அத்தியாயம் - 15
எல்லாம் புதிதாக இருந்தது அலெக்சாண்டருக்கு. வைரம் பதிக்கப்பட்ட கிரீடம். பாரம்பரிய உடை. நேர்த்தியான ஆடை அலங்காரங்கள். கூடுதல் மரியாதை. எல்லாமே முன்பை விடக் கூடுதல். இளவரசர், மன்னராகி விட்டார் என்பதற்கான சாட்சியங்கள். கட்டுமஸ்தான உடல். உருண்டு திரண்ட தோள்கள். முறுக்கேறிய கரங்கள். தினவெடுத்த கால்கள். பொலிவு நிறைந்த முகம். மன்னருக்குரிய அத்தனை அம்சங்களும் அலெக்சாண்டருக்கு அமைந்திருந்தன. நிர்வாகம் அவனுக்குப் புதிதில்லை. ஏற்கெனவே ஆட்சி, நிர்வாகம் போன்ற விஷயங்களைத் தந்தை பிலிப் கொடுப்பதற்கு முன்பாக, தானே அட்சதை போல எடுத்து தலையில் போட்டுக் கொண்டு காரியங்களில் இறங்கியிருந்தவர்தான். இருந்தாலும் தளபதிகள், அமைச்சர்கள், பொதுமக்கள் எல்லோரும் தன்னிடம் சங்கோஜமில்லாமல் நடந்து கொள்வார்களா என்பதில் அவனுக்குக் குழப்பம் இருந்தது. எல்லாம் சரியாகி விடும் என்கிற நம்பிக்கையும் இருந்தது. மாசிடோனியா மக்கள் மீது அவனுக்கு ஒரு கவலை இருந்தது. கவலை என்று கூடச் சொல்ல முடியாது. ஒரு எதிர்பார்ப்பு. எப்படி நடந்து கொள்வார்கள்? அலட்சியம் செய்வார்களா? அல்லது மன்னர் பிலிப்பின் மகன் என்பதால் கொஞ்சம் அடக்கி வாசிப்பார்களா? தந்தை இல்லை, இவனால் என்ன செய்து விட முடியும் என்று எக்காளம் இடுவார்களா? அல்லது மேடி நாட்டு வெற்றியை நினைத்துக் கொஞ்சம் பயப்படுவார்களா? நிறைய கேள்விகள் கேட்டுக் கொண்டான் அலெக்சாண்டர். ஒருவேளை போர், யுத்தம் என்று வந்து விட்டால்? கலவரம் செய்ய யாராவது கிளம்பி விட்டால்? வரட்டும். வந்து பார்க்கட்டும். அதற்காகத்தானே காத்துக் கொண்டிருக்கிறேன். வாய்ப்பு ஏற்படாத வரைக்கும் வீரன் என்று எப்படித்தான் மற்றவர்களுக்குப் புரிய வைக்க முடியும்? மனத்துக்குள் சொல்லிக் கொண்டான் அலெக்சாண்டர்.
நாள்கள் நகர்ந்தன. அலெக்சாண்டர் எதிர்பார்த்தது நடந்தது. மாசிடோனியாவைச் சுற்றியிருக்கும் பல இடங்களில் கலவரங்கள். குதிரை வீரர்கள் வந்து அலெக்சாண்டரிடம் தகவல் சொன்னார்கள். அரியணை ஏறிய புதிதில் அவர் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள், எதிர்ப்புகள் எல்லாம் அதிகமாக இருந்தன. ஆனால் எதுவும் புதிதாக இல்லை. ஏற்கெனவே மேடி கலவரத்தை உருத்தெறியாமல் செய்தவன்தானே அவன்!
தளபதி பார்மீனியோவை அழைத்தான். பார்மீனியோ? ஆம். பிலிப்பின் தலைமைத் தளபதியாக இருந்தவர். அலெக்சாண்டருக்கும் அவர்தான். ஆண்டிபேட்டர் மற்றும் பார்மீனியோ இருவருமே மன்னர் பிலிப்பின் நம்பிக்கைக்குரியவர்கள். முதலாமவர் ஆட்சி, நிர்வாகம், பொதுமக்கள் நலன், திட்டங்கள், செயல்களைப் பார்த்துக் கொண்டார். இரண்டாமவர் பார்மீனியோ முழுக்க முழுக்க ராணுவம், படை, யுத்தம், வெற்றி, வீரர்கள், ஆயுதப்பயிற்சி என்று கவனம் செலுத்தினார்.
பார்மீனியோ. பழுத்த அனுபவசாலி. எத்தனை யுத்தங்கள். எத்தனை ஆபத்துகள். எத்தனை சூழ்ச்சிகள். எல்லாவற்றையும் நசுக்கித் தள்ளி விட்டு, வெற்றி மாலையைப் பிலிப்புக்கு அணிவித்து மகிழ்ந்தவர். அனுபவத்துக்கு ஈடு இல்லை. அவர்தான் எனக்குத் தளபதியாகச் செயல்பட வேண்டும். அலெக்சாண்டர் வேண்டி விரும்பி அவரைத் தளபதியாக நீட்டிப்பு செய்திருந்தான்.
“பார்மீனியோ, திடீரென கலவரம் உருவாக என்ன காரணமாக இருக்கும்?” - அலெக்சாண்டர் கேட்டான்.
“ஒருவேளை மாசிடோனிய மன்னர் பச்சிளம் பாலகன் என்று அவர்கள் நினைத்திருக்கலாம்.’”
பார்மீனியோ உதிர்த்த வார்த்தைகள் அலெக்சாண்டரை ஆத்திரமடையச் செய்தன. இருந்தாலும் அடக்கிக் கொண்டான்.
அது அவருடைய சொந்தக் கருத்து அல்ல. பிரச்சினைக்கான காரணத்தைக் கேட்டோம். சொன்னார், அவ்வளவே.
“நான் பாலகன் என்பதுதான் என் தந்தை பிலிப்பின் ஆளுகையின் கீழ் இருந்த நாடுகளில் எல்லாம் கலகம் வெடிக்கக் காரணமா? அப்படியென்றால் பிலிப்புக்குப் பயந்து தூங்கிக் கிடந்தவர்கள் எல்லாம் துளிர்த்து எழுந்து விட்டார்கள். தந்தையால் அதிகாரத்தில் அமர்த்தப்பட்டவர்கள் ஆட்சியையே கைப்பற்ற எத்தனிக்கிறார்கள். அப்படித்தானே?”
“ஆமாம்.” பார்மீனியோவிடம் இருந்து பளிச்சென வந்தது பதில்.
“சில நாடுகளில் இது போன்ற ஒரு கருத்து வேகமாகப் பரவி வருகிறது என்கிற தகவல் நமது தூதுவர்கள் மூலமாகக் கிடைக்கப் பெற்றுள்ளது.”
“அதாவது...”
“இருபது வயதே ஆன இந்தச் சிறுவனுக்கு அடிமையாக இருக்க முடியாது. இருக்கவும் கூடாது” என்று அந்த நாடுகளில் சிலர் பிரசங்கம் செய்து மக்களைத் தூண்டி வருவதாக அறிகிறோம்” என்றனர்.
இதைக் கேட்டதும் கோபத்தில் கொதித்தெழுந்தான் அலெக்சாண்டர். “நான் மன்னர் பிலிப்பின் மகன் என்பதை அவர்கள் அனைவரும் மறந்துபோய் விட்டது வருத்தமாக இருக்கிறது. ‘தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்’ என்ற பழமொழியை அவர்கள் மறந்து போய்விட்டனர் போலும். என் தந்தை போர் தொடுக்காத நாடுகளை எல்லாம் வெற்றி காணத் துடித்துக் கொண்டிருக்கிறேன் நான்” என்று சொல்லி விட்டு சபையில் இருந்தோரை மீண்டும் ஒருமுறை நன்றாக உற்று நோக்கினான்.
“என்னுடைய வயது அவர்களிடம் அலட்சியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் என் தந்தையை விடப் போர் புரிவதில் நான் மிக மோசமானவன் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. இதனை அவர்களுக்கு நிரூபித்துக் காட்ட முடிவு செய்து விட்டேன். நான் தொடுக்கும் போர் எப்படி இருக்கும் தெரியுமா? என் தந்தை இறந்ததும் என்னைச் சிறுவன் என்று நினைத்துக் கலகம் செய்கிறார்களே, அவ்வாறு நான் இறந்து என் மகன் ஆட்சி செய்யும்போது கலகம் செய்வதற்குக் கூட யாருமே அங்கிருக்க மாட்டார்கள். சுடுகாடாக்கி விடுவேன். என் தாக்குதல் அத்தனை அபாயகரமானதாகவும் கொடூரமானதாகவும் இருக்கும் என்பதை உண்மையில் நடத்திக் காண்பிக்கப் போகிறேன்” என்று கர்ஜித்தான்.
அவனது ஆக்ரோஷமான பேச்சைக் கேட்டு அத்தனை பேருமே வியப்பின் உச்சத்தில் இருந்தனர்.
அப்போதுதான் தகவல் வந்தது சிர்மஸ் நாட்டில் கலகம் தொடங்கி விட்டது என்று. அது ஒரு மலைநாடு. அந்நாட்டு மன்னன் முன்னின்று இக்கலகத்தைத் தூண்டி விட்டிருப்பதும், தாங்கள் மாசிடோனியாவின் அடிமைகள் அல்ல; சுதந்திரக் காற்றை சுவாசிப்பவர்கள் என்றும் அவர்கள் கொக்கரிக்கின்ற சேதி அலெக்சாண்டரின் மனதிற்குள் மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
தளபதி பார்மீனியாவின் தலைமையில் படைகள் அணிவகுத்தன. சிர்மஸ் நாட்டின் டான்யூப் நதிக்கரையோரமாக ஆரவாரமாகச் சென்று நின்றன. அங்கே சிர்மஸ் வீரர்களோடு கடும் சண்டை. மாசிடோனியாவின் குதிரைப் படைகளே முக்கியப் பங்கு வகித்த சண்டை. அலெக்சாண்டர் தனது செல்லக் குதிரையான பியூசெபாலஸின் மீது அமர்ந்தவாறு சுழன்று சுழன்று வாளை வீசி எதிரிகளின் தலைகளைப் பந்தாடினான்.
இறுதி வெற்றி அலெக்சாண்டருக்கே!
சிர்மஸ் நாட்டின் மக்கள் மீண்டும் அடிமையானார்கள். இப்போது அவர்கள் வாயிலிருந்து, “மாமன்னர் அலெக்சாண்டர் வாழ்க” என்ற முழக்கம் மட்டுமே ஒலித்தவாறு இருந்தது.
தீப்ஸ்... நாடு.
இங்கிருந்து அடுத்த கலகம் கிளம்பியது. அங்கு போர்க் கொடியை முதன்முதலாகத் தூக்கிப் பிடித்தவர் பிரபல பேச்சாளர் டெமஸ்தனிஸ்.
பிலிப் மன்னராக இருந்தவரை அடக்கி வாசித்த இவர், அவர் இறந்ததும் மீண்டும் முண்டாசைத் தூக்கிக் கட்டிக் கொண்டு, ‘வாடா, சின்னஞ்சிறு பையனே! ஒரு கை பார்க்கலாம்’ என்று தொடை தட்டினார்.
அடிபட்ட பழைய நாகப்பாம்பு. மீண்டும் சீறியது.
“டெமஸ்தனிஸின் வாய்க்கொழுப்பிற்கு இந்த முறை மரண அடி தரப் போகிறேன். தயாராகுங்கள் வீரர்களே..” என்று உற்சாகப் படுத்தினான் அலெக்சாண்டர்.
இப்போது மாசிடோனியப் படை வீரர்கள் அனைவரும் அலெக்சாண்டரின் பின்னால் அணிவகுத்துச் செல்வதை விரும்பினார்கள். இவரது வழிகாட்டுதல் மூலம் வெற்றி மீது வெற்றியாகப் பெற்று களிக்கலாம் என்ற நம்பிக்கை அவர்களிடம் அழுத்தமாகப் பதியத் தொடங்கி இருந்தது.
மறுநாள் காலையிலேயே மாசிடோனியப் படைகள் அலெக்சாண்டரின் தலைமையின் கீழ் தீபுவை நோக்கிப் புறப்பட்டன. இப்போதும் குதிரைப் படைதான் முக்கியத்துவம் பெற்றிருந்தது.
“போர்...போர்...” என்ற முழக்கத்துடன் முன்னேறிக் கொண்டிருந்த மாசிடோனிய வீரர்கள் மீது தீபு நாட்டு வீரர்களும் சளைக்காமல் எதிர்த்தாக்குதல் நடத்தினர். வாள்களும், ஈட்டிகளும் வீரர்களின் தலைகளைக் கொய்து கொண்டிருந்தன.
உயிர்கள் பல மடிந்தன. பூமியில் இரத்த ஆறு பாய்ந்தது. கை, கால் என்று உடல் உறுப்புகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.
எதிர்பார்த்ததை விடவும் சீக்கிரமாகவே தீபு வீழ்ந்து விட்டது. அலெக்சாண்டரின் மடியில் மற்றொரு வெற்றி.
முக்கிய வெற்றி பெற்றாலும், இந்தக் கலகத்தைத் தூண்டி விட்ட முக்கிய காரணகர்த்தாக்களான போனிக்ஸ் மற்றும் பிரோதிக்ஸ் என்ற இரு தளபதிகளை மட்டும் பிடிக்க முடியவில்லை. தப்பி விட்டார்கள்.
ஆனால் இவர்களைப் பிடிக்காமல் இங்கிருந்து செல்வது சரியாக இருக்காது என்பது அலெக்சாண்டரின் திண்ணமான எண்ணம்.
எனவே தனது வீரர்களை அழைத்து அவர்களிடம் உரையாற்றினான். “நாம் வெற்றி பெற்று விட்டாலும் அந்த இரண்டு தளபதிகளையும் பிடிக்காமல் செல்வது கூடாது. அந்தக் கோழைகள் தற்போது தீபு நகரத்திற்குள் முடங்கிப் போயுள்ள மக்கள் கூட்டத்தில் மக்களோடு மக்களாக இருந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக அங்குள்ள அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவதில் எனக்கு விருப்பம் கிடையாது. நான் பெரிய போர் வீரனாக இருந்தாலும், என்னிடமும் மனிதநேயம் இருக்கத்தான் செய்கிறது. எனவே அந்த மக்களிடம் ஆதரவாகப் பேசி, அந்த வஞ்சகர்களை அவர்களிடம் இருந்து பிடித்து கைது செய்வோம். வாருங்கள் என்னோடு” என்றான்.
அலெக்சாண்டரின் பொறுப்பான பேச்சால் உணர்ச்சி வசப்பட்ட வீரர்கள், அவரோடு அணி திரண்டு தீபு நகருக்குச் சென்றனர்.
நகர மக்கள் கும்பலாகத் திரண்டிருக்க, அவர்களிடையே உரையாற்றினார் மன்னர்.
“நான் உங்களை எதுவும் செய்யப் போவதில்லை. நீங்கள் வழக்கம் போல இங்கேயே பழைய வாழ்க்கையை எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்து வரலாம். உங்களிடையே பெண்களைப் போல ஒளிந்து கொண்டிருக்கும் அந்த இரு நயவஞ்சகர்களை மட்டும் எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள். இந்தப் போரில் நாங்கள் வெற்றி வாகை சூடிவிட்ட போதிலும், உங்கள் மீது இப்போது வன்முறையைப் பிரயோகிக்க விரும்பவில்லை. அதனால்தான் இந்த வேண்டுகோளை விடுக்கிறேன்” என்றான் அலெக்சாண்டர்.
ஆனால் தீபு நகர மக்களின் நடவடிக்கைகளோ எதிர்மாறாக இருந்தன. “இன்னும் போர் முடியவே இல்லை. அதற்குள் நீங்கள் வெற்றி பெற்று விட்டதாக யார் சொன்னது?” என்று ஏளனமாகக் கேட்டனர்.
இந்த ஏளனமான பேச்சு அலெக்சாண்டரிடம் ஆத்திரத்தை வரவழைத்தது. இனிமேலும் அமைதி காப்பது அர்த்தமற்றது என்று தோன்றியது. உடனே தனது வீரர்களிடம், “வீரர்களே! இவர்களின் திமிர் இன்னும் அடங்கவே இல்லை. இனிமேலும் நீங்கள் யாரும் பேசாமல் இருக்கத் தேவையில்லை. உங்களின் ஆவேசமான தாக்குதல் தொடங்கட்டும். அதில் இந்த தீபு நகரமே பற்றி எரியட்டும். நம் படைகள் தங்கியிருக்கும் காட்மியா கோட்டையை மட்டும் அழிக்காமல் விட்டு விடுங்கள். அனைவரையும் சிறைப்பிடியுங்கள். திமிறினால் வெட்டிக் கொல்லுங்கள். சிறைப்பிடித்தவர்களை அடிமையாக விற்று விடுங்கள். உங்கள் தாக்குதலின் போது பிண்டார் என்னும் கவிஞர் வாழ்ந்த இல்லத்தை விட்டு வையுங்கள். அதேபோல இலக்கியக் கர்த்தாக்கள், படைப்பாளிகள் போன்றோரையும், அவர்களது குடியிருப்புகளையும் தாக்கி அழிக்க வேண்டாம்” என்று கூறிவிட்டு போர் முனையிலிருந்து நீங்கினார் மன்னர்.
அப்புறம் கேட்கவும் வேண்டுமா? தீபு நகரத்தின் மாட மாளிகைகள் அனைத்தும் தரை மட்டமாக்கப்பட்டன. மக்கள் பலரும் வெட்டிச் சாய்க்கப் பட்டனர். பலர் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.
படைப்பாளி என்பதால் டெமஸ்தனிஸும் இத்தாக்குதலில் இருந்து தப்பினார். உயிர் பிழைத்தார்.
வெற்றி முரசு கொட்டியவாறு மாசிடோனியா திரும்பினர் படைவீரர்கள்.
தீபு வெற்றிக்குப் பிறகு அடுத்த சலசலப்பு ஏதென்ஸ் நகரில் இருந்து கிளம்பிற்று. ஆனால் இங்கு ஏற்பட்ட சலசலப்பு வேறு மாதிரியானது. அதாவது பயம் கலந்தது.
தீபுவை நிர்மூலமாக்கியவர்கள், அடுத்து ஏதென்ஸையும் குறி வைத்து விட்டால் என்ன செய்வது என்கிற கலக்கம். அங்குள்ளோர் அனைவரும் ஒரு பயப்பீதியில் இருந்தனர்.
கிரேக்க நாட்டில் அறிஞர்கள் அதிகம். சிந்தனையாளர்கள் ஏராளம். கல்வியாளர்கள் நிறைய. தத்துவ மேதைகள் நிரம்ப. இவர்களால்தான் அன்றைய உலகின் நாகரிகமிக்க நாடாக கிரேக்கம் விளங்கியது.
இது போன்ற அறிஞர்கள் அனைவரும் ஏதென்ஸில் ‘இஸ்த்மஸ்’ என்றொரு அறிவார்ந்த அமைப்பு ஒன்றை நிறுவியிருந்தனர். நாட்டின் ஒவ்வொரு அசைவையும் இவர்கள்தான் கூடி விவாதித்து தீர்மானித்தனர். போரானாலும் சரி, கல்வியானாலும் சரி! அனைத்துமே இவர்களின் ஆலோசனைகளுக்கு ஏற்பவே நடைபெறும்.
இப்படிப்பட்ட ‘இஸ்த்மஸ்’ பேரவை உறுப்பினர்கள் இப்போதும் கூட்டத்தைக் கூட்டினர். ஏதென்ஸ் மீது அலெக்சாண்டர் படையெடுத்தால் என்ன செய்வது என்பதைப் பற்றி அவர்கள் காரசாரமாக விவாதித்தனர்.
‘எதிர்த்துப் போரிடுவது உகந்ததா? அல்லது அவரோடு நட்பு ஏற்படுத்திக் கொண்டு பணிந்து செல்வது சரியா?’ என்பதுதான் அன்றைய விவாதத்தின் முக்கியக் கருவாக இருந்தது.
கடைசியில், “அலெக்சாண்டரை எதிர்த்துப் போரிட்டு அழிந்தொழிவது என்பது முட்டாள்தனமான முடிவு. மாறாக அவரோடு சமரசம் செய்து கொள்வதே சிறந்தது” என்ற முடிவை அப்பேரவை எடுத்தது.
இவர்கள் எதிர்பார்த்தது போலவே அடுத்த சில நாட்களில் அலெக்சாண்டர், ஏதென்ஸ் நகரின் மீது போர் தொடுத்து வந்தான். நகரின் எல்லை வரையிலும் அவனது படைகள் வந்தன. எந்தவொரு எதிர்ப்புமே இல்லை. ஏன்? என்னவாயிற்று?
சாக்ரட்டீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் என்ற அறிவு மேதைகள் நடமாடிய இந்த மண்ணில் வாழ்கிறவர்களுக்கு என்ன ஆனது?
அலெக்சாண்டருக்கும் அவரது படை வீரர்களுக்கும் ஒரே குழப்பம். ஒருவேளை பாய்வதற்காகப் பதுங்குகிறார்களா இந்த ஏதென்ஸ்காரர்கள்?
ஆனால் நடந்தது வேறு. நகருக்குள் அலெக்சாண்டர் தனது படையுடன் நுழைந்ததும், அந்நகரத்து மக்கள் அனைவரும் மலர் மாலை சகிதமாகப் பிரமாதமான வரவேற்பை அளித்து அசத்தினர்.
இதனைச் சற்றும் எதிர்பார்க்காத அலெக்சாண்டரும், அவரது படையினரும் இன்ப அதிர்ச்சிக்கு ஆளாகினர்.
“என் ஆசான் வசித்த இந்த நகரவாசிகள் இத்தனை கோழைகளாகவும், முட்டாள்களாகவும் இருக்கிறார்களே என்று வேதனையோடுதான் நகருக்குள் நுழைந்தேன். ஆனால் நீங்கள் அனைவருமே போரைத் தவிர்ப்பதற்காகவும், என்னுடன் மோதுவதற்கு விரும்பாதவர்களாகவும் இருப்பதை அறிந்ததும் நீங்கள் புத்திசாலிகள்தான் என்ற முடிவுக்கு வந்து விட்டேன். ஆனாலும் நான் உங்களுக்கு ஒரு நிபந்தனை விதிக்கப் போகிறேன். அதனை நீங்கள் ஏற்றுக் கொண்டால் உங்கள் நாட்டை உங்களிடமே தந்து விடுகிறேன். இல்லையென்றால் என் வாளைச் சுழற்றுவதைத் தவிர வேறு வழி எனக்குக் கிடையாது” என்றான் அலெக்சாண்டர்.
இதைக் கேட்டதும் மக்கள் அனைவரும் மீண்டும் ஒருவிதக் கலக்கத்திற்கு ஆளாகினர். ‘இவர் விதிக்கப் போகும் நிபந்தனை என்னவோ?’
“கிரேக்கம் முழுவதையும் கிட்டத்தட்ட எனது தந்தையே கைப்பற்றி விட்டார். அவரது மரணத்திற்குப் பிறகு என்னை எதிர்த்துக் கிளம்பிய சலசலப்புகளையும் கலகங்களையும் அடக்கி விட்டேன். எனவே கிரேக்கம் முழுமைக்கும் இப்போது நானே அரசன். இந்த மகிழ்ச்சியோடு மிகப் பெரிய தேசமான பாரசீகத்தை வென்றெடுப்பதற்காக படைகளுடன் செல்லப் போகிறேன். இந்தப் போரில் எனக்கு உங்கள் ஏதென்ஸ் நகரத்துப் படை வீரர்கள் உதவ வேண்டும். இதுதான் என் நிபந்தனை. இதனை ஏற்றுக் கொள்கிறீர்களா?” என்று கேட்டான் அலெக்ஸாண்டர்.
இதைக் கேட்டதும் ஏதென்ஸ் மக்கள் கொஞ்சம் கூட யோசிக்காமல் முழுமனதோடு சம்மதம் தெரிவித்தனர்.
ஆக அடுத்த போருக்கான ஆயத்தங்களில் ஈடுபடும் ஆவலோடு அலெக்சாண்டர் அரண்மனைக்குத் திரும்பினான். வெற்றிக்களிப்புடன் தீபு நாட்டி
ல் இருந்து மாசிடோனியா புறப்பட்டன அலெக்சாண்டரின் படைகள்.

Author: SudhaSri
Article Title: அத்தியாயம் -15
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.