ஆடுமடி தொட்டில் இனி -2
"கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன்
விரல் தொடும் தூரத்திலே வெண்ணிலவு கண்டுகொண்டேன்"
உற்சாகமான மனநிலையில் பாடலை முணுமுணுத்தபடி பைக்கை ஓட்டிய விக்ரமன், மருத்துவமனை வளாகத்தில் நிறுத்திய பிறகே தாயைத் தன்னுடன் அழைத்து வந்ததை உணர்ந்தான்.
"அம்மா! உங்க ஸ்டாப் வந்தாச்சு. இறங்குங்க." எதுவுமே நடக்காதது போல மிகவும் சாதாரணமாகச் சொன்ன மகனை வித்தியாசமாகப் பார்த்தபடி வண்டியில் இருந்து இறங்கினார் அருந்ததி.
"விக்ரம்! சாயங்காலம் ஃப்ரீ பண்ணிக்கோ. டாடியும் சீக்கிரம் வந்துடுவாங்க. நாம கொஞ்சம் பேசணும்."
"இட்ஸ் ஓகே மா. எனக்கு இன்னைக்கு ஹாஸ்பிடல் ட்யூட்டி கிடையாது. ஒரு டூ அவர்ஸ் கிளாஸ் இருக்கு. அதுக்கு அப்புறம் என்ன வொர்க்னு சீனியரைக் கேட்கணும். நீங்க ஃபோன் பண்ணுங்க. நான் வரேன்."
"கொஞ்சம் இருங்க டாக்டர் சார், என்ன அவசரம்? க்ளாஸ் ஆரம்பிக்க இன்னும் டைம் இருக்கே?"
"கொஞ்சம் ப்ரிபரேஷன் பாக்கி இருக்கு, அதான். நான் கிளம்பறேன்."
"உனக்கு....ப்ரிபரேஷன்... பாக்கி இருக்கு... நம்பிட்டேன். ஆனால் நான் இப்போ ஒரு கேள்வி கேட்டே ஆகணும். அதுக்கு அப்புறம் நீங்க போய் உங்க ப்ரிப்பரேஷனைக் கன்டிநியூ பண்ணுங்க" என்று ப்ரிபரேஷனில் அழுத்தம் கொடுத்தார்.
"என்ன விஷயம் அருந்ததி மேடம்? இப்படி ரோட்டில நிக்க வச்சு கேள்வி கேட்கறீங்க?" என்று பைக்கில் இருந்து இறங்கினான்.
"ஹேய்.. ஸ்டாப் ஸ்டாப். இறங்காத! பைக்ல உட்கார்ந்தே பேசு. இன்னைக்கு எனக்கு முக்கியமான வேலை இருக்கு. கழுத்து வலியோட போனால் ரொம்ப கஷ்டம்."
என்ன செய்வது அவனது உயரம் அப்படி, சுமார் ஆறரை அடி மட்டுமே இருந்தான். ஐந்தரை அடி உயரத்தில் சராசரி இந்தியப் பெண்களை விட உயரமான அருந்ததி கூட அவனை நிமிர்ந்து பார்த்துப் பேசுவது கடினம். ஒரு தடவை கழுத்து வலியால் மிகவும் அவஸ்தைப் பட்டவர் அதன் பிறகு எப்போதுமே மகனை நிற்க வைத்துப் பேசியதே இல்லை.
"ஹூம்.. உங்களுக்கு உங்க கவலை. என்ன கேள்வி கேட்கணும். கேளுங்க." அவனுக்குள் ஒரு ஊகம் இருந்தது. அவனது ஊகம் சரியா என்றும் பார்க்க வேண்டுமே. சரி தான் என்றது தாயின் கேள்வி.
"காலேஜுக்குள்ள வரும் போது யாரோ பிரமாதமா மெல்லிசைக் கச்சேரி எல்லாம் பண்ணின மாதிரி இருந்ததே. என்ன விஷயம்."
"காலேஜுக்குள்ள கச்சேரியா? அதுவும் காலங்கார்த்தால, யாரு மா அது, ஸ்டுபிட் ஃபெல்லோ?"
"ஓ... ஸ்டுபிட் ஃபெல்லோ?? அது யாருன்னு உனக்குக் தெரியாதில்ல... இன்னும் ஒன்னு கூட இருக்கு. பைக்கை நிறுத்தி ஸ்டாண்ட் போடற வரை ஹெல்மெட்டைப் போட்டே ஆகணும்ன்னு எல்லாருக்கும் ரூல்ஸ் போடற ரூல்ஸ் ரங்கசாமி, இன்னைக்கு காலேஜ் வாசல்லயே ஹெல்மெட்டைக் கழட்டினதோட இல்லாமல், அங்கே இருந்து கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் ஹெல்மெட் இல்லாமல் வலம் வந்ததன் காரணம் என்னவோ?"
"அது... நான் இன்னைக்கு ரொம்ப ஹேப்பியா ஃபீல் பண்றேன் மா. ஃபைனல் இயர் ஸ்டுடன்ஸுக்கு ஒரு சப்ஜெக்டை நான் தான் கம்ப்ளீட்டா எடுக்கப் போறேன். சீனியர் என்னை நம்பி கொடுத்திருக்கார். எனக்கு ரொம்ப பிடிச்ச சப்ஜெக்ட். இன்னைக்கு தான் முதல் க்ளாஸ் ... அதான்.. காலேஜுக்குள்ள நுழைஞ்சதும் கொஞ்சமே கொஞ்சம் உணர்ச்சிவசப் பட்டுட்டேன். நீங்க என்ன நினைச்சீங்க?" முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு கேட்டான்.
"ஓ.. இன்னைக்கு எடுக்கப் போற க்ளாஸ் தான் காரணமா?" அவனை மேலிருந்து கீழாக சந்தேகத்துடன் பார்த்த படி இழுத்தார் அருந்ததி.
"அது மட்டும் தான் காரணம். நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை."
"நான் என்னன்னெவோ நினைச்சேன், அதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்.. இருந்தாலும் பரவாயில்லை.. நல்லா சமாளிக்கக் கத்துகிட்ட. சீக்கிரமே என்னன்னு கண்டுபிடிக்கிறேன்.. கத்திரிக்காய் முத்தினா கடை வீதிக்கு வந்து தானே ஆகணும்."
"ஆஹா... அம்மா ஸ்மெல் பண்ணிட்டாங்க போல இருக்கே." தனக்குள் முணுமுணுத்தவன், தெளிவாக யோசித்து தாய் நம்புவது போல ஒரு பதிலைச் சொன்னான். நம்பினாரா என்பது அவருக்கே வெளிச்சம்.
"நீங்க எதை வேணும்னாலும் கற்பனை பண்ணிக்கோங்க. உங்க கற்பனை, உங்க இஷ்டம். ஆனால் எனக்கு இந்த காலேஜுக்குள்ள ஒரு பேர் இருக்கு. அதையும் ஞாபகம் வச்சிட்டு கற்பனை பண்ணுங்க." வார்த்தைகளில் கொஞ்சமாக எரிச்சல் எட்டிப் பார்த்தது. அவனுக்கே அவனது நடவடிக்கைகள் குறித்து வந்த குழப்பம், அதன் காரணமாக வந்த எரிச்சல்.
"அதான் தெரியுமே... ஆனால்.. இந்த விசுவாமித்திரனோட மேனகை யாருன்னு கண்டுபிடிக்கிறது தான் எனக்கு அடுத்த வேலையே. இட்ஸ் எ சேலஞ்ச்!"
"தாயே... உங்க சவாலுக்கு நான் ஆளில்லை. தயவு செஞ்சு என்னை விட்டுடுங்க. காலேஜுக்குள்ள நிக்க வச்சு என்ன பேசிட்டு இருக்கீங்க? போங்க போங்க போய் வேலையை பாருங்க. எனக்கு நேரமாச்சு.. நான் வரேன். பை.. பை.." விட்டால் போதும் என்று கிளம்பியவனின் காதுகளில்,
"ஈவ்னிங் கன்டிநியூ பண்ணலாம். மறக்காம என்னை பிக் அப் பண்ணிக்கோ" என்ற தாயின் குரல் அரைகுறையாக விழுந்தது.
மகனின் மழுப்பலான பதிலில் மிகவும் திருப்தி அடைந்தவராக உள்ளே விரைந்தார் அருந்ததி. இது ஒரு நல்ல ஆரம்பமாக இருக்க வேண்டும் என்று நினைத்த வண்ணம் வந்த வேலையைக் கவனிக்கச் சென்றார். என்ன செய்வது, அவருக்கு வாய்த்த மகன் அப்படி.
"இவனை உங்க பையன்னு வெளியே சொல்லிடாதீங்க ராஜ். படிக்கிற காலத்தில என்னை இம்ப்ரஸ் பண்ணனும்னு நீங்க என்னென்ன வேலை பார்த்தீங்க? உங்க பையன் என்னடான்னா இவ்வளவு ஹேன்ட்சமா இருந்துட்டு, பொண்ணுங்கள முறைச்சிட்டு திரியறான். அவங்களுக்கு அட்வைஸ் வேற பண்றான். இவன் என்ன பெரிய அப்துல் கலாம் ஆகலாம்னு நினைக்கிறானா?" அருந்ததி அடிக்கடி கணவரிடம் கூறும் வார்த்தைகள் இவை. அதற்கு இனிமேல் தேவை ஏற்படாது என்பது போல இருந்தது விக்ரமனின் இன்றைய நடவடிக்கைகள்.
மருத்துவர்கள் எப்போதும் சேவை மனப்பான்மையுடன் இருக்க வேண்டும், தனிப்பட்ட ஆசாபாசங்களுக்கு இடம் கொடுக்க கூடாது என்று மூச்சு விடாமல் பேசுபவன். கல்லூரியில் படிக்கத் தான் வந்திருக்கிறோம் என்று தத்துவம் பேசி காதல் ஜோடிகளின் அதிருப்தியை மூட்டை மூட்டையாக சம்பாதித்து வைத்திருப்பவன். வயதுக்கேற்ற படி நடந்து கொள்ள மாட்டானா என்று அவரை ஏங்க வைப்பவன். இன்று எல்லாரையும் போல நடந்து கொண்டதில் அவருக்குப் பரம திருப்தி.
தாயிடம் விடைபெற்ற விக்ரமன் பார்க்கிங்கை நோக்கித் தனது பைக்கைச் செலுத்தினான். என்றுமில்லா அதிசயமாக ஹெல்மெட் இல்லாமல் புன்னகை மன்னனாக வந்தவனை, அறிந்தவர் தெரிந்தவர் எல்லாம் ஆவென்று வாயைப் பிளந்து பார்த்தனர்.
பார்க்கிங் அருகே போவோர் வருவோரை எல்லாம் கலாய்த்த படி நண்பர் கூட்டம் அவனுக்காகக் காத்திருந்தது. கட் கட் கட்... அப்படி எல்லாம் நடந்தால் அது சினிமா ஹீரோ. ஆனால் நம்ம டாக்டர் அப்படி ஆளில்லை.
தூரத்தில் இவன் தலையைக் கண்டதும் அங்கிருந்த பலர் பரபரப்பாகத் திரும்பிக் கொண்டார்கள். அவசர அவசரமாகக் கையில் இருந்த சிகரெட்டைக் காலி செய்து கையைச் சுட்டுக் கொண்டனர். சரியாக இவன் பைக்கை விட்டு இறங்கும் போது,
"பை.. ஃப்ரண்ட்ஸ். பை விக்ரம். அப்புறம் மீட் பண்ணலாம்" என்று பறந்தனர். மீதம் இருந்தது மூன்றே பேர், விக்ரமனின் உற்ற நண்பர்கள். அவன் சொல்லே வேதம் என்பவர்கள்.
"ஹூம்... காலங்கார்த்தால சிகரெட்.. இவங்க எல்லாம் திருந்தவே மாட்டாங்க டா. டாக்டரா இருந்துட்டு நாமளே இப்படி ஹெல்த் ஸ்பாயில் பண்ற ஹேபிட்ஸ் எல்லாம் பழகி வச்சிருந்தா, பேஷன்ட்டுக்கு எப்படி அட்வைஸ் பண்ண முடியும்." வழக்கம் போல அவனது பல்லவியை ஆரம்பித்து வைத்தான் விக்ரமன்.
"எல்லாரும் அப்படி கிடையாது விக்ரம். சில பேர் உன்னைக் கடுப்பேத்தணும்னு தான் செய்யறாங்க. கரெக்டா நீ வர்ற நேரம் பார்த்து தான் தம்ம கையில எடுக்கறாங்க. உன்னை டென்ஷனாக்கிப் பார்க்கிறதுல அவங்களுக்கு ஒரு திருப்தி. ஸேடிஸ்டிக் அப்ரோச்... டோன்ட் பாதர் அபவுட் தெம்."
வருத்தத்துடன் பேசிய நண்பனை சமாதானப் படுத்தும் வகையில் ஆளாளுக்குத் தெரிந்ததைச் சொல்ல ஆரம்பித்தார்கள்.
"இவன் சொல்றது கரெக்ட் தான் டா. நீ ஃபீல் பண்ணாத. சில பேருக்கு எதுவுமே பட்டால் தான் தெரியும். இவங்களுக்கு அட்வைஸ் பண்ணி நாம எதுக்கு எனர்ஜியை வேஸ்ட் பண்ணனும். விஷயம் தெரியாதவர்களுக்கு தான் அட்வைஸ் பண்ணலாம். தெரிஞ்சே செய்யறவங்களை எதுவும் செய்ய முடியாது. லீவ் இட்.
"நானும் அதையே தான் சொல்றேன் விக்ரம். இவங்களைப் பத்திப் பேசி நம்மளோட ப்ரெஷியஸ் டையத்தை எதுக்கு வேஸ்ட் பண்ணனும். வேற விஷயம் பேசலாம். ஓகே..."
இவர்கள் பேசிக்கொண்டிருந்த போதே ஒரு பெண் தனது டூ வீலரைக் கொண்டு வந்து நிறுத்தினாள்.
வண்டியின் பின்னிருக்கையில் இருந்து இறங்கியவளைக் கண்டதும் விக்ரமனின் மனது பாட ஆரம்பிக்கலாமா? என்ன பாட்டு பாடலாம் என்று பாடலைத் தேடத் துவங்கியது. அவளோ அடிக் கண்ணால் இவனைப் பார்த்தும் பாராதது போலச் சென்று விட்டாள்.
வண்டிக்குச் சொந்தக்காரி, "குட் மார்னிங் சீனியர்ஸ்" என்றபடி அவர்கள் அருகில் வந்தவள் அங்கே விக்ரமனைக் கண்டதும், "பை. சீனியர்ஸ்!" என்று உடனடியாக ஒரு யூடர்ன் போட்டு நடையைக் கட்ட இவளும் அதை வழிமொழிந்து தோழியைப் பின்தொடர்ந்தாள். அவள் போன பாதையில் விக்ரமனின் பார்வை நிலைத்து நின்றது.
"விக்ரம்! நீ உன் பி.எச்.டி விஷயத்தை வீட்டுல பேசிட்டியா?"
"....."
"விக்ரம்! டேய் விக்ரம்.. அவன் கேட்ட கேள்வி காதுல விழுந்ததா இல்லையா, பதில் சொல்லு மச்சான்."
"...." அவனது கவனம் தான் இங்கே இல்லையே.
"டேய் இங்கே பாருங்க டா நம்ம முறைப்பு மன்னார்சாமிய."
"அதானே.. பார்வையாலயே கவர் பண்றானே! எப்படி இருந்தவன் இப்படி ஆகிட்டானே!"
"ஹப்பாடா! எப்படியோ, இப்போ தான் இவனும் மனுஷ ஜீவன் தான்னு கன்ஃபர்ம் ஆகி இருக்கு டா."
"ஆனால் அங்கே எந்த ரியாக்ஷனும் காணோமே!"
"அது தானா வரும் டா. ஏதோ லைட்டா ஸ்பார்க் இருக்கிற மாதிரி தான் தெரியுது. எப்படியோ நமக்கு நல்ல என்டர்டெயின்மென்ட் வெயிட்டிங்னு நினைக்கிறேன்."
"என்டர்டெயின்மென்ட்ஆ.. இவன் கிட்டயா... எனக்கு நம்பிக்கை இல்லை."
"டேய் நாம இவ்வளவு பேசறோம். இவனைப் பாருங்க. சார் இந்த உலகத்திலேயே இல்லை டா."
"எங்க போய் டூயட் பாடறானோ? மச்சான்... டேய்...இப்பவே ஸ்விஸ் போயிட்டியா..பார்வையைக் கொஞ்சம் இப்படித் திருப்பு டா."
"ஆமா.. உத்துக் கேளுங்க... ஒரு சிச்சுவேஷன் சாங் கேட்குது பாருங்க." என்று ஒருவன் பாடிக் காட்டினான்.
"கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்"
கிடைத்தது வாய்ப்பு என்று ஆளாளுக்கு நண்பனை ஓட்டிக் கொண்டிருக்க, அவனோ இன்னும் அவள் போன திசையில் பார்வையைப் பதித்து இருந்தான்.
'இவ கார்ல தானே வந்து இறங்கினா? மேடத்துக்கு அங்கே இருந்து உள்ளே நடந்து வர முடியாதாமா? கொஞ்சம் பலமா காத்தடிச்சா பறந்து போயிடுவா போல தான் இருக்கா. பார்த்தால், சாப்பிடுவாளா இல்லையான்னே தெரியலை. இவளெல்லாம் டாக்டராகி....' மனதுக்குள் ஏகத்துக்கும் கவலையுடன் கனவுலகில் இருந்தவனை முதுகில் ஓங்கி ஒன்று வைத்து காலேஜ் பார்க்கிங் லாட்டுக்கு அழைத்து வந்தார்கள் அவனது நண்பர்கள்.
"ஸ்ஸ்ஸ் ...ஆஆஆ... ஏன் டா, இப்போ எதுக்கு இந்த அடி?"
"அதுவா... வேண்டுதல்.. எங்க குல சாமிக்கு வேண்டுதல். நாங்க எவ்வளவு சீரியஸ் கேள்வி எல்லாம் கேட்டுட்டு இருக்கோம். பதில் சொல்லாமல் எங்கேயோ பராக்கு பார்த்துட்டே இருக்க. அப்படி என்ன தான் உள்ளே ஓடுது." அவனிடம் இருந்து உண்மையை வாங்கி விட வேண்டும் என்று நண்பர்கள் நினைக்க, அவனோ சிக்குவேனா என்று அடம் பிடித்தான்.
"ஓ... ஐயாம் எக்ஸ்ட்ரீம்லி ஸாரி டா. அது... வந்து.. ம்ச்.. விடுங்க டா. ஏதோ தேவையில்லாத தாட்ஸ். இப்போ ஓகே. நீ என்னடா கேட்ட மச்சான்?" சட்டென்று முகம் மாறியவனைப் புரிந்து கொள்ள முடிந்தது அவனது நண்பர்களால்.
"அப்படி எல்லாம் சட்டுன்னு ஒதுக்கிட முடியாது டா. நாம இன்னைக்குத் தேவையில்லைன்னு நினைக்கிற விஷயம் நாளைக்கே நமக்கு ரொம்ப எஸென்ஷியலா மாறலாம். வெயிட் அன்ட் வாட்ச்."
"ம்ம்..."
"என்ன டா. வெறும் ம்ம் தானா?"
"வேறென்ன சொல்லணும்னு எதிர்பார்க்கிற, சொல்றதுக்கு ஒன்னும் இல்லையே."
"டேய்.. எங்க கிட்ட செமத்தியா வாங்கப் போற. பையன் இப்போ தான் சாதரண மனிதப் பிறவி மாதிரி நடந்துக்கிறான்னு சந்தோஷப் பட்டோம். மறுபடியும் புரியாத பாஷைல ஆரம்பிக்காத. ஏன் டா எங்க கிட்ட உன் பெர்சனல் விஷயம் சொல்லக் கூடாதுன்னு தோணுதா? அவ்வளவு தான் நம்ம ஃப்ரண்ட்ஷிப்பா?"
"இப்போ நீ தான் அடி வாங்கப் போற. எனக்கே தெளிவில்லாத விஷயத்தை என்னன்னு உங்க கிட்ட சொல்ல? சொல்ற மாதிரி எதுவும் இல்ல டா. நீங்க நம்பாட்டாலும் அது தான் நிஜம்."
"சரி விடுடா... சீக்கிரம் தெளிவாகிடு... நாங்க வெயிட் பண்றோம். வேற வழியே இல்லை" என்று ஒருவன் முடித்து வைக்க, இன்னொருவன் பேச்சை மாற்றினான்.
"அப்புறம் ஹையர் ஸ்டடீஸ் பத்தி வீட்டுல பேசியாச்சான்னு கேட்டேன். நீ வேற வீட்டுக்குத் தெரியாமல் எக்ஸாம் கூட எழுத மாட்டேன்னு சொல்லிட்ட."
"இன்னும் இல்ல டா. இன்னைக்கு ஈவ்னிங் பேசிடலாம்னு இருக்கேன். இன்னைக்கு மிஸ் பண்ணிட்டா டாடி கிட்ட நேர்ல பேசறதுக்குள்ள அப்ளிகேஷன் டேட் போயிடும். அஃப்கோர்ஸ் ஃபோன்ல பேசலாம் தான். ஆனாலும் இதெல்லாம் நேர்ல பேசறது தானே நல்லது. டாடி ஓகே சொல்லிடுவார். அம்மா.. தான்... இன்னும் நாலஞ்சு வருஷமான்னு ஃபீல் பண்ணுவாங்க. அவங்களைத் தான் சமாளிக்கணும்"
நால்வரும் பேசிக்கொண்டே நடந்தனர். அவரவர்க்கு இடப் பட்ட பணியைப் பற்றி பேச்சு வந்ததும் விக்ரமன் அமைதியானான். அதையும் சொல்லி நண்பர்களின் கேலி கிண்டலுக்கு ஆளாவதை அவன் விரும்பவில்லை. சொல்லாதே என்று மனம் எச்சரிக்கை விடுக்க, அவர்களது துறையை நெருங்கிய போது வேறு வழியின்றி நின்றான்.
"எனக்கு இன்னைக்கு ஃபைனல் இயர் கிளாஸ் இருக்கு ஃப்ரண்ட்ஸ். OBG paper நான் தான் ஹேண்டில் பண்ணப் போறேன். நான் வரேன்."
"அட... பார்றா.. முக்கியமான விஷயம்.. சொல்லவே இல்லை.." அவசரமாகச் சொல்லிச் சென்றவனை ஒருவன் நிறுத்த முயற்சிக்க, இன்னொருவன் அவனைத் தடுத்தான்.
"ஒரு இரண்டு மணி நேரம் தான் வெயிட் பண்ணனும் டா. பூனைக்குட்டி வெளியே வந்து தான் ஆகணும்." அவனை ஆமோதிப்பது போல் மற்ற இருவரும் தலையாட்டிவிட்டு அவரவர் வேலையைப் பார்க்கச் சென்றனர். ஆனால் இரண்டு மணி நேரத்தில், அந்தப் பூனைக்குட்டி வெளியே வராமல் பெரிய திண்டுக்கல் பூட்டாகப் பார்த்துப் போட்டு விடுவான் என்று அவர்களும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
விக்ரமன் அந்த வகுப்பறையை நெருங்கிய போது ஆளாளுக்கு வளவளத்துக் கொண்டிருந்தனர். சற்று நேரத்தில் மாணவர்கள் அனைவரும் அட்டென்ஷனில் இருக்க மாணவிகளிடையே சலசலப்பு நின்ற பாடில்லை.
சட்டென்று உள்ளே நுழைந்து விடாமல் ஜன்னலோரம் நின்று கவனித்தான். எப்படியும் இதற்குள் பேராசிரியர் மூலமாக விஷயம் தெரிந்திருக்கும். அவர்களின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்ற ஆவல் அவனை நிற்க வைத்தது.
"ஹேய் க்யூட்டி... இன்னைக்கு நம்ம க்ளாஸுக்கு யார் வரப் போறாங்க தெரியுமா?"
"அவளை ஏன் டி கேட்கிற, யாருன்னு தெரிஞ்சா அவ ரொம்ப ஹேப்பி ஆகிடுவா. ஜென்ம சாபல்யம் அடைஞ்ச மாதிரி ஃபீல் பண்ணுவா. என்னைக் கேளு, என் வயித்தெரிச்சலைக் கொட்டறேன்."
"அதுவும் சரிதான். இவ கிட்ட கேட்டு பல்ப் வாங்கிறதை விட வாய்க்கு ஜிப் போட்டு உட்காரலாம்."
"ஷ்ஷ்.. ஓவர் பில்டப்பா இருக்கே. அப்படி யார் தான் வரப் போறாங்க?" யாராக இருக்கும் என்று யூகிக்க முடிந்தாலும் வெளியில் முகத்தைச் சாதாரணமாக வைத்து கேள்வி கேட்டாள் அவள்.
"இப்படி அப்பாவி லுக்கு விட்டால் நாங்க நம்பிடுவோமா. நிஜம்மாஆஆ உனக்குத் தெரியவே தெரியாது... நம்ப முடியலையே.."
"இன்னைக்குன்னு பார்த்து யூஸுவலா வர்றதை விடப் பலமடங்கு ஹேன்ட்ஸம்மா வந்திருக்கான். ஹூம்... நாளுக்கு நாள் இவன் அழகு இப்படி ஏறிட்டுப் போனால் நாம படிக்கிறதா வேண்டாமா?"
"அதானே.. இவனை யாரு முதல் நாளே வந்து நம்ம கான்சென்ட்ரேஷனை டைவர்ட் பண்ணச் சொன்னது?"
"அதை விட கொடுமை என்னன்னா, க்ளாஸ் எடுக்கிறதோட நிறுத்தாமல் கேள்வியின் நாயகனாகி கேள்வியா கேட்டுத் தொலைப்பான். நாம கிளாஸைக் கவனிக்கிறதா அவனைக் கவனிக்கிறதா?"
"சோதனை மேல் சோதனை.. போதுமடா சாமி."
"இவளுக்கு வாழ்வு தான் டி இன்னைக்கு. டூ அவர்ஸ் டைரக்ட் சைட்டு தான். யாருக்குக் கிடைக்கும் இப்படி ஒரு ஆப்பர்சூனிட்டி."
'ஹப்பா... எப்படியெல்லாம் பேசுறாங்க. சிடுசிடு மூஞ்சியைக் காட்டும் போதே இப்படி. கொஞ்சம் சிரிச்சுப் பேசிட்டா அவ்வளவு தான்.' அந்த மாணவிகளின் பேச்சில் பெருமூச்சு விடத் தோன்றியது அவனுக்கு.
'அந்த க்ரூப் இவ்வளவு கலாய்ச்சாங்களே.. இவளும் கல்லுளி மங்கி மாதிரி இருக்காளே. இவளுக்கு என்னைப் பிடிக்குமா? இல்லையா?' அவன் கவலை அவனுக்கு.
"ஹேய்.. இங்கே பாருங்கடி இவ முகத்தை, எப்படி ப்ளஷ் ஆகி இருக்குன்னு? இதுக்கு பேரு தான் வெட்கமா? இந்த காலத்தில இப்படி எல்லாம் நடக்குமா?"
என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளுங்கள் என்று அமைதியாகத் தோழிகளின் புலம்பல்களை ரசித்துக் கொண்டு இருந்த நியதியைப் பார்த்த வண்ணம் உள்ளே நுழைத்தான்.
"குட் மார்னிங் கைஸ்!"
அவ்வளவே தான்.. அடுத்த கணமே வகுப்பு, "அமைதி அமைதி அமைதியோ அமைதி அமைதிக்கெல்லாம் அமைதி" என்றாகி விட்டது. குண்டூசி என்ன கடுகு விழுந்தால் கூட சத்தம் பலமாகக் கேட்கும் அளவுக்கு அங்கே அமைதி நிலவியது.
ஸ்டேஜில் ஏறி நின்றவன், "ஹலோ ஃப்ரண்ட்ஸ்! ஐயாம் விக்ரமன் தேவராஜன் doing my M.S. in OB&G. நான் தான் உங்களுக்கு Obstetrics அன்ட் gynecology தியரி ஹேண்டில் பண்ண போறேன். I assure that you will understand the subject clearly and will not regret my presence in the class."
இதென்ன இப்படி எல்லாம் சொல்றான் என்று நினைத்த போதும் யாரும் வாய் திறந்து எதுவும் பேசவில்லை.
"Let me start with a small introduction about obstetrics and gynaecology." என்று ஆரம்பித்து, பெண் என்பவளின் அங்கங்கள், அதன் செயல்பாடுகள் எத்தனை புனிதமானவை, எப்படி எல்லாம் போற்றப் பட வேண்டியவை என்று ஒரு மருத்துனின் பார்வையில் அவன் பேசி முடித்தான்.
மகப்பேறியல் (Obstetrics) என்பது கருத்தரிப்பு, குழந்தை பிறப்பு, குழந்தை பிறப்புக்குப் பின்னரான காலம் ஆகியவற்றைப் பற்றி ஆய்வு செய்யும் ஒரு துறையாகும். மகப்பேறியல் என்பது மகளிர் மருத்துவவியலுடன்(gynecology) தொடர்புடையது. மகப்பேற்றுக்கான பராமரிப்பு என்பது கருத்தரிப்புக் காலத்தில் ஏற்படும் பல்வெறு சிக்கல்களை இனங்காண உதவும். தொடர்ந்த மருத்துவப்பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் ஆகியவையும் இதில் அடங்கும்.
மகளிர் மருத்துவம் அதாவது gynaecology என்ற வார்த்தை கிரேக்க ஜினோவில் இருந்து வந்தது, gynaikos அதாவது பெண் + லோகியா என்றால் படிப்பு, எனவே மகளிர் மருத்துவம் என்பது பெண்களைப் பற்றிய படிப்பாகும். பெரும்பாலும் பெண் இனப்பெருக்க உறுப்புகளின் அதாவது கருப்பை, சினைப்பைகள், பிறப்புறுப்பு மற்றும் மார்பகங்களில் ஏற்படும் கோளாறுகளில் கவனம் செலுத்துகிறது
இரண்டு துறைகளுக்கும் முதுகலை பயிற்சித் திட்டங்கள் பொதுவாக ஒன்றிணைக்கப்படுகின்றன, பயிற்சி பெறும் மகப்பேறியல்-மகளிர் மருத்துவ நிபுணர், பெண் இனப்பெருக்க உறுப்புகளின் ஆரோக்கியம் மற்றும் கர்ப்பத்தை நிர்வகித்தல் ஆகிய இரண்டிலும் திறமையானவராகத் திகழ்கிறார். இது பொதுவாக ஆங்கிலத்தில் OB-GYN, OB/GYN, obs மற்றும் gynae, O&G என்று பலவிதமாகச் சுருக்கப்படுகிறது.
"Any questions?" என்று அவன் நிறுத்திய போது, அந்த இரண்டு மணி நேரங்களும் மகுடிக்கு அடங்கிய நாகமாகக் கட்டுண்டு கிடந்த மாணவர்கள் அனைவரும் அவனது ரசிகர்களாக மாறி இருந்தனர். சிலர், இந்தத் துறையில் தான் தொடர்வது என்று உறுதி செய்து இருந்தனர். அவர்களின் அனைத்து சந்தேகங்களையும் தீர்த்து வைத்தவன் மறந்தும் தனிப்பட்ட முறையில் யாரையும் ஏறெடுத்தும் பார்க்காமல், வகுப்பை விட்டு வெளியேறினான்.
சந்தோஷமான மனநிலையில் இருந்தவன் நேராக காண்டீன் சென்றான். அங்கே அவன் நண்பர்களுக்காகக் காத்திருந்த வேளையில், எதிர்பாராத நபரின் வாய்மொழியாக சில பேச்சுக்களைக் கேட்க வேண்டியதாயிற்று. விளைவு, காலையில் இருந்த குழப்பமான மனநிலை மாறி அவனைச் சில தெளிவான முடிவுகளை எடுக்க வைத்தது.

Author: SudhaSri
Article Title: ஆடுமடி தொட்டில் இனி -2
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.