• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

ஆடுமடி தொட்டில் இனி - 17 நிறைவுப் பகுதி

SudhaSri

Administrator
Staff member
Jun 16, 2024
536
44
43
india
ஆடுமடி தொட்டில் இனி - 17 நிறைவுப் பகுதி

"ஹூம்! என் பிள்ளையோட கல்யாணம் எப்படி எல்லாம் நடக்கும்னு கனவு கண்டேன். அது தான் என் இஷ்டப்படி நடக்கலை, பேரக் குழந்தைகளாவது நல்லபடியா பிறக்கும்னு பார்த்தா ஏதேதோ சொல்லி வயித்துல புளியைக் கரைக்கறாங்களே. இலை தழை எல்லாம் தான் சாப்பிடுவேன்னு இந்தப் பொண்ணு உடம்பில எந்த சத்தும் இருக்கப் போகுது.. இதுல பிள்ளையைப் செத்துப் பிழைச்சு.. இந்தம்மா வேற டாக்டராம். சொந்தப் பொண்ணுக்கே எதுவும் செய்ய முடியல, ஊருக்கெல்லாம் வைத்தியம் செஞ்சு…"

"இந்தா..! தமயந்தி இப்போ என்ன நடந்து போச்சுன்னு இப்படி புலம்பற. அதான் ஒரு பிள்ளையை நல்லபடியா பிறக்க வைக்கலாம்னு சொல்றாங்கள்ள. ஆண்டவன நல்லா வேண்டிக்கோ, மருமக பெத்து பிழைக்கணும்னு. இப்படி சாபம் கொடுத்தா மாதிரி பேசினா அப்புறம் நமக்கும் இரண்டு பொண்ணு இருக்கு. ஏற்கனவே பட்டதெல்லாம் போதாதா? மேல இருக்கிறவன் கரெக்டா கணக்கு போட்டு வச்சிருப்பான், அடக்கி வாசி"

போற போக்கில் அறிவுரை சொல்லி விட்டுப் போன கணவரை முறைத்தாலும் தமயந்தியின் மனம் உள்ளூரக் கலங்கி இருந்ததென்னவோ உண்மை.. ஒரு மகளுக்குப் பிறந்த பிள்ளை தங்காமல் போய் சாவின் விளிம்பைத் தொட்டு விட்டு வந்தாள்.. அடுத்த பிள்ளையைப் பெற்று எடுப்பதற்குள் அவள் பட்ட பாட்டை சொல்லி மாளாது.

இன்னொரு மகளோ, தமயந்தியின் செல்ல மகள். ப்ளானிங்கில் இருக்கிறோம் என்று இரண்டு வருடங்கள் குழந்தை பிறப்பைத் தள்ளிப் போட்டபோது தானும் ஆதரிக்கவே செய்தார். ஆனால் இப்போது??? புற்றுநோயின் பிடியில் இருந்து அவள் மீண்டு வந்து குழந்தை பெற்றுக் கொள்ள முடியுமா என்றே தெரியவில்லை. மருத்துவ உலகம் அதெல்லாம் நிச்சயமாக முடியும் என்று தான் சொல்கிறது. ஆனால் தமயந்திக்குத் தான் மகளை நினைத்து நம்பிக்கை வரமாட்டேன் என்கிறது.

வைஜயந்தி இரண்டு நாள் மருத்துவமனை வாசம் முடிந்து தாய் வீடு சென்று விட்டாள். விக்ரமன் மற்றும் அருந்ததி இருவரும் ‌மாறி‌ மாறி அவளைக் கவனித்துக் கொண்டார்கள். அரவிந்தன் தினமும் வந்து மனைவியைப் பார்த்து விட்டுப் போகிறான்.



விஷயம் கேள்விப்பட்டு ஓடி வந்த ஸ்வேதாவும் மாதவனும் எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் அமைதியாக அமர்ந்து கொண்டனர். மாதவனை வைஜயந்தி தான் சமாதானப் படுத்த வேண்டியதாயிற்று.

"மாதவா! உனக்கு இந்த சோக மூஞ்சி செட் ஆகலை. நானே கஷ்டப்பட்டு தைரியத்தை வரவழைத்து இருக்கேன். நீ இப்படி அழுகாச்சியா இருந்து என்னையும் அழ வைக்காத. தயவு செஞ்சு சிரிச்சிடு பார்க்கலாம்."

"ம்ச். நான் ஒன்னும் அழல டா. என் குட்டித் தங்கைக்கு எப்படி இவ்வளவு மெச்சூரிட்டி வந்ததுக்கு தீவிரமா என் மூளையைக் கசக்கிப் பிடிச்சு யோசிக்கிறேன்."

"அச்சோ! ஏன் இல்லாத வஸ்துவ கசக்கிப் பிழியற.. எல்லாம் வெளியே வந்துடப் போகுது.." அவளும் சும்மா இருக்கவில்லை.

"என்ன வேதாள் குட்டி? மாதவனுக்கே டஃப் கொடுக்கற போல இருக்கே" என்று தங்கையைக் கலாய்த்த படி வந்தான் விக்ரமன்.

"வேண்டாம் விக்கி. எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும். நீ உள்ள வராத. அப்புறம் உன் சீக்ரெட் எல்லாம் சபைக்கு வந்திடும், சொல்லிட்டேன்."

"ஹப்பா! பெரிய ப்ளாக்மெயிலா இருக்கே.. எப்படியும் வெளியே வரப் போற சீக்ரெட் தான். நீயே சொல்லிட்டா எனக்கு வேலை மிச்சம்."

"ஓ.. உனக்கு ஃப்ரீ சர்வீஸ் பண்ணுவேன்னு பார்க்கறியா? நோ சான்ஸ்.. என் பொண்ண விட்டு வசூல் பண்ணிடுவேன்.."

"அடப் போடா.. நானும் என் பொண்ணும் தனியா டீல் பண்ணிப்போம். நீ உள்ள வராத.. நீ வாடா அஷூ குட்டி" என்று குழந்தையை நோக்கி கை நீட்டினான்.

"சித்து.. எனக்கு டோரா புஜ்ஜி வேணும்.." என்று அவளும் வேகமாகச் தாவினாள்.

"இந்த back pack இன்னுமா இருக்கு!" என்று சொல்லிக் கொண்டே குழந்தையுடன் வெளியேறினான் விக்ரமன்.

முப்பத்தாறு வாரங்கள் முடிவடைந்த நிலையில் அம்னியோடிக் லிக்விட் குறையத் தொடங்க, சிசேரியன் மூலம் குழந்தையை எடுத்து விடலாம் என்று முடிவு செய்யப்பட்டது. தெளிவான மனநிலையில் இருந்த வைஜயந்தி பிரசவத்தைத் தைரியமாகவே எதிர்கொண்டாள். நன்கு வளர்ந்த நிலையில் ஆரோக்கியமாக அவளது மகள் வந்து சேர்ந்தாள். பாதியில் விட்டுப் போன குழந்தையை நினைத்து மனதின் ஓரத்தில் ஒரு வருத்தம் வராமல் இல்லை.

மகனுக்கும் பெண் குழந்தை பிறந்ததில் தமயந்திக்குத் தான் கொஞ்சம் வருத்தமாக இருந்தது. ஆனால் அவரது பேத்தியோ தனது பொக்கை வாய் சிரிப்பால் பாட்டியை வசப்படுத்தி விட்டாள். அரவிந்தன் வைஜயந்தி இருவரும் பெற்றோரான தருணத்தை அமைதியாக அனுபவித்தனர்.

*******

"குட் ஈவினிங் சார்! உங்களைப் பார்க்க வாசுதேவன்னு ஒருத்தர் வந்திருக்கார். உள்ள அனுப்பவா சார்? நீங்க ஃப்ரீயா?" என்றாள் ரிசப்ஷனிஸ்ட்.

"வாசுதேவன்? என்ன விஷயமா வந்திருக்கார்னு தெரியுமா?"

"பெர்சனல்னு சொன்னார் சார். அதுக்கு மேல நான் எதுவும் கேட்கலை."

"சரி, அனுப்புங்க. இப்போ எந்த அப்பாயின்ட்மென்டும் இல்லை தானே."

"இன்னைக்கு ஓபி பேஷண்ட்டே இல்லை சார். வாக் இன் வந்தால் தான்."

"ஓகே.. அவரை அனுப்புங்க. கொஞ்ச நேரம் கழிச்சு ஏதாவது குடிக்க கொண்டு வாங்க."

"ஓகே சார். மிஸ்டர்.வாசுதேவன் நீங்க வாங்க" என்று அழைத்துச் சென்று தேவராஜனின் அறை வாசலில் விட்டு வந்தாள்.

"வாங்க மிஸ்டர்.வாசுதேவன்.. நீங்க.. ஏய் தேவா.. நீதானா.. தெரிஞ்ச பேரா இருக்கேன்னு யோசிச்சேன். வெல்கம்.. வெல்கம்.. எப்படி இருக்க.. எங்க இருக்க.. வீட்டில எல்லாரும் சௌக்கியமா.. உனக்கு எத்தனை பசங்க.." பால்ய நண்பனைப் பார்த்த சந்தோஷத்தில் வேகமாக வந்து அவரைக் கட்டிக் கொண்டு வரிசையாகக் கேள்விகளை அடுக்கினார் தேவராஜன்.

"கொஞ்சம் மூச்சு விட்டுப் பேசு டா. உன்னைப் பார்த்துப் பேசிட்டு போகத்தான் வந்திருக்கேன். அதனால நிதானமாவே பேசலாம்.."

"ஓ.. சாரி.. சாரி.. முதல்ல உட்காரு.. இங்கே வா.. உள்ள போய் பேசலாம்" என்று அறைக்குள் இருந்த சோஃபாவில் அமர வைத்து தானும் அமர்ந்து கொண்டார்.

"என்ன சாப்பிடற?"

"காஃபி இஸ் ஃபைன். சுகர் நிறையவே போடலாம்.."

"ஃபிட்டா இருக்கேன்னு சொல்ற.. குட்.." என்றவர் ரிசப்ஷனுக்கு அழைத்து காஃபி கொண்டு வரச் சொன்னார்.

காஃபியை குடித்துக் கொண்டே நண்பர்கள் இருவரும் பேச ஆரம்பித்தார்கள்.

"இப்போ நான் எப்படி உன்னைத் தேடி வந்தேன் தெரியுமா? எனி கெஸ்?"

"என்ன ஆச்சு தேவா? ஏதாவது உடம்புக்கு முடியலையா? என்ன பிரச்சினை?"

"ஆண்டவா! நான் டாக்டர் தேவராஜனைப் பார்க்க வரலை.. என் ஃப்ரண்ட் தேவராஜனை, வருங்கால சம்பந்தி தேவராஜனைப் பார்க்க வந்திருக்கேன்."

"வாட்.. சம்பந்தியா?"

"ம்ம்.. என் பொண்ண உன் பையனுக்கு கல்யாணம் பண்ணி வச்சா நாம ரெண்டு பேரும் சம்பந்தி தானே"

"ஓ.. அப்படியா விஷயம்.. விக்ரம் மனசுல ஒரு பொண்ணு இருக்கான்னு தெரியும்.. ஆனால் அது யாருன்னு தெரியலையே.. உன் பொண்ணா.. நிச்சயமா தெரியுமா?"

"நிச்சயமா தெரியும். அதை விட என் பொண்ணையும் உனக்குத் தெரியும். உன் கண்ணு முன்னாடி தானே நடமாடறா?"

"தேவா! நீ இன்னும் சுத்தி வளைச்சு பேசறத விடலையா? கொஞ்சம் புரியும்படி சொல்லு பார்க்கலாம்."

"என் பொண்ணும் டாக்டர் தான். எம்எஸ் கைனகாலஜி முடிச்சிருக்கா.."

"ஹேய்.. நியதி.. அவ உன் பொண்ணா.. வாட் எ ப்ளசன்ட் சர்ப்ரைஸ்! வெரி பிரில்லியன்ட் கேர்ள். அருந்ததி அவளைப் பத்தி பேசாத நாளே கிடையாது தெரியுமா? அவளை விக்ரமுக்கு கல்யாணம் பண்ணி வச்சா நல்லா இருக்கும்னு கூட சொல்லி இருக்கா. இப்போ நீ சொல்றதைப் பார்த்தா அது நடந்திடும் போல இருக்கே. இரு நான் இப்பவே என் பையனைக் கூப்பிடுறேன்."

"கொஞ்சம் பொறுமையா இரு ராஜா. உன் பையனுக்கு அவன் கல்யாணம் காதல் கல்யாணமா தான் இருக்கணுமாம். அவன் ஃப்ரண்டு அர்ஜுன் கிட்ட சொல்லி இருக்கான். நீ அவனைப் பிடி. நாம ஜூனியர்சுக்குத் தெரியாமல் வேற ப்ளான் போடுவோம். உன் வைஃப் கிட்ட கூட இதைப் பற்றி இப்போதைக்கு பேசாதே. நிச்சயதார்த்த நாள் குறிச்சிட்டு பேசுவோம்."

"ஆனால் விக்ரம் அவன் அம்மா கிட்ட ஷேர் பண்ணிட்டான்னு தோணுது. இப்போ கொஞ்ச நாளா தான் ஹாஸ்பிடல் வரான். நியதி கண்ணுல படாமல் வேற டைமிங்ல வந்திட்டுப் போறான். அவனும் ஏதோ சர்ப்ரைஸ் ப்ளான் பண்றான்னு நினைக்கிறேன். வெயிட் பண்ணிப் பார்க்கலாம். நான் என் மருமகளைப் பார்த்துட்டேன். நீ விக்ரமைப் பார்க்க வேண்டாமா? கூப்பிட்டு என் பையன்னு அறிமுகப் படுத்தறேன். வேற எதுவும் பேசிக்க வேண்டாம்."

"யா.. ஓகே.. கூப்பிடு.. பார்க்கலாம்.."

அடுத்த ஐந்து நிமிடங்களில் தந்தையின் அறைக்குள் வந்த விக்ரமன் வாசுதேவனை யார் என்பது போலப் பார்த்து வைத்தான்.

"விக்ரம்! இவர் வாசுதேவன்.. என் ஸ்கூல் ஃப்ரண்ட். ரொம்ப வருஷம் கழிச்சு மீட் பண்ணி இருக்கோம்."

"ஹலோ சார்.." என்று கை கொடுத்தவனை, "அங்கிள்னு கூப்பிடு பா. மாமான்னு தமிழ்ல கூப்பிட்டாலும் எனக்கு நோ அப்ஜக்ஷன்" என்றார் வாசுதேவன்.

"எங்க இரண்டு பேரையும் தேவா ஸ்கொயர்னு கூப்பிடுவாங்க. பட் எனக்கு அவன் தேவா, அவனுக்கு நான் ‌ராஜா."

"ஓ.. எப்படிக் கண்டு பிடிச்சீங்க அங்கிள். நீங்க வேற ஃபீல்டுல இருக்கீங்க போல இருக்கே.."

"அது சர்ப்ரைஸ்.. இன் ஃபேக்ட் இட் வில் பி எ ஸ்வீட் சர்ப்ரைஸ் ஃபார் யூ.. நான் கிளம்பறேன் ராஜா. சீ யூ விக்ரம். சீக்கிரம் சர்ப்ரைஸோட மீட் பண்ணலாம்.." என்று விடை பெற்று கிளம்பி விட்டார் வாசுதேவன்.

மகனது முகத்தில் தெரிந்த குழப்ப ரேகைகளை மிகவும் ரசித்தார் தேவராஜன்.

“நெக்ஸ்ட் வீக் ஒரு நாள் அவங்க வீட்டுக்கு வரச் சொல்லி இருக்கான் விக்ரம். ஏதோ ஃபங்ஷனாம். எல்லாரும் கண்டிப்பா போகணும்."

"ஓகே பா.." என்றவன் தகப்பன்மார்களின் தில்லுமுல்லு தெரியாமல் விழித்தான்.

எப்படியும் சீக்கிரமே நியதியிடம் பேசிவிட வேண்டும் என்று முடிவு செய்தவன் நன்றே செய் அதை உடனே செய் என்று மறுநாள் விடிந்ததும் கிளம்பி விட்டான். சிசிடிவி உபயத்தில் அவளைக் கவனித்துக் கொண்டு இருந்தவன், "இட்ஸ் டைம்" என்று லயன் கிங் மாதிரி சொல்லிக் கொண்டு புறப்பட்டான்.

******

"எக்ஸ்யூஸ் மீ. ப்ளீஸ் ஹோல்ட் இட் ஃபார் எ மொமன்ட்" என்றவாறு லிஃப்ட்டின் அருகே அவசரமாக கழுத்தில் ஸ்டெத்துடன் ஓடிவந்தாள் அவள். அவளது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பது போல, பாதி மூடிக்கொண்டு இருந்த அந்த ஆட்டோமேடிக் லிஃப்ட்டின் கதவுகள் நன்றாகத் திறந்தன.

வழக்கமாக நான்கு மாடிகளையும் அனாயாசமாகப் படிகளில் கடந்து விடுபவள் இன்று முதல் முறையாக லிஃப்ட் உதவியை நாடினாள்.

உள்ளே வந்து முகம் பாராமல் "தாங்க் யூ சோ மச்" என்றவள், '0' பட்டனைத் தட்டி விட்டு நின்றாள். மிகவும் கலவையான உணர்வுகளுடன் இருந்ததால், லிஃப்ட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதைக் கூட அவள் கவனிக்கவில்லை.

ஆனால், இருவர் மட்டுமே இருந்த அந்த லிஃப்ட்டில், அந்த மற்றவரின் கண்கள் இவளை வெகு சுவாரசியமாகவே பார்வையிட்டதையும், இவள் முகத்தில் வந்து போன உணர்வுகளைக் கண்டு தனக்குள் சிரித்துக் கொண்டதையும் இவள் அறியவே இல்லை.

மிகுந்த குழப்பத்தில் இருந்தவள் இரண்டாவது மாடியில் லிஃப்ட் நிற்கவும் அவசரமாக இறங்கப் போனாள். அவளைப் பிடித்து நிறுத்தி, "மூஞ்சிலயே நான் குழப்பமா இருக்கேன்னு எழுதி ஒட்டி இருக்காளேன்னு நினைச்சேன். சரிதான். இது செகண்ட் ஃப்ளோர். கிரவுண்ட் ஃப்ளோர் இல்லை" என்று சொல்லி விட்டுப் போன குரலில் ஸ்தம்பித்தாள்.

சில நொடிகள் மந்திரித்து விட்டது போல நின்றவள் அவன் தானா என்று எட்டிப் பார்ப்பதற்குள், லிஃப்ட் மூடி விட ஏமாற்றமாக உணர்ந்தாள்.

இன்று அவனை விடுவதில்லை என்று கிரவுண்ட் ஃப்ளோர் ரிசப்ஷனில் லிஃப்டையே பார்த்தபடி அவனுக்காகக் காத்திருந்தாள், நியதி.

************

டாக்டர்.அருந்ததி, அந்த மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தலைமை மருத்துவர். கூடவே இவளது கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கல்லூரி காலத்தில் இருந்தே இவளுக்கு நல்ல பரிச்சயம் உண்டு.

இவளைப் பார்க்கும் போதெல்லாம், "உன்னை எங்க வீட்டுக்குக் கடத்திட்டுப் போயிடணும்னு பாக்கிறேன். ஹூம். எனக்கு அதுக்குக் கொடுத்து வச்சிருக்கணுமே. எங்க வீட்டு விசுவாமித்திரன் என்ன நினைச்சிட்டு இருக்கானோ தெரியலையே?" என்பார்.

விசுவாமித்திரன் என்ற சொல் அவளுக்கு ஒரே ஒரு முகத்தைத் தான் ஞாபகப் படுத்தும்.



"ஹேன்சமா இருந்தா பார்க்கத் தான் செய்வாங்க. அதுக்காக இப்படியா? என்னமோ நாம பார்த்தாலே அவன் கற்பு பறிபோகும்ற மாதிரி. ரொம்பத்தான் பண்றான் டி அவன்.

அப்புறம் எதுக்கு கேர்ள்ஸூக்கு ட்ரைனிங் கொடுக்க வரான். இவனெல்லாம் டாக்டராகி என்னத்த கிழிக்க போறான். இந்த லட்சணத்தில பெரிய ஆன்காலஜிஸ்ட் ஆகணும்னு கனவாம்.

நல்ல வேளைடி இவனெல்லாம் போலீஸ் ஆகலை. தப்பு பண்ணவன் மட்டும் இவன் கிட்ட மாட்டினான், பார்த்தே சாகடிச்சிடுவான். நெற்றிக் கண் இல்லாதது தான் குறை" தோழிகள் புலம்புவார்கள்.

அப்போதெல்லாம் இவள் அவனுக்கு வக்காலத்து வாங்குவாள். "படிக்கத் தானே வந்திருக்கோம்.. அதை விட்டு சைட் அடிக்குது கூட பரவாயில்லை.. கூட்டமா ஒருத்தனையே சைட் அடிச்சா அவன் இப்படித்தான் ரியாக்ட் பண்ணுவான்."

"சரி தான் டி.. நீ சொல்ற நியாயம். அதாவது நீ மட்டும் பார்க்காமல் பார்த்து வைப்ப.. நாங்க பார்க்கக் கூடாது.. அதானே" என்று தோழிகள் சண்டைக்கு வருவார்கள்.

'லிஃப்ட்டில் உடன் இருந்தது அவன் தானா? இதே மருத்துவமனையில் தான் இருக்கிறானா? இத்தனை நாள் தேடிக் கொண்டு இருந்த போது சிக்காதவன் இப்போது எப்படி வந்தான்?' என்று யோசித்தவாறு ரிசப்ஷனில் அரைமணி நேரத்திற்கும் மேலாக லிஃப்டையே பார்த்தவாறு அவள் நின்றிருக்க,

தாயின் அறையில் இருந்து சிசிடிவி வழியாக அவளைப் பார்த்துக் கொண்டு இருந்தவன், அவளது முகத்தில் வந்து போன பாவனைகளைக் கண்டு

"போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி" என்று பாடியபடியே விசிலடித்தான்.

அருகில் இருந்த அவனது தாயோ, "நல்ல திட்டம் தான் போட்டு இருக்கப் பா. விஷயம் தெரியும் போது அவ வேற மாதிரி பாடிடப் போறா. ஆனாலும், உன்னைப் போய் விசுவாமித்திரன்னு அவ கிட்ட சொல்லி வச்சிருக்கேனே? அவ தான் உன்னோட மேனகைன்னு தெரியாம.

ஆண்டவா அவ கேள்வியின் நாயகியாச்சே? எதுக்கும் நான் வாய்க்கு ஜிப்பு ஒண்ணு பெரிசா போட்டு ஜாக்கிரதையா இருந்துக்கிறேன். உன் வேலை ஆச்சில்ல நீ கிளம்பு" என்று அவனைக் கிளப்பினார்.

"மாம்! உங்களுக்கு அவளைப் பிடிச்சிருக்கா இல்லையா?"

"ரொம்ப பிடிச்சிருக்கு பா. ஆனால் உங்க பஞ்சாயத்துக்கு என்னைக் கூப்பிடாதே. ஆளை விடு.."

"என்ன இங்கே சத்தம்.. என்ன இங்கே சத்தம்.." என்று வந்து சேர்ந்தான் மாதவன்.

'போச்சு டா.. இவனை எப்படிச் சமாளிக்கிறது?' என்று யோசித்த விக்ரமுக்கு வடிவேலு காமெடி ஞாபகம் வந்தது.

'உயிரே.. உயிரே.. தப்பிச்சு எப்படியாவது ஓடி விடு..' அதைக் கற்பனையில் கண்டவன் வாய் விட்டுச் சிரித்தான்.

"ஆன்ட்டி! இவனுக்கு என்ன ஆச்சு? மறை கழண்ட மாதிரியே பிஹேவ் பண்றான்?"

"ஹேய்.. என்ன மேன் நீ. சிரிக்கிறது ஒரு குத்தமா?"



"இல்லவே இல்லை.. ஆனால் கூட இரண்டு பேர் இருக்கும் போது தானா சிரிக்கிறது தான்…"

"ம்ச்.. அதை அப்புறம் சொல்றேன்.. இப்போ நீ என்ன இங்கே.. என்ன விஷயம்?"

"அடாப்ஷனுக்கு ரெஜிஸ்டர் பண்ணி இருந்தேனே, பேபி ரெடியா இருக்காம். வந்து ப்ரோசிஜர் முடிச்சிட்டு கூட்டிட்டு போங்கன்னு சொல்றாங்க. அங்கே ஓரூ வாரம் தங்க வேண்டியது இருக்கும். பட் அங்கிள் அடுத்த வாரம் எல்லாரும் மீட் பண்ணனும். நீ அப்புறம் போன்னு சொன்னார். அதான் என்ன விஷயம்னு கேட்டு வந்தேன்."

"எல்லாரும் மீட் பண்ணனுமா? எங்க கிட்ட எதுவும் சொல்லலையே! என்ன விஷயம் மாம்?"

"ஃப்ரண்டு வீட்டுக்கு போகணும்னு சொன்னார். வேற எதுவும் சொல்லலையே.‌ உன் கிட்ட டீடெயில்ஸ் சொன்னாரா மாதவா?"

"ம்ச்.. அது தெரியாமல் தானே இங்கே வந்தேன்.. அடுத்த வாரம் வரைக்கும் வெயிட் பண்ணனுமா.. ரொம்ப கஷ்டம் ஆச்சே.. ஏன் விக்ரம் உன் விஷயத்தை சொல்லிட்டியா..?"

"இதோ இப்ப தான் அம்மா கிட்ட சொன்னேன்."

"உங்க அப்பா கிட்டயும் சொல்லிடு. அவர் பாட்டுக்கு ஃப்ரண்டோட பொண்ணக் கல்யாணம் பண்ணிக்கோ, நீங்க குழந்தையா இருக்கும் போதே சம்பந்தம் பண்ணிட்டோம்னு சொல்லிடப் போறார்"

"டேய்.. நீயும் உன் கற்பனையும்.. பேசாமல் கிளம்பு.. "

"இப்போ என்னை விரட்டி விடலாம்.. ஆனால் யோசி.. நான் சொன்னதுக்கு ஏதாவது பாஸிபிளிட்டி இருக்கப் போகுது"

"பார்க்கலாம்.. பார்க்கலாம்.."

"ஆல் தி பெஸ்ட்.. மிஸ்டர்.விசுவாமித்திரன். உங்க மேனகை கிட்டயும் சீக்கிரம் பேசிடுங்க" என்றவனை விக்ரமன் துரத்த அவன் ‌மின்னலென வெளியேறி விட்டான்.

ஒரு முடிவு செய்தவனாக விக்ரமன் நியதியை நேருக்கு நேர் சந்தித்து விடலாம் என்று மறுபடியும் லிஃப்ட் நோக்கிச் சென்றான். அவனை ஏமாற்றாமல் காத்திருந்த நியதி, விழி விரித்துப் பார்த்தாள்.

"ஹாய்! கொஞ்சமா கண்ணை விரி.. வெளியே வந்து விழுந்திடும் போல இருக்கே!" அவன் கேலியில் இறங்க அவள் முகம் திருப்பி நடக்க ஆரம்பித்தாள்.

"ஹேய்.. நிதி.. வெயிட்.. வெயிட்.. உன் கிட்ட பேசணும்னு வந்திருக்கேன். நீ கோவிச்சிட்டுப் போனால் என்ன அர்த்தம்?"

"ம்ம். என்ன பேசணும்? இங்கேயே சொல்லுங்க" அவர்கள் நின்றிருந்த ஹாஸ்பிடல் லாபியைச் சுற்றிப் பார்த்தவன், "இங்கேயா.. ஏன் மா.. ஏன்.. ஏற்கனவே நான் ரொம்ப லேட்.. இதுல நீ வேற படுத்தாத.." (முதல் முதல்ல லவ்வர் கிட்ட பேசும் போது இப்படியா டா பேசுவ..)

"சரி வாங்க.. எங்க போகலாம்.. நான் மேடம் கிட்ட பெர்மிஷன் வாங்கிட்டு வரேன். வெயிட் பண்ணுங்க.."

"அம்மா கிட்ட நான் சொல்லிட்டேன்.. நீ வா.. நாம பக்கத்தில எங்கேயாவது போய் பேசுவோம்" என்று அவள் கைபிடித்து அழைத்துச் சென்றான்.

அவளோ, "அம்மாவா? அருந்ததி மேடமா? அவங்களுக்கு நம்ம விஷயம் தெரியுமா?" என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே வந்தாள்.

"ஹா ஹா. அம்மா உனக்கு கரெக்டா தான் பேர் வச்சிருக்காங்க. கேள்வியின் நாயகின்னு.. இப்படியா கேட்ப.. கொஞ்சம் கேப் விடு.. நான் யோசிக்கணும்ல.."

வாயை மூடிக் கொண்டு அவனுடன் அருகில் இருந்த ரெஸ்டாரன்ட்டுக்குப் போனாள்.

"ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் ஸாரி நிதி. உன்னை ரொம்ப வெயிட் பண்ண வச்சிட்டேன். ஃபோன்ல கான்டாக்ட் பண்ணி இருக்கலாம். அர்ஜுன் உன் நம்பர் கொடுத்ததும் நிறைய தடவை பேசலாம்னு நினைச்சேன். பட் நேர்ல போகலாம்னு விட்டுட்டேன். உனக்கும் டீவியேஷன் வேண்டாம்னு ஒரு நாள் பேசிட்டு இருந்த. அதை நாமளும் ஃபாலோ பண்ணனும்னு தான்.. இப்படி இருந்திட்டேன். உனக்குக் கூட கோபமா இருக்கலாம். பட் எனக்கு வேற வழி தெரியலை."

"....."

"என்ன டா. எதுவும் பேசாமல் இருக்க. பிடிக்கலையா?"

"ஷ்ஷ். கொஞ்ச நேரம் என்னை ஃபீல் பண்ண விடுங்க. அட் லாஸ்ட் நான் உங்க பக்கத்தில இருக்கேன்னு எனக்கு நானே சொல்லிக்கிறேன்" உணர்வுகளை வார்த்தைகளில் வடித்தவளைத் தோளோடு அணைத்து நெற்றியில் முத்தம் ஒன்றை வைத்தான்.

"இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்ல.. வருஷக் கணக்கில் பார்க்காமல் பேசாமல் இருப்பாராம். பார்த்த உடனே ஸ்ட்ரைட்டா கிஸ் தானா?"

"நானே லேட் பிக்அப்னு தான் ஒத்துக்கறேனே.. இன்னும் லேட் பண்ண வேண்டாமே!"

"அது சரி.. இப்பயாச்சும் உங்க நம்பர் தருவீங்களா..?"

"இதோ!" என்று அவளுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்தான். "நிதி மை லவ்" என்று அவளது நம்பரை சேவ் பண்ணி வைத்திருந்ததைப் பார்த்தவள், "இதுல ஒன்னும் குறைச்சல் இல்ல" என்று கழுத்தை நொடித்தாள்.

"நீங்க தான் ப்ளான் பண்ணி அர்ஜுன் அண்ணாவ அப்பப்போ என் கிட்ட பேச வச்சிருக்கீங்க கரெக்டா?"

"யெஸ் பேபி.. யூ ஆர் ஆல்வேஸ் பிரில்லியன்ட்."

"என் நம்பர் வாங்கினது, மேடம் கிட்ட பேசச் சொன்னது எல்லாம் உங்க ப்ளான் தான்.."

"ஆமா டா செல்லம்.. இன்னும் என்ன மேடம்.. அத்தைன்னு சொல்லு.."

"அப்போ‌ என் பங்குக்கு நானும் விளையாடறேன்.. நீங்க இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.."

"வித் ப்ளஷர்.. நாம லவ் லைஃப் என்ஜாய் பண்ணவே இல்லையே.. கொஞ்ச நாள் லவ் பண்ணுவோம்.. அப்புறம் கல்யாணம் பண்ணிக்கலாம்.."

"ஆசை தோசை.."

"ஆசை தான்.. "

வருடக்கணக்கில் பேசாமல் விட்ட கதைகளை எல்லாம் பேசி, கேட்க நினைத்த கேள்விகளைக் கேட்டு இருவரது பெற்றோரையும் எப்படிச் சந்திக்க வைப்பது என்று பெரிய திட்டங்கள் எல்லாம் போட்டு இருவரும் அவரவர் வழியில் கிளம்பினார்கள். இவர்கள் போட்ட திட்டங்களை எல்லாம் புஸ்வாணம் ஆக்கி இரு தந்தையரும் தம் மக்களுக்கு அதிரடி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர்.

*****

அந்த வார ஞாயிற்றுக்கிழமை காலை. பூஜையை முடித்த தேவராஜன் மிகவும் பரபரப்பாக இருந்தார். மனைவியிடம் விஷயத்தைச் சொல்லி விட்டார் போலும், அருந்ததியும் அதே அளவு பரபரப்புடன் இருந்தார். சில பல பிக் ஷாப்பர் பைகள் அவர்களின் இன்னோவாவில் ஏற்றப் பட்டன.

"உங்க ஃப்ரண்ட் வீட்டுக்கு போறதுக்கு எதுக்கு பா எனக்கு ஃபார்மல் ட்ரெஸ். அதுவும் ட்ரடிஷனலா.. நாம என்ன பொண்ணு பார்க்கப் போறோமா இல்லை நிச்சயம் பண்ணப் போறோமா.. ஏன் மா இப்படி இரண்டு பேரும் சேர்ந்து படுத்தறீங்க? நீங்க வேற கிராண்டா பட்டுப் புடவை கட்டி, இந்த டாட் எங்க இருந்து இந்த வேஷ்டி குர்த்தாவ பிடிச்சார். ஏதோ கச்சேரிக்குப் போறது மாதிரி இருக்கு"

"அவங்க வீட்டில ஏதோ பூஜைக்கு ஏற்பாடு பண்ணி இருக்காங்க. ஜீன்ஸ்ல வந்தால் நல்லா இருக்காது.. டக்குன்னு மாத்திட்டு வந்து சேரு. நல்ல நேரத்தில கிளம்பணும்.

பிடித்தம் இல்லாமல் நின்றவனைப் பார்த்த அருந்ததி, போகிற போக்கில் ஒரு க்ளூ கொடுத்து விட்டுச் சென்றார்.

"இப்போ கேட்காமல் விட்டு அங்கே வந்து ஃபீல் பண்ணக் கூடாது சொல்லிட்டேன்"

"என்னமோ சொல்றீங்க.. கேட்கலேன்னா விடவா போறீங்க.. மாத்திட்டு வரேன்" என்று போனவன் beige கலர் குர்த்தாவும் சல்வாரும் அணிந்து மாப்பிள்ளை போல் வந்தான்.

"இப்போ தான் மாப்பிள்ளை மாதிரி இருக்கு" என்று அருந்ததி முனகியது அவன் காதுகளில் விழவில்லை.

வாசுதேவனின் வீட்டு வாசலில் இறங்கிய போது அங்கே இருந்த சூழ்நிலையைப் பார்த்து மயக்கம் போட்டு விழாமல் இருக்க கார் கதவை இறுக்கி பிடித்துக் கொண்டு நின்றான். இவர்களுக்கு பின்னால் வந்த கார்களில் அர்ஜுன் உட்பட அவனுக்கு நெருக்கமான பலரும் வந்தனர்.

'என்ன டா இது? அப்படி என்ன தான் நடக்கப் போகிறது?' என்று யோசித்துக் கொண்டே உள்ளே வந்தவனை நியதியின் கான்வகேஷன் ஃபோட்டோ வரவேற்றது. அங்கே ஒரு விழா நடப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததன. சட்டென்று அவன் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்து அர்ஜுனைத் தேடிக் கண்டுபிடித்தது.

தன்னிடம் வரும் நண்பன் கேட்கப் போகும் கேள்விகளை நினைத்துப் பார்த்து அதற்கான பதிலைத் தயாரித்துக் கொண்டு இருந்த அர்ஜுன், வேகமாக வந்து அவனைக் கட்டிப் பிடுத்து "ரொம்ப தாங்க்ஸ் டா மச்சான். நிறைய வேலை பார்த்திருக்க போல இருக்கு" என்றவனை ஆச்சரியமாக பார்த்தான்.

"உனக்கு.. கோபம் வரலையா டா விக்கி.."

"நிச்சயமா நிறைய இருக்கு.. அதுக்கெல்லாம் அப்புறம் பேசிக்கிறேன். இன்னைக்கு இந்த மொமன்ட என்ஜாய் பண்றதுன்னு முடிவு பண்ணிட்டேன்."

"ஹலோ ராஜா. வா. வா. அருந்ததி வாம்மா! எல்லாரும் வாங்க! விக்ரம்! வாங்க. வாங்க"

"சார்.. நீங்க..?"

"சார் இல்லை.. மாமா.. வாங்க நியதியை நீங்க தான் சமாதானப் படுத்தணும். ரொம்ப கோபமா இருக்கா..'

"இதோ வந்துட்டேன் ‌மாமா.." என்று ஓடியவனைப் பார்த்து அனைவரும் சிரித்தனர்.

"இதப் பாருடா.. இவன் விசுவாமித்திரனாம். யாரு அவனுக்கு இந்தப் பேரை வச்சது.. பேரை இப்பவே மாத்துங்க டா.." என்று சத்தமாகப் புலம்பிய மாதவனைப் பார்த்துக் கொண்டே உள்ளே சென்றான் விக்ரமன்.

வேகமாக வந்து விட்டவன், வழியில் சந்தித்த சுகந்தாவைக் கண்டு தயங்கி நின்றான்.

"வாங்க விக்ரம். நான் நியதியோட அம்மா. அவளுக்கு அரை குறையா விஷயம் தெரிஞ்சு போச்சு. அதான் கிளம்ப மாட்டேன்னு அடம் பிடிக்கிறா. அவரும் உங்க பேரைச் சொல்லி இருக்கலாம். அழுதழுது அவள் முகமே நல்லா இல்லை. நீங்க போய் சமாதானப் படுத்துங்க."

அவரிடம் நியதியின் அறையைக் கேட்டு அறிந்தவன், வாசலில் நின்று கதவைத் தட்டினான். "மாம்! ப்ளீஸ் என்னை ஃப்ரீயா விடுங்க. என் கிட்ட எல்லாத்துக்கும் சரின்னு சொல்லிட்டு இப்போ யாரையோ கூட்டிட்டு வந்தால் நான் அலங்காரம் பண்ணிட்டு வரணுமா? நெவர்.. நியதியை அவ்வளவு ஈஸியா நினைச்சுட்டீங்களா?"

சத்தமாகப் பேசியவள் அவளது அலைபேசியில் வந்த அழைப்பை ஏற்காமல் தூக்கி எறிந்தாள். அதுவோ விடாமல் அழைக்க, வேறு வழியின்றி அழைப்பை ஏற்று அமைதியாக இருந்தாள்.

"ஹாய் ஸ்வீட் ஹார்ட்.. குட் மார்னிங் ஆச்சா? ஏன் ஃபோனை அட்டன்ட் பண்ண இவ்வளவு நேரம்?"

"எனக்கு இன்னைக்கு பேட் மார்னிங் போங்க.. எல்லாம் உங்களால தான்.."

"என்னாலயா.. நான் என்ன பண்ணேன்.. மீ பாவம் மா.."

"ம்ச்.. எனக்குப் பேசற மூடே இல்லை.. ஃபோனை வைக்க.."

"அப்படியா.."

"அப்படித்தான்.. நான் ரொம்ப சோகமா இருக்கேன்.. இன்னைக்கு நாளே சரியில்லை.."

"நோ.. நோ.. அப்படி எல்லாம் சொல்லிடக் கூடாது.. நீ கதவைத் திறந்து வெளியே வந்து பார்த்தால் தானே நல்ல நாளாக இல்லையான்னு தெரியும்.. ரூமுக்குள்ள அடைஞ்சிருந்தால் தெரியாதே. ப்ளீஸ்டா எனக்காக வெளியே வா.."

"என்ன பேசறீங்கன்னே புரியலை.. ரூமை விட்டு வெளியே வரணும்.. அவ்வளவு தானே.. இதோ வரேன்.."

கதவைத் திறந்து வெளியே வந்தவள் தான் கண்ட காட்சி நிஜமா என்று கண்ணைக் கசக்கிப் பார்த்தாள்.

அவளையே பார்த்துக் கொண்டு மாப்பிள்ளைக் கோலத்தில் நின்றவனின் அருகில் வந்தவள் அவனை நறுக்கென்று கிள்ளி வைத்தாள். (டவுட்டு க்ளியர் பண்ண வேண்டாமா? அதுக்கு தான்..)

"ஸ்ஸ் ஆஆஆஆஆ.. அடிப்பாவி! உன்னைத் தானே கிள்ளிப் பார்க்கணும்.."

"ரிசல்ட் சரியா வரணும்ல. என்னைக் கிள்ளினா வலிக்காத மாதிரி தான் கிள்ளி இருப்பேன்.. இப்போ பக்கா.. க்ளியர் ஆகிடுச்சு.. ஒரு ஃபைவ் மினிட்ஸ்.. இதோ வரேன்" என்று கதவை ஓங்கிச் சாத்தினாள்.

"ஹேய்.. " என்று முன்னே சென்றவன் கதவில் முட்டிக் கொண்டு நின்றான். எவ்வளவு நேரம் நின்றானோ தெரியவில்லை, கதவு பட்டென்று திறந்ததில் தடுமாறி விழப்போனவன் நியதியைப் பிடித்துக் கொண்டு நின்றான்.

வலது கையை அவள் புறம் நீட்டி, "ஷால் வீ?" என்றான். நீட்டிய கையைப் பிடித்துக் கொண்டு அவனுடன் ஹாலுக்கு வந்தவளை,

"மணமகளே! மருமகளே வா.. வா.. உன் வலது காலை எடுத்து வைத்து வா வா" என்று மாதவன் தலைமையில் கோரஸ் அவர்களை வரவேற்றது.

*****

இரண்டு மாதங்களுக்கு பிறகு..

அதே ராஜா முத்தையா கல்யாண மண்டபம்..

"விக்ரமன் வெட்ஸ் நியதி" என்று வாசலில் நியான் எழுத்துக்கள் ஜொலிக்க, மண்டபத்தின் உள்ளே

"விசுவாமித்திரன் வெட்ஸ் மேனகா" என்று எல்இடி விளக்குகள் ஜொலித்தது.

மாப்பிள்ளை அழைப்பு முடிந்து உள்ளே வந்த விக்ரமன், "மாதவாஆஆ!" என்று பல்லைக் கடிக்க, அவன் எங்கே அங்கே இருந்தான்..

"நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான் பேரு விளங்க இங்கு வாழணும்

சோலை வனத்தில் ஒரு ஜோடிக்குயில் போலதான் காலம் முழுக்க சிந்து பாடணும்

ஒன்னுக்கொன்னு பக்கத்திலே பொண்ணு புள்ள நிக்கையிலே

கண்ணுபடும் மொத்ததிலே கட்டழக அம்மாடி என்ன சொல்ல"



என்று தானே பாடி கச்சேரியைத் தொடங்கி வைத்தான்.

மறுநாள் காலையில் நல்லதொரு சுபமுகூர்த்த வேளையில் தனது மனதுக்கு பிடித்தவளைக் கரம் பிடித்த விக்ரமனும் காத்திருந்து அவனைக் கரம் பிடித்த நியதியும் நன்மக்களைப் பெற்று நூறாண்டு வாழ நாமும் வாழ்த்துவோம். அவர்களது மருத்துவ சேவையும் இனிதே தொடர வேண்டும் என்று வாழ்த்தி விடைபெறுவோம்..



“மழைக்கு ஏங்கிய மாந்தளிரே” வாசகர்களின் விருப்பத்திற்கு இணங்க விக்ரமனும் நியதியும் விரைவில் உங்களைச் சந்திக்க வருகிறார்கள்...
 

Author: SudhaSri
Article Title: ஆடுமடி தொட்டில் இனி - 17 நிறைவுப் பகுதி
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.