அத்தியாயம் -7
அந்த வெயில் சூழ்ந்த காலை நேரத்தில் கிழக்குக் கடற்கரையில்
இருந்து சற்று தொலைவில் உள்ள ஆளில்லாத ஒரு தீவுக்கு சிலர் படகில் வந்து இறங்கினார்கள்.
ஒரு பெரியவர், வீரசிம்மன், இளஞ்செழியன் என்ற இரு இளைஞர்கள் மற்றும் மறவர் சீமையின் நாடாள்வார்கள் சிலரும் கடற்கரையில் இருந்து சிறிது தூரம் நடந்து சென்றனர். உயர்ந்து பரந்து கிளைப்பரப்பி நின்ற ஒரு ஆலமரத்தின் நிழலில் அமர்ந்தனர்.
"வீரசிம்மா! நீ சென்று சாப்பாட்டிற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு வா!" பெரியவரது ஆணை.
அந்த ஆலமரத்திற்குச் சற்றுத் தொலைவில் இன்னொரு கட்டுமரத்தின் நிழலில் படகைச் செலுத்திவந்தவர்களை வைத்து சமையல் செய்வதற்கு ஏற்பாடுகளைச் செய்துவிட்டு வீரசிம்மன் திரும்பி வந்தான்.
"சரி இப்பொழுது கூட்டத்தை தொடங்கலாம்" என பெரியவர் சொன்னார்.
"செழியா! நீ அழைத்து வந்துள்ள நாட்டுத் தலைவர்கள் யார் யார் என்று எங்களுக்கு அறிமுகம் செய்துவை” என்று சொன்னவுடன் இளஞ்செழியன் எழுந்து அங்கிருந்த ஒவ்வொருவரையும் சுட்டி காட்டி அறிமுகம் செய்துவிட்டு அமர்த்தான். பெரியவர் பேசத் தொடங்கினார்,
"உங்கள் அனைவரையும் மகத்தான பணி ஒன்றில் ஈடுபடுத்த வேண்டும் என்பதற்காகத் தான், இங்கு அழைத்து வருமாறு செய்தேன். நான் சொல்லயிருப்பது மிகவும் இரகசியமானது. அதனால் தான் யாருமே இல்லாத இதந்த தீவில் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு."
"நாம் அனைவரும் சில கிளைகளாக அமைந்திருந்தாலும் நாம் அனைவரும் வரலாற்றுப் புகழ் மிக்க மறவர் என்ற தொகுப்பைச் சார்ந்தவர்கள். நமது முன்னோர்களின் வீர உணர்வும்,வீர சாகசங்களும், சோழப் பேரரசு அமைவதற்கு அடித்தளமாக இருந்தன. அவையெல்லாம் பழைய கதை. தற்பொழுதைய நிலைக்கு வருவோம். நமது மறக்குடி மக்களுக்கென தனியாக ஒருஅரசு இத்தப் பகுதியில் பல காலமாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் எத்தனையோ அரசியல் மாற்றங்கள் ஏற்பட்ட பிறகும் மறவர் சீமையின் அரசுக்கு எத்தகைய இடைஞ்சலும் இருந்ததில்லை. ஆனால் கடந்த நூறு வருடத்திற்கும் மேலாக மதுரையைப் பிடித்த வடுகர்கள், நமது மறவர் சீமைக்கு மிகப் பரிய எதிரிகளாக இருந்து வருவதுடன், இதனை முழுமையாக அழிப்பதற்கும் தொடர்ந்து திட்டமிட்டுச் செயலாற்றி வருகின்றனர்.”
"முதன் முதலில் பாண்டிய நாட்டை பலவிதமான தந்திரங்களைக் கொண்டு கைப்பற்றிய விசுவநாத நாயக்கன், அப்பொழுது விரையாதகண்டனில் இருந்த நமது மூத்த குடியினரான ஜெயத்துங்கத் தேவனை சூழ்ச்சியால் கொலை செய்து, மறவர் சீமையில் குழப்பத்தை ஏற்படுத்தினர். சிலகாலம் மன்னர் இல்லாது தத்தளித்தது மறவர்சீமை. அடுத்து சேதுபதி பட்டத்திற்கு வரவேண்டிய இளைஞன் சடையக்கனை, தந்திரமாக நாடுகடத்தி இலங்கையில் உள்ள வன்னிக் காட்டில் அணாதையாகத் திரியும்படி செய்தனர். அங்கிருந்து தப்பி வந்த சடைக்கன் புசுலூரில் மறவர்களது பாரம்பரிய அரசை நிலைதாட்டினார். பகையை மறந்து மதுரை மன்னரான முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கருடன் உறவோடு வாழ்த்து வந்தார்.”
"ஆனால் மீண்டும் மறவர் அரசையும், குடிகளையும் அழிக்க முயன்றனர் வடுகர். தமது முன்னோர்களது வழியில் மறவர்களை அழித்து அவர்களது மறவர் சீமையை தங்களது பாளையங்களில் ஒன்றாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று பேராசைப்பட்டனர். மறவர் சீமை மீது மிகப் பெரிய படையெடுப்பை மேற்கொண்டான் மதுரை திருமலை நாயக்கன். அவனுக்கு அடிமைப்பட்டிருந்த எழுபத்திரெண்டு பாளையக்காரர்களைக்
கொண்டும் போர்ச்சுக்கீசிய பரங்கிகளின் ஆயுத உதவி கொண்டும் ஆயிரக்கணக்கான மறவர்களை அழித்தான். இன்றும் கிழக்குச் சீமையில் பாழ்பட்டுக் காட்சியளிக்கும் கோட்டைகளின் இடிபாடுகள் அழிந்துபட்ட நமதுமுன்னோர்களின் தன்மான உணர்வுக்கும் ஆயிரக்கணக்கான தாய்மார்களின் கழுத்தில் இருந்து அறுத்து எறியப்பட்ட ஐம்படைத்தாலிகளின் நினைவுக் களமாக இருந்து வருகின்றன.”
“இராமேஸ்வரம் தீவுச் சண்டையில், அப்பொழுது இருந்த மன்னர் தளவாய் சேதுபதியை வென்று அவரை மதுரைச் சிறையில் அடைத்தான். மறவர் சீமையில் தலைமகனான சேதுபதி சிறைபிடிக்கப்பட்டார் என்ற செய்தி பரவியவுடன் மக்கள் அனைவரும் மதுரையை அழிக்கச் சீறி எழுந்தனர். வேறு வழியில்லாமல் திருமலை நாயக்கன் தளவாய் சேதுபதியை விடுவித்து புகலூருக்கு அனுப்பி வைத்தான்.”
"படைபலம் மூலம் சாதிக்க முடியாத தமது திட்டத்தை மறவர்களது பேரரசை அழித்து, மறவர் சீமையை எழுபத்து மூன்றாவது பாளையமாக்க வேண்டும் என்ற பழைய திட்டத்தை அமைதியான வழியில் நிலைதாட்ட மீண்டும் முயன்றான். அதற்கான வாய்ப்பும் அவனுக்குக் கிடைத்தது. தளவாய் சடைக்கன் சேதுபதி இறந்த பொழுது, சேதுபதி சீமையினை மூன்று கூறுகளாக்கி மறவர் சீமையின் வலிமையைக் குறைக்க முயன்றான். இந்தத் திட்டமும் சில மாதங்களே செயல்பட்டது. மீண்டும் மறவர் சீமை ஒன்று சேர்ந்தது.”
“இப்பொழுது மூன்றாவது முறையாக சேதுபதி மன்னரை மட்டுமல்லாமல், சேதுபதி சீமை மறவர்களையும் அழிக்கத் திட்டமிட்டு கன்னடப் படையெடுப்பிற்கு காவுகொடுக்க மதுரை நாயக்கன் துணிந்தான். நாயக்க மன்னனது சூழ்ச்சியை உணராத தற்பொழுதைய சேதுபதி, நாயக்க மன்னரது உயிர்த் தோழரைப் போல தம்மை நினைத்துக் கொண்டு மதுரை மீதான கன்னடப் படையெடுப்பினை முறியடித்து இந்தப் புனித தமிழ் மண்ணில் வடுகரது ஆட்சி நிலை பெறுவதற்கு உதவி செய்துவிட்டார்.”
பெரியவர் பேச்சை தொடர முடியாமல், அங்கிருந்த நாடாள்வார்கள் கேள்விகளை எழுப்பினார்கள்.
"மதுரை நாயக்க மன்னர்கள் சேது நாட்டிற்குச் செய்துள்ள இத்தனை தீங்கினையும் திருமலை ரெகுநாத சேதுபதி மன்னர் அறிந்து இருப்பார்தானே. இருந்தும் மதுரை நாயக்கருக்கு சேதுபதி மன்னர் உதவுவதற்கு வேறு சிறப்பான காரணம் எதுவும் இருக்கிறதா?"
பெரியவர் சில வினாடிகள் அமைதியாக இருந்தார். மீண்டும் அவரது முகத்தில் வெறுப்பும் வெஞ்சினமும் இழையோடின.
"இப்பொழுது நான் சொல்லியவை அனைத்தும் சமீபகால வரலாறுதான். இதனை அனைவரும் அறிந்திருப்பர்.. அல்லது நமது முதியவர்கள் சொல்லக் கேட்டிருப்பர். ஆதலால் சேதுபதி மன்னர் அறியாது இருக்க ஏதுமில்லை. அப்புறம் ஏன் இந்த அவலம் என நீங்கள் கேட்பது நியாயமானது. என்ன செய்வது? சேதுபதி மன்னருக்கு இன உணர்வு இல்லை. அரசியல் செய்யத் தெரியவில்லை.”
"இந்த நிலை நீடித்தால் என்ன விளைவுகள் ஏற்படும்?" ஒரு நாடாள்வார் விளக்கம் கோரினார்.
"இந்த நிலையை நீடிக்க விடக் கூடாது என்பதுதான்நமது விருப்பம், தோக்கம் எல்லாம். மதுரை நாயக்க மன்னரது சார்பில் எட்டையாபுரத்தான் கலகத்தை அடக்க சேதுபதி மன்னர் சென்றதினால் பலநூறு மறவர் உயிரிழந்தனர். அடுத்து நடைபெற்ற சன்னடப் படையெடுப்பில் இன்னும் பல ஆயிரம் தாய்மார்களது தாலி பறிபோய்விட்டது. விளைவு, இன்று காலத்தே மழை பெய்தால்கூட கழனிகளில் ஏர் பூட்டி வேளாண்மைத் தொழிலில் ஈடுபட மறவர்கள் இல்லை.
எதிரிகளிடமிருந்து தமது மண்ணை காப்பதற்காக தமது மறவர்களின்
குருதி கொட்டப்படுமானால் அது நாட்டுணர்வு. இதைத் தவிர்த்து
அண்டை நாடுகளிலும் மதுரை நாயக்கரது ஏவலராக நமது சேதுபதி மன்னர் செயல்பட்டிருப்பது நமது சமுகத்தின் தன்மானத்தை தகர்த்து தலை குனிய வைத்துள்ள செயல் அலலவா? இப்பொழுது சொல்லுங்கள், இத்தகைய இழிவான செயல்களைச் செய்து கொண்டிருக்கும் மன்னர் நமக்குத் தேவையா? மறவர்களது இரத்தம் மாற்றானது மானத்தைக் காக்க ஏன் வீணாகக் கொட்டப்பட வேண்டும்? சிந்தித்துச் சொல்லுங்கள்."
ஆவேசம் கொண்டவர் போலப் பேசிய பெரியவர் பேச்சை முடித்து அமர்ந்தார்.
சில நிமிடங்கள் குழுமி இருந்தவர்களிடையே மெளனம் நிலவியது.
“இப்படியே இருந்தால் எப்படி? ஒவ்வொருவரும் பெரியவர் சொன்னதின் பேரில் என்ன செய்யலாம் என்பதைப் பற்றி சொன்னால்தானே மேற்கொண்டு நடவடிக்கை பற்றி முடிவு செய்யலாம். இது தனிப்பட்டோர் பிரச்சினையல்ல. நமது மறவர் சமுகத்தின் தன்மானம் பற்றியது. நமது நாட்டின் தலைவிதி பற்றியது. நாட்டுத் தலைவர்களாகிய நாம் பொறுப்புடன் செயல்படவேண்டும். ஆதலால் தங்களது அபிப்ராயங்களை ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லுங்கள்..." விரசிம்மனது வேண்டுகோள் இது.
உடனே பருத்திக்குடி நாட்டு நாடாள்வர், "நான் இதுவரை கேள்விப்பட்டதும் சற்று நேரத்திற்கு முன்னர் பெரியவர் சொன்னதும் ஒர மாதிரியாகத்தான் இருக்கிறது. சேதுபதி மன்னர் வலுவிழந்துவிட்டாரா? அல்லது வழிதவறிவிட்டாரா? என்பது ஆராயப்பட வேண்டியது. எனது கருத்தில் வழி காட்டியாக அமைய வேண்டியவர் வழி தவறிவிட்டார் என்றே கருதுகிறேன்” எனச் சொன்னதும்
ஏனைய நாடாள்வார்களும், "இனிமேல் நமக்கு இந்த மன்னர் தேவையில்லை. அரசியல் ஆவணங்களில் கூட தெலுங்கு மொழியைப் பயன்படுத்தும் இந்த மன்னர் மதுரை நாயக்கரது தனி பாளையச்காரராக இருக்கட்டும். மறவர் சீமைக்கு புதிய மன்னர் ஒருவரைத் தேர்வு செய்வோம்" என்று ஒரே குரலில் தங்களது வெறுப்பைத் தெரிவித்தனர்.
பெரியவர் தமது முயற்சியில் முதல் வெற்றி பெற்றதாக நினைத்து மனத்திற்குள் மகிழ்ந்தார். அவரது தோற்றத்தில் புதிய தெம்பு காணப்பட்டது. அவர் இப்பொழுது மீண்டும் பேசினார்.
"தங்களது முடிவு எனக்கு மன நிறைவைத் தருகிறது. அந்த முடிவுடண் கடந்த மூன்று ஆண்டுகளாக நானும் இந்த இளைஞர்களும் செயல்பட்டு வருகிறோம். அதன் விளக்கத்தையும் இப்பொழுது கூறுகிறேன். மறவர் சிமையின் வடக்கு, கிழக்குப் பகுதியில் இந்த அரசிற்கு எதிரான பிரச்சாரம் செய்து வருவதுடன் நமக்கு ஆதரவாகப் பல இளைஞர்களை நமது அணியில் இணைத்து வருகிறோம். இத்துடன் நமது திட்டத்திற்குத் தேவையான ஆயுதங்களைக் கூட டச்சு பரங்கிகளிடமிருந்து பெறுவதற்கும் பெரும் முயற்சி செய்து வருகிறோம். இது சம்பந்தமாக டச்சு பரங்கிகளை பத்து நாட்களுக்கு முன்னர் நமது தனுக்காத்த தேவர் யாழ்ப்பாணம் சென்று சந்தித்துப் பேசி வந்து இருக்கிறார். அவர் திரும்பியவுடன் நமது அடுத்து என்ன செய்வது என்பதை முடிவு செய்வோம்.” என்று தமது பேச்சை முடித்துக் கொண்டார்.
அதோடு, “வீரசிம்மா! சாப்பாடு? பரிமாற ஏற்பாடு செய்யுங்கள்.” என்று ஆணையிட்டார்.
"அப்படியே ஐயா!" எண்று பதில் சொன்ன வீர சிம்மனுடன் இளஞ்செழியனும் சமையல் நடக்கும் இடத்திற்குச் சென்றனர். நாடாள்வார்களும் எழுத்து கைகால் அலம்பிக் கொண்டு சாப்பிட ஆயத்தமானார்கள்.

Author: SudhaSri
Article Title: அத்தியாயம் -7
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.