• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

ஃபலாஃபெல்

siteadmin

Administrator
Staff member
Feb 3, 2026
75
33
18
chennai
ஃபலாஃபெல்





தேவையான பொருள்கள் :






வெள்ளைக் கொண்டக்கடலை : 1 கப்



வெங்காயம் : 1



கொத்தமல்லித் தளைகள் : 1/4 கப்



பூண்டு பற்கள் : 3-5



கடலை மாவு : 1 1/2 மேஜைக்கரண்டி (தேவைப்பட்டால் )



சீரகம் : 2 தேக்கரண்டி



காய்ந்த மிளகாய் : 2



உப்பு : தேவைக்கேற்ப



எண்ணெய் : பொரிப்பதற்கு தேவையான அளவு





செய்முறை :



கடலையை இரவு முழுவதும் ஊற வைத்து எடுத்து கொள்ளவும்.



ஒரு மிக்ஸி ஜாரில் மேலே சொல்லி இருக்கும் எல்லா பொருள்களையும் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.



மாவு சிறிது தளர்த்தியாக இருந்தால், கடலை மாவு கலந்து கொள்ளலாம்.



பின்னர் ஒரு வாணலியில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் அதில் மேலே தயாரித்துவைத்துள்ள மாவினை சிறு சிறு வடைகளாகத் தட்டி எண்ணெய்யில் பொறித்து எடுத்தால் சுவையான பலாபெல்தயார்.



குறிப்புகள் :



இது ஒரு மிடில் ஈஸ்டர்ன் உணவு வகை. இதனோடு தஹினி சாஸ் சேர்த்து பிதா ப்ரெட்டின் நடுவில் வைத்துபரிமாறுவார்கள். இது கிட்டத்தட்ட நம்ம ஊர் பருப்புவடை மாதிரி தான் இருக்கும்.



(தஹினி சாஸ் எள்ளை அரைத்து செய்யும் ஒரு டிப்)



எண்ணெய்யில் பொறித்து எடுப்பதற்கு பதிலாக, ஓவெனில் வைத்து பேக் செய்தும் தயாரிக்கலாம்.



வடைகளாக தட்டுவதற்கு பதிலாக உருண்டைகளாகவும் செய்து பரிமாறலாம்.



கொத்தமல்லித்தளைகளும், பார்ஸ்லியும் கலந்து கிறீன் பலாபெல்லாகவோ அல்லது மஞ்சள் சேர்த்து எல்லோபலாபெல்லாகவோ தயாரிக்கலாம்.