ஆடுமடி தொட்டில் இனி - 11
"இன்னும் ஒரு ஸ்பூன் வாங்கிக்கோ. ஒரே ஒரு ஸ்பூன். ஃப்ரஷ்ஷா வெஜிடபிள்ஸ் எல்லாம் போட்டு நானே செஞ்சிட்டு வந்திருக்கேன் பாரு. சூடா இருக்கும் போதே சாப்பிட்டா தான் டேஸ்ட்டே தெரியாது."
"ம்ச் வேணாம் மாது. எனக்குப் பசியே இல்லை."
"அடம் பிடிக்காதே ஸ்வீட்டி. உடம்பு தேற வேண்டாமா? இப்போவே கழுத்து எலும்பெல்லாம் தெரியுது பாரு. தேவாங்கோட அடுத்த வெர்ஷன் மாதிரி இருக்க"
"அங்கே மட்டும் என்னவாம் கண்ணைச் சுத்தி ஒளிவட்டம் தெரியுதே... "
கட்டிலில் அவள் அருகே அமர்ந்து மனைவியை சூப் குடிக்க வைக்கும் முயற்சியில் இறங்கி இருந்தான் மாதவன். கடந்து வந்த கசப்பான நாட்களில் கணவன் மனைவி இருவருமே பாதியாளாய் தெரிந்தனர்.
"குட் ஈவினிங் மாதவா!" என்றபடி உள்ளே நுழைந்தார் அருந்ததி. அவருடன் வால் பிடித்தபடி இரண்டு ஜூனியர்ஸ், நியதியும் அவளது தோழியும்.
"குட் ஈவினிங் ஆன்ட்டி!'
"என்ன ஸ்வீட்டி எதுக்கு அடம் பிடிக்கிற? மாதவன் என்ன பண்றான்? என் கிட்ட சொல்லு, இரண்டு தட்டி வைக்கிறேன்"
"ஆன்ட்டீஈஈஈ" என்று பல்லைக் கடித்தவனை என்ன என்பது போலப் பார்த்தார்.
"இப்போ என்னன்னு கூப்பிட்டீங்க?"
"ஓ.. அதுவா.. ஸ்வீட்டி.. பேர் நல்லா இருக்குல்ல.. இந்தப் பொண்ணு மொத்தமா ஸ்வீட் தான்.. அதான் அப்படிக் கூப்பிட்டேன்..தப்பா?"
"இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்லை சொல்லிட்டேன்.."
"எதுப்பா நல்லா இல்லை…"
"இப்படி ..பையனுக்கும் மருமகளுக்கும் இடையில வர்றது தான்."
"நான் எங்கே நடுவில வந்தேன்.. ஓரமா தான் நிக்கிறேன் பாரு."
"நான் அப்படி வரதையா சொன்னேன்? வர வர உங்க ஃப்ரண்டு மாதிரி தத்தி புத்தி ஆகிட்டீங்க."
"பின்ன, உன் கிட்ட பேசி சமாளிக்க முடியுமா? ஏன் டா இப்படி இருக்க?"
"அதெல்லாம் மேனுபேக்சரிங் டிஃபக்டு. உங்க ஃப்ரண்டைக் கேட்க வேண்டியது. என்னைக் கேட்டால்…"
மாதவனிடம் பேசியபடியே ஸ்வேதாவின் செக்கப்பை முடித்து, ஒரு ஊசியையும் செலுத்தி இருந்த அருந்ததியை ஆச்சர்யமாகப் பார்த்தாள் நியதி. நேற்றெல்லாம் ஊசி வேண்டாம் என்று முகம் சுழித்த ஸ்வேதா, இன்று ஊசி போட்டதே தெரியாமல் கணவனின் முகத்தைச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
"ஹப்பா! முடிஞ்சது.. உன் பொண்டாட்டிக்கு ஊசி போடறதுக்கு நான் என்னன்ன வித்தையெல்லாம் காட்ட வேண்டியதா இருக்கு."
"மாமியார் கெத்தைக் காட்டுங்கன்னு சொன்னா கேட்காமல் கொஞ்சிகிட்டு இருந்தால் இப்படித்தான் நடக்கும்."
"மாமியார் கெத்தா… நல்ல பொண்ணு டா.. இவளைப் பார்த்தா கெத்து காட்டணும்னா தோணுது.. ஸ்வேதா என்னம்மா இவன் சரியில்லையே.. எதுக்கும் ஹேமா கிட்ட சொல்லி வைக்கிறேன். இவன் கிட்ட ஜாக்கிரதையா இருக்கணும். மாமியார் மருமகளுக்கு இடைல பிரச்சினை பண்ணி விட்டுடுவான்."
"பார்ப்போம்.. நாளைக்கு விக்கி என்ன பண்றான்னு?"
"அவனை எல்லாம் நாங்க கண்டுக்கவே மாட்டோம்.. இல்லம்மா.."
விக்கி என்ற வார்த்தையிலேயே ஸ்தம்பித்து நின்ற நியதி அடுத்து அருந்ததி தன்னைப் பார்த்து இப்படி ஒரு கேள்வியைக் கேட்டு வைப்பார் என்று எதிர்பார்க்கவே இல்லை.
"ஆன்ட்டி என்ன அந்தப் பொண்ணு கிட்ட போய் இப்படி பேசிட்டு இருக்கீங்க. யார் அது? எனக்குத் தெரியாமல் எதுவும் தனி டீலிங்கா?"
அப்போது தான் தன் மனதில் இருந்தது வார்த்தைகளாக வெளியே வந்து விழுந்ததை அருந்ததி உணர்ந்தார்.
"ஓ.. ஸாரி நியதி.. ஸாரி மா. ஏதோ பேச்சு மும்முரத்துல பேசிட்டேன்" என்று அவளிடம் மன்னிப்பு கேட்டவர் மாதவனிடம் திரும்பினார்.
"அதெல்லாம் ஒன்னும் இல்லை மாதவா. ஆனால் இவளை மாதிரி ஒருத்தி நம்ம வீட்டுக்கு வந்தால் நல்லா தான் இருக்கும். நம்ம வீட்டு விசுவாமித்திரன் என்ன நினைச்சிட்டு இருக்கானோ? யாருக்குத் தெரியும்!"
"விசுவாமித்திரனா? ஒரு வேளை அவனா இருக்குமோ? விக்ரம்.." என்று நியதி முணுமுணுத்தது மாதவனின் கழுகுப் பார்வையில் இருந்து தப்பவில்லை.
'அப்படிப் போகுதோ விஷயம்.. விக்கி.. அடேய்.. விசுவாமித்திரா.. மாட்டினடா என் கிட்ட!' மனதுக்குள் குதூகலமாக இருந்தது அவனுக்கு.
"ஓகே மாதவா.. ஷி இஸ் இம்ப்ரூவிங். நாளைக்கு இல்லை அதுக்கு அடுத்த நாள் ஒரு செக்கப் பண்ணிட்டு வீட்டுக்கு போகலாம்."
"ஆன்ட்டி இந்த பிபி பத்தி டீடெயில்ஸ் சொல்றேன்னு சொல்லி இருந்தீங்களே.."
"அதை ஸ்வேதா கேட்கட்டும்.. அப்புறம் சொல்றேன்.. "
"நான் தான் கேட்கிறேன் ஆன்ட்டி.. என் ஹெல்த் பத்தி எனக்குத் தெரிஞ்சால் தானே அடுத்த தடவை கேர்ஃபுல்லா இருக்க முடியும். நான்.. நான்.. தைரியமா தான் இருக்கேன் ஆன்ட்டி.. நீங்க சொல்லுங்க.."
"இது கொஞ்சம் ஓவர் மெடிக்கல் டெர்மினாலஜியா இருக்கும்.. ஆனால் கவனமா கேளு..
கர்ப்ப காலத்தில் உடல் மற்றும் மனதில் உண்டாகும் மாற்றங்களை மட்டும் அல்லாமல் ஆரோக்கிய குறைபாட்டையும் கவனமாக எதிர்கொள்ள வேண்டும். இல்லேன்னா பிரசவ நேரத்தில் சிக்கல் தான் உண்டாகும். கர்ப்பகாலத்தில் மட்டுமே வரக்கூடிய டயாபடீஸ் ஆகட்டும், ஹை பிபியா இருக்கட்டும் இரண்டையுமே சாதாரணமா விட முடியாது. இரண்டுமே ஈக்வலி டேஞ்சரஸ். இதுல ஸ்வேதாவுக்கு வந்தது ஹை பிபி.
இதையெல்லாம் தாண்டி பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் வலிப்பும் வரக்கூடும். குறிப்பாக கர்ப்ப காலத்தின் பிற்பகுதியில் தாய்க்கும், குழந்தைக்கும் வலிப்பு உண்டாகி சமயங்களில் உயிரிழப்பும் உண்டாகிவிடக்கூடும். இந்த பிரசவகாலத்தில் உண்டாகும் வலிப்பு நோய் எக்லாம்சியா என்று அழைக்கப்படுகிறது. இது குறித்து கர்ப்பிணிகள் மட்டுமல்ல அவரை சுற்றி இருப்பவர்களும் தெரிந்துகொள்வது நல்லது.
கர்ப்ப காலத்தில் வரக்கூடிய உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படாமல் இருப்பது, சிறுநீரில் புரதம், கை கால்களில் உண்டாகும் தொடர் வீக்கம்,கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் பழுதாகும் நிலை போன்றவை உண்டாகும் போது அது ப்ரீ எக்லாம்சியா என்று அழைக்கப்படுகிறது.
இது ஒவ்வொரு பெண்ணின் உடல் நிலைக்கு ஏற்ப இலேசாகவோ அல்லது கடுமையாகவோ இருக்கும். இந்த ப்ரீ எக்லாம்சியாவை கவனிக்கத் தவறும் போது அது பிரசவக்காலத்தில் எக்லாம்சியாவுக்கு வழிவகுக்கும்.
கருவுற்ற காலத்தின் இரண்டாம் ட்ரைமெஸ்டர் காலத்தில் தான் இந்த பிரச்சனை வரக்கூடும். கர்ப்பிணிக்கு ஐந்தாம் மாதம் ஆகும் போது இருபது வாரங்களின் போது இதை கண்டு பிடிக்க முடியும்.
சில ப்ளட் டெஸ்டும், யூரின்ல புரோட்டீன் அளவும் கவனிக்கப்படும். இதிலும் ப்ரீ எக்லாம்சியா உறுதி செய்யப்பட்டால் அடுத்தது இதன் முக்கிய சோதனையான பனிக்குடம் வளர்ச்சி நிலை சோதனை மேற்கொள்ளபடும்.
நார்மலா இந்த ப்ரீஎக்லாம்சியா எந்தவிதமான அறிகுறிகளும் இல்லாமல் தாக்கும், இப்போ ஸ்வேதாவுக்கு வந்ததே அது மாதிரி. பிபி 140 க்கு 90 இல்லை அதையும் தாண்டிப் போகும். தலைவலி கடுமையாக இருக்கும். தலைச்சுற்றல் வாந்தி எல்லாம் இருக்கும். யூரின் ரொம்ப கொஞ்சமா தான் வெளியேறும்.
மூச்சுத்திணறல் வரலாம், வெயிட் திடீர்னு ஜாஸ்தி ஆகும். கை கால் ஃபேஸ் எல்லாம் வீக்கம் வரலாம். வலது மேல் அடிவயிற்றில் வலி போன்ற அறிகுறிகள் இருக்கும்."
அருந்ததி பேசப் பேச அங்கிருந்த மற்றவர்கள் அதிர்ந்து போய் பார்த்தார்கள். அதில் சில அறிகுறிகள் தனக்கு இருந்ததை உணர்ந்த ஸ்வேதா அமைதி காத்தாள். அவற்றை எல்லாம் சாதாரணமாக எடுத்துக் கொண்டு யாரிடமும் சொல்லாமல் விட்டிருந்தாள்.
"இதுக்கு என்ன காரணமா இருக்கும் ஆன்ட்டி. வராமலே அவாய்ட் பண்ண முடியாதா?"
"இதுதான் காரணம்னு சரியாக வரையறுக்க முடியவில்லை. கர்ப்ப காலத்தில் கர்ப்பப்பைக்குத் தேவையான ரத்த ஓட்டம் இல்லாமல் இருக்கிறது, அப்புறம் பனிக்குடத்தோட ஸ்டெரன்ந்த் இதெல்லாம் காரணமாக இருக்கலாம். குடும்பத்தில் யாருக்கேனும் முன்கூட்டியெ இந்த ப்ரீஎக்லாம்சியா இருந்தால் வரலாம். ஏற்கனவே பிபி இருக்கிற லேடீஸூக்கு சான்ஸஸ் ஜாஸ்தி."
"ஓ.. அப்போ.. இதுல இருந்து காப்பாத்த வழியே இல்லையா?"
"இந்த ப்ரீ எக்லாம்சியா இருக்கும் போது பனிக்குடத்துக்கு போதிய ரத்தம் செல்லாமல் ரத்த ஓட்டம் குறையும் போது கருவுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்காது. இது கருவின் வளர்ச்சியை பாதிக்க செய்யும்.
பிரசவ காலத்தில் சிக்கலை உண்டாக்கும் வகையில் வலிப்பு வரக்கூடும். சில சமயங்களில் உயிரிழப்பும் உண்டாகலாம். ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து ட்ரீட்மெண்ட் பண்ணனும். குழந்தைக்கு நுரையீரல் நார்மலா இருக்கணும்னு பிபியைக் குறைக்க ஸ்டீராய்ட்ஸ் ப்ரிஸ்கிரைப் பண்ணலாம்."
"அப்போ மானிட்டர் பண்ணிட்டே இருந்தால் டெலிவரி ஸ்மூத்தாவும் இருக்க முடியும்.. இல்லையா டாக்டர்?" இது நியதி. அவளுக்கு ஆர்வத்தை அடக்க முடியவில்லை.
"முப்பத்தேழு வாரம் முடிஞ்சிட்டா நார்மல் டெலிவரிக்கு கூட இன்ட்யூஸ் பண்ணலாம். இதை எல்லாத்தையும் தாண்டி கர்ப்பிணியோட மனசு தைரியமா இதை ஃபேஸ் பண்ண தயாரா இருக்கணும்."
"ஒரு தடவை இந்த மாதிரி ஆகிட்டா.. திரும்பவும் அதே மாதிரி தான் ஆகுமா.."
"ஸாரி டு ஸே திஸ்... ஆனால் இது வரைக்கும் அப்படித்தான் ஆகி இருக்கு. ஸோ, நாம முதல்ல இருந்தே மானிட்டர் பண்றது தான் நல்லது."
கனத்த அமைதி நிலவியது அங்கே.
"டோன்ட் வொர்ரி மை டியர் ஸ்வேதா! நான் கொடுக்கிற மருந்தெல்லாம் சாப்பிடு. இன்னும் ஒரு ஆறு மாசம், ஒரு வருஷம் போகட்டும்.. மாதவனுக்குப் பொண்ணை ரெடி பண்ணிடலாம்" என்று மாதவனைப் பார்த்தார் அருந்ததி. அவன் ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருந்தான். என்னவாக இருக்கும் என்று யூகித்தவர், அவனைத் தனியே அழைத்துச் சென்றார்.
"மாதவா! இதெல்லாம் சாதாரண ரிஸ்க். லேடீஸோட தைரியத்துக்கு முன்னாடி இது ஒன்னுமே இல்லை. நீ தேவையில்லாமல் எதையாவது யோசிச்சு அவளையும் குழப்பாதே. கொஞ்ச நாளைக்கு கேர்ஃபுல்லா இருங்க.. அப்புறம் பார்க்கலாம். பை ஸ்வேதா. நாளைக்கு ஊசி போடும் போது அழாமல் இருந்தால் வீட்டுக்குப் போயிடலாம்."
அருந்ததி சென்று விட, தனித்து விடப்பட்ட கணவனும் மனைவியும் அமைதியாக இருந்தார்கள். டாக்டராக அருந்ததி சொன்ன விஷயங்கள் இருவரையும் புரட்டிப் போட்டது. இன்னும் ஒரு முறை இதே அவஸ்தையை அனுபவிக்க மாதவன் தயாராக இல்லை. ஆனால் ஸ்வேதாவுக்கோ, அவனுக்குப் பெண்ணைப் பெற்றுக் கையில் கொடுத்து விடவேண்டும் என்ற வெறியே கிளம்பியது. காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
ஸ்வேதா வீடு வர முழுமையாகப் பதினைந்து நாட்கள் ஆயிற்று. அவள் ஐசியூவில் இருந்த ஐந்து நாட்களும் மாதவன் செத்துப் பிழைத்துக் கொண்டிருந்தான். சாண் ஏறினால் முழம் சறுக்குவது போல அவளுக்கு நினைவு திரும்புவதும் போவதுமாக இருந்தது.
அவள் கண்விழித்து விட்டாள் என்ற செய்தி கேட்டு அவசரமாக ஓடியவனைக் கண்களில் எதிர்பார்ப்புடன் எதிர் கொண்டாள் ஸ்வேதா.
"ஸ்வீட்… டி.." அவள் பேரைச் சொல்வதற்குள் திணறிப் போனான் அவன்.
"பாப்பா??"
"எல்லாம் முடிஞ்சு போச்சு டா.. எல்லாம் முடிஞ்சு போச்சு…" மனைவியின் கைகளைப் பிடித்துக் கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதான் மாதவன். அவன் மனைவிக்கு தைரியம் சொல்ல வேண்டும் என்று உள்ளே சென்றவன் தாளமுடியாமல் அழுது கொண்டிருந்தான். அங்கே இருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறோம் என்ற எண்ணமே அவனுக்கு இல்லை.
"மாது… மா...து… எனக்கு என்ன ஆச்சு? இன்னொரு குழந்தை பிறக்குமா? இல்லையா? ஆன்ட்டி என்ன சொன்னாங்க?"
"இன்னும் எத்தனை குழந்தை வேணும்னாலும் பிறக்கும் டா.. உன் உடம்புக்கு ஒன்னும் இல்லை"
"அப்புறம் எதுக்கு இந்த அழுகை. கண்ணைத் துடைங்க. ம்.. சீக்கிரம்.. குட்.. நமக்கு சீக்கிரமே ஒரு ரோஜாக்குட்டி வரும்.. ஓகே.. "
"ம்ம்.." அதற்கு மேல் பேச விடாமல் அங்கே இருந்த செவிலியர்கள் அவனை வெளியே அனுப்பி விட்டார்கள்.
படுக்கையில் படுத்து விட்டத்தைப் பார்த்தபடி மருத்துவமனை நிகழ்வுகளை அசைபோட்டு கொண்டு இருந்தான் மாதவன். விடுமுறை முடிந்து கல்லூரிக்குக் கிளம்பிக் கொண்டிருந்த ஸ்வேதா மாதவனின் யோசனையான முகத்தைக் கண்டு அருகில் வந்தாள். இப்படித்தான் அடிக்கடி யோசனைக்குள் போகிறான்.
"மாது! நான் கிளம்பறேன். காலேஜ் பஸ்ல போய்க்கிறேன். நீங்க கண்ணைத் திறந்துட்டே தூக்கத்தைக் கன்டிநியூ பண்ணுங்க."
"ஓ மை ஸ்வீட்டி.. வெயிட் பண்ணு இதோ வந்துட்டேன்" என்று எழுந்து ஓடினான் மாதவன்.
அவளைக் கல்லூரியில் விட்டுத் திரும்பி வந்ததும் முதல் வேலையாக விக்ரமனை அழைத்தான்.
"ஹலோ குட் மார்னிங் மேடி.. ஹவ் ஆர் யூ. அண்ணி எப்படி இருக்காங்க. ரெகவர் ஆகிட்டாங்களா? அவங்களை கன்வின்ஸ் பண்ணி, காலேஜூக்கு அனுப்பு. நல்லா தேறிடுவாங்க."
"டேய்.. டேய்.. மூச்சு விட்டுப் பேசு டா. உங்க அண்ணி காலேஜூக்குப் போயாச்சு. நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம். நீ எப்படி இருக்க? கொஞ்சம் பேசணும், ஃப்ரீயா இப்போ?
"ஃப்ரீ தான். சொல்லு, என்ன விஷயம்?"
"முதல் விஷயம் நான் ரொம்பவே பொறுப்பான அண்ணன்."
"ஆமா.. ரொம்பப் பொறுப்பு.."
"அதனால இரண்டு விஷயம் பண்ணப் போறேன். என் தம்பிக்கும் தங்கைக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்."
"தங்கைக்கு இப்போ ஓகே.. தம்பிக்கு அவசரம் இல்லை."
"ஏனோ? தம்பிக்கு இப்போ தான் பல்லு முளைக்குதா?"
"ஒன்னு, நான் அங்கே வர இன்னும் குறைந்தது மூணு வருஷம் ஆகும்."
"அதனால பரவாயில்லை, நிச்சயம் பண்ணிட்டா உன் கோர்ஸ் முடியற நேரத்தில கல்யாணம் பண்ணி ஹனிமூன் கூட்டிட்டு போயிடு.. நீ சொல்லாமல் விட்ட இன்னொன்னு நான் சொல்லவா.. "
"என்ன சொல்லாமல் விட்டேன்னு உனக்கு எப்படித் தெரியும்?"
"தெரியும்.. பொண்ணு பார்க்கிறது தானே.. அதெல்லாம் பார்த்தாச்சு."
"டேய் மாதவா.. அண்ணா டேய்.. என் வாழ்க்கைல குத்துவிளக்கு ஏத்தாட்ட கூட பரவாயில்லை… கும்மி அடிச்சுட்டுப் போயிடாத டா."
"சே.. சே.. நான் குத்து விளக்கு ஏத்தறதுக்குத் தான் ப்ளான் பண்றேன்."
"என்னை விடு.. வைஜுக்கு யாரைப் பேசி முடிச்சிருக்க?"
"ஏன் என் மச்சினன் அரவிந்தனைத் தான்.."
"மாப்பிள்ளை தான் ரெடியா இருக்காரில்ல.. அந்தக் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணு.. அதை விட்டு ஏன் என் கிட்ட விளையாடற?"
"நீ இவ்வளவு அலறக் காரணம் என்னவோ, அங்கே ஏதாவது ஆளைப் பிடிச்சிட்டியா?"
"இங்கேயா… நோ நோ.."
"அப்போ இங்கே பார்த்து வச்சிட்டு போயிருக்கியா?"
"அப்படீன்னு நான் சொன்னேனா?"
"இல்லேல்ல.. அப்போ நான் பார்த்த பெண்ணை கல்யாணம் பண்ணிக்கோ. வாழ்க்கை அமோகமா அமையும்."
"மாதவா! ப்ளீஸ்.."
"நான் நல்ல பொண்ணா உன் மனசுக்குப் பிடிச்ச பொண்ணைத் தான் பார்ப்பேன்னு உனக்கு நம்பிக்கையே இல்லை பாரேன். சரி.. அந்த நியதி நம்ம வீட்டுக்கு செட் ஆக மாட்டான்னு ஆன்ட்டி கிட்ட சொல்லிடறேன். அவங்க வேற ஆசையை வளர்த்து வச்சிருக்காங்க."
"வாட்.. நிதியா.. அவளையா சொல்ற? அவளை எங்க பார்த்த.. என்ன பேசின?"
"நான் ஸ்ரேயான்னு பொண்ணு பேரைச் சொல்லிடுவேன்னு பயந்து போயிட்ட தானே?"
"ஸ்ரேயா?.. அது யாரு?"
"ஹான்.. ஸ்வேதாவோட யங்கர் சிஸ்டர்."
"ம்ச். அதை விடு.. நீ நிதியவா சொன்ன?"
"ஸ்ரேயா பத்தி உனக்குத் தெரிய வேண்டாமா விக்ரம்?"
"அவங்களைப் பத்தி தெரியறதுக்கு என்ன இருக்கு?"
"உனக்கு ஒன்னுமே இல்லை தான். ஆனால் உன்னை வச்சு அவளும் அவ அம்மாவும் அடிச்ச லூட்டில தான் என் குழந்தை நடுவில மாட்டிட்டு…"
"சொல்றதைத் தெளிவா சொல்லு மேடி. அரவிந்த் வைஜூ விஷயம் பேசப் போய்த் தான் அண்ணிக்கு பிரச்சனைன்னு சொன்னாங்க. நீ என்னடான்னா வேற ஏதோ சொல்ற? அந்தப் பொண்ணு பேரு ஸ்ரேயான்னு கூட இப்போ தான்.. நீ சொல்லித் தான் எனக்குத் தெரியும். இதுல என்னை வச்சு அவங்க என்ன பண்ண முடியும்?" ஏகத்துக்கும் எரிச்சல் அவன் குரலில்.
"பரவாயில்லை விடு.. அவளுக்கு ஏதோ க்ரஷ் உன் மேல.. அதுக்கு அவங்க அம்மாவும் தூபம் போட்டு.. எல்லாரையும் டென்ஷன் ஆக்கி.. இப்போ தெளிவாகிட்டா? நியூயார்க் போய் மேல படிக்கப் போறாளாம்" தேவையில்லாமல் விக்ரமனைக் குழப்பி விட வேண்டாம் என்று பேச்சைச் சுருக்கி விட்டான் மாதவன்.
"சரி.. சரி.. நீ நிதிய எங்க பார்த்த.. அதைச் சொல்லவே இல்லை.."
"நிதி இல்லப்பா.. நியதி.. நியதி.. அவளைத் தான் அந்த ஹாஸ்பிடல்ல பார்த்தேன். விசுவாமித்திரன்னு சொன்ன உடனே பொண்ணு கண்ணுல ஒரு ஸ்பார்க்கு.. ஒன்னும் ஒன்னும் பதினொன்னுன்னு கால்குலேட்டர் இல்லாமலே முடிவு பண்ணிட்டேன். எப்பூடி? இது எந்த அளவுக்கு உண்மைன்னு நீ தான் சொல்லணும். ஹப்பா! உன் கிட்ட ஒரு விஷயம் வாங்குறதுக்குள்ள.. எனக்கு இரண்டு தடவை ஃபுல் மீல்ஸ் சாப்பிடணும் போல இருக்கு." ஹாஸ்பிடல் நிகழ்வுகளை அவனுடன் பகிர்ந்து கொண்டவன், தனது சந்தேகத்தையும் சொன்னான்.
"மாதவா! நான்.. இதை எப்படிச் சொல்றதுன்னு தெரியலை"
"ஏன்.. நீ.. உன் வாயால தான் சொல்லணும். என் கிட்ட ஒழுங்கா உண்மையைச் சொன்னா உன் ரகசியம் காப்பாற்றப்படும். தேவையான நேரத்தில் ஹெல்ப்பும் கிடைக்கும். இல்லேன்னா.. என் ஓட்டை வாய் பத்தி உனக்கே தெரியும்.. ஆன்ட்டி கிட்ட மட்டும் சொல்லிடுவேன்.. அவ்வளவு தான்.."
"டேய்! ஏன் டா இப்படி ப்ளாக் மெயில் பண்ற? நானே இன்னும் மூனு வருஷத்துக்கு முன்னாடி அந்தப் பக்கம் வரவே கூடாதுன்னு இருக்கேன்."
"என்ன டா இப்படிச் சொல்ற? ஏன்?"
"நான் பண்ணிட்டு இருக்கிற ரிசர்ச் பத்தி தெரியும் தானே மாதவா. ஐ டோண்ட் வான்ட் டு டீவியேட் மை கான்சன்ட்ரேஷன். நாமெல்லாம் லேடீஸ்னா எவ்வளவு அலட்சியமா, கேலி கிண்டல்னு பண்ணிட்டு நான் ஆண், நான் தான் உன்னை விட உயர்ந்தவன்னு சொல்லிட்டு திரியறோம்.
ஆனால் லேடீஸோட மென்டல் பவர், அமேசிங் மேன். அது கிட்ட கூட நாமெல்லாம் போக முடியாது. உடம்புக்கு எத்தனை விதமான பிரச்சினைகள், எப்படி எல்லாமோ வருது. ஆனாலும் பில்லர் மாதிரி தாங்கிக்கத் தான் செய்யறாங்க. உலகம் முழுவதும் இருக்கிற லேடீஸ் எல்லாருமே ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்படறாங்க. என்னால முடிஞ்ச அளவுக்கு அவங்களுக்கு ஏதாவது செய்யணும்னு நினைக்கிறேன். இதுல தான் மைன்ட் பூராவும் இருக்கு.."
உணர்வு பூர்வமாக பேசிக்கொண்டே சென்றவன், "அஃப்கோர்ஸ்… அப்பம் வேற சிந்தனைகள் வருது தான். காரணம் நான் இருக்கிற இடம். ஆனால் சமாளிச்சிடுவேன்.. சமாளிச்சுத் தான் ஆகணும்.." என்று சிரித்தான்.
"ஆனாலும் இன்னும் மூனு வருஷம்கிறது அந்தப் பொண்ணுக்கு பெரிசா தெரியலாம் இல்லையா?"
"இல்ல டா.. அவளுக்கும் எம்எஸ் பண்ணனும்னு ஆசை இருக்கு. அநேகமா கைனகாலஜி தான் எடுப்பா."
"ஜாடிக்கேத்த மூடி தான் டா.. எப்படி டா மியூசியத்தில வைக்க வேண்டிய ஆட்கள் எல்லாம் லவ் பண்றேன்னு சொல்றீங்க?"
"ஹா.. ஹா.. ஹா.. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா மேடி… நாங்க இரண்டு பேரும் ஒரு வார்த்தை கூடப் பேசியதே கிடையாது."
"வாட்.. எனக்கு வாயிலே நல்லா வருது.. வேண்டாம் தம்பியாச்சேன்னு விடறேன். அப்புறம் எப்படி டா இது ரிலேஷன்ஷிப்பா இருக்க முடியும்?"
"அவளுக்கு என்னையும் எனக்கு அவளையும் பிடிச்சிருக்குன்னு தெரியும்.. அது போதும்.."
"என்னமோ போடா மாதவா.. இந்தக் காவியக் காதலை எல்லாம் புரிஞ்சுக்கற மூளை உனக்கில்லை போ.." நொந்து கொண்டான் மாதவன்.
"நீ சொல்றது ரொம்பவே கரெக்ட் தான் விக்ரம். லேடீஸுக்கு மென்டல் பவர் ஜாஸ்தி தான். உங்க அண்ணி, இந்த ஜெனரேஷன் பொண்ணு. எவ்வளவு பெரிய பிரச்சனையை ஃபேஸ் பண்ணி, செத்துப் பிழைச்சு வந்தா. கொஞ்சம் நல்லா ஆனவுடனே, அடுத்த குழந்தையை எப்போ பெத்துக்கலாம்னு கேட்கறா. என்னால இன்னும் அந்த விஷயத்தைக் கடந்து வரமுடியலை.. அவ என்னடான்னா.. அடுத்த லெவலுக்கு போயிட்டா.."
"எதுவும் ஏட்டிக்குப் போட்டியா பேசிடாத மேடி.. அவங்க மென்டலி ஸ்ட்ராங்கா இருந்தாலும் குழந்தை விஷயத்தில சென்சிடிவா இருப்பாங்க."
"கரெக்ட் தான்.. நான் பார்த்துக்கிறேன். அப்புறம் விக்கி அரவிந்தன் கால் பண்ணினானா?"
"இல்லையே மேடி. என்ன விஷயம்?"
"கல்யாண விஷயமா தான். அவன் எல்லார் கிட்டயும் தனித்தனியா வாக்கு மூலம் கொடுத்துட்டு இருக்கான். சொன்னா கேட்கிறதில்லை.."
"நீ என்ன நினைக்கிற மேடி.. அவங்க இரண்டு பேருக்கும் மேட்ச் ஆகுமா? அந்த ஆன்ட்டி அவங்க பொண்ணு கிட்டயே வேற மாதிரி பிஹேவ் பண்றாங்க. வைஜுக்கு கொஞ்சம் வாய் நீளம். எதையும் மனசுல வச்சுக்காமல் பேசிடுவா. இதெல்லாம் சரி வருமா?"
"அதெல்லாம் சரி வரும். வைஜு எப்பவோ அரவிந்த் கூட டூயட் பாட ஆரம்பிச்சாச்சு. சீக்கிரம் ஜோடியா அங்கே அனுப்பி வைக்கிறேன்."
"என்ன சொல்ற மேன்? அவ இன்டர்ன்ஷிப் இன்னும் முடியலையே?"
"உன்னால மூனு வருஷத்துக்கு வரமுடியாதுன்னு சொல்லிட்ட. அப்புறம் எதுக்கு இந்த கவலை எல்லாம். நான் பார்த்துக்கிறேன்."
"ஒரு டென் டேஸ் இடையே வந்துட்டு போக முடியும்.."
"அப்போ நெக்ஸ்ட் ரவுண்டு பேச்சு வார்த்தையை ஆரம்பிச்சு வைக்கிறேன். பை.. பை.. நியதியைப் பத்தி இப்போதைக்கு போட்டுக் கொடுக்க மாட்டேன். டோன்ட் வொர்ரி!"
சூடாகி இருந்த மொபைலை வைத்தவன் நேராகத் தன் தாயைத் தேடிச் சென்றான்.
"மாம்! கொஞ்சம் சூடா காஃபி கொடுங்க. இந்த விக்ரம் கூட பேசினதுல எனர்ஜி எல்லாம் போச்சு."
"அப்படி என்ன தான் பேசினீங்க?"
"அது சஸ்பென்ஸ்." என்றபடி ஹேமா கொடுத்த காஃபியை சமையல் மேடையில் ஏறி அமர்ந்து நிதானமாகக் குடித்தான். பிறகு மெல்லத் தான் பேச நினைத்ததை ஆரம்பிக்கலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டே இருந்தான். அவனது யோசனையைத் தெளிவாகக் கண்டு கொண்ட ஹேமா தானே பேச்சை ஆரம்பித்தார்.
"என் கிட்ட என்ன விஷயம் சொல்லணும் மாதவா?"
"மா.. நீ இந்த அடாப்ஷன் பத்தி என்ன நினைக்கிற?"
"அடாப்ஷனா? எதுக்கு இந்த கேள்வி இப்போ? யார் அடாப்ட் பண்ணப் போறது?"
"நான் தான் மா.. ஐ மீன் நானும் ஸ்வேதாவும்.. "
"ஏன் மாதவா? எதுக்கு இந்த முடிவு? அவளுக்கு வேற எந்த பிரச்சினையும் இல்லைன்னு தானே அருந்ததி சொன்னா. கொஞ்ச நாள் கழிச்சு குழந்தை பெத்துக்கலாமே. ஒன்னும் அவசரம் இல்லையே?"
"செய்யலாம் மா. ஆனால், திரும்பவும் இந்த பிபி வராதுன்னு எந்த கேரண்டியும் ஆன்ட்டி கொடுக்கலை. என்னால இன்னொரு தடவை அந்த கஷ்டத்தை எல்லாம் நினைச்சுப் பார்க்கவே முடியலை. அதான் இப்படி ஒரு முடிவை எடுத்தேன்."
"எடுத்தேன்னா.. ஸ்வேதாவுக்கு இது தெரியுமா தெரியாதா? நீ மட்டும் முடிவு எடுத்தால் போதுமா?"
"அவளால தான் இவ்வளவு சீக்கிரம் முடிவு எடுக்க வேண்டியதாயிடுச்சு. இப்பவே குழந்தை வேணும்கிறா. அவளை எப்படியாவது கன்வின்ஸ் பணாணிடுவேன். நீங்களும் அப்பாவும் என்ன நினைக்கிறீங்கன்னு எனக்குத் தெரியணும்."
"நீ முதல்ல அவளைக் கன்வின்ஸ் பண்ணு. அப்புறம் மத்ததைப் பார்க்கலாம்"
"சீக்கிரமே திரும்ப வருவேன் பாருங்க.."
'ரொம்பவே ஓவர் கான்ஃபிடன்ஸ் டா உனக்கு. அவளால குழந்தை பெத்துக்க முடியும்னு இருக்கிற போது, அவ்வளவு ஈஸியா தத்து எடுக்க ஒத்துப்பாளா? ரிஸ்க் எடுக்கறதெல்லாம் அவளுக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி. அதையும் தாண்டி உங்க மாமியார் என்ற எரிமலையை மறந்து போயிட்டியா? சமயம் பார்த்து எரிமலை வெடிச்சுச் சிதறக் காத்திருக்கு. நீயே லட்டு மாதிரி சான்ஸ் எடுத்துக் கொடுக்காத.' மனசாட்சி உண்மைகளைப் புட்டு வைத்ததில் கொஞ்சமே கொஞ்சம் பயந்து தான் போனான் மாதவன்.
ஆனாலும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல மனைவியிடம் தினமும் அதைப் பற்றிப் பேசி பல்ப் வாங்கிக் கொண்டு இருந்தான். நாட்கள் வாரங்களாகி மாதங்கள் ஆனது தான் மிச்சம். பலன் என்னவோ பூஜ்ஜியம் தான்.
******
இன்டர்ஷிப் முடியும் தருவாயில் இருந்தாள் நியதி. மேற்படிப்பிற்கான எல்லா ஆயத்தங்களையும் செய்து கொண்டு இருந்தாள். கைனகாலஜி தான் படிப்பது என்று முடிவு செய்து விட்டாள். எங்கே என்பது கேள்விக்குறியாக நின்றது. அன்று மாதவனிடம் பேசிய அருந்ததியின் வார்த்தைகளைக் கேட்ட பிறகு அவர் விக்ரமனின் தாயாக இருப்பாரோ என்ற சந்தேகம் பிறந்தது.
அடுத்தடுத்து நடந்த சில பேச்சுகளில் அவர் மகனைப் பற்றிய மேலும் சில தகவல்களைத் தானாகவே சொல்லிவிட்டார். அது நிச்சயம் விக்ரமன் தான் என்று அவள் உறுதியாக நம்பினாள்.
அதே கல்லூரியில் தொடர்ந்து படித்தால் மட்டுமே அருந்ததியோடு தொடர்பில் இருக்க முடியும். படிப்பு முடிந்ததும் அவருடன் இணைந்து பணிபுரியும் வாய்ப்பும் கிட்டலாம். எந்தக் காரணம் கொண்டும் அதை இழந்து விடக் கூடாது என்று முடிவு செய்து கொண்டாள்.
யோசனையுடன் மரத்தடியில் இருந்தவளைத் தட்டி எழுப்பினாள் அவளது தோழி.
"என்னடி எந்த ஊர்ல டூயட் பாடிட்டு இருக்க?" கேட்டபடி அருகில் அமர்ந்தாள்.
"ம்ச். என்ன பேச்சு இது? எனக்குப் பிடிக்கலை"
"உனக்கு எப்போ தான் பிடிச்சது.. அதை விடு.. எனக்கு ஒரு டவுட்டு.. அதை நீ தான் தீர்த்து வைக்கணும்"
"என்ன டவுட்டு.. எந்த சப்ஜெக்ட்ல"
"எல்லாம் உனக்குத் தெரிஞ்ச சப்ஜெக்ட்ல தான். விசுவாமித்திரன்… நம்ம அருந்ததி மேடத்தோட பையனா இருப்பானோன்னு தான் டவுட்டு.. சாயல் கூட இருக்கு.."
"அடிப்பாவி! சாயல் வரைக்கும் ஆராய்ச்சி பண்ணி வச்சிருக்கியா? எனக்கும் அந்த டவுட்டு இருக்கு.. ஆனால் கன்ஃபர்மா சொல்ல முடியலை. இதைப் போய் யார் கிட்ட கேட்கிறது?"
"நேரா மேடத்தையே கேட்டா என்ன.. அவங்க வேற தெரிஞ்சு சொல்றாங்களா தெரியாம சொல்றாங்களான்னு புரியலை. உன்னை மருமகளா வந்தா நல்லா இருக்கும்னு சொல்லிட்டு இருக்காங்க."
"வேற பேசலாம் கவி"
"விட மாட்டியே.. சரி..என்ன டிசைட் பண்ணி இருக்க.. "
"எதைப் பத்தி?"
"கண்டிப்பா உன் லவ் பத்தி இல்லை தாயே. எம்எஸ் பண்றதைப் பத்தி.."
"இங்கே தான் பண்ணனும். இன்னும் வீட்டுல பேசல. ஏற்கனவே அப்பா பாதி நாள் ஊர்ல இருக்க மாட்டார். இதுல நான் வேற வெளியூர் போயிட்டா.. அம்மா ரொம்பவே ஃபீல் பண்ணுவாங்க."
"உனக்கு கல்யாணம் ஆகிட்டா என்ன பண்ணுவாங்க?"
"அது வேற வழியே இல்லாத விஷயம். இது அப்படி இல்லையே. இன்னைக்கே டாடி கிட்ட பேசணும்."
இவள் பாட்டுக்கு ஒரு திட்டத்தைப் போட, ஆனால் வாசுதேவனோ வேறு திட்டம் தீட்டினார். அவள் வெளிநாடு செல்ல மாட்டேன் என்று சொல்லி விட்டதில் வருத்தமாக இருந்தவர், அட்லீஸ்ட் வேறு ஊரில் போய் தான் எம்எஸ் படிக்க வேண்டும் என்று வாதாடினார்.
எப்போதும் தந்தையின் பேச்சை மறுக்காமல் கேட்கும் நியதி இந்த முறை பிடிவாதம் பிடிக்க, இருவருக்கும் இடையே தூது போய் சுகந்தா தான் சோர்ந்து போனார்.
முதல் முறையாக பிடிவாதம் பிடித்த மகளுக்காகத் தந்தை தான் கடைசியில் இறங்கி வந்தார்.

Author: SudhaSri
Article Title: ஆடுமடி தொட்டில் இனி - 11
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.