அத்தியாயம்- 5
இராமநாதபுரம் அரண்மனை விருந்து அறையில் சேதுபதி மன்னர் அமர்ந்து இருந்தார். அன்றைய உணவில் வழக்கத்திற்கு மாறாக பலவித இனிப்புகள் நிறைந்து இருந்ததைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார். யோசித்துப் பார்க்கையில் காரணம் எதுவும் புலப்படவில்லை.
மகாராணியிடமே கேட்டு விடலாம் என்று முடிவு செய்தார். “சேது நாச்சியாரே? இன்றைக்கு என்ன விசேஷம்? இனிப்புகள் நிறைந்து இருக்கின்றனவே?” (திருமலை ரகுநாத சேதுபதி தமது மகாராணியை எப்போதும் மரியாதையாகவே விளித்து வந்துள்ளார் என்று பல ஆதாரங்கள் கூறுகின்றன)
“மறந்துவிட்டீர்களா? நாடாளும் மன்னருக்கு அரண்மனையில் காத்திருக்கும் மனைவியின் நினைவு எங்கே இருக்கப் போகிறது?” என்று அலுத்துக் கொண்டார் சேது நாச்சியார்.
“தங்களை எப்படி மறக்க முடியும் தேவி. இன்று தங்களது ஜன்ம தினம் என்று நன்றாக அறிவேன் நான். இன்று மாலையில் திருப்புல்லாணி ஆதிஜகன்னாதர் கோவிலில் ஆயஷ்ய ஹோமத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். மகாராணியை அழைத்துச் சென்று ஆச்சர்யப்படுத்தலாம் என்று நினைத்திருந்தேன். நாட்டை ஆளும் மன்னனாக இருந்தாலும் எமது அதிகாரத்தை அந்தப்புரத்தில் செலுத்த முடியுமா?” என்று குறும்பாகச் சிரித்தார் சேதுபதி.
“போதும் உங்கள் பரிகாசம். இதோ இந்தப் பலகாரத்தை சாப்பிட்டு பாயசத்தைக் குடித்து விடுங்கள். நமது பரிசாரகர் தனது கை வரிசையை முழுமையாகக் காட்டி இருக்கிறார்.”
“அது சரி. உங்கள் அனைவரின் கைவரிசையையும் சோதனை செய்தால் என் வயிற்றுக்கு என்ன ஆவது?” என்று மன்னர் கூற மகாராணியும் கூடவே சற்றுத் தொலைவில் நின்று கொண்டிருந்த சமையல்காரரும் சேர்ந்து சிரித்தனர்.
சாப்பிட்டு முடித்த மன்னர் எழுந்து கொண்டார். கையில் தண்ணீர் செம்புடன் அவர் பின்னே சென்றார் சமையல்காரர்.
பிறகு மன்னருடன் ராணியாரும் படுக்கை அறைக்குள் சென்றனர். மகாராணியின் கையில் தாம்பூலத் தட்டு இருந்தது. மன்னர் படுக்கையில் அமர்ந்ததும் ராணியார் தாம்பூலத்தை மடித்து நீட்டினார்.
“சேது தாங்கள் இன்னும் சாப்பிடவில்லையே? இன்றும் விரதமா?
ஒரு கிழமையில் பாதி நாட்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக விரதம் இருப்பதைப் பழக்கம் ஆக்கிக் கொண்டிருப்பதாய் அறிகிறேன். இது தேக ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல மகாராணி.” மன்னரின் குரலில் வருத்தம் மிகுந்திருந்தது.
“நான் வேறு என்ன செய்வது மகாராஜா. ஆண்டவன் சன்னிதியில் முறையிடுவதைத் தவிர வேறு வழியில்லையே. மன்னரும் இது விஷயத்தில் எனது பேச்சைச் செவிமடுப்பதில்லை” என்று நலிந்த குரலில் தொனித்த ராணியின் வருத்தம் மன்னரின் மனதைப் பிசைந்தது. ஆனாலும் அவர் மனம் இளகுவதாக இல்லை.
“பந்த பாசத்தைப் பரிமளிக்கச் செய்யும் ஒரு குழந்தைக்காக நான் எதுவும் செய்வேன் மகாராஜா. இதைத் தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பெண்ணாகப் பிறந்தவரின் மிகப்பெரிய வரமே குழந்தை தானே. அது இல்லை என்றால் நாட்டிற்கே மகாராணியாக இருந்தும் என்ன பயன்?” ராணியின் குரல் சற்றே ஓங்கி ஒலித்தது.
“தங்களுக்குக் குறையாத வருத்தம் எமக்கும் உண்டு மகாராணி. தாய் என்ற பதவிக்காக நீங்கள் துடிக்கிறீர்கள். நாட்டின் மன்னனாக எமக்கு ஒரு வாரிசு இல்லையே என்ற விஷயம் நாளுக்கு நாள் என் மனதை அரித்துத் தின்று கொண்டிருக்கிறது. நான் என்ன செய்வேன். இது சேது நாட்டின் சாபம் போலல்லவா தெரிகிறது. மீண்டும் ஒரு வாரிசுச் சண்டை வந்தால் நாடு என்ன ஆகும். இப்போதே காளையார் கோவில் பகுதியில் தம்பித் தேவரது பங்காளிகள் ஏதோ கலகத்தை ஆரம்பித்து இருக்கிறார்கள் என்று செய்தி வந்திருக்கிறது. அந்த ஜெகந்நாதனின் கருணை நம் மீது படற வேண்டும்” என்று ஜெகந்நாதனை நினைத்துக் கைகூப்பி வணங்கினார் சேதுபதி.
“இது விஷயத்தில் தாங்கள் நினைத்தால் ஒரு நல்ல தீர்வு காணமுடியும் மகாராஜா. அஞ்சுகோட்டை பாளையக்காரரின் மகள் பர்வதவர்த்தினி திருமண வயதை எட்டி இருக்கிறாள். மகாராஜா ம் என்று ஒரு வார்த்தை சொன்னால் வருகின்ற முகூர்த்தத்தில் அவளை சேது நாட்டின் ராணியாக்கிவிடலாம்.” மகாராணியின் குரல் உறுதியாக ஒலித்தது. அதில் வருத்தத்தின் சாயல் துளியும் இல்லை.
மன்னருக்கு மனைவியின் இத்தகைய செயல்பாடு மிகுந்த ஆச்சர்யத்தை அளித்தது. அதைத் தனது பார்வையில் வெளிப்படுத்தினார் அவர்.
“தந்தை, தாய், கணவன் மனைவி குழந்தை என்று உறவு முறைகள் எல்லாமே அன்பு செலுத்துவகற்காகவே படைக்கப் பட்டவை. அப்படி இருக்கையில் தங்கை என்று வருபவளை வேற்றாளாக நினைக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார் மகாராணி.
தொடர்ந்து அன்பைப் பற்றி ஒரு சொற்பொழிவு ஆற்றிவிட்டார்.
“போதும்.. போதும்.. மகாராணியார் அந்தப்புரத்தில் ஏகாந்தத்தை அனுபவித்துக் கொண்டு இருப்பார் என்று அனைவரும் நினைத்திருப்பார். ஆனால் இங்கே எமது மகாராணி வேதாந்தம் அல்லவா கற்று வைத்திருக்கிறார்?” என்று புன்னகையுடன் சொன்னார் மன்னர்.
“போதும். தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. நான் வருகிறேன். அமைதியாக உறங்குங்கள்” என்று சொல்லி விட்டு வெளியே சென்று விட்டார் மகாராணி.
படுக்கையில் தூக்கம் வராமல் பல்வேறு சிந்தனைகளால் தவித்துக் கொண்டிருந்தா மன்னர்.
சில காலமாகவே, மன்னருக்கு வாரிசு இல்லை என்ற பேச்சு பரவலாக நாடு முழுவதும் உலவி வருகிறது. அதிலும் குறிப்பாக காளையார் கோவில் பகுதியில் திருமலை ரகுநாத சேதுபதி ஆட்சியில் அமரத் தகுதியானவர் அல்ல. அவர், தம்பித் தேவரின் உரிமையைப் பறித்ததால் தான் இவருக்கு வாரிசு இல்லாமல் போய் விட்டது என்று பேசிக் கொள்கிறார்கள் என்று அங்கிருந்த பாளையக்காரர் தெரிவித்திருந்தார்.
மகாராணியின் செவிகளுக்கும் இது போன்ற செய்திகள் வரும் போது அவர் துவண்டு போவது வழக்கம். சமீப காலமாக மகாராணியின் போக்கில் சற்று மாற்றம் காணப்பட்டது. முன் போலல்லாமல் இப்போது வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் மன்னரை மற்றொரு திருமணம் செய்து கொள்ளுமாறு பல்வேறு விதங்களில் வற்புறுத்தி வருகிறார்.
ரகுநாதன் என்று பெயர் வைத்திருந்த மன்னனோ பெண்கள் விஷயத்தில் அந்த ராமச்சந்திரனைப் போலவே இருக்க விரும்பினான்.
ராஜ்ய விஷயத்தில் அக்கறை இருந்தாலும் வாரிசு இல்லையே என்ற கவலை இருந்தாலும் சேது நாட்டின் சட்டதிட்டங்களின்படி அடுத்த வாரிசாக யாரை அறிவிக்கலாம் என்று தான் யோசித்தாரே தவிர தமது இரண்டாவது திருமணத்தைப் பற்றி ராணி பேசுவதைச் செவிமடுப்பதே இல்லை.
இப்படி பல சிந்தனைகளால் படுக்கையில் புரண்டு தூக்கம் தொலைத்த மகாராஜா மாலை நெருங்கிவிட்டதை அறிந்து கோவிலுக்குச் செல்லத் தயாரானார்.
மகாராணியும் பூஜைக்குத் தயாராகி அரண்மனையின் பிரதான வாயிலுக்கு வந்து சேர்ந்தார். இருவருக்கும் பல்லக்கு தயாராக இருக்க ஆதி ஜெகநாதனைத் தரிசனம் செய்ய இருவரும் கிளம்பினார்கள்.
திருப்புல்லாணி கோவில், இராமபிரான் இலங்கைக்கு செல்லும் முன் இங்கே தர்ப்பையை விரித்து ஏழு நாட்கள் அமர்ந்து, சமுத்ர ராஜனுக்காகக் காத்திருந்ததாக இராமாயணம் சொல்கிறது. தசரதர் புத்திரகாமேஷ்டி செய்து பிள்ளை வரம் பெற்றதும் இத்தலத்தில் தான் என்று மற்றொரு செய்தி சொல்கிறது.
அதன் பொருட்டே மகாராணி சேது கங்கை நாச்சியாரின் இஷ்ட தெய்வமாகிப் போனார் ஆதி ஜெகநாதன். எத்தனையோ வழிகளில் வேண்டிக் கொண்டாலும் புத்திர பாக்கியம் கிட்டவில்லை என்று நினைக்கையில் ராணியின் கண்களில் இருந்து நீர் வழிந்தோடியது.
“ஓதி நாமம் குளித்து உச்சி-தன்னால் ஒளி மா மலர்ப்
பாதம் நாளும் பணிவோம் நமக்கே நலம் ஆதலின்
ஆது தாரான் எனிலும் தரும் அன்றியும் அன்பர் ஆய்ப்
போதும் மாதே தொழுதும்-அவன் மன்னு புல்லாணியே “ என்ற திருமங்கை ஆழ்வாரின் பாசுர வரிகளை அவரது வாய் முணுமுணுத்தது. (*)
கோவிலில் அன்று சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆதிஜெகந்நாதர் (அமர்ந்த கோலம்), சயனராமர் (கிடந்த கோலம்), பட்டாபிராமர் (நின்ற கோலம்), அரசமர பெருமாள், பட்டாபிராமர் என மகாவிஷ்ணுவின் ஐந்து வடிவங்களையும், மூன்று கோலங்களையும் தரிசித்த பிறகு பூஜை ஆரம்பம் ஆனது.
அனைத்தும் முடிந்து பெருமாளை மீண்டும் மனதார சேவித்து மன்னர் வெளியே வருகையில் அமிர்த கவிராயரைக் கண்டார்.
“வணக்கம் மகாராஜா!” என்று அவர் வணங்க, மன்னரும் பதிலுக்கு வணக்கம் சொன்னார். கோவிலுக்கு வந்த விவரங்களைக் கேட்டறிந்தார். அப்போது கோவிலின் முதன்மை பட்டரான நாராயண பட்டர் மன்னரிடம் பேசுவதற்கு அனுமதி வேண்டி நின்றார்.
“சொல்லுங்கள் பட்டரே! கோவிலின் மான்யங்கள் எல்லாம் தவறாமல் வந்துகொண்டிருக்கிறது அல்லவா? வேறெதுவும் தேவை என்றாலும் கூறுங்கள். அந்த ஜெகநாதன் அருளால் அதையும் நிவர்த்தி செய்து விடுவோம்” என்று வாக்களித்தார் மன்னர்.
“இந்தக் கோவிலின் சில பகுதிகள் சிதிலம் அடைந்து கிடக்கிறது மன்னர் பெருமானே! இராமேஸ்வரம் வருகின்ற யாத்திரீகர்கள் பலரும் கட்டாயம் இங்கே வந்து ஜெகநாதனை சேவித்துச் செல்கின்றனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்குவதற்கு மன்னர் ஏதேனும் ஏற்பாடுகளைச் செய்தல் நலம். கோவிலின் திருமடைப்பள்ளி தளிகைக்கு ஏற்ற விதமாக இல்லை. இப்போது பெருமாளுக்கே படைக்க வேண்டிய அமுதும் கூட பட்டர்களின் இல்லத்தில் தான் செய்து வருகிறோம்.” கோவிலின் நிலையைச் சொல்லி முடித்த பட்டரின் முகத்தில் நிஜமான கவலை தெரிந்தது.
இதைக் கேட்ட சேதுபதி மன்னருக்கு குழப்பம் ஏற்பட்டது. அவரது முன்னோர் காலம் தொட்டு இந்நாள் வரையில் இந்தக் கோவிலுக்காக சேதுபதிகள் பல்வேறு மான்யங்கள் கொடுத்துள்ளனர். அவற்றின் வருவாய் அனைத்தும் எங்கே செல்கிறது என்று தெரியவில்லை. கோவிலின் நிர்வாகத்தைக் கவனிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டார்.
“நல்லது பட்டரே! விரைவில் இதற்கெல்லாம் நடவடிக்கை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்கிறேன். அந்த ஜெகநாதன் அவனது காரியத்தை நடத்திக் கொள்வான்” என்று கரம் கூப்பி வணங்கினார். பட்டரும் மன்னரிடம் விஷயத்தைச் சொல்லிய திருப்தியில் கோவிலுக்குள் சென்றார்.
அதுவரையில் கவிராயரைக் காக்க வைத்ததை அறிந்து அவரிடம் மன்னிப்பை வேண்டினார் மன்னர்.
“யானும் இந்தக் கோவில் பற்றித் தங்களிடம் பேசலாம் என்று நினைத்திருந்தேன் மகாராஜா. பல நூற்றாண்டுகளாக நம் வரலாறு பேசும் கோவில்கள் நன்கு பராமரிக்கப்பட வேண்டும். இவ்விஷயத்தில் தாங்களும் முன்னோர் வழிபற்றி நடப்பது கண்டு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. திருமங்கையாழ்வாரால் பாடப்பெற்ற இந்த ஸ்தலத்தின் பெருமையை எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துரைக்கும் விதமாக மன்னர் ஏதாவது செய்ய வேண்டும்” என்று கூறினார் கவிராயர்.
“நிச்சயமாகச் செய்யலாம்..” என்று உறுதியளித்த மன்னர் கோவிலைச் சுற்றிலும் தன் பார்வையை ஓட்டினார். நிர்வாகத்தினர் சரியான முறையில் கோவிலைப் பராமரிக்கவில்லை என்பது தெரிந்தது. எங்கே என்ன செய்வது என்ற தீர்மானத்திற்கு வந்து விட்டது போலிருந்தது அவரது தோற்றம். முகத்தில் அத்தனை தீவிரம் காணப்பட்டது.
“மகாராஜா! இன்று ஏதேனும் விசேஷம் உண்டோ? மன்னர் தேவியாருடன் இணைந்து கோவிலுக்கு வந்திருக்கிறாரே!” என்று பேச்சின் திசையை இலகுவாக்கினார் கவிராயர்.
“இதென்ன கவிராயரே, தாங்களும் மகாராணியைப் போலவே கேள்வி கேட்கிறீர்கள். தன்னுடன் நேரத்தைச் செலவிடுவதே இல்லை என்பது மகாராணியின் குறையாகவே உள்ளது. எமது நாட்டைப் போலவே இல்லாளைப் பற்றிய நினைவும் என்னைவிட்டு எப்போதும் அகலாது என்பதைத் தாங்கள் அறிவீர்கள் அல்லவா?” என்று புன்னகைத்தார் மன்னர். இதைக் கேட்டுக் கொண்டே அங்கே வந்து நின்றார் மகாராணி. சேது கங்கை நாச்சியாரைப் பார்த்ததும் கை கூப்பி வணங்கினார் கவிராயர்.
“மிகவும் சரிதான் மகாராஜா. ஒரு நாளில் இருக்கும் அறுபது நாழிகையில் இரண்டு நாழிகைகளைப் பெருந்தன்மையுடன் இல்லத்தரசிக்கு வழங்கியுள்ளார் அல்லவா. அதனால் நீர் மகாராஜா சொல்வதை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும் கவிராயரே” என்று இடைபுகுந்தார் மகாராணி.
“இன்று மகாராணியாரின் ஜென்ம தினம். யாமே நினைவில் கொண்டு இந்த பூஜைகளை ஏற்பாடு செய்திருக்கிறேன் என்றால் என் நினைவில் எப்போதும் எமது ராணியார் இருக்கிறார் என்று தானே அர்த்தம். இதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள் கவிராயரே.”
கவிராயரை இடையே நிறுத்தி மன்னரும் மகாராணியும் விவாதம் செய்தனர். அவரைப் பேசவிடாமல் அந்த அரச தம்பதியர் தங்களுக்குக்கெனக் கிடைத்த பொன்னான நேரத்தை வீணடிக்க விரும்பாமல் அளவளாவிக் கொண்டே சென்றனர்.
புலவர் அல்லவா, இவர்களைக் கண்ட கவிராயரின் மனதில் அடுத்து என்ன எழுதலாம் என்று ஓர் யோசனை உண்டானது.
மாலை மங்கி இருள் கவியத் தொடங்கியது. கோவிலில் நடை சாற்றும் நேரம் வரை மன்னரும் ராணியும் பேசிக்கொண்டிருக்க கவிராயர் அதைக் கவிநயத்துடன் நோக்கினார்.
கோவிலின் கதவுகளைச் சாற்றும் சத்தம் கேட்டுத் தங்கள் பேச்சைக் கைவிட்டார் மகாராஜா. “நல்லது கவிராயரே. நாளை காலையில் சந்திப்போம். தங்களது பாக்களைக் கேட்க மிகவும் ஆவலாக உள்ளேன். இப்போது விடை பெறுகிறோம்” என்று கவிராயரிடம் விடைபெற்று இராமநாதபுரம் அரண்மணைக்குத் திரும்பினார்கள்.
*****
மறுநாள் பொழுது புலர்ந்தது. ரம்யமான காலைப்பொழுது. சேதுபதி மன்னரது அரண்மனை புலவர்கள் அனைவரும் நீராவி மாளிகையின் வாசலில் குழுமி இருந்தார்கள். அவர்களுக்குள் உற்சாகமாகப் பேசியபடி இருந்தார்கள். கைகளில் ஏடுகளைக் கொண்ட சுவடிக் கட்டு காணப்பட்டது.
சற்று நேரத்தில் கோட்டையின் வடபகுதி இருந்து மன்னர் வந்து கொண்டிருந்தார், அவருடன் பிரதானியும் அமிர்தகவிராயரும் உரையாடியபடி வந்தார்கள். காலை மாலை இரு வேளையும் கோட்டைக்குள் குடியிருக்கும் ராஜராஜேஸ்வரி அம்மனைத் தரிசிப்பது மன்னரது வழக்கம். இன்றும் அங்கிருந்து தான் வருகிறார் என்பதை அவர் நெற்றியில் தரிந்திருந்த திருநீறு கூறியது.
நீராவி மாளிகை வாசலுக்கு மன்னர் வந்த போது அங்கிருந்த அனைவரும் மன்னருக்கு வணக்கம் தெரிவித்தனர். பதிலுக்கு வணக்கம் சொன்ன சேதுபதி மன்னர், “உள்ளே வாருங்கள்” என்று அவர்களை அழைத்துச் சென்றார்.
அங்கிருந்த கூடம் முழுவதும் தரையில் இரத்தின கம்பளங்கள் விரிக்கப்பட்டு இருந்தன. அதன் ஒரு புறத்தில் மன்னருக்கான இருக்கை அமைக்கப்பட்டிருந்தது. இருக்கையில் அமர்ந்த மன்னர் அனைவரையும் அமருமாறு கூறினார்.
புலவர்களும் மற்றவர்களும் ரத்தின கம்பளத்தில் ஆங்காங்கே அமர்ந்தார்கள்.
மன்னர் தமது அருகில் அமிர்த கவிராயரை அமரச் செய்தார். இதைக் கண்ட அரண்மனையின் ஆஸ்தான புலவர்கள் பலரும் கவிராயரின் மேல் அசூயை கொண்டனர். மன்னரது பணியாளர் வந்து அனைவருக்கும் சந்தனமும் தாம்பூலமும் கொடுத்து உபசரித்தனர்.
அதன் பிறகு புலவர்கள் ஒவ்வொருவராகத் தங்கள் பாடல்களைக் கூற அவையில் “ஆஹா! பிரமாதம்!” என்ற பாராட்டு அடிக்கடி கேட்டது.
சற்று நேரம் இவ்வாறு பொதுவான பாடல்களில் சென்றது. சேதுபதி மன்னர் அனைவரையும் பார்த்து, “புலவர்களே! அகப் போருள் துறையும் ஏதேனும் ஒன்றைக் கொண்டு பல பாடல்கள் பாடவல்லீரோ?” என்று கேட்டார்.
“என்னால் பத்து பாடல்கள் செய்ய முடியும்” என்றார் ஒருவர்.
“இருபது” என்றார் இன்னொருவர்.
முப்பது, நாற்பது என்று ஆளாளுக்கு ஒரு எண்ணைச் சொன்னார்கள்.
“நான் நூறு செய்வேன்” என்றார் அமிர்த கவிராயர். முன்பே அவர் மேல் அசூயை கொண்ட சிலர், “என்ன? நீர் நானூறு செய்வீரா?” என்று அவரது வார்த்தைகளை வேறு விதமாக மாற்றிவிட்டனர்.
அதற்கெல்லாம் கவிராயர் மயங்கவே இல்லை. “நானூறு செய்வேன். அதைக் குறித்த தவணைக்குள் எழுதியும் முடிப்பேன்” என்றார்.
“என்ன? நீர் நானூறு செய்வீரா? அதைப் பத்து நாட்களுக்குள் எழுதி முடிக்க முடியுமா?” என்று மீண்டும் கேள்வி எழுந்தது.

மன்னர் சைகை செய்தவுடன் கையில் சில ஓவைச்சுவடிகளை எடுத்தவாறு எழுந்து நின்றார். சில நொடிகள் கண் மூடி தமது குல தெய்வத்தை வணங்கிய பிறகு அவையில் பேச ஆரம்பித்தார்.
“முத்தமிழே உருவாக அமர்ந்திருக்கும் சேதுபதி மன்னர் அவர்களே, கூடியுள்ள புலவர் பெருமக்களே அனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டு எனது ஒரு துறைக் கோவையை இங்கே சமர்ப்பிக்கத் தொடங்குகிறேன்.
இது வரையில் இயற்றப் பட்டிருக்கும் கோவைகள் தெய்வத்தையும் அரசரையும் பாட்டுடைத்தலைவராகக் கொண்டு இயற்றப்பட்டவை, அகப் பொருள் பற்றிய நானூறுக்கும் மேற்பட்ட துறைகளில் எழுதப்பட்டவை. ஆனால் நான் நமது மகாராஜா மீது இயற்றப் போவது ஒரேயொரு துறையில் நானூறு பாடல்கள். ஆகவே இது ஒரு பொருட் கோவை என்றழைக்கப்படும்.”
“ஒரு துறையில் நானூறு பாடுவேன் என்று சொல்வது ஆச்சர்யமாக தான் இருக்கிறது” என்றார் ஒருவர். அமிர்த கவிராயர் சிரித்தாரே தவிர அவருக்குப் பதிலுரைக்கவில்லை.
“எந்தத் துறையைப் பாடு பொருளாகக் கொண்டுள்ளீர்கள்?”
இதைக் கேட்ட கவிராயருக்கு முதல் நாள் மாலையில் மன்னரையும் அவரது தேவியையும் திருப்புல்லாணி கோவிலில் சந்தித்த ஞாபகம் வந்தது. அவரது முகத்தில் சிறு புன்னகை தோன்றியது.
“பாட்டுடைத் தலைவர் தலைவியுடன் கூடி இருக்கிறார். தம்மைத் தீண்டுபவர் தம் தலைவனாகவே இருந்த போதிலும் நற்குலத்தில் பிறந்த பெண்டிர்க்கே உரிய நாணம் தலைவியைப் பற்றிக் கொள்கிறது. நெகிழ்வான ஆடையுடன் தலை கவிழ்ந்து அமர்ந்த தலைவி தலைவனை நிமிர்ந்து பார்ப்பதற்கும் நாணம் கொண்டவளாகத் தனது காந்தள் மலர் போன்ற கண்களைத் தன் கரங்களால் மூடிக் கொள்கிறாள். இந்த “நாணிக் கண் புதைத்தல்” துறையில் தான் நானூறு பாடல்கள் பாட விழைகிறேன்.”
“அதி அற்புதம். இது வரை யாரும் சிந்திக்காத துறை. ஆனால் நானூறு பாடல்களை இந்தத் துறையில் பாட முடியுமா?” என்று வினவினார் ஒரு புலவர்.
“இதை பாடுவதற்கான முன்னோடி இலக்கியம் எது?” என்றார் மற்றொருவர்.
“புதிதாக ஒரு துறையில் பல பாடல்கள் படைப்பதற்கு நம் தமிழ் மொழியன்றி வேறு எந்த மொழியாலும் முடியாதே
எனது பாடல்களில் முதலிரண்டு வரிகளில் மன்னரது புகழ் பாடப்படும். அடுத்த இரண்டு அடிகள் தலைவியின் செயலைப் பற்றியதாகும். அதாவது அகப் பொருள், புறப்பொருள் இரண்டுமே ஒரே பாடலில் இடம்பெறும்.”
இவ்வாறு பேசிக்கொண்டு இருந்த பிறகு தனது பாடல்களை அப்போதே எழுத ஆரம்பித்தார். ஒவ்வொரு பாடலையும் எழுதி முடித்த பிறகு அதைப் படித்துக் காட்டினார். அதில் பொதிந்துள்ள சிறப்புப் பொருட்களையும் சொல்லிக் கொண்டே வந்தார். மன்னரும் மற்றவரும் செவிகுளிர அந்தக் கவிதைகளையும் விளக்கங்களையும் ரசித்தனர்.
ஒவ்வொரு பாடல் முடியும் போதும் சேதுபதி மன்னர் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக பொன்னாலான ஒரு தேங்காயை கவிராயரின் பக்கம் உருட்டி விடுவார். இவ்வாறு கவிராயரது பாடல்கள் எழுதப்பட்டு, படிக்கப்பட்டு பின்னர் விளக்கப்பட்டு. பொன்னாலான தேங்காய்களும் சிறு குன்று போல கவிராயர் பக்கம் குவிந்தன.
அப்போது கவிராயர் ஒரு பாடலை எழுதி விளக்கம் கொடுத்தார்.
"கடை முன்னர் நின்று முடிமேல்
தமது இருகை குவித்துப்
படைமன்னர் போற்றும் ரகுநாத
சேதுபதி வளவாய்
இடைதான் குறைந்தது மச்சமும்
காட்டுவது இல்லையென்றால்
மடவீர்! எமது தனத்தை எவ்
வாறு மதிப்பது வே!”
இதற்கு விளக்கம்: இந்த அரண்மனையின் ஆசார வாசலில் முன் நின்று வேந்தர் அனைவரும் தங்களது முடிமேல் இரு கை குவித்து வணங்கும் சேதுபதி மன்னரது பணியிடத்து இருக்கின்றதோ அல்லது இல்லையோ என்று எண்ணத்தக்க உமது இடைதான் காணப்படுகிறது. அதற்குரிய மச்சத்தையும் காண்பிக்காவிட்டால்
உமது தனத்தை (செல்வத்தை) எவ்விதம் மதிப்பிடுவது என்பது பொருள்.
இங்கு இன்னொரு பொருளையும் பார்க்க வேண்டும். தென்றல் காற்றுக்கும் ஆற்றாது நுகங்கும் இடை என்பதற்குப் பதில் எடை என்று, அதாவது நிறை எனக் கொள்ளுதல் வேண்டும். மச்சம் என்பதற்கு கண்களாகிய மீன்கள் என்றும், தலைவியின் செல்வம்
என்பதற்குப் பதிலாக தனத்திற்கு (கொங்கைகள்?) என அகப்பொருள் கொண்டால் இனிமையாக இருக்குமல்லவா?”
"ஆகா! பிரமாதம்" புலவர்களது மகிழ்ச்சி கோடை கால குளிர் நீரூற்றாய் கொப்பளித்தது. ஆராவாரம் மிகுந்தது. மன்னரது இதழோரத்தில் ஒரு இனிய குறுநகை. ஒரு பொற்தேங்காயை மன்னர் புலவர் பக்கம் உருட்டிவிட்டார்.
இதுவரை வழக்கமாக உருட்டிய தேங்காய் போன்றது தான் இப்பொழுதும் மன்னர் உருட்டிவிடுகிறார் என நினைத்த புலவர், "இந்தப் பாடலின் பொருளை உடைத்துப் பகுத்துப் பார்க்க வேண்டும்” என மன்னரை வேண்டினார்.
"இந்தப் பாடலின் பொருளை நன்கு புரிந்துதான் நன்கு முற்றிய தேங்காயாக வழங்கி உள்ளேன். புலவரும் அதனை உடைத்துப் பார்க்க வேண்டும்." என்றார் மன்னர்.
கவிராயர் அவ்வாறே அந்தத் தேங்காயை உடைத்துப் பார்த்தார். என்ன ஆச்சரியம்! தேங்காய் முழுவதும் மணிகளும் முத்துக்களும் நிறைந்து இருந்தன. சுவிராயரும் பிற புலவர்களும் வியப்பினால் மெய்சிலிர்த்து இருந்த பொழுது, மன்னர் சொன்னார்,
"புலவர்களே, நீங்கள் கவிராயரது கவிதையைச் செவிக்குணவாகக் கொண்டிருத்தீர்கள். இப்பொழுது வயிற்றுக்கும் விருந்து காத்திருக்கிறது. அனைவரும் எழுந்து விருந்து மண்டபத்திற்கு வாருங்கள்” என்று சொல்லியவாறு சேதுபதி மன்னர் எழுந்தார். மன்னரைத் தொடர்ந்து கவிராயரும் புலவர்களும் விருந்து மண்டபம் சென்றனர்.
தொடர்ந்து பத்து நாட்கள் அமிர்த கவிராயரது ஒரு துறைக் கோவையின் அரங்கேற்றம் சேதுபதி மன்னரின் முன் நடைபெற்றது.
மன்னர் மிகுந்த ஆர்வத்துடன் கவிராயரது பாடலையும். விளக்கத்தையும் கேட்டு மகிழ்ந்தார். புலவர்களும் தமிழ் இலக்கியத் துறைக்குப் புதிய வரவான இத்த ஒருதுறைக் கோவையையும் அதனை மிகச் சிறப்பாக இயற்றிய கவிராயரையும் பலவாறு புகழ்ந்து, பாராட்டினர்.
இந்நூலை அவர் அரங்கேற்றம் செய்த போது அங்கிருந்த புலவர் அனைவரும் கோவையின் பெருமையையும் அதில் எழுதப்பட்ட அகப்பொருள் புறப்பொருள் இரண்டின் நயத்தையும் கண்டு வியந்தனர்.
அரங்கேற்றம் நிறைவு பெற்றதன் நினைவாக மன்னர். கவிராயருக்கும் பல சிறப்புகளைச் செய்தார். பட்டாடைகளும் துணி மணிகளும் அளித்ததுடன், அரசர் அவர் மீது கொண்ட அன்பின் வெளிப்பாடாக புலவர் பிறந்து வாழ்த்து வருகின்ற
பொன்னன்கால் என்ற சிற்றூரையும் அதனைச் சார்ந்துள்ள நஞ்சை, புஞ்சை, தோப்பு, துரவு, குளம், குட்டம், கணி, கிணறு, திட்டு, திடல். ஆகிய அனைத்தையும் கவிராயருக்கும் அவரது சந்ததியினருக்கும் மான்யமாக அளித்து விட்டார்.
சேது நாடு செந்தமிழ் போற்றும் ஆதினமாக விளங்கத் தொடங்கியது. கவிராயர் சொந்த ஊர் புறப்பட்ட நாளன்றும் சேதுபதி மன்னரும் புலவர்களும் குழுமி நின்று மகிழ்ச்சியுடனும் மரியாதையுடனும், கவிராயரைப் பல்லக்கில் ஏற்றி அவரது ஊருக்கு அனுப்பி வைத்தனர். மன்னர் வழங்கிய பரிசில்களைச் சுமந்த பொதி வண்டிகளும் அதனைப் பின்தொடர்ந்து சென்றன. சங்க காலத்தில் வள்ளலது கொடைப் பொருள்களை சிற்றெறும்புக் கூட்டம் போல சுமந்து வந்த பாணரது பணியாட்களை அந்தக் காட்சி நினைவூட்டியது.
தமிழகத்தின் பழம்பெரும் குடியினரான சேதுபதிகள் தங்களது ஆன்மிகத் தொண்டிற்கு
அடுத்ததாக தமிழ்த் தொண்டிலும் மிகுந்துவிட்டதை இந்த நிகழ்ச்சி
உறுதிப்படுத்தியது .
***************
கவிராயரை வழியனுப்பி வைத்து விட்டு மன்னர் சற்று ஓய்வெடுக்க வேண்டும் என்று தனது அறைக்கு வந்தார்.
அப்பொழுது மன்னரது அறைக்கு மகாராணியார் வந்தார். அவரைத் தொடர்ந்து ஒரு பணிப்பெண்ணும் பலகாரங்கள் கொண்ட ஒரு வெள்ளித் தட்டையும் வெள்ளிச் செம்பையும் கொண்டு வந்து அங்கிருந்த சிறு கட்டிலின் மீது வைத்துவிட்டுச் சென்றாள்.
தட்டின் மீது தனது பார்வையை ஓடவிட்ட மன்னர், “இத்தனை நாட்கள் பசி என்ற ஒன்று இருக்கிறது என்பதே மறந்து விட்டது. இப்போது இந்தப் பலகாரத் தட்டைப் பார்த்த பிறகு தான் வயிறு நானும் இருக்கிறேன் பார் என்கிறது” என்று சிரித்தார்.
“மிகவும் சரியாகச் சொன்னீர்கள் பாவுக்கிசைந்த சேதுபதியே! பல நாட்களாக நீங்கள் சரியாகச் சாப்பிடவே இல்லை. அதனால் தான் இன்று மாலை வேளையில் இந்தப் பணியாரமும் முறுக்கும் உங்களுக்காகச் செய்யப்பட்டுள்ளது, சாப்பிடுங்கள்" என்றார் மகாராணி.
"இப்பொழுதுதான், கவிராயர் ஊருக்குப் புறப்பப்பட்டுச் சென்றார். ஆனால் இங்கே அரண்மனையில் ஒரு கவிதாயினி உருவாகி இருக்கிறார் போல் தெரிகிறதே!” என்று சற்றே குறும்புடன் வினவினார் மன்னர்.
“என்ன விஷயம்? யாரைச் சொல்கிறீர்கள்?” என்று சுற்றிலும் பார்த்த ராணியைக் கண்டு மன்னர் சத்தமாகவே சிரித்தார்.
“புலவர் பெருமக்கள் எம்மைப் பல்வேறு சிறப்புப் பெயரோடு அழைக்கிறார்கள். இன்று எமது தேவியார் புதிதாக ஒரு பெயரைக் கொடுத்திருக்கிறாரே. பாவுக்கிசைந்த சேதுபதி.. மகாராணி சேது கங்கை நாச்சியாருக்கு எமது பெயர் தெரியாதோ.. பொதுவாக சேதுபதி என்று சொன்னால் பின் வரும் சந்ததியினருக்கு குழப்பம் ஏற்படாதோ. பெயரைக் குறிப்பிட்டுச் சொன்னால் தானே இன்னாரைச் சொல்லி இருக்கிறார்கள் என்று தெரியும்.”
நாணிக் கண் புதைத்தல் என்று நானூறு பாடல்களைக் கேட்ட மன்னரது மனம் இன்று தனது தேவியைக் கண்டதும் உல்லாசமாக உணர்ந்தது. அதனால் பேச்சும் அகப்பொருளை நோக்கிச் சென்றது.
மன்னரின் குரலில் தெரிந்த உல்லாசத்தை உணர்ந்த மகாராணி நாணத்துடன் தலை குனிந்தாள். மிகுந்த காதலுடன் தன் தேவியை நோக்கினார் சேதுபதி மன்னர். சற்று நேரம் மோனத்தில் கழிந்தது.
பலகாரம் நிறைந்த தட்டு கண்ணில் பட்டு மன்னரே தொடர்ந்து பேசினார்.
“கவிராயர் பத்து நாட்களாகப் படித்த இனிய பாடல்களும் விளக்கங்களும் எனது செவியிலே நிறைத்து கருத்திலே கலந்து நவரசங்களையும் சொரிந்து நிற்கின்றன. செவிக்கு உணவு இல்லாத போதுதானே வயிற்றை நிரப்ப வேண்டும்."
"நீங்கள் சொல்லும் குறள் எனக்கும் தெரியும். செவியுணவை சிறப்பித்துக் கூறவே வள்ளுவர் அந்தக் குறளைச் சொல்லியிருக்கின்றார்.... அதிருக்கட்டும் இதனைச் சாப்பிடுங்கள்" எண்று சொல்லியவாறு தட்டினை மன்னரிடம் கொடுத்தார் ராணி.
அதில் இருந்த முறுக்கு ஒன்றினை எடுத்து வாயில் போட்டு சில நொடிகளில் மென்று விழுங்கினார் மன்னர்.
"என்ன சேது! முறுக்கு இனிக்கிறது. தவறுதலாகப் பணியாரம் மாவில் செய்யப்பட்டுவிட்டதா!"' மன்னர் கேட்டார்.
"இல்லை. தாங்கள் பத்து தாட்களாக அமிர்த கவிராயரது கவிகளை, அதிலும் மன்னரை மிகவும் போற்றி புகழ்ந்து கூறியுள்ள புகழ்ச்சிகளினால், மகாராஜா அவர்களது காதுகள் மட்டுமல்ல நாக்கும் அந்தக் கவிதைகளை திரும்பத் திரும்பப் படித்து தங்களது நெஞ்சமெல்லாம் அவை நிறைந்து இருப்பதால்தான் தங்களுக்கு முறுக்கும் இனிக்கிறது. மதிய உணவில் புளிரசம் இனித்தால் கூட வியப்பில்லை."
இருவரும் சேர்ந்து சிரித்தனர். பின்னர் மன்னர் கேட்டார், "கவிராயரது நானூறு பாடல்களிலும், சரி சமமாக மன்னருடன் இந்தத் தலைவியைத்தானே மிகவும் புகழ்ந்து, இன்னும் சொல்லப் போனால், கற்பனை நயங்களுடன் வெள்ளிடையாகவும்,
சிலேடையாகவும் வியந்து இருக்கிறார். அவைகளைக் கேட்டு ரசித்த செவியுடன் சிந்தையும் அல்லவா சேர்ந்து இனிக்க வேண்டும். இது உங்களது சொற்களில் தொனிக்கவில்லையே” புன்னகையுடன் மன்னர் கேட்டார்.
"சற்று முன்னர் சொன்ன குறளை மாற்றிப் படியுங்கள்! வயிற்றுக் குணவு இல்லாத பொழுது சற்று செவிக்கும் ஈயப்படும். வயிறு நிறையாத வேளையில்தான் செவிக்கும்
சிந்தைக்கும் கவிதை இன்பம் வழங்கும் சரிதானே" என்று ராணியார்
சொல்ல இருவரும் மீண்டும் சிரித்தனர்.

Author: SudhaSri
Article Title: அத்தியாயம் -5
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.