• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

3. சண்டே ஸ்பெஷல் - ஆர். சுந்தரராஜன்

siteadmin

Administrator
Staff member
Feb 3, 2026
62
15
8
chennai
சண்டே ஸ்பெஷல்

உலகத்துக்கு ஞாயிறு என்றால் ஓய்வு நாள். ஆனால் தோத்தாத்திரிக்குப் பார்த்தால் அது “வேலைகள் மழை பெய்யும் நாள்”!

அந்த ஞாயிற்றுக்கிழமை.

அதிகாலை ஐந்து மணிக்கே அலாரம் “டிங் டிங்” என்று கத்த ஆரம்பித்தது.

தோத்தாத்திரி படுக்கையில் புரண்டு கொண்டு தலையணையை காதில் அழுத்திக் கொண்டான்.

“இன்று மட்டும் சண்டே வராம இருந்தா என்ன நல்லா இருந்திருக்கும்…” என்று மனசுக்குள் முணுமுணுத்தான்.

அதே நேரத்தில் சமையலறையில் இருந்து ஒரு மின்னல் குரல்.

“ஏங்ங்ங்க......!”

அந்த குரல் கேட்டவுடனே அவன் உடம்பு ஸ்பிரிங்கு மாதிரி நேராக உட்கார்ந்தது.

அது வேறு யாரும் இல்லை… வீட்டின் பிரதமர் அகிலாண்டம்!

“மார்க்கெட்டுக்கு போய் காய்கறி வாங்கிட்டு வாங்க. சீக்கிரம் போங்க… நல்ல தக்காளி வந்திருக்கு!” என்றாள்.

தோத்தாத்திரி மெதுவாக எழுந்து பையை எடுத்தான்.

வீட்டைவிட்டு வெளியே போகும் போது தன்னிடமே சொன்னான்.

“சண்டே வந்தாலே எனக்கு ஆயிரத்தெட்டு வேலை!”

மார்க்கெட்டுக்குள் நுழைந்தவுடனே தோத்தாத்திரி அதிர்ச்சியடைந்தான்.

எங்க பார்த்தாலும் கூட்டம்.

“அம்மா தக்காளி எவ்வளவு?” என்று கேட்டான்.

“கிலோ 50!” என்றாள் கடைக்காரி.

“ஐயோ! நேற்று 35 தான்!” என்றான் தோத்தாத்திரி.

“நேற்று நேற்று… இன்று இன்று!” என்று சிரித்தாள் கடைக்காரி.

தோத்தாத்திரி மனசுக்குள் சொன்னான்.

“இந்த தக்காளி விலை ஏறுற வேகம் ராக்கெட்டையும் மிஞ்சுது!”

கத்தரிக்காய் வாங்கினான். வெண்டைக்காய் வாங்கினான்.

முருங்கைக்காய் வாங்கும் போது கடைக்காரன் கேட்டான்.

“அண்ணே வீட்டில் எத்தனை பேர்?”

“நான் ஒருத்தன் தான்… ஆனா வாங்குறது வாரத்துக்கு!” என்றான் தோத்தாத்திரி.

பைகள் இரண்டு நிரம்பின.

அதை தூக்கிக் கொண்டு வீட்டுக்கு நடக்க ஆரம்பித்தான்.

நடந்துகொண்டே முணுமுணுத்தான்.

“இது காய்கறியா இல்ல ஜிம் டம்பெல்லா?”

வீட்டுக்குள் வந்தவுடனே அகிலாண்டம் பைகளைப் பார்த்தாள்.

“இவ்வளவு நேரம்?”

“மார்க்கெட்ட்ல கூட்டம்…” என்று மெதுவாக சொன்னான்.

“சரி… இப்போ காரும் பைக்கும் கழுவுங்க.”

அந்த வார்த்தை கேட்டவுடனே தோத்தாத்திரி முகம் சுருங்கியது.

“நான் கார்வாஷ் சென்டரா?” என்று மனசுக்குள் கேட்டான்.

குழாயைத் திறந்து காரை கழுவ ஆரம்பித்தான்.

அந்த நேரத்தில் அண்டை வீட்டுக்காரர் பார்த்து கேட்டார்.

“ஏன் தோத்தாத்திரி… ஞாயிற்றுக்கிழமைலேயே வேலை?”

தோத்தாத்திரி சிரித்துக் கொண்டு சொன்னான்.

“வீட்டுக்குள்ளே தான் என் ஆபீஸ்!”

கார் கழுவினான். பைக் கழுவினான்.

அதற்குள் அகிலாண்டம் மீண்டும் வந்தாள்.

“போர்ட்டிகோவும் தண்ணீர் ஊற்றி துடைச்சு விடுங்க.”

தோத்தாத்திரி மேலே பார்த்து சொன்னான்.

“ஓ கடவுளே… நான் வீட்டு வேலைக்காரனா?”

போர்ட்டிகோ துடைத்துக் கொண்டிருந்த போது மீண்டும் குரல்.

“ஏங்ங்ங்க!”

“இன்னும் என்ன வேலை?”

“அழகிய குளிக்க வைக்கணும்.”

அழகி என்பது அவர்களுடைய செல்ல நாய்.

அதை கேட்டவுடனே தோத்தாத்திரி சிரித்தான்.

“நாய்க்கும் ஸ்பா ட்ரீட்மெண்ட்!”

அழகியை பிடிக்க முயன்றான்.

அழகி ஓட ஆரம்பித்தது.

ஒரு நாய் முன்னால்… ஒரு மனிதன் பின்னால்!

அண்டை வீட்டார் எல்லாம் பார்த்து குலுங்கி சிரித்தார்கள்.

“ஏய் அழகி… நின்னு!” என்று ஓடினான் தோத்தாத்திரி.

இறுதியில் பிடித்து குளிக்க வைத்தான்.

அழகி மட்டும் சுத்தம்.

தோத்தாத்திரி முழுக்க நனைந்தான்!

அதற்குள் அகிலாண்டம் மீண்டும் ஒரு பட்டியல் எடுத்தாள்.

“இன்னும் ரெண்டு கதவுக்கு லாக் மாத்தணும்.”

“நான் லாக் ஸ்மித்தா?” என்று தோத்தாத்திரி முணுமுணுத்தான்.

ஸ்க்ரூ டிரைவர் எடுத்தான்.

கதவைக் கழற்ற ஆரம்பித்தான்.

ஒரு ஸ்க்ரூ கீழே விழுந்தது.

அதைத் தேடி தரையில் படுத்தான்.

அந்த நேரத்தில் அடுத்த வீட்டுக் குழந்தை கேட்டான்.

“அண்ணா… நீங்கள் மெக்கானிக்கா?”

தோத்தாத்திரி சிரித்துக் கொண்டு சொன்னான்.

“இல்ல பையா… குடும்ப மனிதன்!”

பாதி மணி நேர போராட்டத்துக்குப் பிறகு லாக் மாத்தி முடித்தான்.

“ஆஹா… ஒரு வேலை முடிந்தது!” என்று சுவாசம் விட்டான்.

அந்த நேரத்தில் அகிலாண்டம் மீண்டும் குரல் விட்டாள்.

“கம்பியுட்டர் டேபிள்ல கீபோர்ட் ட்ரே உடைஞ்சிருச்சு.”

“அதை மாத்துங்க.”

“ஐயோ! நான் ஐடி இன்ஜினியரா?” என்று தலையை பிடித்தான்.

ஸ்க்ரூ டிரைவர் எடுத்தான்.

முயற்சி செய்து ட்ரேவை பொருத்தினான்.

அதை இழுத்துப் பார்த்தான்.

ட்ரே நேராக கீழே விழுந்தது!

அதைப் பார்த்து அகிலாண்டம் குலுங்கி சிரித்தாள்.

“இது தான் உங்க வேலை!” என்றாள்.

மதிய நேரம் வந்தது.

தோத்தாத்திரி சோபாவில் விழுந்து படுத்தான்.

உடம்பு முழுக்க சோர்வு.

அகிலாண்டம் அருகே வந்து கேட்டாள்.

“சாப்பாடு வைக்கட்டா?”

தோத்தாத்திரி மெதுவாக கண் திறந்தான்.

“அகிலாண்டம்… ஒரு கேள்வி.”

“என்ன?”

“இந்த உலகத்துல ஞாயிற்றுக்கிழமை யாருக்குத்தான் விடுமுறை?”

அகிலாண்டம் சிரித்தாள்.

“விடுமுறை எல்லாருக்கும்… வேலை உங்களுக்கு!”

தோத்தாத்திரி தலையை பிடித்துக் கொண்டு சொன்னான்:

“ஆமா… எதுக்கு சண்டே வருது?

----ஆர். சுந்தரராஜன்
 
Attachments

  • 1773666612718.png
    1773666612718.png
    2.9 KB · Views: 0
Last edited by a moderator:

Author: siteadmin
Article Title: 3. சண்டே ஸ்பெஷல் - ஆர். சுந்தரராஜன்
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Haha
Reactions: saranya sathish

saranya sathish

New member
Mar 31, 2026
10
0
1
Coimbatore
சண்டே ஸ்பெஷல்

உலகத்துக்கு ஞாயிறு என்றால் ஓய்வு நாள். ஆனால் தோத்தாத்திரிக்குப் பார்த்தால் அது “வேலைகள் மழை பெய்யும் நாள்”!

அந்த ஞாயிற்றுக்கிழமை.

அதிகாலை ஐந்து மணிக்கே அலாரம் “டிங் டிங்” என்று கத்த ஆரம்பித்தது.

தோத்தாத்திரி படுக்கையில் புரண்டு கொண்டு தலையணையை காதில் அழுத்திக் கொண்டான்.

“இன்று மட்டும் சண்டே வராம இருந்தா என்ன நல்லா இருந்திருக்கும்…” என்று மனசுக்குள் முணுமுணுத்தான்.

அதே நேரத்தில் சமையலறையில் இருந்து ஒரு மின்னல் குரல்.

“ஏங்ங்ங்க......!”

அந்த குரல் கேட்டவுடனே அவன் உடம்பு ஸ்பிரிங்கு மாதிரி நேராக உட்கார்ந்தது.

அது வேறு யாரும் இல்லை… வீட்டின் பிரதமர் அகிலாண்டம்!

“மார்க்கெட்டுக்கு போய் காய்கறி வாங்கிட்டு வாங்க. சீக்கிரம் போங்க… நல்ல தக்காளி வந்திருக்கு!” என்றாள்.

தோத்தாத்திரி மெதுவாக எழுந்து பையை எடுத்தான்.

வீட்டைவிட்டு வெளியே போகும் போது தன்னிடமே சொன்னான்.

“சண்டே வந்தாலே எனக்கு ஆயிரத்தெட்டு வேலை!”

மார்க்கெட்டுக்குள் நுழைந்தவுடனே தோத்தாத்திரி அதிர்ச்சியடைந்தான்.

எங்க பார்த்தாலும் கூட்டம்.

“அம்மா தக்காளி எவ்வளவு?” என்று கேட்டான்.

“கிலோ 50!” என்றாள் கடைக்காரி.

“ஐயோ! நேற்று 35 தான்!” என்றான் தோத்தாத்திரி.

“நேற்று நேற்று… இன்று இன்று!” என்று சிரித்தாள் கடைக்காரி.

தோத்தாத்திரி மனசுக்குள் சொன்னான்.

“இந்த தக்காளி விலை ஏறுற வேகம் ராக்கெட்டையும் மிஞ்சுது!”

கத்தரிக்காய் வாங்கினான். வெண்டைக்காய் வாங்கினான்.

முருங்கைக்காய் வாங்கும் போது கடைக்காரன் கேட்டான்.

“அண்ணே வீட்டில் எத்தனை பேர்?”

“நான் ஒருத்தன் தான்… ஆனா வாங்குறது வாரத்துக்கு!” என்றான் தோத்தாத்திரி.

பைகள் இரண்டு நிரம்பின.

அதை தூக்கிக் கொண்டு வீட்டுக்கு நடக்க ஆரம்பித்தான்.

நடந்துகொண்டே முணுமுணுத்தான்.

“இது காய்கறியா இல்ல ஜிம் டம்பெல்லா?”

வீட்டுக்குள் வந்தவுடனே அகிலாண்டம் பைகளைப் பார்த்தாள்.

“இவ்வளவு நேரம்?”

“மார்க்கெட்ட்ல கூட்டம்…” என்று மெதுவாக சொன்னான்.

“சரி… இப்போ காரும் பைக்கும் கழுவுங்க.”

அந்த வார்த்தை கேட்டவுடனே தோத்தாத்திரி முகம் சுருங்கியது.

“நான் கார்வாஷ் சென்டரா?” என்று மனசுக்குள் கேட்டான்.

குழாயைத் திறந்து காரை கழுவ ஆரம்பித்தான்.

அந்த நேரத்தில் அண்டை வீட்டுக்காரர் பார்த்து கேட்டார்.

“ஏன் தோத்தாத்திரி… ஞாயிற்றுக்கிழமைலேயே வேலை?”

தோத்தாத்திரி சிரித்துக் கொண்டு சொன்னான்.

“வீட்டுக்குள்ளே தான் என் ஆபீஸ்!”

கார் கழுவினான். பைக் கழுவினான்.

அதற்குள் அகிலாண்டம் மீண்டும் வந்தாள்.

“போர்ட்டிகோவும் தண்ணீர் ஊற்றி துடைச்சு விடுங்க.”

தோத்தாத்திரி மேலே பார்த்து சொன்னான்.

“ஓ கடவுளே… நான் வீட்டு வேலைக்காரனா?”

போர்ட்டிகோ துடைத்துக் கொண்டிருந்த போது மீண்டும் குரல்.

“ஏங்ங்ங்க!”

“இன்னும் என்ன வேலை?”

“அழகிய குளிக்க வைக்கணும்.”

அழகி என்பது அவர்களுடைய செல்ல நாய்.

அதை கேட்டவுடனே தோத்தாத்திரி சிரித்தான்.

“நாய்க்கும் ஸ்பா ட்ரீட்மெண்ட்!”

அழகியை பிடிக்க முயன்றான்.

அழகி ஓட ஆரம்பித்தது.

ஒரு நாய் முன்னால்… ஒரு மனிதன் பின்னால்!

அண்டை வீட்டார் எல்லாம் பார்த்து குலுங்கி சிரித்தார்கள்.

“ஏய் அழகி… நின்னு!” என்று ஓடினான் தோத்தாத்திரி.

இறுதியில் பிடித்து குளிக்க வைத்தான்.

அழகி மட்டும் சுத்தம்.

தோத்தாத்திரி முழுக்க நனைந்தான்!

அதற்குள் அகிலாண்டம் மீண்டும் ஒரு பட்டியல் எடுத்தாள்.

“இன்னும் ரெண்டு கதவுக்கு லாக் மாத்தணும்.”

“நான் லாக் ஸ்மித்தா?” என்று தோத்தாத்திரி முணுமுணுத்தான்.

ஸ்க்ரூ டிரைவர் எடுத்தான்.

கதவைக் கழற்ற ஆரம்பித்தான்.

ஒரு ஸ்க்ரூ கீழே விழுந்தது.

அதைத் தேடி தரையில் படுத்தான்.

அந்த நேரத்தில் அடுத்த வீட்டுக் குழந்தை கேட்டான்.

“அண்ணா… நீங்கள் மெக்கானிக்கா?”

தோத்தாத்திரி சிரித்துக் கொண்டு சொன்னான்.

“இல்ல பையா… குடும்ப மனிதன்!”

பாதி மணி நேர போராட்டத்துக்குப் பிறகு லாக் மாத்தி முடித்தான்.

“ஆஹா… ஒரு வேலை முடிந்தது!” என்று சுவாசம் விட்டான்.

அந்த நேரத்தில் அகிலாண்டம் மீண்டும் குரல் விட்டாள்.

“கம்பியுட்டர் டேபிள்ல கீபோர்ட் ட்ரே உடைஞ்சிருச்சு.”

“அதை மாத்துங்க.”

“ஐயோ! நான் ஐடி இன்ஜினியரா?” என்று தலையை பிடித்தான்.

ஸ்க்ரூ டிரைவர் எடுத்தான்.

முயற்சி செய்து ட்ரேவை பொருத்தினான்.

அதை இழுத்துப் பார்த்தான்.

ட்ரே நேராக கீழே விழுந்தது!

அதைப் பார்த்து அகிலாண்டம் குலுங்கி சிரித்தாள்.

“இது தான் உங்க வேலை!” என்றாள்.

மதிய நேரம் வந்தது.

தோத்தாத்திரி சோபாவில் விழுந்து படுத்தான்.

உடம்பு முழுக்க சோர்வு.

அகிலாண்டம் அருகே வந்து கேட்டாள்.

“சாப்பாடு வைக்கட்டா?”

தோத்தாத்திரி மெதுவாக கண் திறந்தான்.

“அகிலாண்டம்… ஒரு கேள்வி.”

“என்ன?”

“இந்த உலகத்துல ஞாயிற்றுக்கிழமை யாருக்குத்தான் விடுமுறை?”

அகிலாண்டம் சிரித்தாள்.

“விடுமுறை எல்லாருக்கும்… வேலை உங்களுக்கு!”

தோத்தாத்திரி தலையை பிடித்துக் கொண்டு சொன்னான்:

“ஆமா… எதுக்கு சண்டே வருது?

----ஆர். சுந்தரராஜன்
அதில் என்ன சந்தேகம் ஞாயிறு வருது குடும்ப தலைவர்களுக்கு வேலை கொடுக்கத்தான்🤣