அத்தியாயம் - 1
“மன்னர் கூத்தன் சேதுபதி மறைந்து விட்டார் என்பதை நினைத்து வருந்தும் அதே வேளையில் அடுத்த மன்னர் யார் என்பதை முடிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்பதை இந்த அவையில் இருப்போர் நினைவில் கொள்ள வேண்டும்” என்று கம்பீரத்துடன் உரத்த குரலில் கூறினார் சேது நாட்டின் முக்கிய பிரதானி.
ஆட்சிக்கு பங்கு கொள்ளும் பல முக்கிய பிரமுகர்கள் அங்கே குழுமி இருந்தனர். அனைவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டு அங்கே இருந்த மற்றொருவர் மீது பார்வையைச் செலுத்தினார்கள்.
“எதற்காக இத்தனை அவசரமாக ஒரு கூட்டம் என்பது எனக்கு விளங்கவில்லையே? நீங்கள் இப்படி அடுத்த மன்னர் யார் என்பதை ஆலோசனை செய்யும் அளவுக்கு எனது தந்தை ஒன்றும் வாரிசற்றுப் போய்விடவில்லையே. நேரடி வாரிசாக நான் இருக்கும் போது எதற்காக இப்படி ஒரு கேள்வி வந்தது என்று தெரிந்து கொள்ளலாமா பிரதானியாரே?” கேட்டவரது பற்கள் கோபத்தில் நறநறத்தன.
அவர் தம்பித் தேவர், கூத்தன் சேதுபதியின் இளைய மனைவியின் புதல்வன். கூத்தன் சேதுபதியின் முதல் மனைவிக்குப் பிள்ளைகள் இல்லை. இரண்டாம் மனைவி செம்பி நாட்டு மறவர் குலத்தில் பிறந்தவள் இல்லை. இதனை எப்படி தம்பித் தேவரிடம் சொல்வது என்று அவையில் இருப்போர் குழம்பி விட்டனர்.
மறவர்களின் பிரிவில் செம்பி நாட்டு மறவர்கள் தான் சேதுபதிகள் என்ற சிறப்புப் பெயரோடு ராமநாதபுரத்தை ஆண்டு வந்தனர். அவர்களது திருமண உறவுகள் மறவர் குலத்தின் மற்ற பிரிவினரோடும் நடந்தது. ஆனால் செம்பி நாட்டு மறவர் பிரிவைச் சேர்ந்த மனைவிக்குப் பிறந்த மகன் தான் நாடாள முடியும். மற்றவருக்கு அந்த உரிமையோ திறமையோ கிடையாது என்பது அவர்களது ஆணித்தரமான கருத்து.
அவையில் இப்போது ஆழ்ந்த அமைதி நிலவியது. தம்பித்தேவருக்கு உரிய முறையில் விளக்கம் சொல்லிப் புரிய வைப்பவர் யார் என்று விளங்காமல் திகைத்தனர். அந்த அளவுக்கு தம்பித் தேவரிடம் பயம் இருந்தது, எதனையும் ஒரு நிதானத்துடன் அணுகாமல் மூர்க்கத்துடன் செயல்படுபவர், இத்தகைய குணங்கள் ஆட்சிக்கு உதவாது என்று தான் குலத்தை முன் நிறுத்தி விட்டார்களோ?
மூத்த நிர்வாகி ஒருவர் தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார். “மன்னிக்கவும் தம்பித் தேவரே! தங்களுக்கு நாட்டின் வரலாறும் அதன் விதிமுறைகளும் தெரிந்திருந்தால் நல்லது. இல்லையென்றால் இந்த அவை தங்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கும்.”
“இதன் மூலம் தாங்கள் சொல்ல வருவது என்ன நிர்வாகியாரே! இந்த நாட்டின் சட்டதிட்டங்களின்படி எனது அன்னை மன்னரின் மனைவி அல்ல என்பது தானே. எனது அன்னைக்குக் கிடைக்காத அங்கீகாரம் எனக்குக் கிடைக்காது என்பதைத் தெரிந்தே தான் இங்கே வந்திருக்கிறேன். எப்பாடு பட்டாகிலும் இந்த அரியணையில் அமர்ந்தே தீருவேன்” என்று சூளுரைப்பதைப் போல உரக்கச் சொல்லிவிட்டு வெளியேறிவிட்டார் தம்பித் தேவர்.
அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்த சிலரும் அவையின் நடவடிக்கைகளில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்பதைத் தெரிவிப்பது போல எழுந்து சென்றுவிட்டனர்.
“இவரைப் பாம்பென்று நினைக்கவும் முடியாது, பழுதென்று ஒதுக்கவும் முடியாது. இது போன்ற குணங்கள் ஆட்சிக்கு உதவாது என்று அவருக்குப் புரிவதே இல்லை” என்று ஒரு பிரதானி வருந்தினார்.
“இவரைப் பழுதென்று விட்டு விட முடியாது பிரதானியாரே. ஆட்சிக் கட்டிலில் அமர்வதற்காக எந்த எல்லைக்கும் செல்லும் ஏராளமான மனிதர்களை வரலாறு நமக்குத் தந்திருக்கிறது. இவரும் விரைவிலேயே அவர்களுடன் இணைந்து கொள்வார். அநேகமாக திருமலை நாயக்கரின் உதவியை நாடிச் செல்லலாம்” என்றார் மற்றும் ஒரு பிரதானி.
“இப்பொழுதே அவர் திருமலை நாயக்கரைத் தொடர்பு கொண்டிருக்கிறார் என்று நமது ஒற்றர் படைச் செய்தி கூறுகிறது. இராமநாத சுவாமியைத் தரிசிப்பது போல இராமேஸ்வரம் சென்ற போதெல்லாம் தம்பித்தேவர் மதுரையில் இருந்து வந்த திருமலை நாயக்கரின் ஒற்றர்களைக் கண்டு அளாவிவிட்டு வந்திருக்கிறார். அவரது ஓலைக்கு இவரும் பதில் ஓலை கொடுத்து அனுப்பி இருப்பதாகவும் உறுதியான தகவல் கிடைத்திருக்கிறது’ என்றார் ஒற்றர் படைத் தலைவர்.
“இச்செய்தி மூலம் நாம் எந்த நேரத்திலும் திருமலை நாயக்கரின் தலையீட்டை சேது நாட்டில் எதிர்பார்க்கலாம் என்று புரிந்து கொள்ள வேண்டுமோ?” என்று மூத்த அலுவலர் ஒருவர் கவலை கொண்டார்.
“இது விஷயத்தில் நாம் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டியதாக உள்ளது. மறவர் சீமையின் வலிமை நாளுக்கு நாள் பெருகி வருவதை திருமலை நாயக்கர் ஒரு போதும் விரும்பமாட்டார். எப்படியாகிலும் சேது நாட்டைத் தனது பாளையக்காரர்களில் ஒருவராக மாற்றும் முயற்சியை இடைவிடாது தொடரத் தான் செய்வார். அதற்கு நமது நாட்டில் இருந்தே ஆதரவு கிடைக்கும் போது அவரது முயற்சி இன்னும் எளிதாகிவிடும்” என்று இன்னொருவர் கவலை கொண்டார்.
“இப்படி எல்லாம் நடந்துவிடும் என்று யோசித்துக் கொண்டே இருத்தல் மறவர்க்கு அழகல்ல பெருமக்களே. இன்றைய தினம் நாம் எதற்காக கூடினோமோ அதனை முழுமனதுடன் நிறைவேற்றி வைப்போம். திருமலை நாயக்கரை எப்படி எதிர்கொள்வது என்பதை மன்னர் முடிவு செய்வார்” என்று அவையினரின் குழப்பங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார் முக்கியப் பிரதானி. அவர் சொல்வதே சரி என்று அவையில் இருப்போர் அனைவரும் ஏற்றுக் கொள்ள கூத்தன் சேதுபதியின் உடன் பிறந்த தம்பியான இரண்டாம் சடைக்கன் அடுத்த சேதுபதி மன்னராக ஆட்சிப் பொறுப்பேற்றார்.
சடைக்கன் சேதுபதி மிகவும் முற்போக்கான சிந்தனைகளும் மறவர் குலத்திற்கே உரிய வீரமும் நெஞ்சுரமும் கொண்டிருந்தார். அவரது ஆட்சி எந்தவொரு குழப்பமும் பிரச்சினையும் இல்லாத வகையில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
இதுவே மக்களிடையே அவருக்கு அமோகமான செல்வாக்கைப் பெற்றுத் தந்தது. திருமலை நாயக்கரே கூட வியந்து பாராட்டும் வண்ணம் சடைக்கன் சேதுபதியின் ஆட்சி இருந்தது.
அன்றொரு நாள் வழக்கமாக அரசவை கூடும் நாள். தனது அறையில் தயாராகிக் கொண்டிருந்தார் மன்னர். அரண்மனை வாயில் காவலாளி வந்து மன்னரை வணங்கி நின்றான்.
“சேதுபதி மன்னருக்கு வணக்கம்! இராமநாத பண்டாரம் மன்னரைப் பார்க்க அனுமதி கோருகின்றார்.” காவலாளியின் செய்தியில் மன்னரின் முகம் யோசனையில் ஆழ்ந்தது. அரசவை கூடும் நேரத்தில் தனியாக மன்னரைப் பார்க்க வேண்டும் என்றால் ஏதாவது முக்கியச் செய்தியாகத் தான் இருக்க வேண்டும் என்று உறுதியாகத் தெரிந்தது.
இராமேஸ்வரம் திருக்கோவிலில் நைபெறுகின்ற அபிஷேகம் , நைவேத்தியம், பூஜை முதலியவை சரியாகவும் ஆகம விதிகளின்படி படியும் நடைபெறுவதற்கும் அவற்றைக் கண்காணிக்க ஆதீன கர்த்தர் ஒருவரை மன்னர் நியமித்திருந்தார். அவர் “இராமநாத பண்டாரம்” என்று அழைக்கப் பட்டார். இவர்களது பணியினை அவ்வப்போது கோவிலுக்கு வந்த மன்னர் கண்காணித்துத் தேவையான பரிந்துரைகளையும் வழங்கி வந்தார்.
இந்தப் பதவியை அதிகாரம் மிக்கதாக மாற்றி அமைத்தார் சடைக்கன் சேதுபதி. இராமேஸ்வரம் பகுதியில் நடைபெறும் குற்றங்களை விசாரித்துத் தண்டனை வழங்கும் பொறுப்பும் இராமநாத பண்டாரத்திற்கு வழங்கப்பட்டது. கோவிலில் உள்ளே பணி புரியும் காவலாளி முதல் பட்டர் வரை பண்டாரத்திற்கு கட்டுப்பட்டவர்களே. எந்த நேரத்திலும் வெளியூர் பயணிகள் வந்து போகும் இடமாதலால் விரைவில் குற்றங்களைக் கண்டுபிடித்துத் தீர்ப்பு சொல்லவேண்டியே இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இது நாள் வரையில் எதற்காகவும் பண்டாரம் என்னால் இயலவில்லை என்று மன்னரிடம் வந்ததில்லை.
அப்படி இருக்கையில் இப்போது பண்டாரத்திற்குக் கட்டுப்படாமல் யார் பிரச்சினை செய்வது? மன்னருக்குப் பலவிதமான யோசனைகள் வந்து போயின.
“அவரை இருக்கையில் அமரச் செய். இதோ வந்து விடுகிறேன்” என்று காவலாளிக்கு உத்தரவிட்டார்.
மன்னர் வெளியே வந்த போது இருக்கையில் அமர்ந்திருந்த பண்டாரம் எழுந்து நின்றார்.
“மறவர் சீமையைக் கட்டிக் காக்கும் சேதுபதி மன்னருக்கு வணக்கம். மன்னிக்கவும் மகாராஜா! அரசவை கூடும் முன்பே தங்களிடம் ஒரு செய்தியைப் பகிரவே இங்கே வரவேண்டிய தாயிற்று.”
“வருக பண்டாரத்தாரே! எல்லாம் அந்த இராமநாத சுவாமியின் அருளின்றி எமது செயல் என்று எதுவும் இல்லை” என்று தனது குணத்தை வெளிப்படுத்திய மன்னர் அவர் வந்த நோக்கத்தைப் பார்வையால் வினவினார்.
“இராமேஸ்வரம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பில்லை மன்னரே. கள்ளர் சஞ்சாரம் முன்பை விட மிகுதியாகிவிட்டது. கள்ளர்களுடன் இப்போது நாட்டில் குழப்பம் செய்பவர்களும் இணைந்து கொண்டுள்ளார்கள்.”
“யாரது? குழப்பம் செய்வது? மறவர் சீமையில் குழப்பம் செய்ய யார் துணிந்தது?”
“தம்பித்தேவரும் அவரது ஆதரவாளர்களும் வாரிசுரிமை பற்றிப் பேசி மக்களைத் தங்கள் பக்கம் திசை திருப்ப முயற்சி செய்து வருகின்றனர் மகாராஜா! அவர்களது நடமாட்டம் இராமேஸ்வரம் பகுதியில் மிகுதியாக இருக்கிறது. தாங்கள் அனுமதித்தால் இன்னும் ஒரு தகவலையும் கூற விரும்புகிறேன்” என்றார் அம்பலகாரர்.
சொல்லுங்கள் என்பதாய் மன்னர் சைகை செய்ய, “கோட்டைத் தளபதியால் கூட அவர்களைக் கட்டுப்படுத்த இயலவில்லை மகாராஜா! இது பொருட்டுத் தாங்கள் ஏதேனும் நல்ல முடிவாக எடுக்க வேண்டும் என்று இராமநாதபுரம் பகுதி மக்களின் சார்பில் கோரிக்கை வைக்கிறேன்” என்று கரம் கூப்பி வணங்கினார்.
தற்போது தளபதியாக இருப்பவரைப் பற்றிய செய்திகளை மன்னர் அறிந்து தான் இருந்தார். தளபதியாக யாரை நியமிப்பது என்றும் ஒரு எண்ணம் இருந்தது. அதைச் செயல்படுத்தச் சரியான நேரம் வந்து விட்டதை உணர்ந்து கொண்டார்.
“நல்லது! இந்த விஷயத்தில் தாங்கள் செயல்பட்ட விதத்தைப் பாராட்டுகிறேன். கூடிய விரைவில் இதற்கு சரியான முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கிறேன். இப்போது அரசவைக்குச் செல்லலாம், வாருங்கள்” என்று சொல்லி விட்டு முன்னே நடந்தார்.
அன்று அரசவையில் ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. மன்னரின் உடன்பிறந்த சகோதரி கண்காணும் நாச்சியாரின் கணவரான வன்னியத் தேவர் மறவர் சீமையின் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
அன்று மாலை அந்தப்புரத்தில் தனது பட்ட மகிஷிகளுடன் அளவளாவிக் கொண்டிருந்த சடைக்கன் சேதுபதியின் பேச்சு வாரிசு பற்றியதாக இருந்தது. இரண்டு பட்டமகிஷிகள் இருந்தும் அவருக்கு வாரிசுகள் இல்லாத நிலை. அவரது வருத்தம் மகாராணியாரையும் சூழ்ந்தது.
“இது நாள் வரை இல்லாத வகையில் மன்னர் வாரிசு பற்றிக் கலங்குவதன் காரணம் எங்களுக்குப் புரியவில்லை. சேது நாட்டின் சட்டதிட்டங்களின்படி இன்றைய சூழலில் தங்கள் சகோதரியின் மூத்த குமாரர் தனுக்காத்த தேவர் தானே தங்கள் வாரிசாக வரமுடியும். அப்படி இருக்கையில் ஏன் இந்தக் கவலை. வேறு யாரேனும் கலகம் செய்வார்கள் என்று நினைக்கின்றீர்களா?” என்று கேட்ட மகாராணிக்கு ஒரு புன்னகை மட்டுமே பதிலாகத் தந்தார் மன்னர்.
“இந்தப் புன்னகையில் ஒளிந்திருக்கும் விஷயம் விளங்கவில்லை மகாராஜா. தாங்களே விவரமாக உரைத்து விடுங்கள்” என்று இருவருமே வேண்டி நின்றனர்.
“மகாராணி! மறவர் சீமையின் நன்மையை மட்டுமே கருத்தில் கொண்டு சில முடிவுகளை எடுக்க வேண்டிய முக்கியமான கட்டத்தில் நாம் இருக்கிறோம். தாங்கள் இருவரும் அனுமதித்தால் தான் இந்த விஷயம் எளிதாக முடிந்துவிடும். இல்லையென்றால் மறவர் சீமையின் எதிர்காலத்தில் நமக்குப் பின்னர் மறுபடியும் பெரும் குழப்பங்கள் நிலவும்” என்ற மன்னரது வார்த்தைக்கு அவரது மனைவியர் இருவரும் செவி சாய்த்தனர்.
அதன் படியே சடைக்கன் சேதுபதி, தனது சகோதரி கண்காணும் நாச்சியாரின் இளைய குமாரன் ரகுநாதனைத் தனது வாரிசாகத் தத்து எடுத்துக் கொண்டு அவனே அடுத்து மறவர் சீமையின் அரசனாக உரிமை உடையவன் என்று பிரகடனம் செய்தார்.
ரகுநாத சேதுபதியினைப் பற்றி அறிந்த மக்கள் அனைவரும் அவருக்கு ஆதரவு அளிக்க, சடைக்கனுக்கு வாரிசில்லாத நிலையில் அடுத்த மன்னராகி விடலாம் என்று கனாக் கண்டு கொண்டிருந்த தம்பித் தேவருக்கு இது அதிர்ச்சியை அளித்தது.
சில நாட்கள் அமைதியாக இருந்தவன் வாரிசுரிமை பற்றி மக்களிடையே சொல்லி கலவரத்தை ஏற்படுத்தினான். ஆனால் அந்த கலவரம் மன்னனால் எளிதில் ஒடுக்கப்பட்டது.
மக்களின் ஆதரவு இல்லாத நிலையில் திருமலை நாயக்கரின் தயவை வேண்டி மறுபடியும் அவரிடம் சென்று வாரிசுரிமை பற்றி முறையிட்டான்.
திருமலை நாயக்கர் அத்தனை எளிதில் தம்பித் தேவரின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. நாயக்க மன்னர்கள் பாளையக்காரர்களை நியமனம் செய்த போதே இரண்டு வாக்குறுதிகளை அளித்திருந்தார்கள். முதலாவதாக மதுரைப் பேரரசுக்கு உட்பட்ட போதிலும் அவர்கள் இஷ்டம் போல அவரவர் பாளையத்தை ஆட்சி செய்து வரலாம் என்பது. இரண்டாம் முக்கிய வாக்குறுதியாக, அவர்களுள் வாரிசு யார் என்று பங்காளி பிரச்சினை வந்தால் அதை அவர்களே தீர்த்துக் கொள்ள வேண்டும்.
மதுரைப் பேரரசு தாயாதிப் பிரச்சினையில் தலையிடாது என்பதைத் தெளிவாகச் சொன்ன பிறகு இப்போது தம்பித் தேவர் அதே கோரிக்கையுடன் வந்திருப்பது வாக்குறுதியை மீறும் செயலாகும் என்று திருமலை நாயக்கர் நினைத்தார்.
அதே நேரத்தில் தனது பேரரசிற்கு அண்மையில் உள்ள மறவர் சீமையின் வலிமை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையும் அவர் விரும்பவில்லை. இருதலைக் கொள்ளியாக அவர் தவித்த போது அவரது தளபதி இராமப்பையனை அணுகினார் தம்பித்தேவர். சேது நாட்டின் தலையெழுத்தை மாற்றி எழுதி வைத்தான் அந்த இராமப்பையன்.
இராமப்பையன், நாயக்கப் பேரரசுக்குத் தூண் போன்று விளங்கியவன். பல போர்களில் நாயக்கர்களுக்கு வெற்றியைத் தேடித் தந்திருந்தான். கூடவே மன்னருக்கு அடிபணிய மாட்டோம் என்று குரல் கொடுத்த பாளையக்காரர்கள் சிலரை ஒடுக்கி அவர்களைக் கப்பம் கட்ட வைத்திருந்தான். சடைக்கன் சேதுபதி மட்டுமே அவனது அதிகாரத்துக்கு ஆட்படாமல் இருந்ததால் இராமப்பையன், சேதுபதியின் மேல் தனிப்பட்ட முறையில் விரோதத்தை வளர்த்து வந்தான்.
இதனைத் தெரிந்தே தம்பித் தேவர் இராமப்பையனை அணுகி அவன் முன் கை கட்டி நின்றான்.
“தாங்கள் இந்த உதவியை எனக்குச் செய்தால் என்றுமே தங்களுக்குக் கட்டுப்பட்டு இருப்பேன். தயவுசெய்து மன்னரிடம் சிபாரிசு செய்து இந்த விஷயத்தில் தலையிடச் செய்யுங்கள்” என்று வேண்டி நின்ற தம்பித் தேவனைப் பார்த்துச் சிரித்தான் இராமப்பையன்.
நேரே சென்று திருமலை நாயக்கரின் முன் நின்றவன், “மன்னருக்கு வணக்கம்! தாங்கள் இத்தனை பிடிவாதமாக இந்த விஷயத்தில் இருப்பதைப் பார்த்தால் எனது வார்த்தைக்கும் பதவிக்கும் இத்தனை நாள் நான் இந்த மதுரைக்கு செய்து வந்த சேவைக்கும் அர்த்தமே இல்லை என்றல்லவா ஆகிறது. இதற்கு மேல் தளபதியாக இந்த சாம்ராஜ்ஜியத்தில் தொடர எனக்கு விருப்பம் இல்லை மகாராஜா. என்னைப் பதவியில் இருந்து விடுவித்து விடுங்கள்” என்று கிடுக்கிப்பிடி போட்ட இராமப்பையனது மிரட்டலுக்கு திருமலை நாயக்கர் அடிபணிந்தார்.

Author: SudhaSri
Article Title: அத்தியாயம் -1
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.