• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

எனது சொந்தம் நீ - 1

Annapurani

New member
Mar 27, 2025
16
0
3
1.



“என்ன அபி! அங்கியே பாக்கற?” அவள் தோழி கேட்டாள்!

“ஒண்ணுல்லடி!”

“ஹேய்! பத்தியா? பொய் சொல்லாதடி!”

“பொய்யில்லடி! நெஜமாவே ஒண்ணுல்ல! அங்க மாட்டிருக்கற டேஞ்சூர் பெயின்டிங் ரொம்ப அழகா இருக்குல்ல! அததான் பாத்துகிட்டிருந்தேன்.” வாய் நிறைய பொய் சொன்னாள்.

“ஏய்! அவளுக்குதான் இந்த பெயின்டிங்ஸ்ல எல்லாம் ஒரு இன்ட்ரெஸ்ட் உண்டுன்னு உனக்கு தெரியும்ல. ஏண்டி அவள வம்பு பண்ற?” என்றாள் இரண்டாவது தோழி.

“சும்மாதான்டி! நம்ம அபியப் பத்தி எனக்கு தெரியாதா?” என்றாள் முதலாமவள்.

அபி மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்.

அபிநயா என்கிற அபி தன் தோழிகளுடன் அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தாள். அவளுடைய பழைய பள்ளித்தோழி ஒருத்திக்கு திருமணம் நிச்சயமாகி இருக்கிறது என்று ட்ரீட் தந்தாள். அதைத்தான் அபி அனுபவித்துக் கொண்டிருந்தாள்.

அவள் பார்வை அவ்வப்போது அந்த ஹாலின் மூலைக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்தது. அந்த மூலையில் மூவர் அடங்கிய குழுவினர் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தனர். மூவரும் ஆண்கள். மூவரும் கோட் சூட் அணிந்திருந்தனர். நுனிநாக்கில் ஆங்கிலம் பேசினர். நாகரீகமாக நடந்து கொண்டனர். அளவாக சிரித்தனர். நாசூக்காக சாப்பிட்டனர். அது ஒரு பிஸினஸ் லஞ்ச் என்று யூகித்துக் கொண்டாள். மூவரில் இருவர் நடுத்தர வயதுடையவர்கள். ஒருவன் இளைஞன். நல்ல உயரமாக இருந்தான். கலர் கொஞ்சம் கம்மிதான் என்றாலும் களையான முகத்துடன் கம்பீரமான உடற்கட்டுடன் பார்ப்பதற்கு அழகாக இருந்தான். அவன் புன்னகைக்கும்போது இன்னும் அழகாக இருப்பதாக அபிக்கு தோன்றியது. அவன் வாய்விட்டுச் சிரித்தால் இன்னும் அழகாக இருப்பான் என்று நினைத்துக் கொண்டாள்.

அந்த ஆண்கள் மூவரும் உண்டு முடித்துக் கிளம்பினர். மூவரும் போகும்போது அந்த இளைஞன் பரிமாறிய பேரருக்கு தாராளமாக டிப்ஸ் கொடுத்தான். அந்த பேரர் அந்த இளைஞனுக்கு வாயெல்லாம் பல்லாக சல்யூட் அடித்துவிட்டுப் போனான். அந்த இளைஞன் இவர்களைக் கடந்தபோது அபி அவனைப் பார்த்துப் புன்னகைக்க, அவனும் அபியை ஒரு ஆச்சர்யத்தோடு பார்த்து பதிலுக்குத் தானும் ஒரு புன்னகையை அவளிடம் வீசிவிட்டுப் போனான்.

அபியின் மனதில் அவனைத் திரும்பவும் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஆழிப்பேரலையாய் எழுந்தது. என்ன இது? எனக்கு என்னாச்சு? நான் ஏன் இப்டி ஆய்ட்டேன்? ஒரே நிமிஷத்ல மனசு அவன் பின்னாடியே போயிடுச்சே! கடவுளே! காப்பாத்து! ப்ளீஸ் காப்பாத்து! என்று மனதுக்குள் வேண்டியபடியே தன் கவனத்தை இழுத்துப் பிடித்து தோழிகளிடம் செலுத்தினாள். ஆனால் அவர்களோ அந்த ஆண்களைப் பற்றிப் பேசத் தொடங்கினர்.

“ஏய்! அந்தாள் செம்ம ஸ்மார்ட்டா இருக்கான்ல அபி?” இது முதலாமவள்.

“அவன மாதிரி ஒருத்தன் பாய் ஃப்ரண்டா கிடச்சான்னா சூப்பரா இருக்கும்ல அபி!” இது இரண்டாமவள்.

“ஏய்! அவனுக்கு இந்நேரம் நூறு கேர்ள் ஃப்ரண்ட்ஸ் இருப்பாங்கடீ! நமக்கெல்லாம் சான்ஸ் கிடைக்காது! உனக்குதான் நிச்சயமாயிடுச்சுல்ல! அப்றம் என்ன? கொஞ்சம் அடங்கு!” இது முதலாமவள்.

“நீ சொல்றதும் கரெக்ட்தான். சரி வாங்கடி கிளம்பலாம்.” என்று இரண்டாமவள் கூற அபி ஒன்றும் பேசாமல் இருந்ததைப் பார்த்து விட்டு தோளைக் குலுக்கினாள். மூவரும் கிளம்பினர்.

"மே ஐ கம் இன் ஸார்!"

"யா! கம் இன்!" கம்ப்யூடரை விட்டு கண்ணை எடுக்காமலேயே உள்ளே வர அனுமதி அளித்தான். உள்ளே வந்தவள் நவநாகரீகமாக உடுத்தியிருந்தாள். கண்ணியமான உடைதான் என்றாலும் அவளுடைய மேனியை அது சிக்கெனத் தழுவியிருந்ததால் கொஞ்சம் கவர்ச்சியாகவே தெரிந்தாள். அவளும் பார்ப்பதற்கு மிக அழகாகவே இருந்தாள்.

“குட் டே ஸார்!” மரியாதை நிமித்தம் நின்றாள்.

ஒரு தலையசைப்பில் அவள் வரவேற்பை ஏற்றவன் நாற்காலியைக்காட்டி அமரச் சொன்னான். அவள் அமர்ந்தாள். அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் தன் கைவேலையை முடித்துவிட்டு அவளை நிமிர்ந்து பார்த்தான். ஆனால் அவனுடைய பார்வை அவளுடைய கண்களைத் தவிர வேறெங்கும் பயணிக்கவில்லை என்பதை அவள் மனதில் குறித்துக் கொண்டாள்.

"யா! மிஸ் நிஷா! அந்த கஸ்டமர் கேருக்கு ஆள் அப்பாயின்ட் பண்ணியாச்சா?"

"இன்டர்வ்யூ முடிஞ்சி ஷார்ட் லிஸ்ட் பண்ணிட்டேன் ஸார்! நீங்க ஃபைனலைஸ் பண்ணிட்டா இன்னிக்கே அப்பாயின்ட் பண்ணிடலாம்."

"ஷார்ட் லிஸ்ட் பண்ணின கேன்டிடேட்ஸோட டீடெயில்ஸ எனக்கு ஃபார்வேர்ட் பண்ணிடீங்களா?"

"எஸ் ஸார்! அனுப்பிட்டேன்!"

"டீம் லீடர்ஸ்க்கும் டீம் மெம்பர்ஸ்க்கும் வொர்க் அலாட் பண்ணியாச்சா?"

"எஸ் ஸார்! அவங்க வேலய ஸ்டார்ட் பண்ணியாச்சு ஸார்!"

"ஓகே! நான் அந்த டீடெயில்ஸ செக் பண்ணிட்டு கூப்பட்றேன்! யூ கேன் கோ நௌ!"

“ஸார்! உங்ககிட்ட ரெண்டு நிமிஷம் பேசலாமா? ப்ளீஸ்!”

“சொல்லுங்க நிஷா! அட்வான்ஸ் எதாவது வேணுமா?”

“அதெல்லாம் இல்ல ஸார்! நான் கேக்க வந்தது வேற!”

“சொல்லுங்க!”

“நான் சுத்தி வளச்சி பேச மாட்டேன்னு உங்களுக்கே நல்லா தெரியும்! நான் நேரடியா கேக்கறேன்! ஐ லைக் யூ! ஐ வான்ட் மேரி யூ! வில் யூ மேரி மீ?”

ஒரு நிமிடம் அவன் அதிர்ந்துதான் போனான். ஆனால் உடனேயே சுதாரித்தான்.

“மிஸ் நிஷா! ஸாரி! ஐ கான்ட் மேரி யூ! நான் எந்த வகையிலயாவது உங்கள டிஸ்டர்ப் பண்ணியிருந்தா, ஐம் ஸாரி!”

“ஸார்! உடனே பதில் சொல்லணும்னு எந்த அவசியமும் இல்ல ஸார்! நல்லா யோசிச்சி ரெண்டு நாள் கழிச்சு சொன்னா போதும். நான் வெய்ட் பண்றேன் ஸார்!”

“நீங்க எத்தன நாள் வெய்ட் பண்ணினாலும் இதுதான் என் பதில்! ஐம் ஸாரி!”

“ஆர் யூ ஷ்யுர்?”

“யா! ஐம் டேம் ஷ்யுர்!”

“ம்! என்ன ரீசன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?”

“நிஷா! நீங்க என்ன எந்த வகையிலயும் டிஸ்டர்ப் பண்ணல. யூ ஆர் எ டெடிகேட்டட் ஸ்டாஃப். தட்ஸ் ஆல்.”

“தேங்க்யூ ஸார்!” முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு போய்விட்டாள்.

ஸாரி நிஷா! நீங்க இத எப்ப கேட்டாலும் நான் இந்த பதிலதான் சொல்லிருப்பேன். ஏன்னா நீங்க படிச்சவங்க! படிச்ச பொண்ணு எனக்கு வேண்டாம். ஆனா ரெண்டு நாள் முன்னாடிதான் ஒரு தேவதைய பாத்தேன். அவ படிச்சிருக்கலாம். படிக்காதவளா இருப்பான்னு தோணல. ஆனா என் நெனப்ப விட்டு அவ போக இன்னும் கொஞ்ச நாளாகும். போவாளான்னு தெரில. இது அவஸ்த்தையாதான் இருக்கு. ஆனா எனக்கு இந்த அவஸ்த்தை ரொம்ப பிடிச்சிருக்கு. எதோ ஒரு வகைல அவ என் மனக்காயங்களுக்கு மருந்து போடற மாதிரி ஃபீல் பண்றேன்! என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.

அன்றைய தினம் நடந்ததை நினைவில் கொண்டு வந்தான்.

அன்னிக்கு பிஸினஸ் லஞ்ச் முடிஞ்சு பேரருக்கு டிப்ஸ் குடுத்துட்டு மூணு பேரும் கிளம்பினோம். இந்த பிஸினஸ் டீல் நல்லபடியா முடியணுமேன்னு நெனச்சபடியே நடந்துவந்தேன். முடியுமா கடவுளேன்னு நெனக்கும்போது அந்த தேவதை என்னப் பாத்து கவலப்படாதன்னு சொல்றமாதிரி ஒரு ஸ்மைல் பண்ணினா! என்ன ஒரு தேஜஸ் அவ முகத்தில. இந்த மீட்டிங் சக்கஸ்ன்னு எனக்கு நம்பிக்கை வந்த மாதிரி இருந்தது. அதே மாதிரியே அன்னிக்கு ஈவ்னிங்கே இந்த ஆடர் எனக்கே கிடைச்சிருச்சு. முப்பது கோடி ரூபா ப்ராஜக்ட். ஒரே நிமிஷத்தில நான் வானத்தில பறக்கற மாதிரி இருந்தது. நிஷா வந்து கேக்கறவரை எனக்கு எதுவும் தோணல. ஆனா அவ கல்யாணத்தப் பத்தி பேசினதும்தான் தெரிஞ்சுது, என் மனசில அந்த தேவதை அழகா வந்து சிம்மாசனம் போட்டு உக்காந்திருக்கான்னு. அடக் கடவுளே! இவ எப்ப உள்ள வந்தா! எனக்குத் தெரியவேயில்லையே! அவ யார் எவன்னு தெரியாது. ஆனா அந்த தேவதை என்கூட இருந்தா, எனக்கும் அம்மாவுக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கும். ஏன், பதினஞ்சு வருஷமா நாங்க காத்துகிட்டு இருக்கறதுக்கு ஒரு முடிவு கூட கெடக்கலாம். யார் கண்டா? ஆனா, அந்த தேவதை எங்க இருக்காளோ? என்ன பண்றாளோ? ஆனா அவ படிச்சவளா இருந்தா!? என்னால அவள ஏத்துக்க முடியாதே! எது எப்டியிருந்தாலும் அவள நெனச்சாலே மனசுக்குள்ள ஒரு உற்சாகம் பொங்கறது என்னமோ உண்மைதான்.

அவன் தன் மனதில் அந்த தேவதையை நினைத்தபடியே தன் கவனத்தை கம்ப்யூடரில் செலுத்தினான். அவனுடைய செல் சிணுங்கியது. எடுத்துப் பார்த்தான். அவனுடைய அம்மா நந்தினி அழைத்தாள். மணி பார்த்தான். நாலாகியிருந்தது.

“சொல்லுங்கமா!”

“நீ கோவிலுக்கு வரலியா ஹரி?” குரலில் இருந்தது கோபமா கெஞ்சலா என்று அவனால் அனுமானிக்க முடியவில்லை. கம்ப்யூடரில் அன்றைய தேதியை அவசரமாய்ப் பார்த்தான்.

“நான் வரேம்மா! இன்னும் அரைமணி நேரத்ல அங்க இருப்பேன்.” என்றவன் கம்ப்யூடரை அணைத்தான். திரும்பவும் நிஷாவை அழைத்தான்.

“நிஷா! நீங்க அனுப்பின டீடெயில்ஸ பாத்துட்டேன். நீங்க செலக்ட் பண்ணின மூணு கேண்டிடேட்ஸயும் அப்பாயின்ட் பண்ணிடலாம்.” சொல்லிவிட்டு அவன் கிளம்பினான்.

“எஸ் ஸார்.” சொல்லிவிட்டு சென்று அவள் தன் வேலையில் ஆழ்ந்துவிட்டாள்.

ஹரி என்று அவன் அம்மாவால் அழைக்கப்பட்ட ஹரிஹரன் திருமணமாகாத அழகான இளைஞன். நன்றாக படித்து தன் சொந்த முயற்சியால், நலிவடைந்து வரும் ஒரு தொழிற்சாலையை விலைக்கு வாங்கி அதை வெற்றிப்பாதை நோக்கி அழைத்து சென்று கொண்டிருக்கும் இளம் தொழிலதிபன். அவனுடைய கம்ப்யூட்டர் உதிரிபாகங்கள் தயாரிக்கும் சிறு கம்பெனி சென்னை ஓஎம்ஆரில் உள்ளது. அவர்கள் வீடு அடையாரில் உள்ளது. அவனுடைய அம்மா நந்தினி சென்னையில் உள்ள பிரபல பெண்கள் கல்லூரியில் பேராசிரியையாக இருக்கிறாள். அந்த காலத்திலேயே நன்றாகப் படித்து இன்று வரை வேலைக்குப் போகிறவள். இன்னும் இரண்டாண்டுகளில் ஓய்வு பெறப் போகிறாள். அவனுடைய அப்பா சிவசங்கரனும் ஒரு கல்லூரிப் பேராசிரியர்தான். மனைவியுடன் ஏற்பட்ட சிறு கருத்து வேறுபாட்டால் ஹரி பன்னிரெண்டாவது முடிக்கவிருக்கும் சமயம் அவர்களைப் பிரிந்து சென்று விட்டார். அவர் பிரிந்து சென்று பதினைந்தாண்டுகள் முடிந்துவிட்டது. அவர் என்றாவது ஒரு நாள் தங்களிடம் திரும்ப வந்துவிடுவார் என்று அசாத்திய நம்பிக்கையில் அன்னையும் மகனும் இருந்தனர். இன்று அவருடைய பிறந்த நாள். ஒவ்வொரு வருடமும் அவருடைய பிறந்தநாளன்று திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்வதை நந்தினி வழக்கமாகக் கொண்டிருந்தாள். இந்த வழக்கம் அவர்கள் அனைவரும் ஒன்றாக இருக்கும்போதே ஆரம்பித்த ஒன்று. அவளால் அதை விடமுடியவில்லை. விட விரும்பவுமில்லை. அதற்குத்தான் மகனை அழைத்தாள்.

ஹரிஹரன் அம்மாவிடம் சொன்னது போலவே சரியாக அரைமணி நேரத்தில் கோவில் வாசலை அடைந்தான். அவனுடைய அம்மா கோவில் வாசலில் காத்திருந்தாள். காரை பார்க் செய்துவிட்டு அம்மாவிடம் வந்தான். இருவரும் கோவிலுக்குள் சென்றனர்.


- தொடரும்..