• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

சக்கவரட்டி / பலாப்பழ ஹல்வா/ பலாப்பழ ஜாம்

siteadmin

Administrator
Staff member
Feb 3, 2026
67
15
8
chennai
சக்கவரட்டி / பலாப்பழ ஹல்வா/ பலாப்பழ ஜாம் :



தேவையான பொருள்கள் :




பொடியாக பலாப்பழ சுளைகள் : 3 கப்

துருவிய வெல்லம் : 1 கப்

நெய் : 1/4 - 1/2 கப்

சுக்கு பொடி : 1 /2 தேக்கரண்டி

ஏலக்காய் பொடி : 1/4 தேக்கரண்டி

தண்ணீர் : தேவையான அளவு



செய்முறை :



முதலில் நறுக்கிய பலாப்பழ சுளைகளை ஒரு குக்கரில் சேர்த்து அதனோடு ஒரு கப் தண்ணீர் சேர்த்து ஒரு 4 - 5 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.



நன்றாக வெந்த பலாப்பழ சுளைகளை , ஒரு மாசேர் (masher ) / மிக்ஸியில் சேர்த்து வைத்து நன்றாக மசித்துக்கொள்ளவும்.



ஒரு அடி கனமான வாணலி/ உருளி எடுத்து அதில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து வெல்லத்தை நன்றாக கரைத்து பின்னர் வடிகட்டியில் வடிகட்டி எடுத்து கொள்ளவும்.



வடிகட்டிய வெல்லம் மற்றும் மசித்து வைத்துள்ள பலாப்பழம் ஆகியவற்றை மீண்டும் வாணலியில் சேர்த்து இடையிடையே நெய் சேர்த்து கை விடாமல் கிளறினால், ஒரு ஸ்டேஜில் இந்த பலாப்பழ வெல்லக்கலவை வாணலியில் ஒட்டாமல் திரண்டு வரும்.



இந்த ஸ்டேஜில், சுக்கு மற்றும் ஏலக்காய் போடி சேர்த்து கலந்து இறக்கினால் சுவையான சக்கவரட்டி தயார்..





குறிப்புகள் :



ட்ரடிஷனலாக, பலாப்பழ சுளைகளையும் உருளியில் நெய் விட்டு மிகவும் பொறுமையாக மெதுவாக வேக வைத்து எடுப்பார்கள். மேலும் பலாப்பழ சுளைகளை நறுக்காமலும் வேக வைக்கலாம். ஆனால், அது வேகுவதற்கு சிறிது நேரம் அதிகமாகும். அதனால் அதனை தவிர்க்கும் பொருட்டு சுளைகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி குக்கரில் வேக வைப்பதனால், அது சீக்கிரமே வெந்துவிடும்.



இதனை அப்படியே ஹல்வா / ஜாம் மாதிரியும் சாப்பிடலாம்.



அல்லது கொழுக்கட்டை மாவின் நடுவில் பூரணம் மாதிரி வைத்து வாழை இலையினுள் வைத்து ஆவியில் வேக வைத்து இலைஅடையாகவும் சாப்பிடலாம்.



அல்லது சிறிது சக்க வரட்டியுடன் தேங்காய் பால் சேர்த்து சக்க பிரதமனாக சாப்பிடலாம்.



எங்க வீட்டில் இட்லி/தோசை/ பிரட்/ சப்பாத்தி என்று எல்லாவற்றுக்கும் சைடு - டிஷ் ஆக சாப்பிடுவோம்..



இதனை நல்ல ஏர் டயிட் (air -tight ) பாக்ஸினில் வைத்து இருந்தால் ஒரு வருடம் வரைக்கும் கூட உபயோகிக்கலாம்..