ஆடுமடி தொட்டில் இனி -1
"விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை
தணிவிப்பான்- விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணிற் பணிமின் கனிந்து"
விடிந்ததும் விடியாத ஒரு காலைப் பொழுது. காலத்தின் ஓட்டத்தில் ஒலித்தட்டு, கேசட், சிடி, டிவிடி, பென்டிரைவ் என்று பல வடிவங்களில் உட்புகுந்து இப்போது யூட்யூப் வழியாக ஸ்மார்ட் டிவியில் பாடிக் கொண்டிருந்தார் சீர்காழி கோவிந்தராஜன்.
அவரது தெய்வீகக் குரல் அந்தப் பெரிய வீடு முழுவதும் ஒரு இடம் பாக்கி இல்லாமல் பரவி எல்லோரையும் வசியப் படுத்தியது. அந்த கணீர் குரல் முதல் மாடியில் இருந்த ஓர் அறையை எட்டிய போது, "ஓ மை பிள்ளையாரப்பா! அதுக்குள்ள மணி அஞ்சரை ஆகிடுச்சா?" என்று அவசரமாகப் போர்வையை உதறிவிட்டு எழுந்தான் அந்த வீட்டின் இளவரசன்.
இரவு முழுவதும் ஒரு ஆராய்ச்சி கட்டுரைக்காக மாடாய் உழைத்துக் கொண்டிருந்தான். நடு சாமம் தாண்டிய பிறகும் அவனது வேலை முடிந்த பாடில்லை. ஆனால் அவனது மூளை ,"கொஞ்சம் கேப் விடுடா. இதுக்கு மேல் நான் தாங்க மாட்டேன்" என்று கதறி அழுததில் வேறு வழியின்றி நித்திரா தேவியுடன் ஒப்பந்தம் போட்டு நிம்மதியாக உறங்க ஆரம்பித்தான்.
அந்த வீட்டில் ஒரு பழக்கம். யாராக இருந்தாலும் குறைந்தது ஆறு மணி நேரத் தூக்கம் வேண்டும். எதற்காகவும் அதைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது என்பது வீட்டுத் தலைவரின் கொள்கை. இல்லை.. இல்லை.. அவரது தொழிலே அது தான். தூக்கத்தின் மகிமையைப் பரப்புவதும் தூக்கமின்மையால் மக்களுக்கு வரும் அவஸ்தைகளை சரி செய்வதும் தான் அவரது வேலை.
அதாவது, திருவாளர் தேவராஜன் தூக்கத்திற்கு வைத்தியம் பார்க்கும் டாக்டர். கூடவே, பைத்தியத்திற்கும் வைத்தியம் பார்ப்பவர். சைக்காலஜியில் பட்டமேற்படிப்பு முடித்து, அமெரிக்கன் போர்ட் ஆஃப் ஸ்லீப் மெடிசினில் பட்டம் பெற்றவர். தூக்கக் கோளாறுகள் மற்றும் தூக்கம் தொடர்பான பிற கவலைகளைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் வல்லவர்.
Charity begins at home என்பதை நன்றாகவே அறிந்தவர் அவர். மனைவி மற்றும் பிள்ளைகளிடம் தூக்கத்தின் அருமை பெருமைகளைப் பற்றி நேரம் கிடைக்கும் போதெல்லாம் நீண்ட சொற்பொழிவு ஆற்றிவிடுவார்.
எதிலுமே ஒரு ஒழுங்கு இருந்தால் அதன் விளைவுகள் சாதகமாக இருக்குமென்பது அடிப்படை. அது போல தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி எழுவது, உடலுக்கு பல வகையில் நல்லது.
காலையில் எழுந்தவுடன் புத்துணர்வாகவும், வேலைகளைச் செய்ய ஆர்வமாகவும், தெளிவாகவும், உற்சாகமாகவும் இருந்தால், முந்தைய இரவு நல்ல தூக்கம் கிடைத்திருக்கிறது என்று அர்த்தம். நல்ல தூக்கத்துக்கு, தூக்கத்தின் அளவு மற்றும் தரம் மிகவும் முக்கியம். தூக்கம் தடைபட்டு அதிக நேரம் தூங்கினாலோ, அல்லது தடைபடாமல் குறைந்த நேரம் தூங்கினாலோ, இரண்டுமே தூக்கத்தைப் பாதிக்கும்.
தூக்கக் கோளாறுகள் எல்லா மக்களுக்கும் பொதுவானவை. சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப் படாவிட்டால், இதய நோய், பக்கவாதம், நீரிழிவு மற்றும் உடல் பருமன் போன்ற அதிக ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அதனால் கண்டிப்பாக ஒரு மனிதனுக்கு ஆறு முதல் எட்டு மணி நேர தூக்கம் அவசியம்.
தங்கள் மீதான தந்தையின் அக்கறையை அறிந்த பிள்ளைகள் என்றுமே தூக்கத்தை தியாகம் செய்தது இல்லை. தேவராஜன் அறிவுரையோடு நின்றுவிடாமல், அதைத் தானும் கடைப் பிடிப்பவராக இருந்ததால் அவரைப் பின்பற்றி வீட்டினரும் தொடர்ந்து வந்தனர்.
முதல் முறையாக அர்த்த ராத்திரி வரை விழித்திருந்த அவரது சீமந்த புத்திரன், எழுந்ததும் அவசரமாக் கண்ணாடியில் அவனது முகத்தை ஆராய்ந்தான். நான்கு மணி நேரம் என்றாலும் ஆழ்ந்த நிம்மதியான உறக்கம் என்பதால் அவனது கண்கள் காட்டிக் கொடுக்கவில்லை.
"யூ ஆர் ஆல்வேஸ் ஹேன்ட்ஸம் மேன்! எப்பவுமே ஃப்ரெஷ்ஷா தான் டா இருப்ப!" புன்னகையுடன் சற்று நேரம் கண்ணாடி முன் நின்றான். காலைக் கடன்களை முடித்து விட்டு அவன் கீழே வந்த போது,
"சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலவிசை பாட" என்று பாடல் மாறி இருந்தது. அந்த வரிகளில் தானும் மனம் லயித்தான். 'பாரேன்! நம்ம பாட்டி என்னமாய் பாடி இருக்காங்க. தமிழ்ல எப்படி எல்லாம் புகுந்து விளையாடி இருக்காங்க. இதையெல்லாம் புரிஞ்சுக்க தனி டிக்ஷனரி போடணும் இப்போ' என்று ஔவையைத் தனது பாட்டியாக்கி மனதுக்குள் பாராட்டுப் பத்திரம் வாசித்தான். அதை வெளியே சொல்லிவிட்டு நாள் முழுவதும் தந்தையிடம் தமிழ் உபதேசம் பெற அவன் தயாராக இல்லை என்பதால் நல்ல பிள்ளையாக பூஜை அறையில் சென்று நின்றான்.
"தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே!"
"ஹாய் பிக் பிரதர்! விஷ் யூ எ வெரி குட்மார்னிங்! சே..சே… தப்பு.. தப்பு… விக்கிரமாதித்த மகாராஜா அவர்களே! அடியேனின் காலை வணக்கத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்"
விநாயகர் அகவல் முடித்த நேரம் தனக்குப் பின்னால் கிசுகிசுப்பாக வந்த குரலில் முகம் மாறாமல் புன்னகை மன்னனாகக் கைகூப்பியபடி நின்றான் விக்ரமன். குட்மார்னிங் சொன்ன குரலுக்குச் சொந்தக்காரி அவனது தோளில் தொற்றிக் கொண்ட போது அவனது புன்னகை மேலும் விரிந்தது.
"குட் மார்னிங் வேதாள்!"
"ஆமா… இன்னைக்கு என்ன காலங்காத்தால அட்டகாசமா ட்ரெஸ் பண்ணிட்டு நிக்கற? யாருக்காவது ப்ரோபோஸ் பண்ணப் போறியா? இன்னைக்கு பிப்ரவரி பதினாலு கூட கிடையாதே? அதுவும் போக உன் மூஞ்சிய யாருடா திரும்பி பார்ப்பா, காலேஜூக்குள்ள நுழைஞ்ச உடனே உன் மூஞ்சி ஜெம் மாதிரி மாறிடுமாமே? என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சொல்றாங்க."
"ஜெம்…மீனிங் நல்லா தானே இருக்கு. ஆனால் நீ என்னை அப்படி எல்லாம் நல்ல படியா சொல்ல மாட்டியே?"
"பாத்தியா என்ன டாக்டர் பா நீ? இது கூடத் தெரியாமல் இருக்க.. ஜெம் தெரியாதா.. GEM அதான் பா.. Ginger Eating Monkey" என்றவள் கூடவே அண்ணனை ஏகமாகப் புகழ்ந்தாள்.
தங்கையை முறைக்கக் கூட முடியாமல் அவன் நின்ற இடம் தடுக்க, அவள் மேலும் தொடர்ந்தாள்.
"நீயும் ரொம்ப பாவம் தான் ப்ரதர். எங்கேயும் எப்போதும் எல்லார் கிட்டயும் நல்ல பையன்னு பெயர் வாங்கணும்னே இருப்ப. வீீீட்டுல தான் ஓல்டீஸோட சேர்ந்து யூத் விஷயம் எல்லாம் உனக்குத் தெரியாமலே போச்சுன்னு பார்த்தா, உனக்குன்னு வாய்ச்ச ஃப்ரண்ட்ஸூம் அப்படித்தான். அப்புறம் இது மாதிரி அரிய தத்துவங்கள் எல்லாம் உனக்கு எப்படி தெரியும். வாய்ப்பில்லை ராசா வாய்ப்பே இல்லை"
தேவராஜன் விளக்கேற்றி விட்டு பிள்ளைகளை நோக்கி ஒரு பார்வை வீசினார். "பூஜை அறையில் என்ன பேச்சு?" என்றது அந்தப் பார்வை.
"ஹேய் வேதாள் குட்டி! ஹோப் திஸ் வில் பி எ வெரி வெரி பேட் மார்னிங் ஃபார் யூ! அக்கட சூடு." கண்களை மூடி, கூப்பிய கரங்களுக்கு இடையே முணுமுணுப்பாக வந்த எச்சரிக்கைக் குரலில் அலர்ட்டான அவனது தங்கை தானும் கண்களை மூடி கைகூப்பி நின்றாள்.
இவர்களது செயலைப் பார்த்தும் பாராதது போல இருந்த தேவராஜன் பூஜையில் தனது கவனத்தைச் செலுத்தினார். உருக்கமான குரலால் தனது இஷ்ட தெய்வத்தைத் துதிக்க ஆரம்பித்தார்.
"குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார்
படுதுயர் ஆயின எல்லாம்
நிலம்தரம் செயும் நீள்விசும்பு அருளும்
அருளொடு பெருநிலம் அளிக்கும்
வலம்தரும் மற்றும் தந்திடும் பெற்ற
தாயினும் ஆயின செய்யும்
நலம்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம்”
அண்ணனும் தங்கையும் நினைவு தெரிந்த நாள் முதலாய் இந்த பாசுரத்தைக் கேட்டு வளர்ந்தவர்கள் என்பதால் அவர்களும் தந்தையுடன் சேர்ந்து அந்தப் பாசுரத்தை முணுமுணுத்தனர்.
பிள்ளைகள் தெய்வ நம்பிக்கையோடு இருப்பது தேவராஜனுக்குப் பெரும் மகிழ்ச்சி அளித்தது. அவரது சகதர்மிணியான அருந்ததியோ செய்யும் தொழிலே தெய்வம் என்பவர். நகரின் மிகச்சிறந்த மகப்பேறு மருத்துவர்களில் ஒருவர்.
நாத்திகம் பேசுபவர் அல்ல, எந்த காரியத்தையும் கடவுளை வணங்கிவிட்டு செய்பவர் தான். ஆனால் பூஜை, புனஸ்காரம் இதற்கெல்லாம் அவருக்கு நேரமும் இருந்ததில்லை, ஆர்வமும் இருந்ததில்லை.
"நமக்கு மேல ஒரு சக்தி இருக்கு, அதைக் கண்டிப்பா நான் ஒத்துக்கறேன். உணர்ந்தும் இருக்கேன். அதுக்காக பூஜை புனஸ்காரம்னு என்னால செய்ய முடியாது. என்னை என் போக்கில விடுங்க ப்ளீஸ்." புகுந்த வீட்டின் பழக்கங்களில் ஒன்ற முடியாமல் ஆரம்பத்திலேயே கணவனிடம் தனது நிலையைத் தெளிவாகவே கூறி விட்டார்.
ஆனால், கணவனின் பூஜை முடியும் நேரம் கலந்து கொள்வார். வழக்கம் போல இன்றும் சேர்ந்து கொள்ள, அன்றைய நாள் நன்றாக அமைய வேண்டும் என்று குடும்பமாகப் ப்ரார்த்தனை செய்து வெளியே வந்தார்கள்.
"வாவ்! இடியாப்பம் அதுவும் தேங்காய் பாலோட, மை ஃபேவரைட். சூப்பர் மா! ஆனால் காலைல ஏன் இவ்வளவு கஷ்டப்படறீங்க. சிம்பிளா இட்லி தோசை மாதிரி போதுமே."
மகனின் வார்த்தைகளை ஒரு மர்மப் புன்னகையுடன் எதிர் கொண்டார் அருந்ததி. சமையலுக்கு ஆள் இருந்தாலும் எப்போதும் காலை உணவு அவரது கை வண்ணம் தான்.
விக்ரமன் அவரது புன்னகைக்கு அர்த்தம் விளங்காமல் பார்க்க, அவனது தங்கை "ஐஸ் ஐஸ் பேபி!" என்று விளம்பரத்தில் வருவது போல் கூவினாள்.
தேவராஜன், மகளது சாமர்த்தியத்தில் வாய் விட்டுச் சிரிக்க, விக்ரமன் இன்னமும் விழித்துக் கொண்டு தான் இருந்தான்.
"ச்சு.. போ அண்ணா! நீ எப்படி இவ்வளவு தத்தியா இருக்க. இன்னைக்கு மகாராணிக்கு இளவரசரோட ரதத்தில சவாரி வேணும். அதுக்கு தான் இப்படி இடியாப்பத்தில ஐஸ். நேத்து அவங்க கார் சர்வீஸ் போகும் போதே நினைச்சேன், யார் மாட்டப் போறோம்னு. மீ க்ரேட் எஸ்கேப் .. ஹான்."
"அறுந்த வாலு!" மகளது தலையில் செல்லமாகக் கொட்டிய அருந்ததி மகனிடம் திரும்பினார்.
"ஆமா விக்ரம். இன்னைக்கு இரண்டு ஸ்பெஷல் கேஸ் ஸ்டடீஸ் இருக்கு. எப்படியும் மினிமம் ஒரு சிக்ஸ் அவர்ஸ் வொர்க் இருக்கும். ரிட்டர்ன் கூட உன் கூடவே வந்திடுவேன்."
"மா… இதெல்லாம் சரியே கிடையாது. இன்னைக்கு ஒரு தீசிஸ் ரெடி பண்ணி அனுப்பணும். சீக்கிரம் கிளம்பிடுவேன். பைக் தான் எடுக்கப் போறேன். நீங்க நேத்தே சொல்லி இருந்தால் கன்சிடர் பண்ணி இருப்பேன். இப்போ… டூ… லேட்.. ஸாரி .. நீங்க வேற ஆப்ஷன் பாருங்க."
வைஜெயந்தியால் வாய் மூடி இருக்க முடியவில்லை.
"பைக்கா? நீ கார்ல தானே டெய்லி காலேஜ் போற. என்ன விஷயம் தம்பி? காலங்காத்தால டிப் டாப்பா ட்ரெஸ் பண்ணிட்டு நிக்கற, இப்போ பைக்ல போறேங்கிற? உனக்கு இது செட் ஆகலைன்னாலும் எங்கேயோ இடிக்குதே? என்ன விஷயமா இருக்கும்?" சத்தமாக யோசித்தவள்,
"யுரேகா! மம்மி! இவன் பண்ற தகிடுதத்தம் எல்லாம் உங்க காதுக்கு வந்துடுச்சா, அதான் இந்த அவசர காலேஜ் விசிட்டா?"
"வைஜெயந்தி!"
"ஓகே.. ஓகே.. மீ வாய்க்கு ஜிப் போட்டாச்சு. யூ கன்டிநியூ."
"ஏன் விக்ரம், உன் பைக்ல நான் வரக் கூடாதா?"
"ஹான்! தாயே! நீங்க எந்த ரூட்ல போறீங்கன்னு புரியலையே. ஆனால் இந்த விக்ரம் இதுக்கெல்லாம் அசர மாட்டான். நீங்க வசதியா உட்கார முடியாதேன்னு சொன்னேன். நீங்க வாங்க, இன்னைக்கு நான் தான் உங்களுக்கு டிரைவர். ஆளை விடுங்க!"
"சே… காரசாரமா ஏதாவது நடக்கும்னு பார்த்தால், இப்படி சப்புன்னு போச்சே!"
"வைஜூ போதும். உனக்கு காலேஜ் பஸ் வந்திடும். சீக்கிரம் சாப்பிட்டு எழுந்திரு" என்று கைகழுவி வந்த விக்ரமன் தாயிடம்,
"மா! நான் ஷார்ப்பா இன்னும் முப்பது நிமிஷத்துல கிளம்பிடுவேன். லேட் பண்ணாதீங்க. அப்புறம் விட்டுட்டு போயிட்டேன்னு கம்ப்ளைன்ட் பண்ணக் கூடாது" என்றவன் சற்றுத் தயங்கி நின்றான்.
"இன்னும் ஒரு முக்கியமான விஷயம்... உங்க மூஞ்சில சுமாரா இரண்டு மூனு கோட் ஜாஸ்தி ஆன மாதிரி தெரியுது .. கொஞ்சமே கொஞ்சம் கம்மி பண்ணிக்கோங்க. எங்க காலேஜ் பசங்க எல்லாம் ரொம்பப் பாவம்" என்று வாசலுக்கு ஓடிப் போனான்.
அவன் போன திசையைத் திகைத்துப் பார்த்தவரின் தோளை ஒரு கை அணைத்தது. "அவன் கிடக்கறான், மை லைஃப். அவனுக்குப் பொறாமை. காலேஜ்ல யாரும் அவனுக்கு அக்காவான்னு கேட்டுடக் கூடாதேன்னு முன்னெச்சரிக்கையா சொல்லிட்டு போறான்."
"என்ன காத்து இந்தப் பக்கம் வீசுது? நம்ப முடியலையே? என்ன விஷயம்?"
"என்னைப் பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்ட ஸ்வீட் ஹார்ட்? நம்ம ஹாஸ்பிடல்ல கூட உன்னை என் பொண்ணான்னு தான் கேட்கிறாங்க தெரியுமா? நீ நம்பலேன்னாலும் அது தான் நிஜம்."
"ராஜ்… போதும்.. போதும்… ரொம்ப ரீல் ஓட்ட வேண்டாம். விஷயத்துக்கு வாங்க."
"ஆனாலும் நீ இவ்வளவு புத்திசாலியா இல்லாமல் இருக்கலாம்."
"இன்னும் உண்மை வரலை… எனக்கு டைம் ஆகுது."
"ரொம்ப டைம் ஆச்சுன்னா நாம ஈவ்னிங் பேசலாம்."
தேவராஜன் இவ்வளவு காலையில் அவரை நிறுத்தி வைத்துப் பேசுவதாக இருந்தால் விஷயம் முக்கியமானது என்று உணர்ந்த அருந்ததி, "பரவாயில்லை ஒரு பத்து நிமிஷத்துல ஒன்னும் ஆகிடாது, சொல்லுங்க" என்றார்.
"விக்ரம் இந்த வருஷம் எம்.டி. முடிச்சிடுவான். அவனோட ஹையர் ஸ்டடீஸ் பத்தி தான்."
"கொஞ்ச நாள் வொர்க் பண்ணி எக்ஸ்பீரியன்ஸ் கிடைச்ச பிறகு பார்க்கலாமே. நாம ஏற்கனவே அப்படி தானே டிசைட் பண்ணி இருந்தோம்."
"கரெக்ட் தான். நாம டிசைட் பண்ணினோம். ஆனால் அவன் ஆன்காலஜி தான் அவனோட சாய்ஸ்னு சொன்னான், அந்த ஃபீல்டுல தான் வொர்க் பண்ணுவேன்னு சொன்னான். கொஞ்சம் அவனோட இன்ட்ரெஸ்ட்ட கன்சிடர் பண்ணு மா!"
"அவனோட கேரக்டருக்கு சரியா இருக்கும்னு தான் அவன் OG(மகப்பேறு மற்றும் மகளிர் நலம்) சூஸ் பண்ணப்போ நான் ஓகே சொன்னேன். பட் ஆன்காலஜி... அவனால முடியுமா? ஹி இஸ் ஸோ சென்ஸிடிவ் யூ நோ."
"பட் அதுல தான் ரிசர்ச் பண்ணனும்னு அவன் நினைக்கிறான். பேஷண்ட்ஸ் விஷயத்தில சென்சிடிவா இருக்கிறது தப்பில்லை, சில நேரங்களில் அதுவே நல்லதுன்னு தோணும். இனிமேல் நீ தான் யோசிக்கணும்."
"இதுல யோசிக்க என்ன இருக்கு. அவனால முடியும்னா செய்ய வேண்டியது தான். ஆனால் இன்னும் நாலஞ்சு வருஷம் போயிடும். அப்போ அவன் கல்யாணம்? பண்ணிப்பானா மாட்டானா?"
"ஹேய் டோன்ட் பி எ டிபிகல் மதர். அவன் லைஃப அவன் பாத்துப்பான்."
"ம்ம்.. நீங்க சொல்றது சரி தான்.. அவன் லைஃப அவனே பார்த்துப்பான். ஆல்ரெடி பார்த்துட்டானோன்னு ஒரு டவுட்டும் இருக்கு.
இதெல்லாம் எதுக்கு இப்போ சொல்றீங்க? அவன் உங்க கிட்ட ரெகமன்டேஷனுக்கு வந்தானா?"
"ஹா.. ஹா… ஹா… உன் செல்லப் பிள்ளை… என் கிட்ட … ரெகமன்டேஷன்… ஹா.. ஹா..
.ஹா"
வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தவரை எரித்து விடுவது போல பார்த்தார் அவர் மனைவி.
"ஓகே..ஓகே.. சரண்டர்.. இதை ஏன் இப்போ சொல்றேன்னா, அடுத்த வாரம் நான் சிங்கப்பூர் போறேன். எனக்கு ஒரு ஆறு மாசம் சிங்கப்பூர்ல வேலை இருக்குன்னு உனக்கு ஞாபகப் படுத்தத் தான். இந்த வாரம் பூராவும் எனக்கு டைட் ஒர்க் இருக்கும். அதான் நேரம் கிடைக்கும் போதே சொல்லிடலாம்னு…"
பதில் சொல்ல வாயெடுத்த அருந்ததியை வாசலில் இருந்து ஹார்ன் ஒலி அழைத்தது.
"அச்சோ.. கிளம்பிட்டானா.. என் பேகை எடுங்க. நான் வரேன்.. ஈவ்னிங் கன்டிநியூ பண்ணுவோம். இவன் ஒருத்தன், கடிகாரத்துக்குப் பிறந்தவன். ஒரு நிமிஷம் கூட வெயிட் பண்ண மாட்டான்" என்று போகிற போக்கில் மகனோடு கணவரையும் சேர்த்தே கிண்டல் செய்து விட்டு வாசலுக்கு விரைந்தார்.
கல்லூரிக்குள் தனது ராயல் என்ஃபீல்டு மீட்டியோரை செலுத்திய விக்ரமனின் கண்கள் கல்லூரி வாசலில் நின்ற காரில் விழுந்தது. ஒரே ஒரு கணம் தனது வாகனத்தின் வேகத்தைக் குறைத்தவன், காரில் இருந்து இறங்கியவளைக் கண்ணாரக் கண்டவுடன் ஹெல்மெட்டைக் கழட்டி முன்னால் வைத்துக் கொண்டு பறந்தான்.
*******
"ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாஸனேஸ்வரி
ஸ்ரீலலிதாம்பிகையே புவனேஸ்வரி" என்று தன் இனிய குரலில் பாடியவாறு காலைச் சமையலைக் கவனித்துக் கொண்டு இருந்தார், சுகந்தா. சென்னை மாநகரின் பங்களாக்கள் நிறைந்த அண்ணாநகர்.
வீடெங்கும் சாம்பிராணி வாசனை நிறைந்திருக்க, அதன் சுகந்தத்தை ரசித்த படியே தனது உடற்பயிற்சியை முடித்து விட்டுக் கீழே வந்தார் வாசுதேவன்.
வெளியே ஜாகிங்கோ வாக்கிங் செல்வது அவருக்கு என்றுமே பிடித்ததில்லை. அந்த வீட்டைக் கட்டிய போதே இரண்டாவது மாடி முழுவதும் உடற் பயிற்சி நிலையமாக மாற்றி அமைத்து விட்டார்.
வெளிநாட்டு வங்கி ஒன்றில் ஆசிய அளவிலான தலைவராக இருப்பவர். காடாறு மாதம் நாடாறு மாதம் என்பது போல், அவர் வீட்டில் இருப்பது மிகவும் குறைந்த நாட்களே. இப்போது கூட தனது நான்கு மாத வெளிநாட்டுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு நள்ளிரவில் வீடு திரும்பி இருந்தார்.
வருடத்திற்கு இரண்டு மூன்று மாதங்கள் வீட்டில் இருந்தால் அதுவே பெரிய விஷயம். அத்தகைய அரிய நேரத்தில் குடும்பத்துடன் செலவழிப்பதை மிகவும் விரும்புவார்.
சுகந்தாவின் தாய் மத்திய அரசு அலுவலகம் ஒன்றில் பொறுப்பான பதவியில் இருந்தவர். வீட்டுக்கு ஒரே பெண்ணான சுகந்தா சிறு வயதில் தாய்க்காக ஏங்கிய நாட்கள் அதிகம். தன்னைப் போலத் தன் குழந்தையை ஏங்க விடக் கூடாது என்று திடமான முடிவில் இருந்தார். அதனாலேயே கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிய சுகந்தா, தனக்குக் குழந்தை பிறந்தவுடன் வேலையை ராஜினாமா செய்து விட்டார். வாசுதேவனுக்கோ ஊர் ஊராக அலையும் வேலை என்பதால் மனைவியின் முடிவை வெகுவாக வரவேற்றார்.
மகள் பள்ளி செல்ல ஆரம்பித்ததும் வீட்டில் இருந்தே ஆன்லைன் வகுப்புகள் எடுத்துக் கொண்டு இருந்தார்.
"சுகா! எனக்கு காபி கொண்டு வா" என்றபடி அன்றைய தினசரியில் மூழ்கினார் வாசுதேவன்.
இருவருக்குமான காஃபியுடன் வந்த சுகந்தா, கணவருக்கு தேவையான அளவு சர்க்கரை சேர்த்துக் கொடுத்து விட்டு, தனது காஃபியுடன் அவரது அருகில் அமர்ந்தார்.
இது அவரது இருபத்தைந்து வருட வாடிக்கை. வாசுதேவன் ஊரில் இருக்கும் நாட்களில் மட்டுமே கிடைக்கும் ஆனந்தம். தவறியும் இதனை மாற்றிக் கொள்ள அவர் விரும்பியதே இல்லை.
"இந்த தடவை எத்தனை நாள் இருப்பீங்க? குட்டிமா இன்னும் எத்தனை நாள் நம்ம கூட இருக்கப் போறாளோ? அடுத்த வருஷமே அவளுக்குக் கல்யாணம் ஆகிட்டா, நான் மட்டுமே தனியா இருக்கணுமா? சீக்கிரம் இதுக்கு ஏதாவது வழி செய்யக் கூடாதா?" என்று தனது ஆதங்கத்தைக் கொட்டிய மனைவியிடம்,
"ஹேய் சுகா! என்ன நீ அப்படி சொல்லிட்ட குட்டிமா கல்யாணம் ஆயிடுச்சின்னா, எங்க போனாலும் உன்னையும் சேர்த்து கூட்டிட்டு போய்டுவேன். அப்புறம் எப்படி நீ தனியா இருப்ப? நாம உலகம் பூராவும் சுத்தலாம். எப்புடி?" கண்சிமிட்டியபடி சொன்னார் கணவர்.
"ரொம்பத்தான்!" என்று நொடித்தவர், "எத்தனை தடவை கேட்டாலும், என் கேள்விக்கு பதிலே சொல்லாம சுத்தி வளைச்சு, என்ன கேட்டோம்னு என்னையே மறக்க வைக்கிற கில்லாடி நீங்க. இத்தனை வருஷம் ஆகியும் எனக்குத் தான் உங்க கிட்ட எப்படி பேசறதுன்னு கூடத் தெரியலை" என்றவர் அடுத்து பேச ஆரம்பிக்கும் முன், மாடிப்படிகளில் அரவம் கேட்டது.
துள்ளிக்குதித்து இறங்கி வந்தவள் அவர்களது ஒரே புதல்வி, நியதி. இன்னும் சில மாதங்களில் டாக்டராகப் போகிறாள். "மா! எங்கே இருக்கீங்க? எனக்கு இன்னிக்கு ஃபர்ஸ்ட் டே காலேஜ்னு ஞாபகம் இருக்கா இல்லையா? பிரேக் ஃபாஸ்ட் ரெடியா? அப்பா வந்துடுவேன்னு சொன்னாங்களே? வந்தாச்சா? இல்லையா?" சத்தமாகக் கேட்டபடி வந்தவள், தந்தையைக் கண்டதும் துள்ளியபடி வந்தாள்.
"வாவ்! டாடி வந்துட்டீங்களா? டாடின்னா டாடி தான்! லவ் யூ சோ மச் டாடி! மா! திஸ் இஸ் டூ மச். அதெப்படி என்னை விட்டு நீங்க இரண்டு பேர் மட்டும் காஃபி குடிக்கிறீங்க? என் பங்கு எங்கே?" இருவருக்கும் இடையே வந்து அமர்ந்து தனது உரிமையை நிலைநாட்ட முயற்சி செய்த மகளிடம்,
"போடி போக்கிரி! உனக்கு வேற வேலையே இல்லை. நீ என்னிக்காவது காஃபி குடிச்சு இருக்கியா? உனக்கு பால் ஃப்ளாஸ்க்ல இருக்கு பாரு! நீயே எடுத்துக் குடி, இல்லேன்னா உங்க அப்பா கிட்ட கேளு. எனக்கு வேலை இருக்கு" என்றபடி எழுந்து தனது சமையலறை சாம்ராஜ்யத்தில் நுழைந்து கொண்டார்.
"ஆமா, எனக்கு ஒரு சந்தேகம் குட்டிமா. அதென்ன ஃபர்ஸ்ட் டே காலேஜ். இன்னைக்கு தான் புதுசா காலேஜ் போகப் போறது மாதிரி. நீ அடுத்த வருஷம் டாக்டராகிடுவ தெரியுமா?" என்று கேலி செய்த தந்தைக்கு
"அது அப்படி தான் டாடி! ஒவ்வொரு வருஷமும் புதுசா போறது மாதிரி தான் இருக்கு." என்றவள் ஏதோ ஞாபகம் வந்தவளாய், "ஓ! மறந்தே போயிட்டேன் டாடி! இந்த வருஷம் நாங்க தான் சீனியர் மோஸ்ட் இல்ல. சூப்பர். ஜூனியர்ஸ எப்படி கலாய்க்கறதுன்னு யோசிக்கணும். முடியுமான்னு தான் தெரியலை?"
சொல்லும் போதே ஒரு முகம் நினைவில் ஆடியது.
தந்தையின் காரில் கல்லூரிக்குப் போனவளுக்கு வாசலிலேயே தவறாமல் தரிசனம் தந்தது அந்த முகம்.

Author: SudhaSri
Article Title: ஆடுமடி தொட்டில் இனி -1
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.