அத்தியாயம் 20
“நிச்சயமாகவா?”
புருஷோத்தமன் தன் காதில் பட்ட செய்தி உண்மையா என்பதை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினான். அந்தத் தகவல் சரியானதாக இருந்தால், அவர்கள் நீண்ட நாட்களாகக் காத்திருந்த பொன்னான வாய்ப்பாக அது அமையும்.
“ஆமாம். அவன் நேரடியாக பாடலிபுத்திர அரசவையிலிருந்து உத்தரவுகளைப் பெற்றிருக்கிறான். இன்பவிளையாட்டு போதுமானது என்றும், இப்போது வேலைக்குத் திரும்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் அவனுக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. அடுத்த போரை நடத்த அவனுடைய சகோதரன் தனியாக இருக்கிறான், அவனுக்கு உதவி தேவை,” என்று பிரதாபன் சொன்னான்.
“பார்பதியில் நமது குடும்பத்தை வீழ்த்திய பிறகு, நாம் இருவரும் உயிருடன் இருப்பதை நந்தனுக்குச் சில காலம் கழித்தே தெரிந்திருக்கிறது. இட்ட பணியைச் சரியாக முடிக்கவில்லை என்று அவந்தியில் இருந்து காசிக்கு அனுப்பி இருக்கிறார்கள். அங்கே விலைமாதருடன் கூடுவதையே நாள் முழுவதும் செய்திருக்கிறான். அங்கே அவனது உடல்நலம் பாழ்பட்டிருக்கிறது. காசியிலேயே சிகிச்சை நடத்தி ஒரு வழியாக பழைய நிலைக்குத் திரும்பியிருக்கிறான் என்று தகவல்” என்று கூடுதல் தகவல்களைக் கூறினான் விஜயன்.
“அவன் உடனே மத்ஸ்ய நாட்டை நோக்கிப் படையெடுக்க சம்மதித்துவிட்டான். ஆயிரம் பேர் கொண்ட காலாட்படையுடன் அவர் மத்ஸ்ய தேசம் நோக்கிச் செல்லப் போகிறான்” என்று சத்யஜித் கூடச் சொன்னான்.
“மத்ஸ்ய தேசத்தை அடைய, அவன் இந்தக் காட்டைக் கடக்க வேண்டியது அவசியம்.”
சத்யஜித் இத்தகைய தகவல்களைச் சேகரிப்பதில் கில்லாடியாக இருந்தான். அவன் மிகவும் ஒல்லியாகவும் பலவீனமாகவும் தோற்றமளித்ததால், மக்கள் அவனை ஆபத்தானவன் என்று கருதவில்லை. அவனோடு பேசும்போது எச்சரிக்கையையும் தளர்த்தினர். வர்த்தக வருவாய், செல்வம், நகைச்சுவை உணர்வு ஆகியவற்றில் அவனுக்கிருந்த நல்ல அறிவு, எந்த அந்நியருடனும் உரையாடலைத் தொடங்க உதவியது.
“ஆமாம், இதுதான் அவனைத் தாக்குவதற்கான சரியான நேரம்” என்று புருஷோத்தமன் கூறினான்.
“உனக்கு புத்தி பிறழ்ந்து விட்டதா? அவன் ஆயிரம் பேர் கொண்ட காலாட்படையுடன் இந்தக் காட்டுக்குள் வரப் போகிறான். நாம் எத்தனை பேர்? வெறும் பத்து!! வெற்றி பெற வாய்ப்பென்ன?” என்று பிரதாபன் கூச்சலிட்டான்.
“எனக்குத் தெரியும். ஆனால் என் சகோதரன் சத்யரதன் எப்போதும் சொல்லுவார். எண்கள் போரை வெல்வதில்லை, தந்திரமே வெற்றி தரும்” என்று புருஷோத்தமன் பதிலளித்தான்.
“சிசுபாலனுடன் ஒப்பிட்டால் நம்முடைய எண்ணிக்கை என்ன? விஜயன் உமக்கு பார்பதி போரைக் குறித்து சொல்வான்” என்றான் புருஷோத்தமன்.
“சிசுபாலனின் நகர்வுகள் பற்றிய தகவல் நமக்குக் கிடைத்திருக்கிறது.”
விவரங்களை கேட்டுப் பிறகு, இவ்வளவு பெரிய படையுடன் மோதுவதில் தற்கொலைச் சமமாக இருக்கும் என்பதைக் கவனித்தும், ஏன் தன் சிறிய தந்தை இன்னும் தாக்குதலைப் பற்றியே வாதிடுகிறார் என்று விஜயனால் புரிந்துகொள்ள முடியவில்லை.
“பார்பதி போரில் விகிதம் ஒன்று பத்து. நாம் இருநூறு பேர், அவர்கள் இரண்டாயிரம். இங்கே விகிதம் ஒன்று நூறு. நமது இலக்கு சிசுபாலன் மட்டுமே. ஆனால், ஒரு பெரிய படைக்குள் அவனைத் தேடி கண்டுபிடிக்க நமக்கு வாய்ப்பு இருக்காது” என்று விஜயன் உறுதியான குரலில் கூறினான். இவ்விவகாரம் விவாதத்திற்குரியது அல்ல என்பது அவன் சைகைகளில் தெளிவாக இருந்தது.
“அப்போது நம்மிடம் அனுபவமே இல்லை. இப்போது நம்முடையோர் பல போர்களை பார்த்திருக்கிறார்கள்; கொடூரமான பழங்குடியினரையும் கொள்ளையர்களையும் வீழ்த்தியிருக்கிறார்கள். சரியான தந்திரம் இருந்தால், இருநூறு சாதாரண வீரர்களே இரண்டாயிரம் பேர் கொண்ட படையை வெல்ல முடியும் என்றால், அதைவிடச் சிறந்த தந்திரம் பத்து உறுதியான போராளிகள் ஆயிரம் பேரைக் கூட வீழ்த்த முடியும்” என்று புருஷோத்தமன் தைரியமாகக் கூறினான்.
“இது தற்கொலைக்குச் சமானம்” என்று விஜயன் பதிலளித்தான்.
“நீங்கள் அளவுக்கு மீறிய தன்னம்பிக்கையுடன் இருக்கிறீர்கள். அது நமக்கு நல்லதல்ல.”
புருஷோத்தமன் சொன்ன கருத்துக்கு நேரடியாக எதிர்க்கத் துணிந்த ஒரே ஆள் அவனே.
புருஷோத்தமன் பிரதாபனிடம் ஆலோசனை கேட்டான். ஆனால் விஜயன், அந்த ஆலோசனையே இப்படி ஒரு தற்கொலைத் திட்டத்திற்கு வழிவகுப்பதாக எண்ணினான்.
“நாம் யாரைப் பற்றி பேசுகிறோம்? சிசுபாலனைக் கொன்றே ஆக வேண்டும். இந்த வாய்ப்பே சிறந்தது” என்று பிரதாபன் தன் கருத்தையும் சேர்த்தான்.
“இது எல்லாம் உன்னுடைய யோசனை. உண்மையில், நந்தன் குடும்பத்தின்மீது உள்ள தனிப்பட்ட கோபம் உங்களைக் கண்மூடித்தனமாக யோசிக்க வைக்கிறது. அதன் விளைவுகளைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் இருக்கிறீர்கள்” என்று விஜயன் அவர்களைத் தடுத்து நிறுத்த முயன்றான்.
“நம் வாழ்க்கையின் நோக்கம் என்ன? இந்தக் காட்டில் நாமெதற்காக இருக்கிறோம்? நாம் உயிருடன் இருப்பதற்கான காரணமே என்ன?” என்று பிரதாபன் கோபமாகக் கேட்டான்.
“நாம் ஒன்றிணைந்த நோக்கம், நந்தனையும் மகதத்தையும் வேரோடு அறுப்பதே. அடுத்த நாளில் பழிவாங்க ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் தான், இந்த மரங்களின் கீழ், இக்கிளைகளுக்குள், கற்களுக்கிடையில் நாம் ஒவ்வொரு இரவும் உறங்குகிறோம். அதுவே நம்மை உயிருடன் வைத்திருக்கிறது. இல்லையெனில், எப்போதோ உயிரை விட்டிருப்போம். இதை நீ தற்கொலை என நினைத்தால், அப்படியே இருக்கட்டும். நான் என் இறுதி இலக்கை அடைய முயன்று இறந்தாலும் திருப்தியே.”
விஜயனுக்கும் இது விஷயத்தில் மாற்றுக் கருத்து இல்லை. அவர்கள் இதைப் பற்றி முன்பே திட்டமிட்டிருந்தார்கள். பல நாட்கள் உளவுப் பார்த்த பிறகும், சிசுபாலனின் ஒரு முகாமைக் கூட தாக்க முடியவில்லை. அந்த முயற்சியில் புருஷோத்தமன் தனது இரண்டு போராளிகளை இழந்திருந்தான். சிறிய குழுவால், மகதப் படையின் நன்கு பாதுகாக்கப்பட்ட தலைவரை அணுக முடியாது என்பது அனைவருக்கும் தெளிவாகிவிட்டது. அவன் காட்டிற்கு வருகிறான் என்ற செய்தி நம்பிக்கையை எழுப்பினாலும், ஆயிரம் பேர் கொண்ட, போருக்குத் தயாரான படையை எதிர்கொள்வது தற்கொலைதான்.
பலமுறை ஆலோசித்த பிறகு, விஜயன் ஒரு யோசனையை முன்வைத்தான்.
“அவன் வரும் போது தாக்குவதற்குப் பதிலாக, அவன் திரும்பிச் செல்லும் போது தாக்கலாம். அவன் மத்ஸ்யாவுக்குச் சென்று மீண்டும் பாடலிபுத்திரத்துக்குத் திரும்பும் போது, அவனுடைய நகர்வுகளை கவனித்து, குறைந்த வீரர்களுடன் பயணிக்கும் தருணத்தில் தாக்கலாம்.”
“மெய்க் காவலர்கள் இல்லாமல் அவன் இப்படிக் காட்டுக்குள் நடக்கத் துணிவான் என்று நினைக்கிறாயா?” என்று புருஷோத்தமன் கேட்டான்.
“கடந்த சில மாதங்களாக, அவன் எந்தக் காட்டிற்குள்ளும் நுழையவில்லை. இது அவனுடைய முதல் பயணம். இந்த ஆபத்தை அவன் ஏற்கிறான்; ஏனெனில் ஆயிரக்கணக்கான சிப்பாய்கள் அவனை பாதுகாத்து செல்கிறார்கள். மேலும், இது நேரடியாக பேரரசருடன் தொடர்புடையது. நம் நோக்கத்தை மீண்டும் உயிர்ப்பிக்க இதுவே ஒரே வாய்ப்பு. நிச்சயமாக நான் மட்டுமாவது தனியாகச் சென்று அவனை கொல்ல முயற்சிப்பேன். அதற்காக என் உயிரைப் பறிகொடுத்தாலும்கூட.” என்றான் பிரதாபன்
புருஷோத்தமன் கோபத்துடன் எழுந்தான். எதிரியின் பலத்தால் தன் குழு முற்றிலும் ஒடுங்கியிருக்கிறது என்பதை அவன் உணர்ந்தான்.
“கவலைப்படாதே. நாம் ஏற்கனவே மிகுந்த துன்பத்தை அனுபவித்திருக்கிறோம். இப்போது நிலைமையை மாற்ற வேண்டிய நேரம். இந்தக் காட்டிற்குள் பயணிக்கும்போது அவனை நான் நிச்சயமாகக் கொல்வேன், நீங்கள் எல்லாரும் என் பக்கம் இருந்தால்,” என்று அவன் உறுதியாகச் சொன்னான்.
“இந்தக் காடு நமக்குக் கோட்டை. இதன் உள்ளும் வெளியும் நமக்குத் தெரியும். மேடு பள்ளங்கள், ஆறுகள், ஏரிகள், வனவிலங்குகள் எவற்றையும் அவன் ஆட்களை விட நாம் நன்கு அறிவோம். மேலும், அவன் அகந்தையும், அளவுக்கு மீறிய தன்னம்பிக்கையும், இறுதியில் இந்தக் காட்டிலேயே அவன் அழிவுக்குக் காரணமாகும்.
இந்தக் காடுகளில் போராடக் கற்றுக்கொண்டோம். இந்த நிலமே நம் பாதுகாப்பு. கிளைகளுக்கிடையில் இருந்து தாக்கலாம், பள்ளங்களில் இருந்து தாக்கலாம், அவர்களால் முடியாது. உன் மனதில் பயமுறுத்தும் அந்தப் பெரிய எண்ணிக்கை திறந்த போர்க்களத்தில் மட்டுமே பொருந்தும்…”
“இங்கு அவர்கள் போர்க்களம் போன்ற பாணியில் இயங்க முடியாது. இக்காடுகளில், அவர்கள் நம் பலத்திற்கேற்பப் போராட வேண்டிய நிலை வரும். நிச்சயமாக வெற்றி நமக்கே தான்” என்று புருஷோத்தமன் கூறினான். அவனது வார்த்தைகள் குழுவை நம்பிக்கையாலும் தைரியத்தாலும் நிரப்பின.
“நீங்கள் என்னுடன் இருக்கிறீர்களா?” என்று அவன் குரல் உயர்த்திக் கேட்டான்.
பத்து போராளிகளும் சம்மதம் தெரிவித்தனர்.
“அப்படியானால் நமது தாக்குதலைத் திட்டமிடுவோம்.” புருஷோத்தமன், பயணத்தின் முழு விவரங்களையும் அறிய உளவாளிகளை அனுப்ப உத்தரவிட்டான்.
சமீப அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, சிசுபாலன் இரவில் பயணம் செய்ய வேண்டாம் என முடிவெடுத்தான். அவனது படை காட்டின் எல்லையில் கூடாரம் அமைத்தது. மறுநாள் முதல் ஒளி தெரியும் மீண்டும் பயணத்தைத் தொடங்க முடிவு செய்தனர். தங்களுக்கும் இலக்கிற்கும் இடையில் இருந்த அடர்ந்த காட்டைக் கடக்க இரண்டு நாட்கள் ஆகும் என வழிகாட்டி தெரிவித்தான். இந்நேரத்தில் பழங்குடியினர் சந்திப்பு எதுவும் இருக்காது என்றும் கூறினான். அவர்களது பகுதிகளிலிருந்து மாற்றுப் பாதையில் படையை வழிநடத்துவதாக வாக்குறுதி அளித்தான்.
படையுடன் பயணம் செய்வதால், இந்தப் பயணம் பாதுகாப்பானது என சிசுபாலன் நம்பினான். அவர்கள் மகத அரச வீரர்கள், ஒழுங்காகப் பயிற்சி பெற்றவர்கள், ஒரே அணியாகப் போராடுபவர்கள். ஒன்றாக நடந்து, ஒரே கட்டளையில் கேடயங்களை உயர்த்தி, உடனடியாகப் போரின் போக்கௌ மாற்றக்கூடியவர்கள்.
காலை நேரத்தில் காலாட்படை தலைநகரில் அணிவகுக்கப்பட்டது. சிசுபாலன் நடுப்பகுதியில் தன்னை வைத்துக்கொண்டான். முன்னணி யுத்தத்தை வழிநடத்துவது அவன் வழி அல்ல. அவனது மெய் காவலர்கள் இருவர் அவனுடன் இருந்தனர்.
மெதுவாக, முழுப் படையும் அடர்ந்த காட்டிற்குள் நுழைந்த போதே அவர்களின் சோதனை தொடங்கியது.
காட்டிற்குள் மேலும் வந்தபோது, பாதைகள் ஒழுங்கற்ற அமைப்புடன் காணப்பட்டன. படையின் நீளமும் அகலமும் அதற்கேற்ப குறைக்கப்பட வேண்டும் என்பதை சிசுபாலன் உணர்ந்தான். இடைவெளி இல்லாமல் படையினர் நடக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டு செயல்படுத்தப் பட்டது.
கோடை காலம். சூரியன் உச்சியில் இருந்தது. அடர்ந்த காடு வெப்பத்தைத் தணித்தாலும், வேறு சிக்கல்கள் தோன்றின. பின்புறத்துக்கும், விநியோகப் பொருட்களுக்கும் இடைவெளி அதிகரித்தது. பணியாளர்கள் சுமந்த பொருட்களின் வேகம் குறைந்தது. சீக்கிரமே அந்தப் பெரும் படை, சிதறிய சிறு சிறு குழுக்களாக மாறிவிட்டது. குதிரை வீரர்கள் தங்களைக் காப்பாற்றுவதிலேயே கவனம் செலுத்தினர்.
திடீரென, ஒரு பெரிய மரம் படையின் நடுவே விழுந்தது. இது படையைப் பிரிக்கும் வேலையைச் சரியாகச் செய்தது. பொருட்கள் கொண்ட பிரிவு பின்புறத்தில் இருந்தது; அவர்களை வழிநடத்திய சிறிய காலாட்படை பின்னால் நடந்தது. மரம் விழுந்ததனால், சுமார் எழுபது சதவீத படைக்கும் பின்னால் இருந்த பிரிவுக்கும் இடையிலான தொடர்பு முறிந்தது.
என்ன நடக்கிறது என அறியாத வீரர்களும் பணியாளர்களும் மரத்தை அகற்ற முயன்றார்கள்.
அது ஒரு பெரும் அத்தி மரம்; அதன் கிளைகள் எல்லாத் திசைகளிலும் பரவியிருந்தன. அதை நகர்த்துவது என்பது அத்தனை எளிதல்ல. அடர்ந்த இலைகளால் மூடி சூரியஒளி கூட உட்புக முடியாத வகையில் இருந்தது அந்த மரம். விரைவில் பல வீரர்கள் கேடயங்களையும் ஆயுதங்களையும் விட்டு, தடையை அகற்ற முயன்றனர்.
அச்சமயம் அருகில் இருந்த மரங்களிலிருந்து அம்புகள் மழையாகக் கொட்டின.
காவலாக பக்கத்தில் சென்ற, குதிரை வீரகளின் கழுத்துகள், கண்கள், கவசத்திற்கும் தலைமுடிக்கும் இடையிலான பகுதிகளே அம்புகளின் குறியாகின. ஒரு கணத்தில் நான்கு குதிரை வீரர்களும் தரையில் விழுந்து உயிரிழந்தனர்.
அதன்பின், போராடிக் கொண்டிருந்த காலாட்படையை நோக்கி தொடர்ச்சியான அம்புமழை பொழிந்தது. கணப்பொழுதில் வீரர்கள் ஈக்கள் போல் சாய்ந்தனர்.
சுற்றிலும் பீதி. இலக்கு எது என்று தெரியாமல் சிலர் தாக்க முயன்றனர், நிழல்களை நோக்கி ஈட்டிகளை வீசினர். எந்தவொரு பயனும் இல்லை. அம்புகள் தொடர்ந்தன.
வேறு வழியில்லாமல், சிலர் தப்பிச் செல்ல முயன்றனர். சிறிது நேரத்தில் அந்த இடம் சடலக் குவியலும், சிதறிய பொருட்களுமாகக் காட்சியளித்தது.
புருஷோத்தமனும் அவன் ஆட்களும் மரங்களிலும் புதர்களிலும் இருந்து வெளிப்பட்டனர். எவரேனும் உயிருடன் உள்ளார்களா என்பதை உறுதி செய்ய விழைந்தார். முந்நூறுக்கும் மேற்பட்ட உடல்கள்.
விஜயன் மிகுந்த மகிழ்ச்சியடைந்தான். ஒருநாள் அவனது சிறிய தந்தை அவனை நான்கு மகத வீரர்களைக் கொல்ல வேண்டாம் என்று தடுத்ததை நினைத்தான். “நாம் நான்கு அல்ல, நானூறு பேரைக் கொல்வோம்.”அன்று புருஷோத்தமன் சொன்னது இப்போது நடந்து விட்டது. விஜயனின் வில் வித்தைக்கு இன்று சரியான பரிசு கிடைத்தது.
“யாரையும் தப்பிச் சென்று முன்னே செல்லும் படையை எச்சரிக்க விடாதீர்கள்,” என்று புருஷோத்தமன் உத்தரவிட்டான்.
முன்னேயிருந்த படையினருக்கு பின்னால் என்ன நடந்தது என்று இன்னும் தெரியாது. புருஷோத்தமனைச் சார்ந்த அனைவரது முகங்களிலும் திருப்தி. மூன்றில் ஒரு பங்கு படையை வீழ்த்தியிருந்தனர்.
“அந்த அடக்குமுறை கொண்ட சிசுபாலனின் தலையை என் கூரையில் தொங்க விட ஆவல்,” என்று பிரதாபன் சொன்னான்.
“பொறுத்திருங்கள். இலக்கை நிச்சயமாக அடைவோம்,” என்று புருஷோத்தமன் பதிலளித்தான். அவன் ஆட்களிடம், இறந்தவர்களிடமிருந்த அம்புகள், ஆயுதங்கள், மதிப்புள்ள பொருட்களைச் சேர்க்கச் சொல்லினான்.
“நம் குறியீட்டு விகிதத்தை மேம்படுத்த வேண்டும். அம்புகளை வீணாக்க முடியாது. எவ்வளவு எடுத்துச் செல்ல முடியும் என்பதற்கும் எல்லை உண்டு” என்று விஜயன் கணக்கிட்டான்.
அனைவரும் வில்லாளர்கள், ஆனால் ஒருவரால் 50 அம்புகளை விட அதிகம் சுமக்க முடியாது. ஒவ்வொரு தவறான அம்பும் தோல்வியை நெருங்கச் செய்யும். அதனால், எல்லா அம்புகளும் சேகரிக்கப்பட்டு, அம்புப்பைகளுள் நிரப்பப்பட்டன.
“இது நன்றாகச் செல்லுகிறது. இப்போது செய்தது போலவே, குழுக்களாக அவர்களைக் கொன்றுவிடலாம்,” என்று ஒரு வீரன் புருஷோத்தமனிடம் சொன்னான்.
“அது ஒவ்வொரு முறையும் வேலை செய்யாது. விரைவில் அவர்கள் இந்தத் தாக்குதலை உணர்ந்துவிடுவார்கள். படை இப்படியே சிதற அனுமதிக்க மாட்டார்கள். இனி மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்று புருஷோத்தமன் தனது ஆட்களை எச்சரித்தான்.
அனைவரும் ஒன்றாகச் செயல்பட்டு, மதிப்புள்ள பொருட்களைக் கூடையாகச் சேகரித்தனர். மேலும், தங்கள் திட்டம் முடிந்த பின் எடுத்துச் செல்லும்படி அவற்றை மறைத்து வைத்தனர். பின்னர் ஒவ்வொரு வீரனும் ஐம்பது அம்புகள் வீதம் எடுத்து ஆயுதமணிந்தனர். ஆனால் அது போதாது என்பதையும், வேறு தந்திரம் அவசியம் என்பதையும் புருஷோத்தமன் நன்கு அறிந்திருந்தான்.
விரைவில் சிசுபாலனுக்குப் பின்னே வந்த படையினருடன் தொடர்பு துண்டிக்கப்பட்ட விஷயம் தெரிய வந்தது. ஆரம்பத்தில், அவர்கள் காட்டினுள் தங்கள் வழி மாறிச் சென்றிருக்கலாம் என்று அவன் நினைத்தான். ஆனால் நேரமாகியும் அவர்களைப் பற்றி எந்தச் சுவடும் கிடைக்காதபோது, அவன் அச்சமடைந்தான்.
இருந்தும் ஏதும் தவறாக நடந்ததாகத் தோன்றவில்லை. “வழி தவறி, வேறு திசையில் நகர்ந்திருக்கலாம். ஓர் ஆய்வு குழுவை அனுப்பலாம்,” என்று அவன் கூறினான்.
அவனது படைத்தலைவர் சம்மதிக்கவில்லை. வழி தெளிவாகவே இருந்தது. . சிப்பாய்கள் அதை எளிதாகப் பின்பற்றினர் என்பதை அவர் அறிவார். ஆனால் சிசுபாலனுடன் வாதிப்பது வீண் என்பதால், இரு குதிரை வீரர்களை காணாமற்போன குழுவைத் தேட அனுப்பினான்.
எல்லாம் திட்டமிட்டபடியே நடந்துகொண்டிருந்தது. உக்ரசேனன் அனுப்பிய இரு குதிரை வீரர்களையும் புருஷோத்தமனின் ஆட்கள் கவனித்தனர். இரண்டு அம்புகளே போதுமானதாக இருந்தது அவர்களை அகற்ற. சடலங்கள் விரைவாக இழுக்கப்பட்டு மறைக்கப்பட்டன, அடுத்த தேடுதற் குழு எதையும் கவனிக்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார்காள்.
பதுங்கிய வலையமைத்த இடத்தை அடைய படை மேலும் சில நேரம் நடக்க வேண்டும் என்று புருஷோத்தமன் விரும்பினான்; அதனால் இன்னும் சிறிது நேரம் எந்தத் தகவலும் எதிரிகளிடம் சென்றிருக்காது.
படைத்தலைவர் நேரத்தை கவனித்துக்கொண்டிருந்தான். சிசுபாலனிடம் சென்று, இந்த முறை முகத்தில் கவலையுடன், நிலைமையைச் சொல்லத் துணிந்தான்.
“மன்னா, ஏதோ சரியில்லை என்றே தோன்றுகிறது. காணாமற்போன சிப்பாய்களைப் பற்றிய செய்தி இன்னும் வரவில்லை” என்று மென்மையான குரலில் அவன் தெரிவித்தான். வழி தவற வாய்ப்பில்லை என்பதையும் விளக்கினான்.
இருவருமாகப் படையின் பின்புறத்தை அடைந்தபோது, அந்தக் கவலைக்குக் காரணம் இருப்பதை உணர்ந்தான். பயணத்தின் போது, அவன் படை எவ்வளவு பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது என்பதும் தெளிவானது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, படையினரைக் நிறுத்தி மீண்டும் ஒருங்கிணைய உத்தரவிட்டான். ஆனால் காட்டில் அப்படி ஒரு இடமில்லை. எல்லாத் திசைகளிலும் அடர்ந்த மரங்களும் புதர்களும்.
உடன் வந்த வழிகாட்டி அருகே ஒரு திறந்த புல்வெளி இருப்பதாகச் சொன்னான்; ஆனால் சிற்று விலகிச் செல்ல வேண்டும். சிசுபாலன் உடனே சம்மதித்தான். பயண நேரம் சற்றே கூடும் என படைத்தலைவர் எச்சரித்தாலும், பாதையை மாற்றுவதையே அவன் விரும்பினான்.
அனுபவமிக்க வீரரின் சிந்தனை புருஷோத்தமனின் திட்டத்தைச் சரியாகப் படித்தது. படை, தங்களின் முதன்மைத் திட்டத்தில் இல்லாத, ஒரு முகாம் அமைக்கும் இடத்துக்குத் திரும்பியது. புருஷோத்தமனும் அவன் ஆட்களும், முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட பாதையில், வலையமைத்திருந்தனர்.
அந்த வலையின் மூலம், காவல்படையின் முன்னணியிலிருந்து சுமார் நூறு வீரர்களைச் சுற்றிவளைத்திருக்க முடியும். மறைவாக அமைக்கப்பட்ட குழிகள், மரக் கிளைகள்—அவை பலரை கொன்றோ காயப்படுத்தவோ செய்திருக்கும்; இதனால் எதிர்தரப்பு இன்னும் பலவீனமடைந்திருக்கும். அதே பாதையில் மீண்டும் திரும்பும் அபாயமும் இருந்தது. ஆனால் புருஷோத்தமனும் அவன் கூட்டாளிகளும் வேறு பணிக்காக அவர்களைப் புறக்கணித்திருந்தனர்.
ஏழுநூறு பயிற்சி பெற்ற காலாட்படை—வில்லாளர்களைக் கொண்ட சிறிய குழுவுக்கே மிகவும் அதிகம். தங்களின் திட்டம் சிதற ஆரம்பித்ததை அவர்கள் உணர்ந்த தருணத்தில், சத்யஜித் ஒரு பயனுள்ள தகவலைப் பகிர்ந்தான்.
சிசுபாலனுக்கு அந்த இடம் திருப்தியளித்தது. திறந்த நிலப்பரப்பு இரண்டாயிரம் சிப்பாய்களைக் கூட தாங்கக்கூடியது. சில மான்கள் சுற்றித் திரிந்தன; பின்னர் காட்டிற்குள் மறைந்தன. சிசுபாலன், அதிகமாக இருந்த புல்லை வெட்டச் சொல்லி, முகாமுக்கு ஏற்றவாறு இடத்தைச் சீரமைக்க உத்தரவிட்டான்.
தளபதிகள் தங்கள் படைகளை ஒழுங்குபடுத்தி எண்ணிக்கை செய்தனர். பின்புறம் நீண்டதால், அனைவரும் கூட கொஞ்ச நேரம் எடுத்துக்கொண்டது; எண்ணிக்கைச் செய்வது கடினமில்லை.
விரைவில், சுமார் முந்நூறு சிப்பாய்களும் சில சேவகர்களும் காணாமற்போனது தெளிவானது. விநியோகப் பொருட்களும் பெருமளவில் இல்லை. இது ஒரு தாக்குதல்தான் என்ற சந்தேகம் இனி இல்லை.
சிசுபாலன் பாதுகாப்பு வளையம் அமைக்க உத்தரவிட்டான். அம்புகள் அல்லது பறக்கும் ஆயுதங்களிலிருந்து பாதுகாப்பதற்காக, கேடயங்களை உயர்த்தி வட்ட வடிவில் நின்றனர். கட்டளைகளுக்கு இணங்க, படை குடை போலக் கேடயங்களை இணைத்தது.
பல மணி நேரங்களாக அவர்கள் தயார் நிலையில் நின்றனர், எவரை எதிர்த்து நின்றிருக்கிறோம் என்பதே தெரியாமல். கைகள் வலித்தன, கால்கள் களைத்தன. பொறுமை சிதறியது. நீண்ட நடைப்பயணத்துக்குப் பிறகு, இப்படிப் பட்ட நிறுத்தம், உறுதியற்றத் தலைமையின் சின்னமாகத் தோன்றியது.
காடு முழுவதும் மௌனம். பறவைகளின் கீச்சும், சில வனவிலங்குகளின் குரலும் மட்டுமே அந்த மௌனத்தை முறித்தது. குறிப்பிட்ட இடைவெளியில் அமைதியைச் சோதித்தாலும், அருகில் மனிதர்களின் சுவடு எதுவும் இல்லை.
வீரர்களின் மனச்சோர்வை உணர்ந்து, சில தளபதிகள் சிசுபாலனிடம் வந்து நிலைமையை விளக்க முயன்றனர். கண்களுக்கு எதுவும் தெரியாதபோது, உள்ள அபாயத்தைச் சொல்வது கடினமாக இருந்தது. அளவுக்கு மீறிய எச்சரிக்கை சிப்பாய்களை மேலும் பலவீனமாக்கும் என்பதை சிசுபாலனும் அறிந்திருந்தான்.
காணாமற்போன இரு குதிரை வீரர்களைத் தேடுவதற்காக கூடுதல் சிப்பாய்களை அனுப்பினால், இழப்புகள் இன்னும் அதிகரிக்கும் என்று தெரிந்தது.
ஒரு தளபதி விநியோக நிலைமை மோசமாக உள்ளது; ஒரே இரவுக்குக் கூட அனைவருக்கும் உணவு போதாது என்று தெரிவித்தான். படை உணவு பெற வேண்டியதால், பாதுகாப்புடன் ஒரு தேடல் குழுவை உணவு சேகரிக்க அனுப்புவது நல்லது என்றான். அவர்கள் பாதுகாப்புடன் திரும்பினால், அடுத்த கட்டத்தை யோசிக்கலாம்.
முன்னரே பெரும் நேரத்தை இழந்திருந்ததால், திட்டம் நியாயமானதாகத் தோன்றியது. இரண்டு குதிரை வீரர்களும் சில சிப்பாய்களும் இணைந்த குழுவை அனுப்பி, அருகிலுள்ள பகுதிகளிலிருந்து உணவும் பிற தேவைகளையும் சேகரிக்க உத்தரவிட்டான். மற்ற படை அடுத்த உத்தரவு வரும் வரை பாதுகாப்பு வளையத்திலேயே இருக்குமாறு பணிக்கப்பட்டது.
அடுத்த சில மணி நேரங்கள் அமைதியாகக் கடந்தன. தேடல் குழு, போதுமான அளவு உணவைச் சேகரித்து, எந்த இழப்புமின்றி திரும்பியது. இதனால் காவல் சிப்பாய்களின் மனோபலம் உயர்ந்தது; சிசுபாலனின் நம்பிக்கையும் கூடினது. மாலையானதால், அந்த இரவு முகாம் அமைத்து சிப்பாய்களுக்கு ஓய்வளிக்க அவன் முடிவு செய்தான்.
மேலும் பயணம் செய்வதில் அர்த்தமில்லை என்று முடிவெடுக்கப்பட்டது. காணாமற்போன வீரர்கள் மறுநாள் காலை வரை திரும்பி வருகிறார்களா என்று காத்திருக்க தீர்மானித்தனர். அவர்கள் வரவில்லை என்றால், அடுத்தக் கட்ட நடவடிக்கையைத் தளபதிகள் முடிவு செய்ய வேண்டும். தளபதிகள் தங்களுக்கான முகாமை அமைத்த பின், வீரர்கள் ஓய்வெடுக்க முடிவு செய்தனர். பலர் திறந்த வெளியில் தரையில் உறங்கினர். இருப்பினும், விலங்குகளிலிருந்து பாதுகாப்புக்காக சில இடங்களில் வேலிகள் அமைக்கப்பட்டன.
அது நிலவில்லா, இருண்ட கோடை இரவு. கடும் சோர்வால் பெரும்பாலான வீரர்கள் ஆழ்ந்த நித்திரையில் இருந்தனர். முகாமை வனவிலங்குகளிலிருந்தும் பிற ஆபத்துகளிலிருந்தும் காக்க சில காவலர்கள் மட்டுமே விழித்திருந்தனர். நள்ளிரவுக்குப் பிறகு, திடீரென அந்த இடமெங்கும் ஒளி மயமானது. தளபதிகளின் கூடாரங்கள் தீப்பிடித்து எரிந்தன. என்ன நடக்கிறது என்று யாருக்கும் புரியவில்லை. முகாமெங்கும் பெரும் குழப்பம். ஆழ்ந்த உறக்கத்திலிருந்து எழுந்த வீரர்கள், புகைமூட்டத்தில் திசை தெரியாமல் ஓடினர். இது தாக்குதலா, இல்லையா விபத்தா என்பது தெளிவில்லை; விசாரிக்க நேரமும் இல்லை. தீ விரைவாகப் பரவியதால், தங்களை காப்பாற்றிக் கொள்வதே முதன்மை ஆனது. தீ எட்டாத ஒரே பகுதி முகாமின் தெற்குப் புறமும் காட்டின் ஆழமும் தான். வீரர்கள் கையில் கிடைத்ததைச் சுமந்து கொண்டு அங்கே ஓடினர். விரைவில், அவர்கள் முகாமை விட்டு வெகுதூரத்தில், அடர்ந்த காட்டின் மையத்தில் நின்றுகொண்டிருந்தனர்.
திடீரென, அம்புகளின் மழை. பெரும்பாலான வீரர்கள் தங்களின் கவச ஆடைகளை அணியாமல், இப்போதுதான் விழித்தெழுந்தவர்கள். அவர்கள் மரக்கட்டைகள் போல விழத் தொடங்கினர். முகாமை நோக்கி திரும்புவதற்கு வழியில்லை என்பதால், காட்டிற்குள் இன்னும் வேகமாக ஓடினர். எங்கும் குழப்பம். சிசுபாலன் பாதுகாப்புக் கட்டமைப்பில் நிற்குமாறு கத்தினான்; ஆனால் அவனது குரல் எவருக்கும் கேட்கவில்லை. சிறிது நேரம் இப்படியே நீடித்தது; பின்னர் சில தளபதிகள் முன்வந்து, வீரர்களை பாதுகாப்பு அணிவகுப்பில் சேர்க்க முயன்றனர், இல்லையேல் அனைவரும் கொல்லப்படுவார்கள்.
மெல்ல நிலைமை கட்டுக்குள் வந்தது. அந்த இரவுக்குள், உக்ரசேனன் மேலும் இருநூறு வீரர்களை இழந்திருந்தான். அவன் படையின் பாதி ஏற்கெனவே இறந்தோ, காயமடைந்தோ இருந்தது.
இப்போது சந்தேகமில்லை, அவர்கள் தாக்குதலுக்குள்ளாகியிருந்தனர். இனி ஊக்கமூட்டல் தேவையில்லை. படை, சிறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டது; பறக்கும் அம்புகளால் மேலும் சேதம் ஏற்படாமல், கேடயங்களை இறுக்கமாக இணைத்து அணிவகுப்பில் நகர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அம்பு மழை நிறுத்தப்பட்டிருந்ததால், அவர்களுக்கு சிறிது மூச்சுவிடும் அவகாசம் கிடைத்தது.. உக்ரசேனனும் அவன் தளபதிகளும், பகைவர்கள் ஆண்மக்களாய் நேரடிப் போருக்கு வர வேண்டும், வஞ்சகமாக அல்ல என்று கத்தினர். ஆனால், அது பயனின்றி போனது.
அன்றிரவு முழுவதும் படை முழு எச்சரிக்கையிலும் பாதுகாப்பு நிலையில் இருந்தது. பொழுது புலேந்தது வழிகாட்டியைத் தேடினார்கள். காட்டிலிருந்து வெளியேறும் குறைந்த பாதையை அறிய வேண்டியதாக இருந்தது. ஆனால் வழிகாட்டியை எங்கும் காணவில்லை. விரைவில், அவன் சடலம் தளபதியிடம் கொண்டு வரப்பட்டது, முந்தைய இரவில் அவன் குறிவைத்து கொல்லப்பட்டிருந்தான். இப்போது, வழிகாட்டியில்லாமல், படை காட்டின் நடுவில் சிக்கியிருந்தது.
இது அனைத்தும் சத்யஜித்தின் திட்டமே. நள்ளிரவு தாக்குதலுக்குப் பிறகு, புருஷோத்தமனும் அவன் ஆட்களும் ஓய்வெடுத்து நன்றாக உறங்கினர். வேலை இன்னும் முடிவடையவில்லை என்பதை அவர்கள் அறிவார்கள்; ஆனால் அடுத்த நாளின் திட்டத்தை நிறைவேற்ற ஓய்வு அவசியம். அதே நேரத்தில், மகதப்படை இரவு முழுவதும் நடந்த தாக்குதலால், காலையில் சோர்ந்து விட்டது.
விடியற்காலையில், சிசுபாலன் பகைவரைக் கண்டுபிடிக்க ஒரு வேட்டையாடும் குழுவை அனுப்பினான். நான்கு வீரர் மற்றும் ஒரு குதிரை வீரர் என்று நான்கு திசைகளில் அனுப்பப்பட்டனர். பகைவரின் இருப்பிடத்தை மட்டும் கண்டறிந்து அறிக்கை தர வேண்டும்.
அந்தப்படை காட்டுப் போரில் பயிற்சி பெறாதது ஆயினும், போருணர்வு கொண்டது. படை பாதியாகக் குறைந்திருந்தாலும், அது அவர்களுக்கே சாதகமாக மாறியது, எஞ்சியவர்கள் அனுபவமிக்கவர்கள். பெரும்பாலானோர் கனரக காலாட்படை, சிலர் இலகு காலாட்படை. இலகு படைக்கு சுறுசுறுப்பு இருந்தாலும், கனரக படை தான் பாதுகாப்பில் வலிமையானது.
வேட்டையாடும் குழு எந்த மனித தடயத்தையும் காணாமல் திரும்பியது. புருஷோத்தமனின் சிறிய படையினர் அந்தக் காட்டினுள் சுவடில்லாமல் மறைந்து பழகி இருந்தனர்.
கொள்ளையர்களும் கொள்ளைக்காரர்களும் தான் தாக்கியிருக்கிறார்கள் என்று சிசுபாலன் உறுதியாக நம்பினான். வேட்டையாடும் குழு வெறும் கையுடன் திரும்பியதும், அடுத்த நடவடிக்கையை ஆலோசிக்கத் தன் தளபதிகளை அழைத்தான். தங்கித் துரத்துவது குறித்து விவாதம் நடந்தது. ஒரு தளபதி வலியுறுத்தினான்:
“எண்ணிக்கையிலும் பயிற்சியிலும் நாம் மேல். பலவீனத்தால் ஒளிந்திருக்கும் எதிரிகளை வீழ்த்த முடியும். தப்பிக்க முயலாமல் போரில் கவனம் செலுத்தினால் நிச்சயம் வெற்றி நமதே. நமது கனரக காலாட்படை அம்புகளைத் தாங்கும். பகைவர்களுக்கும் அம்புகள் வரையறுக்கப்பட்டவை. காட்டின் நடுவில் அவர்கள் எங்கே மேலும் அம்புகள் பெறப் போகிறார்கள்? நாம் தங்கி விழிப்புடன் இருந்தால், அவர்கள் தவிர்க்க முடியாமல் வெளிவர நேரிடும்.”
ஆனால் மற்றொரு தளபதி இதற்கு எதிராக வாதிட்டான், “நாம் இந்தப் பகுதியில் அதிக அறிமுகம் இல்லதவர்கள். விரைவில் காட்டை விட்டு வெளியேறினால் நல்லது. இங்கே கொள்ளையர்கள் மட்டுமல்ல, பல அபாயங்கள் உள்ளன. வனவிலங்குகள் விரைவில் நம்மை வேட்டையாட துவங்கும். கம்பு முதல் வாள் வரை, கொசுக்கள் முதல் கர்ஜிக்கும் புலிகள் வரை, எல்லாம் இங்கே எதிரிகளே. நமது வீரர்கள் நகர வாழ்வின் வசதிகளை நினைத்து வெளியேறியவர்கள். இப்போது அவர்கள் காணாத நிலத்தின் நடுவில் உயிருக்காகப் போராடுகின்றனர். விரைவில் அவர்கள் சோர்ந்து உடல்நலக்குறைவடைந்துவிடுவார்கள்.”
இவ்வறு பல தரப்பட்ட கருத்துகளை கேட்ட பின் காட்டை விட்டு விரைவில் வெளியேற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அவர்கள் சிறு குழுக்களாக நகர வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. முன்னைய தவறுபோல், நீண்ட பாம்பு போலப் படை நகர்ந்த தவறு மீண்டும் நிகழாதிருக்க இம்முறை, அவர்கள் சிதறிய கூட்டங்களாக குழுக்களாக நகர்ந்தனர்.
ஆனால் இவ்வளவு திட்டமிடலின் நடுவிலும், சிசுபாலன் இரண்டு முக்கியமான உண்மைகளை மறந்துவிட்டான்.
முதல் பிரச்சனை, வேகமான வெளியேறும் பாதையை அங்கிருந்த யாரும் அறியவில்லை, வழிகாட்டி ஏற்கனவே இறந்துவிட்டான்.
இரண்டாவது பிரச்சனை, அது இப்போது படையைத் தாக்க வந்தது. ஒரு தளபதி வந்து, படைக்கு தண்ணீர் கடுமையாகக் குறைந்து விட்டதாக அறிவித்தார். பெரும்பாலான சிப்பாய்கள் தாகத்தில் தவித்தனர். முந்தைய இரவின் தீயும், இரவு முழுவதும் முழுவதும் உயிர் காக்கப் போராடிய சோர்வும் இந்தச் சேதத்திற்கு மேலும் தீவிரம் சேர்த்தன.

Author: SudhaSri
Article Title: அத்தியாயம் - 20
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.