ஆடுமடி தொட்டில் இனி - 13
"ஸ்வேதா… வாடா.. வாடா.. எப்படி டா இருக்க? எல்லாரையும் மறந்தே போயிட்ட பார்த்தியா?" என்று தங்கையைத் தோளோடு அணைத்து உள்ளே அழைத்துச் சென்றான் அரவிந்தன். கிட்டத்தட்ட மாதக்கணக்கில் பிறந்த வீட்டுக்கு வராத தங்கை வந்ததில் அவனது மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் போனது.
"ஹலோ.. மச்சான்.. இங்கே இன்னொரு ஜீவனும் வந்துருக்கு. அதையும் கொஞ்சம் கவனிக்கிறது."
"அந்த ஜீவனுக்குத் தனி கவனிப்பெல்லாம் தேவையே இல்லையாம். பொண்டாட்டியைக் கவனிச்சாலே அப்படியே உச்சி குளிர்ந்து போயிடுமாம்." திரும்பிப் பார்க்காமல் பதில் சொல்லிச் சென்றான் அரவிந்தன்.
"என்ன அரவிந்த் இது? வீட்டுக்கு வந்த மாப்பிள்ளை கிட்ட இப்படித்தான் பேசறதா? ஸாரி மாப்பிள்ளை.. அவன் பேசறதைப் பெரிசா எடுத்துக்காதீங்க. நீங்க உள்ள வாங்க.."
"அச்சோ! நீங்க வேற மாமா.. நாங்க விளையாட்டுக்குப் பேசறதை எல்லாம் சீரியஸா எடுத்துக்காதீங்க. நானே இத்தனை நாளும் வராமல் பிடிவாதமா இருந்துட்டோமேன்னு ஃபீல் பண்ணிட்டு இருக்கேன்."
"அதனால பரவாயில்லை மாப்பிள்ளை.. எங்களுக்கு இந்தத் தண்டனை தேவை தான்.'
"என்ன மாமா இது? தண்டனைன்னு பெரிய வார்த்தை எல்லாம் பேசிக்கிட்டு.. அப்படி எல்லாம் எதுவும் இல்லை.. எங்கே அத்தையும் ஸ்ரேயாவும் காணோம்?"
"உள்ள தான் இருப்பாங்க மாப்பிள்ளை.. நீங்க உட்காருங்க" என்றவர், "தமயந்தி! யாரு வந்திருக்கான்னு பாரு. அங்கே என்ன பண்ணிட்டு இருக்க?" என்று குரல் கொடுத்தார்.
வெகு நாட்களுக்குப் பிறகு கேட்ட கணவனின் சாதாரண குரல் தமயந்தியைக் கண்ணீர் விட வைத்தது. "இதோ வந்துட்டேங்க" என்று வந்தவர் மகளையும் மாப்பிள்ளையையும் கண்டு கையெடுத்துக் கும்பிட்டார். மாதவன் பதறி விட்டான்.
"அத்தை என்ன இது? பெரியவங்க நீங்க, எதுக்கு இப்படி எல்லாம் பண்றீங்க? போய் இரண்டு பேருக்கும் ஸ்ட்ராங்கா ஒரு காப்பி போட்டு எடுத்துட்டு வாங்க. கூடவே கொஞ்சம் முறுக்கு.."
"இதோ வரேன் மாப்பிள்ளை!" என்று ஓடிய தமயந்திக்கு ஒரே நாளில் பத்து வயது குறைந்து விட்டது போல இருந்தது.
ஸ்வேதா, அன்னையின் பின்னால் சமையலறைக்குச் சென்றாள். "மா! ஏன் இப்படி இருக்க? உடம்பு எதுவும் சரியில்லாமல் இருந்தியா? என் கிட்ட யாருமே எதுவும் சொல்லலையே?"
"ஹூம்.. உடம்புக்கு என்ன கேடு. அதெல்லாம் நல்லாவே இருக்கு. மனசு தான் சரியே இல்லை."
"மா! ஜோக் அடிக்காத.. உன் மனசுக்கு என்ன பிரச்சினை வரப்போகுது. நீதான் யாரையும் கண்டுக்கவே மாட்டியே"
"நான் கண்டுக்காம இருந்த போது எல்லாருக்கும் நல்லா இருந்தது. இப்போ இந்த வீட்டுல என்னைத் தான் யாரும் கண்டுக்கறதே இல்லை. உங்க அப்பா என் பேரைச் சொல்லி கூப்பிட்டு எத்தனை மாசம் ஆச்சு தெரியுமா? இன்னைக்கு உன்னைப் பார்த்த பிறகு தான் என் பேரே அவருக்கு ஞாபகம் வந்திருக்கு. உங்க அண்ணனுக்கு அம்மான்னு ஒருத்தி இருக்கறதே ஞாபகம் கிடையாது. தூங்கறதுக்கு ஒரு இடம் இருக்குன்னு வீட்டுக்கு வந்து போறான். உன் தங்கை, எப்பவுமே தேவைக்கு மட்டுமே என் கிட்ட வருவா, இப்பவும் அதையே தான் பண்றா. நீயும் என்னை ஒதுக்கி வச்சிட்ட தானே.. அதான் இந்தப் பக்கம் வரவே இல்லை.. ஆக மொத்தம் இந்த வீட்டுல நான் எதுக்கு இருக்கேன்னே தெரியலை."
தன் போக்கில் புலம்பிக் கொண்டு காப்பியைக் கலந்த தாயை விசித்திரமாகப் பார்த்தாள் ஸ்வேதா. தமயந்தி இப்படி எல்லாம் ஃபீல் பண்ணும் ஆளே கிடையாது. தங்களது உதாசீனம் அவரை நல்லபடியாக மாற்றி இருந்தால் நல்லது தான் என்று நினைத்துக் கொண்டாள். பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாகவே நின்றாள். அதையும் தமயந்தி கண்டு கொள்ளவே இல்லை. அவரது புலம்பலைத் தொடர்ந்தார்.
"நீ எப்படி இருக்க? அதைச் சொல்லு முதல்ல.. திடீர்னு அம்மா ஞாபகம் வந்துடுச்சா? உங்க டாக்டர் ஆன்ட்டி உன் உடம்பைப் பத்தி என்ன சொன்னாங்க. ஏதோ காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையா எல்லாத்துக்கும் நாங்க தான் காரணம்னு சொல்லியாச்சு. நல்லா இருந்த பொண்ணுக்கு பிபி எப்படி வந்ததுன்னு தான் புரியவே இல்லை. இங்கே இருக்கும் போது பிரச்சினை வந்ததால நாங்க தான் பொறுப்புன்னு ஆகிடுச்சு. நான் தான் எல்லாருக்கும் கெட்டவளா தெரியறேன்."
தமயந்தியின் மனதுக்குள் இருந்த நினைப்புகள் எல்லாம் வார்த்தைகளாக வர, ஸ்வேதாவுக்கோ என்ன சொல்வது என்றே புரியவில்லை. என்ன பேசுகிறார் இவர் என்று தான் பார்த்தாள்.
"இந்தா, இந்த காப்பியைக் குடி. நீ தான் கொதிக்கக் கொதிக்க தொண்டைல ஊத்துவியே.." புலம்பல்களுக்கு இடையே தனக்குப் பிடித்த மாதிரியே காப்பியை நீட்டியவரை என்ன லிஸ்ட்டில் சேர்ப்பது என்றே புரியவில்லை.
"இந்தாங்க மாப்பிள்ளை! காப்பி எடுத்துக்கோங்க. நீங்க கேட்ட முறுக்கும் இருக்கு. சாப்பிடுங்க. மத்தியான சாப்பாடு இங்கே தானே, நான் போய் சமையல் வேலையை பார்க்கிறேன்."
"அதெல்லாம் மெதுவா பண்ணலாம். நான் ஒரு முக்கியமான விஷயம் பேசலாம்னு வந்திருக்கேன். நீங்களும் இப்படி உட்காருங்க."
"அன்னைக்குப் பாதில விட்டுப் போன விஷயமா இருந்தால் அதைப் பத்திப் பேசவே வேண்டாம் மாப்பிள்ளை. எந்த நேரத்தில ஆரம்பிச்சோமோ, நடக்கக் கூடாதது எல்லாம் நடந்து போச்சு. இதுக்கு மேல அதைப் பத்திப் பேசறதுக்கு எனக்குப் பிடிக்கவே இல்லை."
வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசிய தமயந்தியை அங்கே இருந்த அனைவரும் அதிர்ச்சியுடன் பார்த்தார்கள். இதென்ன இவர் இப்படிப் பேசுகிறார் என்று அரவிந்தனுக்கு ஆயாசமாக இருந்தது. ஏற்கனவே பதில் பேசி ஏற்பட்ட பிரச்சினை எல்லாம் போதும் என்று கஷ்டப்பட்டு வாயை மூடி அமைதி காத்தான்.
மாதவனுக்கு அப்படி எந்த அவசியமும் இருக்கவில்லை. அதனால் அவன் வாய் திறந்தான். "அதென்ன அத்தை அப்படிச் சொல்லிட்டீங்க. உங்க பேரக் குழந்தை பத்தின விஷயம், உங்களுக்கு பேசப் பிடிக்கலையா?" இப்போது மற்றவர்கள் அனைவரும் மாதவனைச் சந்தேகமாகப் பார்த்தனர்.
'இவன் ஏன் குட்டையைக் குட்டையைக் குழப்பறான்?'
"குழம்பின குட்டைல தான் மீன் பிடிக்க ஈஸியாக இருக்குமாம் மச்சான். வெயிட் அண்ட் ஸீ" என்று அரவிந்தனின் காதுக்குள் முணுமுணுத்தவன் மாமியாரிடம் திரும்பினான்.
"நானும் ஸ்வேதாவும் ஒரு குழந்தையைத் தத்து எடுத்துக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கோம் அத்தை. பதிஞ்சு கூட வச்சிட்டோம்."
"தத்து எடுக்கணுமா? என்ன அவசரம் இப்போ?'
"அவசரம் இல்லை அத்தை அவசியம் வந்திருக்கு. ஸ்வேதாவோட பிபி எத்தனை குழந்தைகள் வந்தாலும் இப்படித்தான் இருக்குமாம். என்னால இன்னொரு தடவை இந்த சித்திரவதை எல்லாம் தாங்க முடியாது. அதான் இந்த முடிவு."
"நீங்க முடிவு பண்ணிட்டா போதுமா? பெரியவங்க ஒப்புதல் வேண்டாம"
"எங்க அப்பா அம்மா கொஞ்சம் யோசிக்கத் தான் செய்யறாங்க. ஆனால் எப்படியும் கன்வின்ஸ் பண்ணிடுவேன். அப்புறம் நீங்க, உங்க பொண்ணு பட்ட அவஸ்தையைப் பார்த்ததுக்கு அப்புறம் ரிஸ்க் எடுக்கச் சொல்வீங்களா என்ன? தத்து எடுக்கறதே பெட்டர்னு சொல்லிட மாட்டீங்க!"
"அவ்வளவு தூரம் வந்தாச்சா? உங்க டாக்டர் ஆன்ட்டி என்ன சொல்றாங்க? அவங்களால எதுவும் பண்ண முடியாதா?"
"அவங்க என்ன சொல்றதுக்கு இருக்கு? ஒரு டாக்டரா அடுத்த குழந்தை வரும் போது நல்லா பார்த்துக்கறேன்னு சொல்றாங்க. ஆனால் நான் தான் ரிஸ்க் எடுக்கத் தயாராக இல்லை."
"அதெப்படி மாப்பிள்ளை, நாங்க ஒத்துக்க வேண்டாமா? என் பொண்ணோட குழந்தைன்னா எங்களுக்கு பேரக் குழந்தை. அதை எப்படி எங்க இருந்தோ கொண்டு வர ஒத்துக்க முடியும். அவளுக்கு முடியாது, குழந்தையே பிறக்காதுன்னு சொன்னால் அது வேற மாதிரி. ஆனால் இப்போ எதுவுமே இல்லாமல் உங்க இஷ்டத்துக்கு தத்து எடுத்துக்க நாங்க ஒத்துக்க முடியாது."
"அவளோட பிரசவத்தில தான் ரிஸ்க் இருக்கே"
"ரிஸ்க் இல்லாமல் பிரசவம்னு ஒன்னு கிடையவே கிடையாது. அவளுக்கு பிபி ஏறாமல் பார்த்துக்க என்ன வழின்னு தான் யோசிக்கணுமே தவிர, இப்பவே தத்து எடுக்கலாம்னு யோசிக்கிறது தப்பு."
"அப்போ அதே மாதிரி தானே அரவிந்தன் கல்யாணமும், ஏதோ நேரம் சரியில்லாமல் போனதால பேச்சை நிறுத்தி வச்சிருக்கோம். அதுக்காக, கல்யாணத்தையே நிறுத்திட முடியுமா?"
"நீங்க எதுக்கு இப்படி இரண்டையும் ஒன்னா சேர்த்து பேசறீங்கன்னு புரியலை. ஆனால் என்னைச் சமாதானப் படுத்தணும்னு பேசினால் அதுக்கு நான் ஆளில்லை"
அதானே யாரு கிட்ட. தமயந்தியா கொக்கா.. மாதவா.. உனக்கு உங்க மாமியார் இப்படி டஃப் கொடுக்கறாங்களே..எப்படி சமாளிக்கப் போற?
'ஷப்பா… முடியல' தலையைப் பலமாக உலுக்கிக் கொண்டு மாமியாருடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்குத் தயாரானான் மாதவன்.
"அரவிந்தனுக்கு வைஜுவத் தான் பிடிச்சிருக்குன்னு சொல்லும் போது நீங்க இப்படித் தடை சொல்றது நல்லா இருக்கா அத்தை?" நேரடியாகவே விஷயத்திற்கு வந்து விட்டான்.
"நீங்க யாரும் ஒரு விஷயம் புரிஞ்சிக்கலை. ஸ்ரேயா விக்ரம் மேல ஆசைப்பட்டான்னு இப்போ எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். அரவிந்தனுக்கு வைஜயந்தி கூட கல்யாணம் நடந்தால் ஸ்ரேயாவுக்கு அந்த வீட்டுக்கு வரதுக்கோ இல்லை அந்த வீட்டு மனுஷங்களைப் பார்க்கிறதுக்கோ சங்கடமா இருக்காதா?"
சரியான நேரத்தில் என்ட்ரி கொடுத்த ஸ்ரேயா, தனது தாய்க்குத் தானே பதில் கொடுத்தாள்.
"மாம்! என்ன பேசறீங்க நீங்க? அந்த விக்ரம் எனக்கு செட் ஆகவே மாட்டான்னு நான் தான் சொல்லி இருக்கேன். அப்புறம் எனக்கு எப்படி சங்கடமா இருக்கப் போகுது. கொஞ்சம் லாஜிக்கோட பேசுங்க. அரவிந்தன் வைஜயந்தியைக் கல்யாணம் பண்றது அவன் இஷ்டம். அதுக்கு எதுக்கு என்னை இடையில வைக்கறீங்க? ஸாரி டு ஸே திஸ் அரவிந்த். நீ இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருக்கலாம். வாயைத் திறந்து பேசு. உனக்காக எப்பவுமே அடுத்தவங்க வாதாட முடியாது."
"உனக்கே ஒரு சங்கடமும் இல்லேன்னா எனக்கென்ன வந்தது. நாம மேல பேசலாம். ஆனால் ஸ்ரேயா, நீ எப்போ தான் கல்யாணம் பண்ணிக்க போற, உனக்கும் வயசாகுதே."
"நானே சொல்றேனே மாம். எனக்கு யாரையாவது கல்யாணம் பண்ணனும்னு தோணினா கண்டிப்பா சொல்றேன்" என்றவள் மேற்படிப்புக்குப் போன முதல் வாரத்திலேயே ஒருவனைப் பிடித்திருக்கிறது என்று தாய்க்குத் தகவல் சொல்லப் போகிறாள் என்று தெரியாமலே அவளும் பேசினாள்.
"ம்ம்.. அப்போ சரி. என்னைக்கு வைஜயந்தி வீட்டுல போய் நிச்சயம் பண்ணிட்டு வரலாம்?" என்று அந்தர் பல்டி அடித்த தமயந்தியை வாய் பிளந்து பார்த்தான் மாதவன்.
"மச்சான்! உங்க அம்மா ஏன் டா இப்படி இருக்காங்க. வச்சால் குடுமி இல்லேன்னா மொட்டைன்னு. என்னால முடியல. நீ தான் சமாளி. இல்லை உங்க அப்பாவுக்கு ரூட்டை மாத்தி விடு." காதோரம் முணுமுணுத்த மாதவனை முறைத்துக் கொண்டே தந்தையைப் பார்த்தான் அரவிந்தன். அவரோ தொண்டையைக் கனைத்துக் கொண்டு பெரிய அளவில் பேசத் தயாரானார்.
"என்ன தமயந்தி, எடுத்தவுடனே நிச்சயம் தானா? நாம பொண்ணு கேட்டுப் போகணும். அவங்களுக்கு நம்மளைப் பிடிக்கணும். அப்புறம் நாள் நட்சத்திரம் எல்லாம் பார்த்துத் தானே நிச்சயதார்த்தம் செய்யணும். நமக்குத் தான் ஏற்கெனவே வேற மாதிரி அனுபவம் இருக்கு. அந்தப் பொண்ணுக்கு எல்லாம் முறைப்படி நடக்கணும். புரியுதா?" வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல நாசுக்காக அதே நேரத்தில் தெளிவாக சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டார்.
"அப்போ என்னைக்குப் பொண்ணு பார்க்க வரலாம்னு கேளுங்க. நான் போய் தேவையானதை லிஸ்ட் போடறேன்." எழுந்தவர் சும்மா இருக்கவில்லை. "ஆனாலும் நீங்க தத்து எடுக்கிற விஷயத்தை கொஞ்சம் யோசித்துப் பாருங்க மாப்பிள்ளை" என்று சொல்லி விட்டே சென்றார்.
இப்போதைக்கு அவரிடம் உண்மையைச் சொல்ல வேண்டாம் என்று அமைதி காத்தான் மாதவன்.
********
"வாங்க.. வாங்க.. எல்லாரும் உள்ள வாங்க!" உற்சாகமாக அனைவரையும் வரவேற்றார் தேவராஜன். அந்த வீட்டை ஆவென்று வேடிக்கை பார்த்தபடி உள்ளே நுழைந்தார் தமயந்தி. அவருடன் வந்த ஸ்ரேயா அமைதியாக அமர்ந்து கொண்டு வீட்டை சுற்றிக் கண்ணை ஓட்டினாள். அங்கே இருந்த தெய்வீகம் அவளுக்கு உவப்பானதாக இல்லை. அத்தனை பெரிய பூஜை அறையும் அதில் இப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கும் ஓங்காரமும் அவளுக்கு ஏதோ பழங்கால அரண்மனையில் நுழைந்தது போலிருந்தது.
"என்ன மாதவா, நீ இங்கே இருந்து தங்கச்சியை ரெடி பண்ணாமல் மாப்பிள்ளை வீட்டுக்காரனா கெத்தா வந்திருக்க? மருமகளே இது உனக்கே நல்லா இருக்கா?"
"நான் சொன்னேன் ஆன்ட்டி. இவர் தான் கேட்கலை. மாப்பிள்ளை தோழனா கெத்து காட்டணும்னு வந்திருக்கார். நீங்களே என்னன்னு கேளுங்க. வைஜு ரெடியா, நான் அவளைப் பார்க்கப் போறேன்."
"அடிப்பாவி! இப்படிப் போட்டுக் கொடுத்திட்டியே பரட்டை.."என்று புலம்பிய மாதவன், "அது தான் உங்க ஃப்ரண்டு இரண்டு பேரும் காலைலயே இங்கே வந்துட்டாங்களே. அப்புறம் என்ன? நான் என் மச்சானுக்கு பாடிகார்டா வர வேண்டிய சூழ்நிலை. அதான் வந்தேன்."
"அதானே.. சமாளிக்கத் தெரியலேன்னா அது மாதவன் இல்லையே. உள்ள வா, எல்லாரும் உள்ள போயாச்சு. இங்கேயே நிக்கப் போறியா?"
"வந்துட்டேன்.. வந்துட்டேன்.. பஜ்ஜி சொஜ்ஜி எல்லாம் ரெடியா? பொண்ணு வர்றதுக்கு முன்னாடி அதையெல்லாம் கொடுத்திருங்க. அப்புறம் அவ வந்துட்டா இலை தழை எல்லாம் தான் சாப்பிடக் கொடுப்பா.."
"உடம்புக்கு நல்லதுன்னா சாப்பிட வேண்டியது தானே" இது அரவிந்தன், முந்திரிக் கொட்டையாக வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்டான்.
"அட! மச்சான்! நீ தெய்வம் மச்சான்.. தெய்வம்.. இப்படி தான் சிங்கு சா போடணும்னு தெரிஞ்சு வச்சிருக்கியே. பொழச்சுப்ப போ."
"வைஜயந்தியைக் கூட்டிட்டு வாம்மா ஸ்வேதா."
சம்பிரதாயமாக பெண் பார்க்க வந்திருந்த அனைவருக்கும் திருப்தியாக இருக்க, அன்றே தட்டு மாற்றிக் கொண்டு திருமணத்தை உறுதி செய்தார்கள். நாற்பத்தைந்து நாட்களில் திருமணம் என்று முடிவு செய்து அடுத்த வேலைகளைப் பற்றி பெரியவர்கள் பேசி ஆரம்பிக்க சிறியவர்கள் மொட்டை மாடியில் கூடினார்கள்.
மாடிக்கு வந்தவுடன் உணரந்த பசுமையில் மெய் சிலிர்த்துப் போனான் அரவிந்தன். விக்ரமனை அழைத்த மாதவன், வைஜயந்தியையும் அரவிந்தனையும் ஜோடியாக நிற்க வைத்துக் காட்டினான்.
"கங்கிராட்ஸ் அரவிந்தன். கங்கிராட்ஸ் டா வேதாள் குட்டி" என்றவனின் குரலில் ஒலித்த மகிழ்ச்சி அங்கே இருந்த மற்றவரையும் தொற்றிக் கொண்டது.
"வாட் வேதாள் குட்டியா?" அதிமுக்கியமான சந்தேகம் வந்தது அரவிந்தனுக்கு.
"அது… அவன் விக்ரமாதித்தன்.. இவ அவனைப் பாடா படுத்தற வேதாளம். கேள்வி கேட்டே கொல்லுவா..அது தான் வேற ஒன்னும் இல்லை. நீங்க பயந்துக்காதீங்க" என்று பயமுறுத்தினான் மாதவன். அரவிந்தன், வைஜயந்தியின் புறம் பார்த்துக் கொண்டு இருப்பதைக் கண்டவன் சத்தம் இல்லாமல் ஸ்வேதாவையும் அழைத்துக் கொண்டு கீழே சென்று விட்டான்.
"இதெல்லாம் உன்னோட வேலையா?"
"ஆமா.. ஆனால் இங்கேயே லேன்ட்ஸ்கேப் மாதிரி டிசைனிங் எல்லாம் செஞ்சது விக்ரம் தான்."
"நீ இல்லேன்னா இதை எல்லாம் யார் பார்த்துப்பா?"
"ஹான்.. என்ன கேட்டீங்க?"
"நீ இல்லேன்னா இதை எல்லாம் யார் பார்த்துப்பான்னு கேட்டேன். இன்னும் கொஞ்ச நாளில் நீ நம்ம வீட்டுக்கு வந்துடுவியே.."
"அது.. அதைப் பத்தி இன்னும் யோசிக்கலை.. அம்மா.. அம்மா தான் பார்த்துக்கணும். இல்லேன்னா விக்ரமுக்கு வரப் போற வைஃப் பார்த்துக்கணும்."
"உனக்கு இதுல இஷ்டம் இருந்தா நம்ம வீட்டுல கூட எல்லாம் செய்யலாம். மொட்டை மாடி மட்டும் இல்லாமல் சுத்தியும் கூட நிறைய இடம் இருக்கு."
"ம்ம்.." பேசிக்கொண்டே அவள் அருகில் நெருங்கி நின்றவனை அவள் உணரவே இல்லை.
"இது என்ன பூ.. இவ்வளவு வாசனையா இருக்கு?" அவனது மூச்சுக் காற்றை காதோரம் உணர்ந்தவள், "அது.. வாசனை இல்லாத பூவாச்சே.. நீங்க என்ன வாசனையா இருக்குன்னு சொல்றீங்க?" என்றாள் கண்ணெதிரே இருந்த பூவைப் பார்த்து.
"நான் இந்தப் பூவையோட தலைல இருக்கிற பூவைச் சொன்னேன்.." என்றவன் ஆழ்ந்து மூச்செடுத்து வாசம் பிடித்தான். பூவை.. பூ ன்னு பின்னற போ அரவிந்தா?
"அது.. சந்தன முல்லை.. கீழே மரம் இருக்கு.."
"நல்லா இருக்கு டா.. ஆராய்ச்சி.. எந்தப் பூவுக்கு மணம் ஜாஸ்தின்னு.. நக்கீரரைக் கூப்பிட்டு வரேன். இப்போ கிளம்புங்க இரண்டு பேரும்" பூஜை வேளைக் கரடியாக வந்த மாதவன் இருவரையும் தரை இறக்கினான்.
இப்படியாக அரவிந்தன் வைஜயந்தி திருமண நாளும் நெருங்கியது. திருமணத்திற்கு நான்கு நாட்கள் இருக்கும் போது விக்ரமன் வந்து சேர்ந்தான்.
"ஹேய் விக்ரம ராஜா! வந்துட்டியா? இன்னும் இரண்டு நாள் முன்னாடி வந்திருக்கலாம் இல்லை. இப்போ பாரு நமக்கு பேசவே டைம் கிடைக்காது." கையில் இருந்த மெஹந்தியைப் பரிதாபமாக பார்த்துக் கொண்டே கூறினாள் வைஜயந்தி.
"அதனால என்ன டா? உனக்குக் கல்யாணம் ஆகி நீ கிளம்பினதுக்கு அப்புறம் அம்மா அப்பா கிட்ட தனியா எனக்கு டைம் கிடைக்கும் பாரு, அதான் இப்படி வந்தேன்."
"டேய் அண்ணா! இதெல்லாம் சரி கிடையாது சொல்லிட்டேன்."
"எல்லாம் சரியா வரும். நீ மெஹந்தியை ஒழுங்கா கவனி. நான் போய் அர்ஜூனுக்கும் என் ஃப்ரெண்ட்ஸ் சில பேருக்கும் இன்விடேஷன் கொடுத்துட்டு வரேன்" என்று கிளம்பி விட்டான்.
*******
"ஹாய் விக்ரம்! வா.. வா.. என்னடா இப்படி ஆளே மாறிப் போய் இருக்க? பாலிவுட் ஹீரோ மாதிரி இருந்த நீ இப்போ ஹாலிவுட் ரேஞ்சுக்கு மாறி வந்திருக்க. நல்ல வேளை டா.. நீ இங்கே இல்லை"
"என்ன டா சொல்ற?"
"ஆமான்டா, இந்த ஹாஸ்பிடல்ல காலேஜ்ல இருக்கற கேர்ள்ஸ் எல்லாம் சும்மாவே என்னை மாதிரி ஆட்களை எல்லாம் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டாங்க. நீ இந்த மாதிரி கெட்டப்ல இங்கே சுத்திட்டு இருந்தால் நாங்க எல்லாம் எப்போ குடும்பஸ்தன் ஆகிறது?"
"அது சரி.. உன் புத்தி போகுது பாரு. எத்தனை பேரைத் தான் டா பார்ப்ப. ஆஷா! நீ இதை எல்லாம் என்னன்னு கேட்கிறது இல்லையா? என்ன பண்ணி வச்சிருக்க என் நண்பனை? ஏதோ இப்போ தான் புதுசா குடும்பஸ்தன் ஆகணும்ன்னு பேசிட்டு இருக்கான்"
"என்ன பண்றது விக்கி? ஆல் மை ஹெட் ரைட்டிங்.. உன் நண்பனோட குடும்பம் நடத்தி குப்பை கொட்டணும்னு எழுதி இருக்கே.. யாரால மாத்த முடியும்? ஆமா.. எங்க உன் ஆளு? பாத்துட்டியா இல்லையா.. இப்பயாச்சும் பேசுவியா இல்லையா? எங்களை எல்லாம் ஒரு சஸ்பென்ஸ்லயே வச்சிருக்க, இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லாவே இல்லை சொல்லிட்டேன்"
"ஹா..ஹா..ஹா.. இரண்டு பேரும் ஜாடிக்கேத்த மூடி தான்.. எங்க நீங்க குடும்பம் நடத்தி கொட்டின குப்பை?"
"அது எங்கே எங்களோட இருக்கு? எங்க மாமியார் கிட்ட தான் வளருது. வேலை வேலைன்னு குழந்தையைக் கவனிக்க மாட்டோமாம். அவங்களும் ஊரை விட்டு வர மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கறாங்க. சரி.. ஸ்கூல் போற வரைக்கும் அங்கேயே இருக்கட்டும்னு விட்டாச்சு. இன் எ வே.. நீ பண்ணது ரொம்பவே கரெக்ட் விக்கி. ஒரு இடத்தில செட்டில் ஆகவிட்டுத் தான் எந்த கமிட்மென்ட்டுக்குள்ளயும் போகணும்."
"சரி சரி.. ரொம்ப புலம்பாத. அவனே பல வருஷம் கழிச்சு நம்மளைப் பார்க்க வந்திருக்கான். நீ எதுக்கு நம்ம கதையைச் சொல்லி போரடிக்கிற?"
"ஹேய் இதுல என்ன இருக்கு டா.. ஒரு ஃப்ரண்டா என் கிட்ட ஷேர் பண்ணிக்கக் கூடாதா?"
"பாரு விக்கி, இப்படித்தான் நான் வாயைத் திறந்தாலே தப்பு இவனுக்கு. நீங்க பேசிட்டு இருங்க. நான் வரேன். இரண்டு பேஷண்ட்ஸ் எனக்கு வெயிட்டிங்" என்று கிளம்பி விட்டாள் ஆஷா.
"ஏன் டா இப்படி? அவ என் கிட்ட தானே பேசினா? இப்படி விரட்டி விட்டுட்ட?"
"உன் கிட்ட மட்டும் இல்ல.. யாராவது குழந்தையைப் பத்திக் கேட்டாலே இப்படித் தான் பண்றா. இவங்க வீட்டில நாங்க கல்யாணம் பண்ணினதே பிடிக்கல. கடமைக்குக் கல்யாணம் பண்ணி வச்சவங்க அப்புறம் இருக்கோமா செத்தோமான்னு எட்டிக் கூடப் பார்க்கலை. எங்க பேரன்ட்ஸ் வயல்காட்டை விட்டு வர மாட்டேன்னு அடம் பிடிக்கறாங்க. குழந்தையை டே கேர்ல விடக்கூடாதுன்னு பிடிவாதம் பிடிச்சு தூக்கிட்டு போயிட்டாங்க. நானும் இன்னும் கொஞ்ச நாள் தானே, ப்ரீ கேஜி சேர்க்கும் போது போய் கூட்டிட்டு வந்துடலாம்னு இருக்கேன். என் கதையை விடுடா.. அது குட்ஸ் ட்ரைன் மாதிரி நான் ஸ்டாப்பா நீளமா போயிட்டே இருக்கும். நீ சொல்லு.. என்ன விசேஷம்? திடீர்னு வந்திருக்க?
"வைஜுக்கு கல்யாணம் டா. கம்மிங் சன்டே. டென் டேஸ் ப்ரேக்ல வந்தேன். இந்தா இன்விடேஷன், ஆஷா கிட்டயும் சொல்லணும்னு நினைச்சேன். ஏதேதோ டாபிக் பேசி இதை மறந்து போயிட்டேன்"
"ஹேய் கங்கிராட்ஸ் டா. மாப்பிள்ளை யாரு? அவரும் இலை தழை எல்லாம் சாப்பிடற ஆள் தானா?"
"இல்ல டா. இவர் ஆட்டோமொபைல் இன்ஜினியர். நம்ம மாதவனோட ப்ரதர் இன் லா."
"ஓ.. கல்யாணத்துக்கு இன்னும் நாலு நாள் தானே இருக்கு. நீ பாட்டுக்கு சுத்திக்கிட்டு இருக்க?"
"எனக்கு எந்த வேலையும் பெரிசா இல்லை டா. அதான் உங்களை எல்லாம் பார்த்துட்டுப் போகலாம்னு வந்துட்டேன்."
"எப்புடி.. எங்களை எல்லாம்.. நம்பிட்டேன்.. இந்த எல்லாம் அப்படிங்கிறது யார் யார் பா. அதையும் நீயே சொல்லிடு பார்ப்போம்."
"தெரிஞ்சிட்டே கேட்கிற பார்த்தியா.. நான் என்ன செய்ய? எப்படி இருக்கா டா? உன் செக்ஷன்ல தானே இருக்கா? அம்மா வேற அவளை ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து தள்றாங்க தெரியுமா? இந்த மேடி வேற எதையோ ஸ்மெல் பண்ணிட்டான். ஒரு பெரிய கேள்வி பதில் செஷன் வச்சுப் படுத்தி எடுத்துட்டான்"
"மேடிக்கு எப்படிடா தெரியும்? ஓ.. அவன் வைஃபை அட்மிட் பண்ணி இருந்த போது உன் ஆளு தான் உங்க அம்மா பின்னாடியே வால் மாதிரி போனாளே. அப்போ எதுவும் பேசி இருப்பாங்களோ?"
"அப்படித்தான் தெரியுது டா. என் பேரைச் சொல்லி ஏதோ பேசி இருக்காங்க. இவ மூஞ்சில என்ன ரியாக்ஷன் காட்டினான்னு தெரியலை. ஏன் அர்ஜூன், அவளுக்கு எங்க அம்மாவைத் தெரிஞ்சிருக்குமோ?"
"என்ன டா உளர்ற? உங்க அம்மாவைத் தெரியாமலா அவங்க கூட வொர்க் பண்றா.."
"டேய்ய்.. கொன்னுடுவேன் உன்னை.. எங்க அம்மான்னு தெரிஞ்சிருக்குமோன்னு சொன்னேன்."
"அதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை. நீ கவலைப்படாதே." பேசிக்கொண்டே அவர்கள் வழக்கமாக அமரும் காண்டீனுக்கு வந்திருந்தார்கள். அங்கே நியதி ஒரு டேபிளில் அமர்ந்திருக்க, அவளுக்கு எதிரே ஷாருக்கானின் ஜெராக்ஸ் காப்பி போல ஒருவன் அமர்ந்திருந்தான்.
விக்ரமும் அர்ஜூனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு ஓரமாகச் சென்று அமர்ந்தார்கள்.
"யெஸ் மிஸ்டர்.ஆஷிஷ், ஏதோ சொல்லணும்னு சொன்னீங்க. இப்போ சொல்லுங்க. அதுக்கு முன்னாடி இந்த காஃபியை குடிச்சிடுங்க. ஆறிப் போனா தொண்டைக்குள்ள இறங்காது."
'இந்த ரணகளத்திலயும் இவளுக்கு இருக்கிற கொழுப்பைப் பாரேன்.' விக்ரமன் மனதுக்குள் கவுன்டர் கொடுக்க ஆரம்பித்தான்.
"தாங்க்ஸ் நியத்தி! ஐ லவ் சவுத் இந்தியன் ஃபில்டர் காஃபி அன்ட் சவுத் இந்தியன் வுமன்"
'ஏன் டா நியத்தின்னு இப்படி லாரியை ஏத்தறான். சவுத் இந்தியன் காஃபியும் வுமனும் சூடா இருக்கும் போது எப்படி ரியாக்ட் பண்ணும்னு அனுபவிச்சால் தானே தெரியும்.'
"இதைச் சொல்லத் தான் வந்தீங்களா? நீங்க ஒரு டாக்டர். கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா?"
'அப்படிக் கேளு செல்லம்.'
"என்னைப் பார்த்து ஏன் இப்படி சொல்லிட்டீங்க. எனக்கு நிறையவே பொறுப்பு இருக்கு. அதனால தான் உட்கார்ந்து பேசறேன்."
"இன்னும் கூட நீங்க விஷயத்துக்கு வரவே இல்லை."
"அது வந்து.. ஐ திங்க் ஐ லவ் யூ நியத்தி.." திக்கித் திணறி சொல்லியே விட்டான்.
'அடப்பாவி.. அது என் ஆளு டா.'
"ம்ம் அப்புறம்.."
"என்னங்க..அப்புறம்னு கதை கேட்கறீங்க?"
'அடிப்பாவி.. பாவம் அவன்.. நல்லாவே கதை கேட்கிற'
"வேற என்ன செய்யலாம்னு சொல்லுங்க. உங்க ஸ்டாண்ட்ல நீங்க தெளிவா இல்லை. அப்புறம் அதுக்கு நான் எதுக்கு ஒரு பதில் சொல்லணும்."
"ஓ.. ஐ திங்க்னு சொன்னது தான் பிரச்சினையா.. இப்போ கேளுங்க.. ஐ லவ் யூ நியத்தி.. டு யூ லவ் மி?"
'சொல்லிட்டானே.. இப்போ என்ன பண்ணப் போறா?'
"முதல்ல என் பேரக் கரெக்டா சொல்லுங்க. அப்புறம் கூட நீங்க என் கிட்ட வந்து லவ் சொல்லவே வேண்டாம். ஏன்னா நான் ஆல்ரெடி கமிட்டட். ஓகே.. போய் வேற ஆளைத் தேடுங்க." பட்டென்று போட்டு உடைத்தவளை ஆசையாகப் பார்த்தான் விக்ரமன். அவர்களது பேச்சினூடே கவுன்டர் கொடுத்துக் கொண்டு இருந்தவன் அவள் இவன் புறம் திரும்புவது போலத் தெரியவும் கையில் இருந்த பத்திரிகை ஒன்றில் முகத்தை மறைத்துக் கொண்டான்.
சுற்றிலும் சற்று நேரம் தேடியவள் எதிர்பார்த்த முகத்தைக் காணாது வாடிப் போனாள்.
விக்ரமனோ அவளைப் பார்த்ததே போதும் என்று எழுந்து கொண்டான். அவள் வேறு பக்கம் திரும்பி இருந்த போது நண்பனுடன் வேகமாக வெளியேறினான்.
"டேய் ஏன் டா இப்படி பண்ற? இரண்டு வார்த்தை அவ கிட்ட பேசிட்டு வந்தால் என்ன டா?" என்ற அர்ஜூனின் கேள்விக்கு மௌனமே பதிலாகக் கிடைத்தது.
"ஹாய் சீனியர்! எப்போ வந்தீங்க? எப்படி இருக்கீங்க?" என்ற குரல் கேட்டு அதிர்ச்சி அடைந்த விக்ரமன் சட்டென்று திரும்பினான். நியதியின் தோழி அகிலா நின்று கொண்டு இருந்தாள்.
"இப்போ தான் மா. நான் நல்லா இருக்கேன். உங்க ஸ்டடீஸ் எப்படி போகுது? என்ன பண்றீங்க?"
"நிஜமாவே நாங்க என்ன பண்றோம்னு உங்களுக்குத் தெரியாதா? நம்ப முடியலையே!" என்றவளுக்குப் புன்னகையைப் பதிலாக்கியவன் "நான் வரேன் மா. வேலை இருக்கு" என்று கிளம்பி விட்டான்.
அவன் போகும் திசையைப் பார்த்துக் கொண்டு இருந்தவளின் அருகே வந்த நியதி , "ஏய் அகில் யாரை அப்படிப் பார்த்துட்டே இருக்க?" என்றாள்.
"எல்லாம் உங்க விசுவாமித்திரனைத் தான்!" ஏன் நீ பார்க்கலையா, பேசலையா.. அவனும் காண்டீன்ல இருந்து தானே வந்தான்"
"இல்ல டி.. நான் பார்க்கலை" என்று வருத்தத்துடன் சொன்ன நியதி எட்டிப் பார்த்த போது விக்ரமன் அங்கே இருந்து சென்று விட்டான்.

Author: SudhaSri
Article Title: ஆடுமடி தொட்டில் இனி - 13
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.