மீண்டும் பஞ்சுத் தாத்தா
சுஶ்ரீ
பஞ்சு காலைல வழக்கத்தை விட சீக்கிரம் எழுந்துட்டார்.ஏன்னே தெரியலை ராத்திரி பூரா சரியா தூக்கம் வரலை.தலகாணிக்கு கீழேயே வச்சிருப்பார் அமிர்தாஞ்சனம் பாட்டில்.அது தீரப் போறது புதுசு வாங்கணும்னு தினம் நினைச்சிக்கறார் விடிஞ்சவுடனே மறந்து தொலைக்கறது.நேத்து நைட் சுத்தமா தீந்து போச்சு மூக்கு ஞணஞணன்றது சின்ன குச்சி வச்செல்லாம் பாட்டிலை தோண்டிப் பாத்தாச்சு ம்ஹூம் பிரயோஜனமில்லை.
பாரு தூங்கிண்டிருக்கா,வாயை ஒரு கோணமா திறந்து வச்சிண்டு பாவமா இருக்கு.சரி என்ன செய்யலாம்னு யோசிச்சப்ப ஒரு ஐடியா வந்தது,சூடத்தை பொடி பண்ணி தேங்கா எண்ணைல கலந்தா அதான் அமிர்தாஞ்சனம்.வேற என்ன அதுல மட்டும் ஸ்பெஷலா இருக்கு.மெதுவா எழுந்து போய் சாமி அலமாரில தேடி சூட டப்பாவை எடுத்தா,பொக்கை வாயை திறந்து தாத்தா மாதிரி சிரிக்கறது.காலி டப்பா. கோவமா வந்தது எதாவது சாமான் காலியானா முன்கூட்டி சொல்ல வேண்டாமோ.
மணி ஆறாச்சு இன்னிக்கு என்னவோ பாரு இன்னும் எந்திரிக்கலை.வாக்கிங் போற நேரமாச்சு.சொல்லிட்டு போகலாம்னு பக்கத்துல போய் லேசா தோளைத் தொட்டா விலுக்னு எழுந்துண்டா.”யாரு எதுக்கு மாட்டை எங்க கட்றது” னு பஞ்சுவைப் பாத்து திருதிருனு முழிச்சா.ஏதோ கனவு கண்டிருப்பா போல இருக்கு.
“தாழ் போட்டுக்கோ நான் வாக் போறேன்”சொல்லிட்டு பதிலுக்கு காத்திருக்காம புறப்பட்டார்.பார்க் பக்கத்துலதானே இருக்கு.ராவ், வெங்கட் பாபு, கணேசன் எல்லாரும் ஏற்கனவே வந்து பார்க் பெஞ்சில் காத்திருந்தனர்.
வெங்கட் பாபு இந்த குரூப்ல ஹெவி வெயிட். 10 அடி நடந்தாலே மூச்சு வாங்கும்.”நேத்து யூட்யூப்ல ஒரு ஃபேமஸ் டாக்டர் சொன்னார்,நான் அதைத்தான் இன்னிக்கு ஃபாலோ பண்ணப் போறேன்.”
“என்னடா சொன்னார், கார்த்தாலை பார்க் பெஞ்சுல உக்காந்து பொங்கலும் உளுந்த வடையும் சாப்பிடச் சொன்னாரா”
“அதுவும் ஓகேதான் ஆனா இந்த எக்சைசுக்கு அப்பறம்.”
“எங்களுக்கும் சட்னு சொல்லித் தொலையேன் வாக் புறப்படற டயத்துல ஏதாவது பண்ணி நிறுத்தறதே வேலையாப் போச்சு.”
வெங்கட்,”வாக்கிங்னா என்ன”
“நடக்கறது.”
“அதேதான் சொல்றார் டாக்டர் பத்ரி,உக்காந்துண்டே நடக்கலாமாம்.”
பஞ்சு,”படுத்துண்டே நடக்க முடிஞ்சா படுக்கைல இருந்து எந்திருக்கவே வேண்டாம்,கேளேன் உன் டாக்டர் பத்ரி கிட்ட,எதாவது உபாயம் உண்டானு”
“நான் சீரியசா சொல்றேன் இதோ பாரு இப்படி”னு பெஞ்ச் நுனில உக்காந்து காலை உதைச்சு உதைச்சு நடக்கற ஆக்ஷன் ரெண்டு கையையும் வீசி வீசி வேற ஆக்ஷன்.
“அய்யா சாமி நீ இங்கே உக்காந்து வலிப்பு வந்த மாதிரி செஞ்சிட்டே இரு,நாங்க ஒரு ரவுண்ட் நடந்துட்டு வரோம்.”
வெங்கட்பாபு,”நல்லது எதையும் காது கொடுத்து கேக்க மாட்டீங்களே,யூட்யூப்ல தொண்டை வரள சொல்ற டாக்டர் பத்ரி என்ன பைத்தியக்காரனா” முனகிண்டே கூட எழுந்து நடந்தார்.
வாக் முடிச்சிட்டு வண்டிக்கார்ர் கிட்ட நின்னு லெமன்,அலுவேரா ஜூஸ் குடிக்கறப்ப அமிர்தாஞ்சனம் ஞாபகம் வந்தது.”டேய் கணேசா போற வழில மெடிகல் ஷாப் தாண்டறப்ப ஞாபகப் படுத்துடா அமிர்தாஞ்சனம் வாங்கணும்.”
கணேசன்,”என் பையன் போனமாசம் தாய்லாண்ட் போயிட்டு வரப்ப ஒண்ணு வாங்கிண்டு வந்தான் பாரு,மூடியைத் திறந்தாலே வாசனை எட்டுத் திக்கும் பரவும் அமிர்தாஞ்சனமெல்லாம் எந்த மூலைக்கு”
“ஆமாம்,இப்ப சொல்லு வாங்கிண்டு வரப்ப எங்க ஞாபகம் வரலையே”
“அதில்லைடா பஞ்சு,ஏர்போர்ட்ல பாத்து அவசரத்துல வாங்கினதாலதான்,அடுத்த தடவை போனா ஆளுக்கொண்ணு சரியா”
பேசிண்டே வீடு வந்து சேந்தாச்சு,அட மெடிகல் ஷாப் மறந்தாச்சு இன்னிக்கும்.
மாடிப்படி ஏறரப்ப கீழ்வீட்டு சடகோபல்,”என்ன தாத்தா காபி சாப்பிடலையா இன்னும்”
“மேல வாடா சடை காபி சாப்டுட்டு உங்கிட்ட ஒரு சின்ன வேலை”
பாருவோட காபிக்கு அவன் அடிமை என்ன சொன்னாலும் செய்வான்.
மேல போறப்பவே காபி வாசனை மூக்கைத் துளைச்சது.”மாமியோட காபிக்கு ஈடு இணை கிடையாது”னு சொல்லிண்டே சடையும் கூட வந்தான்.
நுரை ததும்ப ரெண்டு டம்ளர்ல காபி கொண்டு வந்து வச்சா, பாரு.
பஞ்சு,”ஏதாவது சாமான் தீந்து போனா சொல்ல மாட்டயா,சடை கிட்ட சொன்னாக் கூட சட்னு வாங்கிண்டு வரான்”
“ஏன் ,எல்லா சாமானும்தான் இருக்கே”
“என்னத்தை! காத்தாலே சூடம் டப்பாவை திறந்தா காலி.”
“முந்தா நாள் நீங்கதானே வாங்கிண்டு வந்தேள்,அப்பறம் பிரிச்சு டப்பால போடறேன்னு மறந்துட்டேள்.பக்கத்துலயே முழிச்சிண்டு நிக்கறது பாருங்கோ சூடம் பாக்கெட்”
“ஓ..நினைச்சேன் அது சூடம்தனா,பெருங்காயம்னு நினைச்சிட்டேன்”
“ஆமாம் சூடம் ஏன் தேடினேள் குளிக்காமக் கூட”
பஞ்சு நெஞ்சை நிமித்திண்டு பெருமையாச் சொன்னார், “அமிர்தாஞ்சனம் தீந்து போச்சா, வாங்கிண்டு வர மறந்து போறது,சூடத்தை பொடி பண்ணி எண்ணைல குழைச்சா அதான் அமிர்தாஞ்சனம் அதான்”
“போறும் சமத்து, அமிர்தாஞ்சனம் புதுசும் நீங்கதான் வாங்கிண்டு வந்தேள்
இதோ டேபிள்ல இங்கேதான் இருக்கேன்னு சொல்றதே தெரியலையா”
“சரி,சரி 8 மணி ஆயிடுத்து டிபனுக்கு ஏதாவது ஏற்பாடு பண்ணு,எப்பப் பாரு எதாவது ஒரு குறை சொல்லிண்டே இருக்கறது”
சடை ஸ்வாரஸ்யமா காபி குடிச்சிண்டிருந்தான்.
“ஏண்டா சடை உனக்கு வயசு எத்தனை ஆறது?”
“என் வயசு எதுக்கு இப்ப? நீங்களும் மாசத்துக்கு ஒரு தடவை கேக்கறேள்.நானும் சொல்லிண்டே இருக்கேன்”
“என் வயசு என்னனு நினைக்கறே?”
“நினைக்கறது என்ன,எனக்குதான் நல்லாத் தெரியுமே,இந்த ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி கூட டீஷர்ட்டும், சென்ட் பாட்டிலும் கொடுத்து ஆசீர்வாதம் வாங்கிண்டேனே”
“கொடுத்ததெல்லாம் நன்னா ஞாபகம் வச்சிக்கோ ,நாங்க செய்றதெல்லாம் மறந்துடு.இந்த 84 வயசுல எனக்கு இருக்கற ஞாபக சக்தி கூட உனக்கு இல்லை.”
“மாமி வாரம் ரெண்டு தினம் கொடுக்கற காபியும் மறக்கலை, உப்புமா மிஞ்சிப்போனா கொடுப்பேளே அதையும் மறக்கலை. அது போகட்டும் என் வயசு கேட்டேளே எதாவது தெரிஞ்சவா ஜாதகம் அனுப்பி இருக்காளா?வேண்டாம் மாமா எனக்கும் அம்பது நெருங்கிடுத்து,கல்யாணம் பண்ணிக்கணும்ன்ற ஆசையும் போயிடுத்து.”
“அடப் போடா ஜாதகமாவது ஒண்ணாவது,உனக்கு ரிடயர்மென்ட்டுக்கு எட்டு வருஷம் பாக்கி இருக்கு இல்லையோ.”
“ஆமாம் எட்டு வருஷம் மூணு மாசம் பாக்கி இருக்கு”
“ஏன் கேட்டேன்னா நாம சேந்து ஒரு பிசினஸ் பண்ணினா என்ன,நன்னா பிக்அப் ஆச்சுன்னா நீ ஒரே வருஷத்துல வேலையை விட்டுடலாம்”
“என்ன மாமியை காபி போட்டுத் தரச் சொல்லி விக்கலாமா,கேன்ல ஊத்தி நான் தெருத் தெருவா அலையணுமா கா..ப்பி, கா..ப்பி,னு கத்திண்டு.”
“அதில்லைடா மடையா, தலைவலி ஜலதோஷ களிம்பு, கை கால் வலிக்கு தைலம்னு தயார் பண்ணி பாட்டில்ல அடைச்சு கடை கடையா போட்டா கொள்ளை லாபம் வருமே”
பாரு,”ஏன் ஊறுகா விதம் விதமா காரசாரமா போட்டு பாக்கெட்ல அடைச்சு டாஸ்மாக் கடை வாசல்ல போய் உக்காந்தா கூட காசு கொட்டுமே”
“அது கஷ்டம்டி,அவாளைப் பாத்து சடைக்கும் குடிப் பழக்கம் வந்துட்டதுன்னா என்ன பண்றது”
சடை,”நான் ஒழுங்கா வேலை பாத்து சம்பாதிக்கறது பிடிக்கலையா உங்களுக்கு”
“அதில்லைடா உன்னை ஒரு கம்பெனி டைராக்டர் ஆக்கிடணும்னு ஆசை,அப்பவாவது உனக்கு கல்யாணம் ஆகாதானுதான்”
“நல்ல சம்பளம் வர நல்ல வேலையை விட்டுட்டு ஊறுகாய் கம்பெனிக்கு டைரக்டர் வேலையா,வேண்டாம்பா சாமி,என்னை ஆளை விடுங்க,எனக்கு காபியும் வேண்டாம்,உப்புமாவும் வேண்டாம் ,ஏன் எனக்கு கல்யாணமே வேண்டாம்”கடைசி சொட்டு காபியை உறிஞ்சி குடிச்சிட்டு,டம்ளர்ல எதாவது மிஞ்சி இருக்கானு பாத்துட்டு டம்ளரை வச்சிட்டு கிளம்பினான்.
“நல்லதுக்கே காலமில்லைடா ஒரு கம்பெனி டைரக்டராக்கி,கால்கட்டும் போட்டுடலாம்னு பாத்தா ஒத்து வரமாட்டேன்றயே,சரி நானே பண்ணிக்கறேன்.”
பாரு,”எதை பண்ணிக்கறேள்,கல்யாணமா.”
“அதான் ஏற்கனவே பண்ணிண்டு அவஸ்தை பட்டுண்டு இருக்கேனே”
சடை இவர்களோட சண்டை வளரறதைப் பாத்து சிரிச்சிண்டே கீழே இறங்கினான். சடைக்கு இந்த தம்பதியினரை மிகவும் பிடிக்கும்,இவங்க வீட்டுக்கு திருடன் வந்துட்டு திருட்டையே விட்ட கதையை தன் நண்பர்களிடம் பெருமையா சொல்வான். “என்ன, அந்தக் கதை உங்களுக்குத் தெரியாதா?
சொல்றேன்”
ராத்திரி 10 மணி தந்தி செய்திகள் பாத்து தன் ஜனநாயக கடமை அன்னைக்கு முடிஞ்சதா நினைச்ச பஞ்சாபகேசன், படுத்துக்க போனார்.வயசாச்சு இப்பல்லாம் சீக்கிரம் தூக்கம் வரதில்லை, அமிர்தாஞ்சனம் காரமா தலைல தடவிக்கணும் அது பழக்கமாயிடுச்சு வலி ஒண்ணும் இல்லைன்னாலும், அந்த சின்ன பாட்டிலை ஆசையா திறந்து ஆள் காட்டி விரலால கொஞ்சமா எடுத்து நெத்தில கொஞ்சம் மூக்குக்குள்ளே கொஞ்சமா தடவிண்டு அந்த ஸ்வாசத்தை ஆழமா உள்ளே இழுத்து கண்ணை மூடி அனுபவிப்பார்.அவர் படுத்துக்கற அறையே அந்த மணத்தில் நிறையும், ஆசையா கடிக்க வர கொசு கூட அந்த வாசனைல மயங்கி அப்படியே உக்காந்துடும் எதுக்காக வந்தோம்கறதை மறந்து.பார்வதி அவர் மனையாள் சமையலறையை ஏறக்கட்டிட்டு பக்கத்தில் உக்காந்தது கூட தெரியாமல் அமிர்தாஞ்சன போதையில் இருந்தார் பஞ்சாபகேசன்.ஏன்னா உங்க தம்பி வரார்னு சொன்னேளே எப்ப வரார் ? ஏகாந்த ரசனையில் இருந்த பெரியவர் திடுக்கிட்டு முளித்தார்.”யாரு வரா?எப்ப? எதுக்கு? “ “அய்யே தூங்குங்க அந்த கண்றாவி வாசனை இந்த ரூமையே வியாதியஸ்தா ரூம் ஆக்கறது இதுல எப்படிதான் நிம்மதியா குறட்டை விட்டு தூங்கறீங்களோ”பார்வதி அம்மாள் சொல்லி முடிக்கறதுக்குள்ளே ஒரு அதிர்வோட குறட்டை சத்தம் கிளம்பியது
பஞ்சாபகேசனிடமிருந்து.எத்தனையோ கண்டு பிடிக்கறா இந்த குறட்டைய நிப்பாட்ட சரியா ஒண்ணும் வரலையே யோசிச்சிட்டே பார்வதி அம்மா ஒரு அரை மணி நேரம் TV கிட்ட போனா அந்த மெகா சீரியல் பாக்க.ஆச்சு
அன்னைய பொழுது முடிஞ்சது.அந்த ஒரு ஃபிளாட்ல இவங்க ரெண்டு பேர்தான், குழந்தைகள் வெளி நாட்டில். இரவு பன்னண்டு மணி சுமாருக்கு டிங்டாங் காலிங் பெல் சத்தம். ஆழ்ந்த தூக்கம் வர நேரம் ரெண்டு பேருக்குமே முழிப்பு வந்துட்டது.12 மணிக்கு யாரு திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் எக்மோர் வந்து அங்கே இருந்து இங்கே வர 20 நிமிஷம் சரிதான் என் தம்பிதான் அனுமானித்துக் கொண்ட பஞ்சாபகேசன் தடுமாறி கட்டிலிலிருந்து இறங்கினவர் வாசல் கதவை நோக்கி போறதுக்குள்ளே விடாமல் ஏன் இப்படி மணி அடிக்கறான்?நிதானமாய் கதவை திறந்தார் , தம்பி என்ன இப்படி மாறு வேஷத்துல வந்திருக்கான்? வாடா என்னடா இது வேஷம் தனியாவா வந்தே லக்கேஜே இல்லையா?
வந்த மாரியப்பன் திகைத்துப் போனான், கருப்பு மரு சரியா ஒட்டலையா, ஒட்டு மீசை ஏதாவது சரியா வச்சிக்கலையா?இந்தாளுக்கு திருடன்னா ஒரு மரியாதை இல்லையே.”ஓய் பெரியவரே நான் பீகார்ல இருந்து வந்திருக்கற பயங்கர திருடன் கலகத்சிங் “
“அப்படியா என் தம்பி வாஞ்சுன்னு நினைச்சேன், சரி சரி உள்ளே வா வெளிச்சத்துல பாக்கறேன் உன்னை , அடே நீ மாரியப்பன் இல்லையோ? தொளப்பன்குப்பத்துல இருந்தயே இது என்ன மச்சம், மீசை புதுசா?
மாரியப்பன் திகைத்துப் போனான் இந்த கிழவனுக்கு திருடன்கற பயமே இல்லையே,எப்படி என்னை கண்டு பிடிச்சான்.இப்ப இந்த கிழவனை பாத்து மாரியப்பனுக்கு பயம் வந்தது.
அவர், “ ஏண்டா மறந்துட்டயா, நாங்க அண்ணா நகர் சாந்தி காலனில இருந்தப்ப இதே மாதிரிதான் ராத்திரி பன்னெண்டு மணிக்கு வந்தே, பால்காரனுக்காக வச்சிருந்த 218 ரூபாயை கொடுத்தேனே, சின்ன வயசுல என்னடா மறதி?”சரி சரி எங்கே இந்தப் பக்கம்?
மாரியப்பனுக்கு என்ன பண்ணுவதுனு தெரியலை.அதுக்குள்ளே பர்வதம் அம்மாளும் எழுந்து ஹாலுக்கு வந்துட்டா, என்ன மச்சினர் வந்தாச்சா என்ன வேற யாரோ ஃபிரண்டா? காபி போட்ட்டா உப்புமா கிளறிக் கொடுக்கட்டா?
மாரியப்பனுக்கு நிஜமாவே செயவதென்ன புரியலை. மரியாதையா பீரோ சாவி கொடுங்கனு உறுமினான்.
ஏண்டி பார்வதம் பீரோ சாவி எங்கேனு உனக்கு ஞாபகம் இருக்கான்னார் பஞ்சு, “ஆமாம் அது எதுக்குடா மாரியப்பா சாவி வச்ச இடம் மறந்து தொலைச்சிட்டோமே, மெயின் டோர் சாவி ரெண்டு இருக்கு அதுல வேணா ஒண்ணு வாங்கிக்கறயா? பார்வதம் மாரியப்பன் சார் ஞாபகம் இல்லையா சாந்திகாலனி வீட்டுக்கு வந்திருக்காரே.பால்காரன் காசை கொடுத்துட்டு திண்டாடினோமே மூணு நாள்.அவர்தான்.பாவம் கஷ்டப் பட்டு மலைக்கள்ளன் எம்.ஜி.ஆர் மாதிரி மாறுவேஷம் போட்டுண்டு வந்திருக்கார் இதுவும் ஒரு களையாதான் இருக்கு இல்லை?”
“யோவ் கிழவனாரே பீரோ சாவி கேட்டா கிண்டல் பண்றயா? மரியாதையா பீரோ சாவியை கொடு.”
“ஏண்டாப்பா ஞாபகம் இல்லைனா கேக்க மாட்டேன்றயே அந்த சாவில என்ன விசேஷம்?”
மாரியப்பனுக்கு கோபம் தலைக்கு ஏறியது மடில மறைச்சு வச்சிருந்த பட்டன் கத்தியை வெளியே எடுத்தான்.
பஞ்சு தாத்தா அதை ஆச்சரியமா பாத்தார் “என்னடா புதுசா? விக்டரி நாக்ஸ் பிராண்டா? கொடு பாப்போம்.”
இப்ப மாரியப்பன் கை நடுங்க ஆரம்பிச்சது. “பெருசு நிஜமா புரியலையா பீரோல இருக்கற சாமானை கொள்ளை அடிக்க வந்திருக்கேன் அதான் சாவி கேட்டேன் புரிஞ்சதா?”
பஞ்சு தாத்தா பகபகனு சிரிச்சார் ,”அதுக்கு எதுக்குடா சாவி, பூட்டினதே இல்லையே, ஏன் பொஞ்சாதிக்கு புடவை வேணுமா? கேட்டா பர்வதமே தருவாளே, 25ம் தேதி வந்துஇருக்கே புத்தி வேண்டாமோ?யார் கிட்டயாவது காசு இருக்குமா? நகையெல்லாம் யாரு பீரோல வைக்கறா?
புத்தியோட பிழைங்கடா, ஒரு 76 ரூபா என் ஷர்ட் பாக்கெட்ல இருக்கும் எடுத்துண்டு நடையைக் கட்டு.”
மாரியப்பன் அவர் காலில் சாஷ்டாங்கமா விழுந்தான், “சாமி உங்க மாதிரி பத்து ஆளு இருந்தா திருட்டே மறந்து போயிடும் எங்களுக்கு வரேன் நானு மறந்துட்டேனே அந்த 76 ரூபா என் தரப்புல நீயே வச்சிக்கோ, அடுத்த தடவை அந்த பால் காசு 218 ரூபாயை கொடுத்துடறேன்.”போயிட்டான் அவன் அடுத்த 10வது நிமிஷத்துல இருந்த திரும்ப குறட்டை சத்தம் அதிர்ந்தது.
போதுமா அடுத்த பஞ்சுத் தாத்தா புராணத்துக்கு சீக்கிரம் வருவோம்.

Author: siteadmin
Article Title: 21. மீண்டும் பஞ்சுத் தாத்தா - சுஶ்ரீ
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.