அத்தியாயம் -8
பானு வர்மன் குடும்பத்தினருக்கு அது ஒரு அற்புதமான நாளாக இருந்தது. நந்த வம்சத்தில் திருமண உறவு வைத்துக் கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கும் என்று அவர்கள் கனவிலும் நினைத்ததில்லை. கையில் இருந்த அரசனின் ஓலையை மறுபடியும் ஒரு முறை வாசித்தார், சத்யரதன்.
“தங்கள் குடும்பத்தில் வீரம் செறிந்த இரு இளைஞர்கள் இருப்பதை அறிகிறோம். எமது பேரரசரின் மகளைத் தங்கள் மருமகளாக அனுப்பி வைக்கப் பிரியப் படுகிறோம். இது விஷயமாக வரும் பௌர்ணமி அன்று நேரில் வந்து ஆலோசனை நடத்தும் படி அழைப்பு விடுக்கிறார் மாமன்னர் தனநந்தன்” என்று எழுதப்பட்டிருந்த அந்த ஓலை நந்தப் பேரரசின் முத்திரையுடன் தூதுவன் ஒருவன் மூலம் வந்து சேர்ந்துள்ளது.
சிசுபாலனின் படுதோல்விக்குப் பிறகு நந்த தேசத்தில் இருந்து கடுமையான தாக்குதல் ஒன்றை எதிர்பார்த்துக் காத்திருந்த வேளையில் உறவு வேண்டி ஓலை வரும் என்று அங்கே யாரும் நினைத்துப் பார்த்ததே இல்லை.
“என்ன செய்வது தந்தையே? நாளை அமாவாசை நாள். சில நூறு மைலுக்கு அப்பால் உள்ள நந்த தேசத்தின் தலைநகரத்தை அடைய குறைந்த பட்சம் பத்து நாட்களாவது தேவை. இடையில் ஏதேனும் தடை வந்து சேர்ந்தது என்றால் கூடுதலாக சில நாட்களாகிவிடும். பௌர்ணமி அன்று சந்திப்பது என்றால் எப்படி முடியும்? நம்மில் யார் சென்று மன்னரைச் சந்திப்பது?” என்று சத்யரதன் தனது சந்தேகங்களைக் கேள்விகளாக்கினார். எப்போதும் போல அவரால் விரைந்து முடிவெடுக்க முடியாத நிலை.
“அருமையான சந்தர்ப்பம் வாய்த்திருக்கும் போது மன்னனை நேரில் சந்திக்க எனது மனம் விழைகிறது. ஆனால் எனது முதிய வயதில் தொலை தூரப் பயணம் சாத்தியமே அல்ல. நீ தான் எனது பிரதிநிதியாகச் செல்ல வேண்டும். கூடிய வரை நாளையே புறப்படும் படியான ஏற்பாடுகளைச் செய்து கொள். உன்னுடன் ராஜ்ஜியத்தின் பிரதிநிதிகள் சிலரையும் அழைத்துச் செல். நல்ல செய்தியுடன் திரும்பி வா” என்று தனது முடிவை அறிவித்தார் பானு வர்மன்.
இப்போது சத்யரதனுக்கு அடுத்த சந்தேகம் வந்தது. “அரசர் இருவர் என்று குறிப்பிட்டிருக்கிறாரே! இருவரில் யாரென்று குறிப்பிட்டுச் சொல்லவில்லையே. புருஷோத்தமன் மணமானவன் என்று அங்கே தெரிய வாய்ப்பில்லை. இப்போது நாம் என்ன செய்வது?”
“இது விஷயமாக நாம் முடிவு செய்வதற்கு எதுவும் இல்லை சத்யரதா! அரசனின் விருப்பத்தைக் கவனத்தில் கொண்டு நிறைவேற்ற வேண்டும். நம்மால் வேறென்ன செய்ய முடியும்?” என்றார் பானு வர்மன்.
“தந்தையே! நீங்கள் கூறுவதும் சரியே. அரச பரம்பரையில் பலதார மணம் என்பது தவறல்லவே. காலம் காலமாக நடந்து வருவது தானே!” என்று தந்தையின் கூற்றை ஆமோதித்தார் சத்யரதன். இந்தப் பேச்சைப் புருஷோத்தமன் சற்றும் ரசிக்கவில்லை.
“சத்தமாகப் பேசி விடாதீர்கள் தமையனாரே. ஏற்கெனவே, எனது ராணியின் காதுகளில் இந்த ஓலை விஷயம் சென்று சேராமல் இருக்கவேண்டும் என்று நான் சூர்யநாராயணனை வேண்டிக் கொண்டிருக்கிறேன். தயை கூர்ந்து என்னைக் காப்பாற்றுங்கள். விஜயன் தான் இந்த நாட்டின் அடுத்த பட்டத்துக்கு உரியவன். அவனுக்குத் தான் நந்த இளவரசியை நீங்கள் மணம் பேச வேண்டும். அதைச் சற்றும் மறந்து விடவேண்டாம்.”
புருஷோத்தமன் சுற்றிலும் கண்களைச் சுழற்றியவாறு பேசினான். அவனது கண்களில் ஊர்மிளா தென்படவில்லை என்றதும் நிம்மதியாகப் பெருமூச்சு விட்டான். ஆனால், அவன் மனைவியின் காதுகளில் முன்பே விஷயம் சென்று சேர்ந்துவிட்டது என்பதை அவன் அறியவில்லை.
இருவர் என்ற குறிப்பு புருஷோத்தமன் மற்றும் விஜயனைக் குறிக்கிறது என்பது அனைவருக்கும் நிச்சயம். விஷயத்தைக் கேள்விப்பட்ட ஊர்மிளா கணவனின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். முகம் நிறைந்த புன்னகையுடன் அறையில் நுழைந்தவனைப் பார்வையாலே எரிக்க முயன்றாள்.
அவனோ ஒன்றும் புரியாமல் விழித்தான். “தங்கள் நெற்றிக் கண்ணைத் திறக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்பதை அடியேன் அறிந்து கொள்ளலாமா?” என்று பவ்யமாக வினவினான்.
“ஒன்றும் தெரியாதவர் போல நடிக்க வேண்டாம். பாரத கண்டத்திலேயே மிகப் பெரிய சாம்ராஜ்யம். அதன் இளவரசியை மணந்து கொள்ள கொடுத்து வைத்திருக்க வேண்டாமா? என்ன இருந்தாலும் பாஞ்சால தேசம் மகதத்தின் முன் கடுகு போன்றது தானே!” என்று பூடகமாகப் பேசினாள் ஊர்மிளா. ஆனாலும் உடனே அதன் அர்த்தத்தை புரிந்து கொண்டு நகைத்தான் புருஷோத்தமன். கணவனுக்கே உரிய முறையில் மனைவியைச் சமாதானம் செய்ய விழைந்தான்.
“ஒரு வீரனது வாழ்வில் இது போன்ற வாய்ப்புகள் வந்து கொண்டே தான் இருக்கும். இது போன்ற சாதாரண விஷயத்தில் ஊடல் ஆகாது என் மகாராணியே!” புருஷோத்தமனின் குரலில் இருந்த குறும்பு ஊர்மிளாவின் கோபத்தைக் கூட்டியது.
தன்னை அணைந்திருந்த கணவனின் பிடியில் இருந்து வெளியேற முயன்றாள். அவனோ ஏழடியைத் தொட்டு ஆஜானுபாகுவாக இருந்தான். அவளோ ஐந்தரை அடியில் மெல்லிய தோற்றம் கொண்டவளாக இருந்தாள். எத்தனையோ முயன்றும் அவனது இரும்புப் பிடியில் இருந்து அவளால் தப்பவே முடியாது போனது.
“தங்களுக்கு புருஷோத்தமன் என்று பெயர் வைத்தது எனது மாமனார் செய்த பெரிய தவறு. பீமன் அல்லது கடோத்கஜன் என்ற பெயர் தான் பொருத்தமாக இருக்கும்” என்று முணுமுணுத்தாள்.
“உருவத்தில் நான் கடோத்கஜனாக இருக்கலாம். ஆனால் உள்ளத்தில் நான் அந்த புருஷோத்தமனின் வழி நடப்பவன். வேறொரு பெண்ணை என் உள்ளம் என்றும் நாடாது. இதை என் மகாராணியும் அறிவாள் என்று நம்புகிறேன்” என்றவனது குரலில் இருந்த தீவிரம் அவன் மனைவியை மௌனமாக்கியது. ஆனாலும் அவளது மனதில் வருத்தம் இருக்கிறது என்பதை அவன் அறிந்து கொண்டான். என்ன செய்தால் அவள் சமாதானம் அடைவாள் என்று யோசித்தான்.
“என் மேல் ஆணையாக..” என்று ஆரம்பித்தவனின் வாயைத் தன் கைகளால் மூடினாள் ஊர்மிளா.
“வேண்டாம் அன்பரே! ஏதோவொரு குழப்பத்தில் பேசிவிட்டேன். நீங்கள் எப்படிப்பட்டவர் என்று எனக்கு நன்றாகவே தெரியும். தாங்கள் மனம் வருந்தும் படி செய்துவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்” என்றாள்.
“விளையாட்டுப் பேச்சு விபரீதமாகத் திசை திரும்பி விட்டது. நாம் வேறு பேசுவோம். எங்கே நமது மைந்தனைக் காணவில்லை? உறக்கத்தில் இருக்கிறானா?” என்று பேச்சின் திசையை மாற்றி விட்டான் புருஷோத்தமன்.
“அவனெங்கே ஓரிடத்தில் நிற்கிறான்? அரண்மனை முழுவதும் ஓடி எனது கால்களை நோகச் செய்கிறான்” என்று அலுத்துக் கொண்டாள் ஊர்மிளா. ஆனால், மகனைப் பற்றிப் பேசும் போதே அவளது முகத்தில் பெருமிதம்.
“அவனுக்கான பொம்மைகளைக் கண்டு கொள்வதே இல்லை. கையில் ஏதேனும் ஆயுதத்துடன் தான் எப்போதும் காட்சி தருகிறான். இப்போதே யானையேற்றம் செய்ய வேண்டும் என்கிறான். கூடிய விரைவில் தங்களுக்குப் போட்டியாக வந்துவிடுவான்” ஊர்மிளா பேசிக் கொண்டே சென்றாள்.
ஒரு தந்தையாக, மகனை நினைத்துப் பெருமிதம் அடைந்தாலும் புருஷோத்தமனுக்குச் சற்று பொறாமையாகவும் இருந்தது. திருமணம் முடிந்து பல ஆண்டுகள் கழிந்த போதும் கணவனை வீரன் என்று ஏற்றுக் கொண்டதே இல்லை. அவன் எது செய்தாலும், அதில் ஏதேனும் ஒரு குறையைக் கண்டுபிடித்துவிடுவாள்.
“பாரம்பரியம் மிகுந்த பௌரவ தேசம் குறுகிப் போயிற்றே என்று சாதாரணக் குடிமகன் கவலைப்படலாம். ஆனால் தேசத்தின் இளவரசன் கவலைப் பட்டால் போதுமா? இழந்தவற்றை மீட்க என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்துச் செயல்படுவது தானே வீரனுக்கு அழகு?” என்று அடிக்கடி கூறுவாள்.
“என் மகாராணி சொன்னால் சரியாகத்தான் இருக்கும்” என்று சிரிப்பானே தவிர புருஷோத்தமன் இழந்தவற்றை மீட்க வேண்டும் என்று ஒருபோதும் நினைத்தது இல்லை. ஒரு நாட்டின் எல்லைகாளை விரிவு படுத்த வேண்டும் என்றால் அதற்காகப் பல உயிர்கள் பலியாக வேண்டும் என்பது அவனுக்கு தெரியும். சிறந்ததொரு வீரன் என்றாலும் அரசனின் விருப்பத்திற்காக மக்கள் ரத்தம் சிந்துவதை அவன் விரும்பியதே இல்லை.
சற்று நேரம் கணவனும் மனைவியும் அமைதியாக இருந்தார்கள். பகல் உணவு வேளை நெருங்குவதை அறிந்த ஊர்மிளா அறையில் இருந்து வேளியேர முயன்றாள். ஆனால் கணவனின் பிடியில் இருந்து அவளால் விடுபட இயலவில்லை.
“உணவு வேளை நெருங்கிவிட்டது. எனது மாமியார் என்னைத் தேடுவார். உங்கள் பிடியைச் ச்ற்றுத் தளர்த்தினால் நல்லது” என்று முணுமுணுத்தாள். பலன் தான் இல்லை.
“தங்களுக்கு இன்று யானைகளிடம் வேலை எதுவும் இல்லையா? ஏன் இப்படி என்னைச் சோதிக்கிறீர்கள்?” ஓர்மிளாவிம் குரல் பலவீனமாக வந்தது.
அவள்மீது அவனுக்கிருந்த காதல் பௌரவ தேசம் முழுவதும் பிரசித்தம். குடும்பத்திற்குள் ஒரு நகைச்சுவை கூட இருந்தது, சத்யரதனின் மனைவி அனுசூயா கொழுந்தன் மனைவியை எப்போதும் கேலி செய்வாள்.
“புருஷோத்தத்தமனைத் தேட வேண்டுமென்றால், முதலில் ஊர்மிளாவின் அறையிலிருந்து தொடங்க வேண்டும். பெரும்பாலும் அவன் அங்கேயே இருப்பான்” என்பாள்.
கணவனும் மனைவியும் இப்படிப் பேசுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தபோது, “ அம்மா! எங்கே இருக்கிறீர்கள்?” என்று கேட்டுக்கொண்டே பரதன் உள்ளே நுழைந்தான். மகனைக் கண்டதும் புருஷோத்தமனின் பிடி தளர, ஊர்மிளா பாந்து சென்று மகனை வாரி எடுத்துக் கொண்டாள்.
“மகனுக்கு உணவூட்ட வேண்டும்” என்று அறையை விட்டு வெளியேறினாள்.
அவள் பின்னோடு வந்த புருஷோத்தமனைப் பார்த்து அங்கிருந்த அனைவரும் சிரித்தார்கள்.
-------------------------------------
பாடலிபுத்திரம், பூக்களின் நகரம் என்றும் அழப்பார்கள். மகத தேசத்தின் தலைநகரம். இந்திய துணைக்கண்டத்தின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்று. கங்கை மற்றும் சோன் நதிகள் சங்கமிக்கும் பகுதியில் அமைந்திருந்ததால் அரசியல், பொருளாதார, இராணுவ ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் பெற்றது.
கிமு 5-ஆம் நூற்றாண்டில் மகதத்தை அஜாதசத்ரு ஆண்டு வந்தான். அப்போது மகத நாட்டின் தலைநகரமாக இருந்த ராஜகிருகம் தேசத்தின் கிழக்கில் இருந்தது. மேற்கே இருந்த லிச்சாவி வம்சத்தினர் அடிக்கடி மகதத்தின் மீது படையடுத்தனர். நிர்வாக வசதிகளுக்காக கிழக்கே ஒரு கோட்டையை அமைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டபோது பாடலிகிராமம் என்ற ஊர் தேர்வு செய்யப்பட்டது. அங்கே பிரம்மண்டமான கோட்டை ஒன்று நிறுவப்பட்டது. அஜாதசத்ருவின் மகனது காலத்தில் இது மகதத்தின் தலைநகரமாக மாறியது.
சத்யவிரதன் தனது இளைய மகன் தேவரதன் மற்றும் இரு அதிகாரிகளுடன் பௌர்ணமிக்கு முன் தினம் மாலையில் அங்கு வந்து சேர்ந்தார். விருந்தினர் மாளிகை ஒன்றில் அனைவரும் தங்க வைக்கப்பட்டார்கள்.
பொர்ணமி தினம் புலர்ந்தது. சத்யரதன் தனது வழக்கமான சடங்குகளை முடித்த பிறகு, சிறந்த உடையை அணிந்தார். தன நந்தன் முதல் முறையாக அவரைப் பார்க்க இருக்கிறார். மேலும் அவர்கள் மணம் பேச வந்திருப்பதால் தோற்றத்தில் கவனமாக இருந்தார். அவர் ஏற்கனவே ஐம்பது வயதைத் தாண்டிவிட்டார். ஆனால் வழக்கமான உடற்பயிற்சி மற்றும் போர்ப்பயிற்சி அவரது உடற்தகுதியைப் பராமரிக்க உதவியது. ஆடை அணிந்த பிறகு, கண்ணாடி முன் சிறிது நேரம் நின்றார்.
"மகனுக்கு மணம் பேச வந்தாய அல்லது நீ இரண்டாவது திருமணம் செய்யத் திட்டமிடுகிறாயா?" உடன் வந்த மூத்த அதிகாரி ஒருவர் கிண்டல் செய்தார்.
தேவரதனையும் மற்ற அதிகாரிகளையும் கூட நல்ல உடை அணிய வலியுறுத்தினார். "வாள் ஒரு க்ஷத்திரியனின் ஆபரணம். நீங்கள் அதை அணியாமல் முழுமையாக உடையணிந்திருக்க முடியாது," என்று கூறி மகனிடம் கூறி அவனுக்கு ஒரு வாளை வழங்கினார்.
அவன் தந்தையிடம் இருந்து வாங்கி நெற்றியில் தொட்டு, பின்னர் அதை தனது இடுப்பில் அணிய முயன்றான். அந்த வாள் சற்று சிறியதாக இருந்தது. தந்தையை நிமிர்ந்து பார்த்தான்.
“ஆளுக்கேற்ற வாள்” என்று சிரித்தார் அவர்.மறுத்துப்பேசாமல் வாளை இடையில் அணிந்து கொண்டான்.
பின்னர் அவர்கள் நால்வரும் விருந்தினர் மாளிகையிலிருந்து வெளியே வந்தனர். அவர்களை அரசவைக்கு அழைத்துச் செல்ல ஒரு தூதர் ஏற்கனவே அவர்களுக்காகக் காத்திருந்தார். அரச தூதர் சத்யரதனைத் தனது பாதுகாவலரை அங்கேயே விட்டுவிடுமாறு கேட்டுக் கொண்டார். அவர் இப்போது மகதத்தின் விருந்தினராக இருந்தார், எனவே அவர்களின் பாதுகாப்பு மகதத்தின் பொறுப்பு என்பதால் அவ்வரே செய்யப்பட்டது..
அரச தேர் விருந்தினர்களை பாடலிபுத்திர அரண்மனைக்கு அழைத்துச் சென்றது. நகரத்தைச் சுற்றி நடக்கும்போது அரண்மனையின் வெளிப்புறச் சுவர்களைப் பார்த்திருந்தார்கள். இந்த முறை, அவர்கள் மிகுந்த மரியாதையுடனும் மரியாதையுடனும் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டனர். தேர் அரண்மனையின் பிரதான வாயில்களைக் கடந்ததும், அவர்கள் ஒரு பெரிய புல்வெளியில் நுழைந்தனர். முன்னால் அவர்கள் மூவரும் இதுவரை கண்டிராத மிக அழகான தோட்டம் இருந்தது, பச்சைப் பசேலென்று புல்லால் மூடப்பட்டிருந்தது.
மேலும் பல்வேறு வகையான பூச்செடிகளும் அந்த தோட்டத்தை அலங்கரித்தன. பருவத்திற்கு ஏற்ப தாவரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன என்பது தெளிவாகத் தெரிந்தது.
பாதையின் இருபுறமும் இரண்டு குளங்கள் இருந்தன, அவற்றில் தாமரைகள் பூத்திருந்தன.
இவ்வாறு அவர்கள் அரண்மனை நுழைவாயிலை அடைந்தனர். அரண்மனையின் மைய முற்றத்திற்குச் செல்லும் படிகளில் ஏறினார்கள். அந்த அரண்மனை அவன் இதுவரை கண்டிராத மிக அற்புதமான அமைப்பு. வெவ்வேறு வகுப்புகள் மற்றும் வாழ்க்கைத் துறைகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் அதை ஆக்கிரமித்து, அவர்களின் நிலை மற்றும் நிலைக்கு ஏற்ப அமர்ந்திருந்தனர். நம்பமுடியாத விஷயம் என்னவென்றால், இத்தனைபேர் இருந்தபோதிலும், முழுமையான அமைதி நிலவியது.
இவர்களது காலடி மட்டுமே அங்கே சத்தம் எழுப்புவது போல் தோன்றியது. மண்டபத்தின் தொலைதூரத்தில் ஒரு சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தான் தனநந்தன். சிம்மாசனம் ஒரு உயர்ந்த மேடையில் அமர்ந்திருந்தது. மேடையின் அடிப்பகுதியில், சிம்மாசனத்தை விட சிறிய நாற்காலிகளில் அவருடன் வேறு சில பிரமுகர்கள் அமர்ந்திருந்தனர். அவர்கள் மகாமந்திரி மற்றும் சேனாபதியாக இருக்கலாம்.
அந்த அவை பட்டு மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மகதத்தின் தூண்கள் கலை நயத்துடன் அமைக்கப்பட்டிருந்தன. அவை அரண்மனையின் அழகை அதிகரித்தது. மொத்தத்தில் அந்த அவையின் அலங்காரம் பேரரசின் வளமையையும் வலிமையையும் பறை சாற்றுவதாக இருந்தன.
இத்தனை வலிமையான அரசன் எப்படித் தங்களுடன் திருமணம் பேச விழைந்தான் என்று முதல் முறையாக சந்தேகம் வந்தது சத்யரதனுக்கு. விருந்தினராக வந்தவரை வரவேற்கும் விதம் இதுவல்லவே என்றும் தோன்றியது. அவர் அடுத்து யோசிக்கும் முன்பே உடன் வந்த தூதன் பேச ஆரம்பித்தான்.
"சக்ரவர்த்தி தன நந்தரே, தயவுசெய்து இன்றைய நடவடிக்கைகளைத் தொடங்க எங்களுக்கு உத்தரவிடுங்கள்."
பேரரசர் தலையை உயர்த்தி, நடவடிக்கைகளைத் தொடருமாறு அவர்களிடம் சைகை காட்டினார்.
"அன்பான பேரரசரே, இங்கே உங்கள் முன் இருக்கும் துரோகி சத்யரதன், உங்கள் கருணைக்காக உங்களை வணங்குகிறார்."
சத்யரதனுக்கு அவன் சொன்னது என்ன என்பது புரியவில்லை. தூதன் அவரை 'நாட்டின் துரோகி' என்று அழைத்திருந்தான்
பேரரசர் கையை உயர்த்தி சைகையில் ஏதோ சொல்வதையும் அவர் கவனித்தார். அடுத்த நொடி தன் கழுத்தில் ஒரு குளிர்ச்சியான உணர்வை உணர்ந்தார். ஒரே ஒரு அடி அவரது தலையை உடலில் இருந்து பிரித்திருந்தது. தேவரதன்திகைத்துப் போனான். எல்லாம் ஒரு நொடிக்குள் நடந்துவிட்டது. தன் தந்தையை ஒரு துரோகி என்று தூதன் அறிவித்திருந்தான்.
என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்குள், காவலர் வேகமாக நகர்ந்து, தங்கள் குடும்பத்தின் பாதுகாவலரான தனது தந்தையின் தலையை அவன் உடலில் இருந்து அகற்றுவதைக் கண்டான். அவன் இதயம் துடிப்பதை நிறுத்தியது போல் தோன்றியது. சுயநினைவு பெறுவதற்குள் அவனும் உடன் வந்த இரு அதிகாரிகளும் காவலர்களால் பிடிக்கப்பட்டனர்.
அந்த அரண்மனையில் இருந்த நூற்றுக்கணக்கான மக்கள் ராஜாவின் நீதிக்காகவும், மகத சாம்ராஜ்யத்தைப் புகழ்ந்தும் உற்சாகப்படுத்தினர். தலை இல்லாத சத்யரதனின் உடல் சிறிது நேரம் தரையில் அசைந்து, பின்னர் அசையாமல் விழுந்தது. தேவரதன் கண்களில் விடாது வழியும் கண்ணீர் காரணமாக பார்வை மங்கலாக இருந்தது. யாரோ ஒருவர் தனது இறந்த தந்தையின் தலையை முடியைப் பிடித்து ஒரு தட்டில் வைப்பதைக் கண்டான். பாரம்பரியத்தின் படி, அது நீதியின் அடையாளமாக நகரத்தின் பிரதான வாயில்களில் காட்சிப்படுத்தப்படும், இதனால் யாரும் சாம்ராஜ்யத்திற்கு எதிரான துரோகம் என்று நினைக்க மாட்டார்கள். வீரர்கள் அந்த அசைவற்ற உடலை அவைக்கு வெளியே இழுத்துச் சென்றனர்.
தேவரதனின் கண்கள் அவர்களைப் பின்தொடர்ந்தன. திடீரென்று தலையில் ஒரு தீர்க்கமான அடி விழுந்தது, அவன் பாடலிபுத்திர முற்றத்தின் நடுவில் உயிரற்றுத் தரையில் விழுந்தான்.
**********************
சிசுபாலன்இரண்டாவது முறையாக பர்பதியை நோக்கிப் புறப்பட்டுக் கொண்டிருந்தான். இந்த முறை அவனுக்குள் முன்பைவிட அதிக தன்னம்பிக்கையா அல்லது குறைவா என்பது தெளிவில்லை. பர்பதி போரின் முதல் தோல்விக்குப் பிறகு, வெல்ல முடியாத எதிரியாகவும் கொடூரமான போராளியாகவும் இருந்த அவனது புகழ் சிதைந்துவிட்டது. ஆனால் இப்போது, மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்து அவன் அதை முழுமையாகப் பயன்படுத்தத் தீர்மானித்தான். மூன்று மாதங்கள் கழிந்திருந்தன. அந்த காலத்தில் அவன் பௌரவத்தை முற்றாக நசுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருபது ஆயிரம் வீரர்களுடன் பேரணியாகப் புறப்பட்டிருந்தான். தனது தந்திரங்களை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டான்.
அந்த யுக்தி பலனளித்தது. சத்யரதனும் அவன் மகனும் பாடலிபுத்திரத்தில் ஏற்கனவே படுகொலை செய்யப்பட்டிருப்பார்கள். அதனால் இன்று, சிசுபாலன் எந்த அச்சமும் இன்றி இருந்தான்.
முதல் முறை அவன் தோல்வியுற்ற செய்தி கேட்ட தன நந்தன் கடும் கொண்டான். ஆனால் அவனது இளைய சகோதரனை ஏதும் செய்யா முடியாது தவித்தான். அந்த சம்பவம் அவனது பெருமையைப் புண்படுத்தியது. இப்போது, அந்த அவமானத்தைத் தீர்த்துக்கொள்ளக் காத்திருந்தான். அதற்கான வாய்ப்பை தனநந்தன் ஏற்படுத்தி கொடுத்தான்.
நகருக்குள் புகுந்து சத்யரதனின் அரண்மனை எங்கு என்று கேட்டபோது, மக்கள் உடனே வழி காட்டினர். அங்கே வாயிலில் சில காவலர்கள் இருந்தனர். அவர்கள் மகதத்தின் கொடியை அறிந்து மரியாதை காட்டினர்.
சிசுபாலன் எச்சரிக்கையுடன் இருந்தான். அரண்மனையைச் சுற்றிப் பார்க்க இரு வீரர்களை அனுப்பினான். படையை சிறு குழுக்களாகப் பிரித்து பணியில் ஈடுபடுத்தினான். தேர்ந்தெடுக்கப்பட்ட சில வீரர்களுடன் முன்னேறினான். கண் இமைக்கும் நேரத்தில், வாழ்த்துச் சொல்ல வந்த காவலர்கள் இருவரும் தரையில் உயிரிழந்தனர். ஒருவன் வாளால் தலையறுக்கப்பட்டான்; மற்றொருவன் மார்பில் ஈட்டி பாய்ந்தது. அதே நேரத்தில், வீட்டின் கூரையில் இருந்த இரு காவலர்கள் வில்லாளர்களால் வீழ்த்தப்பட்டனர்.
சிசுபாலன் குதிரையுடன் வாயிலை கடந்து, தனது மிகப்பெரிய எதிரியின் வீட்டிற்குள் நுழைந்தான். தனக்கு நடந்த அவமதிப்பிற்கு பழி தீர்க்க அவன் உறுதியாக இருந்தான். பானு வர்மன் என்ன நடக்கிறது என்று புரியாமலே கொல்லப்பட்டார். அனுமதி இல்லாமல் வீரர்கள் வீட்டில் நுழைந்ததைப் பற்றி விளக்கம் கேட்க கூட அவருக்கு நேரம் கிடைக்கவில்லை. அவரது மனைவியின் தலையை அவன் வெட்டினான். இவர்களைக் காப்பாற்ற வந்த அனுசூயவும் கொல்லப்பட்டாள்.
சில நிமிடங்களில், அந்த அரண்மனை முழுவதும் அச்சமும் குழப்பமும் நிறைந்தது. பாதுகாவலர்களும் சிறிய படையும் தயார் நிலையில் இல்லததால் எளிதில் பிடிபட்டனர். சிசுபாலனின் வீரர்கள் அவர்கள் மீது இரக்கம் காட்டவே இல்லை. மீதமிருந்தவர்களும் கொல்லப்பட்டனர். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என்று யாரும் விலக்கல்ல.
சிசுபாலன் அரண்மனையின் நடுவில் நின்று அறைகளை கவனித்தான். படிக்கட்டுகள் நேரே எதிரே இருந்தன. கீழ்தள அறைகளை நோக்கி செல்லுமாறு சைகை செய்தான். அவன் நடக்கத் தொடங்கியதும், ஊர்மிளா வாளால் தாக்கினாள். அவன் கவசம் தாக்குதலை தடுத்தது. பதிலடியாக, அவன் அவளது வயிற்றில் வாளைப் பாய்ச்சினான். அவள் தைரியமாக போராடினாள்; ஆனால் அவளது துணிச்சல் வீணானது. அவள் குற்றுயிராகத் தரையில் விழுந்தாள். அப்போது தான் அவளை நன்றாகப் பார்த்த சிசுபாலனுக்குள் இருந்த பெண்பித்தன் விழித்துக் கொண்டான். அவளை மறுபடியும் பார்த்தான். இனிமேல் பயன்பட மாட்டாள் என்று தெரிந்தது. பெருமூச்சுடன் அந்த அறையை விட்டு வெளியேறினான்.
அரண்மனையின் பெண் சேவகர்களை உயிருடன் பிடித்துச் செல்லுமாறு உத்தரவிட்டான். அவனது தேவை அழகான பெண்கள், அவள் ராணியாகத்தான் இருக்க வேண்டுமா என்ன? பின்னர், மற்றொரு அறைக்குள் சென்றான். அங்கே புருஷோத்தமனின் மகன் பரதன் இருந்தான். இவனைக் கண்டதும் கையில் கிடைத்த தனது பொம்மைக் கத்தியை எடுத்துக் கொண்டு வேகமாக வந்தான்.
இதைக் கண்ட சிசுபாலன் பயங்கரமாகச் சிரித்தான். “ இந்த தேசத்தில் கருவில் இருக்கும் போதே வாள் பிடிக்கக் கற்றுக் கொடுக்கிறார்களோ?” என்றவன் கோபத்தில் அந்தக் குழந்தையைத் தூக்கித் தரையில் எறிந்து, வாளால் தலையறுத்தான். ஊர்மிளா தன் மகன் கொல்லப்பட்டதை பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது உயிர் பிரிந்தது.
உதவியற்ற மக்களை அவன் கட்டற்ற முறையில் படுகொலை செய்தான். ஒவ்வொரு வீரனும், பணியாளரும் கொல்லப்பட்டனர். குழந்தைகளும் வயோதிகர்களும் கூட தப்பவில்லை. சடலங்களுக்கும் ரத்தக்கறைகளுக்கும் நடுவே முகத்தில் பெரும் வெறிச்சிரிப்பை ஏந்திக் கொண்டு சிசுபாலன் நின்றான்.

Author: SudhaSri
Article Title: அத்தியாயம் – 8
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.