• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

ஆடுமடி தொட்டில் இனி - 14

SudhaSri

Administrator
Staff member
Jun 16, 2024
536
44
43
india
ஆடுமடி தொட்டில் இனி - 14

"ம்ச். இவன் ஏன் டி இப்படி பண்றான்? அவன் மட்டும் என்னைப் பார்த்துட்டுப் போறான். நான் பார்க்கக் கூடாதா? என்ன தான் நினைச்சிட்டு இருக்கான் அவன்?" சோர்ந்து போய் இருக்கையில் அமர்ந்து கொண்டாள் நியதி.

"அப்போ நான் உள்ள வரும் போதே இங்கே தான் இருந்தானா? அந்த ஆஷிஷ் கிட்ட பேசிட்டு இருந்ததைப் பார்த்து கடுப்பாகி என் கிட்ட பேசாமல் போயிட்டானோ? நான் என்ன பேசினேன்னு தெரியாமல்.. ம்ச்.."

தன் போக்கில் புலம்பிக் கொண்டு இருந்த நியதியைப் பரிதாபமாகப் பார்த்தாள் அகிலா.

"எதுக்கு இப்போ வந்திருக்கான். ஏதோ கல்யாணப் பத்திரிகை மாதிரி அவன் ஃப்ரண்டு கையில பார்த்தேனே.. யாருக்குக் கல்யாணம்? நான் போய் அந்த அர்ஜூனை ஒரு பிடி பிடிக்கிறேன் இரு. இன்னைக்கு இரண்டுல ஒன்னு பார்க்காமல் விடறதில்லை. நீ வா!" என்று தோழியை இழுத்துக் கொண்டு போனாள்.

அர்ஜுனும் அங்கே நண்பனது நடவடிக்கையால் நொந்து தான் போயிருந்தான். "ஏன் டா ஏன்? இது உனக்கே நல்லா இருக்கா டா? பாவம் அந்தப் பொண்ணு. ஒரு நாலு வார்த்தை நின்னு பேசிட்டு வந்தால் குறைஞ்சா போயிடுவ? நீ வந்தது தெரிஞ்சால் ரொம்பவே வேதனைப் படுவா டா!"

"அதுக்கு தான் யார் கண்ணுலயும் படாமல் கிளம்பிடலாம்னு பார்த்தேன். அந்த அல்டாப்பு அகிலா கிட்ட மாட்டினதுல இப்போ நொந்து போய் இருக்கேன்."

"இப்பவும் ஒன்னும் குறைஞ்சு போயிடல. நீ வா.. இரண்டு நிமிஷம்.. இரண்டே இரண்டு நிமிஷம் நியதி கிட்ட பேசிட்டு வந்துடு. மத்ததை அப்புறம் பார்க்கலாம்."

"ம்ம்.. பார்க்கணும் தான் டா. ஆனால் இப்போ இல்லை. ஊருக்குப் போறதுக்கு முன்னாடி கண்டிப்பா பார்க்கறேன். கொஞ்சமாவது தூங்கணும் டா. இப்போ கிளம்பறேன்.. பை.. இன் கேஸ் அகிலா வந்து உன்னைக் கேள்வி கேட்டால் …"

"அவ எதுக்குடா என்னைக் கேள்வி கேட்கப் போறா?"

"ஃப்ரண்டுக்காக வருவா.. அப்படி வந்து ஏதாவது கேட்டால் நீ எதுவும் பேசாதே. தங்கச்சி கல்யாணம்னு மட்டும் சொல்லு.. போதும்.. "

"இது வேறயா டா.. உன்னை மாதிரி ஒருத்தனை ஃப்ரண்டா வச்சிட்டு நான் படற அவஸ்தை இருக்கே.. அப்பப்பா.."

"நண்பேன்டா.. " என்று அணைத்துக் கொண்டான் அவனை.



"இதுல ஒன்னும் குறைச்சல் இல்லை. இப்போ எதுக்கு தங்கச்சி கல்யாணம்னு சொல்லணும்?"

"அந்த அகிலா, நம்ம கையில இருக்கிற இன்விடேஷனையே உத்துப் பார்த்தா. யாருக்குத் தான் கல்யாணம்னு அவ மண்டைக்குள்ளே குடையும். நிதியையும் குழப்பி விடுவா. கன்ஃபர்ம் பண்ணிக்க உன் கிட்ட தான் வருவா.. போதுமா.. அதோ வரா பாரு.. நான் கிளம்பிட்டேன் டா.. டேக் கேர்.. பை.."என்று பறந்து விட்டவனைக் கொலை வெறியோடு பார்த்தான் அர்ஜுன்.

நண்பன் சென்ற திசையை வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்த அர்ஜுன், "ஹலோ சீனியர்!" என்ற குரலில் 'போச்சுடா!' என்று மானசீகமாகத் தலையில் அடித்துக் கொண்டு திரும்பினான்.

"என்னம்மா அகிலா? இப்போ தானே பார்த்தோம். திரும்ப வந்திருக்க என்ன விஷயம்? ஏதாவது டவுட்டு கேட்கணுமா?" சாதுவாகக் கேள்வி கேட்டவனை இடுப்பில் கை வைத்து முறைத்தாள் அந்த அகிலா.

"அகில்! பேசாமல் வாடீ.. வேலை இருக்கு. ஓபி பார்க்கணும். டைம் ஆகுது" என்று தோழியின் காதில் முணுமுணுத்தாள் நியதி. அர்ஜுன் அப்போது தான் அவளது புறம் பார்வையைத் திருப்பினான். சற்று முன் கிண்டலாகப் பதில் சொல்லி அந்த ஆஷிஷைத் தலை தெறிக்க ஓடவிட்ட நியதியா இவள். சில நிமிடங்களில் முகத்தில் எத்தனை சோர்வு. 'விக்ரம்ம்ம்!' என்று பல்லைக் கடித்தான்.

"சொல்லும்மா அகிலா. என்ன தெரியணும் உனக்கு?"

"உங்க ஃப்ரண்டு மனசுல என்ன தான் நினைச்சிட்டு இருக்கான்? இப்போ எதுக்கு வந்தான்? வந்தவன் சும்மா போகாமல் ஏன் இப்படி இவ கண்ணுல படணும்.. பேசாமல் போய் இவளை நோகடிக்கணும்.." அகிலா எண்ணெயில் போட்ட அப்பமாய்த் துள்ளிக் கொண்டு இருந்தாள். அவளது பார்வை அர்ஜுன் கையில் இருந்த பத்திரிகை மீது உக்கிரமாக விழுந்தது.

அர்ஜுன் அமைதியாக நியதியைப் பார்த்தான். அவன் பார்வை, 'உனக்கு அவன் வந்தது தெரியுமா?' என்று கேட்டது. மறுப்பாகத் தலை அசைத்தாள் நியதி. அடுத்து அகிலாவைப் பார்த்தவனின் பார்வை, 'உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை?' என்றது.

"அவன் தங்கை கல்யாணத்துக்காக வந்திருக்கான் மா. இன்னைக்கு காலைல தான் ஊருக்கு வந்தான். எனக்கு இன்விடேஷன் கொடுக்கத் தான் இங்கே வந்ததாகச் சொன்னான். அதுல எந்த அளவுக்கு உண்மை இருக்கும்னு உனக்கே தெரியும். இன்விடேஷன் கொடுத்துத் தான் அவங்க வீட்டு விசேஷத்துக்குப் போற மாதிரியா எங்க ஃப்ரண்ட்ஷிப் இருக்கு? நிச்சயமா ஊருக்குப் போறதுக்கு முன்னால உன்னை வந்து பார்ப்பான். அடுத்தவங்க சொல்றதைக் கேட்டு அவனைத் தப்பா நினைக்காதே. முகம் வாடிப் போச்சு பாரு. ஹேப்பியா போய் வேலையைப் பாரு. இன்னும் ஒரு வாரத்தில கண்டிப்பா அவனைப் பார்க்கலாம்."

நியதியை நேருக்கு நேராக பார்த்தபடி பேசியவன் அகிலாவை முறைத்தபடியே கடைசி வார்த்தைகளை உதிர்த்தான்.

"ம்ம்.. சரிண்ணா.." எதுவோ கேட்க வேண்டும் என்று தயங்கி நின்றாள்.

"என்னம்மா.. எதுன்னாலும் என் கிட்ட சொல்லு."



"ம்ச்… ஒன்னும் இல்லண்ணா. நான் வரேன்."

"ஒரு நிமிஷம் நியதி.. ஒன்னு மட்டும் கன்ஃபர்மா சொல்றேன். உங்க விஷயத்தில நீ சொன்னதுக்காகத் தான் அவன் ஒதுங்கி இருக்கான். நீ எப்போ என்ன சொன்னேன்னு எனக்குத் ‌தெரியாது. ஆனால் அப்படி ஒரு விஷயம் நடந்திருக்காமல் இருந்தால் உங்க கல்யாணம் கூட எப்பவோ முடிஞ்சிருக்கலாம். ஸோ.. நீ ஃபீல் பண்ண வேண்டிய அவசியமே இல்லை." அவன் பேசப் பேச நியதிக்குத் தோன்றிய சந்தேகங்கள் தீர்ந்து விட்டன.

"தாங்க்ஸ் அண்ணா!" பழைய துள்ளல் மீண்டவளாய் சொல்லி விட்டு ஓடிவிட்டாள்.

********

ராணி மெய்யம்மை திருமண மண்டபம். அரவிந்தன் வெட்ஸ் வைஜயந்தி என்ற நியான் எழுத்துக்கள் நடைபெற இருக்கும் திருமணத்தை அறிவித்துக் கொண்டு இருந்தன.

தமயந்தி பல்லைப் பிடுங்கிய பாம்பாக அடங்கி ஒடுங்கி இருக்க, அருந்ததி எடுத்ததெற்கெல்லாம் அவரிடம் போய் சந்தேகம் கேட்டுக் கொண்டு இருந்தார்.

"அண்ணி! இந்த ஆரத்தி தட்டெல்லாம் ஒத்தையா வைக்கணுமா இல்லை இரட்டையாவா?"

"பேர் எழுதின ப்ளேட்ல ஆரத்தி எடுக்கக் கூடாதுன்னு சொல்றாங்களே.. அப்படியா.."

"எங்க வீட்டுல வைஜுவோட கசின்ஸ் தான் ஆரத்தி எடுக்கணும். நீங்க எல்லாருக்கும் ஒரே மாதிரி கிஃப்ட் தானே வாங்கி இருக்கீங்க"

இது போன்ற கேள்விகளுடன் மணமகன் அறைக்குப் படையெடுத்தார். காலையில் வந்தது முதலே தமயந்தி எதையோ பறிகொடுத்தது போன்று இருந்தார். அவரைக் கல்யாணக் கலகலப்புக்குக் கொண்டு வர வேண்டி தன்னால் முடிந்த அளவு முயற்சிகளைச் செய்து கொண்டு இருந்தார் அருந்ததி.

ஆனால் தமயந்தியோ எதையும் கண்டு கொள்ளவே இல்லை, ஒரு மாதிரியான மனநிலையில் இருந்தார். மகனது திருமணம் என்ற மகிழ்ச்சி ஒரு புறம் இருந்தாலும், ஸ்ரேயா பற்றிய கவலை அவரை உள்ளூர வாட்டி வதைத்தது. ஒரு மாதத்திற்கு முன்பு தான் நியூயார்க் சென்றவள், போன வாரம் அங்கே ஒருவனை மிகவும் பிடித்திருக்கிறது என்றாள். திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அறிவித்து இருந்தாள். அரவிந்தனின் கல்யாண வேலைகளில் அதைக் கணவனிடம் கூட சொல்லாமல் மறைத்து விட்டார்.

யாரோ எவரோ தெரியவில்லை. அரவிந்தனின் திருமணத்திற்கு அழைத்து வருகிறேன் என்றவள் இது வரையில் வரவில்லை. விடிந்தால் திருமணம். ஆசை மகள் என்ன செய்ய காத்திருக்கிறாள் என்றே தெரியவில்லை. இந்த நேரத்தில் யாரிடமும் தன் கவலையைச் சொல்ல முடியாமல் மனதுக்குள் வைத்து மறுகினார்.

மிகவும் கஷ்டப்பட்டு மகனது திருமண வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். ஆனாலும் கண்கள் அவ்வப்போது வாசலைத் தொட்டு வந்தது.

இதோ மாப்பிள்ளை அழைப்பு ஆரம்பம் ஆகிவிட்டது. டாக்டர்கள் இல்லத் திருமணம் என்பதால் கூட்டம் அலைமோதியது. விக்ரமன் தங்கச் சங்கிலியும் அதைத் தொடர்ந்து மாலையும் அணிவித்து மைத்துனன் முறை செய்ய, அதன் பிறகு வைஜயந்தியின் சகோதரி முறையில் உள்ளவர்கள் ஆரத்தி எடுத்தனர். விக்ரமனின் முகம் ஒரேயொரு நொடி சுருங்கிப் பின்னர் தெளிவானது. பழைய ஞாபகங்கள் வந்ததோ?

வைஜயந்தியும் தனது மணமகனை எதிர் கொண்டு அழைக்க, அரவிந்தன் மாப்பிள்ளை கோலத்தில் உள்ளே அடியெடுத்து வைத்தான். ஸ்வேதா வைஜயந்தி யின் கழுத்தில் மாலையை அணிவித்தாள். வழக்கமாக எல்லாத் திருமணங்களிலும் நடக்கும் சம்பிரதாயங்கள் அனைத்தும் நடந்தேறியது. மணமக்கள் இருவரும் மேடையேறி நிற்க, பாட்டுக் கச்சேரி ஆரம்பம் ஆனது.

"பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது –

எழில் பொங்கிடும் அன்பு தங்கையின் நெற்றியில் குங்குமம் சிரிக்கின்றது –

மங்கல குங்குமம் சிரிக்கின்றது" முதல் பாடலே அந்தக் கச்சேரியை ஏற்பாடு செய்தவர் யார் என்று புரிந்திருக்கும்.

"மாதவாஆஆஆ!" என்று பல்லைக் கடித்தாள் வைஜயந்தி.

"என்ன டா தங்காச்சி! நம்ம சாங் செலக்ஷன் எப்பூடி?"

"உன் கல்யாணத்துல தான் படுத்தின. இப்பயாச்சும் ஃப்ரீயா விடேன். நாங்க இரண்டு டான்ஸ் பார்த்துக்கறோம்."

"பார்க்கிறது என்னடா, நீயும் மச்சானும் கூட ஆடலாம். வெயிட் பண்ணு."

"ஹான்.. டான்ஸா..!"

"யெஸ்.. யெஸ்.. டான்ஸ் தான். ஜோடி நம்பர் ஒன் மாதிரி எல்லாரும் ஜோடியா ஆடலாம்.‌ என்ன.. நம்ம விசுவாமித்திரனோட ஆளு இல்லாதது தான் குறை" என்று விக்ரமனைப் பார்த்துக் கண்ணடித்தான்.

"இவன் ஒரு இன்விடேஷன் கொடுத்து இருந்தால் வந்திருப்பா.. காலேஜ் வரைக்கும் போய் ஃப்ரண்டுக்கு மட்டும் கொடுத்திட்டு வந்திருக்கான். டூ பேட்." அங்கே இருந்த அர்ஜூனைப் பார்த்துக் கொண்டே சொன்னாள் வைஜெயந்தி.

"வைஜு! நான் உனக்கு என்ன கொடுமை பண்ணிட்டேன்னு என்னை வறுக்கிற..‌ உங்க அண்ணன் ஒரு மாஸ்டர் பீஸு.. அவனை எல்லாம் மனிதப் பிறவிகளோட சேர்க்கக் கூடாது.."

"அப்புறம் என்ன பிறவில சேர்க்கணும்.."

"தெய்வீகப் பிறவி மா.. என் நண்பனா போயிட்டானே.. வேறென்ன சொல்ல.. அப்புறம் நானும் அதே பிறவின்னு ஆயிடுமே!"

"வாட் எ பிட்டி? யூ பாவம் தான் அர்ஜுன் அண்ணா?"

தங்கைக்கும் மாப்பிள்ளைக்கும் மோதிரத்தோடு வந்த விக்ரமன், ஜெர்க் ஆகி யூ டர்ன் போடலாமா என்று யோசித்தான். "ஹேய்.. விக்ரம்.. வா.. வா.. உன்னைப் பத்தி தான் புகழ்ந்துட்டு இருந்தோம்."

"என்னைப் புகழ்ந்தீங்க..?? அதுவும் நீயும் என் அருமைத் தங்கச்சியும்..?? நம்பிட்டேன்.."

"அரவிந்த்! நீ தான் சாட்சி.. இப்போ நாம இவனைப் புகழ்ந்து தானே பேசிட்டு இருந்தோம்?" அரவிந்தனைப் பார்த்து கண்ணடித்து ஆமாம் என்று சொல்லச் சொன்னான்.

"ஓகே.. ஓகே.. மேடையில நின்னு ரொம்பப் புகழாத.. இப்போ கபுள்ஸ் ரிங் எக்ஸ்சேஞ்ச் பண்ணிப்பாங்க.. அரவிந்த், வைஜு இந்தாங்க பிடிங்க.. ஆல் கேமரா மேன் இங்கே திரும்புங்க" என்று ஆளுக்கொரு மோதிரத்தைக் கையில் கொடுத்தான்.

கையில் வாங்கிய மோதிரத்தைப் பார்த்த இருவரும் கண்ணை விரித்துப் பார்த்தார்கள். அவர்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு இருந்தது அந்த மோதிரம் இரண்டும். இருவரது முகத்தையும் சிறியதாக்கித் தத்ரூபமாக வடிவமைத்து இருந்தார்கள். அரவிந்தனின் மோதிரத்தில் வைஜயந்தியும், அவளது மோதிரத்தில் அரவிந்தனும் சிரித்துக் கொண்டு இருந்தார்கள்.

"வாவ்.. சூப்பர் விக்ரம்.. அருமையா இருக்கு" என்று இருவரும் கோரஸ் பாடி மோதிரத்தை மாற்றிக் கொண்டார்கள். ஃபோட்டோ, வீடியோ என்று ஃப்ளாஷ் கண்ணைப் பறித்தது.

பிறகு ரிசப்ஷன் களைகட்ட மணிக்கணக்கில் கேப் விடாமல் மணமக்களுக்கு கால் கடுத்துப் போனது. கிட்டத்தட்ட ஆயிரம் பேருக்கு மேலாக வருகை தந்திருந்த காரணத்தால் ஒரு நொடி கூட அவர்களுக்கு உட்கார நேரம் இல்லை.

எம்.ஜி.ஆர் பாடலில் ஆரம்பித்து ரஜினிகாந்த் கமல்ஹாசன் என்று ட்ராவல் செய்து விஜய் அஜீத் சூர்யா ஆர்யா என்று டைம் டிராவல் செய்து பாட்டுக் கச்சேரி களைகட்டியது.

"மல்லிகையில் ஒரு மாலை தங்க ஜாிகையில் ஒரு சேலை

பூவொன்றை பூட்டி வைக்கத்தான் ஓ கல்யாணம் கண்டுபிடித்தான்

தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா

பின்பு ஜீவிதம் துந்தனானேனா"

ஆங்காங்கே நின்ற இளவட்டங்கள் எல்லாம் ஆட ஆரம்பித்தனர். மனைவியோடு வந்திருந்த அர்ஜூன் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தான். அதாங்க, இரண்டு பேரும் ஜோடியா ஆடி மற்றவர்களை ஈர்த்தனர். மாதவன் ஸ்வேதா ஜோடியும் அவர்களுடன் இணைந்து கொண்டது.

நேரம் செல்லச் செல்ல விருந்தினரின் வருகை குறைந்த போது மணமக்களும் டான்ஸ் ஃபுளோருக்கு வந்தனர். அவர்களாக வரவில்லை, மாதவன் தான் இழுத்து வந்திருந்தான்.

இரவு பன்னிரண்டு மணி வரை தொடர்ந்த ஆட்டத்தை, அதிகாலை ஆறு மணிக்கு முகூர்த்தம் என்பதால் பெரியவர்கள் தலையிட்டு முடித்து வைத்தார்கள். அன்றைய கச்சேரியின் ஹைலைட்டாக இருந்தது விக்ரமன் பாடிய பாடல்.

"காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம்

மாதங்களில் அவள் மார்கழி மலர்களிலே அவள் மல்லிகை"

மாதவனின் கலக்ஷ்னில் இருந்து அவனுக்குப் பிடித்து சுட்ட பாடல். கண்களை மூடி அனுபவித்துப் பாடியவனை விடிய விடிய ஓட்டித் தள்ளிவிட்டான் மாதவன்.

இரவும் விடிந்தது, மணமக்கள் இருவரும் மேடையேறி திருமண சடங்குகள் ஆரம்பித்து இருந்தது. அழகான பச்சை நிறத்தில் காஞ்சிப் பட்டுடுத்தி மீனாட்சி போல ஜொலித்தாள் வைஜயந்தி. பொறுப்பான அண்ணனாக விக்ரமன் வாசலில் நின்று அனைவரையும் வரவேற்று உபசரித்து உள்ளே அனுப்பினான்.

ஒரு அலைபேசி அழைப்புக்குக் காது கொடுத்தவனை, "ஹாய் விக்ரம்!" என்ற குரல் திரும்ப வைத்தது.

'எங்கேயோ கேட்ட குரல்' என்று திரும்பியவன் அங்கே அவன் வயதை ஒத்த ஒரு ஆணுடன் கைகோர்த்து நின்றிருந்த ஸ்ரேயாவைக் கண்டு திகைத்து நின்று விட்டான். அக்காவின் திருமணத்தில் அல்ட்ரா மாடர்ன் மங்கையாக வலம் வந்தவள் இன்று புடவையில் வந்திருந்தாள். ஆனால் அந்தோ பரிதாபம், இதென்ன ப்ளவுஸ் போட மறந்து விட்டாளோ? பாலிவுட் ஹீரோயின்கள் போல நூடுல்ஸ் ஸ்ட்ராப்புடன் ஒரு ப்ளவுஸ் அணிந்து ஸீ த்ரூ என்று சொல்லும் வகையில் ஒரு புடவையை ஒற்றையாகக் தொங்க விட்டிருந்தாள். அது கல்யாண மண்டபத்தின் தரையைப் பெருக்கிக் கொண்டு இருந்தது. தலைவிரி கோலமாக காதிலும் கழுத்திலும் எதுவும் இல்லாமல் புடவையிலும் அவளது மாடர்ன் சிந்தனைகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள்.

"என்ன விக்ரம், உங்க தங்கை கல்யாணத்துக்கு ஜோடியா வந்திருக்கேன். வான்னு கூட சொல்லாமல் திகைச்சு நிக்கிறீங்க?"

'இதென்ன புதுசா இருக்கு.. இவங்க அண்ணன் கல்யாணத்துக்கு வரலையா.. என் தங்கை கல்யாணத்துக்கு வந்திருக்கேன்னு சொல்றாங்க' என்று யோசித்துக் கொண்டே அவஸ்தையாகச் சிரித்துக் கொண்டே அவளை வரவேற்றான்.

"ஓ.. ஐயாம் ஸாரி.. வாங்க வாங்க.. ப்ளீஸ் கம்" என்று இருவருக்கும் கல்கண்டு கொடுத்து வரவேற்றான்.

"தாங்க் யூ" என்று எடுத்துக் கொண்டவள், "பை தி வே.. மீட் மிஸ்டர் ஆதித்யா.. என் சோல்மேட்" என்று மேற்கத்திய பாணியில் அறிமுகம் செய்து வைத்தாள்.

"ஹலோ!" என்று அவனுக்குக் கை கொடுத்தவன் வேறெதுவும் பேசாமல் அடுத்து வந்தவரை வரவேற்றுப் பேச ஆரம்பித்தான். அதற்குள் வாசலையே பார்த்துக் கொண்டு இருந்த தமயந்தி மகளைக் கண்டதும் அங்கே விரைந்து வந்து சேர்ந்தார். மகளைத் தனியே இழுத்துச் சென்றவர் படபடவென்று பேச ஆரம்பித்தார்.

"ஏய் ஸ்ரேயா.. என்னடி இது.. யாருடி இந்தப் பையன்? இப்படி ஒட்டிக்கிட்டு நடந்து வர.. யாராவது பார்த்தால் என்ன நினைப்பாங்க?"

"மாம்! இப்போ என்ன ஆச்சுன்னு இவ்வளவு டென்ஷன் ஆகறீங்க? ஹி இஸ் ஆதித்யா. இவரைத் தான் நான் கல்யாணம் பண்ணிக்க போறேன். உங்களுக்கு எல்லாம் இன்ட்ரோட்யூஸ் பண்ணி வைக்கலாம்னு தான் கூட்டிட்டு வந்தேன். சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்க போறவங்க ஒட்டிக்கிட்டு வந்தால் என்ன தப்பு. கொஞ்சம் டீசன்டா பிஹேவ் பண்ணுங்க. அவரைத் தனியா நிக்க வச்சுட்டு இப்படி வந்து பேசிட்டு இருக்கீங்க."

"சரி..‌ சரி..‌ முதல்ல உள்ள வா.. ரூம்ல போய் பேசிக்கலாம் வா. உங்க அப்பாவுக்கு நான் இன்னும் விஷயத்தைச் சொல்லவே இல்லை.‌ அவர் என்னத்த சொல்லப் போறாரோ தெரியலை." மகளை இழுத்துக் கொண்டு சென்றவரது பார்வை அவளுடன் வந்தவனை ஆராய்ந்து பார்த்தது.

ஆதித்யா, நல்ல ஆறடி உயரத்தில் வெள்ளைக்காரன் போல இருந்தாலும் அவன் இந்திய ரத்தம் என்பது நன்றாகவே தெரிந்தது. உயரத்திற்கு ஏற்ற எடையுடன் பார்க்க நன்றாகவே இருந்தான். மகளுக்கு நல்ல பொருத்தம் தான். ஆனால் என்ன குலமோ, கோத்திரமோ.. நிச்சயம் ஏழையாக இருக்க முடியாது. மிகுந்த பணம் படைத்தவன் போலத் தான் அவனது நடை உடை பாவனை எல்லாம் இருந்தது. என்னென்ன கண்டிஷன்கள் வரப்போகிறதோ என்று பயந்து கொண்டே இருவரையும் அறைக்குள் அழைத்துச் சென்றார்.

இவர்களைக் கண்டு விட்டாலும், தாமோதரன் அவர்கள் அருகில் வருவதற்கு அவசரம் காட்டவில்லை. தங்கையின் வரவை அறிந்த அரவிந்தனின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.‌ "அண்ணா! நீ புரோகிதர் சொல்ற மந்திரத்தில கான்சென்ட்ரேட் பண்ணு. மத்ததெல்லாம் உனக்குத் தேவையே இல்லை" என்று அவன் காதுகளில் அழுத்தத்துடன் சொன்ன ஸ்வேதாவும் தங்கையைக் கண்டு கொள்ளவே இல்லை.

அறைக்குள் தமயந்தி என்ன பேசுவது எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் விழிக்க, மணமகனின் தாயாருக்கு மணமேடையில் இருந்து அழைப்பு வந்தது.

மகனின் கல்யாணக் கடமையில் மகளது பிரச்சினையை ஓரமாக ஒதுக்கி விட்டு மேடைக்குச் சென்று சடங்குகளில் கலந்து கொண்டார், தமயந்தி.

அன்னையின் பின்னால் வந்த ஸ்ரேயாவும் ஆதித்யாவை அழைத்துச் சென்று முதல் வரிசையில் இருந்த நாற்காலிகளில் அமர்ந்து கொண்டாள். ஆதித்யாவிற்கு மேடையில் நடப்பதெல்லாம் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. மூன்று தலைமுறைக்கு முன்பே அமெரிக்காவில் குடியேறி விட்ட குடும்பம் அவனது. பாரம்பரியத்தைப் பெரிதாக மதிப்பவர்கள் கிடையாது. திருமணம் எல்லாம் அவரவர் விருப்பம் தான். ஆனால் இங்கே நடக்கும் சம்பிரதாயங்கள் அனைத்தும் அவனுக்கு ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தியது உண்மை.

ஸ்ரேயாவிடம் சந்தேகம் கேட்கலாம் என்றால் அவள் பார்வை மேடையில் இருந்தது.

அடுத்த சில நிமிடங்கள்‌ பரபரப்பாகச் செல்ல, வைஜயந்தியின் கழுத்தில் மங்கல நாணைப் பூட்டி தன்னில் சரிபாதியாக ஏற்றுக் கொண்டான் அரவிந்தன். மேடையில் இருந்த அனைவருக்கும் நெகிழ்ச்சியான தருணம். தேவராஜன் மற்றும் அருந்ததியின் கண்களில் கண்ணீர் திரையிட்டு மறைத்தது. தங்கையையும் அரவிந்தனையும் அணைத்துக் கொண்ட விக்ரமனின் கண்களும் நீரை வெளியேற்றின.

தாமோதரன் வந்து மருமகளின் தலையில் கை வைத்து ஆசிர்வாதம் செய்தவர் மகனை ஆரத் தழுவிக் கொண்டு முதுகில் தட்டிக் கொடுத்தார்.

வந்திருந்த அனைவரும் வாழ்த்த அடுத்து மணமக்களுக்கான விளையாட்டு தொடங்கியது. மாதவன் இருக்கையில் அங்கே கலகலப்புக்கா பஞ்சம். குடத்தில் மோதிரத்தை போடாமல் ஒரு தடவை ஏமாற்றினால் அடுத்த தடவை இருவரது கையிலும் மோதிரம் கிடைக்கும் படி செய்தான். அதாவது இரண்டு மோதிரங்களை நழுவ விட்டிருந்தான்.



அவர்களுக்கான திருமணப் பரிசு என்று அந்த மோதிரங்களை மாற்றிக் கொள்ள வைத்தான். பூப்பந்தைப் பிடிக்கிறேன் என்று இருவரும் ஒருவரை ஒருவர் இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்த காட்சி கேமராவில் நச்சென்று பதிவானது.

இதே கலாட்டாக்கள் சாப்பிடும் போதும் தொடர்ந்தது. ஸ்வீட் என்று குலாப் ஜாமூன் வைக்கப் பட்டிருக்க, அதைப் முழுதாக அடுத்தவருக்கு ஊட்டி விடவேண்டும் என்று கண்டிஷன் போட்டான். அதைச் செயல்படுத்த இருவரும் முயற்சி செய்து அனுமார் போலக் காட்சி அளித்தனர்.

இப்படியாக சிலபல கலாட்டாக்களுடன் அரவிந்தன் வைஜயந்தி திருமணம் நன்றாக நடந்து முடிந்தது. ஹேமாவும் புருஷோத்தமனும் மணமக்களை அரவிந்தனின் இல்லத்துக்கு அழைத்துச் சென்றனர். பால் பழம் போன்ற சம்பிரதாயங்கள் முடிந்து புகுந்த வீட்டில் விளக்கேற்றி வைத்தாள் வைஜயந்தி. சீர் வரிசைகளோடு சாயங்காலம் வந்த தேவராஜன் அருந்ததி தம்பதியர் மகளிடம் பிரியாவிடை பெற்றனர்.‌ உள்ளூரில் தான் இருக்கப் போகிறாள். ஆனாலும் மகளைப் பிரிவது என்பது ஒரு சந்தோஷமான துக்கம் தானே..

ஸ்ரேயா ஆதித்யாவுடன் வீட்டுக்கு வந்திருந்தாள். 'ஸ்டார்ட் மியூசிக்' என்பது போல அவள் அரவிந்தனைப் பார்க்க, அவனோ தந்தையைப் பார்த்தான். அவர் வாய் திறக்கும் முன்பே தமயந்தி ஒரு கேள்வி கேட்டிருந்தார். "காலைல அவ்வளவு மேக்கப் போட்டு கைய வீசிட்டு வந்திருக்கியே..‌எப்போ ஊருக்கு வந்த? எங்க தங்கியிருந்த?" இதே கேள்விகள் எல்லோர் மனதிலும் இருப்பதால் பதிலை எதிர்பார்த்து ஸ்ரேயாவையே பார்த்தனர். வைஜயந்தி தான் முள் மேல் இருப்பது போல உணர்ந்தாள்.

********

"குட் ஈவினிங்ங் ஸார்!"

"குட் ஈவினிங் மை டியர் லிட்டில் கேர்ள். உள்ள வா!"

தனது அறை வாசலில் நின்று அனுமதி கேட்ட நியதியை உள்ளே அழைத்தார் புருஷோத்தமன்.

"டேக் யுவர் சீட்"

"தாங்க் யூ ஸார்."

"இப்போ சொல்லுங்க.. உங்க தீசிஸ் எல்லாம் எந்த அளவுக்கு போயிட்டு இருக்கு?"

"குட் சார். கொஞ்சம் டிஸ்கஸ் பண்ணலாம்னு தான் வந்தேன். நீங்க ஃப்ரீ தானே..'

"யா..யா.. ஃப்ரீ தான். சொல்லுங்க. ஹௌ கேன் ஐ ஹெல்ப் யூ?"

"ப்ரெக்னென்சில இருக்கிற சில காம்ப்ளிகேஷன்ஸ்.. ஃபார் எக்ஸாம்பிள் இந்த ஆர்எச் ஃபேக்டர் மாதிரி விஷயங்கள்ல க்ளாரிட்டி வேணும்."

"ஆர்எச் ஃபேக்டர் ஒரு மேஜர் ப்ராப்ளம்.. சப்போஸ் மதரோட ஆர்எச் ஃபேக்டர் நெகடிவா இருந்து பேபிக்கு பாஸிட்டிவா இருந்தால் அதைத் தேவையில்லாத எனிமியா மதரோட இம்யூன் சிஸ்டம் ட்ரீட் பண்ண ஆரம்பிக்கும். ஆன்டிபாடீஸ் கிரியேட் ஆகி பேபிய அட்டாக் பண்ணும். நார்மலா இந்த மாதிரி சிச்சுவேஷன்ல பேபி தங்கறதே கஷ்டம். சர்வைவல் ரேட் ரொம்ப கம்மி. இன் கேஸ் முதல் குழந்தை பிரச்சினை இல்லாமல் பிறந்துட்டாலும் செகண்ட் சைல்டுக்குக் கண்டிப்பா ப்ராப்ளம் வரும். பேபியோட ஆர்பிசி தான் டார்கெட்டா இருக்கும்."

"இந்த மாதிரி நடக்கிறதை அவாய்ட் பண்ண முடியாதா சார்."

"நம்ம ஊர்ல நெகடிவ் ப்ளட் க்ரூப் இருக்கிற லேடீஸ் ரொம்ப கம்மி தான். ஆனாலும் இந்த நேச்சுரல் பிராசஸ அவாய்ட் பண்ணவே முடியாது."

"ம்ம்..' என்றவள் அடுத்த கேள்வி கேட்கும் முன்பு "குட் ஈவினிங் அங்கிள்!" என்று உள்ளே நுழைந்தான் அவன். எதிர்பாராத விதமாக அவனை அங்கே கண்டவளின் முகம் மலர்ந்து விகசித்தது. அவனது பார்வையிலும் ஆச்சரியம் தான் வெளிப்பட்டது. கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போலிருந்தது.

அவனது பின்னால் வந்த மாதவன் இந்தக் காட்சியை கண்டு விட்டு, 'பார்த்த விழி பார்த்தபடி பூத்துக் கிடக்க.." என்று சத்தமில்லாமல் பாடினான். "ஒரு சிறப்பான சம்பவத்தை நான் எதிர்பார்க்கிறேன்" என்று விக்ரமின் காதோரம் சொல்லி தந்தையின் வலது புறம் இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தான்.

"வா விக்ரம். இப்படி உட்காரு. நீ என்ன மாதவா, அதிசயமா விக்ரமோட வந்திருக்க?" விக்ரம் சென்று மாதவனின் அருகில் அமர்ந்தான்.

"எல்லாம் காரணமாத் தான் டாட். உங்களுக்கு இப்போ புரியாது. கொஞ்சம் லேட் ஆகும்.. ஐ மீன் ஒன்னு இரண்டு வருஷங்கள் ஆகும்".

"வேலையா இருக்கீங்களா அங்கிள். டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?"

"சே.. சே.. இல்லவே இல்லை. மீட் மிஸ்.நியதி. உனக்குத் தெரிஞ்சிருக்கும். இவங்களுக்கு சில டவுட்ஸ் க்ளாரிஃபை பண்ணிட்டு இருக்கேன். நீ வந்ததும் நல்லதா போச்சு. உன்னோட வாஸ்ட் அனாலிசிஸ் இவங்களுக்கு ஹெல்ப் ஃபுல்லா இருக்கும்."

"ஆமா.. ஆமா.. ஹெல்ப்ஃபுல்லா இருக்கும்" என்று ஆமாம் சாமி போட்டான் மாதவன்.

"என்ன கேள்வி? எதைப் பத்தி டவுட்டு?" என்று ஆரம்பித்தவன் அவள் தன்னையே பருகுவது போல் பார்த்துக் கொண்டு இருந்ததில் புருவம் உயர்த்தினான். வாய்க்குள் நாக்கைத் துருத்தி அவன் பார்த்த பார்வையில் அவள் முகம் மாறாமல் காக்க பெரும் பாடுபட்டாள்.

"அது.. வந்து.. தீசிஸுக்கு.. " என்று இழுத்தவளுக்கு பேச்சே வரவில்லை.

"வெறும் காத்து தான் வருதாம் விக்ரம்" அவனது காதுகளில் கவுன்டர் கொடுத்தான் மாதவன்.

"மேடி ப்ளீஸ்…"

"ம்.ஓகே.. ஓகே.. ஏன் மிஸ்.நிதி..' என்று ஆரம்பித்து விக்ரமனின் முறைப்பை வாங்கிக் கொண்டு, "ஸாரி நியதி! நீங்க அருந்ததி ஆன்ட்டி கூட ஓபி பார்த்தீங்க தானே..‌ஒரு ஒன் இயர் பேக்.."

"யெஸ் சார்.. அப்போ யூஜி இன்டர்ஷிப் பண்ணிட்டு இருந்தேன். உங்க வைஃப் அட்மிட் ஆகி இருக்கும் போது பாராத்தோமே..இப்போ எம்எஸ் கைனகாலஜி பண்றேன்."

"குட் வெரி குட்.. உங்க வீடு எங்கே இருக்கு?"

"மாதவா! இதென்ன கேள்வி.. அவங்க வீடு எங்கே இருந்தால் உனக்கு என்ன?"

"எனக்கென்ன.. எனக்கு ஒன்னுமே இல்ல.. கேட்க வேண்டியவங்க கேட்கணும்.. அது இப்போதைக்கு நடக்காது போல.. அதான் நான் மவுத்பீஸாட்டம் வேலை பார்க்கிறேன்."

"அங்கிள் ஒரு ரெஃபரன்ஸ் ஆர்டிகிள் தரேன்னு சொன்னீங்களே.. ரெடியா இருக்கா? அதை வாங்கிட்டு போகலாம்னு தான் வந்தேன்."

"இல்லையே பா. நீ என்னைக்கு கிளம்பற?"

"நான் நாளை மறுநாள் கிளம்பறேன் அங்கிள். எர்லி மார்னிங் ஃப்ளைட்"

"நான் நாளைக்குத் தரேன்.. வீட்டில கொண்டு வந்து கொடுத்திடறேன்"

"வட போச்சே.." என்றான் மாதவன்.

விக்ரமன் நியதி இருவரது முகத்திலும் புன்னகை..

"சரி அங்கிள் நான் கிளம்பறேன். மேடி! நீ வரலையா?" என்று எழுந்தான் விக்ரமன்.

"இதோ வந்துட்டேன்.. விக்கி" மாதவனோ, வார்த்தைகளில் காட்டிய அவசரத்தை எழுவதில் காட்டவில்லை.

"க்ளாட் டு மீட் யூ நிதி! ஸீ யூ சூன்!" என்ற விக்ரமன் அவளது கையைப் பிடித்துக் குலுக்கி விடைபெற்றான்.

"எப்போ?" அவளது வாய் தானாகவே முணுமுணுக்க அவனோ ஆச்சர்யத்தின் உச்சிக்கே சென்றான்.

"டேக் கேர்.. பை.. பை.." இருக்கும் இடம் கருதி வேறெதுவும் பேசாமல் கிளம்பி விட்டான்.

அவளது கைகள் இன்னும் அவனது கைகளுக்குள் இருக்க, இருவரும் ஏதோ உலகத்தில் சஞ்சாரம் செய்ய ஆரம்பித்தார்கள். மாதவன் பலமாகச் செருமி அவர்களைத் தரை இறக்கினான்.
 

Author: SudhaSri
Article Title: ஆடுமடி தொட்டில் இனி - 14
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.