ஏஐ லோகம்
(எமலோகம் 2.0)
“ஏற்கனவே இருக்கிற புராஜெக்டையே(Project) முடிக்க முடியாம இருக்கேன். இதுல இந்த மேனேஜர் வேற அவனோட வேலையையும் என் தலையிலயே கட்டுறான். புதுசா ஒரு 'ஆப்' டிசைன் பண்ணுனு உயிரை வாங்குறான். முடியாதுன்னு சொன்னா, 'அப்ரைசல்ல' (Appraisal) கை வைச்சிருவேன்னு மிரட்டுறான்” தன் ராயல் என்பீல்டு பைக்கில் அலுவலகத்திற்குப் புலம்பியவாறே சென்று கொண்டிருந்த விஷ்ணு, எதிர்பாராதவிதமாக எதிரே வந்த லாரியின் மீது மோதினான்.
உடனே, எமலோகத்தின் 'பிக்கப் தூதுவர்கள்' (Pickup Doothas), தங்கள் 'சோல்-கிளவுட்'டில் (SoulCloud) இருந்த லேசர் ஒயரை வீசி அவன் உயிரை எடுத்துக்கொண்டு, மின்னல் வேகத்தில் ஏஐ (AI) லோகத்திற்குச் சென்றனர்.
சொர்க்கத்தின் முகப்பில் இருந்த 'செல்ஃபி ஸ்பாட்டில்' (SelfieSpot), புதிதாக உள்ளே நுழையவிருந்த ஆவிகள் புகைப்படங்களும், ரீல்ஸ்களும் (Reels) எடுத்துக் கொண்டிருந்தன. அழகான 'லே-அவுட்கள்' (Layouts) மணிக்கொரு முறை மாறிக் கொண்டேயிருக்க, விஷ்ணு அதை 'ஆ'வென வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
“என்ன விஷ்ணு... ஏதோ பார்க்காததைப் பார்க்கிற மாதிரி முழிச்சுட்டு நிக்கிற?” என்று கேட்டபடி வந்தவரின் கழுத்தில் 'சித்ரகுப்தன் (Head of SoulData)' என்ற அடையாள அட்டை (ID Card) தொங்கியது.
கண்களில் ஆவியை ஸ்கேன் செய்து அதன் 'ஹிஸ்டரி'யைக் காட்டும் ஸ்மார்ட் கிளாஸ் (Smart Glass), நெற்றியில் அவரது மூளையை மெயின் சிஸ்டத்தோடு இணைக்கும் சிப்(chip), காதில் ஏர்பாட்ஸ் (AirPods) எனச் செம ஸ்டைலாக இருந்தார். வெள்ளை நிற டி-ஷர்ட், கறுப்பு ஜீன்ஸ், அதன் மேல் ஒரு 'டெக்-கோட்' (TechCoat) அணிந்து அவர் நிற்க, அதிர்ச்சியில் விஷ்ணு தன் விழிகளைப் பெரிதாக விரித்தான்.
நா...ன் எங்...க இருக்...கேன்?” பயத்தில் விஷ்ணுவின் வார்த்தைகள் தந்தியடிக்க, “நீ செத்துப்போய் ஒரு மணி நேரம் ஆச்சு!” என்று கேலியாய்ச் சிரித்தார் சித்திரகுப்தன்.
திடீரென ஒரே நிசப்தம்... அந்த நிசப்தத்தைக் கலைக்கும் விதமாக, 'தட்... தட்...' என்ற பூட்ஸ் சத்தம் ஒலித்தது. ஆறடி உயரம், ஆஜானுபாகுவான தோற்றம், மீசையில்லாத கிளீன் ஷேவ் முகம் என மிரட்டலாக இருந்தார் அவர். தலையில் ஒரு 'ஹை-டெக்' (Hi-tech) கிரீடம், கையில் ஒரு 'ஹாலோகிராம் டேப்லெட்' (Hologram Tablet), காதில் ப்ளூடூத், கறுப்பு நிற லெதர் ஜாக்கெட், அதன் மேலே ஒரு மெட்டாலிக் கோட், இடுப்பில் கறுப்பு நிற 'லேசர் பாசக்கயிறு' சகிதமாக அங்கே வந்து நின்றார் எம்டன் (டெக் எமன்).
“சித்து… என்னோட ‘ரோபோ-எருமை’ ஹேங் ஆகிடுச்சு. அதை என்னன்னு பாரு” தன் கம்பீரக்குரலில் கட்டளையிட்ட எம்டன், அங்கே நின்றிருந்த விஷ்ணுவை ஏற இறங்கப் பார்த்தபின்,
“சித்து… இந்த ஆவி ஏதோ 'விபிஎன்' (VPN) போட்டு மறைஞ்சு நிக்குது போல. என் பாசக்கயிறு 'சிக்னல் நாட் பவுண்ட்' (Signal Not Found) காமிக்குது” என்று வினவினார்.
சித்ரகுப்தன் தன் நெற்றியிலிருந்த சிப்பைத் தட்டியதும், காற்றில் தோன்றிய திரையில் விரலால் தொட்டு, அந்த ஆளைப் பற்றிய தகவல்களை தன் டேட்டாபேஸிலிருந்து எடுத்துப் பார்த்தார்.
"எம்டன் ஜி! அவன் ஒரு 'ஹேக்கர்'. நம்ம சிஸ்டத்தையே ஹேக் பண்ணி அவனோட ஆயுள் காலத்தை 'எடிட்' (Edit) பண்ணிட்டான்" என்று பதறியபடி சொன்னவர்,
எம்டனுடன் பேசிக்கொண்டிருந்த அந்தப் பிக்கப் தூதனுடன் கான் காலில் (ConCall) இணைந்து, 'நான் அவனோட வை-ஃபையை கட் பண்றேன், தானா வெளிய வருவான், அப்போ பிடிச்சுக்கோங்க' என்று கட்டளையிட்டார்.
"சபாஷ் சித்து! உனக்கு இந்த வருஷம் அப்ரைசல்ல 'ஏ+' (A+) போட்டு, ஒரு புது 'கிராபிக்ஸ் கார்டு' தரச் சொல்றேன்” என்ற எம்டன் அந்த எமலோகமே அதிரும்படி சிரித்தார்.
“அதுசரி… இந்த ‘ப்ரோ’கிட்ட எல்லாத் தகவலும் சொல்லிட்டியா?” அவர் ஒற்றைப் புருவத்தைத் தூக்கியபடி வினவியதும், விஷ்ணுவின் பக்கம் திரும்பிய சித்ரகுப்தன், “நீ பெரிய சாப்ட்வேர் இன்ஜினியர்னு கேள்விப்பட்டேன். ஒருத்தனோட ஆவியைப் பார்த்ததுமே அவனைச் சொர்க்கத்துக்கு அனுப்புறதா? இல்லை நரகத்துக்கு அனுப்புறதா?ன்னு ஆட்டோமேட்டிக்கா வேலை செய்ற மாதிரி ஒரு ‘ஏஐ சாப்ட்வேர்’ வேணும். அதை கிரியேட் பண்றதுக்குத் தான் உன்னை சாகடிச்சு இங்க வர வச்சோம்” என்று மூச்சுவிடாமல் பேசி முடித்தார்.
“அடப்பாவிகளா...” விஷ்ணு திடுக்கிட்டுத் தன் வாயைப் பொத்திக் கொண்டவன், பின் சமாளித்து, "சார்! ஒரு ஏஐ சாப்ட்வேர் பண்றது சாதாரண விஷயம் இல்ல. அதுக்கு 'டேட்டா செட்' (Data Set) வேணும், 'கிளவுட் ஸ்டோரேஜ்' வேணும். முக்கியமா எனக்கு ஒரு மூணு மாசம் டைம் வேணும்" என்று கெத்து காட்டினான்.
"மூணு மாசமா? சித்து... இவனை உடனே அந்த 'எண்ணெய் சட்டி' குகைக்குள்ள தள்ளி ஒரு 'டெமோ' காட்டு. மூணு நிமிஷத்துல சாப்ட்வேர் ரெடி ஆகிடும்” என்ற எம்டனின் சிரிப்பு நரகத்தின் வெப்பத்தை விடக் கூடுதலாக இருந்தது.
“நீ இந்த வேலையைச் செஞ்சு முடிச்சா... உன்னை மறுபடியும் பூலோகத்துக்கே அனுப்பிடுவோம். நீ எந்த நாள்ல இங்க வந்தியோ, அதே நாள்ல உன்னைக் கொண்டு போய் விட்டுடுவோம். இல்லன்னா, நீ இங்கேயே இருக்க வேண்டியதுதான்” என்று சித்ரகுப்தன் மிரட்டியதும்,
“ஐயோ சித்து சார்... அப்படிலாம் பண்ணிடாதீங்க. அட்லீஸ்ட் எனக்கு ஒரு சிஸ்டம், வை-ஃபை கனெக்ஷனோட குடுங்க. நான் உடனே ரெடி பண்ணித் தரேன்” என்று பயத்துடன் விஷ்ணு கூறியதும், அவனுக்கு ஒரு 'மாங்கோ லேப்டாப்' தரப்பட்டது.
“சார்… வைஃபை” என்று விஷ்ணு இழுத்துச் சொல்ல, 5 பெண் ஆவிகள் அவன் முன்னே வந்து நின்றன.
“என்ன சார் இது?” அவன் கேள்வியாய்ப் பார்க்க, “இது கோமதி, காயத்ரி, கிரிஜா, கீதா, கௌரி… எங்களோட 5G(5Ghost) ஆவிகள். இவங்க தான் சிவலோகத்துல இருந்து ஃபாஸ்ட்டா நெட்வொர்க்கை இங்க கொண்டு வருவாங்க” என்று சித்ரகுப்தன் விளக்கியதும், அவனோ ஆவிகளை வேடிக்கை பார்த்தபடி இருந்தான்.
இதைக் கவனித்த சித்ரகுப்தன் “அவங்களைப் பார்த்து ஜொள்ளு விட்டது போதும். ஒழுங்கா பூலோகம் போய்ச் சேரணுமா? வேணாமா? என்று அதட்டினார். விஷ்ணு அந்த மாங்கோ லேப்டாப்பைத் திறந்து, வைஃபை சிக்னல் கிடைத்ததும் 'கோடிங்' (Coding) செய்ய ஆரம்பித்தான்.
சில மணி நேரங்களிலேயே ஒரு புதிய சாப்ட்வேரை வடிவமைத்து முடித்தவன், “சார்... நீங்க கேட்ட 'டிஜிட்டல் தர்மா' சாப்ட்வேர் ரெடி. வாங்க, ஒரு லைவ் டெமோ (Demo) பார்க்கலாம்!” எனச் சித்திரகுப்தனையும் எம்டனையும் உற்சாகத்தோடு அழைத்தான்.
"எம்டன் ஜி, முதல் ஆளே ஒரு செம பார்ட்டி. இவன் பூமியில இருக்கும்போது ஏகப்பட்ட பொய் சொல்லிருக்கான், மத்தவங்ககிட்ட காசு வாங்கிட்டு ஏமாத்திருக்கான். நரகத்துல அந்த 'எண்ணெய் சட்டி'யை ரெடி பண்ணச் சொல்லவா?" சித்ரகுப்தன் ஆர்வத்துடன் சொன்னதும்,
"வெயிட் பண்ணுங்க ஜி… நம்ம ஏஐ என்ன சொல்லுதுன்னு பார்ப்போம்" விஷ்ணு இயக்கியதும், சாப்ட்வேர் அந்த ஆவியை ஸ்கேன் செய்தது.
திடீரென திரையில் பச்சை விளக்குகள் ஒளிர, "RESULT: HEAVEN (சொர்க்கம்). BONUS: 5-STAR ROOM WITH AC!" என்று மெசேஜ் வந்தது.
"என்னது? இவ்வளவு பாவம் பண்ணவனுக்குச் சொர்க்கமா? உன் சாப்ட்வேர்ல ஏதோ 'பக்' (Bug) இருக்குனு நினைக்கிறேன்" என்று சித்ரகுப்தன் கோபமாகக் கத்தியதும்,
“இருங்க சார், கோடிங்கை செக் பண்றேன்…” விஷ்ணு அதைக் கண்டறிந்து சரிசெய்தவன், “ஒரு சின்ன லாஜிக் மிஸ்டேக். இவன் ஏமாத்தின காசுல பாதிக் காசை கோவிலுக்குத் தானம் பண்ற மாதிரி ஒரு 'ஃபேக் ட்ரான்ஸாக்ஷன்' காட்டியிருக்கான். நம்ம ஏஐ அதை 'புண்ணியம்'னு தப்பா கணக்கு போட்டுடுச்சு” என்றான் பெருமூச்சு விட்டபடி.
"இதோ பாருங்க… இப்போ அடுத்த ஆவி வருது. இவர் ஒரு பெரிய வள்ளல், நிறைய ஏழைகளுக்கு உதவி செஞ்சவர்" என்று சித்ரகுப்தன் சொன்னதும், சாப்ட்வேர் ஸ்கேன் செய்தது.
உடனே சிவப்பு விளக்கு ஒளிர்ந்திட, "RESULT: HELL (நரகம்). PUNISHMENT: 100 YEARS NO WI-FI!" என்று அறிவிப்பு தெரிந்ததும்,
"யோவ் இன்ஜினியர்… நல்லவன் நரகத்துக்குப் போறான், கெட்டவன் சொர்க்கத்துக்குப் போறான். இதுக்கு ஏன் புதுசா ஒரு ஏஐ சாப்ட்வேர்? பல காலங்களா மேனுவலா நாங்களே சரியா பண்ணிட்டு இருக்கோம். ஆனா இது உருப்படியா வேலை பண்ண மாட்டேங்குது” எம்டன் ஆதங்கத்தில் கர்ஜித்தார்.
"எம்டன் ஜி… இது 'பக்' இல்ல, 'டெக்னிக்கல் எர்ரர்'. இவர் ஒருமுறை பேஸ்புக்ல ஒரு அழகான பொண்ணு போட்டோவுக்கு, 'வாவ்' எமோஜி போட்டிருக்காரு. நம்ம ஏஐ அதை 'காமக் குரோதம்'னு நினைச்சு அவருக்கு நரகத்தை அல்லோகேட் பண்ணிடுச்சு” பதில் தந்தவனை தீயாய்ப் பார்த்தனர் இருவரும்.
அடுத்த ஆவி வந்ததும், “இவன் ஸ்பாய்லர் சுப்புன்னு ஒரு யூடியூப்சேனல் வச்சிருக்கான். தியேட்டர்ல படம் ரிலீஸானதும் முதல் நாள் முதல் ஷோ பார்த்திட்டு வந்துட்டு, அந்தப் படத்தைப் பத்தி கேவலமா பேசி வீடியோ போடுவான். அது மட்டுமில்லாம நடிகர்-நடிகைங்க கள்ளத்தொடர்புல இருக்காங்க, செத்துட்டாங்கனு பொய் தகவலா போட்டு பணம் சம்பாதிக்கிறவன்” பூமியில் அவனைத் தெரிந்தவன் என்பதால் எரிச்சலோடு சொன்ன விஷ்ணு,
“எம்டன்ஜி… இவனை மிருகங்களை விட்டுக் கடிக்க விடுற ‘அந்தகூபம்’ தண்டனைக்கு அனுப்புங்க. ஒரு படத்தையும் நிம்மதியா போய்ப் பார்க்க முடியல. முழு கதையையும் சொல்லி அந்த பொழுதுபோக்கை அனுபவிக்க விடாமப் பண்றான்” ஆவேசமாகச் சீறினான் விஷ்ணு.
எம்டன் ஒரு நியாயப் புன்னகையை வீசியவர், “அப்படியே பண்ணிடலாம்” என்றார்.
இவன்தான் அடுத்து… “கமெண்ட் கார்த்தி… ஃபேஸ்புக்ல பொண்ணுங்க போட்டோவுக்குப் போய் அசிங்க அசிங்கமா கமெண்ட் பண்றது, அவங்க இன்பாக்ஸ்ல போய் 18+ வீடியோ அனுப்புறது, தன்னோட அரசியல் தலைவனை எதிர்க்குறவங்களைப் போஸ்ட் போட்டு கேவலமா திட்டுறது. இதையேதான் வேலையாவே பார்த்திட்டு இருக்கான். இவனை ஊசியிலேயே குத்த வைக்கிற ‘சூசிமுகம்’ தண்டனை குடுங்க” வந்த வேலையை மறந்து எமலோகப் பணியாளராகவே மாறியிருந்தான் விஷ்ணு.
“அடேங்கப்பா… இன்ஜினியர் நல்லா வேலை செய்றார். பேசாம இவரை நம்ம எமலோகத்துலயே வச்சுக்கலாம் எம்டன் ஜி” என்று சித்ரகுப்தன் நக்கலாகக் கூறியதும், ‘வாயை மூடிட்டு கம்முனு இருடா கொரங்கு. உனக்கு வாய்ல தான் சனி’ என்று மனதிற்குள்ளேயே தன்னைத் திட்டிக்கொண்டவன், அவர்களைப் பார்த்துச் சமாளிக்கும் விதமாக இளித்து வைத்தான்.
“அது சரி… இவன் அடுத்து… சரியான பிளேபாய். வாரத்துக்கு ஒரு பொண்ணுகூட சாட்டிங், மீட்டிங், டேட்டிங்னு பொண்ணுங்களை ஏமாத்துறவன். இவனுக்கு என்ன மாதிரியான தண்டனை தரலாம் சொல்லுங்க” பேச்சை மாற்றினான் விஷ்ணு.
“தாயாய் மதிக்க வேண்டிய பொண்ணுங்களை மோசம் பண்றவனுக்கு, “கிருமிபோஜனம்” தண்டனைதான்” எம்டன் பெருமையாய்ச் சொன்னதும்,
“இவ்வளவு பெரிய தண்டனை தேவையா?!” தயக்கமாய் உரைத்தான் விஷ்ணு.
“எதுக்கு அவனுக்கு வக்காலத்து வாங்குற. நீயும் அவனை மாதிரிதானா…” எம்டன் சந்தேகமாய் அவனைப் பார்க்க,
“அய்யோ நான் என் ரம்யாவைத் தவிர வேற யாரையும் மனசுல கூட நினைச்சதில்ல…” என்றவனை யோசனையுடன் பார்த்தனர்.
“அது ஸ்கூல்ல ஒரு பொண்ணு காலேஜ்ல ஒரு பொண்ணு லவ் பண்ணியிருக்கேன் அவ்ளோதான்” விஷ்ணு வேகமாய்க் குறுக்கிட்டான்.
இருவரும் அவனை அழுத்தமாய்ப் பார்த்து கேலியாய் இதழ் வளைத்திட, ‘ஐயையோ இவங்ககிட்ட வந்து வசமா மாட்டிக்கிட்டேனே?!’ என மனதிற்குள் புலம்பியவன்,
“அது வந்து… என்கூட வேலை பார்க்கிற ராஜி அக்காவை எனக்குப் பிடிக்கும், எங்க பக்கத்து வீட்டு ராதா அக்காவை சைட் அடிப்பேன்” உண்மைகளை ஒவ்வொன்றாய் உளறினான்.
“சைட் மட்டுந்தான் அடிச்சிருக்கியா?” சித்ரகுப்தன் அர்த்தமாய்ப் புன்னகைக்க,
“சைட்னா சைட் மட்டுமா. அவங்க அழகா இருக்காங்கனு ‘அப்படி இப்படி’ பார்க்கிறதுதான். ஆமா... நீங்க எதுக்கு என்னை அனாலிசிஸ் (Analysis) பண்ணிட்டு இருக்கீங்க. வாங்க… அடுத்த டார்க்கெட்டை ஸ்கேன் பண்ணலாம்” அவன் நடுக்கத்தோடு கூறியதும், இருவரும் கிண்டலாகச் சிரித்தனர்.
அடுத்த ஆவி வந்ததும், “இந்தப்பொம்பளை கட்டின புருஷனையே கொலை பண்ணியிருக்கு. இதுக்கு ‘அக்னிகுண்டம்’ தண்டனைதான் கரெக்ட்” என்ற விஷ்ணு அவரை ஏளனமாகப் பார்க்க,
கோபத்தில் அவனை ஓங்கி மிதித்தவர், “கட்டின புருஷன் குடிக்கு அடிமையாகி, தினமும் அடிச்சப்போக்கூட பொறுத்துக்கிட்டவங்க, தன்னோட பத்து வயசு குழந்தைகிட்ட அந்த மிருகம் தவறா நடந்துக்க முயற்சி செஞ்சப்போ, தன் பிள்ளையைக் காப்பாத்த வேற வழியில்லாம அவனைக்கொலை பண்ணிட்டு, மனம் தாங்காம தற்கொலை பண்ணிக்கிட்ட 'தெய்வம்' இவங்க. ஏன் டா... பொண்ணுங்களை எப்பவும் தப்பு தப்பாவே பார்க்குற நீ நல்லவன். ஆனா, குழந்தையைக் காப்பாத்தப் புருஷனைக் கொன்னா அவங்க கெட்டவளா? எவ்வளவு இழிவா பேசுற?!” என்று எம்டன் தர்மனாக மாறி நீதியைப் பேச, விஷ்ணு அரண்டுபோனான்.
நம்மளை யார் கவனிக்கிறாங்கன்னு தெரிஞ்சே மத்தவங்களுக்குத் தப்பு பண்ற யாரும், இங்க கிடைக்கிற தண்டனைகள்ல இருந்து தப்பிக்க முடியாது! அவர் உயிரைப் பாசக்கயித்துல எடுக்கிற எமதர்மராஜா! இங்க ஒரே நியாயம், ஒரே தர்மம்தான் எல்லாருக்கும்!” என எம்டனின் மனம் குளிரும்படிப் பேசினார் சித்திரகுப்தன்
“மன்னிச்சிருங்க எம்டன் ஜி… சித்து ஜி… நான் உங்க ரோபோ எருமையோட சாப்ட்வேரையும் அப்டேட் பண்ணிட்டேன். இனிமே நீங்க அதிலேயே எங்க வேணும்னாலும் போகலாம்” என்றவன், “மனுஷன் கண்டுபிடிச்சதுதான் டெக்னாலஜி. நம்மள மாதிரியே அது துல்லியமா வேலை செய்யாது. தீர்ப்புநாள் கணக்குத் தீர்க்குற வேலையை வழக்கம்போல நீங்களே செய்யலாம்” விஷ்ணு மனதார மன்னிப்பு வேண்டியவன், “அப்போ நான் கிளம்புறேன். என்னை பூலோகத்துக்கு அனுப்பிவிடுங்க” என்று பணிவுடன் கேட்டான்.
எம்டனும் சித்ரகுப்தனும் ஒருவரையொருவர் பார்த்து அர்த்தமாய் சிரித்துக் கொண்டவர்கள், “நீ இங்க வந்தபிறகு இப்போ பத்து வருஷக் கணக்கு ஆகிடுச்சு பூமியில. அதோட உன்னோட வாழ்நாள் கணக்கும் முடிஞ்சு போச்சு. அதனால நீ இனிமே போக முடியாது” என்றனர்.
எம்டன் விஷ்ணுவின் பாவக் கணக்குகளைப் பார்வையிடத் தன் ‘சோல் ஸ்கேனரை’ ஆன் செய்ததும், “எனக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகலையே. எந்த சந்தோஷத்தையும் பார்க்காமயே போயிட்டேனே. இங்கிருந்து தப்பிக்க வழியே இல்லையா? என்னை யாராச்சும் காப்பாத்துங்களேன்?!” என்று கதறியவாறு ஏஐ லோகத்தின் பிரம்மாண்டமான கதவுகளை நோக்கி அலறி அடித்து ஓடினான்.
"திடுக்கிட்டுக் கண் விழித்த விஷ்ணு, வேகமாய் எழுந்து அமர்ந்தான். அவன் உடல் முழுவதும் வேர்த்து விறுவிறுத்துப் போயிருந்தது.
“ஐயோ… எல்லாம் கனவா? நான் பயந்தே போயிட்டேன். இப்படிலாம் கூடக் கனவு வருமா?! இருந்தாலும் இன்ட்ரெஸ்டிங் கா இருந்துச்சு” என்று வாய்விட்டே புலம்பியவனின் மூளைக்குள் சட்டென்று ஒரு ‘பல்ப்’ எரிய, “அடடா நம்ம மேனேஜர் கேட்ட புது ‘கேம்’முக்கு கண்டென்ட், தீம் எல்லாம் கிடைச்சிடுச்சு. கேம் பேரு… “ஏஐ லோகம் 1.0” என்று உற்சாகமாய்க் கத்தியபடி மீண்டும் மெத்தையில் விழுந்தான்.
முற்றும்

Author: siteadmin
Article Title: 16. ஏஐ லோகம் (எமலோகம் 2.0) - அபிநயஶ்ரீ
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.