மூன்று பேரும் முக்கிய திருடனும்
ஜம்பு, நைனா, சப்பை மூவரும் பெரிய திருடர்களாக ஆவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் காக்காபாளையத்தைச் சேர்ந்த இந்திய நாட்டுப் பிரஜைகள்.
சப்பை ஒட்டியும் ஒட்டாமல் பெரிய அளவில் திருடர்களுக்கென்றே உள்ள குறுக்குவாக்கில் கோடு போட்ட பனியனை போட்டுக் கொண்டு எலும்பும் தோலுமான உருவத்தை கொண்டவன்.
"டேய்! போனவன் இன்னும் வரல. எவ்வளவு நேரம்டா பண்ணுவான் இவன்" என்று நைனாவிடம் சப்பையைக் கடிந்து கொண்டான் ஜம்பு.
ஜம்பு நல்ல திடகாத்திரமான பருத்த உடலையும் நல்ல உயரத்தையும் கொண்ட சாப்பாட்டு ராமன். ஏறக்குறைய மூவரில் தலைவனும் அவனே.
சப்பை நாளை செய்யவிருக்கும் திருட்டுக்காக மூன்று பேரும் செல்ல பைக்கை வாங்கி வருவதற்காக திருத்தம் திருடிக் கொண்டு வருவதற்காகச் சென்று உள்ளான்.
சொல்லப்போனால் சப்பை செய்யும் முதல் திருட்டு அது.
இந்த கூட்டத்திலேயே திருட்டு என்று செய்தது ஜம்பு மாத்திரமே. பக்கத்து ஊருக்குச் சென்று வாடகைக்கு சைக்கிளை வாங்கிக் கொண்டு வந்து அதை திருப்பி விடாமல் திருடிக் கொண்டு வந்ததாக பீத்திக் கொள்வதும், மொட்டை மாடியில் காய வைத்த வத்தல்களையும் கொடியில் காயப் போட்ட பழைய துணிகளையும் நிறைய முறை திருடி உள்ளான்.
மேலும் தினசரி வாடிக்கையாக சுப்பு ஐயா கடையில் ஒரு ரூபாயைக் கொடுத்துவிட்டு ஐந்து பாக்குகளுக்கு பதில் கடைக்காரரின் அரைகுறைப் பார்வையால் ஏழு பாக்குகளாக எடுத்துக் கொண்டு ஏதோ பர்வத மலையை சிவனுக்கே தெரியாமல் தூக்கி எடுத்து வந்தவன் போல் நைனாவிடவும் சப்பையிடமும் பீற்றிக் கொள்வான். "பார்த்தீங்களாடா இப்ப 25 காசு நமக்கு புராஃபிட் இதெல்லாம் தொழில் சீக்ரெட்" என்று அரைகுறை ஆங்கிலத்தில் அடுக்குமொழியில் கூறுவான். காரணம் மூவரில் அவனே ஒன்றாம் வகுப்பை முழுவதுமாக படித்து முடித்தவன். அதனாலயே அவனுக்கு அந்தக் கூட்டத்தில் தனி மரியாதை மற்றும் தல என்ற பதவியும்.
"இல்ல தல நம்ம சப்ப எது பண்ணாலும் ஷார்ப்பா தான் பண்ணுவான். நீ வேணா பாரு சும்மா ராக்கெட்டு கணக்குல ஒரு வண்டிய லாவின்னு வரப்போறான்" என்று கூற ஜம்பு நைனாவை முறைத்தான். தன் முன்னால் யாரையும் புகழ்தல் ஜம்புவுக்கு அறவே பிடிக்காது.
இவர்களில் நைனா மட்டுமே ஓரளவு புத்திசாலி.திருடர்களுக்கே இருக்க கூடாத ஒரு பழக்கம் அவனை தொக்கி கொண்டு உள்ளது. அது என்னவென்றால் எந்த சூழ்நிலையிலும் அவனுக்குப் பொய் பேசவே தெரியாது.
போன மாதம் இப்படித்தான் நைனா கூட்டணி இல்லாமல் தனியாவாக இறங்கிய திருட்டு முயற்சியில் வெளிஊருக்குச் சென்ற ஒரு வித்துவான் வீட்டில் நுழைந்து கைகளுக்கு கிடைத்த சிறுசிறு பொருட்களை எடுத்துக்கொண்டு பின்பு அவர் இசைத்தட்டுகள் சிலவற்றை கேட்டு விட்டுச் செல்லலாம் என்று ஆசுவசமாக கேட்டுவிட்டு "உங்கள் பாடல்கள் நிச்சயமாக ரசிக்கும்படி இல்லை. இவ்வாறு பாடுவதற்கு பதில் எங்களுடன் இணைந்து திருட வந்துவிடலாம்" என்று கிண்டலாக எழுதி வைத்துவிட்டு கிளம்பும்போது மாட்டிக்கொண்டான்.
அவன் திருடிய தீப்பெட்டி, சுருட்டு, ஒரு கவுளி வெற்றிலை, காய்ந்த சுண்ணாம்பு போன்ற பொருள்களைப் பார்த்துவிட்டு அக்கம் பக்கத்தினரே இவன் ஏதோ பஞ்சத்தில் அடிபட்ட திருடன் என்று விட்டுவிடும் தருவாயில் தான் அந்த இசை வித்துவானைப் பற்றி எழுதிய கடிதத்தை அங்கு உள்ளவர்களிடம் கொடுக்க பின்பு அவனை விடிய விடிய ஒரு அடி கூட அடிக்காமல் தொண்டையில் காற்று மட்டுமே வரும் வரையில் பாடச் சொல்லியே அனுப்பியதுதான் மிகப்பெரிய கொடுமை. அந்த வேதனையெல்லாம் திருடனாய் இருந்தால் மட்டும் தான் புரியும்.
இப்போது மொபட் வண்டியை திருடிக் கொண்டு வருவதற்கு சப்பை போன இடம் புதிய வாகனங்களை விற்கும் விற்பனைக் கூடத்திற்கு.
ஆம். அவனுடைய யோசனை எப்படி இருந்தது என்றால் "தூக்குறதுதான் தூக்குறோம் பழைய பைக்கா ஏன் தூக்கணும். இப்ப இருக்க கஞ்ச பிசினாரிங்க எவன் ஒழுக்கமா வண்டிய சர்வீஸ் பண்றான். மொபட் வண்டிலாம் சர்வீஸ் பண்ணல்லனா மைலேஜ்யே கிடைக்காதாமே அது மட்டும் இல்லாம இன்ஜின் ஆயில் மாத்தி வச்சிருக்கானுங்களோ இல்லையோ. எவ்வளவு கிலோமீட்டர் ஓட்டி வண்டிய கெடுத்து வச்சிருக்கானுங்கனு யாருக்கு தெரியும். அப்பால கலர் கூட கொஞ்சம் மங்கி தான் போயிருக்கும்" என்று திருடும் பைக்கின் மீது கொண்ட அக்கறையைப் போக்க புதிய மொபட் ஸ்கூட்டரை எடுக்க விற்பனையகத்துக் கே வந்து விட்டான் சப்பை.
"ஆமா! இது எத்தினி மைலேஜ் கொடுக்கும்" என்று சப்பைக் கேட்க,
"சார் இது 50 லிருந்து 60 கிலோமீட்டர் வரைக்கும் நிச்சயமா கொடுக்கும்" என்று கடையின் மேலாளர் கூறினார்.
"ஓ...சரி அண்ணாத்த இன்ஜின் ஆயில் எல்லாம் மாத்தி வச்சிருக்கியா? பஞ்சர் கிஞ்சர்லாம் ஒட்டி வச்சுருக்கா?"
"சார்! இது புது மொபட் நீங்க தான் முதல்ல ஓட்ட போறீங்க" என்று குழப்பமான கேள்விகளால் வியப்பாக பதில் அளித்தார் மேலாளர்.
"வண்டிலாம் ஓகே. ஆனா கலர் தான் சுருட்டை குடிச்சிட்டு தட்டுறப் புகைக் கணக்கா இருக்கே!"
"சார் இது ஆஷ் கலர். உங்களுக்கு என்ன கலர் வேணும்னாலும் ரெண்டு நாள்ல நாங்க மெயின் பிரான்ஜில் இருந்து வாங்கி கொடுத்துடுவோம்"
"அதெல்லாம் வேணாம். எனக்கு இன்னைக்கு இப்பவே வேணும். அரைமணி நேரத்துல நைனாவும் ஜம்புவும் ஸ்பாட்ல வண்டிய கொண்டு போய் நிறுத்தலனா என்ன கொன்னே பூடுவாங்க" என்று மெலிந்த குரலில் கூற,
"வாட் சார்!"
"ஒன்னும் இல்லபா ஓட்டி பாக்கலாமா?"
"இந்தாங்க சார் கீ" என்று சாவியை நீட்டினார் மேலாளர்.
"இது என்னாத்துக்கு ரெண்டு வயர கடிச்சு துப்பிட்டு கம்பியை ஜாயின் பண்ணா ஓட போது" என்று திருடும் போது செய்ய வேண்டிய வேலையைச் சப்பைக் கூற,
"என்ன சார் சொல்றீங்க புரியல"
"அது தொழில் ரகசியம்பா அத்த விடு இத்தக் குடு" என்று சாவியை வாங்கி வண்டியைச் செலுத்த ஆயத்தமானான்.
"சோக்கா இருக்குப்பா வண்டி" என்று கூறிவிட்டு மெல்ல விற்பனையகத்துக்கு வெளியே உள்ள சாலையில் மொபட்டை செலுத்தினான். அவன் மனதிற்குள் ஏதோ ஒரு சாதனை செய்தது போல் ஒரு மகிழ்ச்சி.இனம்புரியாத ஒரு குதூகலம்.
"இன்னைக்கு வண்டிய எடுத்தினு போய் ஹீரோ கணக்கா நிறுத்த போறேன் நைனாவும் ஜம்பும் என்னைத் தூக்கிக் கொண்டாடப் போறானுங்க" என்று கூறிய சப்பை அடுத்த ஐந்து நிமிடத்தில் அந்த மேலாளரால் பிடிபட்டான்.
சப்பைக்கு எவ்வாறு தெரியும் புது வாகனங்களில் உள்ள பெட்ரோல் எரிபொருள் அந்த வீதியைக் கூட தாண்டவே முடியாத அளவுக்குத்தான் இருக்கும் என்று.
சப்பயைப் பிடித்து அடித்தது மட்டுமில்லாமல் அங்கு உள்ள அனைத்து வாகனங்களையும் துடைக்கச் சொல்லி வேலையாளாகவே மாற்றிக் கொண்டனர்.
மறுபுறம் "இன்னுமாடா சப்பை வரான். நாம நாளைக்கு வெட்டப் போற ஆடு ஊருலயே பெரிய இடம் தெரியுமுல்ல" என்று திருடர்கள் ரகசியக் குறியில் நைனாவிடம் கூறினான் ஜம்பு.
'ஆடு' என்றால் யாரிடம் திருட்டை நடத்தப் போகிறோமோ அவர், 'செல்லம்' என்பதற்கு 'கத்தி' மற்றும் சாவி என்பதற்கு பென்சில் என்றும் அவர்கள் பாஷையில் பல சொற்களுக்கு பல பொருள்கள் உண்டு.
அந்தக் கடையை ஆறாவது முறையாக ஒரே நாளில் துடைத்துக் கொண்டிருந்த வீங்கிய முகம் சப்பைதான் என்று அடையாளம் காண்பதற்குள் போதும்போதும் என்றாகிவிட்டது.
அங்கிருந்து சப்பையை ஒரு வழியாகத் தப்பிக்க வைக்க பல முயற்சிகள் செய்து வழக்கம்போல தோற்றுப் போனான் நைனா.
கடையை மூடி ஒரு வழியாக கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிய சப்பை குப்பையைப் போல விழுந்ததான். அவனை அள்ளி எடுத்துக்கொண்டு பொறுமையாக தங்கள் பட்டறைக்கு கூட்டிச் சென்றான் நைனா.
"நீ எல்லாம் திருடன்னு சொல்லவே கேவலமா இருக்கு. இதுல என்னோட கூட்டாளின்னு வெளிய சொல்லிக்கிறியே அசிங்கமா இல்ல" என்று சப்பையைக் கடிந்து கொண்டு பின் சப்பையை 'சார்ப்பான ஆளு' என்று புகழ்ந்த நைனாவையும் வசைபாடிவிட்டு ஜம்பு அடுத்த நாள் திட்டத்தைக் கூறினான்.
நாளைக்கு இந்த ஊரே ஸ்தம்பிச்சு போற மாதிரி ஒரு பெரிய பங்ஷனை பண்ணப்போறோம் என்று நாளை நடக்கும் திருட்டைப் பற்றி அவன் பாஷையில் கூறினான் ஜம்பு.
"அப்படியா தல யார் அந்த ஆடு" என்று நைனா கேட்க,
"நம்ம ஊரு பண்ணையக்காரர், தர்மகர்த்தா கேசவரய்யா தான். ஊர்க்கோயில் நகையிலிருந்து அவனுடைய அரைஞாண் கயிறு வரைக்கும் ஒன்னையும் விடக்கூடாது என்ன புரிஞ்சுதா?" என்று நைனாவிடமும் சப்பையிடமும் கேட்டான்.இருவரும் தலையைச் சரி என்ற நோக்கில் வேகமாக ஆட்டினர்.
பக்கத்து ஊரில் வாடைகைக்கு ஒரு பழைய மிதிவண்டியை வாங்கிக் கொண்டு மூன்று பேரும் கிளம்பினர்.
சப்பைக்கு சப்பையான வேலை மட்டுமே கொடுக்கப்பட்டது. முந்தைய நாள் வாங்கிய அடி அப்படி. திருடிய நகைகளை வீட்டை விட்டு வெளியே போட்ட பின்பு அதை அவர்கள் பட்டறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் அவ்வளவுதான். பட்டறை என்றால் அவர்கள் மூவரும் தங்கும் இடம் என்பது குறியீடு பாஷையாம்.
மற்ற இருவரும் பின்புறம் உள்ள வாசலில் செல்லும் வழியிலேயே திரும்ப வேண்டும். ஒருவேளை மாட்டினாலும் கையில் ஒன்றும் இல்லாததால் வெறும் அடி உதையோடு போய்விடும். பின்பு இரண்டு நாட்கள் கழித்து அந்த நகைகளைத் தாங்கள்தான் திருடினோம் என காவல் நிலையத்தில் கொடுத்து ஆஜராக வேண்டும்.
ஆமாம் அதுதான் அவர்கள் திட்டமே. இதனால் தங்கள் பெயர் திருடர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு தேடப்படும் திருடர்கள் புகைப்படத்துடன் தங்களின் புகைப்படமும் வரும் என்பதற்காகவும் மேலும் ஊர் மக்களுக்கு தாம் எவ்வளவு பெரிய திருடர்கள் என்பதைக் காட்ட வேண்டும் என்ற நோக்கத்துடனுமே ஆகும்.
திட்டங்கள் பக்கவாக தீட்டிய பின்பு களத்தில் இறங்கினர் ஜம்புவும் நைனாவும்.
சப்பை தங்களிடம் உள்ள அந்த பழைய மிதிவண்டியில் ஸ்டேண்டைப் போட்டு பண்ணையாரின் வீட்டுக்குப் பின்புறம் உட்கார்ந்து கொண்டான்.
"நைனா ஆடு தூங்கின்னு இருக்குனு நினைக்கிறேன். நீ என்ன பண்றேன்னா அந்த ஆளு நகையை வைச்சுருக்கிற லாக்கர் ரூமுக்குப் போ. நான் மத்த அறையில் இருக்கிற எல்லாத்தையும் சுருட்டுறேன். ஓகேவா?" என்று தன் இடுப்பில் சொருகியிருந்த செல்லத்தில் ஒன்றை உருவி நைனாவிடம் தற்காப்புக்காக கொடுத்துவிட்டு அந்த லாக்கரை திறப்பதற்குப் பல பென்சில்களை கொண்ட சாவிக் கொத்தையும் கொடுத்தான் ஜம்பு.
"என்ன சாப்பாடு செஞ்சு வெச்சிருக்கான் இந்த கஞ்சப்பையன். ஓ! கருவாட்டுக் குழம்பு. ஒரு பிடி பிடிச்சிருவோம்" என்று ஜம்பு தன் வேலையை ஆரம்பித்தான்.நைனா வரும் வரை பசி ஆறுவதற்காக ஆரம்பித்து பின் ருசியின் காரணமாக வந்த வேலையை மறந்துவிட்டு கருவாட்டிலேயே முழுகிவிட்டான். மறுபுறம் லாக்கர் இருக்கும் அறையில் புகுந்தான் நைனா. பண்ணையாருக்குத் தெரியாமல் தன் சாவி கொத்துக்களில் உள்ள சாவியை எடுத்து ஒவ்வொன்றாக முயற்சி செய்தான்.
ஒரு வழியாக லாக்கர் திறந்தது.என்ன ஆச்சரியம். அதன் உள்ளே தகதக என்று ஜொலித்துக் கொண்டிருந்த கோயில் நகைகள் அற்புதமாக மின்னின. ஆனால் ஒரு ரூபாய் கூட பணம் இல்லை.
"என்ன இவன் சரியான நகைப் பைத்தியம் பிடிச்சவன் போல எல்லாத்தையும் சொர்ணமாக்கி வச்சிருக்கான். எப்படியோ நான் வந்த வேலை முடிஞ்சுச்சு. ஆனால் நம்ம தலயைக் காணோமே"என்று தேடிக்கொண்டே ஜம்பு இருக்கும் அறைக்கு வந்து சேர்ந்தான் நைனா.
இருந்த அத்தனை சாப்பாட்டுக்குண்டாவையும் தீர்த்து கட்டிவிட்டு ஆழ்ந்த உறக்கத்தைப் போட்டுக் கொண்டிருந்தான் ஜம்பு.
"தல தல எழுந்திரு யா! திருட வந்த இடத்துல சாப்பிட்டு தூக்கத்தைப் போட்டுக்கிட்டு இருக்க" என்று தட்டிதட்டி ஒரு வழியாக எழுப்பி உட்கார வைத்தான் நைனா.
பின்பு தன் மெலிந்த உடலை வைத்து ஜம்புவை எப்படியோ ஒரு வழியாக வீட்டின் பின்புறச் சுவருக்கு அருகில் அழைத்துச் சென்றான்.
வீட்டின் பின் வாசலை அடைந்த ஜம்புவும் நைனாவும் நகை மூட்டையைத் தூக்கிச் சுவற்றுக்கு மேலே சப்பை இருக்கும் திசையில் விசிறி எறிந்தனர்.
பின்பு சந்தேகம் வராமல் இருக்க இரண்டு மணிநேரம் காத்திருந்து இருவரும் பின்வாசல் வழியே வெளியேறினர்.
வாசலில் இருந்து சாலையில் காலைக் கூட எடுத்து வைக்கவில்லை காவல்துறையினர் பிடித்துக் கொண்டனர்.
"வாங்கடா களவாணிப் பயலுகளா" என இருவரையும் பார்த்துக் கொண்டே கூற ஊர் மக்கள் அனைவரும் அவர்களுக்காக காத்திருந்தனர்.
மாட்டிக்கொண்டதை நினைத்து வருத்தப்பட்டாலும் இரண்டு நாட்கள் கழித்து எப்படியும் வழக்கு வாங்கதானப் போகிறோம் ஆனால் தற்போது இன்றே வாங்க வேண்டிய நிலைமை அவ்வளவுதான் என்று ஆசுவாசப் படுத்திக் கொண்டான் ஜம்பு.
ஆனால் எப்படி மாட்டினோம் என்று குழம்பிக் கொண்டே சப்பையிடம் கேட்டான் நைனா.
"நைனா நீங்க தூக்கி போட்ட மூட்டை என் தலையில விழுந்து மயக்கம் போட்டு விழுந்துட்டேன். எந்திரிச்சு பார்த்தா ஊரே நிக்குது. கூடவே தடியும் நிக்குது" என்று போலீஸ்காரர்களை கைகாட்டினான்.
"டேய் நீ ஒரு ஆளுன்னு நம்பி உன்னை நிக்க வச்சேன் பாரு. சரி வா எப்படியோ ரெண்டு நாள் கழிச்சு வாங்க வேண்டிய கேசு இன்னைக்கே வாங்க போறோம்" என்று ஜம்பு ஒரு கலகல சிரிப்பில் சிரிக்க கூடவே நைனாவும் சப்பையும் சத்தமாக சிரித்தனர்.
ஆனால் அன்று கூட்டி சென்ற மூவரையும் எந்த வழக்கும் போடாமல் விடியற்காலையிலேயே விடுதலை செய்து விட்டனர் காவல்துறையினர்.
"சார் என்னாத்துக்கு நீங்க இப்ப எங்களை வெளியே வுடுறீங்க" என்று ஏமாற்றத்துடன் ஜம்பு கேட்க,
"அக்காம்...அதானே.. எங்களை கொறைஞ்சது ஆறு மாசமாச்சும் மெட்ராஸ் ஜெயில்ல போடுங்க சார்" என்று சப்பைக் கூற,
"ஆமா சார் கஷ்டப்பட்டு அட்டென்ட் பண்ணி இருக்கிறோம் சார். இப்பவே ரிலீஸ் பண்ணா எங்களை ஊருல ஒரு பையன் மதிக்கமாட்டான்.இதெல்லாம் நியாயமே இல்லை சார் " என்று நைனா கூற
"டேய் ஒழுங்கு மரியாதையா உதைக்கறதுக்குள்ள ஓடிருங்க நீங்க திருடுனது எல்லாமே கவரிங் நகை. அந்தப் பண்ணையாரு ஊரைச் சுத்தி கடனை வாங்கி அது போதாதுன்னு பேங்க்ல கோயில் நகையை வச்சு அதுக்கும் வட்டி கட்டாம எல்லா நகைகளையும் வங்கி ஜப்தி பண்ணிருச்சு" என்றதும் மூவரும் "பண்ணையார் தான்பா மெய்யான திருடன். நாமெல்லாம் இதுக்கு ஆகவே மாட்டோம் " என்று நினைத்துக் கொண்டு திகைத்து நின்றனர்.
"அதுமட்டுமில்ல அவன் மேல கேஸ் போட்டு உள்ள தள்ளியாச்சு. குறைந்தது இரண்டு வருஷம் அவனுக்கு ஜெயிலுதான் புரியுதா! அந்த சாமியே நீங்க எல்லாம் திருடறதுக்கு ஆக மாட்டீங்கனு காப்பாத்தி விட்ருக்கு. அந்த கோயிலுக்குப் போய் இனிமேல் சேவை செஞ்சு பொழைக்கிற வழியைப் பாருங்க. கிளம்பு கிளம்பு "என்று போலீஸ்காரர் விரட்டியதும் சந்தோஷப்படுவதா வேதனைப்படுவதா என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்து வெட்கித் தலை குனிந்து நின்றனர். பின்பு
காவல்துறை அதிகாரி கூறியது போலவே திருந்தி வாழ முடிவு செய்து அங்கிருந்து கிளம்பினர் மூவரும்.

Author: siteadmin
Article Title: 18. மூன்று பேரும் முக்கிய திருடனும் - ம.சதீஸ்குமார்
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.