• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

எனது சொந்தம் நீ - 9

Annapurani

New member
Mar 27, 2025
25
0
3
9.



சண்டாளி ஒன் அசத்துற‌ அழகுல லேசாகி
என் அந்திப்பகல் அத்தனையும் லூசாகி
பய கெடக்குறேன் தரையில பீசாகி

சண்டாளி ஒன் சிரிப்புல பற‌க்குறேன் தூசாகி
நா செவத்துல விட்டெறிஞ்ச காசாகி
கொடி புடிக்குறேன் நெனப்புல மாசாகி

சண்டாளி....



ஹரி தன் காரைச் செலுத்துகையில் அவனுடைய கை பட்டு பாடத் தொடங்கிய எஃப். எம் வானொலியிலிருந்து கேட்ட இந்தப் புதிய பாடல் அவன் கவனத்தை வெகுவாக ஈர்க்க, வண்டியை ஓரங்கட்டிவிட்டு பாடலை முழுதாகக் கேட்டான்! அவனுக்காகவே எழுதியது போல இருந்த பாடலைக் கேட்கக் கேட்க, அவன் வெட்கப் புன்னகையுடன் முகம் சிவந்து போனான்!

பாடலின் ஆரம்ப வார்த்தையே அவனுக்கு அபியை நினைவூட்டியது!
என்ன பொண்ணுடா இவ! என்று அவன் நினைத்து நினைத்து உருகினான்!

பின்னே? அவன்தான் ஒரு வாரமாக தன் அழகு தேவதையின் அன்புப் பிடியில் சிக்கி சொக்கிக் கொண்டிருக்கிறானே! அவள் நினைவு வராமல் போகுமா என்ன? முதலிரவிலிருந்து இந்த நொடி வரை நடந்தெல்லாம் அவன் முன்னே காட்சியாய் விரிந்தது!

அழகான அலங்காரத்தில் அபியைத் தயார் செய்து முதலிரவுக்கு அனுப்பி வைத்தனர்.

அவள் வரவை கொஞ்சம் கிலியுடனும் நிறைய ஆவலுடனும் எதிர் நோக்கி ஹரி தன்னுடைய அறையில் அமர்ந்திருந்தான்!

அவள் உள்ளே வந்ததும் வெளியிலிருந்து கதவடைக்க, அபி பயந்து போய்,

"ஐயியோ... என்ன கதவடைச்சிட்டாங்க.... ஆரு உள்ள.... ஆராவது இருக்கீகளா..." என்று பயத்துடன் வினவியபடி மலங்க மலங்க விழிப்பது போல பாவனை செய்ய,

ஆரம்பிச்சுட்டாடா!? என்று தனக்குள் அலுத்தபடியே ஹரி அவள் முன் வந்தான்!

"ஹை! மாமா! நீங்க இங்கனதேன் இருக்கீகளா? நா பயந்தே புட்டேன்ய்!" என்று இழுத்தவளின் கையைப் பிடித்து மெதுவாய் அழைத்துச் சென்றான்!

"வா.. வா... பயப்படாத.... நா இங்கதான் இருக்கேன்! இது நம்ம ரூம்தான்!" என்று கூறி அவளை தன் மெத்தையின் மேல் அமர வைத்து தானும் அவளருகில் அமர்ந்தான்!

அவர்கள் அமர்ந்ததும் நன்றாக அமுங்கிக் கொடுத்த பஞ்சு மெத்தை தனக்கு பழக்கமில்லாதது போல அவள் நடித்து,

"ஹை... ஹை... மாமா... உங்க மெத்த ரெம்ப நல்லாயிருக்கு.... ஹை.... ஹை...." என்று உட்கார்ந்து உட்கார்ந்து குதித்து தன் மகிழ்ச்சியை அவள் வெளிப்படுத்தி சிரித்தாள்!

அவனுக்கு இவள் செய்வது சிரிப்பாயிருந்தது! ஆனாலும் அவளைப் பார்த்து சிரித்தால் கேலியாகச் சிரிப்பது போலாகிவிடுமே என்று நினைத்துக் கொண்டான்!

"சரீ... சரீ.... போதும்... கம்முன்னு உக்காரு...." என்று அவளுடைய தோளைப் பிடித்து அமர வைத்துவிட்டு அவளைக் கனிவுடன் பார்த்து அவள் முகத்தருகே முத்தமிடுவது போலச் செல்ல, அபி உள்ளுக்குள் உருகத் தொடங்கினாள்! ஆனால் இது உருகும் நேரமல்லவே! என்ன மன்னிச்சிடு ஹீரோ! என்று நினைத்தபடியே, அவனைத் தள்ளிவிட்டாள்!

"ஹாங்.... என்னா செய்யறீங்க..... மாமா.... ஐயியோ...." என்று அவள் பெருங் குரலெடுத்து கத்தத் தொடங்க,

"கெட்டுது போ!" என்று அவன் வாய் விட்டு முணுமுணுத்தான்! அவள் தனக்குள் சிரித்துக் கொண்டாள்!

"நீங்க என்னா செய்ய வந்தீக...... இதெல்லா எங்கிட்ட வேணா... ஆமா சொல்லிப்புட்டேன்.... ஆருன்னு நெனச்சீக.... மாமான்னு மருவாதி குடுத்தா..... இந்த மாதிரி மேல கை வெக்கறீகளே..... படிச்சவக பண்ற காரியமா இது...." என்று அடுத்தடுத்து அவள் அடுக்கிக் கொண்டே பிலாக்கணம் பாட, அவன் தலையில் அடித்துக் கொண்டான்!

அவள் தொடர்ந்தாள்!

"அப்பச்சீ.... இங்கன வாங்க..... மாமா என்னிய....." என்று இன்னும் சத்தமாக அவள் கத்த, அவசரமாக அவளுடைய வாயைத் தன் கையால் பொத்தினான்! பட்டென்று அவனுடைய கையில் ஒன்று போட்டாள்!

"ஸ்.... ஆ.... ராட்சசி....." என்று கத்தினான்! அவனுடைய பொறுமை அவனிடமிரு்து விடை பெறத் தொடங்கியது!

"ஏய்! கத்தாத! வாய் மூடு.... ஷ்.... ம்.... வாய் மூடு...." என்று அன்று மாலை மிரட்டியது போலவே இப்போதும் மிரட்டினான்!

அவளும் அவனுக்கு அடங்குவது போல பாசாங்கு செய்து ஒற்றை விரலால் தன் வாயைப் பொத்திக் கொண்டாள்!

"அங்க போய் உக்காரு.... ம்.... போ.... போய் உக்காரு....." என்றான்.

அவளும் சென்று அமர்ந்து கொண்டு ஏதோ பேச வாயைத் திறக்க, மீண்டும் மிரட்டினான்!

"ம்.... உன்ன பேசாதன்னு சொன்னேன்.... சத்தமே வரக் கூடாது.... ம்...."

அவள் அவன் கூறியது போலவே அமைதியாய் அமர,

அவன் தன் தலையை அழுந்த கோதிக் கொண்டு ஒரு பெருமூச்சு விட்டான்! அபிக்கு சிரிப்பாய் வந்தது!

"ஷப்பா.... இப்பவே கண்ணக் கட்டுதே..." என்று புலம்பினான்!

"இங்க பார்! சத்தமே போடக் கூடாது! புரியுதா! கம்முனு இரு!" என்று கூறிக் கொண்டே அவளருகில் அமர, அவனுடைய கைப்பேசி அலறியது!

ஆ..... என்று கடுப்பாகிக் கத்திக் கொண்டே அதை உயிர்ப்பித்து காதுக்குக் கொடுக்க,

"ம்...."

"...."

"ம்..."

"...."

"என்ன?

"...."

"எப்ப?"

"......"

"அதுக்கு..."

"......"

"இல்லல்ல..... இப்டி நடக்கவே கூடாது...." என்று கராராகக் கூறினான்!

"....."

"சரி... சரி.... சர்ரீஈஈஈஈஈ....." என்று கத்திவிட்டு தன் கைப்பேசி இணைப்பை துண்டித்து அதை சோபாவில் தூக்கிப் போட்டான்!

"டேம் இட்.... என்னப்பத்தி என்ன நெனச்சிகிட்டு இருக்கானுங்க..... கேணப்பயன்னா.... " என்று ஆரம்பித்து கெட்ட வார்த்தை கொண்டு ஆங்கிலத்தில் திட்டினான். அவனுக்கு கோபம் கோபமாய் வந்தது! அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது!

அபி அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்! அவன் கூறிக் கொண்டிருக்கும் சொற்களுக்கு முழுதாய் அர்த்தம் புரிய, அவளால் அதைக் கேட்கவே முடியவில்லை! அவ்வளவு நாராசமான, காதில் கேட்கக் கூடாத சொற்கள்!

ப்பா! இந்த மனுஷனுக்கு கோவம் வந்தா இப்டில்லாம் திட்டுவாரா? என்று நினைத்து, அதற்கு மேல் கேட்க முடியாதவளாக தன் காதைப் பொத்திக் கொண்டாள்!

தன் கைப்பேசியில் கேட்ட செய்திக்காக யாரைத் திட்ட வேண்டுமோ அவர்களை நன்றாகத் திட்டிவிட்டு அபியின் புறம் அவன் திரும்பினான்!

அவள் தன் காதுகளைப் பொத்திக் கொண்டு பயத்துடன் அமர்ந்திருப்பது கண்டு, ஐயியோ... இவளத் திட்றேன்னு பயந்துட்டாளா? என்று நினைத்து அவளருகில் சென்றான்.

"ஹே... அபி! உன்னத் திட்டல.... பயப்படாத...." என்று கூறி அவள் கைகளைப் பிடித்தான்!

"தெரியும்! நீங்க சொன்ன வார்த்தைகள கேக்க முடியாமதான் காதப் பொத்திகிட்டேன்!" என்று அவள் அவசரப்பட்டு உளறிவிட்டாள்!

ஐயோ... அவசரப்பட்டியேடீ.... என்று தனக்குத்தானே நினைத்தபடி அவனைப் பார்க்க,

அவளிடம் சமாதானம் செய்ய வந்தாலும் அவனுடைய மனம் முழுதும் கைப்பேசியில் வந்த செய்தியில் நிலைத்திருந்ததால், அவள் தப்பித்தே விட்டாள்! (அடப் போப்பா! உனக்கு அலர்ட்னஸ் பத்தாது!)

ஹப்பா... தப்பிச்சிட்டடீ..... என்று ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்! பின்னர் அவனைப் பார்த்துக் கனிவாகக் கேட்டாள்!

"என்னா மாமா? ஏன் ஒரு மாதிரியாகிட்டீக..... என்னா சொன்னாங்க போன்ல.... ஆருக்காச்சும் நோக்காடா...." என்று அவள் அடுத்தடுத்து கேள்விகளைத் தொடுக்க, அவன் கடுப்பாகி,

"வில் யூ ப்ளீஸ் ஷட் அப்!" என்று அவளைப் பார்த்துக் கத்தினான்!

அவனுடைய கத்தலில் ஒரு நிமிடம் அவள் மிரண்டுதான் போனாள்! ஆனாலும்,

ஓ... என்னையே கத்தறீங்களா.... இருங்க ஹீரோ... என்று நினைத்து,

"என்னங்க மாமா....." என்று அவள் ஆரம்பிக்க,

அவன் தன் மொத்தக் கோபத்தையும் அவள் மேல் காட்டும் விதமாகத் தன் கையை வேகமாக ஓங்கினான்!

ஆனால் தனக்கு முன்னால் அமர்ந்திருப்பவள், கராத்தே போன்ற தற்காப்புக் கலைகளில் கைதேர்ந்து பல வண்ணப் பட்டிகளை வாங்கிக் குவித்தவள் என்று அவனுக்குத்தான் தெரியாதே!

ஓங்கிய கையை அவளுடைய கன்னத்தில் இறக்கும் முன்பாக அவளுடைய கை, அதைத் தடுத்திருந்தது!

ஒரு நொடி அரண்டுதான் போனான்!

யப்பா..... கராத்தே எதுனா படிச்சிருப்பாளா..... ச்சே.... ச்சே... இவளாவது.... கராத்தேவாவது.... கிராமத்துப் பொண்ணுல்ல.... அதான்! இயற்கையாவே அலர்ட்டா இருக்கா..... என்று சரியாகத் தவறாக நினைத்தான்! (ஏமாந்துட்டியே ஹரி.....)

"சாரி" என்று கூறியபடியே தன் கையை அவளுடைய கையிலிருந்து உருவிக் கொண்டான்!

"சாரீங்க மாமா.... நீங்க ஏதோ கோபத்தில இருக்கீக.... நா ஏதோ புரியாம தொந்திரவு செய்யறேன்.... நீங்க ஒறங்குங்க.... நா வெளிய போறேன்....." என்று அபி தன் விளையாட்டுத்தனத்தைக் கைவிட்டுவிட்டு அவனுக்கு சமாதானமாகவும் அதே நேரத்தில் தன்னைப் பற்றி வெளியே காட்டிக் கொள்ளாமலும் பேசி அங்கிருந்து நகர்ந்தாள்!

நகர்ந்தவளின் கையைப் பிடித்து தடுத்து நிறுத்தி தன் நெஞ்சோடு இறுக்கமாக அணைத்துக் கொண்டான்!

போலியான மறுப்பைக் காட்ட முற்பட்டவளைத் தொடர்ச்சியான முத்தங்களால் அவன் அடக்கியே விட்டான்!

மறுநாள் காலை எழுந்ததும் ஏதோ சடங்கு சம்பிரதாயங்கள் என்று கூறி பெரியவர்கள் ஏதோ சொல்ல, ஹரிக்கு பல முறை கைப்பேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் என்று வந்த வண்ணம் இருந்தன!

அவன் ஏனோதானோவென்று எல்லாவற்றையும் செய்துவிட்டு அவசர அவசரமாக தன் அலுவலகத்துக்கு ஓடினான்!

அங்கே போனால், அவனுடைய அலுவலகத்துக்கு சமீபத்தில் கிடைத்திருந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக செய்தி வந்திருந்தது! இது சம்மந்தமாக ஒப்பந்தக்காரர்களை அழைத்தால் அவர்கள் சரிவர பதிலளிக்காமல் இருந்தனர்! அவர்களை சந்திக்க அவன் ஹைதராபாத் வரை சென்றாக வேண்டும்!

அதற்குண்டான ஏற்பாடு செய்யச் சொல்லி அலுவலகத்தில் உத்தரவிட்டுவிட்டு நேராக வீட்டுக்கு வந்து தன் அன்னையிடம் சொல்லிவிட்டு கிளம்பினான்!

"என்னடா... நேத்திதான் உனக்கு கல்யாணம் ஆகியிருக்கு.... அதுக்குள்ள அவள விட்டுட்டு...."

"மாம்! ப்ளீஸ் ட்ரை டு அன்டர்ஸ்டேன்ட்..... திஸ் இஸ் மச் மோர் இம்பார்டன்ட் தான் மை மேரேஜ்...."

நந்தினி கோபமாக ஏதோ சொல்ல வர, அபி அவளைத் தன் கண்களால் சமாதானம் செய்துவிட்டு ஹரியைப் பார்த்து சொன்னாள்.

"மாமா... நீங்க பத்திரமா போய்ட்டு வாங்க..... அத்தைய நா கவனிச்சிக்கறேன்ய்...."

"ம்... பாருங்க.... அவளே போய்ட்டு வான்னு சொல்றா.... நா போய்ட்டு வரேன்!"

"சரி... சரி... பத்திரமா போய்ட்டு வா... சீக்கிரம் திரும்பி வர வழியப் பாரு...." என்று கூறி அனுப்பினாள் நந்தினி!

அவன் கிளம்பிப் போன பின்,

“அபிம்மா! ஸாரிம்மா!”

“எதுக்கு அத்த?”

“அவன் இன்னிக்கு இப்டி கிளம்புவான்னு....”

“இட்ஸ் ஓகே அத்த. அதனால என்ன? சரி.... இத சொல்லுங்க... அவருக்கு என்னென்ன பிடிக்கும்! பிடிக்காது! வீட்ல எதையாவது மாத்தி வெச்சா பிடிக்குமா? பிடிக்காதா?”

“ஏம்மா?”

“ச்சும்மாதான். சொல்லுங்க அத்த!”

“அவனுக்கு லைட் க்ரீன் கலர், பிஸ்தா க்ரீன்னு சொல்வோமே அந்த கலர் பிடிக்கும். ஜாமெட்ரிக்கல் டிசைன்ஸ விட ஃப்ளோரல் டிசைன்ஸ் ரொம்ப பிடிக்கும். வீடு நிறைய பூச்செடிகள் இருந்தா ரொம்ப பிடிக்கும். சந்தன வாசனை பிடிக்கும். வேலை செய்யும்போது மெல்லிசா சத்தம் கம்மியா வெறும் இன்ஸ்ட்ருமென்ட்டல் இசை பின்னாடி கேட்டா ரொம்ப ரொம்ப பிடிக்கும்.” இப்படி நந்தினி நிறைய சொன்னாள்.

அபி அதையெல்லாம் ஒன்றுவிடாமல் கவனமாகக் கேட்டுக் கொண்டாள்.

“தேங்க்யூ அத்த! ம்! நான் வீட்ல ஏதாவது சேஞ்ச் பண்ணினா அவர் ஒண்ணும் சொல்ல மாட்டார்தானே?”

"அவனோட பொருட்களத் தவிர நீ வேற எத மாத்தினாலும் அவன் ஒண்ணும் சொல்ல மாட்டான்!"

"அப்ப உங்களுக்கு?"

“நீ வீட்டையே சேஞ்ச் பண்ணினாலும் எனக்கு ஒரு ப்ராப்ளமும் இல்ல. அந்த வீட்ல எனக்கு ஒரு லைப்ரரி மட்டும் ஒதுக்கிடு. அது போதும் எனக்கு!” என்றாள் நந்தினி.

“தேங்க்யூ அத்த!” என்று நந்தினியின் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு குழந்தை போல துள்ளிக் கொண்டு ஓடும் மருமகளைப் பார்த்து த்ருஷ்டி வழித்தாள் நந்தினி.

“ரொம்ப நல்ல பொண்ணு! இவளும் அவனும் நல்லபடியா இருந்தாலே எனக்குப் போதும்.” என்று கூறிக்கொண்டே எழுந்து போனாள் நந்தினி.

நந்தினியின் சொற்களைக் கேட்ட பொன்னம்மாள், அவள் பார்க்காமல் மறைந்து நின்று, "ம்க்கும்...." என்று தன் மோவாயில் இடித்துக் கொண்டாள்.

ஹரி ஹைதராபாத் சென்று ஒப்பந்தகாகரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி ஒப்பந்த வேலைகள் ரத்தாகாமல் தடுத்ததோடு மட்டுமல்லாமல் மேலும் புதிய இரண்டு ஒப்பந்தங்களுடன் மூன்று நாட்களில் வெற்றிகரமாக சென்னை திரும்பினான்!

அவன் வீடு திரும்பியதும் வீட்டுப் பெரியவர்களின் வற்புருத்தலில் அபியுடன் தேன்நிலவும் சென்றுவிட்டு வந்தான்!

அந்த இனிமையான நினைவுகளில்தான் காரில் அந்தப் பாடலைக் கேட்டதும் தன்னை மறந்து பாடலில் லயித்துப் போய் தன் காரை தெருவோரமாக நிறுத்தி ரசித்துக் கொண்டிருந்தான்!

பாடல் முடிந்து விளம்பங்கள் ஒலிக்கத் தொடங்கிய பின்னரும் அவனுக்கு பாடலின் வரிகள் காதில் கேட்டுக் கொண்டேயிருந்தன!

இதழ்களில் பூத்திருந்த வெட்கப் புன்னகையுடனேயே வீட்டுக்கு வந்தான்!

அங்கு அவன் கண்ட காட்சி?


தொடரும்
.....