அத்தியாயம் -25
நீண்ட இரவு இறுதியாக விடிந்தது. ஜீலம் சமவெளியில் மெல்லிய பனித்திரை விரிந்திருந்தது. புயலுக்கு முந்திய அமைதி, யானைகளின் இடைவிடாத சீறல், குதிரைகளின் தடுமாற்றம், இரு முகாம்களிலும் ஒலித்த போர்முரசுகளின் கனமான தாளத்தால் இவை மட்டுமே அங்கே கேட்டன.
அலெக்ஸாண்டரின் படை தயாராக நின்றது. சமவெளி முழுவதும் அவன் பாரம்பரிய படை உடைக்க முடியாத இரும்புச் சுவராக விரிந்தது. நீளமான ஈட்டிகள் வானை நோக்கி முளைத்து, ஒரே ஒத்திசைவில் முன்வந்து காலை சூரியனை நூற்றுக்கணக்கான வெள்ளிச் சுடர்களாக பிரதிபலித்தன. வரிசை வரிசையாக நின்ற பழம்பெரும் வீரர்கள், பாரசீயாவின் வெப்ப நிலங்களிலிருந்து பாக்திரியாவின் பனிமலை வரையிலும் அலெக்ஸாண்டருடன் நடந்தவர்கள், போரைச் சுவாசம் போலவே அறிந்தவர்கள். கவசங்கள் ஒன்றோடொன்று அடுக்கப்பட்டு ஒளிவீசின; மரணத்தின் நிழலில் எண்ணற்ற முறை நின்று உயிரோடு திரும்பிய வீரர்களின் முகங்களில் கடுமை உறைந்திருந்தது.
இருபுறங்களிலும் குதிரைப்படைகள் நிலத்தை தட்டி, குளிர்ந்த காற்றில் ஆவி பீச்சின. இவர்கள் மாசிடோனியாவின் பெருமை மிகு குதிரைப்படை. நீண்ட ஈட்டிகள் மின்ன, பார்வைகள் தூரத்தில் நின்ற புருஷோத்தமனின் யானைகளைக் குறிவைத்தன. அதன் பின்னால் இலகுவான குதிரைப்படைகள், ஆணை வந்தவுடன் ஈட்டியும் எறிகணையும் கொண்டு அழிவை ஏற்ப்படுத்தத் தயாராகக் காத்திருந்தனர்.
முன்வரிசைக்கு அப்பால் மாசிடோனிய பதாகைகள் உயர்ந்தன. காலை ஒளியில் அசைந்த அவற்றில் ஜீயூசின் கழுகு விரிந்த இறக்கைகளுடன் பறந்தது. எல்லையில்லா பேரரசின் கனவின் சின்னம். கொம்பு ஊதுபவர்கள் தயார் நிலையில் இருந்தார்கள். ஒலி எழுந்தால், படை நகரத் தயார்.
ஒவ்வொரு அணியும் குறைவில்லாமல் கச்சிதமாக அமைந்திருந்தது. மையம் அசைவில்லாமல் நின்றது; குதிரைப்படை பக்கவாட்டில் மின்னியது; வில்லாளரும் கல்லெறியாளரும் பாதுகாப்பாக பின்னால்; காப்புப்படைகள் இறுக இணைந்தன.
போர்க்களத்தின் அப்பால், புருஷோத்தமனின் படைகள் தங்கள் முழுப் பெருமையுடன் விரிந்தன. பயங்கரமும் தெய்வீகமும் கலந்த காட்சி. முன்வரிசையில் நின்ற யுத்த யானைகள், தந்தத்திலிருந்து வால் வரை கவசம் பூண்டிருந்தன. நெற்றித் தகடுகள், ஈட்டியால் மூடப்பட்ட குத்திகள். காலை ஒளியில் அவை மிருகங்கள் போல அல்ல, தேவர்களின் கோப வடிவங்கள் போலத் தோன்றின. அகன்ற முதுகில் அமர்ந்த மகவுட்கள் வருணன், இந்திரன் ஆகியோருக்கு மெல்ல பிரார்த்தனை செய்தனர். யானைகள் துதிக்கையை உயர்த்திக் கர்ஜித்து, பூமியே குலுங்கும் வகையில் சீறின.
இந்த உயிருள்ள சுவருக்குப் பின்னால் போரஸின் காலாட் படை, விவசாயிகளும் மேய்ப்பர்களும் வேட்டையாளர்களும் சிப்பாய்களுமாக. வெயிலில் கருகிய உடல்கள், மண்ணின் மீது பிறந்த தீ பார்வைகளில். நீள ஈட்டிகள் கூர்மையுடன் மின்ன, வளைந்த வாள்கள் உறையில் அமைதியாகக் காத்திருந்தன; குலப்பெருமையும் பழங்குடி அடையாளங்களும் பதிக்கப்பட்ட கேடயங்கள். நூற்றுக்கணக்கான வில்லாளர்கள் கையில் விஷமும் பூசப்பட்ட அம்புகள், ஒவ்வொன்றும் எதிரியின் இதயத்தை நோக்கிப் பாய்வதற்குக் காத்திருந்தன..
இந்தியக் குதிரைப்படைகள் பக்கவாட்டில் இடியென பாய்ந்தன. கூட்டாளி அரசர்களின் சின்னங்கள், பாம்புகள், சிங்கங்கள், உதய சூரியன் அவற்றுடன் சேர்ந்து பௌரவ கொடியும் உயர்ந்து பற்ந்தது. அதில், வலிமையையும் இறையாண்மையையும் பறைசாற்றும் விதமாக இரட்டை யானையின் உருவம்.
போர் ஒலி உயிர்ப்புற்றது. மண்ணெங்கும் இடியென முழங்கின முரசுகளும், சங்குகளும். இது சாதாரணப் போர் அல்ல,அது தர்மயுத்தம், புனித நிலத்தின் பாதுகாப்புப் போர்.
மொத்தமாக அவர்கள் ஐம்பதாயிரத்திற்கும் மேலான மனிதரும் மிருகங்களும், ஒரே சபதத்தில் கட்டுண்டவர்கள். புருஷோத்தமனின் அருகே முந்தைய விரோதங்களை மறந்து, கூட்டாளி அரசர்கள் ஆயுதம் உயர்த்தினர் மறு உலகத்தின் படைகளைத் தடுக்க.
ஆணை வருமுன், புருஷோத்தமன் முகாமிலிருந்து ஒரு தூதர் வந்து கடிதம் கொடுத்தான். அலெக்ஸாண்டர் அதை வாசித்தான். சொற்கள் எளியவை, ஆனால் புனிதமானவை.
“உன் வீரர்களில் பலர் எங்கள் படைகளுடன் போரில் விழுந்தனர். அவர்களுக்கான இறுதிச் சடங்குகள் செய்யப்படவில்லை. கிரேக்க மரபுகளை அறிந்திருந்தால், அவர்களுக்காக நானே செய்திருப்பேன். நீங்கள் விரும்பினால், அந்தச் சடங்குகள் நிறைவேறும் வரை போரைத் தாமதிப்பேன்.”
அலெக்ஸாண்டர் மௌனமாக வாசித்தான். அவன் நினைவில் விழுந்த வீரர்கள் எழுந்தனர். பாலைவனங்களையும் ஆறுகளையும் கடந்த இளைஞர்கள். மரியாதைக்குரியவர்கள். ஆனால் கருணைக்கு இடமில்லை.
அவன் எழுதினான்:
“போரஸ், போர்க்களத்திலும் எதிரியின் மரபுகளை நீங்கள் மதிப்பது என் மரியாதையைப் பெற்றுள்ளது. நீங்கள் உண்மையில் ஒரு மாபெரும் வீரர். ஆனால் கோரிக்கையை ஏற்க முடியாது. தாமதம் உயிருள்ளவர்களுக்கும் இறந்தவர்களுக்கும் அவமரியாதை. வெற்றி நிலைத்ததாக இருக்க வேண்டும். நான் வென்ற பின், உரிய மரியாதையுடன் சடங்குகளை நான் நடத்துவேன். இது விதியின் தீர்ப்பு.”
அதிகாலை வானம் இருண்டது. மேகங்கள் கனத்தன. இயற்கையே உலகம் மறக்கமுடியாத யுத்தத்தின் விளிம்பில் நிற்கிறது என்பதை அறிந்தது போல.
அந்தக் கடிதம் மீண்டும் அனுப்பப்பட்டு, புருஷோத்தமனின் கூடாரத்தில் உரக்க வாசிக்கப்பட்டது. பௌரவ அரசனின் புருவம் நெறிந்தது. ஆனாலும், அவன் உள்ளம் எதிரியின் மனவலிமையைப் பாரட்டியது.
ஒரு சொல்லும் பேசாமல் அவன் கடிதத்தை மடித்தான். கையை உயர்த்தினான். போர்முரசுகள் இடியென முழங்கின. அந்த ஒலியில் சமவெளியே நடுங்கியது.
போர்க்களத்தின் ஒரு முனையில், அலெக்ஸாண்டர் தனது நேசமான பியூசெபாலஸின் மேல் ஏறினான். அவனுடைய இளமையிலிருந்து அவனைத் தூக்கிய கருப்புக் குதிரை. அரசனைப் போலவே புராணம் பெற்ற உயிர்.
அதன் மேனியில் நள்ளிரவு போல் கருந்தூய்மை பட்டு விரிந்திருந்தது; நெற்றியில் மட்டும் ஒளிர்ந்த வெள்ளைநிறச் சுடர் தெய்வச் சின்னம் போல அந்த மிருகத்தைக் காட்டியது.
பியூசெபாலஸ் காலால் மண்ணைத் தட்டியது; மூக்குத்துளைகள் விரிந்து, குளிர்ந்த அதிகாலையில் ஆவி எழுந்தது. அது ஒரு குதிரை மட்டும் அல்ல; அலெக்ஸாண்டரின் நிழல், இரத்தத்தாலும் விதியாலும் அவனோடு கட்டிப்பிணைந்த ஒன்று. மத்தியதரைக் கடற்கரை முதல் சிந்து வரை, பேரரசுகள் இவர்களின் காலடியில் உருவானவை. இன்று, அவர்களின் மிகப்பெரிய சோதனைக்கு அவர்கள் தயார் நிலையில் நின்றனர்.
அலெக்ஸாண்டர் குனிந்து அதன் கழுத்தைத் தழுவியபோது, பியூசெபாலஸ் இடியெனக் கத்தினது, வரலாறே இந்த நாளில் சமநிலையடைந்திருப்பதை அது அறிந்ததுபோல்.
மறுபுறம், புருஷோத்தமன் தனது யுத்தக் குதிரையின் மேல் ஏறினான். புதிய பனியில் நிலவொளிபோல் ஒளிர்ந்த வெள்ளைக் குதிரை. அதன் மயிர் வெள்ளிநதிபோல் அலைந்தது. குதிகால் அடிகள் போர்முரசின் தாளத்துடன் மண்ணைத் தாக்கின. இது சாதாரணக் குதிரை அல்ல, எல்லைச் சண்டைகளில், பகை அரசர்களின் போர்களில், உச்சம் எட்டிய பெரும் படையெடுப்புகளில் அவனைச் சுமந்த உயிர்.
மேற்கின் மாபெரும் வெற்றியாளன். பொன்னலங்காரமும் பாதுகாப்புக் கவசமும் பூண்டவன்.
புருஷோத்தமன், இந்த மண்ணின் பாரபரியமாத்தின் சின்னம்.
அவன் குதிரையின் மேல் அமர்ந்தபோது, அவனது உயரிய உருவத்தின் முன்னால் குதிரை சிறியதாகத் தெரிந்தது.
இரு அரசர்கள். இரு வேறு உலகங்கள். சங்கம் முழங்கியது. படைகள் முன்னேறின.
போர் துவங்கியது.
இரு படைகளும் வெறியோடு மோதின; பூமியே நடுங்குவதைப் போலத் தோன்றியது. தூசும் எஃகும் காலை ஒளியில் பறந்தன; ஈட்டிகள் கேடயங்களில் மோதி நொறுங்கின; போர்ச்சத்தங்கள் அந்தச் சமவெளி முழுவதும் இடியென முழங்கின.
விஜயன் தனது முதலாவது ஆணையைக் கொடுத்தான், அது கணக்கிட்ட வஞ்சகம். பௌரவ முன்படை சற்றே சிதறுவது போல நடித்தது; பாளையத்தை மேலும் உள்ளே இழுக்கவே. தங்கள் ஒழுக்கத்தையே நம்பிய கிரேக்கர்கள் முன்னே தள்ளினர், அவர்களின் இரும்புச் சுவரை எதுவும் தடுக்க இயலாது என நம்பி. ஆனால் இந்திய வீரர்கள் பலவீனமாகத் தோன்றினாலும் தீர்மானத்தோடு நிலைநிறுத்தினர். அலை உடையும் தருணத்திற்காகக் காத்திருந்தனர்.
புருஷோத்தமன் அந்தப் படையின் மையத்தில் இருந்தான். குதிரைமேல் ஏற்றப்பட்ட ஒரு மாபெரும் கோட்டை போல ஒளிரும் கவசத்தில் மூடப்பட்ட அவன் உருவம் சூரிய ஒளியில் தீப்பொறிகளாய் திளைத்தது. வீரர்களின் கண்ணில் அவன் அசைக்கப்படாத நம்பிக்கையின் உருவம். அவனது வெள்ளை குதிரை நடுங்கும் மண்ணை வெடித்து முன்னேறியது; தூசியும் இரத்தமும் குதிரைக்காலடிகளில் சிதறின. அடர்ந்த எதிர்ப்புகளின் மையத்தே அவன் எஜமானனைச் சுமந்தது.
வலது கையில், பிற வீரர்களை அஞ்சவைக்கும் அளவு கனமான நீளவாள். ஆனால் அவன் பிடியில் அது காற்றில் பாடியது. ஒவ்வொரு வீச்சும் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியது. தலைக்கவசங்கள் பிளந்தன, கேடயங்கள் நொறுங்கின, கவசம் பூண்ட மாசிடோனியர்கள் தேவனின் கரம் பிளந்ததுபோல் தரையில் விழுந்தனர். ஒலித்த எஃகின் மோதலில் நெருப்புத் துகள்கல் பறந்தன; அவன் எஃகை எதிர்கொள்ள விரும்பிய ஒவ்வொரு வாளும் அடக்க முடியாத வலிமையால் பறந்து போனது.
அரசன் வாளால் மட்டும் தாக்கவில்லை. முதுகெங்கும் கட்டப்பட்ட ஈட்டிகளையும், சில நேரம் ஒன்றன்பின் ஒன்றாக நான்கு ஈட்டிகளை மின்னல் வேகத்தில் எறிந்தான். உயரிய வலிமையில் வீசப்பட்ட அந்தக் கணைகள் காற்றைக் கீறி, அடர்த்தியான கிரேக்க வரிசையில் பதிந்தன. கவசம், கேடயம் அவற்றைத் தாண்டி உடலைத் துளைத்தன. ஒரு ஈட்டி மூன்று… நான்கு வீரர்களை ஒரே நேரத்தில் குத்தி, அவர்கள் மண்டியிட்டு மண்ணில் சடலமாய் சாயும் படி செய்தது.
புருஷோத்தமன் விழுந்தோரிடமிருந்து ஈட்டிகளை மீட்டெடுத்து, உறுதியாகப் பிடித்து, கொடூர வேகத்தில் மீண்டும் எறிந்தான். வாளால் தாக்கு, ஈட்டியை வீசு, மீட்டெடு, மீண்டும் தாக்கு என்று ஒரு முறையுடன் சுறுசுறுப்பாகத் தொடர்ந்தான். போர்க்களமே அவன் தாளத்திற்கே ஆடுவது போலத் தோன்றியது.
அவன் எங்குப் பாய்ந்தானோ அங்கே எதிரியின் வரிசைகள் தளர்ந்தன. பெருமிதமும் ஒழுக்கமும் கொண்ட மாசிடோனிய பாளையம், விதியின் நதி அவர்களை இரண்டாகப் பிளந்ததுபோல் சிதறியது. மனிதர்கள் அலறினர், கேடயங்கள் நொறுங்கின, ஒருகாலத்தில் ஒழுங்காக இருந்த இரும்புச் சுவர், புருஷோத்தமன் முன்னேறிய ஒவ்வொரு கணமும் பீதியில் கரைந்தது.
இந்திரன் தன் மேகங்களில் இருந்து இடியெறிவதைப் போல, மரணத்தை அவன் நடுவே வீசினான். அவனை அணுகியோர் சீக்கிரமே இறந்தனர்; தப்பியோர் இன்னும் மோசமான ஓசையோடு அவன் கோபம் தங்களை அடைந்ததை உணர்ந்தனர்.
ஒவ்வொரு மூச்சிலும், ஒவ்வொரு வீச்சிலும், ஒவ்வொரு எறியிலும் புருஷோத்தமன் தனது வீரத்தைப் போர்க்களத்தில் ஆழமாகப் பறைசாற்றிக் கொண்டிருந்தான். ஜீலம் தனியை இரத்தமும் புகழும் கொண்டு பூசினான்.
அவன் குதிரை சுழற்காற்றுபோல் அவனைச் சுமந்தது. குதிகால்கள் மண்ணை இடியெனப் பிளந்தன; மாசிடோனிய வரிசைகளுக்குள் மரணப் பாதைகளை அவன் உண்டாக்கினான். ஆனால் வாள்களின் ஆரவாரத்துக்கும் மனிதர்களின் அலறலுக்கும் மேலாக, ஒரு புதிய ஓசை காற்றைக் கிழித்தது. அது ஒரு கணத்தில் மொத்தப் படையையும் அமைதிப் படுத்தியது.
புருஷோத்தமனின் யானை, பவன் கம்பீரமாக வந்து கொண்டிருந்தது. கவசம் கரிய பொன்னாய் ஒளிர, இரும்புத் தந்தங்கள் கூர்மையாய் மின்ன, படைகளுக்குள் பாய்ந்தது. அதன் அணுகலில் பூமியே நடுங்கியது.
அதன் வரவிற்கான காரணம் ந்த ஆணையின் அறிவு புருஷோத்தமனுக்கு தெளிவாகப் புரிந்தது. ஒரு கணமும் தாமதிக்காமல், புருஷோத்தமன் இறங்கி தனது தோழனை நோக்கி நடந்தான். வீரர்கள் களத்தில் கோஷமிட்டனர். அவர்களின் அரசன் தடிப்பான கயிறுகளைப் பிடித்து, யானையின் புறத்தில் ஏறினார். சில கணங்களில், அவன் உயரத்தில் நின்றான், உயரும் சூரியனின் முன் அவனது உருவம் சாயலாய் நின்றது.
இப்போது அவன் யானைமேல். வருணனின் சுத்தி போல. எஃகால் மூடப்பட்ட அதன் தந்தங்கள் மண் பாத்திரம் போல கேடயங்களைச் சிதைத்தன. தாக்கும் போது, அதன் பெரும் கால்கள் மனிதர்களைச் சேற்றில் நசுக்கின. யானையின் குரல், மரணத்தின் அலறலாய், எதிரிகளின் இதயங்களில் ஆழமாகப் பதிந்தது; தைரியம் காற்றில் தூளாய் சிதறியது.
யானை எங்குத் தள்ளாடியதோ, அங்கே பௌரவ வீரர்கள் வெற்றிக் கோஷத்தில் பொங்கினர். வீரர்கள் கேடயங்களை உயர்த்தினர், வரிசைகள் உறுதி பெற்றன; போர்சத்தங்கள் சமவெளி முழுவதும் முன் எப்போதும் இல்லாத வலிமையோடு எதிரொலித்தன.
அரசன், வலிமைமிக்க அஸ்திபஞ்சரங்களின் உச்சியில் உயர்ந்து நிற்பவன், அம்புகளைப் பொழிந்து, மரணத்தையே ஆணையிடும் ஆளுமை. வீரர்களின் உள்ளத்தில் சாதாரண துணிச்சலைக் கடந்து நிற்கும் ஒன்றை ஊட்டினான். தேவதைகள் தாமே இறங்கி அவர்களிடையே தீப்பற்ற வைத்ததுபோல் தோன்றியது.
புருஷோத்தமன் தனது வில்லைக் கையுயர்த்தி, போர்க்களமே நடுங்கும் அளவுக்கு இடியென முழங்கும் ஓர் ஒலியை எழுப்பினான். அவன் படை அடங்கா வெறியுடன் எழுந்தது. அந்தக் கணத்தில், அவன் இனி பௌரவர்களின் அரசன் புருஷோத்தமன் மட்டும் அல்ல. அவன் புருஷோத்தமன், போரின் கோபம் மனித உருவில் திரண்ட முறியடிக்க முடியாத சக்தி.
அந்தக் குழப்ப நடுவே, ஒரு நொடியளவு, புருஷோத்தமன் தனது யானையை நிறுத்தி, சமவெளி முழுக்க இடியென ஒலிக்கும்படி புருஷோத்தமன் முழங்கினான்:
“போரினை அறிவோடு அணுகுபவன் தான் வெற்றிக்கும் காரணமாக இருப்பான். அவன் வாள் நூறு ஆயுதங்களுக்குச் சமமானதாக இருந்தாலும்,
எதிரியை ஆட்கொள்வது அந்த வாளை இயக்கும் அறிவே இதை நினைவில் வைத்துச் செயல்படுங்கள்.”
அந்தச் சொற்கள் போர்க்களம் முழுதும் எஃகின் மோதலிலும், யானைகளின் அலறலிலும் சுமந்து செல்லப்பட்டு எதிரொலித்தன. கேட்ட வீரர்கள் கர்ஜித்தனர்; அவர்களின் நம்பிக்கை இரட்டிப்பு ஆனது. அவர்கள் பின்தொடர்ந்தது ஒரு யுக்தி மட்டும் அல்ல, அது தர்மம்.
புருஷோத்தமனின் அருகில் விஜயன் பயமற்ற வெறியோடு மாசிடோனியர்களைத் தகர்த்தான். மின்னலைப் போல அவன் அம்புகள் பாய்ந்தன. தோளோடு தோள் இணைந்து, அரசனும் தளபதியும் இரட்டைப் புயல்களாய் மாறி, எதிர்த்தவர் யாரும் நின்றுவிட முடியாத அழிவை உருவாக்கினர்
___________________
போர்க்களத்தின் மறுபுறம், அலெக்ஸாண்டர் தனது வரலாற்றை இரத்தத்திலும் எஃகிலும் செதுக்கினான். அவன் வாள் வெள்ளைத் தீக்கீற்றாய் மின்னியது; ஒவ்வொரு இயக்கமும் கண்டங்கள் கடந்து பயிற்சியால் மெருகூட்டப்பட்ட துல்லியம்.
மாசிடோனிய ஆயுதங்கள் கேடயங்களைக் கீறி, மனிதர்களை காகிதம் போல பிளந்தது. சில குத்துகள் உடலை முழுவதாய் துண்டாக்கின. சேற்றில் உடல்கள் சாய்ந்தன; இரத்தமும் மண்ணும் கலந்து, பியூசெபாலஸ் முன்னேறிய பாதையில் கொடூர ஆறுகளாய் ஓடின.
பௌரவர்களின் வரிசைகளில் ஒரு பயம் பரவியது. இவ்வாறு யாரும் போராடியதை அவர்கள் கண்டதில்லை. மரணமே அவன் கையை வழிநடத்துவது போல இருந்தது. ஒருநொடியும் தளராமல், அலெக்ஸாண்டர் தொடர்ந்து தாக்கினான். மற்றவர்கள் சோர்ந்தபோது, அவன் மேலும் கூர்மையானான்; மேலும் விரைந்தான். அவன் கவசத்தில் படிந்த இரத்தம், அவனைப் பார்க்க இன்னும் பயங்கரமாக மாற்றியது.
அவ்வளவு அச்சத்திலும், பௌரவர்கள் தங்கள் நிலத்தின் கவசமாக நின்றனர். வீட்டில் காத்திருக்கும் தாய்மார்கள், தந்தைகள், பிள்ளைகள்; புலங்களும் ஆலயங்களும் புனித நதிகளும் அவற்றைக் காக்க வேண்டி அவர்கள் செய்த சத்தியம் அவர்களளைத் தாங்கி நின்றது. பறந்த ஒவ்வொரு அம்பும் புருஷோத்தமனுக்காக மட்டும் அல்ல. அவர்கள் போற்றிய அனைத்திற்காகவும்.
பின்வாங்கல் என்பது, அரசனை மட்டும் அல்ல, தேவர்கள், மண், சத்தியம், மக்கள் அனைத்தையும் கைவிடுதலே. ஆகவே அலெக்ஸாண்டரின் வாளின் நரகச் சுழல்விலும், இதயங்களைப் பற்றிய அச்சத்தை அறுத்துத் தள்ளி, சவாலை முழங்கிக்கொண்டு அவர்கள் முன்வந்து மரணத்துள் பாய்ந்தனர்..
அலெக்ஸாண்டர் ஒலிம்பசின் சக்தியாய் போராடினான்;
பௌரவர்கள் ஆயிரம் சிங்கங்களின் இதயத்தோடு எதிர்த்தனர்.
அலெக்ஸாண்டரின் அசைவுகள் மனிதர்க்கு அப்பாற்பட்டவை. கண் தொடர்ந்து பிடிக்க முடியாத வேகம். ஒவ்வொரு அடியும் அடுத்ததோடு இசைந்து ஓடியது; மரணத்தை வடிக்கும் சிற்பியின் கைத்திறன் போல. கவசச்சுமையோ சோர்வோ அவனை கட்டுப்படுத்தவில்லை. அவன் வாள் நீரைக் கீறும் கம்புபோல் எளிதில் வெட்டிக் கடந்தது. எதிரிகளுக்குப் பெரும் மாயை ஒன்று தோன்றியது—அவன் போராடவில்லை; விளையாடினான், அவனுக்கே உரிய விளையாட்டாய்.
அவனின் ஒவ்வொரு கைஆட்டமும் கேடயங்களை நொறுக்கியது; கவசங்களைச் சிதறடித்தது; மனிதர்களை உடைந்த ஓட்டைகளாக்கியது. கொடூர வலிமையின்றியும், அபூர்வமான கம்பீரத்தோடு அவன் வாள் மாம்சம், எலும்பு என்பவற்றை எதிர்ப்பில்லாமல் கிழித்தது. இரத்தம் காற்றையே செம்மஞ்சள் நிறத்தில் மாற்றியது. ஒவ்வொரு செயலையும் அசைக்க முடியாத அமைதியுடன் நிறைவேற்றினான்.
மற்றவர்கள் சோர்வில் முறிந்த இடத்திலும், அவன் அசைக்க முடியாதவனாய் தோன்றினான். இரத்தமும் அலறல்களும் சூழ்ந்த அந்தப் புகைமூட்டத்தில், அவன் எரியும் ஜ்வாலையாக நின்றான். அவனுடைய கோபம் கண்மூடித்தனமல்ல; அது கட்டுப்பாட்டிலிருந்தது, அடங்காத கோபத்துடன் இணைந்த இரும்பு ஒழுக்கம். ஒவ்வொரு குத்தும், ஒவ்வொரு வெட்டும், ஒவ்வொரு அடியும், போர்தெய்வத்தின் கொந்தளிப்பால் வழிநடத்தப்பட்டது போல் இருந்தது.
அவன் செல்லும் இடமெல்லாம், அவனுக்குப் பின்னால் அவன் வீரர்கள் புதுப்பித்த வீரியத்துடன் ஓடினர். ஆசியா முழுவதும் வெற்றிகளால் கடினமான மாசிடோனியர்கள், இப்போது அலெக்ஸாண்டர் தலைமை தாங்கும் போது தங்களை அடக்க முடியாதவர்களாக உணர்ந்தனர். அவன் இருப்பே அவர்களின் இரத்தத்தில் தைரியத்தை அழுத்திப் புகுத்தியது; கேடயங்களை உறுதிப்படுத்தி, ஈட்டிகளை வேகப்படுத்தி, போர்க்குரல்களை கூர்மையாக்கியது. அவனுக்குப் பின்னால் அவர்கள் பெருக்கெடுத்த அலையாகப் பாய்ந்தனர். குதிரைப்படை சுழன்றது; திறந்த இடமெல்லாம் அவர்கள் தாக்கினர்.
போர்க்களமே அலெக்ஸாண்டரின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டது போலிருந்தது. அவன் சென்ற திசையெல்லாம் அலைகள் எழுந்தன.
அதே வேளை, தனது கட்டளை மையத்திலிருந்து கவனித்துக் கொண்டிருந்த பிரதாபன், “புயலை திறந்துவிடுங்கள்! னமது மண்ணின் கோபத்தை அவர்கள் சுவைக்கட்டும்!” என்று கூவினான்.
அவனது கட்டளையில் காடுகள் திடீரென உயிர்ப்பெற்றன. ஆயிரக்கணக்கான பௌரவ வில்லாளர்கள், மரங்களின் அடர்ந்த நிழலிலும் கிளைகளின் அரண்களிலும் மறைந்திருந்தவர்கள், ஒருங்கிணைந்த தாளத்தில் அம்புகளை விடுத்தனர். வானம் இருண்டது மழையால் அல்ல, மரணப் புயலால்.
ஒவ்வொரு அம்பும் துல்லியத்துடன் பறந்தது. மாதக்கணக்கான பயிற்சியும், பிரதாபனின் தொலைநோக்குப் பார்வையும் அதன் பின்னால் இருந்தன. குதிரைகளை கிழித்த அம்புகள், குதிரையோடிகளை மண்ணில் வீழ்த்தின. தங்கள் வீரர்களை ஊக்குவிக்க குரல் எழுப்பிய தளபதிகளை அம்புகள் வீழ்த்தி, அக்குரல்களை மௌனமாக்கின. இறுக்கமாக நிற்கும் காலாட் படைகளின் வரிசைகளுக்குள் புகுந்த அம்புகள், ஒருகாலத்தில் உடைக்க முடியாததாகத் தோன்றிய அலெக்ஸாண்டரின் குதிரைப்படையில் பிளவுகளை உருவாக்கின. மாசிடோனியர்கள், எதிரியைப் பார்க்க முடியாமல், திடீர் பீதியில் கத்தினர். காணாத இடத்திலிருந்து இரும்பு மழை பொழிகிறதென உணர்ந்தனர்.
அலெக்ஸாண்டர் தானே விதியால் செதுக்கப்பட்ட சிலை போல நின்றான்.சிறிய மனிதர்களை விழுங்கிய குழப்பம் அவனைத் தொடாதிருந்தது. அம்புகள் தாராளமாகப் பொழிந்தன; மரணச் செய்தியாளர்கள் போல காற்றைச் சீரழித்தன. ஆனால் அவனது வாள் எங்கும் மின்னியது,பறக்கும் ஈட்டிகளை நடுவானிலேயே கிழித்தது. மரம் வெண்கலத்தைச் சந்திக்கும் போது தீப்பொறிகள் பறந்தன; உடைந்த அம்புகள், அவனைத் தொடுவதற்கு முன்பே சேற்றில் விழுந்தன. வானமே கோபமாய்த் தாக்கும் போதும், அலெக்ஸாண்டர் அமைதியுடன் நகர்ந்தான்.
பியூசெபாலஸ், மனிதமும் தெய்வீகமும் கலந்த அழகுடன் நகர்ந்தது. வீழும் அம்புகளுக்கிடையே அசாதாரண துல்லியத்துடன் சுழன்றது. அது அம்புக் குவியல்களைத் தாண்டி செல்லும்போது, அதன் குதிகால்கள் நிலத்தைத் துளைக்கும் அளவுக்கு பாய்ந்தன. இது பயிற்சியின் விளைவு அல்ல, எண்ணற்ற போர்களில் உருவான உயிர்வாழ்வு உணர்வு. இங்கும், அது மரணத்துடன் நடனமாடியது—மரணமே தயங்கியது.
பார்ப்பவர்களுக்கு, குதிரையும் அரசனும் இரண்டு தனி உயிர்கள் போல அல்ல; ஒன்றாய் உருகிய ஓர் உருவமாகத் தோன்றின. அலெக்ஸாண்டர் சாய்ந்தால் பியூசெபாலஸ் சாய்ந்தது; காளை வலப்புறம் திரும்பினால், அரசனின் வாள் அதே திசையில் பாய்ந்தது.
போரின் இரைச்சலில், அலெக்ஸாண்டரின் பியூசெபாலசுடனான பிணைப்பு நிலைத்த ஒன்றாக இருந்தது. அவன் மதித்த தளபதிகளும், நம்பிய வீரர்களும் இருந்தனர். ஆனால் அவன் இந்தக் குதிரையைப் போல யாரையும் நேசிக்கவில்லை. இது ஒரு வாகனம் அல்ல; ஒரு தோழன், உடன்போராளி, போரில் உருவான அலெக்ஸாண்டரின் ஆன்மாவின் ஒரு துண்டு. வெற்றியாளர் ஒருநாள் மனிதர்களையும், நிலங்களையும், பேரரசுகளையும் இழக்கலாம். ஆனால் விதியின் உலையில் அவனைத் தயங்காமல் சுமந்து வந்த இந்த உயிரை இழப்பது அவனுக்குச் சிந்திக்கமுடியாததாக இருந்தது.
அவ்வாறு, மனிதனும் மிருகமும் ஒன்றாய் புயலை வெட்டிக்கொண்டு முன்னேறினர். வானிலிருந்து வரும் அம்புகளை அவர்கள் இழைபோல் வெட்டி வீழ்த்தினர். ஆனால் அலெக்ஸாண்டரின் திறமையால் மட்டும் அவனைச் சுற்றியிருந்த ஆயிரங்களை காப்பாற்ற முடியவில்லை. மண் விரைவில் இரத்தத்தில் மின்னியது; கிரேக்க வீரர்கள் குவியல்களாக விழுந்தனர். குதிரைகள் வேதனையில் கத்தின; தங்கள் உடல்களின் கீழ் வீரர்களைச் சிக்கவைத்து சுருண்டன. மரணம் பெருக்கெடுத்தது. இந்தப் புயல் தொடர்ந்தால், மாசிடோனியப் படை முறியும் நிலை ஏற்பட்டது.
இருப்பினும், அலெக்ஸாண்டரின் அறிவு, அவனுடைய வாளைப் போல கூர்மையானது, வேகமாகக் கணக்கிட்டது. அவன் அருகில், சில தளபதிகள் உயிர்தப்பினர்; அவர்கள் ஆத்திரமான கட்டளைகளை விடுத்தனர். வீரர்கள் கேடயங்களைத் தலைக்கு மேலே உயர்த்தி, ஒருவர்மேல் ஒருவர் ஒட்டி, பெரிய இரும்புச் சங்கிலி போன்ற அமைப்புகளை உருவாக்கினர். அது புயலிலிருந்து சிறிய பாதுகாப்பைக் கொடுத்தது.
தங்கள் படை சரியத் தொடங்கியதை உணர்ந்து, “யானைகளை விடுவிக்கவும்!” என்று தனது குதிரையின் மேல் இருந்து ஆணையிட்டான் மலையகேது.
ஒரே கணத்தில் போர் முழக்கங்கள் ஒலித்தன. முழுவதும் கவசம் அணிந்த போர் யானைகள், இயக்கத்தில் உள்ள தெய்வீக மலைகளைப் போல முன்னே பாய்ந்தன. சிதறிய கிரேக்கர்கள் அந்த மிருகங்கள் நெருங்குவதைக் கண்டு திகைப்பில் உறைந்தனர். பலர் நடுங்கி, ஈட்டிகளை கீழே போட்டனர்; நிழல்கள் அவர்கள்மீது விழுந்தன. எஃகால் மூடப்பட்ட தந்தங்களும் உயர்த்தப்பட்ட துதிக்கைகளும் கொண்ட அந்தக் காட்சியே அவர்களின் இதயங்களில் இருந்த தைரியத்தை நசுக்கியது. சிலர் ஓடினர்; ஆனால் பெரும் குதிகால்களின் கீழ் தட்டையாக மிதிக்கப்பட்டனர். மற்றவர்கள் போராடினர். யானைகள், தானியத் தண்டுகளின் வழியே உழுவது போல, அவர்களுக்குள் ஊடுருவிச் சென்றன.
வில்லாளர்கள் அந்த மிருகங்களின் மேல் ஏறி, அம்புகளை மழையாக்கினர். யானைகள் மாசிடோனியப் படைவடைகளை நசுக்கி, குத்தி, கர்ஜித்தபோது போர்க்களம் அச்சத்தாலும் கோபத்தாலும் அலறியது.
அலெக்சாண்டர் அந்த குழப்பத்தை விரிந்த கண்களுடன் நோக்கினான். இதற்கு முன் இத்தனை கொடூரமான, மாபெரும் மகத்துவம் கொண்ட போரைக் கண்டதில்லை. அது பயமுறுத்தியது. ஆனால் அதே நேரத்தில் போதையூட்டும் பரவசமும் அளித்தது. “இது சாதாரணப் படையெடுப்பு அல்ல,” என்று சொல்லிக் கொண்டான்.
“இது வரலாறு.”
ஆனாலும், அவன் கொண்ட அதிசயமும் அபாயத்தை மறைக்கவில்லை. யானைகள் அவனது படையைச் சிதைத்துக் கொண்டிருந்தன; அவற்றின் தாண்டவம் தடுக்க முடியாததாக இருந்தது. அப்போது அவன் கண்கள் கொடூரமான தெளிவுடன் கூர்மையடைந்தன. போரின் உண்மையை அவன் அறிந்தான். போரஸைக் கொன்றால், அத்தனையும் முறியும்.
புயலின் சத்தத்தை மீறி குரலை உயர்த்தி, அலெக்சாண்டர் கட்டளையிட்டான்:
“ தளபதிகளே! யானைகளைத் தடுத்து நிறுத்துங்கள்! அவற்றைத் திசைதிருப்புங்கள், எரியவிடுங்கள், எதை வேண்டுமானாலும் செய்யுங்கள்! அரசனே பெரிய பரிசாக இருக்கும் போது நான் மிருகங்களுடன் போரிட மாட்டேன். நான் போரஸை நோக்கிச் செல்கிறேன்!”
அவன் தன் சிறந்த தளபதிகளில் மூவர் அல்லது நால்வரைச் சேர்த்துக் கொண்டு, தன் திறமைக்கு இணையான வீரர்களுடன், பியூசெபாலஸை முன்னோக்கி உந்தினான். அந்த கருப்பு குதிரை இயக்கத்தில் பாய்ந்து, புகை, தூசி ஆகியவற்றைக் கிழித்து முன்னேறியது.
“போரஸைக் கண்டுபிடித்து, ஒரே அடியில் யுத்தத்தை முடிக்க வேண்டும்” இப்போது அலெக்சாண்டரின் இலக்கு தெளிவாக இருந்தது.
விஜயன், மாசிடோனியத் தளபதிகளுடன் போரீடுக் கொண்டிருந்தான். அவனது இலக்கு அலெக்ஸாண்டரை நேருக்கு நேர் தாக்குவதக இருந்தது. ஒரு கணத்தில், மாசிடோனிய அரசன் யானைகளுக்கு நடுவிலும் பக்கவரிசைகளிலும் இல்லை என்பதை அவன் கவனித்தான்.
புருஷோத்தமனை நோக்கி அவன் முன்னேறி விட்டான் என்பதை அறிந்து கொண்டு தன் அரசனை அடைய முயன்றான்.

Author: SudhaSri
Article Title: அத்தியாய்ம் - 25
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.