அத்தியாயம் -11
புருஷோத்தமனும் விஜயனும் அடர்ந்த காட்டிற்குள் சென்று கொண்டிருந்தனர். இருவருக்கும் இடையே இரு உடம்பில் ஒரே உயிர் போல ஒரு பிணைப்பு இருந்தது. கதிரவனது இளங்கீற்று பூமியில் விழும் முன்பே அவர்கள் காட்டுப் பாதையைத் தொட்டு விட்டனர், சூரியன் உயரத் தொடங்கியதும் வெப்பம் சுட்டெரிக்கத் தொடங்கியது. கடந்த சில காலத்தில் காணப்பட்ட மிகக் கடும் கோடைக்காலங்களில் ஒன்று அது. புருஷோத்தமன் சொல்வது போல் வேட்டைக்குப் பொருத்தமான காலம்.
நீர்நிலைகள் வறண்டு போயிருந்தன; விலங்குகள் தாகத்தைத் தீர்க்க நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை. இதனால் அவை வேட்டைக்காரர்களுக்கு எளிய இலக்குகளாக மாறின.
புருஷோத்தமன் கிட்டத்தட்ட ஏழு அடி உயரம். அவனது தேசத்தில் அவனளவிற்கு உயரமான மனிதனை யாரும் முன்பு கண்டதில்லை. உடல்வாகுடன், வலிமையுடன் இருந்தான்; குதிரையேற்றம், உடற்பயிற்சி ஆகியவை அவனுக்குப் பிடித்தவை. வலது கையில் வாளைச் சிறப்பாகச் சுழற்றுவான்; ஆனால் அவன் விரும்பிய ஆயுதம் ஈட்டி. வேட்டையே அவனுக்குப் பிரதான விளையாட்டு. சத்யரதனின் மூத்த மகனான விஜயன் புருஷோத்தமனின் தோழன் போன்றவன்.
காட்டின் சூழலையே புருஷோத்தமன் விரும்புவான். அடர்ந்த பசுமையும் உயர்ந்த மரங்களும் மனிதன் கட்டிய மாளிகைகளை விட அழகானவை என அவன் அடிக்கடி சொல்வான். காட்டில் பொறுமையும் தியாகமும் கற்றுக் கொள்ளலாம்; அது மனிதனிடமிருந்து எதையும் எதிர்பார்ப்பதில்லை, ஆனால் அனைத்தையும் அளிக்கிறது என்பான்.
சத்யரதன் மகதத்திற்கு சென்றிருந்த போது, புருஷோத்தமன் விஜயனுடன் வேட்டைக்குக் கிளம்பி விட்டான். இதற்கு முன்பெல்லாம் சிசுபாலனைப் பற்றிய அச்சம் இருந்தது. எப்போதும் போர் மூளும் என்பது போன்ற தோற்றம் இருந்தது. அதனால் நாட்டின் பாதுகாப்பு கருதி வேட்டைக்குச் செல்வதையே மறந்திருந்தனர்.
ஆனால் இப்போது அப்படி அல்ல. தனநந்தனின் ஒரேயொரு ஓலை நிலைமையைத் தலைகீழாக மாற்றி விட்டது. அதனால் பௌரவ தேசத்தின் காவல் மிகவும் தளர்த்தப்பட்டு விட்டது. பயமில்லை என்று நம்பி புருஷோத்தமன் வேட்டைக்குக் கிளம்பி விட்டான்.
விஜயன் தனது சிறுவயதில், புருஷோத்தமனின் ஈட்டியைத் தூக்க முயற்சித்திருக்கிறான். இன்றும் அவன் அதைச் சிறிது நேரம் மட்டுமே தக்க வைக்க முடியும். வில் மற்றும் அம்புகள் மட்டுமே அவனுக்குப் பிடித்தவை. அவன் பிறந்தபோது கைகள் அம்பு எய்யும் நிலையில் உயர்த்தப்பட்டிருந்தன என்று அவனது தாய் அடிக்கடி சொல்லுவாள். அதனாலேயே அவனுக்கு விஜயன் எனும் பெயர் சூட்டப்பட்டது.
அந்தக் கதை உண்மையா என விஜயனுக்குத் தெரியாது. இருந்தாலும், ராமன், லட்சுமணன் இருவரும் ராவணனை வதைத்த கதை அவனை ஆழமாகப் பாதித்திருந்தது. வளர வளர அவனுக்கு வில்லையும் அம்பையும் பற்றிய இயல்பான ஈர்ப்பு அதிகரித்தது; அவன் ராமனை வழிபட்டான்.
பார்பதி நகரத்தில் இருந்து, காடு ஒரு மைல் தூரத்துக்குள் இருந்தது. காட்டின் எல்லைப் பகுதிகளில் எரிபொருள், மரம், பழங்கள் தேடி அடிக்கடி கிராமவாசிகள் வருவார்கள். அதனால் அங்கு விலங்குகள் அரிது. உண்மையான வேட்டைக்குக் காட்டின் உள்ளே செல்ல வேண்டும். அன்று அவர்கள் மானைக் கண்டுபிடிக்க முயன்றனர், இரவு உணவுக்குத் தேவையான சிறப்பான இரையாக.
அன்றைய நாள் குடும்பத்திற்குப் பெருமையான நாள்; நந்த சாம்ராஜ்யத்துடன் மண உறவு என்பது சாதாரண விஷயமல்ல.
புருஷோத்தமன் சூரியனின் நிலையை பார்த்து, வேறொரு குதிரையில் ஏறியிருந்த விஜயனை நோக்கி, “உனது திருமணத்திற்கான விருந்தை வேட்டையாடுவது உன் பொறுப்பு” என்றான்.
“இதைக் குறித்து பாடலிபுத்திர அரண்மனையில் அறிவித்து விட்டார்களா?” விஜயன் ஆனந்தத்துடனும் எதிர்பார்ப்புடனும் கேட்டான்.
புருஷோத்தமன் தலை ஆட்டினான்; முகத்தில் பெருமையும் பூரிப்பும் இருந்தது. ஜோதிடர்கள் கூறியபடி, அவர்கள் ராகு காலத்திற்கு முன்பாகவே அரசனைச் சந்திக்க திட்டமிட்டனர். திருமண நாளைத் தெரிவு செய்து முடித்துள்ளனர்.
அவனுக்குத் தெரியாது, அந்த ‘ராகு காலம்’ அவர்களது குடும்ப வாழ்க்கைக்குள் ஊடுருவத் தொடங்கி விட்டது என்று.
காட்டின் ஆழத்தில் மான்களின் கூட்டம் சென்ற தடங்களை அவர்கள் கண்டனர்.
“இது சிங்காரா போல இருக்கிறது.” விஜயன் அடையாளங்களை ஆராய்ந்து சொன்னான்.
“நீ சொல்வது சரியே!” புருஷோத்தமன் கூற, இருவரும் அந்தத் தடங்களைப் பின்தொடர ஆரம்பித்தனர்.
பல மணி நேரங்கள் கடந்தும் இரையை நேரில் காண முடியவில்லை. தடயங்கள் புதிதாக இருந்தன; அதனால் மான்கள் மிகத் தொலைவில் இல்லை. அதே நேரம், அவை காலை மேய்ச்சலுக்குப் பிறகு திரும்பிச் செல்லும் நேரம் இது என்றும், வேறு வேட்டைக்காரனால் அச்சுறுத்தப்பட்டு தப்பியிருந்தால் ஓடியிருக்கலாம் என்றும் கருதினர். தடங்களைப் பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை.
“ஏதோ தவறு போல இருக்கிறதே. நாம் தவறான திசையில் செல்கிறோமா?” விஜயன் கேட்டான்.
“இல்லை. நாம் தவறாகச் செய்கிறோம். குதிரைகள் நம்முடைய இருப்பை முன்னமே உணர்த்தி விடும். சத்தம் கேட்டு மான்கள் ஓடி விடுகின்றன. அவற்றை இங்கேயே விட்டு விட்டுப் போக வேண்டும்” என்று புருஷோத்தமன் சுற்றிப் பார்த்துச் சொன்னான்.
இருவரும் ஒப்புக் கொண்டு, ஒரு அடர்ந்த மரத்தின் கீழ் குதிரைகளைக் கட்டினர். கால் நடையாகத் தொடர முடிவு செய்தனர். நகரும் முன், விஜய் குதிரைகளுக்குத் தேவையான புல், இலைகளைச் சீராக ஏற்பாடு செய்தான்.
வேட்டையின் போது உடல் முழுவதும் மூடப்பட்டிருக்க வேண்டும் என்பது கடைப்பிடிக்கப்படும் விதி. அதனால் இருவரும் கால் பகுதிகளில் தடித்த துணியைக் கட்டிக் கொண்டனர். விஜயனுக்கு அதில் துளிக் கூட விருப்பம் இல்லை. இருந்தாலும் கோடைக்காலத்தில் அதைப் பின்பற்ற வேண்டிய அவசியம் அவனுக்குப் புரிந்தது.
“போருக்கு எப்படிச் செல்வாய்? கவசமின்றியா?” ஒருமுறை புருஷோத்தமன் அவனிடம் கேட்டிருந்தான்.
“இது போர் அல்ல,” விஜயன் எதிர்த்துரைத்தான்.
“ஆனால் இது போரை விட ஆபத்தானது. போரின் சூழலுக்குப் பழகுவதற்கு இதை விட நல்ல வாய்ப்பு வேறில்லை.” புருஷோத்தமன் உறுதியாகக் கூறியிருந்தான்.
இப்போது முழுமையாக உடல் மூடப்பட்டதால், விஜயன் சற்றே நிம்மதியடைந்தான். வியர்வை இருந்தாலும், விரல்கள் மற்றும் கண்களைத் தவிர வேறெதுவும் வெளிப்படவில்லை. பூச்சிகள், முட்கள் முதலியவற்றிலிருந்து பாதுகாப்பையும் அளித்தது. மேலும், அவனுடைய வாசனை இலக்கை எட்டினால் அது உடனே எச்சரிக்கையடைந்து ஓடிவிடும் என்பதைத் தடுக்கவும் உதவியது.
இருவரும் மெதுவாக இலக்கை நோக்கி நகர்ந்தனர். உலர்ந்த இலைகள் காலடியில் முறியும் சத்தம் அமைதியான காட்டுக்குள் ஒரு ஒலியை ஏற்படுத்தியது. பறவைகளின் கீச்சல், பூச்சிகளின் மெல்லிய இசை கேட்டு காடு உயிருடன் இருப்பதை அவர்கள் உணர்ந்தனர்.
காட்டு யானையின் திடீர் பிளிறல் ஒலி, குரங்குகளின் ஒலி இவை அனைத்தும் காட்டின் குரல்களே. காடு பேசிக் கொண்டிருந்தது; சூழலும் உயிர்களின் இருப்பும் குறித்த சைகைகளைப் பரிமாறிக் கொண்டிருந்தது. அவற்றைப் புரிந்து கொள்ள அனுபவமும் விழிப்பும் தேவை. அவர்கள் இருவரும் அந்த மொழியில் இன்னும் ஆரம்ப நிலை மாணவர்களாகவே இருந்தார்கள்.
அதிர்ஷ்டவசமாக, காற்றின் போக்கு அவர்களுக்குச் சாதகமாக இருந்தது. மெதுவாக வீசிய காற்று, அவர்களின் உடல்நாற்றம் இரையை எட்டுவதற்கான வாய்ப்பைத் தடுத்தது.
அரை மைல் நடந்த பின், அவர்கள் ஒரு சிறிய புல்மேடையை அடைந்தனர். அங்கேதான் இலக்கைக் கண்டனர். நான்கு சிங்காரா மான்கள் அங்கிருந்தன. மீதமிருந்த புல்லை மெத்தனமாக மேய்ந்து கொண்டிருந்தன. சிங்காரா மான்கள் பொதுவாக தனிமையில் நடமாடுபவை. இப்படி நான்கு ஒன்றாகக் காணப்படுவது அரிதுஃ வேட்டைக்காரர்கள் அதிர்ஷ்டசாலிகள்.
இருவரும் பார்வைகளைப் பரிமாறிக் கொண்டனர். புருஷோத்தமன், விஜயனை அம்பால் தாக்குமாறு கண்களாலேயே சுட்டினான். விஜயன் நின்றிருந்த நிலை குறி வைத்துத் தாக்குவதற்குச் சிறந்ததாக இருந்தது.
விஜயனுக்கு தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது, எந்த மானை எடுத்துக் கொள்வது? மான்கள் சுமார் நூறடி தூரத்தில் இருந்தன; மந்தமான காற்று எதிர்த்திசையில் வீசியது. இந்தத் தூரம் அவனுக்குச் சிரமமில்லை. மிகப் பெரிய மானைத் தேர்ந்தெடுத்தால், உணவு போதுமானதாக இருக்கும். ஆனால் அது வயதானதாக இருந்தால், இறைச்சி மென்மையாக இருக்காது.
ஆகவே, குழுவின் நடுவில் மேய்ந்து கொண்டிருந்த நடுத்தர அளவுடைய சிங்காரா மானை விஜயன் தேர்ந்தெடுத்தான். அது அனைத்திலும் அழகானதாகவும், அதன் தோல் அவன் தாய்க்குப் பயன்படக் கூடியதாகவும் இருந்தது.
இந்தக் கணக்குகளெல்லாம் தெரியாமல், புருஷோத்தமன் சற்று எரிச்சலடைந்தான். சிங்காரா மான்கள் வேகத்திற்குப் பெயர் பெற்றவை. மனிதன் இருப்பதை உணர்ந்தாலே ஓடிப் போகும். ஏற்கனவே நேரம் தள்ளிப் போயிருந்தது. இருவரும் களைப்புற்றிருந்தனர். அதனால், புருஷோத்தமன், விஜயனைத் தாமதமின்றிச் செயல்படுமாறு வலியுறுத்தினான்.
விஜயன் இலக்கில் மனதை ஒருமுகப்படுத்திய பிறகு, இறுதி அனுமதிக்காக சிற்றப்பனை நோக்கினான். புருஷோத்தமன் கண்ணசைவாலே ‘செய்’ என்று ஒப்புதல் தந்தான்.
விஜயன் தலையசைத்து, வில்லின் நாணை வலது காதருகே இழுத்தான். சரியான கோணமும் வேகமும் அமைந்தால்தான் அம்பு இலக்கைத் துளைக்கும். தவறினால், நான்கு மான்களும் தப்பி விடும்; அவர்களுக்குக் கிடைக்கும் ஒரே நல்ல உணவின் வாய்ப்பும் கரைந்து விடும். சில கணங்கள் அவன் உடலைச் சமநிலையில் கொண்டு வந்தான்.
மான்கள் மேய்வதை நிறுத்தவில்லை. நேராக அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தன. காட்டின் செயல்பாட்டிலும் ஏதோ ஒரு மாற்றம் தெரிந்தது. பறவைகள் கூட்டமாகச் சத்தமிட்டு பறந்தன. இரண்டு குரங்குகள் விசித்திரமாகக் கூச்சலிட்டன. காடு முழுவதும் அவனைத் தோல்விக்குத் தள்ள ஒன்றிணைந்தது போல இருந்தது. சிற்றப்பன் அருகில் இருப்பதால் தவறினால் அவமானம். புருஷோத்தமனும் மீண்டும் ஒரு வாய்ப்பு தரமாட்டான். எப்போதும் போல அவன் இதைச் சிரிப்பிற்கான விஷயமாக மாற்ற முடியாது.
அர்ஜுனன் பறவையின் கண் ஒன்றையே நோக்கிக் குறியிட்டது போல், விஜயன் சிங்காரா மானின் கழுத்தை மட்டும் குறி வைத்தான். ஆழ்ந்த மூச்சொன்று, கைகள் உறுதியாகின. அடுத்த நொடி சற்றுத் திரும்பி அம்பை நேராக மானின் தலையில் எய்தான்.
புருஷோத்தமன் இலக்கை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தான்; தன் சகோதரன் மகன் செய்த கடைசி யுக்தியை அவன் கவனிக்கவில்லை. அம்பு, தன் கணிப்புப்படி ஏற்கனவே பாய்ந்து இருக்க வேண்டும். அவன் அதை உணராதபோதும், திடீரென நிகழ்ந்த ஒன்றால் அவன் திகைத்தான். அம்பு தன்னை நோக்கிப் பறந்து வருவதை அவன் கண்டான்.
அம்பு ஒரு ஓரமாகப் பாய்ந்தது. ஆனால் உடனே அவன் உடல் மேல் ஒரு பெரும் சுமை விழுந்ததை உணர்ந்தான். நரம்புகள் இழுத்துக் கொண்டன, இதயம் வேகமாகத் துடித்தது. அந்தச் சுமை, அது ஒரு புலி. விஜயனின் அம்பால் விழுந்திருந்தாலும், இன்னும் உயிருடன் இருந்த புலி.
அம்பு முழு வளர்ச்சியடைந்த அந்தப் புலியின் கழுத்தில் பட்டிருந்தது. அது புருஷோத்தமனின் முதுகில் தன் நகங்களைப் பதிக்கும் முன், மானை நோக்கிக் குறி வைக்கத் தயாரான விஜயன், தன் சிற்றப்பனுக்குப் பின்னால் ஏதோ அசைவைக் கண்டிருந்தான். அது பாயத் தயாரான புலி என்று உணர அவனுக்கு ஒரே கணம் தான் தேவைப்பட்டது. புலி தாக்கும் முன்பே விஜயன் அம்பை விட்டான்.
ஒரு புலியைப் பார்க்கும் முன், அது நூறு முறை உன்னைப் பார்த்திருக்கும் என்பது பழமொழி. ஆகவே, அது அவர்களை நீண்ட நேரமாகத் தொடர்ந்து வந்திருக்க வேண்டும். இரை அசையாமல் நின்றவுடன், அது பாய்ந்திருந்தது.
புலி வலியுடன் கர்ஜித்தது. புருஷோத்தமன் மீது விழுந்து, தன் முழு எடையையும் அவன் மீது திணித்தது. காயமடைந்திருந்தாலும், அது உயிரோடு இருந்தது. உண்மையில், காயமடைந்த புலி இன்னும் ஆபத்தானது.
விஜயன் கலங்கிப் போனான். வியர்வையில் குளித்து விட்டான். அவன் அம்பு உண்மையில் இலக்கைத் தாக்கியிருந்தது என்பதை அவனால் நம்ப முடியவில்லை. சிறு தவறு இருந்திருந்தால் கூட அவனுடைய சிறிய தந்தை பசியோடு இருக்கும் புலியின் உணவாக மாறியிருப்பான். அந்த ஆபத்தை அவன் எவ்வாறு பார்த்தான்? வேகமாக நகரும் இலக்கைத் தாக்கியதற்காக ஒரு சிறந்த வில்லாளி என்று புகழ்வார்களா? அல்லது அர்ஜுனனைப் போல தவறாத கவனம் இல்லாததால், இதை வெறும் அதிர்ஷ்டம் என்று சொல்வார்களா?
புருஷோத்தமன் அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டான். உடனடியாகச் செயல்படவில்லை என்றால், முழு வளர்ச்சியடைந்த புலி தன்னைக் கொன்று விடும் என்பதை உணர்ந்தான். இடுப்பில் கட்டியிருந்த கத்தியைக் கையில் எடுக்க முயற்சித்தான். ஆனால் கையை அசைக்கவே கஷ்டமாக இருந்தது. புலியும் தன் நகங்களை அவன் உடலிலிருந்து இழுக்க முயன்றது. புருஷோத்தமனின் உடலின் வலது பகுதி முழுவதும், புலியின் வயிற்றுக்குக் கீழே சிக்கியிருந்தது. புலி கழுத்தை நீட்ட முயன்றபோது, அவனுக்குச் சிறிது அசைவுக்கு இடம் கிடைத்தது.
அந்தச் சிறிய இடைவெளி அவன் கத்தியை நகர்த்தப் போதுமானதாக இருந்தது. சிறியதாயிருந்தாலும், உறுதியான ஒரு குத்து. புலியின் தோலைக் கிழித்து, உடலுக்குள் புகுந்தது. வலியால் புலி கர்ஜித்தது. அந்தச் சிறு அசைவில், புருஷோத்தமன் அதற்குக் கீழிருந்து சுழன்று வெளியேறினான். புலி திரும்ப முயன்றபோது, அதன் முதுகில் கத்தியால் ஒரு குத்து விழுந்தது.
கண் இமைக்கும் நேரத்தில், புருஷோத்தமன் புலியின் மேலே ஏறி இருந்தான். மார்பின் ஒரு பக்கத்தில் குத்தினான். இந்த முறை மேலும் ஆழமாக. கத்தி சிறியது, குத்துகள் கொல்லக் கூடியதாக இல்லை. ஆனால் வலியை அதிகரிக்கத் தக்கவையாக இருந்தன. அவன் கோபத்துடன் மேலும் மேலும் குத்தினான். புலியின் கர்ஜனை மெல்லக் குறைந்து, இறுதியில் ஒரு மெலிந்த முனகலாக மாறியது.
புருஷோத்தமன் ஒதுங்கி நின்று, சுவாசத்தை சீராக்கிக் கொண்டான். கண்கள் இன்னும் வேட்டையிலேயே இருந்தன. உடைகளைச் சரி செய்து, முகத்திலிருந்த இரத்தத்தைத் துடைத்தான். கத்தி இன்னும் புலியை நோக்கி நீண்டிருந்தது.
விஜயன் வில் உயர்த்தியபடியே புலியைக் குறி வைத்து மெதுவாக வந்தான். புருஷோத்தமனுக்கும் புலிக்கும் நடுவில் நடந்த போராட்டம் முடிவடையாத நிலையில் அவனால் அம்பை விட முடியவில்லை. இதயம் பலமாகத் துடித்தாலும், முகத்தில் பாறை போன்ற உறுதி.
“இரண்டு புலிகள் சண்டையிட்டால், ஒருவன் காயமடைவதும் மற்றவன் இறப்பதும் உறுதி” என்று ஒரு சொல்லாடல் உண்டு. இங்கு புருஷோத்தமன் நன்றாக இருந்தான். புலி இறந்து விட்டது.
காடு முழுவதும் அமைதி சூழ்ந்தது. அந்த மிருகத்துக்கு மரியாதை செலுத்துவது போல பறவைகளும், குரங்குகளும் அசையாமல் இருந்தன. அந்த அமைதி, இருவர் இதயத் துடிப்பையும் கேட்கக் கூடிய அளவுக்கு இருந்தது.
சில கணங்கள் கடந்தன. புலி இறந்து விட்டது என்று உறுதி செய்த பின், புருஷோத்தமன் விஜயனிடம் சைகை செய்தான். அவன் அம்பைத் தளர்த்தினான்.
விஜயன் முன்னே குனிந்து, புலி உண்மையில் இறந்து விட்டதா என்பதைப் பார்த்தான். புருஷோத்தமன் அதைத் தடுத்திருந்தான்.
“புலி தூங்கிக் கொண்டே தாக்கினால் என்ன செய்வது” என்று மெல்லச் சொன்னவன், தன் ஈட்டியைத் தேடிப் பார்த்தான். அது சிறிது தூரத்தில் கிடந்தது. அதை எடுத்து புலியை குத்திப் பார்த்தான். புலி நிச்சயமாக இறந்திருந்தது.
வேறு அபாயம் இல்லையா என்று அவன் சுற்றிப் பார்த்தான். நரிகள், ஓநாய்கள் போன்றவை இறந்த மிருகத்தின் எச்சங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கக் கூடியவை. விஜயன் மேலும் அருகே சென்று, புலியின் தோலைத் தொட்டான். பின், ஏமாற்றத்தில் மூச்சு விட்டான்.
“என்ன?” புருஷோத்தமன் ஆச்சரியத்துடன் கேட்டான்.
“புலியின் தோலை நீ கெடுத்து விட்டாய்.”
நந்தனுடனான உறவைக் கொண்டாட ஒரு விருந்து வைக்கலாம் என்ற திட்டம் இப்போது சாத்தியமில்லை என்று அவர்களுக்கு புரிந்தது. சுற்று வட்டாரத்தில் வேறு விலங்குகளின் தடயம் எதுவும் இல்லை. குதிரைகளை நினைத்து, அவர்கள் அவசரமாகத் திரும்பினார்கள். அவை பாதுகாப்பாக இருந்ததைப் பார்த்து மகிழ்ந்தனர்.
பின்னர், எப்படியோ புலியின் உடலை ஒரு குதிரை மீது ஏற்றி, மற்றொரு குதிரையில் இருவரும் சேர்ந்து பயணித்தனர். புலி இறந்தாலும் பிரம்மாண்டமாக இருந்தது. குதிரைகள் அந்தச் சடலத்தைக் கண்டதும் அஞ்சின. ஆனால் மெல்ல அது பழகி விட்டது..
“இந்தப் புலியும் அதே சிங்காரா மான்களை விரும்பியிருக்கலாம்” என்று விஜயன் சொன்னான். “ஆனால் அதை நீ கெடுத்து விட்டாய்” என்று குறை வாசித்தான்.
“விருந்தையே கெடுத்தது நீதான்.” புருஷோத்தமன் கடுமையான குரலில் சொன்னான், தன் சகோதரன் மகனை நோக்காமல்.
“ஆனால் உன் அம்பு மட்டும் இல்லையென்றால், நான் இந்நேரம் உயிரோடிருக்க மாட்டேன்.”
புருஷோத்தமனின் பின்னால் அமர்ந்திருந்த விஜயன் அவனைக் கட்டிக் கொண்டான். சிறிது நேரம் கழித்து, “சிற்றப்பா, காயமடைந்த புலியை எதிர்த்து, கத்தியால் கொன்றது மிகுந்த துணிச்சல்,” என்றான்.
“அது புருஷோத்தமன் போன்றவர்களால் மட்டுமே சாத்தியம்” என்று பெருமை பேசினான் புருஷோத்தமன்.
“ஏன் கழுத்தை வெட்டவில்லை? தோலைக் காப்பாற்றியிருக்கலாம் அல்லவா?” என்று விஜயன் பரிகாசம் செய்தான். இருவரும் சிரித்தார்கள்.
“இவை எல்லாம் சரி. விருந்து பற்றி என்ன?” புருஷோத்தமன் கேட்டான்.
“இப்போது அதை நிறைவேற்ற முடியாது.”
இருவரும் இரவு உணவுக்காக சில முயல்களை வேட்டையாடினர். வீட்டில் அனைவரும் அவர்களின் வருகைக்காகக் காத்திருப்பார்கள் என்பதும், புலியின் கதையே அவர்களின் பசியைத் தீர்க்காது என்பதும் அவர்களுக்கு தெரிந்ததே. முன்பு நடந்த புலி வேட்டை குறித்துப் பேசுகையில், அந்த வீட்டுப் பெண்கள் அதை வீரச்செயலாகப் பார்க்காமல், ஏதோவொரு கதையாக எடுத்துக் கொண்டனர்.
குறிப்பாக புருஷோத்தமனின் மனைவி ஊர்மிளா, அவள் ஒருபோதும் கணவரின் வீரத்தை வெளிப்படையாகப் பாராட்டியதில்லை. இப்போது எப்படிப் பதிலளிப்பாள் என்பதே விஜயனுக்கு ஆவலாக இருந்தது.
“பெண் மனம், தங்கள் கணவர்களைப் பற்றி எவ்வாறு சிந்திக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள உனக்கு இன்னும் திருமணமாகவில்லை. விரைவில் புரிந்து கொள்வாய்” என, புருஷோத்தமன் சாதாரணமாகச் சொல்லிச் சிரித்தான்
திருமணப் பேச்சுகள் விஜயனுக்கு விருப்பமில்லாதவை. ஆனால் இப்போது வீடு முழுவதும் அதே பேச்சுதான். இதோ அவனது திருமணம் பற்றிப் பேசுவதற்குத்தான் தந்தை மகதத்தின் தலைநகரம் சென்றிருக்கிறார்.
முன்னொரு நாள் அவனது தாய், அவன் ஒரு அரச குமாரியை மணக்கக் கூடும் என்று சொன்னாள். இப்போது அது நடக்கப் போகிறது.
அவர்கள் பார்பதி நகரைச் சமீபித்தபோதே ஏதோ தவறு நடந்திருப்பதை உணர்ந்தனர். ஊரின் நடுவிலிருந்து அடர்ந்த கரும்புகை எழுந்தது. அது சாதாரண தீ விபத்து அல்ல. மிகப் பெரிய தீ. குதிரைகள் திடீரென நின்று விட்டன. அதுவே இருவருக்கும் எச்சரிக்கை அளித்தது. புருஷோத்தமன் குதிரையை உதைத்து வேகமாகச் செல்ல முற்பட்டபோது, விஜயன் பின்னால் இருந்து அவன் கையைப் பிடித்து அழுத்தினான்.
அவர்களை நோக்கிச் சிலர் ஓடி வருவதைச் சுட்டிக் காட்டினான். அவர்களது முகங்களில் பயமும் அவசரமும் தெரிந்தது. இருவரும் குதிரைகளை அவர்களை நோக்கித் திருப்பினர்.
நெருங்க நெருங்க, ஏதோ மோசமானது நடந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாயிற்று. விபத்தே என்றால் கூட, வெயிலால் உண்டாகும் தீயும் சிறிய அலட்சியமும் பெரும் அழிவை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. சொத்து சேதமே என்றாலும், அதையும் மீட்டெடுக்க முடியும். ஆனால் மனித உயிர்…?
புருஷோத்தமனின் மனக்கண்களில் திடீரென பல முகங்கள் மின்னின. தன் பச்சிளம் குழந்தை. வீட்டில் பல பெண்களும் இருந்தனர். அவர்களில் ஒருத்தி அவனது முதிர்ந்த தாய். அவளால் ஓட முடியாது. அவளுக்கேதாவது ஆனால், குடும்பத்தால் அதைத் தாங்க முடியாது.
அப்போது மக்களில் ஒருவர் சத்தமாகப் பேசியவாறே முன்னே வந்தார்.
“என் அரசரே! தப்பித்து விடுங்கள்… உங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.”
புருஷோத்தமன் அவனைப் பார்த்திருந்தாலும் அடையாளம் காண முடியவில்லை.
“என்ன நடந்தது? சொல்லுங்கள்!” என்றான் அவசரத்துடன்.
“சிசுபாலன், தாக்குதல் நடத்தினான். உங்கள் தந்தை உட்பட மொத்த குடும்பத்தாரும்…”
அவன் பேச்சு அங்கே நின்றது. கேட்ட இருவரும் உறைந்து நின்றனர்.
புருஷோத்தமன் குதிரையிலிருந்து குதித்தான். அந்த மனிதனின் தோள்களைப் பிடித்து நடுக்கம் வரும் அளவுக்கு உலுக்கியான்.
“எல்லோரையும்? என் மனைவி?”
அவன் நம்ப மறுத்தான். ஒரு அரச குடும்பத்தை இப்படிச் சித்திரவதை செய்வான் என்று அவன் நினைக்கவே இல்லை.
அந்த அமைதியே பதிலாக இருந்தது.
புருஷோத்தமன் அவனை மீண்டும் கட்டாயப்படுத்தினான். எதிரில் இருந்தவன் பேச முடியாமல் கண்ணீர் வழிந்தபடி தலை குனிந்தான். எந்தக் கேள்விக்கும் வார்த்தைகள் பதிலாக இல்லை. கண்ணீரே பதில்.
“நீங்கள் காட்டில் இருப்பது தெரிந்ததால், மக்கள் அனைவரும் சேர்ந்து இங்கிருந்தே தடுக்க நினைத்தோம். இல்லையென்றால் நீங்கள் மரணவழிக்கே சென்றிருப்பீர்கள்” என்று தழுதழுத்தான் ஒருவன்.
பார்பதி யுத்தத்திற்குப் பிறகு, அந்தக் குடும்பத்தின் விதி ஒரே நாளில் மாறி விட்டது.
புருஷோத்தமன் பற்களை இறுகக் கடித்தான்.
“அந்த சிசுபாலன்… எப்படி... நம்மிடம் எப்படி வீழ்ந்தான் என்பதை மறந்து விட்டான். பார்பதியில் இரண்டாயிரம் வீரர்களை இருநூறு பேரால் வீழ்த்தியவர்கள் நாம்தான். அதை மீண்டும் அவனுக்குக் காட்ட வேண்டிய நேரம் வரும்.”
விஜயன் அவனை அமைதியாக்க முயன்றான். “இது அவசர முடிவு எடுக்க வேண்டிய தருணம் அல்ல. அப்போது நமக்கு இடமும் திட்டமும் சாதகமாக இருந்தது. இப்போது அதே நிலையில் இல்லை. மனம் சிதறிய நிலையில் போரில் இறங்குவது தற்கொலையே. முதலில் பாடலிபுத்திரத்திலிருந்து தந்தையும் தம்பியும் திரும்பட்டும்.”
அந்த மனிதர் மீண்டும் குரலை உயர்த்தினார். “அரசே! அந்த விஷயத்தை எப்படிச் சொல்வோம்.. நம்மை மோசம் செய்து விட்டார் அந்த நந்த மகாராஜா. நம்ப வைத்துக் கழுத்தை அறுத்து விட்டார்கள். தலைநகரம் சென்ற அனைவரையும்…” மேலும் பேச முடியாமல் தொண்டையில் அடைத்துக் கொண்டது அவருக்கு.
அதைக் கேட்ட இருவருக்கும் காலடியில் பூமி நழுவியது. மூளை மரத்துப் போனது போன்ற ஒரு உணர்வு.
“அவர்கள் உங்களைத் தேட ஆரம்பிப்பார்கள். நீங்கள் காட்டிலிருக்கிறீர்கள் என்பது தெரிந்தால், அவர்கள் இங்கே வருவார்கள். தயவு செய்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.” மக்கள் மீண்டும் வலியுறுத்தினர்.
அந்த நேரத்திலேயே தூரத்தில் குதிரைகளின் சத்தம் கேட்டது. படை நெருங்கி வந்தது. புருஷோத்தமனின் கண்களில் தீ. அவன் பாயத் தயாரானான்.
“நான் அவர்களை இங்கேயே சந்திக்கிறேன்!”
கண்ணீரால் கண்கள் நிறைந்து, துக்கத்தால் நெஞ்சம் நசுங்கிய நிலையில், புருஷோத்தமன் முழுக்குரலுடன் கூச்சலிட்டான். ஆனால் விஜயன் அவனை வலுக்கட்டாயமாகத் தடுத்தான்.
“இன்று அல்ல, சிற்றப்பா… இன்று அல்ல. நாம் அவர்களை மண்டியிடச் செய்வோம். ஆனால் இன்று அல்ல. இன்று அவர்களது நாள். ஆனால் அது எப்போதும் அப்படியே இருக்காது. ஒருநாள் விதி மாறும். அந்நாளில், அந்தக் கொடூரமான சிசுபாலனுக்கும், சூழ்ச்சிக்கே பெயரான நந்தனுக்கும், நாம் யார் என்பதை அறியச் செய்வோம்.”
“என் அரசே, இவரது வார்த்தை உண்மை. நீங்கள் உயிருடன் இருந்தால்தான், ஒருநாள் சுதந்திரத்தைப் பற்றியும் கனவு காணலாம்,” என்று மக்கள் வணங்கிக் கூறி, அவர்களை உடனே அங்கிருந்து செல்லுமாறு பணிந்தார்கள்.
குதிரைப் படையின் சத்தம் வேகமாக நெருங்கி வந்தது. இரு வீரர்களும் தங்கள் குதிரைகளிடம் பாய்ந்தனர். புருஷோத்தமன் புலியின் சடலத்தைத் தன் குதிரையின் சேணத்தில் நிலைநிறுத்தி, கணப்பொழுதில் காட்டின் ஆழத்துக்குள் மறைந்தான்.
குதிரைப் படை அந்த இடத்தை அடைந்தபோது, மக்கள் தலை குனிந்து நின்றனர். வந்தவர்கள் வழி தவறிய பயணிகள். பார்பதிக்கு வந்த போது சரியான வழியைக் காட்டி விட்டோம் என்றே சொன்னார்கள்.
அ
ந்தத் தேடலின் போது, சிறிது தூரத்தில் ஒரு புலியின் சடலம் கிடந்ததை ஒரு வீரன் கண்டுபிடித்தான்.

Author: SudhaSri
Article Title: அத்தியாயம் -11
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.