• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

ஆடுமடி தொட்டில் இனி - 16

SudhaSri

Administrator
Staff member
Jun 16, 2024
536
44
43
india
ஆடுமடி தொட்டில் இனி - 16

"நியதி! என்ன பிளான்ல இருக்க? கண்டிப்பா நம்ம ஹாஸ்பிடல்லயே உனக்கு ஆஃபர் வரும். மே பி, உங்க அப்பா தனியா ஹாஸ்பிடல் கூட உனக்காக ரெடி பண்ணலாம். நீ என்ன எதையும் கண்டுக்காம இருக்க?"

"நான், யார் கிட்டயாவது முதல்ல வொர்க் பண்ணனும் அகில்ஸ். எக்ஸ்பீரியன்ஸ் கெயின் பண்ணிட்டா அப்புறம் என்னன்னு யோசிக்கலாம்."

"நீ யாரையோ நினைச்சு பேசற மாதிரியே இருக்கே?"

"ஹான்.. யெஸ்.. டாக்டர்.அருந்ததி மேடம். அவங்க கிட்ட வொர்க் பண்ணனும்னு ஆசை. பட் எப்படி அவங்களை அப்ரோச் பண்றதுன்னு தெரியாமல் முழிக்கிறேன்."

"ஏன் டைரக்டா அவங்க கிட்ட போய் கேட்டுட வேண்டியது தானே.. நீ தான் அவங்களுக்கு பெட் ஆச்சே!"

"அது நல்லா இருக்குமா.. அவங்க ஏதாவது தப்பா நினைச்சிட்டா என்ன பண்றது?"

"அதெல்லாம் ஒன்னும் நினைக்க மாட்டாங்க.. நீயே அவங்க கிட்ட கேட்கறது தான் நல்லது.. அப்படி இல்லேன்னா ஒன்னு பண்ணேன்.. நம்ம புரோஃபசர் புருஷோத்தமன் சார் அருந்ததி மேடத்தோட க்ளோஸ் ஃப்ரண்டு. அவர் கிட்ட யோசனை கேட்கிற மாதிரி பேசிப் பாரேன். அவரே கூட ரெகமண்ட் பண்ண சான்ஸ் இருக்கு."

"ம்ம்.. இது நல்ல ஐடியாவா இருக்கு.. நான் இப்பவே சாரைப் பார்க்கப் போறேன்.."

"இருடி.. என்ன அவசரம்.. நான் இன்னும் பேசி முடிக்கலை.."

"இன்னும் என்ன டி?'

"கேரியர் விஷயம் ஓகே.. வாட் அபவுட் யுவர் பெர்சனல் லைஃப்? உன் ஆளைப் பத்தி ஏதாவது இன்ஃபர்மேஷன் தெரியுமா? எப்படி கான்டாக்ட் பண்ணனும்றதாவது தெரியுமா?"

"ம்ச்..‌ பதில் தெரியாத கேள்விகளை எல்லாம் கேட்டு எதுக்கு டி என்னை டென்ஷன் ஆக்கற?"

"இப்போ உனக்கு பதில் தெரியாமல் இருக்கலாம்.. ஆனால் தெரிஞ்சுக்காமல் இருந்தா அப்புறம் கஷ்டமாகிடும்"

"எப்படி சொல்ற?"



"உன் பேரன்ட்ஸ் சும்மா இருப்பாங்களா? நாங்க மாப்பிள்ளை பார்க்கறோம்னு கிளம்ப மாட்டாங்க?"

"தெரியல டி.. அம்மா அப்படி செய்ய நினைக்க மாட்டாங்க. பட் டாடி என்ன செய்வார்னு புரிஞ்சுக்க முடியலை. அவங்க கிட்ட பேசணும்."

"அதுக்கு முன்னாடி அந்த வேதாளம் எங்க இருக்குன்னு பார்க்கணும்.. அதை விட்டுட்டியே"

"ஏய்.. யாரடி வேதாளம்னு சொல்ற?"

"எல்லாம் அந்த விக்ரமாதித்த மகராசவத்தான். ஒரு ஃபோன் நம்பராவது கொடுத்தானா.. நாம என்ன புறா விடு தூது அனுப்ப முடியுமா? .. ஹேய்.. ஐடியா.. வழக்கம் போல அவன் நண்பனைத் தூக்கிற வேண்டியது தான். இப்பவே போறேன்.."

"யாரைத் தூக்கறதுக்கு ப்ளான் போடறீங்க.. டாக்டர்னு பார்த்தா இரண்டு பேரும் லேடி டான்னா இருக்கீங்களே!" சம்மன் இல்லாமலே ஆஜராகி, ஆப்பைத் தேடி வந்து உட்கார்ந்தான் அர்ஜுன்.

"வாரே வா.. பாரு டி. ஆடு தானா வந்து தலையைக் கொடுக்குது. யாரைத் தூக்கப் போறோம்னா கேட்டீங்க.. எல்லாம் உங்களைத் தான் சீனியர்."

"அம்மாடி.. தங்கச்சிகளா! நான் என்னம்மா செஞ்சேன் உங்களை? எதுக்கு இந்த விஷப்பரிட்சை?"

"இன்னும் கொஞ்ச நாளில் இங்கே இருந்து கிளம்பிடுவோம்.. அப்புறம் உங்க ஃப்ரண்ட எங்க போய் தேடுறது.. கையில‌ ஃப்ளக்ஸ் போர்டு வச்சிட்டு ரோடு ரோடா அலையணுமா?"

"ஓ.. உங்க கவலை நியாயமானது தான். அந்த மடையன் என்ன செய்ய காத்திருக்கான்னு தெரியலையே!"

"நீங்க அவர் நம்பரைக் கொடுங்க.. மத்தத நாங்க டீல் பண்ணிக்கிறோம்."

"ஸாரி மா.. அவன் கிட்ட கேட்காமல் நம்பர் தரமுடியாது. லேட்டஸ்ட்ஆ அவன் கிட்ட பேசினப்போ, தீசிஸ் சப்மிட் பண்ணிட்டேன்னு சொன்னான். சீக்கிரம் வந்திடுவான். உன் கான்டாக்ட் நம்பர என் கிட்ட கொடுத்திட்டுப் போ.. அவனோட பேசிட்டு உனக்கு அப்டேட் பண்றேன். Btw எந்த ஹாஸ்பிடல்ல ஜாயின் பண்ணப் போற நியதி?"

"ம்ச் தெரியலண்ணா"

"ஏய் என்னடி இப்படி சொல்ற? அவ அருந்ததி மேடம் கிட்ட ஜாயின் பண்ண நினைக்கிறா. அவங்களை எப்படி அப்ரோச் பண்றதுன்னு தெரியாமல் முழிச்சிட்டு இருக்கா."

'ஆஹா.. டேய் மச்சான்.. கில்லாடி டா நீ' மனதுக்குள் நண்பனை மெச்சியவன், "டைரக்டா அவங்க கிட்ட போய் பேசு. கண்டிப்பா ஓகே பண்ணுவாங்க.."

"தாங்க்ஸ் ண்ணா. இந்தாங்க என் நம்பர்."

"ஒரு மிஸ்டு கால் கொடுக்கிறேன்.‌ என் நம்பரை நோட் பண்ணி வச்சுக்கோ. பை.. டேக் கேர். டோன்ட் வொர்ரி. எவ்ரிதிங் வில் பி ஃபைன் சூன்" என்று அவளுக்குத் தைரியம் சொல்லி விட்டு கிளம்பியவன் உடனே நண்பனை அழைத்து விவரம் சொன்னான்.

அவனோ, "அவ வேலைக்கு நான் கேரண்டி!" என்று ஒரே வரியில் அழைப்பைத் துண்டித்து விட்டான். அடுத்த நொடியே தன் தாயை அழைத்தான்.

"மாம்! இந்த பேட்ச்ல நம்ம காலேஜ்ல எம்எஸ் படிச்ச எலிஜிபிள் கேன்டிடேட்ஸ் எல்லாம் ப்ளேஸ் ஆகிட்டாங்களா?"

"எதுக்கு இந்த கேள்வி? அது அவங்கவங்க சாய்ஸ் தானே."

"இல்லம்மா..நம்ம ஹாஸ்பிடலுக்கு இரண்டு பேர் இருந்தால் நல்லா இருக்கும். அதான்..

"மை குட்னஸ். நான் கூட செக் பண்ணனும்னு நினைச்சேன். தாங்க்ஸ் விக்ரம். நான் அப்பாயின்ட் பண்ணிட்டு சொல்றேன்."

"மா.. நீங்க பாட்டுக்கு உங்களுக்கு பிடிக்குதுன்னு யாரையாவது கூப்பிடாதீங்க. எலிஜிபிள் கேன்டிடேட் தான் வேணும்."

"அதையெல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீ ஃபோனை வை.. ஹேய்.. நியதி.. கம்.. கம்.. இப்போ தான் உன்னை நினைச்சேன். நீயே வந்துட்ட. உள்ள வா. உட்காரு." காதிலிருந்து மொபைலை எடுக்காமலே பேசிக் கொண்டு இருந்தார் அருந்ததி.

"மாம்.." மறுமுனையில் கத்திய விக்ரமன் ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்தான்.

"டேய் நீ இன்னும் காலை கட் பண்ணலையா.. நான் ஆளை செலக்ட் பண்ணியாச்சு.. நீ ஃபோனை வை" என்று உண்மை அறியாமலே அழைப்பைத் துண்டித்தார்.

"யெஸ்.. சக்சஸ் டா விக்ரமா.." என்று சத்தமாகச் சொல்லி தனது உற்சாகத்தை வெளிப்படுத்தியவன் மறக்காமல் அர்ஜுனை அழைத்து விவரம் சொன்னான்.

அருந்ததியிடம் பேசி அவரது சொந்த மருத்துவமனையில் ஒரு வேலையை வாங்கிக் கொண்டு வெளியே வந்த நியதிக்கு ஏதோ ஒரு இனம் புரியாத இதம் தோன்றியது. என்னவாக இருக்கும் என்று தெரியாமலே சந்தோஷம் ஊற்றெடுத்தது.

********

வெற்றிகரமாக எம்எஸ் படிப்பை கோல்ட் மெடலுடன் முடித்திருந்தாள் நியதி. யுஜிசி யின் சேர்மன் கையால் பட்டத்தையும் மெடலையும் வாங்கிக்கொண்டு கூட்டத்தில் இருந்த பெற்றோரை நோக்கினாள். சுகந்தா ஆனந்தக் கண்ணீரோடு கையசைத்து, வாசுதேவன் தம்ப்ஸ்அப் காட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். என்ற பொழுதில் பெரிதும் கண்களும் பெற்றோராக மகளின் வெற்றித் தருணத்தை அனுபவித்தனர்.

வீடு வந்து சேர்ந்த மகளுக்கு ஆர்த்தி எடுத்து திருஷ்டி கழித்து அவளை ஒரு வழி ஆக்கிவிட்டார் சுகந்தா.‌ அன்றைய இரவில் வாசுதேவன் மகளிடம் அவளது எதிர்காலம் பற்றிய பேச்சை ஆரம்பித்து வைத்தார்.

"வாவ் சோளா பூரி! டேஸ்டி அண்ட் யம்மி மம்மி.." என்று சப்புக் கொட்டியபடி சாப்பிட அமர்ந்தாள் நியதி.



"எப்படி மா.. நீங்க இவ்வளவு பெரிய பூரிய நல்லா புஸ்ஸூன்னு செய்யறீங்க.. பேசாமல் நாம ஒரு ஃபுட் ஜாயின்ட் ஆரம்பிச்சுடலாம். வறுக்கிறது, பொரிக்கிறதெல்லாம் உங்களுக்கு நல்லா வருது.. அந்த வெரைட்டீஸ்கு நல்லா மார்கெட் இருக்கும். சீக்கிரமே நாம் அம்பானிக்கு போட்டியா இருபத்தெட்டு மாடி வச்சு வீடு கட்டிடலாம்."

"வாயாடி.. பேசாமல் சாப்பிடு. இரண்டே இரண்டு பூரிய உனக்காக செய்யறதுக்குள்ள நான் படுற பாடு.. ரொம்ப ஜாக்கிரதையா நல்லா வந்துடணுமேன்னு ஆண்டவனை வேண்டிட்டு நான் செய்யறது உனக்குக் கிண்டலா இருக்கா? ஃபுட் ஜாயின்ட் ஆரம்பிக்கணுமாம், அதுவும் வறுத்தது பொரிச்சதுன்னு...‌ ஒரு டாக்டர் மாதிரி பேசுடி.."

"இதென்ன மா வம்பா இருக்கு.. டாக்டர்னா சாப்பிடக் கூடாதா? அப்புறம் எப்படி உயிர் வாழ்ந்து? டாக்டர் ஆனாலும் உயிர் வாழ சோறு முக்கியம் அமைச்சரே…"

"என்ன? அம்மாவும் பொண்ணும் ஏதோ காரசாரமான ஆர்கியூமென்ட்ல இருக்கீங்க. என்னன்னு சொல்லுங்க.. நாட்டாமை ரெடி.. தீர்ப்பு சொல்லிடுவோம்"

"ஆமா.. நீங்க தீர்ப்பு சொல்லிட்டாலும்.. உங்க பொண்ணு சொல்றது தான் சரின்னு சொல்லுவீங்க.."

"நாட்டாமை.. தீர்ப்ப மாத்துன்னு நீங்க சவுண்ட் கொடுக்கணும் மா.. வாயுள்ள பிள்ளை தான் பிழைக்கும்னு நீங்க கேள்விப்பட்டதில்ல"

"சரிங்க பாட்டி.. இப்போ வாயை மூடி சாப்பிடு.."

"மாஆஆஆஆஆ!"

"சரி..சரி.. சாப்பிடறதுக்கு மட்டும் வாயைத் திற.."

"அதெப்படி முடியும் மா.. டாடி என் கிட்ட எதையோ பேசணும்னு தானே வந்திருக்கார். நான் பேசித் தானே ஆகணும்.."

"நீ எப்படி இவ்வளவு புத்திசாலியா இருக்க டா குட்டிம்மா!"

"உங்க பொண்ணா இருக்கிறதால இந்த டவுட்டு உங்களுக்கு வரத்தான் செய்யும் டாடி.. என்ன பண்றது.. நான் தாத்தா பாட்டி மாதிரி இருக்கேனோ என்னவோ?"

"வாலு வாலு.. இப்படி பேசி ரூட் மாத்தி விடாத.. நான் பேச வந்ததை முடிக்காமல் போறதா இல்லை.."

"அதானே.. நீங்க உஷார் பார்ட்டின்னு தான் தெரியுமே.. சொல்லுங்க .. இல்லை இல்லை.. கேளுங்க டாடி.."

"ம்ம்.. படிச்சு முடிச்சிட்டு வேலையும் வாங்கிட்ட. அடுத்து உன் கல்யாணம் தான். நீ என்ன நினைக்கிற? உனக்கு யாரையாவது பிடிச்சிருந்தா சொல்லு. நாம மேற்கொண்டு விசாரிக்கலாம்."

"டாடி! அது வந்து…"

"லுக் குட்டிம்மா. எங்க இரண்டு பேருக்கும் உன் மேல நம்பிக்கை இருக்கு. உன் சாய்ஸ் எப்போதும் பெஸ்ட்ஆ தான் இருக்கும். அதனால தைரியமா சொல்லு. அவர் பேர் என்ன?"

"பேர் விக்ரமன் பா.."

"நைஸ் நேம். என்ன பண்றார்? அவரும் டாக்டரா இல்லை வேற ஃபீல்டா?"

"டாக்டர் தான் பா.."

"என்ன ஸ்பெஷலிஸ்ட்? எங்க வொர்க் பண்றார்?"

"அது வந்து பா.. அவர் பேஸிக்கலா கைனீக் தான்.. "

"ஓ.. அப்போ உங்க காலேஜ் தான்.."

"ஆமா.. பட் சீனியர்.."

"எங்க வொர்க் பண்றார்னு சொல்லலையே?"

"அவர் இப்போ பிஎச்டி பண்ணிட்டு இருக்கார் பா. ஆன்காலஜின்னு நினைக்கிறேன்"

"வாட் நினைக்கிறியா? என்னம்மா எங்க போய் பிஎச்டி பண்றார்? கான்டாக்ட்ல இருக்கியா இல்லையா?"

"ஸ்விஸ்ல பண்றார்னு நினைக்கிறேன் பா. ஆனால் என் கிட்ட அவரோட கான்டாக்ட் கிடையாது" சொல்லும் போதே அவளது குரலில் ஒரு தடுமாற்றம்.

"ஆனால் நிச்சயமா என் கிட்ட வந்திடுவார் பா" என்று தனக்கும் சேர்த்து நம்பிக்கை கொடுத்துக் கொண்டாள்.

"ம்ச்.. என்னம்மா இது.. அவரை எப்படித் தான் கான்டாக்ட் பண்றது? இது விளையாட்டு விஷயம் கிடையாது மா. உன் லைஃப்.. என்னால ஜஸ்ட் லைக் தட் எடுத்துக்க முடியாது."

"அவரோட ஃப்ரண்டு அர்ஜுன் எங்க காலேஜ் ஹாஸ்பிடல்ல தான் வொர்க் பண்றார். அவர் கிட்ட கேட்டால் தெரியும் பா. இந்தாங்க, இது அவரோட நம்பர். அப்புறம் எங்க புரோஃபசருக்கு கூட அவரை நல்லா தெரியும். ஃபேமிலி ஃப்ரண்ட்ஸ்னு நினைக்கிறேன். அவர் கிட்ட கூட நீங்க கேட்கலாம் பா. பட் வேற எந்த ஆஃபரும் கொண்டு வராதீங்க ப்ளீஸ்!"

"ஓகே டா. நான் முதல்ல அந்த அர்ஜுனை விசாரிக்கிறேன். அப்புறம் இதைப் பத்தி முடிவு பண்ணலாம்."

தனது மொபைலில் அர்ஜுனனுக்கு அழைப்பு விடுத்தபடி எழுந்து சென்று விட்டார் வாசுதேவன்.

"அர்ஜுன் ஹியர்.. மே ஐ நோ ஹூ இஸ் ஆன் தி லைன்?"

"ஹலோ மிஸ்டர் அர்ஜுன்! நான் வாசுதேவன். நியதியோட ஃபாதர்."

"ஓ.. சொல்லுங்க சார். என்ன விஷயமா கால் பண்ணீங்க?"

"நீங்க இதுக்குள்ள கெஸ் பண்ணி இருக்கணுமே! நான் பொண்ணைப் பெத்தவன், அவளோட எதிர்காலம் யாரோடன்னு எனக்கு ஒரு கிளாரிட்டி வேணும் இல்லையா? அவளுக்கு அவர் பேரைத் தவிர ஒன்னும் தெரியலை, அதைப் பத்தி தெரிஞ்சுக்கலாம்னு தான் கூப்பிட்டேன்"

'அடேய்.. நண்பா!' என்று பல்லைக் கடித்த அர்ஜுன், "நானே சொல்லவா இல்லை அவனோட கான்டாக்ட் வேணுமா?"

"நியதி கேட்ட போது அவர் கிட்ட கேட்காமல் கொடுக்க மாட்டேன்னு சொன்னீங்களாம்."

"சார் அது.. விக்ரமோட ஓபீனியன். ஃபோன்ல பேசி ஏங்க வேண்டாம்னு பிடிவாதம் பிடிச்சிட்டான். பட் நீங்க பொண்ணுக்கு அப்பாவா மாப்பிள்ளை பத்தி விசாரிக்கும் போது அதே பதிலைச் சொல்ல முடியாதே."

"ஹா.. ஹா.. நல்லா தான் பேசறீங்க. அவரைப் பத்தி கொஞ்சம் சொல்லுங்க. அப்புறம் அவங்க அப்பாவோட கான்டாக்ட் இருந்தால் கொடுங்க."

மடைதிறந்த வெள்ளமாக நண்பனின் புகழைப் பாடித்தள்ளி விட்டான் அர்ஜுன். கடைசிப் பஞ்ச்சாக, "சார் நியதி வொர்க் பண்றாளே டாக்டர் அருந்ததி அவங்க பையன் தான் சார் விக்ரம்."

"ரியலி.. அவங்களைப் பத்தி இவ புகழாத நாளே கிடையாதே.. அவரோட அப்பா?"

"அவனோட அப்பா டாக்டர் தேவராஜன் ஸ்லீப் ஸ்பெஷலிஸ்ட்"

"வெயிட்.. வெயிட்.. அப்பா பேரென்ன சொன்னீங்க?"

"தேவராஜன் சார்"

"ம்ம் தேவராஜன்.. அவங்க நேடிவ் எதுன்னு தெரியுமா?"

"தெரியாதே சார். ஏன் கேட்கறீங்க?"

"அந்தப் பேர்ல எனக்கு ஒரு ஸ்கூல் ஃப்ரண்டு உண்டு. ஒரு வேளை அதே தேவராஜனான்னு டவுட்டு. வேற ஒன்னும் இல்லை."

"அவரோட நம்பர் தரேன் சார். வீடு அண்ணா நகர்ல இருக்கு. ஆன்ட்டி அங்கிள் இரண்டு பேரும் ஈவ்னிங்ல அவங்க ஹாஸ்பிடல்ல தான் இருப்பாங்க."

"குட்.. நீங்க ஒரு ஹெல்ப் பண்ணனுமே அர்ஜுன்"

"சொல்லுங்க சார். விக்ரம் என்னோட க்ளோஸ் ஃப்ரண்டு சார், நியதி எனக்கு தங்கச்சி மாதிரி. அவங்களுக்காக கண்டிப்பா என்ன வேணும்னாலும் செய்வேன்"

"பெரிசா ஒன்னும் இல்லை. நாம இப்போ பேசியதை உங்க ஃப்ரண்டுக்கோ என் பொண்ணுக்கோ சொல்லிடாதீங்க."

"சார்…"

"நாமளும் சில சர்ப்ரைஸ் கொடுக்கலாமே.. எப்படி இருக்கு இந்த ஐடியா?"

"ஐ கம்ப்ளீட்லி அக்சப்ட் இட் சார். இதை மெயின்டெய்ன் பண்ணனும்னா நீங்க ஆன்ட்டி கிட்ட பேசிடாதீங்க. அவங்க நியதி கிட்ட சொல்லிடுவாங்க."

"நான் முதலில் தேவராஜனை நேரில் பார்த்து பேசறேன். தென் வி வில் டிசைட். விக்ரம் எப்போ வரார்னு தெரியுமா?"



"இன்னும் ஒரு ஃபிவ்டீன் டேஸ்ல வந்திடுவான் சார்"

"ஓகே தென்.. ஸீ யூ சூன்.."

"சார் ஒரேயொரு விஷயம். விக்ரமுக்கு அவன் கல்யாணம் லவ் மேரேஜா இருக்கணும்னு ஆசை. அதனால தான் அவங்க அம்மா அப்பா கிட்ட கூட பொண்ணு டீடெயில்ஸ் கொடுக்கல. அவங்க அரேஞ்ச்ட் மேரேஜா மாத்திடுவாங்கலாம்.."

"நல்லா தான் இருக்கு.. இந்த கொள்கை.. அப்படியே பண்ணிடுவோம்.. பை அர்ஜுன்" என்று அழைப்பைத் துண்டித்தார் வாசுதேவன்.

"அச்சச்சோ இப்படித் தனியா புலம்பற மாதிரி ஆகிடுச்சே.. நான் என்ன பண்ணுவேன்.. டேய்.. விக்ரம்.. நேர்ல இருக்கு உனக்கு.." வாய் விட்டு புலம்பிய அர்ஜுன் அடுத்த வேலையைப் பார்க்கப் போனான்.

*******

மகளைக் கையில் ஏந்திக் கொண்டு ஹோம் தியேட்டரை அலர விட்டு, பாட்டுக் கச்சேரி செய்து கொண்டு இருந்தான் மாதவன். கூடவே டான்ஸும் அமர்க்களப் பட்டது. அவன் உற்சாகமாக உருகிப் பாடப் பாட அவனது செல்ல மகள் அக்ஷரா தனது தந்தையின் கழுத்தைக் கட்டிக் கொண்டு அவன் முகம் முழுவதும் எச்சில் ஆக்கினாள். அவளது அரிசிப் பற்களின் சிரிப்பில் ஜென்ம சாபல்யம் அடைந்தான் அந்த தந்தை.

"அழகு குட்டி செல்லம் உன்னை அள்ளி தூக்கும் போது

உன் பிஞ்சு விரல்கள் மோதி நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளை கடத்தி போகும் உன் கன்னக் குழியின் சிரிப்பில்

விரும்பி மாட்டி கொண்டேன் நான் திரும்பி போக மாட்டேன்

அம்மு நீ என் பொம்மு நீ மம்மு நீ என் மின்மினி

ஜிஞ்ச நிஞ்ச ஜிஞ்ச நிஞ்ச ஜிஞ்சனி

மஞ்ச நிஞ்ச மஞ்ச நிஞ்ச மஞ்சரி"

ஸ்வேதா வந்து, "ஸ்டாப் இட் மாது! இது என்ன வீடா இல்லை ஃபிஷ் மார்கெட்டா?" என்று கத்தும் வரை கச்சேரி எட்டுக் கட்டையில் களைகட்டியது.

"எவ அவ?" என்று திரும்பிப் பார்த்த மாதவன், "நீ தானா? உனக்கு இப்போ என்ன பிரச்சினை? நாங்க பாட்டுக்கு பாட்டு பாடிட்டு இருக்கோம். உன்னை டிஸ்டர்ப் பண்ணவே இல்லையே. என்ன டா செல்லம்? அம்மாவுக்கு பொறாமை டா.. அதான் இப்படி கடிக்கிறா"

"ம்ச் ஆமா.. எனக்கு பொறாமை.. உங்க பொண்ணு இப்போ தான் சாப்பிட்டு இருக்கா.. டான்ஸ் ஆடி வாந்தி எடுத்தா என்னைக் கூப்பிடக் கூடாது‌ சொல்லிட்டேன். ஏய் வாய்க்குள்ள இருந்து கையை எடுடி.. எப்போ பாரு.. மொத்த கையும் கொண்டு போய் வாய்க்குள்ள திணிக்க வேண்டியது." இருவருக்கும் சேர்த்தே அர்ச்சனை செய்தாள்.



"சரி சரி.. நீங்க இரண்டு பேரும் கச்சேரி பண்ணிட்டு இங்கேயே தூங்குங்க. நான் பெட் ரூம் கதவை லாக் பண்ணிட்டு நிம்மதியா தூங்கறேன்" என்று அவள் அடுத்து வைத்த அணுகுண்டில் அப்பாவும் மகளும் அவளுக்கு முன்னால் படுக்கை அறைக்குள் விரைந்தார்கள்.

என்ன தான் தந்தையின் செல்லமாக இருந்தாலும் பால் மணம் மாறாத குழந்தை தூங்கும் நேரத்தில் தாயைத் தேடுமே.. அதுவும் இல்லாமல் பகல் முழுவதும் தூங்கி விட்டு விடிய விடிய சிவராத்திரி போல விழித்துக் கொண்டு இருந்தாள் மாதவனின் மகள்.

"ஏன் டா இப்படி உன் பொண்ணு உன்னை மாதிரியே படுத்தறா? பகல்ல ஏதோ கொஞ்சம் நேரம் தூங்கினால் பரவாயில்லை. கும்பகர்ணி மாதிரி தூங்கிட்டு ராத்திரி ஆட்டம் போட்டால் எப்படித் தான் சமாளிக்க?" என்று ஹேமா கூட அவ்வப்போது புலம்புவார்.

தனது தூக்கம் போகிறது என்று அடிக்கடி குழந்தையைத் தாயிடம் கொண்டு போய் விட்டு வருவான் மாதவன். இத்தனைக்கும் ஸ்வேதா தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு முழு நேரமும் குழந்தையைக் கவனித்துக் கொண்டு இருந்தாள். அவளாலும் சமாளிக்க முடியவில்லை.

ஆரம்பத்தில் எல்லாம் சரியாகத் தான் போய்க் கொண்டிருந்தது. நாளாக நாளாக இரவு லேட்டாக வரும் மாதவன், மகளை எழுப்பி கொஞ்சி விளையாடி என்று பழக்கியதில் அவனது மகள் தந்தைக்காக உறங்காமல் விழித்திருக்கத் தொடங்கினாள். தந்தை வரும் நேரம் எப்படித் தான் தெரியுமோ, அவனது கார் சத்தம் கேட்டவுடன் குஷியாகி கூச்சல் போடுவாள்.

"குழந்தை டயத்துக்கு தூங்கினால் தான் நல்லது மாதவா. இப்படிப் பழகி வைக்காதே" என்று பெரியவர்கள் சொல்வதை எல்லாம் தகப்பனும் மகளும் கண்டுகொள்வதே இல்லை.

அதோ இதோ என்று பேபி அக்ஷரா தனது முதல் வருடம் பிறந்த நாளை கொண்டாடிக் கொண்டு இருந்தாள்.

சொந்த பந்தங்கள் அனைவரும் வெகு நாட்களுக்குப் பிறகு கூடி இருந்தார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு வந்த விக்ரமன் கைகொள்ளா பொம்மைகளுடன் வந்திருந்தான்.

"டேய்.. இதெல்லாம் ரொம்ப ஓவர் டா. இந்த பொம்மை எல்லாம் வைக்க தனியா ஒரு வீடு வேணும் போல இருக்கே.. அடுத்தடுத்து வரப் போற குட்டீஸ்கும் வச்சுக்கோடா" என்றான் மாதவன்.

"உன் பொண்ணு தான் சீனியர். அவ யூஸ் பண்ணிட்டு அப்படியே எல்லாருக்கும் பாஸ் பண்ணிடுவா.. நீ முன்னாடி செஞ்ச அதே வேலை தான். இப்போ உன் பொண்ணு செய்யப் போறா.. தட்ஸ் இட்" என்று சிம்பிளாக முடித்து விட்டான் விக்ரமன்.

ஸ்ரேயாவைத் தவிர மூன்று குடும்பத்து உறுப்பினர்களும் அங்கே கூடி இருந்தார்கள். குழந்தை வேண்டாம் என்று இரண்டு வருடங்கள் மானாவாரியாக மாத்திரைகளை முழுங்கிய ஸ்ரேயா இப்போது அதன் பரிசாக மார்பகப் புற்றுநோயை வாங்கிக் கொண்டு அதற்கான ட்ரீட்மெண்ட்டில் இருக்கிறாள். மருத்தவமனையா.. சீ என்றவள் இன்று மாதம் ஒரு முறை அங்கே செல்ல வேண்டிய சூழ்நிலை.



வைஜயந்தி தன் வயிற்றில் ஐந்து மாத இரட்டையர்களைச் சுமந்து கொண்டிருந்தாள். அரவிந்தன் மட்டும் இல்லாமல் தமயந்தியும் கூட அவளைப் பொத்தி வைத்துப் பாதுகாத்தார்கள்.

பிறந்த நாள் கொண்டாட்டங்கள் முடிந்து அவரவர் வீடு திரும்பினார்கள். அன்று இரவு தனக்குள் ஏதோ மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தாள் வைஜயந்தி. வயிற்றில் ஒரு வலி. சுரீர் என்றது. வழக்கமாக இரண்டு புறமும் இருக்கும் அசைவுகள் இப்போது ஒரு பக்கம் மட்டுமே இருந்ததை உணர்ந்த நொடியில் அரவிந்தனை எழுப்பினாள். பதறி எழுந்தவன் அவளது முகத்தில் தெரிந்த வேதனையைக் கண்டு திகைத்தான்.

"என்ன டா பண்ணுது. ஹாஸ்பிடல் போயிடலாமா?"

"அரவிந்த்! அம்மாவுக்கு கால் பண்ணுங்க. இட்ஸ் அன் எமர்ஜென்சி. சீக்கிரம்!"

அந்த அர்த்த ராத்திரியில் வந்த அழைப்பில் உடனடியாக முடிவெடுத்த அருந்ததி, அவர்களை உடனே மருத்துவமனைக்கு வரவழைத்தார்.

ஐந்தாம் மாதம் செய்ய வேண்டிய ஸ்கேனை இன்னும் இரண்டு நாட்களில் செய்வதாக இருந்தது. அதனை உடனடியாக செய்து விவரம் அறிந்தவருக்கு கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல இருந்தது. வயிற்றில் இருந்த இரண்டு குழந்தைகளின் ஒன்று தனது துடிப்பை நிறுத்தி இருந்தது.

வைஜயந்தியின் தாயாக அருந்ததி செய்வதறியாது திகைத்து நிற்க, விக்ரமன் சூழ்நிலையைக் கையில் எடுத்துக் கொண்டு செயல்பட்டான்.

அல்ட்ரா சவுண்ட்டை நன்றாக ஆராய்ந்து பார்த்ததில் இரண்டு குழந்தைகளும் தனித்தனியாக நஞ்சுக்கொடியுடன் இருந்ததைப் பார்த்தவனின் முகத்தில் கொஞ்சம் தெளிவு வந்தது.

"மாம்! நோ வொர்ரீஸ். த அதர் பேபி இஸ் வெரி மச் சேஃப். எந்த பிரச்சனையும் இல்லாமல் ஒரு பேபியை மட்டும் கம்ப்ளீட் டெர்ம் வரைக்கும் மெயின்டெய்ன் பண்ண முடியும். இப்போதைக்கு அவளுக்கு ட்ரிப்ஸ் போட்டு விடுங்க. எதுவும் ஆகாது. எனக்கு வைஜுவோட ரிப்போர்ட்ஸ் எல்லாம் கொடுங்க. என்ன மெடிசின் கொடுக்கலாம்னு பார்க்கறேன்."

வெளியே காத்திருந்த அரவிந்தனுக்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்துக் கொண்டே வந்தான் விக்ரமன். அவனைக் கண்டதும் வேகமாக எழுந்து வந்து கைகளைப் பிடித்தவனின் முகத்தில் பதட்டம் மட்டுமே.

"இப்படி உட்காருங்க அரவிந்தன். நாம பேசலாம்." கையைப் பிடித்தபடி அருகில் இருந்த பெஞ்ச்சில் அவனை அமர வைத்து தானும் அருகில் அமர்ந்தான்.

"என்ன ஆச்சு விக்ரம்? குழந்தைங்க இரண்டு பேரும் சேஃபா.. ஒரு வேளை ஸ்வேதா மாதிரி .. எதுவும் பிரச்சனையா.. இது எங்க வீட்டு சாபமா.." கடகடவென்று புலம்பினான் அரவிந்தன்.

"அரவிந்த்! ரிலாக்ஸ்! வைஜு சேஃப் அண்ட் தி கேர்ள் பேபி இஸ் ஆல்சோ சேஃப்.. பாய் தான்.. "

"ஓ.. மை காட்! இப்போ என்ன பண்றது? இந்த பேபி என்ன ஆகும்?"

"இந்த பேபிக்கு ஒன்னும் ஆகாது. ஃபுல் டெர்ம் வரைக்கும் பிரச்சினை இல்லாமல் இருக்கலாம். நான் சொல்ல வர்றதைக் கொஞ்சம் தெளிவா புரிஞ்சுக்கோங்க. இப்போ நமக்கு மென்டல் ஸ்ட்ரெந்த் தான் வேணும்."

"இந்த சிச்சுவேஷனுக்கு Vanishing Twin Syndromeனு பேரு. நார்மலா இது மாதிரி ட்வின் ப்ரெக்னன்சில சிம்ப்டம்ஸ் எதுவுமே இல்லாமல் ஒரு பேபி அபார்ட் ஆகிடும். அது ட்வெல்வ் வீக்ஸ்குள்ள இருந்தால் அந்த டிஸ்ஷுஸ் எல்லாம்

தாயின் உடல் மற்றும் மீதமுள்ள குழந்தையும் உறிஞ்சிடும். சில நேரத்தில் அப்படி ஒரு ட்வின் வந்ததே தெரியாது. பட் இப்போ அஞ்சு மாசம் ஆனதால அது முழு வளர்ச்சி அடைஞ்ச குழந்தையா இருக்கும். அந்த குழந்தையை வெளியே எடுக்கவும் முடியாது. ஒரு அட்வான்டேஜ் நமக்கு, இரண்டு பேபிக்கும் தனித் தனி ப்ளாசென்டா இருக்கு. ஸோ, தி வேனிஷிங் ட்வின் வில் நாட் அஃபக்ட் தி சர்வைவிங் ட்வின்."

"இன்னொரு குழந்தை கண்டிப்பா சேஃப் தானே"

"யெஸ்.. நிச்சயமா சேஃப் தான்..'

"இதெல்லாம் ஏன் வருது.. என்ன ரீசன்?"

"ஜெனரலா இதெல்லாம் குரோமோஸோம் ப்ராப்ளம் தான். ஜெனிடிகல் ப்ராப்ளம்ஸ் கூட இருக்கலாம். ஐவிஎஃப் பேஷண்ட்ஸுக்குத் தான் காமனா வரும். சம் டைம் ப்ளாசன்டா ஒன்னு தான் இருக்கும் போது இரண்டு குழந்தைக்கும் ஊட்டச்சத்து ஈக்வலா கிடைக்காமல் போகலாம். அதனால வரலாம். தேர் இஸ் நோ specific ரீசன்."

"இப்போ வைஜுவ என்ன பண்றது. வீட்டுக்கு கூட்டிட்டு போகலாமா? பயம்மா இருக்கே!"

"ம்ம்.. இரண்டு நாள் கழிச்சு டிசைட் பண்ணுவோம். வீட்டுக்கு கூட்டிட்டு போறதுல பிரச்சினை எதுவும் இல்லை. அவளைக் கன்டிநியூஸா மானிட்டர் பண்ணிட்டே இருக்கணும். சுகர் லெவல்ஸ் ஷூட் அப் ஆகலாம். டயட் செக் பண்ணனும். ஒரு இரண்டு நாள் பார்ப்போமே."

"திரும்பவும் கேட்கிறேனேன்னு தப்பா எடுத்துக்காத விக்ரம். வைஜு அண்ட் ஒரு பேபி சேஃப் தானே. இல்லை பிரச்சினை எதுவும் வருமா? அப்படின்னா இப்போவே வேற டெசிஷன் எடுத்திடலாம்"

"பரவாயில்லை அரவிந்த். எதுவுமே செகண்ட் டைம் க்ளியர் பண்ணிக்கறது நல்லது தான். நான் தெளிவாவே சொல்றேன். இப்போ வைஜு கேர்ல் ப்ளாசன்டா தனித் தனியா இரண்டு பேபிக்கும் இருக்கு. ஸோ, டெட் ட்வின் அம்னியோடிக் லிக்விட்ல ஒரு பிரச்சனையும் இல்லாமல் ஃபுல் டெர்மும் இருக்கலாம். மதருக்கோ, இன்னொரு பேபிக்கோ எந்த பிரச்சனையும் வராது. இன்ஃபெக்ஷன் ஆகிடுமோன்னு கூட பயப்பட வேண்டாம். எப்படி ப்ரோசீட் பண்ணனும்னு இரண்டு நாள் வெயிட் பண்ணி பார்ப்போம். கவலைப் படாதீங்க..நோ கில்ட் ஃபீலிங்க்ஸ்.. ஒரு குழந்தைக்கு தப்பு பண்றோமோன்னு நினைப்பு வரும்.. உங்க இரண்டு பேருக்கும் கவுன்சிலிங் ஏற்பாடு பண்றேன்.கொஞ்சம் க்ளாரிட்டி கிடைக்கும்."

"ம்ம்.. இதைப் பெரியவங்க கிட்ட எப்படிச் சொல்றதுன்னு தெரியலையே. எங்க அம்மா.. எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னு தெரியலை."

"அங்கிள் கிட்ட நான் பேசறேன்.. வைஜுவ ரூமுக்கு ஷிஃப்ட் பண்ணியாச்சு.. நீங்க அவளைப் போய் பாருங்க."

"ம்ம்.." என்றவன் தயங்கித் தயங்கி மனைவி இருந்த அறைக்குள் நுழைந்தான்.



கண்களை மூடிக்கொண்டு தாயின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்தாள் வைஜயந்தி. அரவிந்தன் உள்ளே நுழைந்ததைக் கண்ட அருந்ததி, "வைஜு! கண்ணைத் துடை. மாப்பிள்ளை வந்திருக்கார் பாரு. நீங்க பேசிட்டு இருங்க. நான் உனக்கு சாப்பிடக் கொண்டு வரேன். ப்ளீஸ்டா அழாதே" என்று மகளைத் தனது மடியில் இருந்து படுக்கைக்கு மாற்றினார்.

அரவிந்தன் மற்றும் வைஜயந்தியின் பார்வைகள் சந்தித்த போது, இருவரது கண்களும் நீரைத் தாரை தாரையாக வெளியேற்றின. வைஜயந்தியின் அழுகை பெரிதாக ஆரம்பிக்க, வேகமாக மனைவியை அடைந்த அரவிந்தன் அவளை அணைத்துக் கொண்டான்.

"வைஜு! ஸ்டே காம் டா. நம்ம பொண்ணு நம்ம கிட்ட வருவா. பையன் கொஞ்சம் லேட்டா வருவேன்னு போயிட்டான். ப்ளீஸ்.. அழாதே.."

இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்து சமாதானம் செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தனர்.
 

Author: SudhaSri
Article Title: ஆடுமடி தொட்டில் இனி - 16
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.