8.
வளவளவென்று தன்னைப்பற்றி எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, அடக்க ஒடுக்கமாக சமத்துப் பெண்ணாக உள்ளே போனாள் அபி!
அபியின் பேச்சைக் கேட்டுவிட்டு திகைத்துப் போய் கிட்டத்தட்ட "ஙே" வென்று விழித்துக் கொண்டிருந்த மகனைப் பார்த்ததும் நந்தினியால் சிரிப்பை அடக்க முடியவில்லை! மெதுவாக எழுந்து அபி இருந்த அறைக்குள் நுழைந்து கடகடவென சிரித்தாள்!
அபியும் கூடச் சேர்ந்து சிரித்துவிட்டு, பின்னர் மன்னிப்பும் கேட்டாள்!
"சாரி ஆன்ட்டி.... அவர ஏமாத்தணும்னு எண்ணமில்ல... ஆனா... அவர் நெனக்கிறது தப்புன்னு அவருக்கு புரிய வெக்க வேற எந்த வழியும் நம்மகிட்ட இல்லல்ல... அதான்... இப்டி நடந்துக்க வேண்டியதாப் போச்சு!" என்றாள் உண்மையான வருத்தத்துடன்!
"எனக்கும் புரியுதும்மா.... அதனாலதானே நானும் உன்னோட சேந்து இப்டி வேஷம் போட்டுகிட்டிருக்கேன்.... ஆனா.. நீ செம்ம மா.... உங்க ஊர் கிராமத்து தமிழ்ல என்னமா பேசற...."
"நெஜமாவே எங்கப்பத்தா இப்டிதான் பேசுவாங்க அத்த... இப்பயும் ஊருக்கு போனா என்ன இது மாதிரிதான் கண்டாங்கி கட்டிக்க சொல்லி நச்சரிப்பாங்க... சில முறை அவங்க ஆசைக்காக கட்டுவேன்... பல முறை போ கெழவீன்னு சொல்லிடுவேன்...." என்று சொல்லி சிரித்தாள்!
"ரொம்ப அழகா இருக்கும்மா...."
"ஆனா அத்த.... உங்கள நம்பிதான் இந்த கிணத்தில குதிச்சிருக்கேன்.... நீங்கதான் என்ன காப்பாத்தணும்...."
"எனக்குத் தெரியாதா அபிம்மா.... நீ எதுக்கும் கவலப்படாத..... நா இருக்கேன் உனக்கு.... ஹரிக்கு உண்மைய சொல்லி அவனுக்கு புரிய வெக்க வேண்டியது என் பொறுப்பு!" என்று நந்தி உறுதி கூறினாள்!
பெண் பார்த்த அன்றே நிச்சயம் செய்து கொண்டனர். அன்றிலிருந்து ஒரு மாதம் கழித்து திருமண நாள் குறிக்கப்பட்டது.
நந்தினி மகனுடைய திருமணத்துக்கு எப்படியாவது தன் கணவனை வரவழைத்துவிட வேண்டும் என்று முனைப்போடு தன் தேடுதலைத் தொடர்ந்தாள். ஆனால் அவளால் அவர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஹரியும் தன் பங்குக்கு தேடினான். அவனாலும் அவரைக் கண்டு பிடிக்க முடியவில்லை.
ஹரி தன் நண்பர்களுக்கு அழைப்பு விடுத்தான். ரகு வாழ்த்து தெரிவித்துவிட்டு பயிற்சி முடிந்து வர ஆறேழு மாதமாகும். அதனால் உன் சீமந்தத்திற்கு வருகிறேன் என்று கூறி ஹரியை கலாய்த்தான். டேவிட்டும் ரூபியும் கட்டாயம் வருவதாகக் கூறினார்கள். ஆனால் அவர்களால் வர முடியவில்லை.
ஆயிற்று! அப்படி இப்படி என்று ஆயிரம் நிபந்தனைகளைப் போட்டு ஹரிஹரன் அபிநயா திருமணம் வடபழனி முருகன் கோவிலில் எளிமையாக நடந்து முடிந்தது! கையோடு திருமணத்தை பதிவும் செய்தனர்!
சாருமதியின் கணவன் கோபாலன் அபியின் துணிச்சலைக் கண்டு வெகுவாய் பாராட்டினான்!
"கிரேட் அபி! ஆல் தி பெஸ்ட்! நாங்க எல்லாரும் உனக்கு பக்க பலமா இருக்கோம்! கீப் ராக்கிங் மை கேர்ள்!" என்று தைரியம் கொடுத்தான்!
"தேங்க்ஸ் சித்தப்பா!" என்று அபி அவனுக்கு நன்றி சொன்னாள்.
சாருமதியின் மகன் அபிஷேக்கிற்கு கடைசி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறுவதால் அவனால் அபியின் திருமணத்துக்கு வர முடியவில்லை!
திருமணத்துக்கு அபியின் உறவினர்கள் என்று யாரையும் அழைக்கவில்லை!
காரணம், அபி படித்தவள்! அவள் படித்த படிப்புக்கும் இப்போது பார்க்கும் வேலைக்கும் அவளுடைய தற்போதைய நிலையும் என்ன எனத் தெரிந்தவர்கள், இப்படி ஒரு திருமணத்தை ஒப்புக் கொள்வார்களா என்ன? மாப்பிள்ளையைப் பற்றியும் அவருடைய குடும்பத்தைப் பற்றியும் தவறாகப் பேச மாட்டார்களா? அதனாலேயே பாண்டியன் தன் அன்னையைத் தவிர வேறு யாரிடமும் இதைப்பற்றி மூச்சு விடவில்லை! இந்துமதிக்கும் பெற்றோர் இல்லை! தன் தங்கை சாருமதியைத் தவிர வேறு உடன் பிறந்தவர்கள் யாரும் கிடையாது! எனவே அவளும் வேறு யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை!
ஹரியின் தவறான எண்ணத்தை உடைத்து அவன் நினைப்பது தவறு என்று அவனுக்குப் புரிய வைத்துவிட்டு அவனிடம் எல்லா உண்மைகளையும் சொன்ன பின்பு அனைவரையும் அழைத்து திருமண வரவேற்பு வைத்து விடவேண்டும் என்று நந்தினியும் பாண்டியனும் உடன்படிக்கை செய்து கொண்டார்கள்!
இதற்கு அவர்கள் வைத்துக்கொண்ட கால அவகாசம் ஒரு மாதம்! ஒரு மாதத்திற்குள்ளாக ஹரிக்கு அபியைப் பற்றிய உண்மைகளை சொல்லிவிட வேண்டும் என்று நந்தினியும் ஒப்புக் கொண்டாள்!
ஆனால் நந்தினியல்ல... அபியே தன் வாயால் ஹரியிடம் உண்மையை கூறப் போகிறாள் என்று இப்போது யாருக்கும் தெரியாதல்லவா.....
திருமண வைபவங்கள் முடிந்ததும் பாண்டியன் அனைவருக்கும் அழைத்துக் கொண்டு ஐந்து நட்சத்திர உணவகத்தில் விருந்து வைத்தார்! விருந்து முடிந்ததும் மணமக்களை முறைப்படி நந்தினியின் வீட்டில் கொண்டு விட்டனர்.
பொன்னம்மாவும் ஆனந்தியும் ஆரத்தி எடுத்தனர். வலது காலெடுத்து வைத்து அபி தன் கணவன் வீட்டுக்குள் நுழைந்தாள். அவளை சுவாமி விளக்கேற்றச் சொன்னாள் நந்தினி. அபியும் விளக்கேற்றினாள். மணமக்கள் இருவரும் சுவாமி நமஸ்காரம் செய்துவிட்டு பெற்றவர்களையும் பெரியவர்களையும் நமஸ்கரித்தனர். பின்னர் இருவருக்கும் பாலும் பழமும் தந்து உபசரித்தனர்.
பாண்டியன் அபியைத் தனியாக அழைத்து,
"அபிம்மா.... எதுக்கும் கவலப்படாத..... நீ எது செஞ்சாலும் சரியாதான் செய்வ.... அந்த நம்பிக்கை எனக்கு எப்பவுமே இருக்கு.... வெற்றி பெற வாழ்த்துக்கள்...." என்று பாண்டியன் உணர்ச்சிகரமாகக் கூற, இந்துமதியும் கண்ணீருடன் மகளை ஆறத்தழுவி முத்தமிட்டாள்!
"யா டேட்! ஐல் டேக் கேர்! நோ வொரீஸ்..." என்ற அபி, அந்தப் பக்கமாக வந்த ஹரியைப் பார்த்துவிட்டு,
ஓவென்று பெருங்குரலில் அழுதாள்....
"என்ன அப்பச்சீ.... என்னிய இங்க தனியா வுட்டுபுட்டு நீங்க போறேங்கறீங்க....." என்று ஆரம்பித்து அழுகையுடன் ராகம் பாட, ஹரி ஒரு காத தூரம் ஓடிப் போனான்!
"மை காட்! இவ அழுவறது யார் காதிலயாவது விழுந்திச்சின்னா.... நம்மள பத்தி தப்பா நெனக்கப் போறாங்க...." என்று நினைத்தான்!
ஹரி அங்கிருந்து ஓடிப் போனதைப் பார்த்துவிட்டு,
"இல்லம்மா.... அவர் உன்கிட்டேந்து ஓடிப் போகக் கூடாது! நீதான் எனக்கு எல்லாமும்... அப்டீன்னு உன்கிட்ட வரணும்.... ஞாபகம் வெச்சிக்க...." என்றார் பாண்டியன்!
"புரியுதுப்பா! நா பாத்துக்கறேன்!" என்று கூறினாள்.
இவர்கள் பேசுவதைப் பார்த்து விட்டு ஹரியும் முக்கிய வேலையென்று தன்னுடைய அறைக்குச் சென்று தன் மடிக்கணிணியை உயிர்ப்பித்து தன் அலுவலக வேலையில் மூழ்கி விட்டான்!
நந்தினி அபியை வீட்டில் வேலை செய்யும் முத்துவுக்கும் அவன் மனைவி பொன்னம்மாவுக்கும் முறைப்படி அறிமுகம் செய்து வைக்க, முத்து சந்தோஷமாக, வணக்கம் சொல்லிவிட்டு போய்விட்டான்!
ஆனால் பொன்னம்மா உள்ளுக்குள் பொருமத் தொடங்கினாள்!
ம்க்கும்.... தேடித்தடி பொண்ணு பாத்தாங்க.... பாக்க அயகாத்தான் கீரா... ஆனா... படிக்கலியாமே... நானே அஞ்சாங்கிளாஸ் பாஸ் பண்ணி கிரேன்.... இது ஆறாவது பெயிலாமே..... இப்டி படிக்காத பொண்ணுதான் வோணுமின்னு என்னாண்ட சொல்லிருந்தா... எங்கண்ண மவ அஞ்சலய பேசி முடிச்சிருக்கலாம்... அது நாலாவது பாஸ்..... எனக்கும் இந்த வீட்ல ஒரு மருவாதி கெடச்சிருக்கும்....
இப்டி நினைத்து உள்ளுக்குள் பொருமிக் கொண்டிருந்தாள்!
நந்தினி பொன்னம்மாவை எதற்கோ அழைக்க, அவள் தன் பாட்டில் எதையோ யோசித்துக் கொண்டிருக்க, அபி சென்று பொன்னம்மாவை அழைத்தாள்!
"உங்கள அத்த கூப்பட்றாங்க!"
"ம்...ம்... வரேன்னு சொல்லு...." என்று கூறிவிட்டு முகம் திருப்பிக் கொண்டாள் பொன்னம்மா!
இதைக் கண்ட அபிக்கு ஒரு மாதிரியாகிவிட, அதே நேரத்தில் அங்கு வந்த நந்தினி, பொன்னம்மாவை அதட்டினாள்!
"பொன்னம்மா.... என்ன மரியாதையில்லாம.... அவ யார்னு தெரியுமா....." என்று நந்தினி ஆரம்பிக்க,
சட்டென்று அபி, தன் மாமியாரின் கையைப் பிடித்து தடுத்தாள்!
"அத்த.... விடுங்க...." என்று அழுத்தமாய்க் கூறி கண்களால் சமாதானம் செய்ய,
"ம்க்கும்... எந்த வூட்ல நடக்கும் இந்த அநியாயம்.... நீங்க படிச்சவங்க... காலேஜி வாத்தியாரம்மா.... ஆனா உங்கள இது... படிக்காத ஒரு டுபாக்கூரு.... பேசாதன்னு தடுக்குது.... நீங்களும் கம்முனுருக்கீங்க..... நல்லாத்தான் இருக்கு...." என்று கூறி கழுத்தை வெட்டிக் கொண்டாள்!
நந்தினிக்கு பயங்கரமாய் கோபம் வந்தது! பொன்னம்மாவின் சத்தமான பேச்சைக் கேட்டு எழுந்து வந்த ஹரிக்கும் கோபமாய் வந்தது! இதைக் கண்ட அபி, தன் கண்ணசைவால் நந்தினியை அமைதிப் படுத்திவிட்டு,
"அடியாத்தீ.... இதென்ன வம்பாப் போச்சு... நா படிச்சா உங்களுக்கென்ன... படிக்காட்டி உங்களுக்கென்னம்மா.... நா இந்த வீட்டு மருமவ.... இனிமே என் பேச்சயும் நீங்க கேக்கோணும்.... என்ன புரியுதா...." என்றாள் கோபமாக! கூடவே தன் மாமியாரைப் பார்த்து,
"அத்த.... அதான் நா வந்துட்டேன்ல... இனிமே இவங்க எதுக்கு இங்க... இனிமே இந்த வீட்டு வேலையெல்லாம் நாந்தேன் செய்வேன்... இந்தம்மாவ இப்பவே கணக்கு முடிச்சி அனுப்பி போடுங்க....." என்று அதிரடியாக உத்தரவும் இட,
பொன்னம்மா நந்தினியிடம்,
"ஐயோ! யம்மா... நீங்க பாட்டுக்கு புதுசா வந்த மருமக பேச்ச கேட்டுகிட்டு என் சீட்ட கிளிச்சிறாதீங்க.... இந்த வேலய நம்பிதான் எம் பையன படிக்க வெச்சிகிட்டிருக்கேன்...." என்று விட்டு, அபியைப் பார்த்து,
"யம்மா..... புத்சா வந்திருக்கற சின்னம்மா.... என் சீட்ட கிளிச்சிறாதம்மா... நா பாட்டுக்கு என் வேலய பாக்கறேன்.... நீ படிச்சிருந்த எனுக்கென்ன... படிக்கலன்னா எனுக்கென்ன...." என்று கூறிக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தாள்!
பிரச்சனை பெரிதாக ஆகவில்லை என்றுணர்ந்து ஹரியும் தன் வேலையை கவனிக்கச் சென்றுவிட, நந்தினிக்கு மிகவும் வருத்தமாக இருந்தது!
"சாரி அபி! இந்த பொன்னம்மா இப்டி பேசுவான்னு நா எதிர்பாக்கல.... வெரி சாரி!" என்றாள்!
"இட்ஸ் ஓகே அத்த... விடுங்க!"
"இல்லம்மா... நா இப்பவே நீ யாரு, என்னன்னு இந்த பொன்னம்மாகிட்ட சொல்லிடறேன்...."
"வேணாம் அத்த.... இப்ப வேணாம்.... அவர் கிட்ட சொல்ற வரைக்கும் அமைதியா இருங்க...." என்றாள் அபி!
"ஆனா... அபிம்மா... இவ உன்கிட்ட அலட்சியமா நடந்துக்கறாளே...."
"நடந்துக்கட்டும் அத்த! நாளைக்கு உண்மை தெரியும் போது, நிறை குடம் தளும்பாதுன்னு உங்க புள்ள புரிஞ்சிப்பார்ல..." என்றாள் புன்னகையுடன்!
நந்தினி பாண்டியனிடமும் இந்துமதியிடமும் மன்னிப்புக் கேட்க,
"சம்மந்தி! இதெல்லாத்தையும் யோசிச்சிதான் அபி இந்த திட்டத்த போட்டிருக்கா! நீங்க இதுக்கெல்லாம் கலங்காதீங்க! எல்லாம் சீக்கிரம் சரியாய்டும்!" என்று அவர்கள் இருவரும் கூற, நந்தினிக்கு ஆறுதலாய் இருந்தது!
சிறிது நேரம் கழித்து நந்தினி மணமக்கள் இருவரையும் கோவிலுக்குச் சென்று வருமாறு கூற,
"ம்மாம்! அதான் கல்யாணம் கோவில்லதானே நடந்துச்சி.... போதும்மா...." என்று விட்டு அவன் நகர, அபி விடுவாளா என்ன?
"அடியாத்தீ.... கண்ணாலம் முடிஞ்சி... மொத மொதலா அத்த கோவிலுக்கு போகோணுமின்னு சொன்னாக்க..... அத மாட்டேம்பிகளா..... வாங்க மாமா.... கோவிலுக்கு போயிட்டு வருவோம்..." என்று இழுத்துக் கூற,
எது காதில் விழுந்ததோ இல்லையோ.... அவள், "மாமா" என்று விளித்தது அவன் காதில் தெளிவாய் விழுந்தது!
"என்ன... மாமாவா..... மாமான்னா கூப்பிட்ட...." என்று அவன் கேட்க,
அவள் வெட்கப்படுகிறேன் பேர்வழி என்று தலையைக் குனிந்து கொண்டு தரையில் காலால் கோலமிட்டபடி சிரித்துக் கொண்டே,
"ஆமா மாமா.... மாமாவ மாமான்னு தானே கூப்பிடணும்..... என்ன நாஞ் சொல்றது....." என்று கொஞ்சலாய்க் கேட்க,
ஹரி தலையில் அடித்துக் கொண்டான்!
"இங்க பாரு... இந்த மாமான்னு கூப்பிடற வேலயெல்லாம் வேணாம்! புரிஞ்சிதா?"
"ம்.... சரிங்க மச்சான்!" என்று சூம்பிப் போன முகத்துடன் அபி வருத்தமாகக் கூறினாள்!
"மச்சான்லாம் கூப்பிடாத...." கடுகடுவென்று கூறினான்.
"ஹாங்... மாமாவும் வேணாம்... மச்சானும் வேணாமா...."
"ஐயோ.... மாமாவும் வேணாம்... மச்சானும் வேணாம்....." ஹரி கடுப்பாகக் கூறினான்!
"ம்... கட்டுன புருசன வேற எப்புடி கூப்பிடறதாம்...." என்று அவள் படபடவெனக் கேட்க,
"ஹரின்னு பேர் சொல்லி அழகா கூப்பிடு..."
"ஆத்தீ.... புருசன பேர் சொல்லி கூப்பிடறதாமா.... ஐயோ... மகமாயீ..." என்று கூறி காலையில் ஹரி தன் கழுத்தில் கட்டிய தாலியை எடுத்துக் கண்ணில் ஒற்றிக் கொள்ள ஹரி கடுப்பின் எல்லைக்கே போனான்!
அவளுடைய கையைப் பிடித்து தரதரவென இழுத்துக் கொண்டு அருகிலிருந்த அறைக்குள் போனான்.
"ஐயோ... என்ன செய்யறீக.... மாமா.... ஐயோ அத்த.... இங்கன பாருங்க..... மாமா எங் கையப் புடிச்சி இளுத்துகிட்டு போறாரு..... விடுங்க மாமா....." என்று பெருங்குரலெடுத்து அவள் கத்த, நந்தினிக்கு இவள் செய்வது அத்தனையும் சிரிப்பாக வந்தது என்றால் ஹரிக்கு கடுப்பாக கோபம் கோபமாக வந்தது!
அவளை இழுத்துப் போய் அருகிலிருந்த அறைக்குள் நுழைந்தவன் அறையின் கதவை ஓங்கிச் சாத்தினான்! அவன் அதை அறைந்து மூடும் சத்தத்திலிருந்தே அவனுடைய கோபத்தின் அளவை அபி புரிந்து கொண்டாள்!
அங்கிருந்த நாற்காலியில் அவளை உட்கார வைத்துவிட்டு, அவளைப் பார்த்து கூறினான்!
"இங்க பாரு அபி!"
"என்ன மாமா செய்யப் போறீக...." என்று பயந்தவளைப் போல அவள் கேட்டாள்!
"ம்ச்... பயப்படாத... நா சொல்றத குறுக்க பேசாம கேக்கணும்.... சரியா?"
உடனே அவள் சாதாரணமாக முகத்தை வைத்துக் கொண்டு,
"ஆங்..... அதெப்படி... புரீலன்னா நடூல கேப்பேன்...."
"நீ நடுல பேசாம இருந்தாலே நா சொல்றது புரியும்!"
"ஆத்தீ.... என்ன இப்டி சொல்லிப் போட்டீக...." என்று அவள் ஆரம்பிக்க,
"ஷ்.... வாய் மேல விரல் வை.... ச்சும்மாயிரு.... பேசாத..... ம்...." என்று அவளை எல். கே. ஜி குழந்தையை மிரட்டுவது போல மிரட்ட, அவளும் தன் வாய் மேல் ஒற்றை விரல் வைத்து அவனுடைய மிரட்டலுக்குப் பணிவது போல பாசாங்கு செய்தாள்!
அவள் தனக்குப் பணிந்து அமைதியாய் உட்கார்ந்ததே பெரிதாக ஏதோ சாதித்ததைப் போல இருந்தது அவனுக்கு!
ஹப்பாடா! என்று பெருமூச்சு விட்டுக் கொண்டவனைப் பார்க்க அபிக்கு சிரிப்பாய் இருந்தது!
அடடா.... இதுக்கே களைச்சிப் போனா எப்டி ஹீரோ? இன்னும் என் முழு ஆட்டத்த நீங்க பாக்கலயே.... என்று அபி தன் மனதில் நினைத்துக் கொண்டாள்!
"இங்க பாரு அபி.... நா சொல்றத கவனமா கேளு...."
"சொல்லுங்க மாமா..."
"உன்ன..... மொதல்ல மாமான்னு கூப்பிடறத நிறுத்து...." என்று கடுகடுத்தான்.
"சரிங்க மாமா...."
"ஆ....." அவளுடைய குரல் வளையை நெறிப்பது போல தன் இரு கைகளையும் அவள் கழுத்தருகே கொண்டு வந்தான்.
"ஆ... அயியோ... கொன்னு போடாதீங்கோ மாமா... இனிமே ஒங்கள மாமான்னு கூப்பிட மாட்டேன் மாமா.... சரிங்களா மாமா..." என்று நூறு மாமா போட்டு அவள் பேச....
"கடவுளே..... போ... போய்த் தொல... அப்டியே கூப்ட்டுத் தொல..." என்று கோபமாகச் சொன்னான்!
"சரீங்க மாமா..." என்று இப்போது அவள் கொஞ்சலாகக் கூறினாள்.
"நீ மாமான்னு கூப்பிட்டுக்கோ! ஆனா, இந்த பாட்டி மாதிரி புடவ கட்டக் கூடாது.... எங்கம்மா மாதரி, உங்கம்மா மாதிரி சாதாரணமாதான் புடவ கட்டணும்! புரியுதா?"
"சரீங்க மாமா!"
"அப்றம் இப்டி ஆத்தீ... போத்தீன்னு... கூப்பிட்டு... கத்தி கத்தி பேசக் கூடாது! புரியுதா?"
"ம்... சரீங்க மாமா!" உடன் பாடில்லாதது போல சரி சொன்னாள்!
"எதுனாலும் என்னையோ அம்மாவையோ கேக்காம செய்யக் கூடாது! புரியுதா?"
"என்ன மாமா.... எதுனாலும்னா..... எனுக்கு பசிச்சிதுன்னா கூட உங்கள கேட்டுகிட்டுதான் சாப்பிடணுமா?"
"அட ஆண்டவா? என்ன ஏன் இப்டி சோதிக்கற...." என்று தலையை உயர்த்தி மேலே பார்த்து கேட்டு கொண்டான்! பின்னர் அவளைப் பார்த்து கூறினான்!
"அது இல்ல அபி! உனக்குத் தெரியாத விஷயம் எதாவதுன்னா... வீட்ல யார்னா வந்தா... அவங்ககிட்ட என்ன பேசணும்.... எதாவது முக்கியமான பேப்பர் கீழ கெடந்தா... அத என்ன செய்யணும்னு.... அது மாதிரி .. அத எங்கள கேக்காம செய்யாதன்னு சொல்றேன்! புரியுதா?"
"ம்... சரீங்க மாமா!"
அவன் அடுத்ததாக எதோ பேச ஆரம்பிப்பதற்குள் நந்தினி அங்கே வந்தாள்!
"ஹரி! கோவிலுக்கு போகலன்னா பரவால்ல! சாப்பிட வா! நீயும் வாம்மா!" என்று அழைத்தாள்.
ம்... இதோ வரேம்மா..." என்று கூறிவிட்டு ஹரி எழுந்து வந்தான்! அவன் பின்னாலேயே அபியும் வந்தாள்!
மணமக்கள் இருவரும் சாப்பிட்ட பின் மற்ற எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர். அபி அவர்கள் அனைவருக்கும் பரிமாற ஹரி வழக்கம் போல தன்னுடைய மடிக்கணிணியில் மூழ்கிவிட்டான்.
பெரியவர்கள் எல்லாரும் சேர்ந்து சம்பிரதாயப்படி மணமக்களின் முதலிரவுக்குத் தயார் செய்தனர்! ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர்!
இன்னிக்கு நீ காலி ஹீரோ! என்று அபியும், இருடீ உன்ன எப்டி ஆஃப் பண்ணனும்னு எனக்குத் தெரியும் என்று ஹரியும் நினைத்தபடி தயாராகினர்!
அபிகிட்ட இவன் என்ன பாடுபடப் போறானோ என்று நந்தினியும், மாப்ளகிட்ட அபி அடங்கிப் போவாளா இல்லையா என்று அபியின் பெற்றோரும் நினைத்தனர்!
எல்லாரையும் விட வெகு முக்கியமாக, இந்தப் பொண்ணுக்கு வந்த வாழ்வப் பாரேன்! ம்க்கும்..... என்று பொன்னம்மா பொருமிக் கொண்டிருந்தாள்!
யார் என்ன நினைத்தால் என்ன? என்று நேரமானது தன் பாட்டில் ஓடிக் கொண்டிருந்தது!
தொடரும்.....