பகலிரவு பல கனவு - 31
அந்த இரவு முழுவதும் சம்யுக்தா தூக்கம் வராமல் தவித்தாள்.
அடிக்கடி மொபைலை எடுத்துப் பார்த்தாள். எந்த பதிலும் இல்லை.
வேலைக்குச் செல்லும் தாய், அதுவும் எந்த நேரத்திலும் அழைப்பு வரக்கூடிய வேலை. வார இறுதியிலும் விடுமுறை நாட்களிலும் வீட்டுக்கு வந்து செல்லும் தந்தை. ஏதாவது தேவைப்பட்டால் கூட அப்பாயின்ட்மென்ட் வாங்கித் தான் பேச வேண்டும். வேலையாட்கள் தான் அவளுக்கும் அவளுடைய அண்ணனுக்கும் துணை.
சிறுவயதில் பெற்றோரின் கவனத்தை ஈர்க்க பென்சில் சீவுகிறேன் என்று கையைச் சீவிக் கொண்டதில் ஆரம்பித்து மரத்தில் இருந்து கீழே விழுந்து காலை உடைத்துக் கொள்வது என சில பல தகிடுதத்தங்களைச் செய்திருக்கிறாள். ஆனால் பலன் தான் பூஜ்யம். அதன் பிறகு நடக்காத ஒன்றிற்காக தன்னை சேதப்படுத்துவது கூடாது என்ற ஞானோதயம் வந்து விட்டது. வருவது வரட்டும் என்று னஅப்படியே ஏற்றுக்கொள்ளப் பழகி விட்டாள்.
இந்தப் பழக்கம் தான் திருமணத்திற்குப் பிறகு நடந்த நிகழ்வுகளையும் இது தான் நமக்கு விதிக்கப் பட்டது என்று நினைக்கும்படி
செய்துவிட்டது. ஆனாலும், அவளது மனதின் ஒரு ஓரத்தில் பெற்றோரின் பாசத்திற்கான ஏக்கம் அவ்வப்போது எட்டிப் பார்த்தது. எதிர்முனையில் பதிலில்லை என்று தெரிந்தும் வேதாளம் போல விடாமல் மொபைலில் அழைப்பு விடுத்துக் கொண்டு தான் இருந்தாள்.
இப்போது, கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் அவளை மேலும் பலவீனமாக்கிக் கொண்டிருந்தது. உள்ளூரில் தானே இருக்கிறார்கள், எப்போது வேண்டுமானாலும் போகலாம் என்ற நினைப்பை பொய்யாக்கிவிட்ட பெற்றோரை நினைத்து அழுகை வந்தது. மயக்க நிலைக்குச் சென்றவளது ஏக்கங்கள் புலம்பல்களாக வெளிப்பட அந்தச் சத்தத்தில் பிரபாகரன் பதறி எழுந்தான்.
“அம்மா! ப்ளீஸ்… என் கூட பேசுங்கம்மா… ஒரு வார்த்தையாவது சொல்லுங்க… நான் அவ்வளவு பெரிய தப்பா செய்துட்டேன்? ஊரை விட்டு போற அளவுக்கு என்மேல கோபமா?”
அவள் குரல் மெதுவாகத் துவங்கி, அடுத்த நொடியே நடுங்கத் தொடங்கியது.
“நீங்க அம்மா கிட்ட சொல்லுங்க டாடி. நீங்க சொன்னா கேப்பாங்க. அண்ணா! நீ அங்கிள் ஆகிட்ட தெரியுமா? என் கூட பேசாமல் எப்படி இருக்கப் போறேன்னு பார்க்கறேன்…நீயும் என்னை இவ்வளவு ஈஸியா மறந்துட்டியா…?” இப்படி அவளது புலம்பல்கள் நீண்டது.
பிரபாகரனுக்கு ஒன்றும் புரியவில்லை. இரவு படுக்கும் போது நன்றாகத் தான் இருந்தாள். இன்னும் சொல்லப்போனால், “ஊரை விட்டு போனால் நான் அவங்க பொண்ணு இல்லேன்னு ஆகிடுமா? என்னை என்னன்னு நினைச்சாங்க.
அவங்களுக்கு நான் வேண்டாம்னா எனக்கும் அவங்க வேண்டாம்” என்று பஞ்ச் டயலாக் எல்லாம் பேசிவிட்டுப் படுத்தாள். இப்போது ஏன் இந்தப் புலம்பல்?
எழுந்து லைட் ஆன் செய்து அவளை நன்றாகப் பார்த்தான். முகம் சிவந்திருந்தது. கன்னத்தில் கண்ணீர் கோடுகள். அவளது கை மொபைலை இறுகப் பிடித்திருந்தது. கஷ்டப்பட்டு மெதுவாக அதை அவளது விரல்களில் இருந்து எடுத்தான்.
தாய், தந்தை, அண்ணன் என அனைவருக்கும் கணக்கில்லாமல் அழைத்திருந்தாள். வாட்ஸ்அப்பிலும் பல அழைப்புகள். கூடவே மெசேஜ் வேறு, “அம்மா… நான் உங்களை மிஸ் பண்ணறேன்.” அதனருகே ஒரே சாம்பல் நிற டிக்.
பிரபாகரன் கண்களை மூடித் திறந்தான். ஒரு நொடி அவனுக்குள் குற்ற உணர்வு எழுந்தது. இந்த நிலைக்கு காரணம் நான்தானோ…?
அவன் எதுவும் சொல்லாமல் அவளருகே அமர்ந்து முகத்தை வருடினான். அப்போது தான் அவளது மயக்க நிலையை உணர்ந்தான்.
“இவள… “ என்று பல்லைக் கடித்தாலும் மாமனார் மாமியார் மீது கண்மண் தெரியாமல் கோபம் வந்தது. ‘இவங்க லவ் மேரேஜ் பண்ணுனா தப்பில்லையாம். அதையே அவங்க பெத்த பொண்ணு பண்ணினா கோபம் வருமாம். எந்த ஊரு நியாயம் இது?’ என்று மனதுக்குள் போட்டு வறுத்தான்.
ரொம்ப நாளாகவே அவர்களிடம் கேட்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறான். இதுநாள் வரை சம்யுக்தாவை நினைத்து வாயைத் திறக்காமல் இருந்தான். இப்போது நேரில் சந்தித்தால் நிச்சயம் கேட்டு விடுவான். அதைச் செய்ய முடியாததால் வாட்ஸ்அப்பில் ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி வைத்தான். அவர்கள் கேட்கிறார்களோ இல்லையோ, இவனது கோபத்தை வெளிப்படுத்தி விட்டான்.
“முப்பது வருஷத்துக்கு முன்னாடியே சொந்தம் யாரும் வேண்டாம்னு சொந்த ஊரை விட்டு போய் கல்யாணம் பண்ணி இருக்கீங்க. (அந்தக் கால பாஷைல சொல்லணும்னா ஓடிப்போய் கல்யாணம் பண்ணி இருக்கீங்க என்று மனதுக்குள் கவுன்டர் கொடுத்தான்) வழக்கமா நடக்கிற மாதிரி உங்க பையன் பிறந்ததும் உங்க வீட்ல சேர்த்துக்கிட்டாங்க. நீங்களும் கெத்தா ஊருக்கு வந்து சேர்ந்துட்டீங்க. இப்போ காலம் மாறிப்போச்சு. லவ் மேரேஜ் எல்லாம் பெத்தவங்களே ஜாம் ஜாம்னு செஞ்சு வைக்கிறாங்க. நீங்களும் கற்காலத்தில இருந்து கொஞ்சம் வெளியே வாங்க.”
அனுப்பி வைத்த பிறகு தான் இன்னும் ஒரு விஷயம் ஞாபகம் வந்தது. அங்கேயும் கண்ணனின் உறவு தான் சேர்ந்து கொண்டது. பாரதியின் உறவுகள் இன்னும் தள்ளியே நிற்கின்றன.
“அவங்களுக்கும் ஒரு பக்க சொந்தம் மட்டும் தான் இருந்தது. அதே போல அவங்க பெத்த பொண்ணுக்கும் அதுவே போதும்னு நினைச்சிட்டாங்க போல. இங்கே, இந்த வீட்டுல நடக்கிறது தெரிஞ்சா என்ன செய்வாங்க?” என்று சத்தமாக யோசித்தான். இத்தனைக்கும் இடையே மனைவியின் மயக்கத்தைத் தெளிய வைக்கும் முயற்சியில் இருந்தான். குளிர்ந்த நீரால் முகத்தைத் துடைத்தான்.
“சம்யூ! இங்க பாரு! முழிச்சுக்கோ! அர்த்த ராத்திரியில இப்படி மயங்கி வச்சா நான் என்ன செய்வேன்? ஏய் நீதான் டாக்டர், நான் இல்லை. தயவு செஞ்சு எழுந்திரு” அவனது விடாமுயற்சிக்குப் பலன் இருந்தது. ஒரு வழியாகக் கண் விழித்த சம்யுக்தா அவனை வித்தியாசமாகப் பார்த்து வைத்தாள்.
“ஹலோ டாக்டர் மேடம்! உங்க பார்வையே சரியில்லை. யாருடா நீன்னு கேட்கப் போறியா? நல்லாப் பாருங்க மேடம். நான் தான் உங்க அப்பாவி புருஷன்.”
“ஷ்ஷ், பிரபா! ஏன் இப்படி பேசறீங்க? எனக்கு என்ன ஆச்சு?”
“அப்பாடி! நல்ல வேளை நான் தப்பிச்சேன். சினிமால எல்லாம் வருமே, அது மாதிரி மயக்கத்தில இருந்து முழிக்கும் போது நான் எங்கே இருக்கேன்? நீங்க யாருன்னு கேட்டுடுவியோன்னு பயந்தே போயிட்டேன்.”
“மயக்கமா? இல்லையே, தூக்கம் வரல, அம்மா ஞாபகமா இருந்தது. அதான், அம்மாவுக்கு ஃபோன் பண்ணினேன். அவங்க…” பேச ஆரம்பிக்கும் போதே அவளுக்கு சற்று முன் நடந்தது ஞாபகம் வந்து விட்டது.
“ஹான்.. சொல்லுங்க மேடம். அம்மாக்கு ஃபோன் பண்ணீங்க, அப்புறம்?”
“அப்புறம் நான்.. நான்.. “
“ம்.. மேல நான் சொல்லவா? அம்மா ஃபோன் எடுக்கல. நீங்க அழுதழுது மயங்கிட்டீங்க. அப்படித்தானே! சம்யூ! ஒரு விஷயம் நல்லா மண்டைல ஏத்திக்கோ. நீ ஃபோன் பண்ணது தப்பில்லை, ஆனால் அவங்க ரெஸ்பான்ட் பண்ணலேன்னா நாளைக்கு ட்ரை பண்ணலாம்னு விடணும். இதைத் தான கல்யாணம் ஆன நாளில் இருந்து செஞ்சிட்டு இருக்க? இத்தனை நாள் பேசாதவங்க இன்னைக்கு மட்டும் புதுசா பேசிடுவாங்கன்னு எப்படி எதிர்பார்க்கிற? இங்கே ஏற்கனவே நமக்கு நாமே திட்டம் அமலுக்கு வந்தாச்சு. எல்லா பக்கமும் கேட்ட போட்டுட்டாங்க. எங்கேயும் போக முடியாது, புரிஞ்சிக்கோ. இப்போ நீ ப்ரெக்னன்டா இருக்க, எனக்கு கண்ணைக் கட்டி காட்டில விட்டது மாதிரி இருக்கு. எப்படி சமாளிக்கப் போறோம்னு தெரியல. கீழ் வீட்டில உள்ளவர்களுக்கு சீக்கிரமே விஷயம் தெரிஞ்சிடும். என்ன செய்ய காத்திருக்காங்களோ தெரியல. இதுல நீ புதுசா எதையும் இழுத்து விடாத ப்ளீஸ்.”
மூச்சு விடாமல் நீளமாகப் பேசியவன் அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை நொடியில் காலி செய்தான். தனது பேச்சுக்கு அவளிடம் என்ன ரியாக்ஷன் வரப் போகிறது என்று பார்த்துக் கொண்டு இருந்தான்.
சற்று நேரம் தலைகுனிந்து அமர்ந்திருந்த சம்யுக்தா, “பிரபா! எனக்கு ரொம்பப் பசிக்குது. சீக்கிரம் ஏதாவது செஞ்சு தாங்க” என்றாள்.
“அடிப்பாவி!” என்று நெஞ்சில் கை வைத்துக் கொண்டான் பிரபாகரன்.
“ம்ச். என்ன உட்கார்ந்திருக்கீங்க? சீக்கிரம் போங்க..”
“போறேன்.. போறேன்.. வேற வழி. முருகா! என்னை இப்படி முழு நேர சமையல்காரனா மாத்திட்டியே! இது நியாயமா?” புலம்பிக் கொண்டே சமையல் அறைக்குள் சென்று என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தான்.
யூடியூப் பார்த்துக் கஞ்சி செய்ய முயன்றான்.
“ஒரு கப் ரைஸ்… மூன்று கப் வாட்டர்…”
“பிரபா!” சம்யுக்தா கதவிலிருந்து சிரித்தாள்.
“ஹும்?”
“கொஞ்சம் உரைப்பு தூக்கலா வேணும். உப்பை சரியா போடுங்க.”
“சரிங்க மேடம். நீங்க போய் உட்காருங்க. நான் கஞ்சியோட வரேன்.”
கதவில் சாய்ந்து நின்று கொண்ட சம்யுக்தா அமைதியாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். முகத்தில் இன்னும் சோர்வு இருந்தாலும், கண்களில் ஒரு மெல்லிய புன்னகை தோன்றியது.
“ஏன் அப்படி பார்க்கற?” என்று திரும்பி கேட்டான் பிரபாகரன்.
“ஒன்னுமில்லை…” என்று மெதுவாகச் சொன்னாள் அவள்.
“நீங்க இப்படி கிச்சன்ல நிக்கறது எனக்கு ரொம்ப புதுசா இருக்கு.”
“அப்படியா?” என்று சிரித்தான் அவன்.
“இப்போ அப்படித்தான் இருக்கும். போகப் போக பழகிடும்.. உன் விதி, வேற வழியே இல்லை. இனிமேல் என் சமையல் தான் உனக்கு.”
“ஏதாவது குக்கிங் கோர்ஸ் போறீங்களா? ஈஸியா இருக்கும்.”
“அடிங்க.. என்னை என்னன்னு நினைச்ச?”
“எனக்கு வாய்ச்ச அடிமைன்னு தான்” அவளும் சிரித்தாள். சற்று நேரத்தில் சம்யுக்தாவின் முகத்தில் இருந்த சிரிப்பு மெதுவாக மங்கியது.
“பிரபா…” என்று மெதுவாக அழைத்தாள்.
“ஹும்?” என்று கஞ்சி கிளறிக் கொண்டே பதிலளித்தான்.
“எனக்கே சில நேரம் புரியல பிரபா… அவங்க மேல கோபம் வருது… ஆனா அதே நேரம் அவர்களோட குரல் கேட்கணும்னு தோணுது.”
பிரபாகரன் அடுப்பின் தீயை சற்று குறைத்து அவளருகே வந்தான்.
“அது நார்மல் தான் சம்யூ.”
“நார்மலா?”
“ஆமாம். எப்பவுமே நமக்கு ரொம்ப வேண்டியவங்க தான் நம்மளை ரொம்ப காயப்படுத்தவும் செய்வாங்க. அதுக்கெல்லாம் அலட்டிக்கக் கூடாது. நாம வேணும்னு நினைச்சா தானா வருவாங்க. அது வரைக்கும் ஏதோ என்னை வச்சு சமாளிச்சிக்கோ.”
அவன் என்னவோ விளையாட்டாகத் தான் சொன்னான். ஆனால் அந்த ஒரு வரி சம்யுக்தாவின் கண்களில் மீண்டும் கண்ணீரை வரவழைத்தது.
“ஏய்… மறுபடியும் அழ ஆரம்பிக்காத,” என்று அவசரமாகச் சொன்னான்.
“இல்ல… இது அந்த மாதிரி இல்ல,” என்று சிரிக்க முயன்றாள் அவள்.
அதே நேரத்தில் அடுப்பிலிருந்த கருகிய கஞ்சியின் வாசனை சமையலறை முழுவதும் பரவியது.
“அய்யய்யோ!” என்று அவசரமாக ஓடினான் பிரபாகரன்.
கருகிய கஞ்சியை ஓரங்கட்டி வைத்துவிட்டு சம்யுக்தாவின் பசிக்கு ஆப்பிள் ஜுஸ் போட்டுக் கொடுத்தான்.
அவளைப் படுக்க வைத்து ஏதேதோ பேசித் தூங்க வைத்தவனுக்கு அதன் பிறகு தூக்கம் வரவில்லை.
அவனது மனக்கண்ணில் திருமணம் முதல் நடந்த அனைத்தும் வரிசையாக வந்து போனது. காமாட்சியுடன் ஏற்பட்ட வாக்குவாதம், தனிக்குடித்தனம் வந்தது, அப்பத்தாவின் ஆடி மாத அறிவுரை, வீட்டின் புதிய வரவு, சம்யுக்தாவின் படிப்பு என்று ஆரம்பித்து தங்கை மலர்விழியிடம் வந்து நின்றது.
மலர்விழியின் திருமணம் முடிந்த பிறகு தான் தனது திருமணத்தை நடத்த வேண்டும் என்று நினைத்திருந்தான். ஆனால் விதி வேறு நினைத்துவிட்டது.
மலர்விழியும் இரண்டு வருடங்களாவது வேலை பார்த்த பிறகு தான் திருமணம் என்று சொல்லி விட்டாள். இதோ இன்னும் சில மாதங்களில் அந்த இரண்டு வருடங்கள் முடிந்து விடும். அவளுக்குத் தேவையான தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை அவ்வப்போது வாங்கி சேமித்து வைத்திருந்தான்.
திருமணச் செலவுக்காக ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி வைத்திருந்தான். அது தவிர காமாட்சியின் பெயரில் ஒரு வங்கி கணக்கை ஆரம்பித்து ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்திக்கொண்டு வருகிறான். அதில் பாதி இப்போது வைனரிக்கான ஒரு பங்கு முதலீடாக மாறியிருக்கிறது.
வங்கிக் கடன் போலவே அதையும் கடனாவே பாவித்து வட்டியுடன் மாதந்தோறும் செலுத்தி வருகிறான்.
இது போன்ற பண விஷயம் எதுவுமே அவனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.
வைனரியின் வியாபாரம் இப்போது தான் ஆரம்பித்திருக்கிறது. வருமானம் முழுவதுமே சம்பளம், மிஷின்களின் பராமரிப்பு என்று வைனரியிலேயே
கரைந்து விடுகிறது. ஜுஸ் கடைகளின் வருமானம் ஓரிரு லட்சங்களைத் தொட்டாலும் கடைகளுக்கான செலவுகள் போக கையில் வரும் பணத்தில் தான் குடும்ப செலவுகள். என்ன தான் தனியே இருந்தாலும் கீழ் வீட்டுக்கான செலவுகளை அவன் தான் செய்து வருகிறான். காமாட்சி அதற்கெல்லாம் மறுப்பு சொல்வதில்லை.
“அவன் கடமையைத் தானே செய்யறான். இதுல நான் என்ன சொல்லணும்?” என்று அவன் காதில் கேட்கும் வண்ணம் ஒரு நாள் யாரிடமோ பேசிக்கொண்டு இருந்தார்.
அதே போல மலர்விழியின் திருமணத்திற்கு அவன் செலவழிப்பதை அவர் மறுக்க மாட்டார், ஆனால் அண்ணனாக மாப்பிள்ளை பார்ப்பது முதல் அவளது திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்வதையும் அதில் இவர்கள் கலந்து கொள்வதையும் ஆதரிப்பாரா என்பதை அவரே அறிவார். சகஜமான பேச்சு வார்த்தையே இல்லை எனும் நிலையில் அவனுக்கு மலர்விழியின் திருமணம் குறித்த பயம் வந்துவிட்டது.
அதற்கெல்லாம் அவசியமே இல்லை என்று ஒரு நாள் வந்து புரிய வைத்தாள் மலர்விழி. அவள் செய்த காரியத்தால் பிரபாகரனும் சம்யுக்தாவும் அந்த வீட்டை விட்டு வேறு இடத்திற்குத் குடிபெயர்ந்தனர்.

Author: SudhaSri
Article Title: அத்தியாயம் -31
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.