அத்தியாயம் 22
பத்து வீரர்கள் மட்டுமே கொண்ட ஒரு சிறிய குழு இத்தனை சாதித்தது நம்ப முடியாததாக இருந்தது. மகதத்தின் மிகப் பயங்கர வீரனையும், அவனுடன் வந்த ஆயிரம் சிப்பாய்களையும் அவர்கள் கொன்றிருந்தனர். அவர்களது பக்கத்தில் எந்த இழப்பும் இன்றி. அந்த பத்து பேரும் உற்சாகத்தில் திளைத்தனர்.
அவர்களில் ஒவ்வொருவரும் முன்பு நந்தனாலோ, அவன் குடும்பத்தினராலோ ஏதோ ஒரு வகையில் துன்புறுத்தப்பட்டிருந்தனர். அந்தப் பொது எதிரியைப் பழிவாங்கவே அவர்கள் புருஷோத்தமனுடன் இணைந்தனர். ஆனால் தப்பியோடிய ஒரு சிறிய குழு அரச குடும்பத்தையேத் தாக்கும் அளவிற்கு துணிந்துவிடும் என்று யாரும் நம்பவில்லை.
இந்த நிகழ்வு புருஷோத்தமனின் திறமைக்கும் தலைமைக்கும் அவர்களுடைய நம்பிக்கையை உறுதிப்படுத்தியது. பார்பதி யுத்தத்தில் அவன் செய்த கொடூர செயல்களின் பலனை சில ஆண்டுகளுக்குள் சிசுபாலன் அனுபவித்தான்.
“வெற்றியை இப்போதே அறிவிக்கக் கூடாது. இன்னும் நாம் நீண்ட பாதை செல்ல வேண்டியுள்ளது,” என்றான் புருஷோத்தமன். “நமது இறுதி இலக்கு நந்தனை ஒழிப்பதுதான் என்பதை மறக்கக் கூடாது. அது நிறைவேறும் வரை, நமது வேலை முடியவில்லை.”
இந்த வார்த்தைகள் புதிதல்ல. முன்பு, காட்டு நெருக்கடியை தாங்கி குழுவை ஒன்றுபடுத்துவதற்கான உரைகளாகவே அவை இருந்தன. ஆனால் இன்றோ அவை வேறுபட்டன. தீமை நிறைந்த அரசனை அவன் சிங்காசனத்திலிருந்து வீழ்த்த முடியும் என்ற உறுதி அவர்களுக்கிருந்தது.
“அடுத்தது என்ன?” என்று ஒருவன் கேட்டான்.
“இப்போது ஓய்வு,” என்று புருஷோத்தமன் சுருக்கமாகச் சொன்னான்.
“நாம் சிறப்பாகச் செயல்பட்டுள்ளோம். இப்போது நம்மையே நாம் கவனிக்க வேண்டும்.”
“ஆனால் இப்போது தாக்குவது எளிது. பகைவன் காயமடைந்துள்ளான், பலவீனமாக இருக்கிறான். இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.” என்று இன்னொருவன் கூறினான்.
“நீ சொல்வது சரியே,” என்றான் புருஷோத்தமன்.
“ஆனால் இப்போது இல்லை. நாம் தற்காலிகமாக காட்டை விட்டுச் செல்ல வேண்டும். ஒவ்வொருவரும் வெவ்வேறு திசைகளில் போக வேண்டும். நகரங்களுக்கு சென்று, வாழ்வை அனுபவித்து, ஒரு மாதத்திற்குப் பிறகு இங்கே மீண்டும் சந்திக்க வேண்டும். அதுவரை சாப்பிடுங்கள், குடியுங்கள், மகிழுங்கள், ஆனால் அகங்காரம் கொள்ளாதீர்கள்.”
“மகதத்தின் அடித்தளத்தை நாம் குலுக்கியுள்ளோம். அரச குடும்பத்து ஒருவனை நாம் கொன்றுள்ளோம். இப்போது இந்தக் காடுகளில் நம்மைத் தேடி சிப்பாய்களின் வெள்ளம் வரும். அவர்கள் சிசுபாலனைப்போல் அகந்தையுடன் செயல்படமாட்டார்கள். அவர்கள் பயிற்சிபெற்ற போர்வீரர்கள். நம்மை ஒவ்வொரு கிளையிலிருந்தும் வேட்டையாடுவார்கள். நந்தனை ஒழிக்கவேண்டும் என்ற நமது கனவு வீணாகிவிடும். அதனல், பிரிந்து செல்வது தான் சிறந்த வழி. அடுத்த கட்டத்திற்காக மீண்டும் சந்திப்போம்.”
*********************
வெகு நாள் கழித்து புருஷோத்தமனும் விஜயனும் வேட்டைக்குச் சென்றிருந்தனர். குதிரையை விடுத்து இருவரும் நடந்தே சென்றனர். அந்தக் காடு இப்போது அவர்களது வாழ்வில் ஓர் அங்கமாக மாறியிருந்ததே. அதனால் எந்த பயமும் இல்லாமல் இயற்கையை ரசித்தபடியே நடந்தனர்.
பார்பதியில் வேட்டைக்குச் சென்ற தினமும் அதன் பின்னர் நடந்தேறிய நிகழ்வுகளும் கண் முன்னே வந்து அவர்களை இறுகச் செய்தது. இன்று, தங்கள் உறவினருக்காகப் பழி வாங்கிவிட்டோம் என்ற திருப்தியோடு தொடர்ந்து சென்றனர்.
அன்று போலவே இன்றும் நான்கு சிங்காரா மான்கள் அவர்களுக்காகக் காத்திருந்தன. அதைப் பார்த்த இருவரும் இருக்கும் இடம் மறந்து சத்தமாக நகைத்தனர். வெகு நாட்களுக்குப் பின்னான சிரிப்பு. காலம் அவர்களின் வாழ்க்கையில் கோர தாண்டவம் ஆடிய நாளுக்குப் பின்னர் சிரிப்பு என்ற ஒன்றை மறந்து விட்டது போல் வாழ்ந்து வந்தனர். உடலின் ஒவ்வொரு அங்கத்திலும் கோபத்தை மட்டுமே நிறைத்து வைத்திருந்தார்கள்.
இப்போதும், இல்லாமல் போன உறவுகளை நினைக்கும் போதே ஒரு வெறுமை அவர்களை ஆட்கொள்கிறது.
ஆனாலும், நிதர்சனத்தை உணர்ந்து வாழப் பழகிக் கொண்டுவிட்டார்கள். இன்னும் நந்தனை எதுவும் செய்யவில்லை என்றாலும் சிசுபாலனைப் பழி வாங்கியதில் அவர்கள் மனம் சமனப்பட்டுவிட்டது.
மரங்களின் மேலிருந்த பறவைகள் எல்லாம் ஏதோ ஆபத்து என்று ஓலமிட்டுப் பறப்பதைப் பார்த்த பிறகு சட்டென்று வாய் மூடி சிரிப்பை அடக்கிக் கொண்டு மான்களைப் பார்த்தார்கள். அவை இவர்களின் சிரிப்பில் மாயமாகியிருந்தன.
அதைக் கண்டு ஏமாற்றம் அடைந்தாலும் காட்டுக்குள் மேலும் முன்னேற முயன்றனர். நாலாபுறமும் கண்களைச் சுழற்றி மான்கள் தென்படுகிறதா என்று பார்த்துக் கொண்டே விஜயன் முன்னே நடந்து விட்டான்.
ஆனால், புருஷோத்தமன் அடியெடுத்து வைத்த அடுத்த நொடி எங்கிருந்தோ பாய்ந்து வந்த அம்பு ஒன்று நிலத்தில் குத்தி நின்றது. விஜயன் தான் இப்படி விளையாடுகிறான் என்று நினைத்தவன் புன்னகையுடன் அந்த அம்பை எடுக்கக் குனிந்தான். அப்போது மேலும் இரண்டு அம்புகள் பறந்து வந்தன.
“விஜயா! என்ன விளையாட்டு இது?” என்று கேட்டவாறே நிமிர்ந்தவன் அதிர்ச்சியுடன் உறைந்து நின்றான்.
“ஊர்மிளா!” என்று வாய் முணுமுணுத்தது.
‘காண்பது நிஜமா, இல்லை கனவா? தனது ஆழ்மனதின் ஆசை இப்படி வெளிப்படுகிறதோ?’ என்று பலதும் நினைத்தான். கண்களை இறுக மூடித் திறந்தான். அப்போதும் கண்முன் இருந்த உருவம் மறையவில்லை. இப்போது அந்த உருவத்தை அளவெடுத்தான். ஆண் போல உடை அணிந்திருந்தாள், தோளில் வில்லைத் தாங்கி இருந்தாள். இடுப்பில் ஒரு பக்கம் வாளும் மறுபக்கம் ஒரு உறையில் நீண்டதொரு வாளும் மறுபக்கம் குத்துவாள் ஒன்றும் அணிந்திருந்தாள். மொத்தத்தில் கம்பீரமாகக் காட்சி அளித்தாள்.
அவளது அம்புகள் நிச்சயமாக நல்ல வீராங்கனை தான் என்று உணர்த்தியது. மீண்டும் ஒரு முறை அவள் மீது பார்வையைப் பதித்தான்.
அவளது வதனம் நிச்சயமாக ஊர்மிளாவைப் போலவே இருந்தது என்பதில் ஐயமே இல்லை. ஆனால், இந்தப் பெண் ஊர்மிளாவை விட உயரமாக இருந்தாள். இன்னும் ஆராயத் தொடங்கியவனை நிறுத்தியது அவளது குரல்.
“ஒரு பெண்ணை, அதுவும் முதல் முறையாகப் பார்க்கும் ஒரு பெண்ணை இப்படி ஆராய்வது தான் தங்கள் பௌரவ வம்சத்தின் பழக்கமா புருஷோத்தமரே?”
அவளது கேள்வியில் புருஷோத்தமனுக்கு ஒரு கணம் தலை சுற்றிப் போனது. சட்டென்று சுதாரித்துக் கொண்டவன் தனது இயல்புக்குத் திரும்பியிருந்தான்.
தான் யாரென்று தெரிந்து வைத்திருக்கிறாள், எப்படி? இவள் யாராக இருக்கும்? இன்றைய சந்திப்பு யதேர்ச்சையாக நடந்ததா? இல்லை திட்டமிட்ட செயலா? கேள்விகள் வரிசையாக படையெடுத்தன.
“இதிலென்ன சந்தேகம். திட்டமிட்ட சந்திப்பு தான். நந்தனைப் மற்றபடி பழிவாங்குவது என்று மனதுக்குக் கடிவாளம் கட்டிக்கொண்டவரை வேறெந்த வழியில் சந்திப்பது? அதனால் தான் இப்படி..” என்று அவன் மனதில் நினைத்த கேள்விக்குப் பதில் சொன்னாள் அவள்.
புருஷோத்தமன் அவளை வியப்புடன் பார்த்தான். அப்படி என்றால் இவள் தன்னைப் பின்தொடர்கிறாளா? எத்தனை நாளாக இது நடக்கிறது? இந்தக் காட்டுக்குள் தனியாக ஒரு பெண் வலம் வரவேண்டும் என்றால், தைரியமானவள் தான் என்று நினைத்தான். ஆனால் வெளியே எதுவும் பேசவில்லை.
இருவரும் அமைதியாக நின்றிருக்க, சற்று தூரம் சென்ற பிறகே புருஷோத்தமன் உடன் வராததை அறிந்த விஜயன் திரும்பி வந்தான்.
புருஷோத்தமன் கால்கள் வேரோடியது போல் நிற்பதையும் அவனெதிரே ஆயுதம் தாங்கி யாரோ நிற்பதையும் கண்டவன் தனது வில்லில் அம்பு பூட்டினான், இல்லை.. பூட்ட முயற்சி செய்தான். அந்த முயற்சி மற்றொரு அம்பால் முறியடிக்கப்பட்டது.
அதிர்ச்சியில் திகைத்து நின்றவனை நோக்கித் திரும்பினாள் அந்த வீராங்கனை.
“சித்தி!” என்று கூவினான் விஜயன்.
“நான் உனது சித்தி ஊர்மிளா அல்ல விஜயா! அவளது சிறிய தந்தையின் மகள் அம்பிகா. ” என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டாள் அவள்.
அதனால் தான் இந்த உருவ ஒற்றுமை என்று மற்ற இருவரும் புரிந்து கொண்டார்கள். இந்தக் காட்டின் ஒரு பகுதி பாஞ்சால தேசத்தினூடே இருப்பதையும் அவர்கள் அறிவார்கள்.
“நந்தனால் பௌரவ வம்சத்தினர் அனைவரும் மாண்டனர் என்ற செய்தியை அறிந்த போது பாஞ்சால தேசத்தின் ஒவ்வொரு பிரஜையும் பழிவாங்கவே துடித்தான். ஆனால் செய்தி கேட்ட மறுகணமே ஊர்மிளாவின் தந்தை, பாஞ்சால தேசத்தின் அரசரின் உயிர் பிரிந்தது. ஊர்மிளா அவருக்கு ஒரே மகவு. ஒரு மனதாக அனைவரும் என் தந்தையை ஏற்றுக் கொண்டார்கள். அந்த சமயத்தில் நந்தன் தன் பார்வையை பாஞ்சாலத்தின் மீது திருப்பி இருந்தான். அவனது படைகளோடு மோதுவது சாத்தியம் இல்லை என்பதால் எனது தந்தை பணிந்து விட்டார். சில காலம் கழித்து துறவி கௌதமன் மூலமாக தாங்கள் இருவரும் உயிருடன் இருக்கும் விஷயம் தெரிந்தது. அன்று முதல் உங்களைப் பின்தொடர்கிறேன்” என்றாள் அவள்.
கேட்ட இருவரும் எப்படி உணர்ந்தார்கள் என்பதைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. தனது மாமனாரின் மரணம் வருத்தம் அளித்தாலும், பாஞ்சாலம் நந்தனின் கீழ் சென்றது என்ற விஷயம் வலியைக் கொடுத்தது. அதையும் விட, தன்னை ஒரு பெண் பின்தொடர்ந்தது தெரியாமல் இருந்திருக்கிறோம் என்பதை புருஷோத்தமனால் ஜீரணிக்கவே முடியவில்லை.
“உனது நோக்கம் தான் என்ன? என்னைக் உனது தந்தை போல நானும் நந்தனின் பாதம் பணிய வேண்டுமா? அதற்குத் தூதாக வந்திருக்கிறாயா? பாஞ்சால தேசத்தின் வீரத்தைப் பறைசாற்றிக் கொண்டே இருப்பாள் எனது ஊர்மிளா. அந்த வீரம் நந்தனிடம் பணிந்து விட்டது என்று அறிந்தால் துடித்துப் போவாள்” ஊர்மிளா இல்லை என்ற நினைவே இல்லாமல் பேசினான் புருஷோத்தமன்.
அம்பிகா பதிலேதும் பேசவில்லை. சற்று நேரம் அங்கே பலத்த அமைதி நிலவியது.
“பதில் சொல்ல விருப்பம் இல்லை என்றால் நீ செல்லலாம். விஜயா! நமது இடத்திற்குத் திரும்புவோம் வா! வேறொரு நாளில் வேட்டைக்கு வரலாம்” என்று நடக்க ஆரம்பித்துவிட்டான், புருஷோத்தமன்.
“நில்லுங்கள் அரசே! எனது தந்தை செய்தது தவறு தான். ஆனால், அவரது நிலையில் இருந்து யோசியுங்கள். அவர் பெரிய வீரர் தான். பச்சிளம் பாலகன் முதல் இளவரசியின் குடும்பமே கொலையாகி இருக்கிறது. அரசனும் மரணத்தைத் தழுவிக் கொண்டார். இப்படி, நாடே துக்கத்தில் இருக்கும் போது தைரியத்தை எங்கே தேடுவது? எதிரில் நிற்பவன் அந்த மரணங்களின் காரணமானவன். உயிரோடு இருப்பது ஒன்று தான் எங்கள் நோக்கமாக இருந்தது. அப்போது தான் பழிவாங்குவது என்ற இலக்கை அடையமுடியும் என்று தீர்மானித்தோம். அதில் தவறென்ன கண்டீர்கள்? தாங்களும் அதையே தான் செய்தீர்கள் என்பதை மறந்து விட வேண்டாம். இது விஷயத்தில் நீங்கள் தான் எங்கள் முன்னோடி” என்றாள் ஆவேசமாக.
அவள் சொல்வது நிஜம் தானே. அந்த நேரத்தில் உயிரோடு இருப்பது மட்டும் தானே தங்கள் நோக்கமாக இருந்தது. அவளது பேச்சில் புருஷோத்தமனும் விஜயனும் ஊமையாகிப் போனார்கள்.
ஆனாலும் அவளிடம் மேலே பேசுவதற்கு விருப்பம் இல்லாமல் தங்கள் நடையைத் தொடர்ந்தனர்.
அவர்களது இருப்பிடத்தை அடைந்த போது, அங்கே துறவி கௌதமனுடன் அம்பிகாவையும் கண்டு திகைத்தனர்.
“வாருங்கள் கௌதமரே! எங்கள் வணக்கத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்!” இருவரும் ஒருமித்த குரலில் வரவேற்றார்கள்.
அதனை ஏற்றுக் கொண்ட கௌதமன், தனது வருகைக்கான காரணத்தை விரிவாக விளக்கினார்.
அவர் சொல்வதில் இருந்த நியாயம் உணர்ந்து, அதனை ஏற்றுக் கொண்ட புருஷோத்தமன், விரைவில் அம்பிகாவைத் தன்னில் பாதியாக ஏற்றுக் கொண்டான். அவனில் பாதி என்பதை அவள் எல்லா விஷயங்களிலும் நிரூபித்தாள்.
*************
நந்தனால் தன் சகோதரர்களில் ஒருவன் , அதுவுன் ஒன்பது பேரில் இளையவன் இறந்துவிட்டான் என்பதை நம்பவே முடியவில்லை. மத்ஸ்யாவுக்குப் பயணம் செய்தபோது அவன் எதிர்கொண்ட சதி தாக்குதல் குறித்து அவனுக்கு தகவல் வந்தது. சகோதரனைப் பாதுகாக்க தேவையான எல்லா முன்னெச்சரிக்கைகளையும் செய்திருந்தான். போதிய படை ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. அந்தக் கூட்டணி எண்ணிக்கையில் பெரிதாக இருந்தது. ஒரு எதிரி நாட்டையே வீழ்த்தக்கூடிய அளவு. இருந்தும், அவன் தன் பேரரசின் எல்லைகளுக்குள் கொல்லப்பட்டான். உடல் மீட்கப்படவில்லை என்றாலும், தாக்குதலிலிருந்து தப்பிய சில வீரர்கள் நிகழ்வுகளை அரசனிடம் விவரித்தனர்.
நந்தன் தன் பிரதான சேனாதிபதியான சித்திகனை அழைத்தான். சகோதரனின் எதிர்பாராத மரணத்தால் அவனும் வேதனையுற்றிருந்தான். ஆனால் எந்த உணர்வையும் வெளிப்படுத்தாமல் மௌனமாக இருந்தான்.
சற்று நேரத்திற்குப் பின் நந்தன் கேட்டான், “நமது சகோதரன் இன்னும் உயிருடன் இருக்கக்கூடும் என்ற சாத்தியம் உண்டா?”
பூதபாலன் துணிந்து சொன்னான். “ஒரு வாரத்திற்கும் மேல் ஆகிவிட்டது. ஏதாவது காட்டுவிலங்கு அவனை கொன்றிருக்கலாம். இல்லையென்றால், அவன் சுற்றியுள்ள கிராமங்களிலுள்ள எங்கள் காவல் நிலையங்களில் ஏதாவது ஒன்றை அடைந்திருப்பான்.”
இத்தனைக்கும் சிசுபாலன் மீது மற்ற சகோதரர்காளுக்கு அத்தனை பிரியம் இல்லை. ஆனால் மரணம் எல்லாவற்றையும் அழித்துவிடுகிறது. ரத்த உறவுகளின் மதிப்பு அதனால் தெளிவாகிறது. நந்தனுக்கும் அவனது சகோதரர்களுக்கும் சிசுபாலனின் உயிரைக் காக்கும் பொறுப்பு இருந்தது.
இளைய சகோதரன், சிறுவயதிலேயே பெற்றோர்களை இழந்தவன். அவனை நாகரிக மனிதனாக்கவும் பாதுகாப்பதும் அவன் சகோதரர்களின் கடமை. அந்த இரு கடமைகளிலும் அவர்கள் தோல்வியடைந்தனர். அந்தத் தோல்வியின் குற்ற உணர்ச்சி அவர்களை வாட்டியது.
நீண்ட மௌனத்திற்குப் பிறகு பூதபாலன் சொன்னான்,
“நாம் வீரர்களின் உடலைக் கண்ட இடத்திலிருந்து அருகிலுள்ள கிராமம் நாற்பது மைல் தூரம் தான். எந்த திசையிலும் அரை நாள் பயணித்தால், உதவி கிடைக்கும் இடத்தை அடைய முடியும்.”
“அவன் ஒரு போர்வீரன், மிகத் துணிச்சலானவன்” என்று நந்தன் கூறினான்.
“அவனது இழப்பு என்றும் நிரப்பப்படாது. ஆனால் அது வீணாகப் போகாது என்பதை நான் உறுதி செய்கிறேன். எனது சகோதரனை அழித்தவர்களை. பாரதவர்ஷத்தின் வரைபடத்திலிருந்து அழித்தே ஆக வேண்டும். எல்லைகளுக்கு அப்பால் உள்ள விரோதிகளை எதிர்கொள்ளும் முன், உள்ளிருந்தவர்களை அழித்தே தீர வேண்டும். இல்லையென்றால், அவர்கள் இப்படியே தொடர்ந்து துன்புறுத்துவார்கள்.”
அவனது கண்களின் விளிம்புகளில் கண்ணீர் தெரிந்தது. ஆனால் அவன் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டான். இது சோகப்பட வேண்டிய நேரமல்ல; இது கோபத்தின் நேரம்.
சித்திகன் கூறினான், “இந்த பிரச்சினையில் கவனம் செலுத்துவதற்காக, மற்ற எல்லா ராணுவ நடவடிக்கைகளையும் ஏற்கனவே நிறுத்திவிட்டேன்.”
“எனக்கு விவரங்கள் வேண்டும்,” என்று நந்தன் கேட்டான்.
“இது சாதாரண எதிரி அல்ல. அவர்கள் எங்கு இருக்கிறார்கள்? அவர்களின் பலம் என்ன? அவர்களை எப்படித் தடுக்கலாம்? நான் தனிப்பட்ட முறையிலேயே இதை மேற்பார்வையிடுவேன்.”
சித்திகன் மெதுவாக பதிலளித்தான்:
“அவர்கள் பொதுவாக அறியப்படும் பிசாசுகள் அல்லது இறந்தவர்களின் ஆவிகள் அல்ல. காடுகளில் வாழும் பழங்குடிகள். அவர்கள் பல காடுகளில் இருக்கிறார்கள்; முக்கியமாக மேற்கு பகுதிகளில் செறிந்துள்ளனர்.”
“அவர்கள் எவ்வளவு வலிமையுடையவர்கள்? எண்ணிக்கை என்ன?” என்று நந்தன் கேட்டான்.
“எங்களுக்குத் தெரியாது. எங்கள் படை சிறப்பான ஆயுதங்களும் பயிற்சியும் பெற்றது. அவர்களின் காட்டுப் போர் நுணுக்கங்கள் தெரியவில்லை. ஆனால் கற்றுக்கொள்ளலாம். விரைவில் நமது காடுகளை அவர்களின்றி சுத்தம் செய்வோம்.”
சித்திகனின் குரலில் சோகத்தின் சுவடே இல்லை. ஒரு புறம் சகோதரன் மீது பிணைப்பு இருந்தாலும், அது இரங்கலாக வெளிப்படவில்லை, கோபமாக மட்டுமே வெளிப்பட்டது. அவன் பழியை தீர்க்க விரும்பினான்.
“மூன்று திசைகளிலிருந்து ஒன்றாகக் காட்டைத் தாக்குவோம். மெதுவாக, ஒவ்வொரு குடியையும், ஒவ்வொரு வீட்டையும் தாக்குவோம். அந்தக் காடுகளில் உள்ள ஒவ்வொரு பழங்குடி மனிதனையும் கொல்வோம். மூன்று படைப்பிரிவுகள் காட்டின் மையத்தில் ஒன்றிணையும் வரை முன்னேறும். நேரம் எடுக்கும்,ஆனால் எதிரி நிரந்தரமாக அழிந்துவிடுவான்,” என்று அவன் விளக்கினான்.
அரசனுக்கு அந்தத் திட்டம் முழுமையாகப் பிடித்தது. பழிவாங்கும் ஆவல் அவனை நிரப்பியது. அந்த நேரத்தில் ஒரு காவலன் வந்து,
“மத்சியாவின் புதிய சேனாதிபதியான காளிபானன் அரசரைச் சந்திக்க விரும்புகிறார்” என்று தெரிவித்தான்.
அது எதிர்பாராத வருகை. அழைப்பின்றி, அவன் மத்ஸ்யாவிலிருந்து பாடலிபுத்திரம் வந்திருந்தான். பூதபாலன் முக்கியம் என்று சொன்னதால், நந்தன் சந்திப்பை அனுமதித்தான்.
காளிபானன் அரசரை வணங்கி, ஒரு அம்பை வழங்கினான்.
சித்திகன் அதை ஆராய்ந்து, பின்னர் அரசரிடம் கொடுத்தான்.
“இது என்ன?” என்று சித்திகன் கேட்டான்.
“அரசே, இது ஆழ்ந்த காட்டில் கொல்லப்பட்ட வீரர்களின் உடல்களிடமிருந்து மீட்கப்பட்ட அம்பு.”
“அப்படியென்றால்,” என்று நந்தன் கேட்டான்,
“பழங்குடியினர் காடுகளை விட்டு வெளியே வருவதில்லை. காட்டின் எல்லைகளுக்குள் மட்டுமே இருக்கிறார்கள். மேலுனம், அவ்வளவு தூரத்திலிருந்து இலக்கைத் தாக்குவது அவர்களுக்கு இயலாத ஒன்று” என்று கூறியபடி சித்திகனைப் பார்த்தான். அவன் சம்மதமாகத் தலையசைத்தான்.
“அந்த வில் வித்தைக்காரனின் துல்லியம் பார்பதி போரைக் நினைவூட்டியது.
சிசுபாலன் உயிருடன் இருந்திருந்தால், பார்பதியில் நாம் தோற்றதற்குக் காரணம் எதிரியின் மேலான வில் திறமையே என்று அவனே சொல்லியிருப்பான். நம் படை தூரத்திலிருந்து விடப்பட்ட அம்புகளின் புயலால் சிதைந்தது. அத்தகைய தாக்குதலுக்குத் தயாராக இல்லை. கட்டுப்பாட்டை இழந்தோம். எதிரி எங்களுக்குப் புலப்படாத அளவு தூரத்தில் இருந்தபோதும், அம்புகளை எங்கள்மேல் மழைபோல் பொழிந்தான். அந்த அதிர்ச்சியில் நம் வீரர்கள் ஓடினர்; எதிரியை நேரில் பார்க்கும் முன்பே போரில் தோற்றோம்.”
“பகைவரின் பெருமை பேசத்தான் வந்தாயா?” நந்தன் கர்ஜித்தான்.
“மன்னியுங்கள் அரசே! காராணமாகத்தான் அதைச் சொல்ல வேண்டியதாயிற்று. இப்போது இறந்த வீரர்களின் உடல்களை ஆய்வு செய்தேன். பெரும்பாலானவர்கள் அம்புகளால் ஏற்பட்ட காயங்களால் இறந்திருந்தனர்.
பழங்குடியினர் பலவித ஆயுதங்களைப் பயன்படுத்தினாலும், அவர்களுக்கு மிகவும் பிடித்தவை கோடாரியும் ஈட்டியும் மட்டுமே. அவர்காள் வில் வித்தை அறிந்தவர் அல்ல. அதனால் ஒரே முடிவுக்குத் தான் வர முடிகிறது.
நம்மேல் பழிவாங்க விரும்பிய மனிதர்களின் சதியால் நம் வீரர்கள் கொல்லப்பட்டனர்.”
நந்தன் குழம்பினான். காளிபானன் சொல்ல வருவது என்னவென்று அவனுக்கு புரியவில்லை. சித்திகன் அவனுக்கு உதவ முன்வந்தான்.
“பாடலிபுத்திர அரசவையில் சத்யரதனின் தலையைத் துண்டித்ததை நினைவில் கொள்” என்றான். நந்தனுக்கு பார்பதியில் மகதம் சந்தித்த அவமானம் நினைவுக்கு வந்தது.
“ஆனால் அவனது குடும்பத்தார் யாவரும் கொல்லப்பட்டார்கள். சிசுபாலனே அதை செய்தான்” என்று நந்தன் நினைவுகளை இணைத்தபடி கூறினான். “இப்போது இதற்கு என்ன தொடர்பு?” என்று வினவினான்.
விசாரித்தபோது, அந்த குடும்பத்தைச் சேர்ந்த இருவர் தப்பியிருந்தது தெரிய வந்தது. இதைக் கேட்டு நந்தன் அதிர்ச்சியடைந்தான். இதைத் தனக்குத் தெரிவிக்காததற்குக் கோபமடைந்தான். இப்போது, சில ஆண்டுகளுக்கு முன் நடந்த அம்பு தாக்குதல்களாலேயே தன் சகோதரனை இழந்திருக்கலாம் என்று தோன்றியது.
சிசுபாலன், அந்தத் தாக்குதலை வழிநடத்தியதாகவும், குடும்பத்தின் இரண்டு ஆண் உறுப்பினர்கள் தப்பியதாகவும் சித்திகன் தெரிவித்தான்.
ஆட்சிப் பணிகள் காரணமாக அரசன் இதை மறந்திருக்கலாம் என்றும் அவன் சேர்த்தான்.
“என் எதிரிகளை நான் ஒருபோதும் மறந்ததில்லை, உங்களுக்கும் அது தெரியும்,” என்று நந்தன் கர்ஜித்தான்.
“நான் அறியாமல் இன்னும் யாராவது உயிருடன் உள்ள துரோகி இருப்பின் சொல்லுங்கள். கடைசிநேர அதிர்ச்சிகளை சமாளிக்க விரும்பவில்லை. முதலில் அவனை நான் கேட்கட்டும்.”
அவன் காளிபானனை நோக்கி சைகை செய்தான்.
“அரசே, அந்த அம்பு பார்பதியின் விஜயனுடையது தான் அத்தகைய துல்லியத்துடன் அம்பை எய்யக்கூடியவன் அவன் ஒருவனே” என்று உறுதியாகச் சொன்னான்.
“எப்படித் துணிந்தார்கள்!” என்று நந்தன் கொதித்தான்.
“என்னால் என்ன செய்ய முடியும் என்று தெரிந்தே, அவன் தந்தையை நான் எப்படி கொன்றேன் என்று தெரிந்தேஇப்படி செய்கிறார்களா?
அவர்காள் இருவரும் இதேபோல் கொல்லப்படுவார்கள். இந்த முறை, நான் நேரடியாகச் செல்கிறேன்” நந்தனின் முகம் கோபத்தில் தீப்பற்றியது.
சுமார் ஆறு மாதங்கள் எந்தை பரபரப்பும் இல்லாமல் சென்றது. புருஷொத்தமனின் படை இப்போது பெருகி இருந்தது. அவர்கள் செனாப் நதியின் கரையில் இருந்த குடிகளின் உதவியோடு அடுத்த படையெடுப்புக்குத் தயாரானார்கள். செனாப் நதியின் அக்கரையில் இருந்த தேசத்தின் ஜெயரதன், இந்த நடவடிக்கைகளைக் கண்டு கவலையுற்றான். கொஞ்சம் கொஞ்சமாக ஜெயரதனின் தேசமும் புருஷோத்தனின் வசமாகிக்கொண்டிருந்தது.
“இப்போது நமது மூதாதையரின் மண்ணில் நிற்கிறோம்” ஆழ்ந்த மூச்செடுத்து மண் வாசனையை நுகர்ந்தவனாகக் கூறினான் புருஷோத்தமன்.
“எப்படியேனும் இதை கைப்பற்ற வேண்டும் என்பதே என் சகோதரனின் கனவு” மேல் நோக்கிப் பார்த்தவாறு பேசினான்.
“ஆம், இந்த மண்ணில் தான் தன்னுயிர் பிரிய வேண்டும் என்பது அவரது ஆசை. எல்லாம் நிராசையாகிப்போயிற்றே?” வெகு நாள் கழித்து விஜயன் வாய் விட்டு அழுதான்.
“நாம் இன்னும் அவர்களுக்குத் தர்ப்பணம் செய்யவில்லை என்பது நினைவிருக்கிறதா? ஜீலம் நதிக்கரையில் தான் அதைச் செய்வேன். அப்போது அழுது கொள்ளலாம். அது வரை கண்ணீரைச் சேமித்து வை.” புருஷோத்தமனின் குரல் கோபமாக ஒலித்தது.
அந்த நாளும் வெகு விரைவில் வந்து சேர்ந்தது. ஒரு நாள் இவர்காள் மைதானத்தில் பயிற்சியில் இருந்த போது மூன்று பக்கமும் படைகளால் சூழப்பட்டனர். நந்த தேசத்தின் படைகளோடு ஜெயரதனும், மத்ஸ்ய தேசத்தின் அரசனும் இணைந்து கொண்டு தக்கினார்கள். புருஷோத்தமனின் படை இப்போது ஆயிரமாகி இருந்தது என்பதை அவர்காள் அறியவில்லை. படையினர் மொத்தமாக ஒரே இடத்தில் இல்லாமல் அவர்களது எல்லை முழுவதும் பரவி இருந்ததை எதிரிகள் அறிந்திருக்கவில்லை.
கடுமையான அந்த யுத்தத்தின் முடிவில் பௌரவ வம்சம் தனது தேசத்தை மீட்டிருந்தது. நந்தன் பலத்த காயங்களுடன் போரிட முடியமல் திரும்பி விட்டான். மகதத்தின் படை சரியான தலைமை இல்லாமல் சரிந்தது. ஜெயரதன் தப்பி ஓடி விட்டன், இன்று வரை நாடோடியாகத் திரிகிறான்.
“அன்றில் இருந்து புருஷோத்தமன் அசைக்க முடியாத அசுர சக்தியாகத் திகழ்கிறான்.” அம்பி சொல்லி முடிக்க, அலெக்ஸாண்டர் தனக்கு இணையான ஒரு எதிரியைச் சந்திக்க ஆர்வத்துடன் காத்திருக்கலானான். போருக்கான ஆயத்தங்கள் ஆரம்பம் ஆயின.
“ இது போருக்குச் சரியான காலமல்ல” என்ற அம்பியை கிரேக்க மன்னன் சந்தேகமாகப் பார்த்தான்.
“உனது நோக்கம் தான் என்ன? வேண்டும் என்றே காலம் தாழ்த்துகிறாயா? நீ புருஷோத்தமனைப் புகழும் போதே எனக்குப் புரிந்திருக்க வேண்டும். என் முதுகில் குத்த வேண்டும் என்று நினைத்தால் விளைவுகள் மோசமாக இருக்கும். ஜாக்கிரதை” என்று கர்ஜனை செய்தான்.
“நிச்சயமாக அத்தகைய துணிவு என்னிடம் இல்லை அரசே. நதியைக் கடப்பதற்கான படகுகள் போதிய எண்ணிக்கையில் இல்லை. அதனால் தான் இந்தத் தாமதம்” என்றான் பணிவாக.
அலெக்ஸாண்டருக்குள் விழுந்த சந்தேகம் வளர ஆரம்பித்தது.

Author: SudhaSri
Article Title: அத்தியாயம் - 22
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.