நவராத்திரி
இறுதிப் பதிவு
சாரதாம்பா தேவி முதலில் ஆதி சங்கராச்சாரியாரால் ஒரு ஸ்ரீயந்திரமாக, ஒரு பாறையில் செதுக்கப்பட்ட ஒரு சந்தன மர உருவத்துடன் பிரதிஷ்டை செய்யப்பட்டார். பெரும்பாலான சங்கர-விஜயங்களில் பாதுகாக்கப்பட்டுள்ள பாரம்பரியத்தின் படி, சிருங்கேரியில் உள்ள சாரதா கோயிலின் தோற்றம், மந்தன மிஸ்ரரின் மனைவி பாரதியுடன் சங்கராச்சாரியார் நடத்திய வாக்குவாதத்தில் இருந்து அறியப்படுகிறது. பாரதி, சங்கராச்சாரியாரை விவாதத்திற்கு சவால் விட்ட சரஸ்வதி தேவியின் அவதாரமாகக் கருதப்படுகிறார்.
அவளுடைய எல்லா கேள்விகளுக்கும் அவர் பதிலளித்த பிறகு, சங்கராச்சாரியார் தனது முதல் மடத்தை நிறுவிய சிருங்கேரியில் தங்குவதாக அவள், அவருக்கு வரம் அளித்தாள். பிரபஞ்சத்தின் பெரிய தாயான ஜகன்மாதாவாக சகுண பிரம்மத்தை சாரதாம்பா தேவி பிரதிநிதித்துவப் படுத்துகிறார். ஜகத்குருவின் உருவம் மூலம் பக்தர்களின் மீது தனது அருளைப் பொழிவதால், அவர் குரு-ரூபிணியாகவும் இருக்கிறார். காயத்ரி மந்திரத்தின் தெய்வங்களான காயத்ரி, சாவித்ரி மற்றும் சரஸ்வதி என அவர் வணங்கப்படுகிறார்.
மேலும் புராண இந்து மதத்தின் பெரிய தெய்வங்களான மகேஸ்வரி, மகாலட்சுமி மற்றும் மகாசரஸ்வதி ஆகியோருடன் பல்வேறு காலங்களில் அடையாளம் காணப்படுகிறார்.
அவள் பெரும்பாலும் பிரம்ம ஞானத்தின் உருவக தெய்வமான பிரம்மவித்யாவாகவும், பண்டைய வேத தெய்வங்களான வாக்தேவி, இலா, பாரதி மற்றும் சரஸ்வதியாகவும் வணங்கப்படுகிறாள். அவள் தனது நான்கு கைகளிலும், அமிர்தம் கொண்ட ஒரு ஜாடி, அழியாமையின் அமிர்தம், அறிவைக் குறிக்கும் ஒரு புத்தகம், ஒரு ருத்ராட்ச-மாலை மற்றும் அத்வைத-தத்துவத்தைக் குறிக்கும் சின்முத்ராவை வைத்திருக்கிறாள். இவ்வாறு, அவள் பிரம்மவித்யாவைக் குறிக்கிறாள், மேலும் பிரம்மத்திலிருந்து வேறுபட்டவள் அல்ல என்று கருதப்படுகிறாள்.
சுவாரஸ்யமாக, அவளுடைய கைகளில் உள்ள இந்த அலங்காரங்கள், நித்திய இளமை, அமைதியான குருவான தட்சிணாமூர்த்தி வைத்திருக்கும் அலங்காரங்களைப் போலவே இருக்கின்றன. தேவி சாரதா மற்றும் குரு தட்சிணாமூர்த்தி இருவரும் சில சமயங்களில் தங்கள் கைகளில் வீணையை வைத்திருப்பது போலவும் சித்தரிக்கப்படுகிறார்கள்.
சரஸ்வதி, லக்ஷ்மி, துர்க்கை ஆகிய மூன்று தெய்வங்களின் மொத்த உருவமே ஸ்ரீ சாரதாம்பாள் தேவி.
கலைமகளும் அவளே!
அலைமகளும் அவள்!
மலைமகளும் அவளே!
நவராத்திரி சமயத்தில் அன்னை சாராதாவை வணங்கி அவளுடைய அருளைப் பெற்று மகிழலாம்.
அபிராமி அந்தாதி
பொன்னிநதி என்னும் காவிரி வளம் சேர்க்கும் தஞ்சைத் தரணியில் 300 ஆண்டுகளுக்கு முன் பிறந்த அருளாளர் அபிராமி பட்டர். காலனைச் சம்ஹாரம் செய்த சிவபெருமான் அருள்புரியும் திருக்கடையூர் என்னும் திருத்தலத்தில் இவர் அவதரித்தார். இசைத்துறையிலும் பாடல் புனைவதிலும் வல்லவராக இருந்தார். அம்பிகையை வழிபடும் சாக்த நெறியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டார். ஒளி வடிவில் அம்பிகையைத் தரிசித்து பேரின்பம் கண்டார்.
ஆனால், இவரின் தெய்வீகநிலையை மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. பித்தன் என்று வசைபாடினர். அவர்களின் ஏச்சையும் பேச்சையும் அபிராமி பட்டர் ஒரு பொருட்டாக எண்ணவில்லை.
அக்காலத்தில் தஞ்சையை தலைநகராகக் கொண்டு சரபோஜி மன்னர் ஆட்சி செய்து வந்தார். இறையுணர்வு, மத உணர்வில் இவருக்கு அதிக ஈடுபாடு உண்டு. ஒரு தை அமாவாசை நாளில் சரபோஜி மன்னர் திருக்கடையூர் கோயிலுக்குத் தரிசனம் செய்ய வந்திருந்தார்.
கோயிலில் அபிராமி பட்டர் அம்பிகையின் முன்னர் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். மன்னரின் வருகையைக் கூடக் கவனிக்காமல் பட்டர் இருப்பதைக் கண்ட மன்னர் வியப்பில் ஆழ்ந்தார். ஆனால், சுற்றியிருந்தவர்கள் மன்னரிடம், “ மன்னா! தங்களுக்குத் தர வேண்டிய மரியாதையை வழங்காமல் கண்மூடி இருக்கிறார் பட்டர். எந்நேரமும்
எந்நேரமும் இப்படித்தான் இருப்பார். இவர் ஒரு பித்தன்” , என்று பட்டரைப் பற்றி புகார் கூறினார் . ஆனால், சரபோஜி மன்னர் அவர்கள் சொன்னதை நம்பவில்லை. இருந்தாலும், பட்டரின் உள்ளுணர்வை அறிய விரும்பிய மன்னர், “ பட்டரே! இன்று என்ன திதி? ” என்று கேட்டார். அப்போது கண் திறந்த பட்டர், அபிராமி அம்பிகையை ஏறிட்டுப் பார்த்தார். அவளது முகம் பிரகாசித்தது. அந்த அருள் முகத்தில் லயித்தவராக, “இன்று பவுர்ணமி” என்றார். ஏதோ நினைவில் அப்படிச் சொல்கிறார் என நினைத்த மன்னர், இதே கேள்வியை மீண்டும் கேட்டார். அப்போதும் அதே பதில் வந்தது. பின்னர், சுதாரித்துப் பார்த்த போது மன்னர் கேள்வி கேட்டதும், அதற்கு சரியான பதில் சொல்லாததும் தெரியவந்தது. தன் வாக்கு பொய்த்துவிட்டதே என்று கதறி அழுதார். அரசர் வரும் வேளையில் கவனக்குறைவால் ஏற்பட்ட தவறிலிருந்து அம்பிகையே தன்னைக் காத்தருளவேண்டும் என்று அரிகண்டம் பாடினார். அபிராமி சந்நிதி முன் ஒரு ஆழமான ஒரு குழியை வெட்டினார். விறகை அடுக்கித் தீமூட்டினார். அதற்கு மேல் ஒரு விட்டமும், நூறு கயிறுகளாலான உறியையும் கட்டினார். அதில் ஏறி அமர்ந்து கொண்டார். “உதிக்கின்ற செங்கதிர் ” என்று பாடத் தொடங்கினார். ஒவ்வொரு பாடல் முடிந்ததும் உறியின் ஒவ்வொரு கயிறையும் அறுத்துக் கொண்டே வந்தார். பட்டர் பல பாடல்கள் பாடியும் அம்பிகையின் அருள் கிட்டவில்லை. “ அம்மா! உன் விழிக்கே அருள் பார்வையுண்டு. பழிபாவம் கொண்டு உழலும் மாந்தருடன் இனி எனக்கு என்ன தொடர்புண்டு?” என்ற பொருள்படும் வகையில்,
“ விழிக்கே அருளுண்டு அபிராமிவல்லிக்கே” என்ற பாடலைப் பாடி முடித்ததும், அன்னை அபிராமி அவருக்கு அருட்காட்சி கொடுத்தாள். தன் தாடங்கம் என்னும் தோடினை எடுத்து வானவீதியில் தவழ விட்டாள். அந்த தாடங்கம் வானில் மிதந்து பலகோடி நிலாக்கள் ஒன்றுகூடினாற் போல் ஒளியைப் பொழிந்தது
அவள் பட்டரிடம், “ நீ வாய் தவறி மன்னனிடம் கூறிய சொல்லையும் மெய்யே என நிரூபித்தேன். நீ தொடங்கிய அந்தாதியை தொடர்ந்து பாடு” என்றாள். அம்பிகை அருள்பெற்ற அபிராமிப்பட்டர் பரவசமுற்றார். அதோடு, தம் அனுபூதிநிலையை வெளிப்படுத்தும் அந்தாதிப் பாடல்களைப் பாடி நிறைவு செய்தார். அபிராமிப்பட்டரின் உறுதியான பக்தி கண்டு சரபோஜி மன்னரும் அகமகிழ்ந்தார். மன்னரிடம் பட்டரைப் பற்றி,
பித்தன் என்றும் பேயன் என்றும் கூறியவர்கள் எல்லாம் பட்டரிடம் மன்னிப்பு கேட்டனர். மன்னரும் மனம் மகிழ்ந்து பட்டருக்கு ஏராளமானமானியம் அளித்தார். அபிராமி அந்தாதி ஒரு அற்புதமான தெய்வீக துதிநூலாக திகழ்கிறது.
தேவியின் மகிமையைப் பேசும் அபிராமி அந்தாதியை முடியும் போதெல்லாம் பாராயணம் செய்து அம்பிகையின் அருளை வேண்டி நிற்போம்.
புவனா சந்திரசேகரன்.

Author: SudhaSri
Article Title: இறுதி அத்தியாயம்
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.