• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

அத்தியாய்ம் - 7

Puvana

Active member
Jun 19, 2024
181
3
43
நவராத்திரி 7



தண்டினி எனப்படும் மஹா வாராஹி தேவி அம்பிகையின் மிருதுவான புஷ்ப பாணங்களிலிருந்து தோன்றியவள். ஆயினும் இவள் மகா உத்ர ஸ்வரூபிணியாக விளங்கினாள். லலிதாம்பிகையின் சக்தி சேனைகளின் தலைவியாக விளங்குபவள் மஹா வாராஹி தேவி. அம்பிகை தன் புருவ நெறிப்பில் ஒரு தண்டத்தை உருவாக்கி இவளுக்கு அளித்ததால் தண்டநாதா என்று பெயர் பெற்றாள்.



வராஹமுகியான தேவி தன்னைப் போன்ற உருவம் கொண்ட சக்தி சேனைகள் சூழ, கறுத்த வஸ்திரம் உடுத்தி, கையில் உலக்கையையும், கலப்பையையும் ஏந்தி கோரைப் பற்களுடன், உக்ரபார்வையோடு

தனது கிரிசக்ர ரதத்திலிருந்து இறங்கி மூன்று யோஜனை தூரம், உயரமாய் உள்ள தனது வஜ்ரகோஷம் என்னும் சிம்மத்தின் மீதேறி, கோபம் கொண்டு கிளம்பியபோது மூவுலகமும் நடுநடுங்கியது. அமரர் அனைவரும் அவளுடைய கோபம் கண்டு அஞ்சினர்.



இவள் உலகை எரித்துச் சாம்பலாக்கி விடுவாளோ, உலக்கையால் பூமியை இருகூறாகப் பிளந்துவிடுவாளோ, கலப்பையால் கடலைக் கலக்குவாளோ என்று அஞ்சி வெகு தூரம் சென்று, அவளைப் பனிரெண்டு நாமாக்களால் துதித்தனர்.



இந்தப் பன்னிரண்டு நாமாக்கள் எவை என்பதை ஹயக்ரீவர் அகத்தியருக்குக் கூறினார். அவை



1. பஞ்சமி

2. தண்டநாதா

3. ஸங்கேதா

4. ஸமயேஸ்வரி

5. ஸமயஸங்கேதா

6. வாராஹி

7. வார்த்தாளீ

8. சிவா

9. போத்ரிணீ

10. மஹாசேனா

11. அரிக்னீ

12. ஆக்ஞா சக்ரேஸ்வரி



என்பவை ஆகும்.



இந்த 12 நாமாக்கள் என்னும் வஜ்ர கவசத்தை அணிந்தவர் ஒரு போதும் துன்பத்தை அடைய மாட்டார்.



இங்ஙனம் துதிக்கும் தேவர்களின் நன்மையை மனதில் கொண்டே, தேவி யுத்தத்திற்குக் கிளம்பிச் சென்றாள்.



சக்தி சேனை, பண்டாசுரனை நோக்கிப் படையெடுத்து ஆர்ப்பரித்துச் சென்றது. இத்தனை போர் முழக்கங்களுக்கு நடுவே இன்னிசைக் கச்சேரியும், வீணாகானம், நாட்டிய ஜதிகளும் முழங்கிய வண்ணம் இருந்தன. அன்னம், கிளி போன்ற வாகனங்களில் அமர்ந்து தேவதைகள் பாடுகிறார்கள்.



இதென்ன விந்தை?அம்பிகையிடம் முத்திரை மோதிரம் பெற்று ஸ்ரீ ராஜமாதங்கி கம்பீரமாக வந்து கொண்டிருக்கிறாள். சியாமளா தேவி சங்கீதப் பிரியை. அதனால் அவளுடைய தேர் நகரும் பொழுது திவ்யமான சங்கீத ஒலி எழுப்புகிறது. ஏழு அடுக்குகளைக் கொண்ட கேய சக்ர ரதத்தில் தேவதைகள் புடைசூழ, கையில் கிளி கொஞ்ச, ராஜ சியாமளா தேவி லலிதா தேவியின் அருகிலேயே அவளை வணங்கிக்கொண்டே பவனி வருகிறாள். அம்பிகையின் முக்கிய ஆயுதமான கரும்பு வில்லிலிருந்து தோன்றியவள் ராஜ மாதங்கி. லலிதாவுக்கு மிகவும் பிரியமானவள். அவளால் மந்திரியாக நியமிக்கப்பட்டவர்.

மந்த்ரிணி பவனி வரும் அழகை கண்டு அமரர்கள் அவளை உன்னதமான 16 நாமாக்களால் துதித்தனர். அவை,



1.சங்கீத யோகினி

2.சியாமா

3 .சியாமளா

4. மந்த்ர நாயிகா

5. மந்த்ரிணி

6. ஸசிவேசானி

7. பிரதானேசி

8. சுகப்ரியா

9. வீணாவதி

10. வைணிகீ

11. முத்ரிணீ

12 ப்ரியகப் ப்ரியா

13. நீப ப்ரியா

14. கதம்பேசி

15. கதம்பவன வாஸினி

16. ஸதாமதா



இந்த பதினாறு நாமாக்களை பக்தியுடன் ஒருமுறை ஜெபித்தாலும் அவர்களுக்கு மூவுலகங்களும் வசமாகிவிடும்.



ச்யாமளையின் கையிலிருந்த கிளி தனூர் வேதத்தின் நாயகனாக தோன்றி அவளுக்கு சிரஞ்சீவம் என்னும் அம்பையும் வற்றாத அம்பறாத்தூணியையும் வழங்கிப் பணிந்தது.



அம்பாளின் ஸ்ரீசக்ரராஜ ரதமானது 4 யோஜனை அகலமும், 10 யோஜனை உயரமும், 9 சுற்றுக்கள் கொண்டதாக பிரம்மாண்ட புராணம் வர்ணிக்கிறது.



ஒவ்வொரு சுற்றும் அதில் உள்ள தேவதைகளும் வருமாறு :-



9 வது சுற்று



அணிமா ,லகிமா, மஹிமா, ஈசித்வம், வசித்வம், ப்ராகாம்யம், புக்தி , இச்சா, ப்ராப்தி, ஸர்வகாம்ம் என்னும் 10 சித்திகள், ப்ராஹ்மி மாஹேச்வரி கௌமாரி வைஷ்ணவி வாராஹி மாஹேந்த்ரி சாமுண்டே மஹாலக்ஷ்மி என்னும் 8 மாதர்கள், ஸர்வ ஸம்க்ஷோபிணி ஸர்வ வித்ராவிணி ஸர்வாகர்ஷிணி ஸர்வ வசங்கரி ஸர்வோந்மாதிநி ஸர்வமஹாங்குசே ஸர்வகேசரி ஸர்வபீஜே ஸர்வயோநே ஸர்வத்ரிகண்டே என்னும் 10 முத்ரா சக்திகள். இவை அனைத்தும் சேர்ந்து ப்ரகட யோகினிகள் எனப்படுவார்கள்.



8 ஆவது சுற்று :-



காமேச்வரி பகமாலினி நித்யக்லிந்நே பேருண்டே வஹ்நி வாஸிநி மஹா வஜ்ரேச்வரி சிவதூதி த்வரிதே குலஸுந்தரி நித்யே நீலபதாகே விஜயே ஸர்வமங்களே ஜ்வாலாமாலினி சித்ரே மஹாநித்யே பரமேச்வர பரமேச்வரி என்னும் 16 சந்திர கலா தேவதைகள்.



7 ஆவது சுற்று :-



அநங்ககுஸுமே அநங்கமேகலே அனங்கமதனே அநங்கமதநாதுரே அநங்கரேகே அநங்கவேகினி அனங்காங்குசே அனங்கமாலினி குப்ததரயோகினி வைதிகதர்சனாங்கி என்னும் 8 அநங்க சக்திகள். இவர்கள் அனைவரும் குப்ததர யோகினிகள் எனப்படுவர்.



6 வது சுற்று :-



ஸர்வஸம்க்ஷோபிணி ஸர்வ வித்ராவிணி ஸர்வாகர்ஷிணி ஸர்வாஹ்லாதினி ஸர்வஸம்மோஹிநி ஸர்வஸ்தம்பிநி ஸர்வஜ்ரும்பிணி ஸர்வவசங்கரி ஸர்வரஞ்ஜநி ஸர்வோந்மாதிநி ஸர்வார்த்தஸாதிகே ஸர்வஸம்பத்திபூரணி ஸர்வமந்த்ரமயி ஸர்வத்வந்தக்ஷயங்கரி என

சம்பிரதாய யோகினிகள் என்னும் 14 சக்திகள்.



5 வது சுற்று :-



ஸர்வஸித்திப்ரதே ஸர்வஸம்பத்ப்ரதே ஸர்வப்ரியங்கரி ஸர்வமங்களகாரிணி ஸர்வகாமப்ரதே ஸர்வது:க்க விமோசநி ஸர்வம்ருத்யுப்ரசமநி ஸர்வவிக்ந நிவாரிணி ஸர்வாங்கஸுந்தரி ஸர்வஸௌபாக்யதாயினி என

குலோத்தீர்‍ண யோகினிகள் என்னும் 10 சக்திகள்.







4 வது சுற்று :-



ஸர்வஜ்ஞே ஸர்வசக்தே ஸர்வைச்வர்ய ப்ரதே ஸர்வஜ்ஞாநமயி ஸர்வவ்யாதி நிவாரிணி ஸர்வாதார ஸ்வரூபே ஸர்வ பாபஹரே ஸர்வாநந்தமயி ஸர்வரக்ஷாஸ்வரூபிணி ஸர்வேப்ஸித பலப்ரதே என

நிகர்ப்ப யோகினிகள் என்னும் 10 சக்திகள்.



3 வது சுற்று :-



வசிநி காமேசி மோதினி விமலே அருணே ஜயினி ஸர்வேச்வரி கௌலினி

என

ரஹஸ்ய யோகினிகள் என்னும் 8 வாக்தேவதைகள்.



2 வது சுற்று :-



காமேசீ, வஜ்ரேசீ, பகமாலினீ என்னும் 3 சக்திகள். இவர்கள் அனைவரும் அதிரஹஸ்ய யோகினிகள் எனப்படுவர்.



முதல் சுற்று :-



இவர்கள் தேவிக்குச் சமமான பலமுள்ளவர்கள். அவளுக்கு மிக அந்தரங்கமானவர்களும் ஆவர்.

ஆனந்த மயமான மஹா பீடமான மத்திய பர்வாவைச் சுற்றிலும் திதி நித்யாக்கள் என்னும் 15 சக்திகள் வீற்றிருக்கின்றனர்.



இவர்கள் 15 பேரும், ஸ்ரீதேவிக்குச் சமமான ரூபமும், ஆயுதங்களையும் உடையவர்கள்.



மத்தியில் ஸ்ரீதேவி வீற்றிருக்கிறாள்,

இந்த ரதத்திற்கு இரா தேவி, திரிபுர பைரவி, சம்ஹார பைரவர், ரக்த யோகினி, வல்லப ஸாரஸர், சாமுண்டா என்னும் 6 சாரதிகள் உள்ளனர்.



தொடர்வோம்



புவனா சந்திரசேகரன்