• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

எனது சொந்தம் நீ - Epilogue

Annapurani

Member
Mar 27, 2025
38
0
8
எனது சொந்தம் நீ - Epilogue - எபிலாக்



"டேய் முகுந்த்!"

"என்னடீ ஐஷூ?"

“என்னதான் நம்ம அம்மா டாக்டராயிருந்தாலும் தன்னோட ஹார்ட் ஆபரேஷனை அவங்களால தானே பண்ணிக்க முடியாது!”

முகுந்த் ஐஷூவை முறைத்தான்!

“என்னதான் நம்ம தாத்தாவும் பாட்டியும் ஃப்ரொஃபஸர்களா இருந்தாலும் அவங்களால தன்னோட எக்ஸாம் பேப்பரை தானே திருத்திக்க முடியாது!”

இப்போது தன் வாயைக் கோணிக் காட்டி அவளிடம் பழிப்புக் காட்டினான்!

“ஆனா! நம்ம அப்பாவால அவரோட மொபைலையும் லேப்டாப்பையும் அவராலேயே சரி பண்ணிக்க முடியும்! அவர்தான் சூப்பர்!”

"ஏய் ஐஷூ!"

“சொல்றா!”

“அப்பா மொபைலும் லேப்டாப்பும் ரிப்பேரானா, அத ச்விட்ச் ஆஃப் பண்ணிட்டுதான் ரிப்பேர் பண்ண முடியும். ஆனா அம்மா யாருக்காவது ஹார்ட்ல ப்ராப்ளம்ன்னா, ஹார்ட் துடிச்சுகிட்டிருக்கும்போதே சரி செஞ்சுடுவாங்களே! அப்ப அம்மாதான் சூப்பர்!”

"வெவ்வெவ்வெவ்வ.... போடா!"

பிள்ளைகள் இருவரும் தங்களுக்குள் நடத்திக் கொண்டிருந்த விவாதத்தை தள்ளியிருந்து கேட்டு ரசித்துக் கொண்டிருந்தனர், சிவசங்கரன் - நந்தினி தம்பதியரும், பாண்டியன் - இந்துமதி தம்பதியரும்!

பிள்ளைகள் இருவரும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ள பாட்டிகளும் தாத்தாக்களும் அவர்களை சமாதானம் செய்ய முயன்றனர்!

“அப்ப நான் சொன்னது நல்லா இல்லையா?” சிணுங்கினாள் ஐஷூ!

“ரெண்டு பேர் சொன்னதும் சூப்பரா இருந்ததும்மா! சிணுங்காதம்மா!” இந்துப்பாட்டி சமாதானம் செய்தாள்.

“இருடா! நாளைக்கு அப்பா வந்துடுவார்ல! அப்பாகிட்ட சொல்றேன். அவர் நான் சொன்னதுதான் நல்லா இருக்குன்னு சொல்வார்.”

“நானும் அம்மாகிட்ட சொல்றேன்டீ! அவங்க நான் சொன்னதுதான் சூப்பர்னு சொல்வாங்க!”

“போடா!”

“போடீ!”

ஊட்டியின் குளிரை ரசித்தபடி இந்துப்பாட்டி, நந்துப்பாட்டி, சிவசங்கரன் தாத்தா, பாண்டியன் தாத்தாவோடு ஹரி அபி தம்பதியரின் மக்கள் இரட்டையராய் பிறந்த நான்காவது படிக்கும் ஐஸ்வர்யாவும், முகுந்தனும் வம்படித்துக் கொண்டிருந்தனர்.

ஹரி தமிழகத்தின் மிகச்சிறந்த தொழிலதிபராகியிருந்தான். அபி சென்னையின் மிகச்சிறந்த இருதய நோய் நிபுணராகியிருந்தாள்.

ஹரியும் அபியும் வேலை நிமித்தம் சென்னையில் இருக்க, குழந்தைகள் இருவரையும் அழைத்துக் கொண்டு தாத்தா பாட்டி நால்வரும் கோடை விடுமுறையை கழிக்க ஊட்டி வந்துள்ளனர்.


சென்னையில்:


"என்னங்க எல்லாம் ரெடியா?"

"நாளைக்குதானே ஃப்ளைட்! இப்பவே ரெடியான்னு கேக்கற?"

"இப்பவே எல்லாத்தையும் ரெடியா வெச்சிட்டா... காலைல பரபரப்பில்லாம கௌம்பலாம்ல...."

"எல்லாம் ரெடி டாக்டர் மேடம்! இப்ப கொஞ்சம் இப்டி வரீங்களா?" என்று கேட்டுக் கொண்டே அபியைத் தன் பக்கமாக இழுத்தான் ஹரி!

"என்ன? நாம நாளைக்குதான் ஊட்டிக்கு போறோம்! சார் இன்னிக்கே ரொமான்ஸ் மோடுக்கு வந்துட்டீங்க போல...."

"வீட்ல எப்ப பசங்கல்லாம் இல்லயோ... அப்பவே ரொமான்ஸ் மோடுக்கு மாற வேண்டியதுதான்!"

"ஓஹோ.... அப்ப அதனாலதான் பசங்கள அப்பா அம்மாவோட முன்னால அனுப்பினீங்களா..."

"பின்ன வேற எதுக்காம்?" கேட்டுக் கொண்டே அபியை தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டான்!

"ம்ச்... என்னங்க இது... சும்மா இருங்க!" பொய்யாக சிணுங்கினாள் அபி!

"ஹேய்.... நம்மளோட ஹெக்டிக் ஷெட்யூல்ல.... எவ்ளோ நாள் கழிச்சி இது மாதிரி ஒரு தனிமை கெடைச்சிருக்கு.... அத கொண்டாடறத விட்டுட்டு... சும்மா இருன்னு சிணுங்கற.... மனசாட்சியே இல்லயாடீ ஒனக்கு...."

அவன் பேசியதைக் கேட்ட அபி சிரித்தாள்!

அவள் சிரிப்பை ரசித்தவன்,

"நம்ம பசங்களுக்கு ஒரு தம்பியோ, தங்கையோ இன்னிக்கு ஏற்பாடு பண்ணிடலாமா?" என்று அவள் காதுகளில் கிசுகிசுப்பாகக் கேட்டபடியே அவளைத் தன் வசப்படுத்த,

"ஹா..... ஹா......." என்று சத்தமாகச் சிரித்தபடியே அவனுடைய கைகளில் நெகிழத் தொடங்கினாள்!

மறுநாள் மாலை, ஊட்டியில் அந்த சுற்றுலா ரிசார்ட்டின் வாசலில் இறங்கி தங்கள் பெற்றோரும் பிள்ளைகளும் தங்கியிருந்த அறைக்குள் நுழைந்தனர், அபி-ஹரி தம்பதியர்.

“அப்பாவும் அம்மாவும் வந்துட்டாங்க பாட்டி!” என்று கத்திக் கொண்டே ஓடி வந்து ஹரியின் கால்களைக் கட்டிக் கொண்டாள் ஐஷூ!

"அம்மா!" என்று கட்டிக் கொண்டான் முகுந்தன்!

சிரித்துக் கொண்டே ஐஷூவை தூக்கிக் கொண்டு உள்ளே வந்தான் ஹரி. முகுந்தனை தூக்கிக் கொண்டு உள்ளே வந்தாள் அபி.

குழந்தைகள் இருவரும் தாங்கள் பேசிக் கொண்டதை விலாவாரியாக விளக்கினர். அவர்கள் கூறுவதை பெற்றவர்கள் இருவரும் மிக மிகப் பொறுமையாகக் கேட்டனர்.

“அம்மா! நான் சொன்னது கரெக்ட்டா? இல்ல அவ சொன்னது கரெக்ட்டாம்மா? நீங்களே சொல்லுங்கம்மா!” என்றான் முகுந்தன்.

“அப்பா நீங்க சொல்லுங்கப்பா! நான் சொன்னதுதானே கரெக்ட்?” இது ஐஷூ!

“என் செல்லம்! நீங்க ரெண்டு பேரும் சொன்னது கரெக்ட்! அம்மாவும் சூப்பர்! நானும் சூப்பர்! ஆனா எங்க ரெண்டு பேரவிட நீங்க ரெண்டு பேரும்தான் சூப்பரோ சூப்பர்! சரியா?” என்று சமாதானம் செய்தான் ஹரி!

“அப்டியாம்மா?” இது முகுந்தன்.

“அப்பா சொன்னா எப்பவுமே கரெக்ட்டாதான் இருக்கும்!” என்றாள் அபி!

“சரி! வாங்க! இன்னிக்கு தொட்டபெட்டாவுக்கு ட்ரக்கிங் போலாம்!”

“ஹை ஜாலி! வாடி ஐஷூ!!”

“வாடா!”

முகுந்தனின் கையை ஐஷூ பிடித்துக் கொண்டு நடக்க, ஹரியின் கையை அபி பிடித்துக் கொண்டு நடக்க, பெரியவர்கள் நால்வரும் தங்கள் குழந்தைகளின் மகிழ்ச்சியைக் கண்டு மனம் மகிழ்ந்தனர்.





♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥




 

Author: Annapurani
Article Title: எனது சொந்தம் நீ - Epilogue
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.