அத்தியாயம் - 6
சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு.. மகத தேசத்தை நந்தவம்சத்தைச் சேர்ந்த தனநந்தன் என்ற அரசன் ஆட்சி செய்து வந்தான். க்ஷத்திரிய குலத்தில் பிறந்த மன்னனின் தலைமகன் தான் நாட்டை ஆள முடியும் என்ற பழக்கத்தை மாற்றி நந்த வம்சத்தின் முதல் அரசனானவன் தனநந்தனின் தந்தை மகாபத்மநந்தன்.
சிசுநாக வம்சத்தில் வந்த அரசன் மஹாநந்திக்கும் அரண்மனை சேடிப்பெண் ஒருவருக்கும் பிறந்தவன் மகாபத்மநந்தன். அரசனின் பிள்ளை என்றாலும் தாய் சத்ரிய வம்சத்தில் வந்தவள் அல்ல என்பதால் நந்தனை நாட்டின் மக்கள் கூட மதித்ததில்லை. ஆனால் மற்ற இளவரசர்களை போல் இன்னும் சொல்லப் போனால் அவர்களை விடவும் வீரனாகவும் திறமைசாலியாகவும் விளங்கினான் மகாபத்மநந்தன்.
அவனது தந்தை மகாநந்தியின் மறைவுக்குப் பிறகு ஆட்சியில் அமர்வது யார் என்ற கேள்விக்கே இடம் அளிக்காது, க்ஷத்ரிய வம்சத்தில் தோன்றிய தனது சகோதரர் அனைவரையும் சாமர்த்தியமாக வீழ்த்தி அரியணை ஏறினான் மகாபத்மநந்தன். பாஞ்சாலம், காசி நாடு, கோசல நாடு, ஹேஹேய நாடு, கலிங்க நாடு, அஸ்மகம், சூரசேனம், மிதிலை போன்ற நாடுகளை வென்று வட இந்தியாவில் நந்தப் பேரரசை விரிவுபடுத்தினான். அதனால் "சர்வ காஷ்ட்ரியந்தகர்" அதாவது க்ஷத்திரியர்களை அளிப்பவன் என்று அழைக்கப்பட்டான்.
நந்தவம்சத்தை நிறுவி அதன் முதல் அரசன் ஆனான். அவனது நீண்ட கால அரசாட்சியில் நந்த தேசம் பெரும் வளர்ச்சியைக் கண்டது. பாரதத்தின் முதல் பேரரசு என்று நந்த தேசத்தைப் போற்றினார்கள். மகாபதுமநந்தன், ஒரு பரந்த ராஜ்யத்தை நடத்துவதற்குத் தேவையான திறமையான நிர்வாகத் திறமையைக் கொண்டிருந்தான். தேவையான வரிகள் விதிக்கப்பட்டு முறையாக வசூலிக்கப்பட்டன.
இரண்டு லட்சம் காலாட்படை, இருபதாயிரம் குதிரைப்படை, இரண்டாயிரம் தேர் மற்றும் மூவாயிரம் போர் யானைகள் கொண்ட மிகப்பெரிய இராணுவம் அவனால் உருவாக்கப் பட்டது. எதிரி தாக்குதல்களைத் தடுத்து, நந்த வம்சத்தை வெல்ல முடியாததாக மாற்றியது. இந்த காலத்தில் தான் போரில் முதல் முறையாக பெரிய அளவில் யானைகளைப் பயன்படுத்த ஆரம்பித்தனர்.
நந்த தேசம், பரந்த செம்பு மற்றும் இரும்பு இருப்புக்களைக் கொண்டிருந்தது. பெரும்பாலான நிலப்பரப்பு கங்கைப் பள்ளத்தாக்கில் அமைந்திருந்ததால் வளமான விவசாய பூமியாகவும் திகழ்ந்தது. வணிகமும் அதிகரித்து நாட்டின் செல்வத்தைப் பெருக்கியது. நாட்டின் ஆட்சியாளர் க்ஷத்திரியர் அல்லாதவர் என்பதால் அனைத்து வர்ணத்தைச் சார்ந்தோரும் எந்தப் பாகுபாடும் இல்லாமல் ஆட்சியில் முக்கியத்துவம் பெற்றனர். எந்த ஒரு வர்ணத்தைச் சார்ந்தோருக்கும் தனிப்பட்ட முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.
நந்தனின் ஆட்சி பரப்பு, பண்டைய பரத கண்டத்தின் கிழக்கில் வங்காளம் முதல் மேற்கில் பஞ்சாப் வரையும், வடக்கில் நேபாளம் முதல் தெற்கில் விந்திய மலைத்தொடர் வரை பரவியிருந்தது. இப்படி மகா பதும நந்தனால் உருவாக்கப் பட்ட பேரரசின் அடுத்த மன்னனாக முடிசூட்டிக் கொண்ட அவனது புதல்வன் தனநந்தன் தந்தையைப் போல் அல்லாமல் வேறு சில கொள்கைகளைக் கொண்டிருந்தான்.
அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்துப் போக வேண்டும் என்றில்லாமல் நேரடியாகவே தனது க்ஷத்திரிய எதிர்ப்பை வெளிப்படுத்தினான். மற்றவர்களை இழிவுபடுத்தும் தீய குணங்களால் பொதுமக்கள் மன்னன் மீது கடும் வெறுப்பு கொண்டிருந்தனர். பல்வேறு பொருட்களின் மீது வரி விதிப்பதன் மூலம் அவன் தனது செல்வத்தை குவித்தான். கங்கை ஆற்றங்கரையில் ஒரு பாறையைக் குடைந்து மற்ற நாடுகளில் இருந்து கொண்டு வந்த தங்கத்தை எல்லாம் அங்கே சேமித்தான்.
மக்களைப் பிழிந்து பணம் குவிப்பதில் அவன் கொண்டிருந்த ஆர்வம், அவன் மீது மிகுந்த வெறுப்பை ஏற்படுத்தியது. க்ஷத்திரிய எதிர்ப்புக் கொள்கை, வைதீக பிராமணர்களையும் க்ஷத்திரியர்களையும் அவனுக்கு எதிராக ஆக்கியது. மேலும், அவன் மக்களிடமிருந்து வரி வசூலிக்க அவன் மிகவும் கொடூரமான வழிகளைக் கையாண்டான். மொத்தத்தில், அவனது ஆட்சியின் போது மக்கள் மிகவும் துன்பப்பட்டனர்.
ஒரு நாள், அவசர ஆலோசனைக்காக அரசவை கூடி இருந்தது. ராஜ்ஜியத்தின் மந்திரிகள், பிரதானிகள், தளபதிகள் மற்றும் பல முக்கியமான பிரமுகர்களும் மன்னனின் வரவுக்காகக் காத்திருந்தனர். அனைவரது முகத்திலும் கடுமையான கோபம் குடிகொண்டிருந்தது.
அரசனின் சிம்மாசனத்தை ஒட்டி ஒன்பது ஆசனங்கள் ஒன்று போல அமைக்கப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட சிம்மாசனம் போலவே காட்சியளித்த அந்த ஆசனங்கள் அரசனின் இளைய சகோதரர்களுக்கு உரியது. அவர்கள் அனைவரும் தேசத்தில் தலைமை மந்திரி, பிரதான சேனாதிபதி, தனாதிகாரி போன்ற பல முக்கியமான பொறுப்புகளை வகித்தனர்.
அவர்களுள் இளையவன் தேவசேனன். அவன் தான் இன்று அவசரமாக அரசவை கூடுவதற்குக் காரணமானவன்.
சற்று நேரத்தில் காவலாளி கட்டியம் கூற மன்னன் தனநந்தன் அவைக்குள் நுழைந்தான். அவனது தோற்றம் மரியாதைக்குரிய மன்னனுக்கு உரியதாக இல்லை. மாறாக பார்ப்பவர் கண்டு நடுங்கும்படியான ஒரு தோற்றத்தில் இருந்தான். மன்னனைக் கண்டதும் அனைவரும் எழுந்து நிற்க தேவசேனன் மட்டும் அலட்சியமாக இருக்கையில் அமர்ந்திருந்தான்.
அவனை ஒரு கோபப் பார்வை பார்த்தபடியே சென்று அரியாசனத்தில் அமர்ந்தான் தனநந்தன். மகத நாட்டில் மாதம் மும்மாரி பெய்கிறதோ இல்லையோ தேவசேனனைப் பற்றிய வழக்கு தவறாமல் வந்து சேருகிறது. இளைய சகோதரனை என்ன செய்வது என்றே மூத்தோருக்குப் புரியவில்லை. இன்று என்ன பிரச்சினையைக் கொண்டு வந்திருக்கிறானோ என்று அனைவரும் கவலையுடன் அமர்ந்திருந்தனர். பெரும் சாம்ராஜ்யத்தை தன் இஷ்டப்படி ஆளும் தனநந்தனுக்கே மனக்கிலேசத்தை உருவாக்கிக் கொண்டிருந்தான் அவன்.
தேவசேனன் இருபதுகளின் ஆரம்பத்தில் இருந்தான். சிறந்த போர் பயிற்சி பெற்றவன். மக்களைத் துன்புறுத்துவதில் அரசனையே மிஞ்சுபவனாக இருந்தான். சாதாரண மக்களை அற்பமான தவறுகளுக்காகக் கொன்று குவித்தான். அவனது இந்த குணத்தால் அரண்மனையில் பல பணியாளர்கள் தங்கள் உயிரை இழந்தனர். இதனால் தலைநகர மக்களின் பெரும் அதிருப்திக்கு ஆளானான். அந்த அதிருப்தி அரசனுக்கும் ஆட்சிக்கும் பிரச்சினையாக உருவெடுக்கக் கூடிய அபாயம் உள்ளது என்று தனநந்தனைப் பலரும் எச்சரிக்கை செய்த வண்ணம் இருந்தனர். அவனும் சகோதரனின் பிரச்சினைக்கு இன்று ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் முடிவோடு தான் இருந்தான்.
அதற்காகவே காத்திருந்தாற்போல பெரும் பிரச்சனை ஒன்று இப்போது வழக்காக அரசவைக்கு வந்திருக்கிறது. சிசுபாலனின் பெரிய பலவீனம் பெண்கள். பருவ வயதை எட்டியது முதலே அனைத்துப் பெண்களையும் பாரபட்சம் இல்லாமல் துகிலுரிவது போலவே பார்ப்பதை அவன் வாடிக்கையாகக் கொண்டிருந்தான். அவனது பார்வை சற்றே அதிகமாக யார் மீது விழுந்தாலும் அந்தப் பெண் அவனது அந்தப்புரத்துக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக இருந்தது.
ஒரு நாளில் பெரும் பகுதியைப் பெண்களுடனே கழித்தவனது பார்வை மணமான பெண்களின் புறம் திரும்பிய போது அவனது இரண்டாம் சகோதரன் பூதபாலன் தலையிட்டு அவனுக்கெனவே பல கணிகைகளை பணியமர்த்த ஏற்பாடு செய்தான்.
அந்த கணிகைகளிடம் அவன் நடந்துகொள்வது கொடுமையாக இருந்தது. ஏனென்று கேட்டால், அவர்கள் அடிமைகள் என்றும், அவர் விரும்பியபடி தங்கள் எஜமானரை மகிழ்விக்க வேண்டும் என்றும் அவன் அலட்சியமாக பதிலளித்தான்.
மணம் முடித்து வைக்கலாம் என்றால் அரச வம்சத்தை சேர்ந்த எவரும் அவனுக்குப் பெண் கொடுக்க மறுத்தனர். அவனது தொந்தரவு தரும் நடத்தையை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. சமீபத்தில் சில பெண்கள் அவனது கொடுமைக்கு ஆளாகித் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள இப்போது அவசரமாக அரசவை கூடியிருக்கிறது.
மகத நாட்டின் தலைமைக் காவல் அதிகாரியாக இருக்கும் பூதபாலன், தனநந்தனின் மூன்றாவது சகோதரன். மக்களைக் காக்கும் பொறுப்பில் இருப்பவனுக்கு இளைய சகோதரனின் நடத்தை பெரும் பிரச்சனையாக இருந்தது. வரிகள் மூலம் மக்களைக் கொடுமைப்படுத்தினாலும் தனநந்தனின் ஆட்சியில் பெண்களுக்கு அச்சுறுத்தல்கள் இருந்ததில்லை.
“சிசுபாலா! எவரேனும் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டால் தயவு தாட்சண்யம் பாராமல் கடுமையாக தண்டிக்கப்பட படவேண்டும் என்பது நமது சட்டம். அப்படிப்பட்ட தேசத்தில் நாடாளும் மன்னனின் சகோதரனே அந்தத் தவறைச் செய்தால் நாடு என்னவாகும்? நமது தேசத்தில் நீ செய்த பிழைக்குத் தண்டனை என்ன என்பதை நீ அறிவாய் அல்லவா?“ தனநந்தன், தனது இளைய சகோதரனைப் பார்த்துக் கோபமாக வினவினான்.
“பிழையா? எனது செயல்களில் பிழையேதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அழகான பெண்களைப் பார்க்கும் போது ஆசை வரவில்லை என்றால் ஒருவன் ஆணாக இருக்கவே முடியாது. நான் ஒரு முழுமையான ஆண் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறேன். இதில் தவறென்ன?” சிசுபாலனின் குரலில் தொனித்த அலட்சியத்தில் அரசவையில் இருந்த அனைவரும் கொதித்துப் போனார்கள்.
தனநந்தனும் அவனது மற்ற சகோதரர்களும் கண்களால் பேசிக் கொண்டார்கள். பூதபாலனைப் பார்த்து மன்னன் சமிக்ஞை செய்தான். அதனைப் புரிந்து கொண்டவன் எழுந்து நின்று பேச ஆரம்பித்தான்.
“சிசுபாலா! பெண்ணாசை கொண்டு வீழ்ந்த பலரையும் நீ கேள்விப்பட்டிருப்பாய். நீயோ சிறந்த வீரன். எதிர்காலத்தில் நமது பரந்த மகத நாட்டின் தளபதியாக செயல்படும் அளவுக்குத் திறமை மிகுந்தவன். உன்னைப் போன்ற வீரர்களால் தான் அண்டை நாடுகளை வீழ்த்தி நாட்டை விரிவுபடுத்த முடியும். பெண் மோகத்தால் வீழ்ந்தவர் வரிசையில் உன் பெயர் இடம் பெற வேண்டுமா அல்லது மாவீரன் என்று பெயரெடுக்க வேண்டுமா என்பதை நீயே முடிவு செய்.”
பூதபாலன் பேசப் பேச சிசுபாலனின் உள்ளிருந்த வீரன் விழித்துக் கொண்டான்.
“இப்படி ஒரு வாய்ப்பு இருப்பதாக இதுநாள் வரையில் என்னிடம் ஏன் கூறவில்லை? இதோ இப்போதே புறப்படுகிறேன். நாலாபுறமும் மகதத்தின் எதிரிகளைப் பந்தாடுவதே இனி எமது தலையாய நோக்கம். எனக்கான படையை நானே தயார் செய்து கொள்வேன். எந்த திசையில் எனது பணியைத் தொடங்க வேண்டும் என்று உத்தரவிடுங்கள். வெகு விரைவில் படையுடன் தயாராகிறேன்”
தனது வீரத்திற்கு விடப்பட்ட சவாலை உடனே ஏற்றுக் கொண்டான் சிசுபாலன்.
“நாட்டின் மேற்கு எல்லையில் அமைந்துள்ள அவந்தி, பௌரவம் போன்ற சிற்றரசுகள் இன்னும் நந்த வம்சத்திற்கு அடிபணிய மறுத்துத் தனித்து இயங்குகின்றன. நீ அவற்றை நமது தேசத்துடன் இணைக்க வேண்டும். இங்கிருந்து உனக்குத் தேவையான படைகளை அழைத்துச் செல். ஆயிரம் மைல்களுக்கு அப்பால் செல்ல வேண்டும். தேவையான உணவுப் பொருட்களுடன் செல்வது அவசியம். ஆங்காங்கே தங்கி ஓய்வெடுத்துக் கொண்டு செல்லுங்கள். அவசரப்பட்டு செய்யும் எந்த காரியமும் வெற்றி அடையாது. வெற்றியுடன் திரும்பிய வா.”
நாட்டின் அரசன் என்று சில கட்டளைகளையும் தம்பிக்கு அண்ணன் என்று சில அக்கறையான அறிவுரைகளையும் வாழ்த்தையும் வழங்கினான் தனநந்தன். அவனைப் பொறுத்தவரை மேற்கில் மகதத்தின் எல்லையை விரிவுபடுத்துவது என்பது மிகவும் கடினமானதாக இருந்தது. இப்போதும் அது நடந்தேறும் என்ற நம்பிக்கை இல்லை. ஆனாலும் தனது நோக்கம் நிறைவேறத் தன்னாலான முயற்சிகளை அவன் கைவிடுவதாக இல்லை.
“இரண்டாயிரம் வீரர்கள் போதும். அந்த நாட்டின் மக்கள் மொத்தமாக வந்தாலும் வீழ்த்தி விடலாம். நான் விடைபெறுகிறேன்” என்று முழங்கிச் சென்றான் சிசுபாலன்.
மகதத்தின் எல்லையில் தொடர்ந்து போரில் ஈடுபட்டான் சிசுபாலன். அவனது இரக்கமற்ற தன்மையும் மிருகத்தனமும் வெற்றிகளை வாரி வழங்கியது. மகதத்தின் எல்லைகளை விரிவுபடுத்துவதன் முதல் படியாக அவந்தி நாட்டின் அருகில் இருந்த பழங்குடியினரின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தினான். போர்பயிற்சி பெற்ற, பல்வேறு ஆயுதம் ஏந்திய படைகள் முன் பழங்குடியினரால் சில நாட்களுக்கு மேல் தாக்குப் பிடிக்க இயலவில்லை. சிசுபாலன் மிக எளிதாக அவர்களைக் கொன்று அவர்களின் கூடாரங்களைத் தங்கள் படையினருக்கானதாக மாற்றினான்.
அவனது அடுத்த இலக்கு அவந்தி தேசத்தை மகதத்துடன் இணைப்பது தான். அவந்தியின் மீது மகத நாட்டினருக்கு எப்போதும் தீராத பகை உண்டு.
உஜ்ஜைன், அவந்தி தேசத்தின் தலைநகரம். ஹேஹேய வம்சத்தினர் ஆண்ட காலத்தில் மகதத்தை விட வலிமை மிக்க நாடாக விளங்கியது. ஹேஹேய வம்சத்தின் நந்திவர்த்தனன் சிசுநாக வம்சத்தை நிறுவிய மன்னன் சிசுநாகனை வென்று மகதத்தை அவந்திக்குக் கீழ் கொண்டு வந்தான். அவனுக்குப் பின் வந்த அரசர்கள் தங்கள் பெருமையை நிலைநிறுத்த பெரிதும் பாடுபட்ட போதும் தேசம் கொஞ்சம் கொஞ்சமாகப் பிளவுபட்டது. நாட்டின் அளவு மிகவும் சிறியதாகி சிற்றரசு என்றாகியிருந்தது.
அவந்தி தேசத்தினர் சற்றும் எதிர்பாராத வகையில் சிசுபாலனின் படையினர் திடீரெனத் தாக்குதல் நடத்தி வெகு விரைவில் நாட்டைக் கைப்பற்றினர். அவந்தி தேசத்தின் தளபதியாக சிசுபாலனை நியமித்தான் தனநந்தன். இப்படி வெற்றிகளைக் குவித்து வந்த சிசுபாலனுக்கு தோல்வியை ருசிக்கவும் ஒரு வேளை வந்தது.
*****
அவந்தி தேசத்தின் அருகில் இருந்த ஒரு சிறிய தேசம். அதன் தலைநகரம் பர்வதி நகரம். முன்னொரு காலத்தில் ஜீலம் நதிக்கரையில் இருந்து அவந்தி வரை மிகப்பெரிய சாம்ராஜ்யமாக விளங்கிய தேசம், காலப்போக்கில் தொடர்ந்து நடந்த படையெடுப்புகள் காரணமாகத் தனது எல்லைகள் சிறியதாகிப் போக இப்போது சில ஊர்கள் மட்டுமே கொண்ட சிற்றரசாக மாறிவிட்டது.
கீழ் வானில் மெல்லிய பொன்னிறக் கோடு தோன்றி நகரின் சுவர்களை எல்லாம் மஞ்சளாக ஜொலிக்கச் செய்தது. வானளாவ உயர்ந்து நின்ற அந்தக் கோட்டை தற்போதைய பௌரவ இராஜ்ஜியத்தின் அரணாக வளமான சமவெளியில் காவலன் போன்று எழுந்து நின்றது. அது பாதுகாப்புக்கான கட்டிடம் மட்டுமல்ல, ஒழுக்கம், பெருமை, நீடித்த மரபு ஆகியவற்றின் சின்னமாகவும் விளங்கியது. இந்தக் கோட்டைக்கு ஒரே ஒரு நுழைவாயில் மட்டுமே இருந்தது. பாதுகாப்புக்கும் கட்டுப்பாட்டிற்குமான திட்டமிட்ட வடிவமைப்பு. அதன் வாயிலின் கீழ், கவசம் அணிந்த காவலர்கள் மிகவும் எச்சரிக்கையாக நின்று வருபவர்களைத் துல்லியமாகச் சோதனை செய்தனர்.
கோட்டையின் உள்ளே மிகவும் சிரத்தையுடன் திட்டமிட்டுக் கட்டப்பட்டிருந்தது பார்வதி நகரம். மூன்று பெரும் பிரிவுகளாக அமைக்கப்பட்டிருந்தது.
முதல் பிரிவு முக்கிய வாயிலுக்கு அருகிலுள்ள வெளிப்புற வளையம் உழைப்பாளர்களுக்குச் சொந்தமானது. செம்பைத் தட்டி வடிவமைக்கும் கைவினைக் கலைஞர்கள், நெசவாளர்கள், கொல்லர், பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் படைவீரர்கள் காலை வேளையில் உற்சாகமாக துள்ளிக் குதித்து விளையாடும் குழந்தைகள் என நகரம் உயிர் பெறத் தொடங்கியது. நகரத்தின் மற்ற பிரிவுகளை வாழவைக்கும் உழைப்பாளர்கள் நிறைந்த பகுதி இது. மக்களின் வாழ்விடங்கள் மட்டும் அல்லாமல் ஆயுதக் கிடங்கு, போர்க் குதிரைகளுக்கான கொட்டில், போர் யானைகளுக்கான தொழுவம் போன்றவையும் இப்பகுதியில் அடங்கும்.
அதனைத் தொடர்ந்து இரண்டாம் பகுதி. முதல் சுவரைத் தாண்டி, காவலுடன் கூடிய சோதனைத் தளத்தின் பின்னால் இருந்தது. அரண்மனை எழுத்தாளர்கள், சிறிய அதிகாரிகள், பூசாரிகள், நடுத்தர வணிகர்கள் வாழும் பகுதி இது. பசுமைத் தேன் மரங்கள் வரிசையாக விளங்கிய நேர்த்தியான சாலைகள், இரட்டை மாடி வீடுகள், சிறிய தோட்டங்கள், பட்டுத் திரைகளால் மூடப்பட்ட உள்ளூர் தெய்வச் சிலைகள் ஆகியவற்றை கடந்து அழைத்துச் சென்றன.
அதனையும் தாண்டினால் மூன்றாம் பகுதி. உயர்ந்த கோபுரங்களாலும் தேர்ந்த காவலர்களாலும் பாதுகாக்கப்பட்ட தனி உலகமாக இருந்தது. அரச குடும்பம், தளபதிகள், உயர்குடி வம்சங்கள், எல்லோரும் இங்கே வசித்தனர். வர்ணமயமான மண்டபங்கள், கல்லான யானைகள், தாமரைத் தடாகங்கள் போன்றவை அந்தப் பகுதியை அலங்கரித்தன.
ஆசிரியர்களும் தங்கள் நாளைத் தொடங்கியிருந்தனர். குருகுலங்களில் மென்மையான மந்திர ஒலிகள் கேட்டன. குழந்தைகள் வேதங்கள், தர்க்கம், வானியல், போர்கலைகள் என அனைத்தையும் கற்றனர். பிறந்த இடம் முக்கியமல்ல; ஆர்வமும் அர்ப்பணிப்புமே ஒரு குழந்தையை வைத்தியராக மாற்றுமா, வணிகராக மாற்றுமா, வாளை ஏந்த வைப்பதா என்பதைத் தீர்மானித்தது.
சூரியன் மேலும் உயர்ந்தபோது, பௌரவ அரசரின் சின்னம் பொறித்த பொற்கொடிகள் ஒளியில் மின்னின. மூன்றாம் பகுதியில் அமைந்திருந்த அரச மாளிகையின் வாயில்கள் கனத்த சத்தத்துடன் திறந்தன.
பௌரவ வம்சத்தின் வரலாறு வேத காலத்தில் இருந்து தொடங்குவதாக அறியப் படுகிறது. ஜீலம் மற்றும் செனாப் நதிகளுக்கு இடையே, அவந்தி தேசத்தின் ஒரு பக்கத்தில் அமைந்திருந்த இந்த தேசம் வீரம் செறிந்த க்ஷத்திரியர்களால் ஆளப்பட்டது. காலப்போக்கில் பௌரவ வம்சத்தினர் சிற்றரசுக்கும் கீழான நிலைக்குத் தள்ளப்பட்டனர். அவந்தி தேசத்தின் அருகில் இருந்த சில ஊர்கள் மட்டுமே அவர்களது ஆளுமையின் கீழ் இருந்தது. ஆனால், அவர்களின் வலிமை காரணமாக யாராலும் அசைக்க முடியாத சக்தியாக விளங்கினார்கள்.
பௌரவ தேசத்தின் தற்போதைய மன்னன் பானுவர்மன். அவர் மனைவி ராணி திலோத்தமை. அவர்களுக்கு பத்மினி என்ற புதல்வியும்
சத்யரதன், புருஷோத்தமன் என்று இரண்டு புதல்வரும் இருந்தார்கள். பானுவர்மன் தனது அறுபதுகளில் இருந்தார். சிறந்த மல்யுத்த வீரர். முதிர்ந்த வயது காரணமாகத் தனது பெரும்பாலான அரச பொறுப்புகளைத் தலைமகனான சத்யரதனிடம் வழங்கி இருந்தார்.
சத்யரதன், நாற்பது வயதை நெருங்கிக் கொண்டிருந்தான். தற்போது பௌரவ நாட்டின் தளபதியாக இருந்து தனது பாரம்பரியத்தைக் காப்பவன். அவனது மனைவி அனுசுயா, மத்ஸ்ய தேசத்தின் இளவரசி. கல்வியிலும் வீரத்திலும் கணவனுக்கு இணையாக இருப்பவள்.
இந்த தம்பதியினருக்கு விஜயன், தேவரதன் என்ற இரண்டு புதல்வர். இருவரும் பதின் பருவத்தில் இருந்தார்கள். மூத்தவன் விஜயன், பெயருக்கேற்ப வில்வித்தையில் அர்ஜுனனுக்கு நிகரானவன். இளையவன் தேவரதன் வாள்வித்தையில் சிறந்தவன்.
பானுவர்மனின் இளைய புதல்வன் புருஷோத்தமன், சுருக்கமாகப் புரு என்று எல்லோராலும் அழைக்கப்படுபவன். தனது இருபதுகளில் இருந்தாலும் ஆறடியைத் தாண்டிய உயரத்தில் ஆஜானுபாகுவான தோற்றத்தில் இருந்தான். மக்களைப் பொறுத்தவரை வீரத்தில் அவனுக்கு நிகர் அவனே தான். அவன் மனைவி ஊர்மிளா, பாஞ்சால தேசத்தைச் சேர்ந்தவள். திரௌபதியின் வழி வந்தவள் நான் என்று பெருமையுடன் வாழ்பவள். சமயம் வாய்த்தால் வாளை ஏந்தவும் தயங்காதவள். அவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு புதல்வன், பரதன். பொம்மைகளை விட ஆயுதங்களோடு விளையாடுவதே அவனது விருப்பமாக இருந்தது.
சத்யரதனுக்கு இளையவளும் புருவுக்கு மூத்தவளுமாகிய இளவரசி பத்மினியை காஷ்மீர தேசத்தின் மன்னனுக்கு மணம் முடித்திருந்தனர். இதன் மூலம் காஷ்மீரம் பௌரவ தேசத்தின் நட்பு நாடாக விளங்கியது. பத்மினியின் புதல்வன் உத்தானன் வீரத்தில் நிகரில்லாதவனாக இருந்தான்.
தினசரி வழக்கமாக, அரச குடும்பத்தின் ஆண்கள் அனைவரும் ஓரிடத்தில் குழுமினார்கள். அவர்களுடன் இன்னும் சிலரும் வந்து இணைந்து கொண்டார்கள். அனைவரது தோற்றமும் போர் பயிற்சிக்குத் தயாராவது போலிருந்தது.
அனைவரும் தத்தம் குதிரைகளில் ஏறி முதல் பகுதியில் அமைந்திருந்த மைதானத்திற்குச் சென்றார்கள். அவரவர் துறையில் பயிற்சி மேற்கொள்ளத் தொடங்கினார்கள்.
சத்யரதனின் மூத்த மகன் ஜெயரதனும் புருஷோத்தமனும் யானைகள் இருக்கும் பகுதிக்குச் சென்று பார்வையிட்டார்கள். சில யானைகள் அவர்களை அடையாளம் கண்டு கொண்டதன் அடையாளமாக தும்பிக்கையை உயர்த்தி பிளிறின.
“நமது இருபது யானைகளையே பராமரிக்க மிகவும் சிரமப்படுகிறோம். மகதத்தில் இரண்டாயிரம் யானைகள் இருக்கின்றனவாம். அப்படி என்றால் ராஜ்யம் எத்தனை பெரியதாக எத்தனை வளமானதாக இருக்க வேண்டும்?” என்று அதிசயித்தான் விஜயன்.
“நிச்சயமாகப் பெரிய ராஜ்யம் தான். பொன் விளையும் பூமி என்று கேள்வி. அதனால் அவர்களுக்கு எதுவும் சாத்தியமே” என்று பதிலுரைத்தான் புரு.
இருவரும் சற்று நேரம் யானைகளைக் கண்காணித்து விட்டு வெளியே பயிற்சி செய்தவர்களோடு இணைந்து கொண்டனர். புரு தனது வாளை எடுக்க, விஜயன் தனது வில்லை எடுத்து நாணேற்றினான்.
“அட இதென்ன ஆயுதம்? பொம்மை வில் போலல்லவா இருக்கிறது!” புருஷோத்தமன் எப்போதும் போல அண்ணன் மகனைக் கேலி செய்தான். ஜெயரதனைக் காணும் போதெல்லாம் அவனிடம் வம்பு செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தான் புருஷோத்தமன்.
விஜயன் பதிலேதும் கூறாமல் வில்லில் அம்பைப் பொறுத்தி சிற்றப்பனை நோக்கிக் குறி வைத்தான்.
“விஜயன் என்ற பெயர் இருப்பவர் எல்லாம் அந்த அர்ஜுனன் ஆகமுடியாது மைந்தா” என்றான் புருஷோத்தமன். அப்போது ஜெயரதனின் வில்லில் இருந்து பாய்ந்த அம்பு புருஷோத்தமனின் வாளைக் கீழே விழ வைத்தது.
“ஹும். உன்னிடம் விஷயம் இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆனாலும், ஏதோ பரவாயில்லை என்ற ரகம் தான். நாலடி தூரத்தில் இருக்கும் குறியை கைப்பிள்ளை கூட தவற விடாது. இதில் பெருமை என்ன?” புருஷோத்தமன் இன்று உற்சாகமான மனநிலையில் இருந்தான் போலும், தனது வேடிக்கை பேச்சை விடுவதாக இல்லை. அவன் தனது கடைசி வார்த்தையை முடிப்பதற்கு முன்பே ஜெயரதனின் அம்பு ஐம்பதடி தூரத்தில் இருந்த மரத்தின் மேல் பாய்ந்தது.
“ஆ.. அம்மா!!!!” என்று அலறியபடி ஒருவன் மரத்தின் கீழ் விழுந்தான். ஜேயரதனின் அம்பு அவனை அடித்து வீழ்த்தி இருந்தது.
கண்களில் கேள்வியுடன் புருஷோத்தமன் ஜெயரதனைப் பார்த்தான். “அங்கே ஏதோ வித்தியாசமான அசைவு தென்பட்டது. அதனால் தான் இலக்கை மாற்றினேன்.” விஜயன் பதில் சொல்ல, இருவரும் கீழே விழுந்தது யார் என்பதை அறிய வேண்டி அருகில் சென்றார்கள்.
“சிற்றப்பா!” இவன் நமது தேசத்தின் குடிமகன் போலத் தோன்றவில்லையே. எப்படி உள்ளே வந்தான்? வெளியூர் வணிகன் என்றால் மரத்தின் மேல் என்ன வேலை? இவனது நோக்கம் என்னவாக இருக்கும்?” அவனைப் பார்த்த மாத்திரத்தில் பல கேள்விகள் பிறந்தன. அவனை விசாரிக்க வேண்டும் என்று மன்னரின் முன் நிறுத்தினர்.
“யார் நீ? மரத்தின் மேல் என்ன செய்து கொண்டிருந்தாய்?” அவனை ஆராய்ச்சி பார்வை பார்த்தபடியே மன்னர் கேள்வி எழுப்பினார்.
அவன் பதில் சொல்வதற்கு முன் கோட்டை வாயிலில் இருந்து வீரன் ஒருவன் வேகமாக ஓடி வந்து அரசனை வணங்கி நின்றான். வேகமாக வந்ததில் மூச்சு வாங்கியது அவனுக்கு.
“வணக்கம் அரசே!”
“என்ன ஆயிற்று வீரனே? எதற்காக இந்த அவசரம்? சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு பேசு” என்றார் பானு வர்மன்.
“அரசே! அதற்கெல்லாம் தற்போது நேரம் இல்லை. பெருத்த ஆபத்து வாசலுக்கு வந்து கொண்டிருக்கிறது” என்று படபடத்தான் அவன். அதைக் கேட்டு அங்கிருந்த அனைவரது கையும் தத்தம் ஆயுதத்தை உறுதியாகப் பிடித்துக் கொண்டன.
“ஆபத்தா? சற்றுத் தெளிவாகச் சொல். எந்த விதமான ஆபத்து?” அடுத்த கேள்வி சத்யரதனிடம் இருந்து வந்தது. இந்த சம்பாஷணைகள் ஆரம்பித்த போதே புருஷோத்தமன் அங்கே பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீரர்களை ஒன்று திரட்டியிருந்தான். சில நொடிகளில் சுமார் இருநூறு பேர் வரவிருக்கும் ஆபத்தை எதிர்நோக்கத் தயாராகி விட்டனர்.
விஜயன் தனது தந்தையின் இளைய சகோதரனை வியப்புடன் பார்த்தான். இதுதான் புருஷோத்தமன். சத்யரதனுக்குத் தலைமைப் பண்பு உண்டு, ஒரு முடிவெடுத்து விட்டால் ஒரு போதும் பின்வாங்க மாட்டான். அந்த முடிவுக்கு வருவது எப்போது என்பது தான் அவனது தலையாய சிக்கல்.
ஆனால் இளையவன் அப்படி அல்ல, ஒரு விஷயத்தை உள்வாங்கும் போதே அவனது அறிவு அதை எப்படிக் கையாள்வது என்று யோசிக்கத் தொடங்கிவிடும். அந்த விஷயம் சொல்லி முடிப்பதற்குள் இது தான் தீர்வு என்று தீர்மானம் செய்திருப்பான்.
சத்யரதன் கூட இப்போதெல்லாம் எந்த ஒரு காரியத்திலும் தனது தம்பியை உடன் இருத்திக் கொள்வது என்பதை வாடிக்கையாக்கி இருந்தான்.
“மன்னா! நந்த தேசத்தின் படைகள் சில நாட்களுக்கு முன் அவந்தியைக் கைப்பற்றிய செய்தியைத் தாங்கள் அறிவீர்கள்” செய்தி கொண்டு வந்த வீரனுக்கு பயத்தில் பேசவே நா வரவில்லை.
“ஆம். அந்தப் படையின் அடுத்த இலக்கு நாமாகத் தான் இருப்போம் என்பதையும் நாம் அறிவோம். அவர்களை எதிர்கொள்ள நமது படை எப்போதும் தயாராக இருக்கிறது” என்ற புருஷோத்தமனின் புலன்கள் சட்டென்று கூர்மை பெற்றன.
அவர்கள் பேசிக்கொண்டிருந்த போதே கோட்டையின் வாயிலில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. சிசுபாலன் சுமார் இரண்டாயிரம் படைவீரர்கள் சகிதம் போருக்குத் தயாராக நின்றிருந்தான்.
கோட்டையின் உள்ளே இருந்தவர்கள் அடுத்த நிகழ்வுக்குத் தயாராகி நின்ற வேளையில் வெளியே நின்றவர்கள் கோட்டை கதவுகளை தகற்கும் முயற்சிகளை மேற்கொண்டனர். அவர்கள் எதிர்பாராத நேரத்தில் கதவுகள் சடாரென்று திறந்தன, அவர்களை நோக்கிப் பாய்ந்து வந்த அம்பு மழை சரமாரியாகத் தாக்கியது.
எதிர்பாராத இந்த தாக்குதலில் சிசுபாலனின் படைவீரர்கள் பலரும் பலத்த காயமடைந்து தப்பி ஓடினார்கள். சிசுபாலனும் அவனது நண்பர்கள் சிலரும் சுதாரித்துக் கொண்டு பதில் தாக்குதல் நடத்த ஆரம்பித்தார்கள். சிசுபாலன் படைக்கு நடுவே நின்றிருந்த போதும் அவன் தான் தலைவன் என்பதை பௌரவ தேசத்தின் வீரர்கள் புரிந்து கொண்டார்கள்.
புரு தனது ஈட்டியால் சிசுபாலனின் குதிரையைச் சாய்க்க, ஜெயரதனின் வில்லில் இருந்து புறப்பட்ட அம்புகள் சிசுபாலனின் வலது தோளில் பாய்ந்து அவனை நிராயுதபாணியாக நிற்க வைத்தது. அவந்தி தேசத்தை எளிதாகத் தோற்கடித்தவன் இங்கே தோற்றுப்போய் ஓடினான்.
இதன் காரணமாக பௌரவ வம்சத்தின் தலையெழுத்து விரைவில் மாற்றி எழுதப்பட்டது.

Author: SudhaSri
Article Title: அத்தியாயம் – 6
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.