• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

இஞ்சி ஸ்குவாஷ் சேர்த்த ஆரஞ்சு ஜூஸ்

SudhaSri

Administrator
Staff member
Jun 16, 2024
466
28
43
india
இஞ்சி ஸ்குவாஷ் சேர்த்த ஆரஞ்சு ஜூஸ் :



இஞ்சி ஸ்குவாஷ் செய்ய தேவையான பொருள்கள் :




இஞ்சி சாறு : 1 கப்

வெல்லம் : 1 கப்

தண்ணீர் : 1/4 கப்



இஞ்சி ஸ்குவாஷ் செய்யும் முறை :



முதலில், இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கி, ஒரு மிக்ஸி ஜாரிலிட்டு நன்றாக அரைத்து வடிகட்டி இஞ்சிச் சாறு 1 கப் எடுத்து ஒரு 15 நிமிடங்கள் முதல் 20 நிமிடங்கள் வரை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.



இந்த சாரின் அடியில், வெள்ளையாக படியும், அதை எடுத்து விட்டு வெறும் இஞ்சிச் சாறை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.



ஒரு அடி கனமான வாணலியில், ஒரு கப் வெல்லம் மற்றும் 1/4 கப் தண்ணீர் சேர்த்து, வெல்லத்தை நன்றாக கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.



மீண்டும் வெல்லத்தை மிதமான தீயில், ஒரு ஐந்து நிமிடங்கள் வரை கொதிக்க வைக்க வேண்டும்



வெல்லம் ஓரளவு கொதித்தவுடன் அதனுடன் எடுத்து வைத்துள்ள இஞ்சிச் சாறை சேர்த்து ஒரு இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் மட்டும் கொதிக்க வைத்து எடுத்து நன்றாக ஆற வைத்து எடுத்தால் சுவையான இஞ்சி ஸ்குவாஷ் தயார்.



இதை 15 - 20 நாட்கள் வரை குளிர் சாதனப் பெட்டியில் வைத்து உபயோகிக்கலாம்.



ஆரஞ்சு ஜூஸ் செய்ய தேவையான பொருள்கள்:



ஆரஞ்சு : 1 பெரியது

இஞ்சி ஸ்குவாஷ் :1/4 கப்

ஊற வாய்த்த சப்ஜா விதைகள் : 1 தேக்கரண்டி (விருப்பப்பட்டால் )



செய்முறை :



முதலில் ஆரஞ்சு பழத்தை பிழிந்து அதிலிருந்து ஆரஞ்சு ஜூஸ் எடுத்துக்கொள்ளவும்.



ஒரு கப்பில் முக்கால் பாகம் ஆரஞ்சு ஜூஸ் ஊற்றி, மீதி கால் கப் இஞ்சி ஸ்குவாஷ் சேர்த்து இறுதியாக சப்ஜா விதைகள் சேர்த்து கலந்தால் சுவையான ஆரஞ்சு ஜூஸ் தயார்.



குறிப்புகள் :



நன்றாக ஆறிய இஞ்சி ஸ்குவாஷுடன் ஒரு கால் கப் எலுமிச்சை சாறு சேர்த்தும் கலந்து குளிர் சாதனப் பெட்டியில் வைத்து இதே முறையில் உபயோகிக்கலாம்.



தேவைப்படும் போது, ஒரு பங்கு ஸ்குவாஷ் மூன்று பங்கு தண்ணீர் சேர்த்துக் கலந்தால், உடனடியாக ஜூஸ் தயார்.



ஆரஞ்சு ஜூஸிற்கு பதிலாக தர்பூசணி / மாதுளம்பழம்/ எலுமிச்சம்பழம் போன்ற எல்லா விதமான பழச்சாறுடனும் கலந்து ஜூஸ் தயாரிக்கலாம்.



வெல்லத்திற்கு பதிலாக, சர்க்கரையோ/ நாட்டுச் சர்க்கரையோ/ அல்லது தங்களுக்கு விருப்பமான சுவையூட்டிகளை சேர்த்து இதே முறையில் ஸ்குவாஷ் தயாரிக்கலாம்.



சப்ஜா விதைகள் என்பது நாட்டு மருந்துக் கடைகளில் இருக்கும் திருநீற்றுப்பச்சை செடியின் விதைகள் தான். இது உடம்பிற்கு மிகவும் குளிர்ச்சி தருமாகையால், சளி/ இருமல்/ தும்மல் / போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் தவிர்த்து விடுதல் நல்லது