பகலிரவு பல கனவு – 28
“எல்லாம் இந்த அவசரக் கல்யாணத்தால வந்தது…”
சம்யுக்தாவின் காதுகளில் அந்த வரி
மீண்டும் மீண்டும் ஒலித்தது. பிறந்தது முதல் அவள் அனுபவித்திராத வேதனைகளை திருமணம் செய்து ஒரே மாதத்தில் அனுபவித்திருந்தாள். இத்தனைக்கும் பிரபாகரன் மற்றவரைப் போலல்லாமல் காதலிக்கும் போதே எவ்வித முகமூடியும் இல்லாமல் தனது உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறான். அவனுக்குக் கோபம் வந்தால் என்ன நடக்கும் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும். அப்போதெல்லாம் இவளும் அதற்கு சரியான எதிர்வினையாற்றி இருக்கிறாள்.
இப்போது, அவனது மனைவியான பின்னர் இந்த வார்த்தைகளை அவளால் ஜீரணிக்க இயலாது போயிற்று. பதில் சொல்ல வார்த்தைகள் வரவில்லை. அவன் போன திசையைப் பார்த்தபடி அசையாமல் நின்றாள்.
‘நான்கு வருட காதல் விளைவித்த கனவுகள் தான் எத்தனை. அத்தனையும் பகல்கனவாக மாறிக்கொண்டிருக்கும் காரணம் என்னவாக இருக்கும். திருமணம் ஆனதும் காதல் காணாமல் போய்விடுமா?’ இப்படி அடுக்கடுக்காய் பல கேள்விகள். இதுவரை இல்லாத பழக்கமாக அவளது கண்கள் நீரைப் பொழிந்தன.
கோபத்துடன் வார்த்தைகளைக் கொட்டிவிட்டு வெளியே சென்ற பிரபாகரன் போன வேகத்தில் திரும்பி அறைக்குள் வந்தான். உபயம், வெளியே கொட்டிக்கொண்டிருந்த மழை. சில நொடிகளில் அவனை முழுமையாக நனைந்திருந்தது. முகத்தில் வழியும் நீரை துடைத்துக் கொண்டே உள்ளே வந்தவன் சம்யுக்தாவின் முகத்தைப் பார்த்துத் திடுக்கிட்டான். சற்று முன் அவன் பேசிய வார்த்தைகள் எதுவும் அவனது ஞாபகத்தில் இல்லை.
“ஹேய்.. சம்யூ! என்ன ஆச்சு? எதுக்கு அழற?” என்று பதறி அவளருகில் வந்தான். சம்யுக்தாவோ கேள்விகளின் உலகத்தில் இருந்தாள்.
அவளை அழைத்துச் சென்று கட்டிலில் அமர வைத்தான். அவளது கன்னத்தில் தட்டி அவளை நிகழ்வுக்குக் கொண்டு வர முயற்சி செய்தான். பலன் தான் இல்லை. எங்கோ வெறித்தபடி எதையோ முணுமுணுத்தபடி இருந்தாள்.
‘என்ன நடந்திருச்சுன்னு இப்படி இருக்கா?’ என்று யோசித்துப் பார்த்த பிரபாகரன் தலையில் அடித்துக் கொண்டான்.
“ஓ. மை. காட்.. இப்படியா உளறி வைப்ப பிரபா! கோபம் வந்தால் உனக்கு புத்தி புல்மேயப் போயிடுது” என்று சத்தமாகப் புலம்பியவன் மனைவியைச் சமாதானம் செய்ய மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தையும் அவள் கண்டுகொள்ளவே இல்லை. பழக்கமில்லாத வேலையில் ஏற்பட்ட உடல் சோர்வுடன் மனதின் சோர்வும் இணைந்து கொள்ள அப்படியே உறங்கிப் போனாள் சம்யுக்தா.
இனிமையாக முடிந்திருக்க வேண்டிய இரவு, ஒரு பெருமூச்சுடன் விடிய விடிய உறங்காமல் விழித்திருந்தான் பிரபாகரன்.
வழக்கம் போல ஆறு மணிக்குக் கண்விழித்த சம்யுக்தா முந்தைய நாள் நடந்ததை ஒரு ஓரமாக வைத்துவிட்டு கல்லூரிக்குக் கிளம்ப ஆயத்தமானாள். சிவந்த கண்களுடன் நாற்காலியில் அமர்ந்திருந்த பிரபாகரனை அவள் கண்டுகொள்ளவே இல்லை. அரைமணி நேரத்தில் கிளம்பி வந்தவள் அவனருகில் வந்து நின்றாள்.
“காலங்காத்தால சண்டை போட நான் ரெடியா இல்லை. இன்னைக்கு முக்கியமான கிளாஸ் இருக்கு. பஸ் ஸ்டாண்டில டிராப் பண்ணுவீங்களா? இல்ல.. இப்படியே உட்கார்ந்திருக்கப் போறீங்களா?”
“சம்யூ! நான்.. ” என்று சமாதானம் செய்ய வந்தவன் அவள் பார்த்த பார்வையில் தள்ளி நின்றான்.
“டூ மினிட்ஸ் சம்யூ. பல் விளக்கிட்டு வந்துடறேன்” என்று வேகமாக ஓடினான்.
வழக்கமான சீண்டல்கள் எதுவும் இல்லாமல் பைக் பயணம் முழுவதும் அமைதியாக கழிந்தது.
“இப்போ ஒழுங்கா ரோட்டைப் பார்த்து வண்டி ஓட்டலேன்னா நான் அப்படியே குதிச்சிடவா?” அவன் பேச வேண்டும் என்று வாய் திறந்த போதே அவள் இப்படிக் கேட்டு வைக்க அதன் பிறகு அவனது கவனம் முழுவதும் ரோட்டில் தான்.
அவளது பஸ் அருகில் புல்லட்டை நிறுத்த அவள் எதுவும் பேசாமல் பஸ்ஸில் ஏறி ஜன்னலோர சீட்டில் அமர்ந்து கொண்டாள். அவனது பார்வை அவளைக் கெஞ்சலாகப் பார்த்தது.
“சாயங்காலம் சண்டை போட அப்பாயின்ட்மெனன்ட் ஃபிக்ஸ் பண்ணி வைங்க. பாயிண்ட்ஸ் எல்லாம் நல்லா ரெடி பண்ணிக்கோங்க, ஓகே” என்று டாட்டா காட்டியவளை எப்படி சமாளிப்பது என்று அப்போதிருந்தே யோசிக்க ஆரம்பித்தான் பிரபாகரன்.
அந்த யோசனைக்குத் தடை போட்டது கதிரேசனிடம் இருந்து வந்த அழைப்பில் தோட்டம் நோக்கி வண்டியை செலுத்தினான்.
ஈரமான மண்வாசனை தோட்டம் முழுவதும் பரவி இருந்தது. பன்னீர் திராட்சை கொத்துகள் கம்பிகளில் தொங்கிக் கொண்டிருந்தன. கதிரேசன் ஒரு திராட்சை கொத்தை கையில் எடுத்து பார்த்துக் கொண்டிருந்தார். அவரது கையில் ஒரு சிறிய கருவி.
“இப்போ தான் சரியான நேரம் பிரபாகரன். சர்க்கரை அளவு 22–24 Brix வந்திருக்கு. இந்த நிலைதான் wineக்கு சரியானது.”
“அதை எப்படி தெரிஞ்சுக்கறது சார்?”
“Refractometer. இனிமே நம்ம தொழில் கணக்கோடு, அறிவியலோடு போகும்.”
பிரபாகரன் திராட்சை கொத்தை கையில் வாங்கிப் பார்த்தான்.
“சார்… இந்தக் கொத்தையெல்லாம் juiceஆ தான் பார்த்துட்டு இருந்தேன். இப்போ futureஆ தெரியுது.”
கதிரேசன் சிரித்தார். “நீ பக்கா entrepreneur ஆகிட்ட man”
பன்னீர் திராட்சை கொத்துகள் வெட்டப்பட்டு, திராட்சைகள் இயந்திரத்தில் நசுக்கப்பட்டு சாறாக மாறின.
அந்த சாறு stainless steel tank-களில் சேமிக்கப்பட்டது.
“Fermentation ஏழு முதல் பத்து நாள். வெப்பநிலை கட்டுப்பாடு ரொம்ப முக்கியம்,” என்றார் கதிரேசன்.
ஈஸ்ட் சேர்க்கப்பட்டதும் tank-களில் மெதுவாக குமிழ்கள் எழத் தொடங்கின.
அந்த குமிழ்களை பார்த்தபடி பிரபாகரன் அமைதியாக நின்றான்.
License approval கடிதத்தைக் கையில் வைத்துக் கொண்டு வீட்டில் பேசிய போது அப்பத்தா, “என்னது சாராயம் காய்ச்சப் போறியா?” என்று நெஞ்சில் கை வைத்துக் கொண்டார். காமாட்சி வழக்கம் போல மௌனம் சாதிக்க, முருகானந்தம், “உருப்பட்டா சரிதான” என்று ஒதுங்கிக் கொண்டார்.
மலர்விழி, “ஹை.. அண்ணா நீ பிஸினஸ் மேன் ஆகப் போறியா?” என்று குதூகலிக்க சம்யுக்தா அனைத்தையும் வேடிக்கை பார்த்தாளே தவிர வேறெதுவும் பேசவில்லை.
தனிமையில் கேட்ட போது, “ஏற்கனவே ஏகப்பட்ட பிரச்சனை, இப்போ புதுசா பிஸினஸ் ஆரம்பிச்சா நம்ம வீட்டு பிரச்சனையை எப்படி சரி செய்யறது?” என்று ஏகத்துக்கும் கவலைப்பட்டாள்.
“எம்மேல நம்பிக்கை இல்லையா சம்யூ?”
“அச்சோ! நான் அப்படிச் சொல்லல பிரபா. உங்களுக்கு ஏற்கனவே நேரம் பத்தாது. அதான் யோசிச்சேன்.”
“கதிரேசன் சார் இருக்காரு. நம்ம பஸ்ஸ்டாண்ட் கடையில இருந்து இரண்டு பேரை ஃபேக்டரிக்கு அனுப்பி வச்சிட்டு இங்கே வேற ஆள் போட்டா சரியா இருக்கும்” என்று அவன் திட்டத்தை விளக்க சம்யுக்தா சமாதானம் அடைந்தாள்.
அதன் பிறகு ஒரு நல்ல நாளில், “Praba Estates – Premium Grape Winery”க்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
இதோ இன்று தனது முதல் உற்பத்தியைத் தொடங்கி இருக்கிறது.
“வைனரிக்கு இரண்டு டெக்னிக்கல் ஸ்டாஃப் வேணும் பிரபா. ஒரு வெப்சைட் ரெடி பண்ணனும். சோஷியல் மீடியாவ ஹேண்டில் பண்ணனும்.”
“சார்! நம்ம ஊருல எல்லாமே டாஸ்மாக் தானே. எதுக்கு வெப்சைட், மார்கெட்டிங் எல்லாம்?”
“டாஸ்மாக்ல நம்ம சரக்கை வாங்க மாட்டாங்க மேன். நம்ம டார்கெட் எல்லாம் ஸ்டார் ஹோட்டல்ஸ் தான். அதுக்கு இந்த மாதிரி ஜிகினா வேலை எல்லாம் பார்க்கணும்.”
“புரியுது சார். என்ன செய்யறதுன்னனு பார்க்கிறேன்.”
“முதல் பாட்ச் ரெடி ஆன உடனே, ஃபுட் ஃசேஃப்டி டிபார்ட்மெண்ட் கிட்ட இருந்து சர்டிபிகேட் வாங்கணும். ரெடியா இருங்க.”
“ஓகே சார். இப்போ இருக்கிற ஆபீசர் கை சுத்தம். இன்னும் கொஞ்ச நாள் அவரே இருந்துட்டா நல்லா இருக்கும். என் நேரம் தான் எப்படி இருக்குமோ தெரியலை.”
“எல்லாம் நல்லாவே இருக்கும். தைரியமா இருங்க பிரபாகரன்.”
“அப்போ நான் கிளம்பறேன் சார். இன்னும் குளிக்கக் கூட இல்லை. சாப்பாட்டுக்கு என்ன செய்யறதுன்னு வேற யோசிக்கணும்” என்று சிரித்தவனை கேள்வியாகப் பார்த்தார் கதிரேசன். ஆனால் அவனது பர்சனல் என்று வாய் திறந்து எதையும் கேட்கவில்லை.
“உங்க கிட்ட சொல்றதுக்கு என்ன சார். நேத்துல இருந்து நானும் சம்யூவும் தனிக்குடித்தனம் ஆரம்பிச்சிருக்கோம். சம்யூ காலேஜ்ல சாப்பிடுவா. எனக்கு நானே தான் சமைக்கணும். வர்ரேன் சார்” என்றவன் அவரது பதிலை எதிர்பார்க்காமல் கிளம்பிவிட்டான்.
வரும் வழியெங்கும் பசி வயிற்றைக் கிள்ளியதில் மற்ற விஷயங்கள் அனைத்தும் மறந்தே போனது. எத்தனை நாட்கள் ஹோட்டலில் சாப்பிடுவது என்று சலிப்பாக இருந்தது. சம்யுக்தாவை சமையலறையில் நிறுத்திப் பார்த்தவன், தனது சமையல் திறமையை வளர்த்துக் கொள்வது தான் தனக்கு நல்லது என்று முடிவு செய்து அதற்கான முயற்சியில் முழுமூச்சாக இறங்கினான்.
அன்று மாலை வீடு வந்த சம்யுக்தா, பஜ்ஜியுடன் அவளை வரவேற்றவனைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தாள்.
“என்னடா இது? பிரபா வைன்ஸ் ஓனருக்கு வந்த சோதனை?” என்று போலியாகக் கவலைப் பட்டபடி உள்ளே வந்தாள்.
வைனரிக்குப் பெயர் வைத்த நாளில் இருந்தே ஃபோன் செய்யும் போதெல்லாம், “பிரபா வைன்ஸ் ஓனருங்களா?” என்று வடிவேலு மாடுலேஷனில் ஆரம்பிக்கிறாள். ஃபோனில் எதுவும் செய்ய முடியாமல் பல்லைக் கடிப்பவன் இன்று நேரில் கேட்டபோது பொங்கி எழுந்து விட்டான்.
கையில் இருந்த பஜ்ஜி தட்டை மேசை மீது வைத்தவன், “இப்படி நக்கல் பண்ற வாயை என்ன செய்யறேன் பாரு” என்று செய்து காட்டினான்.
சண்டை போட வேண்டும் என்றிருந்த சாயங்காலம் பஜ்ஜி வித் சம்யுக்தாவாக மாறிப் போனது.
“பிரபா! ஒரே நாளில் எப்படி சூப்பர் செஃபா மாறிட்டீங்க?”
“வேற வழி. அம்மா கையால ருசியா சாப்பிட்டு பழகிட்டேன். பொண்டாட்டி சமைப்பான்னு கனவுல கூட நினைக்க முடியாதுன்னு இன்னைக்கு கலைலயே தெரிஞ்சு போச்சு. அதான், என் கையே எனக்கு உதவின்னு இறங்கிட்டேன்” என்று சிரித்தவன் அவளிடம் இருந்து இரண்டு அடிகளைப் பெற்றுக் கொண்டான்.
“ஓ.. அப்ப சரி. நைட்டுக்கு சப்பாத்தியும் ஆலு கோபியும் செஞ்சிடுங்க. எட்டு மணிக்கு எனக்கு டின்னர் வேணும்.”
“அடிப்பாவி! இதெல்லாம் அநியாயம்” என்றாலும் அவள் கேட்டதைச் செய்து கொடுத்து அதற்கான பரிசையும் பெற்றான்.
“பிரபா! சப்பாத்தி சூப்பர். சப்ஜியும் சூப்பர்” என்று தனது விரல்களை ருசித்தவளை இமைக்காது பார்த்தவன் எப்போது அந்த வேலையைத் தனதாக்கிக் கொண்டான் என்று இருவரும் அறியார்.
“ஆமா சம்யூ. சூப்பரா இருக்கு” பிரபாகரனின் குரல் அவளைக் கிறங்க வைத்தது. அவளது கிறக்கம் கண்களில் அப்பட்டமாகத் தெரிந்தது. அதைக் கண்ட பிரபாகனுக்குள் இருந்த கணவன் விழித்துக் கொண்டான். இருவரும் ஒரு புது உலகத்தில் சஞ்சரிக்க ஆரம்பித்தனர்.
நாட்கள் அதன் போக்கில் நகர ஒரு நாள் சம்யுக்தா வீடு வந்து சேர்ந்த போது அப்பத்தா அவளை அழைத்தார். தயக்கத்துடன் அருகில் சென்றவளுக்கு அவரது பேச்சு அழுகையை வரவழைத்தது.
“அம்மாடி சம்யூ! இங்க வா ஆத்தா. நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு. எம்பேரன் கிட்ட சொன்னா கோவப்படுவான். அதான் உன்கிட்ட சொல்றேன். வீட்டுக்கு மூத்தவளா இதைச் சொல்லியே ஆகணும். என்னைத் தப்பா எடுத்துக்காத”
“சொல்லுங்க ஆச்சி. பெரியவங்க சொன்னா அதுல ஒரு அர்த்தம் இருக்கும்னு எனக்குத் தெரியும்.”
“நாளைக்கு ஆடி பொறக்குது..” என்று ஆரம்பித்தவர் மேலே பேசத் தயங்கினார். அதனால் என்ன என்று யோசத்தவளுக்கு எதுவும் புரியவில்லை. அவள் வளர்ந்த அறிவியல் சூழ்நிலையில் ஆடி, ஆவணியெல்லாம் அவள் அறிந்திருக்கவில்லை. ஆனால் திருமணத்தைத் தொடர்ந்து பிறந்த வீட்டில் செய்யும் சீர் வரிசைகள் பற்றி அவள் அறிவாள். அந்த வகையில் ஆடிக்குத் தாய் வீட்டு சீதனம் கிடைக்காது என்ற நினைப்பு வந்ததும் அவளது முகம் வாடியது.
“ஹும். இப்போ சொல்லி என்ன ஆகப் போகுது. புருஷன் மட்டும் போதும்னு பொறந்த வீடு புகுந்த வீடு இரண்டையும் ஒதுக்கி வச்சிட்டு கண்ணீர் விட்டா ஆச்சா?” உள்ளே இருந்து காமாட்சியின் குரல் குத்தலாக வந்தது. சம்யுக்தா தான் இரண்டு வீட்டையும் ஒதுக்கி வைத்தாள் என்பது போன்ற அவரது பேச்சில் சம்யுக்தாவிற்கு அழுகை வந்தது.
“இவ ஒருத்தி, பேச ஆரம்பிச்சா எப்படி நிறுத்தணும்னே தெரியாது. நீ அதைக் கண்டுக்காத புள்ள. நான் சொல்ல வர்றது உனக்குப் புரியுது தான. ஆடி மாசம் முழுசும் நீங்க இரண்டு பேரும் சேராம இருக்கணும்.”
அப்போதும் சம்யுக்தா புரிந்து கொள்ளவில்லை. “அதான் நாங்க வேண்டாம்னு துரத்தியாச்சுல்ல. ஆடி, ஆவணி எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம். நீங்க அக்கறைப்படவேண்டாம்” என்று அங்கே ஆஜரானான் பிரபாகரன்.
“நீ நம்ம வீட்டுக்குப் போ சம்யூ. கீழ் வீட்டுக்காரங்க கிட்ட நான் பேசிட்டு வரேன்” என்றவனின் பார்வையில் சம்யுக்தா அங்கிருந்து நகர்ந்தாள்.
அப்பத்தா சொன்னதை நினைத்தபடி மாடியேறியவளுக்கு விஷயம் விளங்கியது. ஆடியில் கருத்தரித்தால் சித்திரை வெயிலில் குழந்தை பிறக்கும். தாய் சேய் இருவருக்கும் சிரமம் என்பதால் வந்த சம்பிரதாயம் அது என்று கேள்விப்பட்டு இருக்கிறாள்.
ஏசி என்பது அத்தியாவசியமாகிப் போன காலத்தில் இந்த சம்பிரதாயம் அர்த்தம் இல்லாதது என்று தோன்றியது.
அதையே பிரபாகரன் அப்பத்தாவிடம் சொல்லிவிட்டு வந்தான்.
“இங்க பாரு அப்பத்தா, உன் மருமக சொல்ற மாதிரி எங்களுக்கு எதுவும் முறையா நடக்கல. இத மட்டும் எதுக்கு சொல்ற?”
“அடேய்! அதெப்படி? இந்த வீட்டு வாரிசு எப்படியோ போகட்டும்னு விட முடியாது..”
“ஓ.. உங்க வீட்டு வாரிசுன்னு வந்த அக்கறையா? ஆனால் எம்புள்ள ஏசில பொறக்கும். வெயில் பத்தி கவலைப் பட வேண்டாம்.”
“டேய்! சித்திரைக்கு அப்பன் தெருவிலேன்னு சொல்லுவாங்க. உன் நல்லதுக்கு தான் சொல்றேன். அவ எங்கேயும் போக முடியாது. அதனால், நீ ஒரு மாசம் கடையில படு” என்று அப்பத்தா சொன்ன தீர்ப்பில் பிரபாகரனின் கோபம் கட்டுக்கடங்காமல் போனது.
ஒற்றை விரலால் ஜாக்கிரதை என்று செய்கை செய்தவன் வேகமாக மாடியேறிச் சென்று விட்டான். அவர்கள் சொன்ன விஷயத்தைத் தவறு என்று நிரூபிக்க வேண்டும் என்று வெறியானான்.
சம்யுக்தாவின் படிப்பு முடிய வேண்டும் என்று போட்ட சபதம் எல்லாம் காற்றோடு போக ஆவணி மாத ஆரம்பத்தில் ஒரு நாள் சம்யுக்தா கல்லூரியில் மயங்கி விழுந்தாள்.

Author: SudhaSri
Article Title: அத்தியாயம் -28
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.