அத்தியாயம் - 10
ஒரு நாள் பிலிப்பைச் சந்தித்த குரு லியோனிடஸ், “சொந்த ஊரில் தனக்குச் சில அலுவல்கள் இருப்பதால் தொடர்ந்து கற்றுத் தர முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. மன்னித்து விடுங்கள் அரசே!” என்று கூறி உத்தரவு வாங்கிக் கொண்டார்.
இந்த நல்ல நேரத்தில் லியோனிடஸ் ஊர் திரும்புவது சற்று வருத்தத்தைத் தந்தாலும் உடனே சுதாரித்துக் கொண்ட பிலிப், தளபதிகளிடம் தனது மகனுக்கு வேறொரு நல்ல குருவை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தபோது அவர் தேர்வு செய்த நபர் “அரிஸ்டாட்டில்.”
கிரேக்க தேசத்தின் மிகச் சிறந்த அறிவாளி, பேச்சாளர், சிந்தனாவாதியாக ஜொலித்தவர் சாக்ரடீஸ். இவரைப் பற்றித் தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. இவரது சீடர் பிளேட்டோ. இவரும் சாக்ரடீஸின் சீடர் என்பதைப் பலமுறை நிரூபித்தவர். மிகப் பெரிய அறிவாளி. பிளேட்டோவின் சீடர்தான் அரிஸ்டாட்டில்.
பதினெட்டு வயதில் பிளேட்டோவின் கல்விக்கூடத்தில் மாணாக்கராகச் சேர்ந்தார் அரிஸ்டாட்டில். அவரது கல்விக்கூடம் அவர்களது சொந்த நகரான ஸ்டாகிராவின் வெளிப்புறத்தில் அமைந்திருந்தது.
அங்குதான் பட்டை தீட்டப்பட்டார் அரிஸ்டாட்டில். சரித்திரம், தத்துவம், இலக்கியம், உடற்பயிற்சிகள் என்று அனைத்துமே பயின்று, அங்கேயே ஆசிரியராகவும் பணியாற்றினார் அரிஸ்டாட்டில்.
பிளேட்டோ மற்றும் அரிஸ்டாடில் ஆகியோருக்கு இடையேயான உறவு, குரு - சீடர் உறவையும் தாண்டியதாக இருந்தது. அதன் காரணமாக பிளேட்டோவுக்குப் பின்னால் அந்தக் கல்விக்கூடம் அரிஸ்டாடில் வசமானது.
அந்தக் காலக்கட்டத்தில் கிரேக்க நாட்டின் பெரும் பகுதியையும் தனக்கு அடிமைப்படுத்தியிருந்தார் பிலிப். கிரேக்க நாடுகளின் ஒரு கூட்டாட்சியை ஏற்படுத்தி, அதற்கு பிலிப் தலைவராகத் திகழ்ந்து கொண்டிருந்தார். தனது ஆதிக்கத்தின் கீழ் வசிக்கும் அரிஸ்டாட்டிலை உடனடியாக அழைத்து வருமாறு உத்தரவிட்டார்.
அப்போது அவரது அரசவையின் மூத்த அமைச்சர் ஒருவர் இடைமறித்தார். “அரிஸ்டாட்டிலை அழைத்து வருவது அத்தனை எளிதானதல்ல.”
“என்ன சொல்கிறீர்கள் அமைச்சரே?”
“அரிஸ்டாட்டிலுக்கு தங்கள் மீது ஒரு வெறுப்பு உள்ளது...” என்று இழுத்தார்.
“என்ன, என் மீது வெறுப்பா? அவருக்கு நான் என்ன கெடுதல் செய்தேன்?” என்று பதறினார் பிலிப்.
“அரிஸ்டாட்டிலின் சொந்த ஊரான ஸ்டாகிரா நகர் மீது நம் படையினர் கடந்த ஆண்டு தாக்குதல் நடத்தி அதனை வெற்றிகரமாகக் கைப்பற்றினர். ஆனால் அந்தச் சண்டையின் போது அந்த நகர் முழுதும் தரைமட்டமாக்கப்பட்டு விட்டது. தங்களின் உத்தரவின் பேரிலேயே இது நிகழ்ந்தது. இதனால் தங்கள் மீது அரிஸ்டாட்டில் வெறுப்போடும், கோபத்தோடும் இருக்கிறார்” என்று விளக்கமாக எடுத்துரைத்தார் அமைச்சர்.
இது பிலிப் எதிர்பார்க்காத ஒரு புதிய தகவல். ஆனால் அரிஸ்டாட்டில் போன்ற அறிஞரைக் கொண்டு தனது மகனுக்குப் பயிற்சி அளிக்க வேண்டியது அவசியம் என்பதில் மட்டும் அவர் உறுதியாக இருந்தார். இதற்காக என்ன விலையை வேண்டுமானாலும் கொடுக்க அவர் தயாராக இருந்தார்.
‘என்ன செய்யலாம்-?’
“மன்னா, அந்த ஊரை மீண்டும் புதுப்பித்து புதிய கட்டமைப்போடு உருவாக்கினால் அவரது கோபத்தைத் தணித்து விடலாம் என்று நினைக்கிறேன்” என்றார் மற்றொரு அமைச்சர்.
இது சரியான யோசனையாகத் தெரிந்தது மன்னருக்கு. உடனடியாக அந்த நகரைப் புனரமைப்புச் செய்யுமாறு உத்தரவிட்டார்.
அடுத்த ஒரே மாதத்தில் ஸ்டாகிரா நகரம் மீண்டும் தலைநிமிர்ந்து எழுந்தது. புதிய வடிவத்தோடு அது குதூகலித்தது.
இப்போது அரிஸ்டாட்டிலுக்கு ஓர் கடிதம் எழுதினார் பிலிப். அதில் தனது மகன் அலெக்சாண்டருக்கு குருவாக இருந்து பயிற்சிகள் அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
கடிதத்தைப் படித்த அரிஸ்டாட்டில், அவரது சொந்த ஊர் புனரமைக்கப்பட்டதால் கோபம் தணிந்திருந்த காரணத்தால் உடனடியாக அந்தத் தூதுவரோடு பெல்லாவிற்குப் புறப்பட்டு வந்தார்.
அங்கே அரிஸ்டாட்டிலுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனால் மிகவும் மகிழ்ந்து போனார். ஏனென்றால் வாழ்வில் வெறுப்பின் உச்சத்தில் வாழ்ந்து கொண்டிருந்தவருக்கு இது மிகப் பெரிய வரப்பிரசாதமாகவே தோன்றியது. அறிவுக்கு என்றும் தோல்வியே கிடையாது என்பதை அவர் தெளிவாக இதன் மூலம் உணர்ந்தார்.
“தாங்கள் என் மகனுக்குப் பாடம் கற்றுத் தர சம்மதித்ததற்கு மிக்க நன்றி. அரண்மனையிலேயே பாடம் சொல்லித் தருவதற்கான தகுந்த இடத்தைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்” என்று பூரிப்பாய் அனுமதி தந்தார் பிலிப்.
ஆனால் அரிஸ்டாட்டில் இதனை ஏற்றுக் கொள்ளாமல் தனது விருப்பத்தைத் தெரிவித்தார். “நகரின் ஓரத்தில் ஒரு கல்விக்கூடம் அமைக்க எனக்குத் தாங்கள் அனுமதி தர வேண்டும். ஏனென்றால் என் குருநாதரின் விருப்பத்தை அப்போதுதான் என்னால் பூர்த்தி செய்ய முடியும்” என்று உறுதியாகத் தெரிவித்தார்.
“கல்விக்கூடத்தை நானே அமைத்துத் தருகிறேன். அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஆனால் எனது மகனுக்கு இங்கே அரண்மனையிலேயே தனியாகச் சொல்லித் தந்தால் நல்லது என்று நினைக்கிறேன்” என்றார் பிலிப்.
“மன்னிக்கவும். தனியாகக் கற்றுக் கொடுப்பதைக் காட்டிலும் பல மாணவர்களோடு சேர்ந்து கற்றுக் கொண்டால்தான் தங்கள் மகனுக்கு உலகமும் புரியும். தங்கள் மகனின் அறிவாற்றலும் தனித்தன்மை பெற்று அனைவரும் அறியத்தக்க விதத்தில் விளங்கும்” என்று அரிஸ்டாட்டில் கருத்து தெரிவிக்கவே அதனை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார் மன்னர்.
அப்போது அங்கிருந்த அலெக்சாண்டரைப் பார்த்து, “என்னிடம் மாணவனாகும் தகுதி உனக்கு இருக்கிறதா?” என்று பரீட்சித்துப் பார்ப்பதற்காகக் கேட்டார் அரிஸ்டாட்டில்.
உடனே சற்றும் யோசிக்காமல், “எனக்கு ஆசிரியராகும் தகுதி தங்களுக்கு இருக்கிறதென்றால், உங்களுக்கு மாணவனாகும் தகுதி எனக்கும் உள்ளது” என்றான்.
இந்தப் பதிலைச் சற்றும் எதிர்பாராத அரிஸ்டாட்டில் சற்று வெலவெலத்துத்தான் போனார்.
அடுத்த சில நாட்களில் அரிஸ்டாட்டிலின் விருப்பப்படி நகரின் ஒரு ஓரத்தில் கல்விக்கூடம் ஒன்று தயார் செய்யப்பட்டது. கல்விக்கூடம் என்றால் அங்கு சொகுசான அறைகள், மேஜை நாற்காலிகள் எல்லாம் அமைக்கப்பட்டிருக்கும் என்று நினைத்து விடவேண்டாம். மாணவர்கள் அமர்வதற்கு கற்கள்தான் நாற்காலிகளாக இருந்தன. ஆசிரியருக்கும் ஒரு கல்தான். கூரை கூடக் கிடையாது. திறந்த வெளி. சிறப்பான காற்றோட்டம்.
இங்குதான் அலெக்சாண்டருக்கும் கல்வி புகட்டப்பட்டது. இலக்கியத்தோடு இப்போது இலக்கணமும் அவருக்குப் போதிக்கப் பட்டது. உடற்பயிற்சியின்போது உடம்பில் சிறு காயங்கள் ஏற்பட்டன. அதற்கான மருத்துவ சிகிச்சையையும் அரிஸ்டாட்டிலே அளித்தார்.
“தங்களுக்கு மருத்துவமும் தெரியுமா?” வியப்புடன் கேட்டார் அலெக்சாண்டர்.
“நிச்சயமாக. அதுவும் ஒருவகைப் படிப்புதானே! அதனையும் எனது குரு எனக்குக் கற்றுத் தந்திருக்கிறார். நானும் உங்களுக்குக் கற்றுத் தரப் போகிறேன்” என்றார் அரிஸ்டாட்டில்.
அனைவர் முகங்களிலும் உற்சாகம் பீறிட்டது. குறிப்பாக அலெக்சாண்டர் உற்சாகத்தின் எல்லைக் கோட்டையே கடந்திருந்தார். அப்படியே அவர்களுக்கு மருத்துவமும் கற்றுத் தரப்பட்டது.
ஓவியங்கள் வரையவும் கற்றுத் தரப்பட்டது. அதுவும் வெறும் கரித்துண்டைப் பயன்படுத்தி ஓவியம் வரையும் பயிற்சி.
அப்புறம் கிரேக்கத்தில் எத்தனை நாடுகள் உள்ளன, அவை எங்கெங்கே இருக்கின்றன, அங்கே ஆட்சி செய்யும் மன்னர்கள் யார் யார், அந்த மக்கள் பேசும் மொழி, பாயும் நதிகள், மலைகள் என்று அனைத்து விவரங்களும் மாணவர்களுக்குத் தெளிவாகப் போதிக்கப்பட்டன.
கிரேக்க நாட்டின் எல்லைகளாக அமைந்திருக்கும் நாடுகள், அங்குள்ள அரசாட்சிகள், அங்குள்ள மக்களின் கலாச்சாரங்கள், தெய்வ வழிபாடுகள் போன்றவைகளும் கற்றுத் தரப்பட்டன.
இவ்வாறு பல பயிற்சிகள் நடைபெற்றன. அவ்வப்போது மாணவர்களோடு சாதாரணமாக உலக விஷயங்களைப் பற்றியும் பகிர்ந்து கொண்டார். அப்போது ஒவ்வொரு மாணவர்களும் தங்கள் சந்தேகங்களைக் கேட்டு அதற்கான விளக்கங்களைக் குருவிடம் பெறுவர். ஆனால் அவ்வாறு சந்தேகம் கேட்பதில் அதிக முனைப்புடன் இருந்த ஒரே மாணவன் அலெக்சாண்டர்தான்.
“எங்கள் அரண்மனையில் பூஜை அறை ஒன்று உண்டு. அங்கே தினமும் பூஜைகள் நடைபெறும். இப்படித்தான் நாட்டில் உள்ள அனைத்து வீடுகளிலும் பூஜைகள் நடைபெறுமா?” என்று ஒருநாள் கேட்டான் அலெக்சாண்டர்.
“சந்தேகமென்ன? எல்லோரது வீடுகளிலும் பூஜைகள் கட்டாயம் நடைபெறும். அனைவருக்குமே கடவுள் நம்பிக்கை நிறைய உண்டு” என்றார்.
“கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்பது சரி. ஆனால் நிறைய கடவுள் இருப்பதாகச் சொல்கிறார்களே, அப்படியா?”
“ஆமாம். கிரேக்கர்களைப் பொறுத்தமட்டில் நிறைய கடவுள் உண்டு. கல்விக்கு, வீரத்திற்கு, செல்வத்திற்கு, மருத்துவத்திற்கு என்று தனித்தனியாகக் கடவுள் இருப்பது உண்மைதான். அது மட்டுமல்லாமல் மோகினிகள், பேய்கள், பிசாசுகள், பில்லி சூனியம் போன்றவையும் இருப்பதாக ஒரு நம்பிக்கை உண்டு. அதிலும் குறி சொல்வதிலும், கேட்பதிலும் கிரேக்கர்களுக்கு அதிக நம்பிக்கை.”
அவனுடைய சந்தேகங்கள் எல்லாமே அவனுடைய எதிர்காலத்தை நோக்கியே இருப்பது அரிஸ்டாட்டிலுக்கு உள்ளுக்குள் பெருமையை ஏற்படுத்தியிருந்தது. இதனால் தனக்குத் தெரிந்த அத்தனை விஷயங்களையும் முடிந்தவரை அலெக்சாண்டருக்குக் கற்றுக் கொடுத்து விடுவது என்று முடிவு செய்திருந்தார்.
விரைவிலேயே அலெக்ஸாண்டரின் மேல் முழு திருப்தி ஏற்பட்டது. அதனால் அரசனைப் பார்க்கச் சென்றார். “தங்கள் மகனைப் பற்றிக் கூறுவதற்காகத்தான் நான் இங்கே வந்தேன்...” என்றவாறு நடந்த அனைத்து விஷயங்களையும் உணர்ச்சி பொங்கத் தெரிவித்தார்.
இதைக் கேட்டு உணர்ச்சியின் உயரத்திற்கே சென்று விட்டார் மன்னர். “நான் எதிர்பார்த்ததைக் காட்டிலும் என் மகன் சிறப்பாகக் கற்றிருப்பது மகிழ்வாக இருக்கிறது. அதையும் தலைசிறந்த ஒரு தத்துவஞானியின் வாயால் கேட்கும்போது, வாழ்க்கையில் இதற்கு மேல் வேறு எனக்கு என்ன வேண்டும் என்று தோன்றுகிறது” என்றார் கண்களில் ஆனந்தக் கண்ணீர் சொட்ட..
அரிஸ்டாட்டிலின் இரு கரங்களையும் எடுத்துத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டார். பரிசுகளை அள்ளி வழங்கினார். காலாகாலத்திற்கும் அவர் இங்கேயே இருந்து கல்விக்கூடத்தை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அதற்கான அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் வாக்களித்தார்.
பின்னர் தனது மகனை உடனே அரண்மனைக்கு அழைத்து வருமாறு கட்டளையிட்டார்.
அரண்மனைக்கு வந்த மகனிடம், “உன்னைப் பற்றி அத்தனை விவரங்களையும் உன் குருநாதர் என்னிடம் சொல்லி விட்டார். நீ சிறப்பான கல்வியறிவைப் பெற்று விட்டாய் மகனே. இப்போது ஆட்சியில் பங்கேற்கும் தகுதியைப் பெற்றிருக்கிறாய். அரசப் பிரதிநிதி என்னும் முக்கியத்துவம் வாய்ந்த பதவி உனக்காகவே காத்துக் கொண்டிருக்கிறது. உடனடியாக அதனை நீ ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது உனது அன்புத் தந்தையின் அன்பான வேண்டுகோள்” என்றார் பிலிப்.
தனது மகனின் திறமை அடிப்படையிலேயே இந்த முக்கிய பதவியை வழங்குவதாகத் தனது மூத்த அமைச்சர்களிடம் விளக்கி அவர்களின் சம்மதத்தையும் பெற்றார்.
இரண்டொரு நாளில் அந்தப் பதவியில் அமர்ந்தார் அலெக்சாண்டர். அப்போது அவருக்கு வயது பதினாறு.
ஆக நிர்வாகம் முழுவதும் இப்போது அலெக்சாண்டர் வசமானது. இதனால் நிம்மதியடைந்த மன்னர் பிலிப், மிச்சமிருக்கும் நாடுகளின் பட்டியலையும், அவற்றின் வரைபடங்களையும் விரித்து வைத்துக் கொண்டு போருக்கான ஆயத்தங்களில் ஈடுபடத் தொடங்கினார்.
அவருக்கு ஆட்சியில் இருந்து நிர்வாகம் செய்வதைக் காட்டிலும் உலக நாடுகள் முழுவதையும் தன் வசமாக்கிக் கொள்வதில் மட்டுமே அதிக ஆர்வம். அதிலும் குறிப்பாக உலகின் கிழக்கு எல்லையாக இருக்கும் இந்தியாவைக் கைப்பற்றுவதுதான் ஒரே லட்சியம்.
அன்றைய காலக்கட்டத்தில் இந்தியாதான் கிழக்கு எல்லையாகக் கருதப்பட்டது. அதற்குப் பின்னரும் நாடுகள் இருந்ததை அவர்கள் யாரு
மே அறிந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

Author: SudhaSri
Article Title: அத்தியாயம் -10
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.