குறுநகை போதுமடி 3
கம்யூனிஸமும் கால்பந்தும் கேரள மக்களுடன் பின்னிப் பிணைந்தவை. நாடே கிரிக்கெட் காய்ச்சலில் தகித்தாலும், கடவுளின் தேசம் நேசிப்பதென்னவோ கால்பந்தைத்தான்.
உலகக் கோப்பையோ உள்ளூர் சோப் டப்பா மேட்ச்சோ, மாரடோனா, மெஸ்ஸி முதல் சுனில் சேத்தி, பீட்டர் தங்கராஜ் வரை கொண்டாடித் தீர்த்துவிடுவர். கேரளத்தின் கால்பந்தாட்ட பக்தர்களுக்கு
I M விஜயன் கிட்டத்தட்டக் கடவுளேதான்.
எந்த நாட்டில் FIFA நடந்தாலும், கேரளத்தின் மூலை முடுக்கெல்லாம் அவரவர்களது அபிமான அணிக்கும், வீரர்களுக்கும் போஸ்டர், ஃப்ளெக்ஸ் கட்அவுட் என போட்டி பரபரக்கும்.
சந்தோஷ் கோப்பையை ஏழு முறை வென்ற கேரள கால்பந்தாட்ட அணிக்கு தேசிய அளவில் தனி இடம் உண்டு.
திருவனந்தபுரம் ஆயுர்வேத கல்லூரியில் சென்று சேர்ந்த புதிதிலேயே கால்பந்தாட்டத்தின் மீதான அம்மாநிலத்தின் காதல், கிராமம், நகரம் என்ற வேறுபாடின்றிச் சின்னச் சின்ன ஊர்களில் கூட இருந்த ஃபுட்பால் குழுக்கள் (club), கடற்கரை, வயல்வெளி என கிடைக்கும் இடத்தில் எல்லாம் கால்பந்து விளையாடுவது என அலாதியான அந்தச் சூழலே
கபிலனை ஈர்த்தது.
பள்ளி மாணவர்களுக்கான கால்பந்தாட்டப் போட்டிகளில் மாவட்ட, மாநில அளவில் விளையாடிய அனுபவம் மிக்க கபிலன், ஓரிரு மாதங்களிலேயே கல்லூரியின் கால்பந்தாட்டக் குழுவில் இணைந்து கொண்டான்.
கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான நட்பு முறை மேட்ச் முதல் விதவிதமான கால்பந்தாட்டக் குழுக்களின் (Football Club) இடையே நடைபெற்ற போட்டிகள், லீக் மேட்சுகள், மாநில, தேசிய அளவிலான போட்டிகள் வரை அதற்கான தேர்வுச் சுற்றுகள், பல கட்டப் போட்டிகள், கால், அரை மற்றும் இறுதிச் சுற்று போட்டிகள், பயணங்கள் என கபிலன் எந்நேரமும் பிஸியாக இருந்தான்.
இரண்டாம் வருட இறுதியில் கேரள மாநிலத்தின் கால்பந்தாட்டக் குழுவில் விளையாட, கூடுதல் வீரர்களில் ஒருவராகத் தேர்ந்து எடுக்கப்பட்டான்.
ஆனால், செமி ஃபைனல்ஸில் முக்கிய வீரர் ஒருவரால் விளையாட முடியாது போக, முதல் வாய்ப்பிலேயே டீமில் விளையாடி, மூன்று கோல்களை அடித்து அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற கபிலன், கேரள கால்பந்தாட்டத்தின் நம்பிக்கை நாயகன் ஆனான்.
இதனால், நாலைந்து நாள்கள் தொடர் விடுமுறை, பண்டிகை சமயங்களில் கூட பயிற்சி, போட்டி என கபிலன் மதுரைக்கு வருவது பெரிதும் குறைந்தது.
நிலா மற்றும் ஆதியின் பள்ளி, படிப்பு, டே கேர், என தன் தினசரி கடமைகளில் மூழ்கி இருந்த மாளவிகா கபிலனைக் காண திருவனந்தபுரம் சென்றதே ஓரிரு முறைகள்தான். அவனது வருகை அரிதானதில், மகன் தன்னை விட்டு விலகுவதாக எண்ணி மனம் உளைந்தாள்.
கபிலன் ஆயுர்வேதம் படிப்பதும், இப்போது கால்பந்தின் பெயரால் வீட்டுக்கு வருவது குறைந்ததும் சாரநாதனால்தான் என நினைத்து, ஓணம் பண்டிகை சமயத்தில் திடீரென மதுரை வந்தவனிடம் புலம்பி வெடித்த மனைவியை சமாதானிக்க,
ஜெயச்சந்திரன்,
“ஏன், கபிலனை நான்தான் முதல்ல கொண்டுபோய் ஃபுட்பால் அகாடமில சேர்த்தேன். நான் போட்ட ப்ளான்தான் இதுன்னு சொல்லேன்”
மாளவிகா “இப்ப நினைச்சா அப்படியும் இருக்கலாமோன்னு தோணுது” என்றதில் கணவன் அயர்ந்தான்.
கபிலனுக்கு கால்பந்து விளையாடுவது ஒரு யோகம், தியானம், மனதை ஒருநிலை படுத்தும் வழி. அவன் உணரும் தனிமை, வார்த்தையும் வடிவமும் இல்லாத உணர்வுகள், யாரிடமும் உடைத்துச் சொல்லமுடியாத உன்மன ஆதங்கம் என கபிலனால் வெளிப்படுத்த இயலா ஏக்கங்களுக்கான வடிகால்.
கபிலன் மீது அக்கறை கொண்ட ஜெயச்சந்திரனால் அவனைப் புரிந்துகொள்ள முடிந்தது.
“கபிலன் படிக்கவும் விளையாடவும் சாதிக்கவும் இதுதான் வயசு. நீயா எதையாவது கற்பனை செஞ்சுக்கிட்டு, அம்மா சென்டிமென்ட்டால அவனை அடிச்சு முடக்கிடாத மாலு”
“அதுக்குன்னு எப்பப் பாரு பந்தை உதைச்சுககிட்டே இருந்தா?”
“ஏன், கபிலன் கப் வாங்கும்போது, பேப்பர்ல அவனைப் பத்தி நியூஸ் வரும்போது எம்புள்ளைன்னு பெருமை படறல்ல? போன நேஷனல் லீக் மேட்ச்சோட குவார்ட்டர் ஃபைனல் பார்க்க கொச்சின் போனபோது, அங்க கபிலனோட போஸ்டரை, ஆளுயர ஃப்ளெக்ஸை பார்த்து சாமி வந்த மாதிரி பரவசமானது யாருடீ?”
“அதானே, நல்லா கேளுப்பா” என்றாள், அப்போது பொறியியலில் சேர்ந்திருந்த நிலா.
கபிலன் படித்த பள்ளியிலேயே ஒரு ஸ்போர்ட்ஸ் மீட்டுக்கு சிறப்பு விருந்தினராக அவனை அழைத்திருந்தனர். அதே பள்ளியில் படிக்கும் ஆதித்யனுக்கு தன் கபிலண்ணாவிடம் ஆட்டோகிராஃப் வாங்க ஸ்கூலே முண்டியடித்ததில் அத்தனை பெருமை. தன் அறையில் கபிலனின் ஆளுயர போஸ்டரை ஒட்டி வைத்திருக்கிறான் ஆதி.
கபிலனின் புகழில் சாரநாதன் பெருமை அடைந்தாலும், மகனது தொடர் பயணங்களால்
முன்புபோல் வாராவாரம் என்றில்லா விட்டாலும், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையாவது திருவனந்தபுரம் சென்று மகனைக் காண்பதும் அவ்வப்போது தடைபட்டதில் சிறிது வருத்தம். கூடவே, இதனால் மகனுக்கு படிப்பில் நாட்டம் குறைந்து விடுமோ என்ற கவலை வேறு.
“ஏம்ப்பு, டாக்டருக்குப் படிக்கிறவென், இப்டி மேட்ச், மேட்சுனு ஊர் ஊராப் போனா, எப்படி?”
சிரித்த கபிலன் “அதெல்லாம் காலேஜ்ல சரியா ஷெட்யூல் பண்ணி ஹெல்ப் பண்றாங்கப்பா. என்னை மாதிரி வேற வேற ஸ்போர்ட்ஸ்ல இருக்கற ஸ்டூடன்ட்ஸுக்கு தனித் தனியா, கைடு (Guide) மாதிரி ஒரு ப்ரொஃபஸர் கூட உண்டுப்பா. நான் நல்லா படிப்பேன் பா. நீ கவலைப்படாத” என்றிருந்தான்.
கபிலன் கடைசி வருட இன்டர்ன்ஷிப்பில் இருந்தான். அந்த வருடத்திற்கான இந்தியக் கால்பந்தாட்டத்தின் பெருமை மிகு சந்தோஷ் கோப்பையின் அரையிறுதிப் போட்டி. கொச்சியின் ஹோம் கிரவுண்ட். நல்ல கூட்டம்.
டை பிரேக்கராக பெனால்டி ஷூட் அவுட் கொடுத்திருக்க, நிர்ணயிக்கப்பட்ட ஐந்து உதைகளில் நான்கு முடிந்திருக்க, பலதரப்பட்ட வயதில் இருந்த மலைநாட்டின் அழகான ஆண்களும் எழிலான யுவதிகளும் , மற்ற மாநிலங்களில் இருந்து பார்வையாளர்களாக வந்திருந்தவர்களும் தங்கள் ஆர்ப்பரிப்பையும் ஆரவாரத்தையும் அறவே கைவிட்டு, மைதானத்தில் கவனத்தைக் குவித்திருந்தனர்.
தன்னைத் தடுத்த எதிர் அணியினரிடமிருந்து லாகவமாக பந்தைத் துரத்திச் சென்ற அந்த இளைஞன், திடீரெனத் தன் வேகத்தைக் குறைப்பது போல் தோன்றவும், மைதானத்தில் ஊசி விழுந்தால் கூடக் கேட்கும் அளவு அமைதியும் இதயத்தின் தடக் தடக் ஓசையும் போட்டியிட, சட்டென வேகமெடுத்தவன், வலப்புறமாகக் காற்றில் பறந்து கீழிருந்து மேலாக வலது காலை இடது காலில் தட்டி, காற்றில் மிதந்த பந்தை உதைத்த வேகத்தில், வில்லாய் உயரே பறந்த பந்து மிகச் சரியாக எதிர்ப்பக்க கோல்போஸ்ட்டுக்கு செல்ல, அவன் சார்ந்திருந்த அணி இறுதிப்போட்டியில் நுழைந்தது.
சக போட்டியாளர்களுடன் கை குலுக்கித் தன் அணியுடன் நின்று, போட்டி அமைப்பாளர்களின், விளம்பரதாரர்களின், தன்னை நோக்கி ஓடி வந்த ரசிகர்களின் பாராட்டுகளை ஏற்றுக்கொண்டவனின் பெயர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட, கபிலன்! கபிலன்! கபிலன்! என்ற முழக்கத்தின் நடுவே நின்றிருந்தவன், கூட்டத்தை ஊடுருவியபடி தன்னை நோக்கி வந்த பெண்ணை முதலில் கவனிக்கவில்லை.
இப்போது ஆரவாரம் சற்று அடங்கி இருக்கவே சிலர் செல்ஃபி எடுக்கக் கோரினர்.
உள்வட்டத்திற்குள் வந்து அருகில் நின்று கொண்டவள், கை குலுக்கவோ கையொப்பம் கேட்கவோ முற்படாது, அமைதியாக நிற்க, தன்னைத் துளைத்த பார்வையின் குறுகுறுப்பில் திரும்பிய கபிலன், வீரர்களைச் சுற்றி இருபாலரும் இருந்தாலும், ஆண்களின் கூட்டம் அதிகமாக இருக்கவே,
“ஆட்டோகிராஃப்?”
“ம்ஹும்”
“செல்ஃபி?”
“ம்ஹும்”
“தென்?” (Then?)
“சும்மா, பக்கத்துல பார்க்கணும்”
பதினெட்டு, பத்தொன்பது வயது இருக்குமா, புதிதாக உரித்த வாழைத்தண்டைப் போல் இருந்தவளின் பதிலை ஒரு புன்னகையுடன் தலையசைத்து ஏற்றவன், அங்கிருந்து நகர்ந்தபோதே அவளை மறந்து போனான்.
அடுத்து இன்டர்ன்ஷிப்பில் பிஸியான கபிலன், அச்சமயம் நடந்த எந்த உள்ளூர் போட்டிகளிலும் கலந்து கொள்ளவில்லை.
ஏழெட்டு மாதங்களுக்குப் பின் நடைபெற்ற சூப்பர் லீக் கேரளா டோர்னமென்ட்டின் முதல் போட்டியில் அந்தப் பெண்ணை மீண்டும் பார்த்தான். நினைவில் இடறியவளைப் பார்த்துப் புன்சிரிக்கக் கூட செய்தான்.
ஆனால், அடுத்தடுத்து காலிகட், மலப்புரம், என வெவ்வேறு ஊர்களில் நடந்த போட்டிகளிலும் அந்தப் பெண்ணின் வருகையை எதிர்பார்க்காத கபிலன் சற்றே திகைத்தாலும், அமைதியாக நின்றவளை ‘என்ன, பார்க்கணுமா, பார்த்துக்கோ’ என்பதான பாவனையுடன் கடந்தான்.
BAMS படிப்பு முழுதாக முடிந்து, உயர் கல்விக்கென NEET தேர்வு எழுதி, கோட்டக்கல் வைத்யரத்னம் கல்லூரியில் MD படிக்க சேர்ந்தான். முதுநிலை மாணவர்கள் அனைவருக்குமே பேராசிரியர் ஒருவர் வழிகாட்டியாக இருப்பார்.
அதிலும் கபிலன் விளையாட்டு வீரன் என்பதால் கூடுதல் கவனம் சேர்க்க அவனுக்கென தனிப்பட்ட mentorஆக நியமிக்கப்பட்டவர்தான் பேராசிரியர் டாக்டர் நாராயணன். திருச்சியை சேர்ந்தவர். அலோபதி (ஆங்கில) மருத்துவர். தேர்ந்த சர்ஜன். மெல்லிய நீளமான விரல்களால் அவர் அறுவை சிகிச்சை செய்வதைப் பார்த்தால், அவர் ஏதோ ஒரு இசைக்கருவியை வாசிப்பது போலத்தான் தோன்றும். நிதானமான பேச்சும் பார்த்ததுமே மரியாதை பெறும் தோற்றமும் கொண்டவர்.
மலையாளமும் இங்கிலீஷும் பேசியே ஓய்ந்தவருக்கு இந்தமுறை பக்கா தமிழ் பையனுக்கு மென்டர் ஆனதில் அத்தனை மகிழ்ச்சி.
“கபிலன், தி யங், பாப்புலர், பட்டிங் ஃபுட்பால் ப்ளேயர், அடுத்த மூணு வருஷம் என் பாக்கெட்ல” என்று சிரித்தார்.
(Young, popular, budding)
“கபிலன், ஒரு அட்வைஸ் சொல்றேன். கேட்டுக்கோ. முதல் நாலஞ்சு மாசம் எந்த டோர்னமென்ட்டுக்கும் போகாத. ஆனா, ப்ராக்டீஸை விடாத. அப்புறமா நான் பார்த்துக்கறேன்”
“ஓகே ஸார்”
தொடர் போட்டிகள் என்றால் அதற்கான பயிற்சி, கட்டுப்பாடுகள், டீம் ஒர்க், பயணங்கள் என பல வாரங்கள், மாதங்களை விழுங்கும் என்பதால் கபிலனே சிறிய அளவிலான சில போட்டிகளைத் தவிர்த்தான்.
மருத்துவ மேற்படிப்பு என்பதே அநேகமாக நேரடிப் பயிற்சிதான் என்பதால், கபிலனே நினைத்தாலும் போக முடியாத அளவு பிழிந்து எடுத்தது படிப்பும் வேலையும். எப்படியோ வாரத்தில் இரண்டு, மூன்று நாள்களாவது உள்ளூர் அல்லது கல்லூரி ஸ்டேடியத்துக்கு விளையாடச் சென்று விடுவான்.
முதல் செமஸ்டரின் முடிவை ஒட்டி மாநில அளவிலான லீக் போட்டிக்கு விளையாடச் சென்றவன் கல்லூரி திரும்ப ஒன்றரை மாதங்கள் பிடித்தது.
இரவு பதினோரு மணிக்குத் தன் இருப்பிடத்தை அடைந்தவன், தன் வருகையை டாக்டர். நாராயணனுக்கு வாட்ஸ்ஆப்பில் தெரிவிக்க, “நாளைக்கு காலை ஒம்போது மணிக்கு வீட்டுக்கு வாடா” என விலாசத்தை அனுப்பினார்.
******************
கோட்டக்கல் ஒரு பரபரப்பான, அதே நேரம் கேரளத்தின் அழகும் அமைதியும் நிறைந்த ஒரு சிறுநகரம்.
பெங்களூரின் ஜனவரி மாதப் பனி ஒத்துக்கொள்ளாததில் வரும்போதே லேசான சளியும் இருமலுமாக வந்த கபிலன்,
குடியரசு தினத்தோடு வார இறுதியும் சேர கல்லூரிக்குச் செல்வதை விட இதுவே மேல் என, அலாரம் வைத்து எழுந்து, லேசான காய்ச்சலைப் பொருட்படுத்தாது தயாராகி, பைக்கில் நாராயணன் தந்த முகவரியைத் தேடிச் சென்றான்.
எல்லா கேரள நகரங்களைப் போலவே, கோட்டக்கல் வாசிகளும் மரம், செடி, கொடிகளுக்கு நடுவேதான் வசித்தனர். மரங்கள் அடர்ந்த குடியிருப்புப் பகுதிக்குள் நுழையவும் கோட்டக்கல்லுமே குளிரத்தான் செய்தது.
பைக்கை சற்று முன்னதாகவே அணைத்து, நிறுத்திவிட்டுப் பேக் பேகும், கையில் ஒரு பேப்பர் கவரில் சாக்லெட்டுமாக வீட்டை நோக்கி நடந்தான். கேட்டிலிருந்து வீடு முப்பதடி தூரம் இருக்கும். கேட்டைத் திறந்து உள்ளே செல்ல அமைதியாக இருந்தது வீடு. பூட்டு இலலை. திறந்திருந்தது. ஆள்களைத்தான் காணோம்.
“ஸார்… ஸார்”
அணில், குருவியெல்லாம் பதில் சொல்லத் தொடங்கவே, கபிலன் மொபைலில் நாராயணனை அழைக்க, அவர் “கபிலனா, எப்படா வந்த?” என்றார்.
“ஸார்… நான் உங்களைப் பார்க்கதான்..”
இடைமறித்தவர் “கேலிகட் வரை வந்தேன். இன்னும் அரை மணில வந்துடுவேன். வீட்டுக்கு வாயேன். அட்ரஸ் அனுப்பறேன்”
குழப்பத்துடன் “ஓகே ஸார்” என்றவன், வாசல்புறம் திரும்பி நின்று அவரது முந்தைய மெஸேஜை மீண்டும் படிக்க…
யாரோ முதுகில் தட்டவும் திரும்பியவனின் வெகு அருகில் அந்தப் பெண்.
‘இவளா, இவ எங்க இங்க?’
நேற்றுதான் ரயிலில் வந்தபோது குழுவின் மற்றொரு வீரனான விஷ்ணு மேனன் ‘எந்தா கபிலன், நிங்கட கேர்ல்ஃப்ரெண்ட் எவிட போயி?’ என டீமாக சேர்ந்து கலாய்த்திருக்க…
அந்தக் கேரள வீட்டின் பின்னணியில், பஃப் கை வைத்த நீல நிற டெனிம் ஃப்ராக்கில், குங்குமமும் சந்தனக்கீற்றுமாய் யுகசந்தியின் தேவதை போல் எதிரே அதே அவள்…
“ஹாய்”
கபிலன் தானியங்கியாக “ஹாய்”
“உள்ள வாங்கோ”
“இல்ல… யூ.. நான்… டாக்டர். நாராயணன்…”
“யெஸ், இது டாக்டர். நாராயணனோட வீடுதான். நான் சியாமளா. சியாமளா நாராயணன். அது எங்கப்பாவாக்கும். இப்ப உள்ள வரலாமே”
சியாமளாவைக் கூர்மையாகப் பார்த்தவன் “நீங்கதான் நேத்து எனக்கு மெஸேஜ் குடுத்ததா? அந்த பேர் போடாத க்ரீட்டிங் கார்ட்ஸ், ஹேண்ட் பெயின்ட்டட் கசவு ஷர்ட், அந்த கோல்டன் ஷூ கீ செயின், ஹாஸ்டல்ல போய் தேடினது… எல்லாமே நீங்கதானா?”
தன் வலக் கை விரல்களைப் வெகு நளினமாய்ச் சுழற்றி முத்தத்தைப் பறக்க விட்ட சியாமளா,
“என் கொலம்பஸ் குட்டிடா நீ”
“வாட்?” என்று சீறிய
கபிலனுக்கு ஜுரம், பிபி இரண்டும் ஏறியது.
“நான்சென்ஸ். இதென்ன விளையாட்டு?”
“ஃபுட்பால்தான்”
“கடவுளே! ஏம்மா, நான் எந்த விதத்துலயாவது உங்களை…”
“ஹலோ ஹலோ, இப்ப எதுக்கு இந்த வோட் ஆஃப் தேங்க்ஸ்?”
“...”
“ என்னை அடையாளம் தெரியறது. கிஃப்ட் அனுப்பினது, வரச்சொன்னது எல்லாம் நான்தான்னும் தெரியறது. அப்ப நீங்களும் என்னைத் தேடி இருக்கேள்”
சியாமளா மிக சாமர்த்தியமாகப் பந்தை தன் பக்கம் உதைக்கவும் இது வேலைக்கு ஆகாது எனப் புரிய, அவளுடன் சமாதானமாகப் பேசி இந்தப் பிரசினைக்கு உடனடியாக முடிவு கட்ட நினைத்த கபிலன் சட்டெனத் தணிந்தான்.
“இங்க பாருங்க, இதெல்லாம் சரியில்லை. ஸாருக்குத் தெரிஞ்சா நல்லா இருக்காது”
“எது சரியில்லை, யாருக்கு நல்லா இருக்காது? இதுல உங்க ஸார் எங்க வந்தார்?”
கபிலனுக்கு ஆயாசமாக இருக்கவே, கையைக் கட்டிக்கொண்டு ‘நீ பேசு’ என்பது போல் நின்றான்.
“ஹலோ, காலேஜ், சோஷியல் மீடியா, ஆயுர்வேதா சென்ட்டர் டோர்னமென்ட் பிளேயர்ஸ் லிஸ்ட்டுனு நான் உங்களைத் தேடினா, நீங்க பாட்டு சொல்லாம கொள்ளாம ஹைபர்னேஷன்ல (பதுங்கி) இருந்தா, நான் என்ன செய்ய?”
“நீங்க எதுக்குங்க என்னைத் தேடணும்”
“உங்களுக்காகதான் அத்தனை ஊருக்கு, மேட்ச்சுக்கு வரேன்னு தெரிஞ்சும் என்னைக் கண்டுக்காமலே போனா?”
கபிலன் “நாட் இன்ட்டரஸ்ட்டட், ஆளை விடுன்னு அர்த்தம்”
“ஏன் ஏன் விடணும், அப்டியெல்லாம் விட முடியாது கேட்டேளா?”
“ஊஃப்” என ஊதியவன் வெளி கேட்டை நோக்கி நடக்க,
“ஒரு நிமிஷம்.நேத்திக்கு அப்பா தூங்கினப்புறம் பாதி ராத்திரில மெஸேஜ். பாத்தா ‘கபிலன்.’ அப்புறமென்ன, ஒத்த மெஸேஜ், அண்ட் யூ ஆர் ஹியர். இது யதேச்சயா நடந்தது கேட்டேளா”
“...”
“நீங்க படிக்கற திருவனந்தபுரம் ஆயுர்வேதா காலேஜ்லயே ஒரு ஆயுர்வேதா கோர்ஸை தேடிக் கண்டுபுடிச்சு சேர்ந்தா, ஸாரை ஆளையே காணும். லீக் மேட்ச்ல கூட விளையாட வரலை”
‘எத்தனை க்ளோஸா மேட்ச்சை ஃபாலோ பண்றா!’
ஒரு நொடி வியந்த கபிலன் “ஃபுட்பால்னா அவ்வளவு பிடிக்குமா?”
“நானோ? நான் கிரிக்கெட் ஃபேன். எனக்குப் புடிச்சது கபிலனாக்கும். ஃபுட்பால் இல்லை”
“ஏய்…” என்று உயர்ந்த கபிலனின் குரலும் ஊசிப்பட்டாசாய் சரசரவென வெடித்த சியாமளாவும் வாசலில் கார் வந்து நின்ற சத்தத்தில் அமைதியாயினர்.
“கபிலனா, வா வா” என்ற வரவேற்புடன் உள்ளே வந்த நாராயணனைத் தொடர்ந்து அவரது மனைவியும் பெரியதொரு பெட்டியை உருட்டியபடி மகனும் வந்தனர்.
சியாமளா தற்காலிகமாக கபிலனை விட்டு அண்ணாவிடம் ஓடி, இழுத்து விறைப்பாக ஒரு சல்யூட் அடித்தவள்,
“சர், ஜெய்ஹிந்த்” எனவும் வந்த சிரிப்பை மறைக்க கபிலன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
“ஹேய் ஷிம்லா, இங்க எப்ப வந்த?” என்றபடி தங்கையை அணைத்துக்கொண்டு, கபிலனிடம் “ஐ’ம் மேஜர் நவீன். யூ ஆர் கபிலன் சாரநாதன், ஃபுட்பாலர், ரைட்?” என கை குலுக்கியவன், சியாமளாவின் அண்ணனாம். AFMC (Armed Forces Medical College) ல் டாக்டருக்குப் படித்துவிட்டு, இப்போது அருணாச்சலப் பிரதேசத்தில் கிபித்து (Kibithu) என்ற இடத்தில் உள்ள ராணுவ தளத்தில் போஸ்டிங்காம்.
‘அப்பா எனக்கு மென்டர், அண்ணன் மிலிட்டரி, இவ இப்டி… வெளங்கிரும்டா கபிலா!’
“ஏன்டீ, வந்த புள்ளையை உள்ள கூப்பிடாம, வாசல்லயே நிக்க வெச்சு… நீ வாப்பா” என்றார்,
சியாமளாவிற்கு அக்காவைப் போல் இருந்த அவளது அம்மா சுனந்தா, நேரிலும் ஆன்லைனிலும் ஸ்லோக, பஜன் வகுப்புகள் நடத்துகிறாராம்.
ஒன்றரை வருடங்களுக்குப் பின் வீடு வந்த மகனும் சரி, பெற்றோரும் சரி, தன்னை அவர்களில் ஒருவராக இணைத்து இயல்பாகப் பேசியதில் கபிலன் நெகிழ்ந்தான்.
“நவீ, நீ போய் ஸ்நானம் கழிச்சு வா, சாப்பிடலாம்” என மகனை அனுப்பிய சுனந்தா, கபிலனிடம் “இவனை அழைக்கதான் கேலிகட் ஏர்போர்ட்டுக்கு போனோம்” என்றபடி மகளோடு உள்ளே சென்றார்.
நாராயணன் கபிலனிடம் பாடம், கல்லூரி தொடர்பாகப் பேசத்தொடங்கினார்.
இருபது நிமிடங்கள் போல் சென்றிருக்கும். நவீன் வரவும் ஏதோ கொழுக்கட்டை போன்ற ஒன்று, வடை மற்றும் ஃபில்டர் காஃபி கொடுத்தனர்.
கபிலன் “சூப்பர் காஃபி மேம்” என்றான்.
“ஜோஸஃப் காஃபி. திருச்சியை விட்டு வந்து பதிமூணு வருஷமாறது. ஆனாலும் உங்க சாருக்கு அங்கத்தி காஃபியை விட மனசில்லை”
சுனந்தா ஒரே பெண் என்பதால், பாலக்காட்டுக்கு அருகே ஒரு கிராமத்தில் தனியே இருந்த அவளது பெற்றோர்களுக்காக இங்கேயே வந்து விட்டனராம்.
“இப்ப அம்மை, அப்பா எல்லாரும் போயாச்சு. வயசு ஆயாச்சே?”
தம்ளர், கப்புகளை எடுக்கவந்த சியாமளாவை தடுத்து, தானே எழுந்தவனிடம் “விடு கபிலன்” என்றார் நாராயணன்.
சியாமளா “அப்பா, அண்ணா அவருக்கு காய்ச்சல்னு நினைக்கறேன். சம் ஒன் ஜஸ்ட் செக்”
சுனந்தா கபிலனை பார்த்து “முட்டு சளி இருக்கு. குரைக்க வேற ஷெய்யறான்”
‘எதே,குரைக்கறேனா?!”
கபிலனின் முகம் போன போக்கில் நவீன் “கபிலன், குரைக்கறதுன்னா இருமறது. இது பாலக்காட்டு தமிழ். ராதர், தலையாளம்” என, சியாமளா பக்கென்று சிரித்து வைக்க, அவர்கள் வீட்டில் வைத்து கபிலனால் அவளை முறைக்கக் கூட முடியவில்லை.
நூற்றியொரு டிகிரி ஜுரம் இருக்கவே, நவீன் “இப்ப ஒரு டோஸ், நைட் ஒரு டோஸ். ஆயுய்வேத டாக்டர், அலோபதி டேப்லட் கழிக்குமோ” என்றபடி
மாத்திரைகளைக் தந்தான்.
‘காஃபி தம்ளரை எடுக்க வந்த சியாமளாவைத் தடுத்தபோது, எங்க ரெண்டு பேரோட விரல்களும் ஒரு நானோ செகண்ட் உரசி இருக்குமா? அந்த கால் மாத்திரை கால அளவில் எனக்குக் காய்ச்சல்னு அவளுக்கு எப்படித் தெரிந்தது?’
அறைக்கு வந்த கபிலன் அடங்காத வியப்புடன், மாத்திரை தந்த அயர்வில் உறங்கிப் போனான்.
********************
கிரிக்கெட், டென்னிஸ், வாலிபால், பேஸ்கட் பால் என எந்த விளையாட்டாக இருந்தாலும், விளையாட்டின் தீவிரமும் விரயமாகும் சக்தியும் வீரர்களின் உடல் எடை, உயரம், வயதைப் பொறுத்து மாறுபடும்.
மற்ற விளையாட்டுகளை விட கால்பந்து விளையாட நல்ல உடல்வலிமையும், தாங்கும் திறனும் தேவை. ஒருமணி நேர விளையாட்டில் சராசரியாக செலவழியும் சக்தியும் திறனும் ஏறத்தாழ 700 - 900 கலோரிகள் வரை விரயமாகும்.
அடுத்த மூன்று வாரங்கள் விட்ட சிலபஸிலும், நடப்பு பயிற்சியிலும் முழுதாக ஈடுபட்ட கபிலன், அந்த ஞாயிறன்று காலை கால்பந்து விளையாடச் சென்றான்.
நல்ல வெயில் ஏறி இருக்க, ஒன்றரை மணிநேரம் போல் விளையாடி விட்டு, பூத்துவாலையால் பொங்கும் வியர்வையைத் துடைத்து, தன் பொருட்கள் அடங்கிய பையை பின்னால் மாட்டிக்கொண்டு, எலெக்ட்ரோலைட் எனர்ஜி பானத்தைப் பருகியவாறே, மொபைலில் பேசியபடி தரிப்பிடத்தை நெருங்க, அவனது பைக்கின் மேல் அமர்ந்திருந்தாள் சியாமளா.
சுற்றும் முற்றும் பார்த்த கபிலன், உடன் விளையாடியவர்களில் சிலரும் வெளியில் வருவதைக் கண்டு டென்ஷன் எகிறியதில், நேரே ஒருமைக்குத் தாவி,
“நீயா, இங்க என்ன செய்யுற, முதல்ல கீழ இறங்கு”
பொத்தென்று கீழே குதித்த சியாமளா “ டென்ஷன் பட வேண்டாம், பிபி வரும். பை தி வே, உங்களைப் பார்க்கதான் வெயிட்டிங். ”
“நீ எதுக்கு என்னை பார்க்கணும்?”
“வாஸ்தவத்துல நீங்கதான் என்னைப் பார்க்க வரணும். ம்…, எங்க?”
அவளின் கண் சிமிட்டலிலும் பெருமூச்சிலும் பாவனையிலும் சிரிப்பும் சலிப்பும் கொஞ்சம் கோபமும் வர, கபிலன் பைக்கில் அமர்ந்து சாவியை சொருகி, உதைத்தான்.
“ஒருத்தி வேலை மெனக்கெட்டு ஆறு கிலோ மீட்டர் தூரம் வந்திருக்கேன், எதுவுமே கேட்காம போனா என்ன அர்த்தம்?”
“எனக்கு உன்கிட்ட பேச வேணாம்னு அர்த்தம்”
சீறிய பைக்கின் ஹேண்டில்பாரை பிடித்தவள் “என் அண்ணாக்கு கல்யாணம் ஃபிக்ஸ் ஆகி இருக்கு”
“சரி, அதுக்கு?”
“புதன் கிழமை எங்கேஜ்மென்ட். நீங்க அவஷ்யம் வரணும் கேட்டேளா”
“நீ கூப்பிட்டா நான் வரணுமா?”
“...”
ஆக்ஸிலேட்டரை முறுக்கி “நகரு” எனக் கிளம்பியவனின் பின்னே சியாமளா, உரத்த குரலில்
“மிஸ்டர் கபீஷ், புதன் கிழமை ஈவினிங் அஞ்சு மணிக்கு பாக்கலாம்”

Author: VedhaVishal
Article Title: குறுநகை போதுமடி 3
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.