ஆடுமடி தொட்டில் இனி - 15
விக்ரமனும் நியதியும்,கண்ணும் கண்ணும் நோக்கியாவாக சுற்றி இருக்கும் இருவரையும் கண்டு கொள்ளாமல் தங்கள் தனிப்பட்ட உலகத்தில் சஞ்சாரம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களைத் தரையிறக்க மாதவன் சிலபல யுக்திகளை கையாள வேண்டியதாக இருந்தது. தொண்டையைச் செருமியவனை யார் நீ என்பது போலப் பார்த்தான் விக்ரமன். ஆனாலும் அவளது கையை விட்டுவிடவில்லை.
அவனது தோளில் பலமாகத் தட்டி, "எந்த லொகேஷன் என்ன சாங்குன்னு சொன்னால் தேவலை" என்று காதுக்குள் சொல்ல சட்டென்று அவளது கையை விட்டான் விக்ரமன். மாதவனைப் பார்த்து அசடு வழியச் சிரித்தபடி தலையைக் கோதினான். நியதியோ அங்கே நிற்க முடியாமல் தடுமாறினாள். அவர்களது நல்ல வேளையாக புருஷோத்தமனின் கவனம் இவர்களிடம் இல்லை. திரும்பி நின்று அலைபேசியில் வந்த அழைப்புக்குப் பதில் சொல்லிக் கொண்டு இருந்தார்.
நியதி சட்டென்று நாற்காலியில் அமர்ந்து கொண்டாள். ஒரு வழியாக ஃபைனல் பை பை சொல்லி விட்டு வெளியே சென்றான் விக்ரமன். வேகமாகக் காரிடாரில் நடந்தவனின் பின்னால் ஓடி வந்தான் மாதவன்.
"டேய் ஜகஜாலக் கில்லாடி டா நீ.. விசுவாமித்திரன்னு பேர் வாங்கியவன் பண்ற வேலையா டா இது."
"இப்போ நான் என்ன பண்ணிட்டேன்.. ஒன்னுமே இல்லையே.."
"ஆமா.. ஆமா..ஒன்னுமே இல்லை தான். எல்லாம் சரிஇஇஇ.. இப்போ பார்த்தியே அவளோட நம்பரை வாங்கி இருக்கலாம், இல்லேன்னா உன் நம்பரை அவ கிட்ட கொடுத்துட்டு வந்திருக்கலாம். திரும்ப பார்க்கிறதுக்கு இன்னும் இரண்டு வருஷத்துக்கு மேல ஆகும்ல.. "
"அதுக்கு தான் இன்னைக்கு ஒரு பூஸ்ட் கிடைச்சதே… அதுவே போதும். நம்பர் வாங்கினா பேசிட்டே இருக்கத் தோணும், அப்புறம் திடீர்னு பார்க்கணும்னு தோணும்.. நம்பர் இல்லேன்னா டைம் போறதே தெரியாமல் இரண்டு வருஷம் ஓடிப்போயிடும்…"
"அடேங்கப்பா சாமி.. என்ன ஒரு மாஸ்டர் ப்ளான் டா.. பிரமாதம்.. நான் கூட நீ சாமியாரா போயிடுவியோன்னு நினைச்சேன்.. நீ சரியான ஆசாமி டா.."
"ஓவரா புகழாத மேடி.. எனக்கு சளி பிடிச்சிக்கப் போகுது.."
பேசிக்கொண்டே கார் பார்க்கிங் ஏரியாவுக்கு வந்திருந்தார்கள் இருவரும்.
ட்ரைவர் சீட்டில் ஏறி அமர்ந்த விக்ரமன் மாதவனின் வீட்டை நோக்கி காரைச் செலுத்தினான். மாதவனால் ஒரு இரண்டு நிமிடம் கூட வாய் மூடி இருக்க முடியவில்லை.
"ஏன் விக்ரம், ஆன்ட்டி அங்கிள் கிட்ட நியதி விஷயம் சொல்லிட்டியா?"
"இல்ல டா.. ஆனால் என் மனசுல ஒரு பொண்ணு இருக்கான்னு அவங்களுக்கு தெரியும், லேசா சொல்லி இருக்கேன். அம்மாவுக்கு நியதியை ரொம்ப பிடிச்சிருக்கு. அவளை மாதிரி மருமகள் வேணும்னு என் கிட்ட போட்டு வாங்க முயற்சி பண்ணிட்டு தான் இருக்காங்க. ஒரு வேளை நான் சொல்லி இருந்தால் இரண்டு ஃபேமிலிக்குள்ளேயும் ஒரு பாண்டிங் வந்திருக்கலாம். ஆனால் எனக்கு என் மேரேஜ் லவ் மேரேஜா தான் இருக்கணும்.."
"சரிங்க சார்.. அப்படியே செஞ்சிடுவோம். நியதி படிப்பை முடிச்சிட்டு வேற எங்கேயும் வேலைக்குப் போயிட்டா எப்படிக் கண்டுபிடிப்ப?"
"ம்… வெத்தலைல மை போட்டுத் தான்"
"இந்த நக்கலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை."
"ஹா ஹா.. நீ வேணும்னா பாரு.. அவ கண்டிப்பா அம்மாவோட தான் வொர்க் பண்ணுவா.. அம்மாவும் அவளை விட மாட்டாங்க.. நம்ம ஹாஸ்பிடலுக்குத் தான் வருவா.."
"ஓவர் கான்ஃபிடன்ஸ் உடம்புக்கு ஆகாது மை டியர் விக்கி.." என்றவனுக்கு ஒரு விசித்திரமான புன்னகையைப் பரிசளித்தான் விக்ரம்.
அதற்குள் மாதவனின் வீடு வந்திருக்க, அவனை வாசலில் இறக்கி விட்டு "எனக்கு கொஞ்சம் பர்ச்சேஸ் பண்ணனும் மேடி. நான் இப்படியே கிளம்பறேன். உள்ளே வந்தால் ஆன்ட்டியும் அண்ணியும் மாத்தி மாத்தி உபசரிப்பாங்க. இன்னைக்கு எனக்கு சாப்பிடற மூடே இல்லை" என்று கிளம்பி விட்டான்.
"ஆமாமாம்.. கனவு காண்கிற மூடு தான் வரும்.. " என்ற மாதவனின் குரல் அவனை எட்டும் முன் பறந்திருந்தான் அவன்.
*"**
ஏதோ அடிபட்டு விட்டது போல கைகளைப் பார்த்துக் கொண்டே வந்த நியதி யார் மீதோ பலமாக மோதினாள்.
"ஏய் என்னடி ஆச்சு உனக்கு? இப்படி எதிரே வர ஆள் கூட தெரியாமல் கையை உத்துப் பார்த்துட்டு வர்ற.." என்றாள் அவள் மீது மோதிய அகிலா.
என்னவென்று சொல்லுவாள், கைகளைப் பார்த்துக் கொண்டு அமைதியாக நின்றாள்.
"இதென்ன டா புதுசா இருக்கு.. என்ன தான் ஆச்சு? எங்க உன் மூஞ்சிய கொஞ்சம் காட்டு பார்ப்போம்.."என்று அவளே நியதியின் முகத்தை நிமிர்த்தினாள்.. அங்கே புதிதாக ஆயிரம் வாட்ஸ் பிரகாசம் தெரிந்தது. சட்டென்று தலையைக் குனிந்து கொண்டாள்.
"ஹேய்.. என்னது இது.. வெட்கம் எல்லாம் வருதா உனக்கு.. நிச்சயமா உனக்கு ஏதோ ஆகிப் போச்சு.. என்ன காரணமா இருக்கும்!" என்று நெற்றியில் ஒற்றை விரலை டொக்கு டொக்கு என்று தட்டி யோசித்தாள்.
"யுரேகா.. தெரிஞ்சு போச்சு.. எங்க அந்த சாமியார்… கல்ப்ரிட்டு.." என்று சுற்றிலும் தேடினாள்.
"யாரை டி கல்ப்ரிட்னு சொல்ற.."
"எல்லாம் இந்த மேனகையை மயக்கிய விசுவாமித்திரனைத் தான். இத்தனை நாளும் ஊமைச் சாமியாரா இருந்தவன் இன்னைக்கு ஏதோ பலமா கவனிச்சிட்டான் போல இருக்கே! அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சம்பவத்தை நான் பார்க்கலையே! ஸோ சேட்"
"அட சீ அடங்கு.. நீயும் உன் கற்பனையும்.. அப்படி எல்லாம் எதுவும் இல்லை.."
"அது இல்லேன்னா.. வேறென்ன..??"
"விட மாட்டியே?" என்று அலுத்துக் கொண்டே நடந்த விஷயத்தை அப்படியே சொன்ன நியதியைக் கொலை வெறியோடு பார்த்தாள் அகிலா.
"உங்களை எல்லாம்… மியூசியத்தில இருக்க வேண்டிய ஆட்கள் டி நீங்க இரண்டு பேரும்.. இந்த இன்டெர்நெட் உலகத்தில.. எனக்கு நல்லா வாயில வருது.. எங்களை எல்லாம் ரொம்பத்தான் படுத்தறீங்க.."
"சரி சரி கோவிச்சுக்காதே.. வா காண்டீன் போகலாம்.. இன்னைக்கு என் ட்ரீட்டு.."
"ஹை.. இது கூட நல்லா இருக்கே.. வா.. வா.. சாப்பாடு.. நமக்கு... அதானே எல்லாம்.."
"சந்தோஷமா இருக்கு டி.. இப்போ தான் எனக்கு மனசே ஃப்ரீயாச்சு.. நான் தான் அன்னைக்கு விக்ரமைப் பார்த்துட்டு உன்னையும் குழப்பி விட்டேன்னு நினைச்சு ஃபீல் பண்ணிக்கிட்டு இருந்தேன்.. எப்படியோ நீங்க இரண்டு பேரும் மீட் பண்ணிட்டீங்க அதுவே போதும்.." தோழியின் அக்கறை அதில் வெளிப்பட சந்தோஷமாக அவளது தோளில் சாய்ந்து கொண்டாள் நியதி..
*******
"நான் சென்னை வந்து நாலு நாள் ஆச்சு.. தாஜ்ல ரூம் போட்டு இருக்கோம்.." தமயந்தியின் கேள்விக்கு ஸ்ரேயா சொன்ன பதிலில்
அங்கே ஊசி விழுந்தால் கூட சத்தம் தெளிவாகக் கேட்கும் அளவுக்கு அமைதி நிலவியது.
'அமைதி.. அமைதி.. அமைதியோ அமைதி.. அமைதிக்கெல்லாம் அமைதி' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாள் வைஜயந்தி. தீவிரமான சின்சான் ரசிகை அவள். புகுந்த வீட்டில் அவளது முதல் நாளே பெரிய பஞ்சாயத்துடன் ஆரம்பித்ததை நினைத்து வேதனையாக இருந்தது அவளுக்கு.
ஆதித்யா என்ன தான் நடக்கிறது என்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தான். அவனுக்கு ஏதோ ஃபேமிலி டிராமா பார்ப்பது போல இருந்தது. அவர்களது குடும்பத்தில் இப்படி எல்லாம் யாரும் யாரையும் நிற்க வைத்துக் கேள்வி கேட்டதில்லை.
இன்னும் சொல்லப்போனால் அமெரிக்க கலாச்சாரப் படி சம்பாதிக்க ஆரம்பித்த பிள்ளைகள் பெற்றோருடன் சேர்ந்து தான் இருக்க வேண்டும் என்று கூட யாரும் வற்புறுத்தியதில்லை.
அங்கே அவரவர் வாழ்க்கை அவரவர் கையில். இங்கே தன்னை நோக்கி வந்த கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்று கூட அவனால் நினைக்க முடியவில்லை. கல்யாணம் என்ற கமிட்மென்ட்டில் அவனுக்கு உடன்பாடு இல்லை. ஸ்ரேயாவைப் பிடித்திருக்கிறது, அவளுடன் சேர்ந்து வாழலாம் என்று தான் நினைத்தானே தவிர.. கல்யாணம் என்ற நீண்ட கால ஒப்பந்தத்தில் அவனுக்கு ஒப்புதல் இல்லை.. அவனையும் மாற்றி இருந்தாள் ஸ்ரேயா.. கல்யாணத்தின் அருமை பெருமைகளை அவள் பாணியில் விளக்கி அவனைத் திருமணம் என்ற பந்தத்தில் நுழைத்து இருந்தாள். ஆனால் பெற்றோரிடம் தெளிவாக எதையும் கூறாததால் அவர்களின் கற்பனைக் குதிரை ஜெட் வேகத்தில் ஓடியது..
தமயந்தி விடாப்பிடியாக நின்றார்.
"நாங்க எல்லாம் செத்தா போயிட்டோம்.. இப்படி திடீர்னு வந்து நின்னா என்ன அர்த்தம்? நாலு பேர் நாலு விதமா பேச மாட்டாங்க?"
"அம்மா! ஊர் சொல்றதை எல்லாம் நான் கேட்கணும்னு அவசியம் இல்லை. எனக்கு சரின்னு பட்டதை செஞ்சேன்.. அவ்வளவு தான்"
"உனக்கு சரின்னு பட்டதைச் செஞ்சிட்ட.. இப்போ எதுக்கு இங்க வந்திருக்க.. அங்கே இருந்தே விஷயத்தை சொல்லி இருக்க வேண்டியது தானே. எங்களுக்கும் இப்படி டென்ஷன் ஆகவேண்டாம் பாரு."
"ம்ச்.. அம்மா ஆஆஆ! இப்படிப் புரிஞ்சிக்கவே அடம் பிடிச்சா நான் என்ன தான் செய்யறது? நான் சொல்ல வந்ததை காது கொடுத்து கேளுங்க. எங்க கல்யாணம்.."
தாயும் மகளும் விட்டேனா பார் என்று மாற்றி மாற்றி வாதாடிக் கொண்டிருக்க, அரவிந்தன் ஆதித்யாவின் அருகில் சென்று அமர்ந்தான்.
"ஹலோ மிஸ்டர் ஆதித்யா! ஐயாம் அரவிந்தன், ஸ்ரேயாவோட பிரதர். இது எங்க அப்பா தாமோதரன்.. அம்மா தமயந்தி.. அண்ட் வைஜயந்தி மை வைஃப். இன்னும் ஒரு சிஸ்டர் இருக்கா எனக்கு, ஸ்வேதா. ஷி இஸ் மேரீட்.. உங்களைப் பத்தி தெரிஞ்சுக்கலாமா? ஸ்ரேயாவ எங்க மீட் பண்ணீங்க? எப்படி இவ்வளவு சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவுக்கு வந்தீங்க?"
"ஹாய் அரவிந்த்! நான் ஆதித்யா. ஐயாம் எ ஃபேஷன் டிசைனர். என்னோட டிசைன்ஸுக்கு ஸ்டேட்ஸ்ல தனி மார்கெட் உண்டு. யூ கேன் கூகுள் மீ ஃபார் எனி கிளாரிஃபிகேஷன்ஸ். என் கம்பெனில ஸ்ரேயா இன்டர்ஷிப் வந்தாங்க.. சவுத் இந்தியன் அப்படிங்கிறதால மியூச்சுவலா வந்த ஒரு அட்ராக்ஷன்.. நான் வளர்ந்த கல்சர்ல மேரேஜ் மாதிரி லாங் டேர்ம் கமிட்மென்ட் எல்லாம் தேவை இல்லை. பட் ஸ்ரேயா வேணும்னு ஆசைப் பட்டா.. அண்ட் ஐ ஹேவ் நோ அப்ஜக்ஷன்.. எனக்கு இந்த லைஃப்ல அவ மட்டும் தான்.. அதனால் எல்லாம் சீக்கிரமே நடந்துடுச்சு"
அவனும் தான் அந்த எல்லாமே என்ன என்று தெளிவாகச் சொல்லித் தொலைச்சிருக்கலாம்.. அதைத் தவிர ஏதேதோ பேசி பொழுது தான் விரயம் ஆனது.
"உங்க பேரன்ட்ஸ்.. அவங்களோட ஓபீனியன் என்ன? இந்த கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாங்களா?" என்று கேட்டவனை லூசாடா நீ என்று பார்த்தான் ஆதித்யா. (ஹலோ பாஸ் நீங்க சொல்லாமல் அவங்களுக்கு எப்படித் தெரியும்.. அதை விட்டு லூசான்னு கேட்கிற வேலை எல்லாம் இங்கே வேண்டாம்)
"ஐயாம் நாட் லிவிங் வித் தெம் அண்ட் ஐ டோன்ட் நீட் தெயர் பர்மிஷன் ஃபார் எவ்ரிதிங். அவங்களுக்கு நான் கல்யாணம் பண்ணிட்டேன்னு இன்ஃபார்ம் பண்ணா போதும். அதையும் பண்ணியாச்சு. அவங்க ப்ளஸ்ஸிங்க வாங்கியாச்சு. இப்போ உங்க ப்ளஸ்ஸிங்காக வந்திருக்கோம்.."
அவன் பேசியது தமிழ் தான் என்றாலும் என்ன தான் சொல்ல வரான்னு நிச்சயமா அரவிந்தனுக்குப் புரியல..
"நீங்க வளர்ந்த கல்சர்ல கல்யாணம் இஸ் எ கமிட்மென்ட். பிடிக்கலேன்னா ஈஸியா டைவோர்ஸ் தான். ஆனால் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு சொல்லவே இல்லையே.."
"ஒன்ஸ் கமிட்டட் ஐ வில் பி ட்ரூத்ஃபுல் டு மை லைஃப் பார்ட்னர். எனக்கும் கல்யாணத்தோட வேல்யூஸ் தெரியும்" என்று அவன் சொன்ன பதிலில் அப்பாடா என்று இருந்தது அங்கே இருந்த மற்றவருக்கு.
"எப்படி கல்யாணம் பண்ணிக்கலாம்னு ப்ளான் பண்ணி இருக்கீங்க? இங்கேயா, உங்க ஊர்லயா.. உங்க பேரன்ட்ஸ் அட்டென்ட் பண்ணுவாங்களா?" இதென்ன கேள்வி என்று விழித்தவனுக்கு அப்போதும் தாங்கள் தெளிவாகப் பேசவில்லை என்பது புரியவில்லை.
இந்தக் கேள்விக்கு நீயே பதில் சொல் என்று ஸ்ரேயாவைப் பார்த்தான் ஆதித்யா. அவனது பார்வையைத் தொடர்ந்து அனைவரும் ஸ்வேதாவைப் பார்க்க அவள் பேசுவதற்கு ஒத்திகை பார்த்துக் கொண்டு இருந்தாள்.
"என்ன ஸ்ரேயா, மெயின் பாயிண்ட்ட விட்டு ஏதேதோ பேசிட்டு இருக்கோம். What is your problem in telling them that we are already married (நமக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொல்றதுல உனக்கென்ன பிரச்சினை). இட் வாஸ் எ டிரடிஷனல் மேரேஜ் இன் பாலாஜி டெம்பிள்" என்று ஆதித்யா போட்டு உடைத்ததில் தமயந்தியின் முகத்தில் ஈ ஆடவில்லை. நெஞ்சைப் பிடித்துக் கொண்டார். ஹார்ட் அட்டாக் வரும் போல இருந்தது.
"ஓ…" என்ற ஒற்றை எழுத்தில் ஓராயிரம் உணர்வுகளை வெளிப்படுத்தினான் அரவிந்தன். இதை முதல்லயே சொல்லாமல் தலையைச் சுத்தி.. ஏன் டா.. ஏன்..புது மாப்பிள்ளையா பொண்டாட்டிய கொஞ்ச வேண்டியவற்றை இப்படிப் பஞ்சாயத்துல உட்கார வச்சுட்டீங்களே.
"சரி.. சரி.. அரவிந்தா நீ போய் ரெஸ்ட் எடு. நாளைக்கு உங்களுக்கு நிறைய வேலை இருக்கு. வைஜயந்தி நீயும் போம்மா.. தமயந்தி வந்து இப்படி உட்காரு." குடும்பத்தின் தலைவனாக ஆளுக்கொரு வேலையைக் கொடுத்து சூழ்நிலையை இலகுவாக்க முயற்சி செய்தார் தாமோதரன்.
"ஸ்ரேயா! நீயும் இப்படி உட்காரு.. எனக்கு ஒரு விஷயத்தை தெளிவா சொல்லு. இப்போ நாங்க என்ன பண்ணனும்னு நினைச்சு இங்கே வந்த? ரிசப்ஷன் வைக்கலாமா? இல்லை சந்தோஷமா நல்லா இருன்னு ஆசிர்வாதம் பண்ணி, போயிட்டு வாம்மான்னு அனுப்பி வச்சிடணுமா?"
"டாட்.. நான்.. "
"நீ எந்த விளக்கமும் தர வேண்டாம். நான் கேட்டதுக்கு மட்டும் பதில் சொன்னால் போதும்.."
"நீங்க எது செஞ்சாலும் ஓகே பா"
"ஹ.. இனிமேல் செய்ய என்ன இருக்கு.. அரவிந்தன் ஊருக்குப் போயிட்டு வரட்டும். அப்புறம் ப்ளான் பண்ணலாம். நீங்க இன்னும் எத்தனை நாளைக்கு இந்தியால இருக்கறதா ஐடியா?"
"அனதர் ஃபிவ்டீன் டேஸ்.."
"சரி.. இப்போ இங்கே தங்குவீங்களா? இல்லை ஹோட்டலுக்கு போகணுமா?"
"ஹோட்டல்ல போயிட்டு திங்க்ஸ் எடுத்திட்டு…" என்று அவள் இழுக்க.. இடையே குறுக்கிட்ட ஆதித்யா, "டோன்ட் மிஸ்டேக் மி. எனக்கு ஹோட்டல்ல தங்கறது தான் கம்ஃபர்டபிளா இருக்கும்" என்றான்.
"டின்னராவது சாப்பிடலாமா.. இல்லை அதுவும்.."
"சாப்பிட்டே போகலாம்.. ஐ லைக் சவுத் இந்தியன் ஃபுட்"
"அப்போ சரி. தமயந்தி டின்னரைக் கவனி.. ஏதாவது வேணும்னா சொல்லு. நான் போய் வாங்கிட்டு வரேன். ஸ்ரேயா நீ அவரைக் கூட்டிட்டு உன் ரூமுக்குப் போ!"
தமயந்தி இந்த உலகத்திலேயே இல்லை. ஆசை மகள் முதுகில் குத்தி விட்டாள் என்று வலித்தது. எங்கோ வெறித்துப் பார்த்தபடி அமர்ந்து விட்டார். மனைவியின் நிலையை நன்றாகப் புரிந்து கொண்ட தாமோதரன், அவரது கைகளைப் பிடித்து தட்டிக் கொடுத்தார். அந்த ஆதரவான செயலில் உடைந்து போய் அழ ஆரம்பித்தார் தமயந்தி.
"உனக்கே தெரியும்..விஷயம் நம்ம கைமீறிப் போனதுக்கு அப்புறம் வருத்தப் பட்டு பிரயோஜனம் இல்லை. நம்ம பையனுக்கு இன்னைக்கு தான் கல்யாணம் நடந்திருக்கு. அடுத்து என்ன செய்யணும்னு யோசி.."
"எப்படிங்க நம்ம கிட்ட சொல்லாம கூட கல்யாணம் பண்ணிக்க முடிஞ்சது. அதுவும் கோவில்ல.. ப்ளான் பண்ணி என் கழுத்தை அறுத்திட்டாளே.. இவளை என்ன தான் செய்ய.. நாளைக்கு ஒரு பிரச்சினைன்னு வந்தா யார் பொறுப்பு.. இவளுக்காக நான் ஏதேதோ பண்ணி எல்லாரும் எவ்வளவு வேதனைப் பட்டிருக்கோம்.. அந்தப் பொண்ணு வைஜயந்தி முள் மேல நிக்கிறது மாதிரி இருந்தா.. இவளைப் போய் எங்க அண்ணன் கூட சேர்த்து வைக்கப் பாத்தியேன்னு கேட்கிற மாதிரியே இருக்கு.." வாய்ப்பு கிடைத்தது என்று புலம்பித் தள்ளி விட்டார்.
"சே..சே.. அவ அப்படி பார்த்திருக்க மாட்டா.."
"அவ சாதாரணமா தான் பார்த்தா.. ஆனால் குத்தமுள்ள என் மனசுக்கு பக்குன்னு இருக்கே!"
"எல்லாம் சரியா போயிடும்.. நீ போய் டிபன் பண்ணு.. ஸ்வேதா இருந்தால் உனக்கு ஹெல்ப் பண்ணுவா.. இப்போ உன்னால இத்தனை பேருக்கும் டிபன் செய்ய முடியுமா?"
"முடியவே முடியாது மாமா.. அதான் நாங்க இங்கே வந்துட்டோம்.. " என்று தமயந்தியிடம் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னவாறே உள்ளே வந்தான் மாதவன், அவருடன் ஸ்வேதா. தமயந்திக்கு அவர்களை நிமிர்ந்து பார்க்கவே தயக்கமாக இருந்தது.
"அம்மா! டிபனுக்கு நாங்க ஆர்டர் கொடுத்து இருக்கோம். நீங்க எதுவும் செய்ய வேண்டாம். நைட்டுக்கு வைஜுக்கு எதுவும் பண்ணனுமா? அவங்க எங்கே?"
"ரூம்ல ரெஸ்ட் எடுத்துட்டு…" தாமோதரன் பதில் சொல்ல ஆரம்பித்து முடிக்காமல் நிறுத்தி விட்டார்.
"பார்த்தியா உங்க அண்ணனை, நேத்து வரைக்கும் இந்தப் பூனையும் மில்க் குடிக்குமான்னு இருந்துட்டு இன்னைக்கு ஃபர்ஸ்ட் பகல் கொண்டாடறான்" அவன் சொன்னது என்னவோ மனைவிக்கு மட்டும் தான். ஆனால் அது அவன் மாமனார் மாமியார் காதுகளிலும் விழுந்து வைத்ததில் தமயந்தி அவசரமாக எழுந்து சமையலறைக்குள் சென்று விட்டார். அவரைப் பின்பற்றி தானும் சென்றாள் ஸ்வேதா.
"என்ன ஆச்சு மா. ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?" ஆறுதலுடன் கையைப் பற்றிய மகளிடம் மன்னிப்பு வேண்டினார் தமயந்தி. எதற்காக என்று புரியாமல் விழித்தவளுக்கு விலாவாரியாக விம் போட்டு விளக்கிய தமயந்தி, தரையில் மடங்கி அமர்ந்து குலுங்கி அழுதார். ஸ்வேதா செய்த சமாதானங்கள் எல்லாம் வீணாகிப் போனது.
ஹாலில் தனித்து விடப்பட்ட மாமனாரும் மருமகனும் கூட அதைப் பற்றித் தான் பேசினார்கள். தமயந்தியின் அழுகைக் குரல் ஹாலை எட்டியதில், தாமோதரனும் உடைந்து போய் அழும் நிலைக்கு வந்து சேர்ந்தார். மாமனாரைத் தோளோடு அணைத்து சமாதானம் செய்தவன், அவசரமாக எழுந்து சமையலறைக்குள் வந்த மாதவன், "ஸ்வீட்டி! ஸ்ட்ராங்கா டீ போடு எல்லாருக்கும்.. இல்லேன்னா தள்ளு. நான் போடறேன்" என்றான்.
"அச்சோ! நீங்க பேசிட்டு இருங்க மாப்பிள்ளை.. நான் டீ போடறேன்" என்று கண்ணைத் துடைத்துக் கொண்டு எழுந்து விட்ட மாமியாரைத் திருப்தியாக பார்த்தான். பெருமிதத்துடன் பார்த்த மனைவியைப் பார்த்து கண்சிமிட்டியவன் மாமியார் அறியாதவாறு ஒரு அவசர முத்தம் ஒன்றை வைத்துப் போனான்.
எதுவும் சொல்ல முடியாமல் அவன் போன திசையில் முறைக்க முயன்று தோற்றாள் ஸ்வேதா.
ஆர்டர் கொடுத்திருந்த இரவு உணவு வந்துவிட, அறைக்குள் இருப்பவர்களை எப்படி வெளியே வரவழைப்பது என்று யோசித்தவருக்கு மொபைல் ஃபோன் கை கொடுத்தது. பரஸ்பர அறிமுகத்துடன் மாதவன் ஆதித்யாவுடன் சகஜமாகப் பேச ஆரம்பித்து விட்டான். அவனது ட்ரேட்மார்க் பேச்சில் கண்களில் நீர் வரும் அளவுக்கு சிரித்தான் ஆதித்யா.
"தாங்க் காட்.. நான் இப்படி எல்லாம் சிரிச்சதே இல்லை.. யூ ஆர் ஆவ்சம் மேன். நீங்க கண்டிப்பா எங்க பேரன்ட்ஸ ஒரு நாள் மீட் பண்ணனும். தே வில் பி வெரி ஹேப்பி இன் யுவர் கம்பெனி"
"ஷ்யூர் ஷ்யூர்.. சீக்கிரமே மீட் பண்ணிடலாம். என்ன அரவிந்த்?"
"ஹான்.. என்ன கேட்ட மேடி?"
"ஒன்னும் இல்ல பா.. ஒன்னுமே இல்லை.. அம்மாடி தங்காச்சி! ஒரே நாளில் என் மச்சானை என்ன பண்ணி வச்சிருக்க? நல்லா இருந்த பையன் இப்போ ஆடு திருடின கள்ளன் போல முழிக்கிறானே!"
"மாதவா! வேண்டாம்.. சும்மா இரு.. நானே கஷ்டப்பட்டு வாயை மூடிட்டு இருக்கேன். நீ பாட்டுக்கு எனக்குள்ள தூங்கிட்டு இருக்கிற அனிமல்ஸ தட்டி எழுப்பிடாத. விளைவுகள் விபரீதமா இருக்கும்." ஸ்ட்ரிக்டாக வார்னிங் கொடுத்தாள் வைஜயந்தி. அதையெல்லாம் கேட்டு விட்டால் அவன் மாதவன் கிடையாதே..
தொடர்ந்து அவளை வம்பு செய்து கொண்டு இருக்க, "அண்ணி! உங்க வீட்டுக்காரர வாயை மூடி சாப்பிடச் சொல்லுங்க. அப்புறம் நான் ஆயுதத்தை கைல எடுக்க வேண்டியது வரும்."
"அம்மா தாயே! நீயாச்சு உங்க அண்ணன் ஆச்சு.. நான் நடுவில புகுந்தால் எனக்கு இரண்டு பேரும் சேர்ந்து பல்பு கொடுப்பீங்க.. தேவையா எனக்கு.. என்னை ஆளை விடுங்க" என்று சாப்பாட்டில் கவனமானாள் ஸ்வேதா.
"சரி.. சரி.. ரொம்ப அழாத.. நான் என் வாலைச் சுருட்டி வச்சுட்டேன்.. பாரு" என்று பின்னால் திரும்பியவன், "ஹேப்பியா இரு டா செல்லம்" என்று எமோஷனலாக ஒரு பஞ்ச் வைத்தான்.
மாதவனின் பேச்சை ரசித்த ஆதித்யா அன்றிரவு மாமியார் வீட்டில் தங்கி விட்டான். அன்றிரவு அந்த வீட்டில் மூன்று இளம் ஜோடிகள் உல்லாசமாக கழிக்க, தங்கள் மூன்று பிள்ளைகளும் ஜோடியாக இருப்பதைக் கண்டு பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
மறுநாள் காலையில் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வந்தவுடன் புதுமண தம்பதிகள் மறுவீடு சென்று வந்தார்கள். வைஜயந்தியும் மாதவனும் சேர்ந்து கொள்ள விக்ரமனின் கதி தான் அதோ கதியானது.
விக்ரமன் விடுமுறை முடிந்து ஊர் திரும்ப, அரவிந்தன் வைஜயந்தி ஜோடி ஹனிமூன் சென்றார்கள். பாலித் தீவுகளுக்கு வந்திருந்தார்கள். சர்ஃபிங், ஸ்கூபா டைவிங், டால்ஃபின் வாட்ச் என்று சாகசங்களை மேற்கொண்டார்கள்.
பாலித் தீவுகள், உலகிலேயே மிகவும் ரொமாண்டிக் தீவுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆசியாவில் உள்ளவருக்கு சிறந்த டெஸ்டினேஷன் ஹனிமூனாக விளங்குகிறது. .
சூர்யோதயமும் அஸ்தமனமும் அந்த இடத்தை விட்டு வெளியேறாதபடி அவர்களைக் கவர்ந்திழுத்தது. துலாம்பெனின் பவளப்பாறைகள், கிண்டாமணி மலை சிகரங்கள், கடற்கரைகள் மற்றும் செமினியாக் மற்றும் குடாவின் இயற்கை எழில் சூழ்ந்த பாதைகள், பழங்கால கோவில்கள் மற்றும் உபுட்டின் பாரம்பரிய கிராம வாழ்க்கை, பாலியின் எல்லையற்ற வசீகரத்தை திகட்ட திகட்ட அனுபவித்தவர்கள் இடையிடையே வந்த வேலையையும் கவனித்தார்கள். இல்லேன்னா நாளைய வரலாறு காரி துப்புமே.. அந்த பயம் தான்!?
ஒரு நாள் 'கெசக் ராமாயண’ நாடகத்தைப் பார்த்து வியந்து போனார்கள். உலுவடு கோயில் திறந்தவெளி அரைவட்ட அரங்கில் கெசக் ராமாயண நாட்டிய நாடகம் நடைபெறுகிறது. மதகுரு ஒருவர் தீபம் ஏற்றியபின் நாடகம் தொடங்குகிறது. நாடகத்தில் மொத்தம் நாலு காட்சிகள். சீதையை ராவணன் இலங்கைக்குக் கடத்திச் செல்வதில் தொடங்கி அனுமன் அங்கே செல்வது, அவரது வாலில் தீ வைக்கப்படுவது, ராமன் சீதையை மீட்டு வருவது வரையிலான கதை சொல்லப்படுகிறது.
சீதை மட்டுமின்றி ராமன், லட்சுமணன் கதாபாத்திரங்களையும் பெண்களே ஏற்றுள்ளனர். ராமனும் சீதையும் அரங்கினுள் மெல்ல நடந்துவந்தார்கள். ஆனால், அவர்கள் மிதந்து வந்தார்களோ என்று எண்ணும்படியாக இருந்தது. சீதையாக நடித்தவர் புடவை கொசுவம் பின்னுவதுபோன்ற குறைந்த அபிநயத்தில் மிகுந்த நளினத்தைக் கொண்டுவந்தார். ராவணனின் வேலையாள் விகடம் செய்கிறான். அது கட்டியங்காரன் கதாபாத்திரம். அவன் பாலி மொழியிலிருந்து சட்டென மாறி பார்வையாளர்களுடன் பல மொழிகளில் தொடர்புகொண்டான்.
நமது பாரம்பரியம் அங்கே கட்டிக் காப்பாற்றப் படுவதைப் பெருமையாக உணர்ந்தார்கள்.. பத்து நாட்கள் கழித்து வீடு திரும்பியவர்களை ஒரு நல்ல செய்தி வரவேற்றது. கேரளா பேக்வாட்டர்ஸில் கொண்டாடிய இரண்டாவது ஹனிமூனின் விளைவு.. ஸ்வேதாவின் கர்ப்பம் உறுதி செய்யப் பட்டிருந்தது. பிறந்த வீடும் புகுந்த வீடும் அவளைக் கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொண்டது.
ஸ்ரேயா மற்றும் ஆதித்யா திருமணத்தை அறிவிக்கும் வகையில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ரிசப்ஷன் வைக்கப் பட்டது.. சுற்றத்தாரின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் ஓய்ந்து போனார் தமயந்தி. புடிச்சாலும் புளியங்கோம்பா தான் புடிசாசிருக்கா என்று ஆதித்யா வின் பின்புலம் தெரிந்த சிலர் புறம் பேசினார்கள்.. எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஆதித்யாவுடன் கைகோர்த்து பறந்து விட்டாள் ஸ்ரேயா.
இடைவிடாத கண்காணிப்புடன் மனதில் டென்ஷன் இல்லாமல் சந்தோஷமாக கர்ப்ப காலத்தை அனுபவித்தாள் ஸ்வேதா. அவளது பிபி கட்டுக்குள் வைக்கப்பட்டு இருந்தது. மாதவனுக்கு உள்ளூர ஒரு பயம் இருந்து கொண்டே இருந்தது. ஆனாலும் கர்ப்பத்தில் இருந்த மகளுடன் பேசிக்கொண்டே இருந்தான். அவனது மகளும் நான் நலமாக இருக்கிறேன் என்று அவ்வப்போது ஒரு உதை ஒரு முட்டு என்று தாயின் வயிற்றில் உல்லாசமாக இருந்தாள்.
முழுமையாக நாற்பது வாரங்கள் முடிந்த நிலையில், ஒரு வெள்ளிக்கிழமை அதிகாலையில் தாயை மிகவும் சிரமப்படுத்தாமல் ஸ்வேதா மாதவனின் செல்ல மகள் பூமிக்கு வந்தாள். பிரசவ அறையில் மனைவியுடன் இருந்த மாதவன், மகளைக் கையில் வாங்கிய போது ஏற்பட்ட உணர்வுகளை வார்த்தைகளில் விவரிக்க இயலாது. கண்களில் ததும்பி நின்ற நீர் பார்வையை மறைக்க, மனைவியையும் மகளையும் சேர்த்து அணைத்துக் கொண்டான்.

Author: SudhaSri
Article Title: ஆடுமடி தொட்டில் இனி - 15
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.