவைகளுக்கு அப்பால் வடக்கில் வைகை ஆற்றில் வேகமாக ஒடும் நீரால் ஏற்பட்ட ஆற்றுப் புகை, அதற்கும் அப்பால், பசுமை 6பாழியும் வயல்கள், செடி, கொடிகள், மரங்கள் முதலியன சேதுபதி மன்னரின் மனதுக்கு இதமாக இருந்தன.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் உச்சிக் கால பூசைக்கான மணிகளின் கம்பீரமான ஒலி விட்டு விட்டு மென்மையாகக் கேட்டது.
மன்னர் மெதுவாகப் படிக்கட்டுகளை கடந்து தமது அறைக்குள் வந்து அமர்ந்தார். ராமுத் தேவண் ஒரு வெள்ளித் தட்டில் வைத்து எடுத்து வந்த ஒரு செம்பை நீட்டினான்.
“இது மோர் தானே. ஏன் ஒரு வித இனிப்புச் சுவையுடன் இருக்கிறது?”
“மோரில் லேசாக நன்னாரி வேரின் சாற்றைக் கலந்திருக்கிறார்கள் மகாராஜா. அதனால் சற்றே இனிப்பும் சேர்த்திருக்கிறார்கள்” என்று ராமுத் தேவன் பதில் சொன்னான்.
“அப்படித் தான் தெரிகிறது. மிகவும் நன்றாக இருக்கிறது.”
“இன்னும் ஒரு நாழிகை நேரத்தில் பிரதானி வந்து தங்களை மதிய விருந்துக்கு அழைத்துச் செல்வாராம். இப்போது தான் அலுவலர் வந்து சொல்லி விட்டுச் சென்றார்” என்று தொடர்ந்து சொன்னான் ராமுத் தேவன்.
*********
பிரதான விருந்து மண்டபத்திற்கு சேதுபதி மன்னர் பிரதானியுடன் சென்றபொழுது, சொர்க்க விலாசம் அரண்மனையில் இருந்து திருமலை நாயக்க மன்னரும் வந்துகொண்டிருந்தார்.
மதுரை மன்னர் அவரது இருக்கையில் அமர்ந்து, சேதுபதி மன்னரையும் தமது அருகில் இருக்கையில் அமருமாறு செய்தார். அன்றைய விருந்து சேதுபதி மன்னருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், அவரை சிறப்பிக்கும் வகையில் மதுரைப் பேரரசின் கீழ் உள்ள எழுபத்து இரண்டு பாளையக்காரர்கள்ளூம் வடக்கே தாராபுரத்திலிருந்து தெற்கே களக்காடு வரையிலான அனைத்து பாளையக்காரர்களும் அழைக்கப்பட்டு இருந்தனர்.
அவர்கள் அனைவரும் அவரவர்களுக்குறிய தொன்மையான ஆடை, அணிமணிகளை அணிந்து அங்கு வந்து இருந்தது பார்ப்பதற்கு மிகவும் அரியதொரு காட்சியாக அமைந்திருந்தது.
அவர்கள் அனைவரையும் அவர்களது முன்னோர்களையும் அவர்களது பராக்கிரமச் செயல்களையும் சொல்லிகட்டியக்காரர் சேதுபதி மன்னருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.
அடுத்து விருந்து பரிமாறப்பட்டது. எத்தனையோ விதமான அன்னங்கள், இவைகளுக்குப் பொருத்தமான கூட்டு, கறி, பொறியல், வருவல், பாயாசம், பழங்கள், பானகங்கள் என யாருமே மறக்க முடியாத பெருவிருந்து..
விருந்துணவிண் வாசனைக்கும் மேலாக பலவித நறுமணங்களும் அங்கு பரவி இனிய சூழலை ஏற்படுத்தியது. விருந்து மண்டபத்தை அடுத்து கேளிக்கை அரங்கில் அளித்த நாட்டிய விருந்தும் அந்த நாளை மறக்கமுடியாத நாளாகச் செய்தது.
சுவையும் மணமும் திறைந்த தாம்பூலங்களை மென்றவர்களாக பாளையக்காரர்கள் திருமலை நாயக்கரிடமும் சேதுபதி மன்னரிடமும் விடை பெற்றுச் சென்றனர்.
திருமலை நாயக்கரிடம் சேதுபதி மன்னர் விடைபெற்ற போது அவருக்கு கணக்கில்லா பரிசுகளை அளித்துச் சிறப்பித்தார் திருமலை நாயக்கர்.
மேலும் சேது நாட்டின் தென்மேற்கே உள்ள திருச்சுழியல், பள்ளி மடம், திருப்புவனம் ஆகிய மதுரை அரசின் பகுதிகளையும் அன்பளிப்பாக வழங்கிச் சிறப்பித்தார். நெல்லைச் சீமையில் முத்துச் சலாபம் செய்யும் உரிமையையும் வழங்கினார்.
ஆண்டுதோறும் புரட்டாசித் திங்களில் மதுரை மாநகரில் திருமலைநாயக்க மன்னர் நடத்தி வந்த நவராத்திரி விழாவினைச் சேது நாட்டிலும் நடத்தி வருமாறு சொன்னதுடன் அந்த விழாவிற்கு மூலமாக அமைந்துள்ள இராஜராஜேஸ்வரி அம்மனின் பொன்னாலான சிலை ஒன்றினையும் சேதுபதி மன்னருக்கு அன்பளிப்பாக வழங்கினார்.
அந்த ராஜராஜேஸ்வரிக்கு ராமநாதபுரம் கோட்டைக்கு உள்ளேயே ஒரு கோவில் கட்டி குடியிருக்கச் செய்தார் சேதுபதி மன்னர். அங்கே வருடந்தோறும் நவராத்திரி விழா சிறப்பாக நடந்தேறியது.
திருமலை ரகுநாத சேதுபதி மன்னர் தமது ஆட்சிக்காலத்தில் கொற்றவையின் மூர்த்தங்களான மாரிதுர்க்கை,வனசங்கரி, மலைவளர்காதலி, ராஜராஜேஸ்வரி ஆகிய அம்மன்களுக்கு நான்கு ஆலயங்கள் அமைத்தார்.
இவை இராமநாதபுரம்கோட்டைக்கு கிழக்கே ராஜமாரியம்மன் ஆலயம், கோட்டைக்குதெற்கே வனசங்கரி அம்மன் ஆலயம், கோட்டைக்கு உள்ளேராஜராஜேஸ்வரி ஆலயம் இராமநாதபுரத்திற்கு தென்மேற்கே இருபத்து ஐந்து கல்தொலைவில் மேலச்சிறுபோதில் மலைவளர் காதலி அம்மன் ஆலயம் என்பன.
பொதுவாக அம்மனுக்கென அமைக்கப்படும் ஆலயங்கள் வடக்கு நோக்கி இருப்பதுதான் வழக்கம். ஆனால், இராமநாதபுரத்தில் உள்ள மாரிதுர்க்கை ஆலயம் கிழக்கு நோக்கியும், வனசங்கரி ஆலயம் தெற்கு நோக்கியும், அமைக்கப்பட்டுள்ளன. இன்னும் இரண்டு ஆலயங்களும் இவ்விதம் நடைமுறைக்கு மாற்றமாக சேதுபதி மன்னர்களால் அமைக்கப்பட்டுள்ளன.
இராமநாதபுரத்திற்கு வடக்கே பெருங்களூர் கிராம ஊரணிக்கரை பிள்ளையார் கோவில் பிள்ளையாரும், நயினார் கோவில் கிராமத்தில் நாகலிங்க சுவாமியும்கிழக்கு திக்கிற்குப் பதில் மேற்கு நோக்கி வீற்று இருந்துகாட்சியளிக்கின்றனர்.

Author: SudhaSri
Article Title: அத்தியாயம் - 8
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.