லேடி தெனாலி
அது யாரு லேடி தெனாலி? வேறே யாரு நான்தான். பயத்திலே தெனாலிக்கே டஃப் கொடுக்கற ஆள் நான் அப்படிங்கிறதுலே ஒரு பெருமை எப்பவுமே உண்டு எனக்கு.
பணக்காரன் படத்திலே ரஜினி சார் சொல்வார், “எனக்கு துணி போடாத மிருகங்களை பார்த்துதான் பயம். துணி போட்ட மிருகங்களை பார்த்து பயம் இல்லை அப்படின்னு.”
ஆனா எனக்கு துணி போட்ட மிருகங்களை பார்த்தா கொஞ்சம் பயம், துணி போடாத மிருகங்களை பார்த்தா ரொம்பவே பயம்.
இதிலே நாய், பூனை, மாடு இது எல்லாம் கூட வெளியிலே போகும் போது, அதுவும் நடந்து போகும் போதுதான் மீட் பண்ண வேண்டி இருக்கும் அப்படிங்கிறதுனாலே கொஞ்சம் பரவாயில்லை.
ஆனாலும் அது என்னமோ எல்லா நாய் பூனைக்கும் என் மேலே ஒரே லவ்வோ லவ்வு. தூரத்தில் இருந்தே நாயைப் பார்த்துட்டு, ரோட்டை கஷ்டப்பட்டு கிராஸ் பண்ணி அது நிக்கிற பக்கத்துக்கு எதிர் பக்கத்திலே நடந்து போறதுதான் எப்பவும் என்னோட ரோடு ஸ்ட்ராடர்ஜி.
ஆனாலும் நான் பயந்து பயந்து, இந்தப் பக்கம் அந்தப் பக்கம் பார்த்து, ரோட்டை கிராஸ் பண்ணி போறதுக்குள்ளே அது குடுகுடுன்னு ஓடி ரோட்டுக்கு இந்தப் பக்கம் வந்திடும்.
அதுக்கு என் மேலே ஒரே லவ் இல்லையா, அதனாலே ஜொள்ளு விட்டுண்டே என் பின்னாடியே வேறே நடந்து வரும். நான் இப்போ குடுகுடுன்னு ரோட்டுக்கு அந்தப் பக்கம் ஓடணும்.
(சரி ஓடிடுவோம். கார்க்காரன், பைக்காரன் கூட டக்குன்னு ப்ரேக் போட்டு நம்மளை காப்பாத்திடுவான். நாய் மாடுக்கெல்லாம் பிரேக் கிடையாதே).
இதுக்கு நடுவிலே ஒரு ஐம்பது தடவையாவது ‘முருகா முருகா’ன்னு ஜபம் வேறே. நான் எப்போ கூப்பிட்டாலும் வந்தாகணுமே. அது அந்த முருகனோட தலையெழுத்து.
இதிலே ஒரு தடவை, ஒரு பக்கெட் நிறைய துவைச்ச துணியோட க்ளிப் டப்பாவையும் எடுத்திண்டு மாடி ஏறிப் போனேன். அன்னைக்குன்னு பார்த்து அத்தனை துணி.
சரி கடகடன்னு காயப் போட்டுட்டு கீழே போயிடலாம் அப்படின்னு பக்கெட்டையும் க்ளிப் டப்பாவையும் கீழே வெச்சிட்டு திரும்பி பார்க்கிறேன், அங்கே தரையிலே கருப்பிலே வெள்ளைக் கோடு போட்ட ஒரு பூனை செத்து கிடக்கறது.
(அந்தப் பூனை தான் செத்து போயிடுத்தே அதைப் பார்த்து என்ன பயம்? தெரியலையே!)
அடுத்த நொடி அங்கிருந்து பக்கெட்டை தூக்கிண்டு ஓட ஆரம்பிக்கறேன்.
‘அச்சோ க்ளிப் டப்பாவை விட்டுட்டேனே.’
‘பூனை என்ன க்ளிப் டப்பாவை தூக்கிண்டா போகப் போறது? அதுதான் செத்து போச்சே’
‘இல்ல இல்ல எதுக்கும் அதையும் எடுத்திண்டே ஓடிடுவோம்’
துணி பக்கெட், க்ளிப் டப்பா எல்லாத்தையும் தூக்கிண்டு படியில் இறங்கி ஓடறேன். தடுக்கி விழுந்திடக் கூடாதேன்னு வேறே பயம்.
‘முருகா முருகான்னு’ வேண்டிண்டே ஒரு வழியா ஆத்துக்குள்ளே வந்து உட்கார்ந்தேன்.
அதுக்கு அப்புறம் நாலு மணி நேரம் கழிச்சு, கொஞ்சம் கொஞ்சமா தைரியத்தை வர வழைச்சுண்டு (துணி காயப் போட்டு ஆகணுமே), நான் மெது மெதுவா மாடிக்கு போனா அங்கே அந்த செத்து போன பூனை கொடியிலே காஞ்சிண்டு இருக்கு.
அப்போதான் புரிஞ்சது நான் பார்த்தது பூனை இல்லை கருப்பிலே வெள்ளைக் கோடு போட்ட ஷார்ட்ஸ் அப்படின்னு. யாரோ கீழே கிடந்த ஷார்ட்ஸை எடுத்து கொடியிலே காயப் போட்டுட்டு போயிருக்கா.
அப்போ என் மூஞ்சி போன போக்கை நீங்க எல்லாரும் பார்த்து இருக்கணும்.
இருந்தாலும் நான் சமாளிச்சிண்டு
‘ஹப்பாடா நாம ஓடினதை யாரும் பார்க்கலை. மாடியிலே சிசிடிவி கேமரா கூட கிடையாது’ அப்படின்னு ஒரு அல்ப சந்தோஷத்தோட ஒண்ணுமே நடக்காத மாதிரி மூஞ்சியை வெச்சிண்டு, துணியை காயப் போட்டுட்டு கீழே வந்துட்டேன்.
இதுக்கே இப்படின்னா அரை முழ நீளத்துக்கு ஒரு மரப்பல்லி எங்காத்திலேயே மூணு மாசம் வாழ்ந்து, என்னோட ஒன் சைட் ரொமான்ஸ் பண்ணித்தே அப்போ நான் எப்படி இருந்திருப்பேன்.
அந்தக் கதையை சொல்றேன் கேளுங்கோ.
எப்பவுமே என்னோட கிச்சன் பக்கத்திலே இருக்கிற யுடிலிட்டிலே ரெண்டு மூணு மரப்பல்லி ரென்ட் குடுக்காம குடி இருக்கும். அதனாலேயே நான் அந்தக் கதவை அதிகம் திறக்கவே மாட்டேன்.
எதுக்கு தகராறு? நீ கோட்டுக்கு இந்தப் பக்கம் வராதே நான் அந்தப் பக்கம் வர மாட்டேன் அப்படின்னு பல்லிகளோட டீலிஸ்.
ஆனா எங்காத்துக்கு பாத்திரம் தேய்க்க வர அனிதா இந்த டீல் எல்லாம் மதிக்கவே மாட்டா. தினமும் அந்த பார்டர் கிராஸ் பண்ணி போயிட்டு, போயிட்டு வந்திண்டு இருப்பா.
சரி, அங்கே போயிட்டு தன்னோட வேலையை மட்டும் பார்த்திட்டு திரும்பி வரலாமோன்னோ? அதுதான் மாட்டா. அந்த பக்கத்திலே இருக்கிற குடி மக்களை எல்லாம் டிஸ்டர்ப் பண்ணிண்டே இருப்பா.
ஒரு நாள் இப்படிதான் “அக்கா இந்தப் பல்லியை அந்த க்ரில் வழியா வெளியே தள்ளிடறேன். கீழே போய் விழுந்திடும் அப்படின்னா”
அதுதான் அந்த அரை முழ நீள மரப்பல்லி.
நான் வேண்டாம்னு சொல்லி இருந்திருக்கணும். செய்யலையே. சரி நிஜமாவே போயிடும் போலிருக்கு அப்படின்னு ஒரு நப்பாசை.
அவ தள்ளி விட்டுட்டு அடுத்த வேலையை பார்க்க போயிட்டா.
“அது கீழே போய் விழுந்திடுத்தா?” அப்படின்னு நான் கேட்க மண்டையை மண்டையை ஆட்டிட்டு போயிட்டா அவ. நானும் ரொம்ப மகிழ்ச்சியா இருந்தேன்.
ஆனா இந்த ஈரான்காரன் அமெரிக்காவை விட்டுட்டு துபாய அடிச்சா மாதிரி, அந்த மரப்பல்லி அனிதாவை விட்டுட்டு என்னை தாக்கப் போறதுன்னு அப்போ தெரியலை எனக்கு.
அன்னைக்கு சாயங்காலம் நான் கண்ணாடி முன்னாடி நின்னு தலை வாரிண்டு இருக்கேன். அப்போ ஏதோ ஒண்ணு தொப்புன்னு என் பக்கத்திலே குதிச்சு ஓடறது. என்னடான்னு திரும்பி பார்த்தா அந்த அரை முழ மரப்பல்லி.
அது ஒரு பக்கம் ஓட நான் ஒரு பக்கம் ஓடறேன். இதுக்கு நடுவிலே ‘அச்சோ தலை விரி கோலமா ஓடப் படாதே’ அப்படின்னு ஒரு மைன்ட் வாய்ஸ்.
அடிச்சு பிடிச்சு எங்கிருந்தோ ஹேர் பேண்டை தேடி எடுத்து மாட்டிண்டு பல்லிக்கு எதிர் பக்கமா நான் ஓடறேன்.
ஆத்திலே எல்லாரும் “என்னாச்சு என்னாச்சு?”ங்கிறா.
ஒரு வழியா இங்க ஓடி, அங்க ஓடி பெரிய பல்லி ஒண்ணு ஆத்துள்ளே வந்திருக்குன்னு அவாளுக்கு புரிய வெச்சேன்.
“பல்லிக்கா இத்தனை ஆர்பாட்டம்?” இது என் மாமியார்.
அதுக்குள்ளே இந்தப் பல்லி இங்கே அங்கேன்னு சுத்தி எங்கே ரெஸ்ட் எடுக்கலாம்னு இடம் தேடிண்டு இருக்கு.
எனக்கு இந்த அனிதா மேலேதான் அவ்ளோ கோபம். ஆனா தப்பித்தவறி அதை அவ மேலே காட்டிட முடியும்னு நினைக்கறேளா? வாய்ப்பே இல்லை. அப்புறம் பாதி தேய்ச்சிண்டு இருக்குற பாத்திரத்தை கூட அப்படியே வெச்சிட்டு, வேலையை விட்டுட்டு போயிடுவா. அப்புறம் நான் என்ன ஆவேன்?
ஒரு சீக்ரெட் என்னன்னா எனக்கு அனிதாவை பார்த்தா கூட கொஞ்சம் பயம்.
‘எல்லாம் சிவ மயம் என்று சொல்லுவினம். எனக்கு எல்லாம் பய மயம்’
இப்போ பல்லி ஒரு வழியா என் கட்டிலுக்கு அடியிலே போய் ரெஸ்ட் எடுக்க ஆரம்பிச்சுடுத்து.
‘போச்சுடா’
என்னெல்லாமோ பண்ணி பார்க்கிறேன். அங்கிருந்து நகர மாட்டேங்கிறது.
‘இன்னைக்கு தூக்கம் போச்சேடா பெருமாளே’
“யாரவது இந்தப் பல்லியை கொஞ்சம் விரட்டிக் கொடுங்களேன்” ஆத்திலே எல்லார் கிட்டேயும் கேக்கறேன்.
“இதோ பாரு. அது என்ன பண்ணித்து உன்னை. ஆத்திலே இருந்து பல்லியை எல்லாம் விரட்டப் படாது”
இதுதான் எல்லாருடைய கோரஸ் பதில்.
இதிலே உண்மை என்னன்னா எல்லாருக்கும் அந்தப் பல்லியை பார்த்தா பயம்தான். ஆனா நான் மட்டும்தான் அதை பெருமையா வெளியிலே காட்டிக்கறேன்.
சரி அது கிடக்கட்டும், நான் இப்போ எங்கே தூங்கறது? பக்கத்து ரூம்லே போய் படுத்துக்கலாம்னு பார்த்தா அங்கே மாமியார் படுத்துண்டு இருப்பா. அவா கட்டிலை எப்படியும் எனக்கு குடுக்க மாட்டா. தரையிலேதான் படுத்துக்கணும்.
நான் தூங்கும் போது இந்தப் பல்லி குடுகுடுன்னு ஓடி வந்து என் மேலே ஏறிடுத்துன்னா? வேண்டாம்டா சாமி.
ஒரு வழியா என் கட்டில் மேலேயே தூங்கலாம்னு முடிவுக்கு வந்தேன். ஆனா படுத்தா தூக்கம் வரணுமே. மத்தவா எல்லாரும் நன்னா தூங்கறா. நான் மட்டும் கட்டிலிலே படுத்துண்டே கட்டிலுக்கு கீழே குனிஞ்சு குனிஞ்சு பல்லியை தேடிண்டு இருக்கேன்.
அது இருந்த இடத்தை விட்டு அசையலை. நல்ல தூக்கம் போலிருக்கு. எனக்கும் கொஞ்சம் கொஞ்சமா தூக்கம் கண்ணை இழுக்கறது.
சரி தூங்குவோம்னு தூங்கினா கனவெல்லாம் சைஸ் வாரியா பல்லி. எல்லாம் என்னை துரத்த நான் அதுகள் கிட்டே இருந்து தப்பிக்க அப்படியே காற்றிலே பறந்து போறேன்.
“பெருமாளே!” எழுந்து உட்கார்ந்தாச்சு.
எப்படியோ அன்னைக்கு ராத்திரியை ஓட்டியாச்சு. கார்த்தாலே எழுந்து பார்த்தா பல்லி கட்டிலுக்கு அடியிலேயே சமத்தா தூங்கிண்டு இருக்கு.
சரி இந்தப் பல்லியை பார்த்துண்டே இருந்தா, வயித்துக்குள்ளே எலி ஓட ஆரம்பிக்குமே!
ஒரு வழியா குளிச்சிட்டு வந்து கிச்சன் போறதுக்கு முன்னாடி கட்டிலுக்கு அடியிலே பார்த்தா பல்லியை காணோம்.
“எங்கேடா போன?” பல்லியை கேட்டுண்டே சுத்தி சுத்தி தேடறேன். காணோம்.
இருந்தாலும் ஒரு கிலியோடவே சமையல் வேலையை ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்திலேயே வீல்ன்னு ஒரு அலறல் சத்தம். வேறே யார்? என் மாமியார்தான்.
அவா குளிக்கறதுக்கு துணி எடுக்கறச்சே அவா துணிக்குள்ளேர்ந்து குதிச்சு வெளியே ஓடியிருக்கு அந்தப் பல்லி.
“பல்லிக்கா இத்தனை ஆர்பாட்டம்?” கேட்டுக்கலை நான்.
“எத்தனை பெரிய பல்லி?” இது என் மாமியார்.
‘டேய் உங்களுக்கு வந்தா ரத்தம். எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியாடா?’ இது என்னோட மைன்ட் வாய்ஸ்.
அதுக்குள்ளே அந்தப் பல்லி அது பத்திரமா தங்கி இருக்கிறதுக்கு எங்காத்துகுள்ளேயே ஒரு காட்டேஜ் கண்டு பிடிச்சிடுத்து.
எங்க டைனிங் ரூம் ஃபிரிட்ஜ் பக்கத்திலே ஒரு மரப் பெட்டி இருக்கும். அதுக்கு அடியிலே போய் உட்கர்ந்துடுத்து.
அதுக்கு அப்புறம் அதுவே ஒரு ரொட்டின் செட் பண்ணிடுத்து, தினமும் ராத்திரி எல்லா லைட்டையும் ஆஃப் பண்ண பிறகுதான் வெளியில் வரும். கார்த்தாலே வெளிச்சம் வந்தா தன்னோட காட்டேஜ்க்கு போயிடும்.
இதிலே எனக்குத்தான் ஒரு சிக்கல். நான் கார்த்தாலே அஞ்சரை மணிக்கு எழுந்து வந்தாகணும். அப்போ அது கிச்சன்லே ஜாலியா ரிலாக்ஸ் பண்ணிண்டு இருக்கும்.
சில நாள் மேடை மேலே உட்கார்ந்து இருக்கும். நான் உள்ளே போனா என் முன்னாடி வந்து குதிச்சு என்னைப் பார்த்து கண்ணடிக்கும்.
‘முருகா. நான் என்ன ஆவேன்?’
சரி. எல்லா பிரச்சனைக்கும் ஒரு தீர்வு உண்டே. இதுக்கும் ஒரு வழி கண்டு பிடிச்சேன். ஒரு நீளமான குச்சி. அது என் பெட் ரூம்லேயே இருக்கும்.
நான் தூங்கி எழுந்து வரும் போது அதை கையிலே எடுத்திண்டு “ப..ல்..லி ப..ல்..லி” ன்னு கூப்பிட்டுண்டே தான் கதவைத் திறப்பேன்.
ஒரு வேளை அது ஹாலிலே சுத்திண்டு இருந்தா என் குரல் கேட்டு குடுகுடுன்னு தன்னோட காட்டேஜுக்கு ஓடிடும். ஒரு வேளை கிச்சன்லே இருந்தா, பெட்ரூம் வாசிலில் இருந்தே அந்த குச்சியை வெச்சு கிச்சன் வாசிலிலே ரெண்டு தட்டு.
கரெக்டா வெளிலே ஓடி வந்து என்னைப் பார்த்து சிரிச்சிட்டு மரப்பெட்டிக்கு அடியிலே ஓடி போய் உட்கார்ந்துக்கும். அப்புறம் ராத்திரிதான் வெளியிலேயே வரும்.
இந்த ரொட்டின் அதுக்கும் பழகிடுத்து எனக்கும் பழகிடுத்து. ஒரு சில நாள் மட்டும் சாயங்கலாம் அதுக்கு என்னைப் பார்க்கணும் தோணும் போலிருக்கு. திடீர்னு பெட்டியை விட்டு வெளியிலே வந்து, என் முன்னாடி வந்து நிக்கும்.
நான் “வீல்”ன்னு ஒரு கத்து. திரும்பி குடுகுடுன்னு தன்னோட இடத்துக்கு ஓடிப் போயிடும்.
“என்னாலே முடியலை. நீ வெளியிலே போயிடேன்” அப்படின்னு அதுகிட்டே நடத்தின பேச்சு வார்த்தை எல்லாம் தோல்வி.
ஆனா ஒண்ணு மட்டும் முடிவு பண்ணிண்டேன். அதை என் பெட் ரூம்குள்ளே மட்டும் வர விடவே கூடாது அப்படின்னு.
அதனாலே ராத்திரி லைட் ஆஃப் பண்ணிட்டா ரூம் கதவை திறக்க கூடாதுன்னு ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்டாச்சு.
‘நமக்கு தூக்கம்தான் முக்கியம்’
ஆனாலும் அதுக்கும் ஆப்பு வைக்குறா மாதிரி வந்தது அந்த க்ளைமாக்ஸ்.
அன்னைக்கு ராத்திரி. நான் என்ன பண்ணேன், எப்படி ஏமாந்தேன் அப்படின்னு எனக்கே தெரியலை. வெளியிலே லைட் எல்லாம் ஆஃப் பண்ணிட்டு, ரூம் கதவை சாத்திட்டு உள்ளே லைட் போட்டுட்டு மல்லாக்க படுத்திட்டு விட்டத்தை பார்க்கிறேன், மேலே சுவத்திலே என்னைப் பார்த்து ஈன்னு இளிச்சிண்டு நிக்கறது அந்த அரை முழ மரப்பல்லி.
“முருகா! இப்போ என்ன பண்றது?”
லைட் ஆஃப் பண்ணா அது பாட்டுக்கு ஜாலியா அங்கேயும், இங்கேயும் ஓடறது. அது அப்படியே குதிச்சு என் மேலே ஓடறா மாதிரி ஒரு பிரமை.
உடனே ஓடிப் போய் லைட்டை போட்டுட்டேன். அதுக்குதான் வெளிச்சம்ன்னா பயமாச்சே. அப்போ சமத்தா ஓரமா போய் உட்கார்ந்துகறது அந்தப் பல்லி.
“ஹேய் லைட்டை ஆஃப் பண்ணு. மத்தவா தூங்க வேண்டாமா?” இது என் ஆத்துக்காரர்.
“நீங்க தூங்கணும் சரி. நான் உயிரோட இருக்க வேண்டாமா? இன்னைக்கு லைட் ஆஃப் பண்ண முடியாது” ஸ்ட்ரிக்டா சொல்லியாச்சு.
அவரை கூட சமாளிச்சாச்சு, இந்தப் பல்லியை எப்படி சமாளிக்கறது தெரியலையே.
மணி ராத்திரி ரெண்டு ஆகிடுத்து. “சங்கீத ஸ்வரங்கள்” அப்படின்னு பாட்டு பாடிண்டு அது பாட்டுக்கு ஜாலியா சுத்திண்டு இருக்கு.
நான் லைட் ஆஃப் பண்ண, போடன்னு மாத்தி மாத்தி விளையாடி டியர்ட் ஆகி கடைசியிலே கூப்பிட்டேன் முருகனை.
“முருகா. இந்தப் பல்லியை எப்படியாவது வெளியிலே போக சொல்லு முருகா. நான் உன் கோவிலுக்கு வரேன் முருகா” அப்படின்னு வேண்டிண்டு, லைட்டை போட்டு வெச்சிட்டு, ஜன்னல்லே இருந்த மஸ்கிட்டோ நெட்டை திறந்து வெச்சிட்டு அதையே பார்த்துண்டு உட்கார்ந்திண்டு இருக்கேன்.
வாய் மட்டும் “முருகா முருகான்னு சொல்லிண்டே இருக்கு.
இந்த நேரத்திலே அந்தப் பல்லி கிட்டே முருகன் என்ன சொன்னான் அப்படின்னு நிஜமா தெரியலை. மெது மெதுவா அது திறந்து இருக்கும் அந்த ஜன்னலை நோக்கி மூவ் ஆறது. நான் அசையாம அதையே பார்த்திண்டு இருக்கேன்.
அடுத்து முழுசா ஒரு நிமிஷம் முடியறதுக்குள்ளே மெது மெதுவா நகர்ந்து வந்து ஜன்னல் வழியா வெளியிலே இருட்டுக்கு போயிடுது. விழுந்தடிச்சு ஓடிப் போய் அந்த மஸ்கிட்டோ நெட்டை மூடிட்டேன்.
“தேங்க்ஸ் மை டியர் முருகா. தேங்க்ஸ் மை டியர் பல்லி”
அன்னைக்கு ராத்திரி ரொம்ப நிம்மதியா தூங்கினேன். மறுநாள் கார்த்தாலே கையிலே குச்சி இல்லாம நிம்மதியா எழுந்து வந்தேன்.
அடுத்து கடகடன்னு கோவிலுக்கு போய் முருகனுக்கு தேங்க்ஸ் சொல்லிட்டு வந்திட்டேன்.
இப்பவும் கூட கிச்சன் யூடிலிட்டி லே பல்லி குடித்தனம் நடத்திண்டுதான் இருக்கு. ஆனா அது எல்லைக்கு நான் போறதும் இல்லை என் எல்லைக்கு அது வருவதும் இல்லை. எல்லாம் முருகன் செயல்.

Author: siteadmin
Article Title: 23. லேடி தெனாலி - வத்சலா ராகவன்
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.