• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

எனது சொந்தம் நீ - 13

Annapurani

Member
Mar 27, 2025
32
0
8
13.



நந்தினியின் நெஞ்சில் தன் ஸ்டெத்தெஸ்கோப்பை வைத்து ஊன்றி கவனித்தாள் அபி. அவள் செய்வதை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான் ஹரி. அபிக்கு நந்தினியின் நிலை புரிந்தது.

“உங்களுக்கு ஹார்ட் ப்ளாக் இருக்கா?”

நந்தினி ஆமாம் என்று தலையசைத்தாள்.

“ரிப்போர்ட்ஸ் எங்க?”

நந்தினி கைகாட்டினாள். எடுத்துப் பார்த்தாள்.

“மை காட்! ஏன் அத்த மொதல்லயே சொல்லல? ம்ச்!” ஹரியின் கைப்பேசியை வாங்கி எதோ நம்பரை அழுத்தினாள்.

“ஹலோ! டாக்டர் அபிநயா ஸ்பீக்கிங்! ஐசியூல பெட் காலியா இருக்கா.”

“.........”

“ஓகே! மேக் இட் பாஸிபிள்! ஐல் பீ தேர் இன் ஹாஃப் அன் ஆர்! க்விக்!” என்று கூறி போனை கட் செய்தாள்.

இவ ஒரு டாக்டரா? என்று மனதுக்குள் நினைத்து கொதித்தான் ஹரி.

“நீங்களும் முத்துவும் ஒரு கை பிடிங்க ஹரி. ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய்டலாம்.” என்றவள் கணவன் ஒன்றும் பேசாமல் இருப்பதைப் பார்த்து,

“இங்க பாருங்க ஹரி! நான் ஒரு டாக்டர். கார்டியாலஜிஸ்ட். இங்க அடையார்ல இருக்கற மல்டி ஸ்பெஷாலிடி ஹாஸ்பிடல்ல வேலை பாக்கறேன்."

ஹரி அதிர்ச்சியாகி நிற்க, பொன்னம்மாள் அதை விட அதிர்ந்தாள்!

"என்னப்பத்தின எல்லாத்துக்கும் விளக்கம் அப்றமா சொல்றேன். அத்தைய பாருங்க. அவங்க உயிருக்குப் போராடிகிட்டு இருக்காங்க. இப்ப நமக்கு அதுதான் முக்யம். ஹோப் யூ அன்டர்ஸ்டான்ட் மீ. ப்ளீஸ்! கோஆப்பரேட்.!” என்று வேகமாக சொன்னாள்.

“ஹரீ!” என்று ஈனஸ்வரத்தில் முனகிய அன்னையின் அழைப்பை ஏற்று அவள் கையைப் பிடித்துக் கொண்டான்.

“சீக்கிரம்! என்ன பண்ணனுமோ பண்ணு. அம்மா துடிக்கறாங்கல்ல!” அபியை முறைத்தபடியே முணுமுணுத்தான்.

“முத்தண்ணா! ஒரு கை பிடிங்க.” என்று கூறி நந்தினியை தூக்கிக் கொண்டு காருக்கு வந்தனர். காரில் அவளை பின் சீட்டில் ஏற்றிக் கொண்டனர்.

காரின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்த ஹரியின் கைகள் நடுங்கியது! ஒரு பக்கம் தன் தாயின் உடல் நிலை; மறுபக்கம், தன் தேவதையே தன்னை ஏமாற்றி விட்டாள் என்ற கோபம்!

“ஹரி! நீங்க பின்னாடி அத்த பக்கத்ல உக்காருங்க. இந்த ரிப்போர்ட்ஸ வெச்சுக்குங்க! ஐல் ட்ரைவ் த கார்!” என்று கூறி அவனை பின்னால் அனுப்பிவிட்டு காரை அபி ஓட்டினாள்.

சென்னையின் கனமான போக்குவரத்தில் லாவகமாக காரை ஓட்டும் அபியை கோபத்தோடு பார்த்துக்கொண்டிருந்தான் ஹரி.

மருத்துவமனை வாசலில் டாக்டர்கள் செல்லும் பாதையில் வேறு கார் வருவதைப் பார்த்து நிறுத்திய செக்யூரிட்டி காரின் உள்ளே அபியின் தலை தெரியவும் விரைப்பாய் நின்று சல்யூட் அடித்தான். அபி காரை விட்டு இறங்கியபடியே அவனைப் பார்த்து “ஸ்ட்ரெச்சர் எடுங்க! க்விக்!” என்று கட்டளையிட, அவள் கேட்ட ஸ்ட்ரெச்சருடன் இருவர் ஓடி வந்தனர்.

நந்தினியை அதில் ஏற்றிவிட்டு செக்யூரிட்டியை பார்த்து, “காரை பார்க் பண்ணிக்கோங்க செக்யூரிட்டி! அப்றமா என் ஹஸ்பன்ட் வந்து எடுத்துப்பார்.” என்று கூறிவிட்டு நந்தினியின் பின்னால் கிட்டதட்ட ஓடினாள்.

அவள் செல்லும் வழி முழுதும் அங்கு வேலை செய்யும் வார்ட் பாய் முதல் ஆயாக்கள், நர்ஸ்கள் மற்ற பணியாளர்கள் என எல்லாரும் வணங்கிவிட்டுப் போனார்கள். ஹரிக்கு கோபம் கோபமாய் வந்தது.

ஐசியூவில் தயாராய் இருந்த பெட்டில் நந்தினியை அனுமதித்துவிட்டு நர்ஸ்களுக்கு உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்று ஆங்கிலத்தில் கட்டளையிட்டாள். அதன்படி உடனடியாக ட்ரிப்ஸும் ஆக்ஸிஜனும் வைத்தனர். ஏதோ மருந்தை அந்த ட்ரிப்சில் ஊசி மூலம் செலுத்தினார்கள்!

அபி தனக்கு மேல் இருக்கும் சீஃப் கார்டியாலஜிஸ்டை தேடி ஓடினாள். அவர் வயதானவராக இருந்தார். தலை வழுக்கை விழுந்திருந்தது. சிவந்த நிறத்தில் ஒல்லியான தேகத்துடன் உயரமாக இருந்தார். மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தார். அவருடைய பேச்சிலேயே அவருடைய ஆழ்ந்த அறிவு வெளிப்பட்டது.

அவளுடைய ஆங்கிலத்தைக் கேட்ட ஹரி ஒரு நொடி அசந்துதான் போனான். அவரும் அபியும் பேசும் ஆங்கில உரையாடலைக் கேட்டு ஹரிக்கு மயக்கமே வந்தது. ஆங்கிலேயர்கள் ஆங்கிலம் பேசுவது போன்ற நடையுடன் இருந்தது அவளுடைய பேச்சு. எனக்கும் வேகமா இங்லிஷ் பேச வரும். இவ என்ன ஃபாரினர்ஸ் மாதிரி இங்லிஷ் பேசறா? என்று நினைத்துக் கொண்டான். அப்போ அன்னிக்கு டிவிலேந்து சத்தம் வரல... இவதான் பேசியிருக்குக்கா..... இதுக்கு அம்மாவும் உடந்தை...... என்று புரிந்து கொண்டான்.

அவர் வந்து பார்த்துவிட்டு, “சரியான நேரத்ல வந்துட்டம்மா! ஆபரேஷன் பண்ணிடலாம். இன்னிக்கு சண்டே. ரெண்டு நாள் அப்ஸர்வேஷன்ல இருக்கணும்! வென்ஸ்டே பண்ணிடலாம்மா. ரெடி பண்ணிடு!” என்றுவிட்டு வெளியே வந்தார். அபி நந்தினியின் அருகிலேயே அடுத்து செய்ய வேண்டியவைகளை செய்யத் தொடங்கினாள்.

வெளியே வந்த பெரிய டாக்டர், ஹரியை பார்த்து, “ஹலோ யங்மேன்! அம்மாவுக்கு ஒண்ணுமில்ல. பயப்பட வேண்டாம். ஒரு சின்ன ஆப்பரேஷன் பண்ணிட்டா போதும். ஷீ வில் பீ நார்மல். நோ வொர்ரீஸ்.” என்றார்.

“தேங்க்யூ டாக்டர்!” என்றான் ஹரி.

“டேக் கேர்!" என்று ஹரியின் முதுகில் தட்டிவிட்டுச் சென்றார் அந்த டாக்டர்.

விஷயம் அறிந்து இந்துமதியும் பாண்டியனும் வந்தனர். கூடவே ஆனந்தியும் வந்தாள். அபி இந்துவையும் ஆனந்தியையும் உள்ளே அழைத்துச் சென்றாள்.

பாண்டியன் நந்தினியைக் காணச் செல்லாமல், ஹரியின் கையைப் பிடிக்க, அவன் அவரைப் பார்க்காமல் திரும்பிக்கொண்டான்.

"மாப்ள ...!” ஏதோ சொல்லத் தொடங்கியவரிடமிருந்து எதுவும் கேட்கத் தயாராக இல்லை என்பது போல தன் கையை இழுத்துக்கொண்டு அங்கிருந்து விடுவிடுவென நகர்ந்து சென்றுவிட்டான்!

தன்னுடைய கோபத்தை அவரிடம் காட்ட அவனுக்கு மனமில்லை.அதே நேரத்தில் அவரிடம் சாதாரணமாகப் பேசவும் அவன் விரும்பவில்லை.

நந்தினியுடன் இந்துமதியும் ஆனந்தியும் துணைக்கிருக்க அபி நந்தினிக்குத் தேவையான ஆபரேஷனுக்குத் தயார் செய்யச் சென்றாள்.

ஆனந்தி சில நிமிடங்களில் கிளம்பி விட்டாள். நந்தினி இந்துவின் கையைப் பிடித்துக் கொண்டு பேசினாள்.

“இந்து! எப்டியாவது அவர கண்டுபிடிச்சிடலாம்னு நம்பினேன். என்னால முடியல. கண்ண மூடறதுக்குள்ள ஒருவாட்டி அவர் முகத்தப் பாக்கணும்னு துடியா துடிச்சிகிட்டு இருக்கேன். ஆனா கடவுள் இன்னும் கண்ண தெறக்கல. நான் என்ன தப்பு பண்ணினேன் இந்து? அப்ப அவர் என்ன புரிஞ்சிக்காம என்ன விட்டு போனார். என் வாழ்க்கை கெட்டுப் போச்சு! இவனாவது என்ன புரிஞ்சிப்பான்னு நம்பினேன்! ஆனா இவனும் என்ன புரிஞ்சிக்கவேயில்ல! அபி வாழ்க்கையும் என்னால கெட்டுப்போச்சு! என்ன மன்னிச்சுடு இந்து!”

“அழாதீங்க நந்து. எல்லாம் சரியாய்டும். அபி வாழ்க்கை மட்டுமில்ல, உங்க வாழ்க்கையும் சீக்கிரமே சரியாகிடும்! நீங்க நம்பிக்கைய மட்டும் விட்டுடாதீங்க.” இந்து ஆதரவாய் பேசினாள்.

“என் நம்பிக்கையெல்லாம் போயே போச்சு. இப்போதைக்கு எனக்கு ஒரே ஒரு ஆசைதான் இருக்கு இந்து. அவர் முகத்த ஒருவாட்டி பாத்தா போதும். அப்றம் என் உயிர் போனா கூட பரவால்ல. ஆனா அவரப் பாக்காம என் உயிர் போய்ட்டா இந்த கட்ட வேகாது.”

“ஐயோ! என்ன நந்து இது? இப்டியெல்லாம் உளறாதீங்க. எல்லாம் சரியாய்டும். பேசாம கண்ணமூடி தூங்குங்க.” என்று கடிந்து கூறி அவளை பேச விடாமல் செய்தாள். நந்தினியும் கண்ணை மூடிக் கொண்டாள். ஆனால் தூங்கவில்லை.

இந்துமதிக்கு மனம் ரணமாகிப் போனது. நாம் ஏதோ நல்லது என்று எண்ணி செய்த ஒரு காரியம் தவறாக போய்விட்டதே என்று எண்ணி எண்ணி வருந்தினாள்!

அங்கே பொன்னம்மாள் அபியைப் பற்றி அறிந்ததிலிருந்து தன் ஆசையில் மண் விழப்போகிறது நன்றாகக் புரிந்து கொண்டாள்! அதனால் அபி வீடு வரும் முன் ஹரியிடம் அபியைப் பற்றி ஒன்றுக்கு இரண்டாகக் கூறி தன் வேலைக்கு பங்கம் வராமல் காத்துக் கொள்ள பெரிதாக திட்டம் தீட்டினாள்.




தொடரும்....