குறுநகை போதுமடி! 10
ஐப்பசி மாசத்து மழை கார்த்திகை அடை போல் கனத்துப் பெய்ததில் மணி ஆறரையைத் தாண்டியும் சூரியன் சிக்னலில் மாட்டி நிற்க, இடைவிடாது யாரோ அழைப்பது போன்ற உணர்வில் உறக்கத்தை உதறி விழித்த சியாமளாவை வெவ்வேறு கால அளவுகளில், ஸ்ருதிகளில் தாக்கியது, ம்ம்மாமாஆஆ… என்ற ஆவினங்களின் குரல். பின்னோடே மிகச் சன்னமாக ஒலித்த கன்றுகளின் கனைப்பும் விளிப்பும்.
ஜன்னலை ஒருக்களித்துத் திறந்து பார்க்க, எதிரே இருந்த விளக்குக் கம்பம், வேப்ப மரம் என எதுவுமே தெரியாதபடி மறைத்தது மழைத்திரை.
மீண்டும் கேட்ட அபயக் குரலில், கீழ் வீட்டில் அனைவரும் ஊருக்குப் போய், தன் துணைக்கென கபிலன் இங்கே இருப்பது நினைவிற்கு வந்தது.
‘ஓஹ்…ம்ம்மை.. க்காட்! பசு மாடெல்லாம் கத்தறதே, பொறந்து ஒரு வாரம் கூட ஆகாத புதுக் கன்னுக்குட்டி வேற, பசியோ? இன்னோரு மாடு ப்ரெக்னென்ட்டா (செனைப் பசு) இருக்குன்னு வேற குந்தவை சொன்னாளே!’
சியாமளாவிற்கு அவற்றுக்கான தீவனங்கள் பின்கட்டிலும், புல், இலை, தழை போன்றவை தோட்டத்திலிருந்தும் வருவது தெரியும். அதற்கு மேல்?
‘எதை எவ்வளவு கொடுக்கணம்னு எனக்குத் தெரியாதே!”
‘மாடு கத்தறது மாடிவரைக்கும் கேக்கறது. இந்தக் கபீஷுக்குக் காதுல விழலையா என்ன?’
‘மருத்துவருக்கு மாடு கறக்கத் தெரியுமோ?’
கூந்தலை அள்ளி க்ளட்சரில் அடக்கி, ஃபாஸ்ட் ஃபார்வர்டில் படுக்கையை சரி செய்து, ஓய்வறைக்குச் சென்று தன்னை சீர் செய்து கொண்டு வந்தவள், படி இறங்கிக்கொண்டே இதற்கு மேல் தாங்காதென சாரநாதனுக்கு ஒரு மிஸ்ட் கால் கொடுக்க, இரண்டே நிமிடங்களில் திரும்ப அழைத்துவிட்டான்.
“சொல்லுத்தா”
“அங்கிள், மாடு ரொம்ப கத்தறது. அந்த ரெண்டு, மூணு ட்ரம்முல இருக்கதெல்லாம் மிக்ஸ் பண்ணனும்னு தெரியும். என்ன ப்ரபோர்ஷன்ல போடணும் அங்கிள்?”
சியாமளாவிடமிருந்து இதை எதிர்பார்க்காத சாரநாதன் ஒரு நொடி திகைத்துப் பின் சுதாரித்தான்.
“செல்வம் தெரியுமில்லையா, முருங்கைத் தோட்டத்துல இருப்பானே, அவனை வரச் சொல்லி இருக்கேன் மா. அவன் பார்த்துப்பான்”
“ஹெவியா மழை பெய்யறது அங்கிள். அவரால வரமுடியுமான்னே தெரியலை. உடனே போடற மாதிரி ஏதாவது சொல்லுங்கோ”
“ம்… கபிலன் எங்கம்மா?”
கீழ்ப்படியில் நின்று, மூலை மூலையாக இருள் சூழ்ந்த கூடத்தை முற்றத்து மழையினூடே கசிந்த வெளிச்சத்தில் சுற்றுமுற்றும் பார்க்க, கபிலனைக் காணவில்லை.
பகலிரவு தெரியாத வண்ணம் இருளும் மழையும் மிரட்ட, தோட்டம், துரவு, மாட்டுக்கொட்டகையுடன் கூடிய அந்தக் கிராமத்து வீட்டில் தனியாக நிற்பது அச்சத்தைத் தந்தது. இரவு போன மின்சாரம் இன்னும் திரும்பவில்லை.
அதற்குள் சாரநாதன் ‘சியாமளா, சியாமளா’ என நாலைந்து முறை அழைத்து விட்டான். வாசல்பக்கம் பார்வையைச் சுழற்றியவள், ஒருக்களித்திருந்த இடைகழிக் கதவைத் திறக்க, கபிலன் அங்கிருந்த ஒற்றைத் திண்ணையில் சுகமான நித்திரையில் இருந்தான்.
நீண்டதொரு பார்வைக்குப் பின், அவனை எழுப்ப மனமின்றி
“அவர் செமையா தூங்கறார் அங்கிள். நீங்க சொல்லுங்க” என்றபடி பின்வாசல் கதவைத் திறந்தாள்.
சாரநாதன் கொடுத்த குறிப்புகளின்படி தொட்டியிலிருந்து தனித்தனியே மூன்று வாளிகளில் தண்ணீர் எடுத்து, தவிடு, தீவனம் இரண்டையும் அளந்து, அருகில்இருந்த பெரிய கல்சட்டியில் இருந்து கல்உப்பைப் போட்டுக் கரைக்க,
“இங்க என்ன செய்யுற?” என்ற கபிலனின் குரலில் சியாமளா திடுக்கிட்டுத் திரும்பினாள்.
“ஊஃப்…. பயந்தே போய்ட்டேன். பார்த்தா தெரியலை, மாட்டுக்கு ஃபுட் மிக்ஸ் பண்றேன்”
“ஓ… நீ படிச்ச டயட் & நியூட்ரிஷன்ல ஆடு மாடுக்கெல்லாம் கூட சாப்பாடு போட சொல்லித் தருவாங்களா?”
கையை உதறி நிமிர்ந்தவள் “இங்க வாங்கோ”
“ஏன்?”
“உங்க வீட்டு மாடு. நீங்களே தீனி வைங்கோ” என்ற சியாமளா, உள்ளே செல்லும் வேகத்தில், பின்வாசல் நிலையில் நின்றவனை மோதிக் கடக்க, கபிலன்,
“ஏய், என்ன செய்யணும்னு சொல்லிட்டுப் போ “
“டோன்ட் ஆஸ்க் மீ”
தன் மொபைலில் தந்தையை அழைத்தவன், அழைப்பை எடுக்கவில்லை என்றதும், மாடிப்படியில் அமர்ந்திருந்தவளிடம் வந்தான்.
“ம்ப்ச், அப்பா என்ன சொன்னாங்கன்னு சொல்லு”
“...”
“சரி, ஸாரி. சொல்லு”
“பசுவை பட்டினி போட்டா மஹாபாவம். அதனால சொல்றேன். அதை மிக்ஸ் பண்ணியாச்சு. மாட்டுத் தொட்டில கொண்டு போய் கொட்ட வேண்டியதுதான்”
கபிலன் மழையில் நனைந்தபடி போய் வந்த சில நிமிடங்களில் அம்மா என்ற அழைப்பு நின்றது.
“அப்டியே அந்த வைக்கோலையும் போடுங்கோ”
தூக்கிச் செருகிய ஸ்கர்ட்டும் அள்ளிக் கட்டிய கொண்டையும், அரக்கு கலர் டீஷர்ட்டும் அணிந்து, மிதப்பான பார்வையுடன் தன் வீட்டில் தனக்கும் மாட்டுக்கும் சேர்த்தே தண்ணி காட்டுபவளைச் சீண்டும் ஆசை எழுந்ததில், கபிலன்
“பசுவை மட்டுமில்லை, பாஸை பட்டினி போட்டாக்கூட பாவம்தான். போய் ஸட்ராங்கா ஒரு ஃபில்டர் காஃபி போடு”
“அதுக்கு முதல்ல பால் வேணும். நீங்க ஆயுர்வேத முறைப்படி பாலைக் கறந்து குடுங்கோ, நான் காஃபி தரேன்”
வாசல் கதவு தட்டப்படும் சத்தம் கேட்க, குடை, ரெயின்கோட் சகிதம் வந்த செல்வம் பத்தே நிமிடங்களில் பாலைக் கறந்து வர, மூன்று பெரிய பெரிய குவளைகளில் நெருங்க முப்பது லிட்டருக்கு மேல் இருந்த பாலைப் பார்த்த சியாமளா அரண்டுவிட்டாள்.
நான்கு பசுக்களும் நிறைய பால் கறப்பதும், ஓரிருவர் வந்து வாங்கிச் செல்வதும் தெரியும்தான். இருப்பினும், இதுவரை இதையெல்லாம் கூர்ந்து கவனித்ததில்லை.
மேலிருந்து ஒரு பாத்திரத்தை எடுத்து வந்து பாலை எடுத்துச் சென்றாள். குளித்து, தலையில் துண்டும், கத்தரிப்பூ கலரில் குர்த்தியும் கலம்காரி சல்வாரும் அணிந்து, கபிலனுக்கான காஃபியுடன் கீழே வர, சரியாக ஹாஸ்பிடல் வேனில் ஆள் வந்து, பெரிய கேனில் பாலை எடுத்துச சென்றது.
செல்வம் மாலையில் ஒருமுறை வருவதாகச் சொல்லிச் சென்றான். மழை நிற்பது போல் தெரியவில்லை.
கபிலன் மருத்துவமனைக்கு, தோட்டத்திற்கு ஃபோன் செய்து விசாரித்தான். அவசரம் எதுவும் இல்லை. மழை நின்றதும் போக முடிவு செய்து, குளிக்கச் சென்றான்.
சியாமளா ஒன்பதேகால் மணிக்கு சேமியா உப்புமாவுடன் வந்தாள். கபிலன் சோஃபாவில் அமர்ந்து உண்ண, சியாமளா செண்பா’ என்ற குரலில் வாசலுக்குச் சென்றாள்.
மழை குறைந்திருந்ததில், மூன்றாவது வீட்டில் இருக்கும் பிரகதாவும் பின்னோடே, அடுத்த தெருவில் இருக்கும் முல்லையும் பால் வாங்கிச் செல்ல வந்திருந்தனர்.
சியாமளா எவ்வளவு என்று கேட்டு வர, கபிலன் அளவைகளைத் தேடிப் பாலை அளந்து கொடுத்தான். மீதமிருந்ததை காய்ச்சினான்.
“நான் ஹாஸ்பிடல் வரை போய்ட்டு வரேன். தனியா இருப்பியா?”
“ம்”
“நான் வர மூணு மணியாகும். கதவை தாப்பா போட்டுக்கோ”
“அப்போ லஞ்ச்?”
“பார்த்துக்கறேன்”
“எப்படியும் நான் சமைக்கதான் போறேன். உங்களுக்கும் சேர்த்து சமைக்கறதுல எனக்கு நோ இஷ்யூஸ்”
ஒரு நொடி சியாமளாவின் கண்களை சந்தித்தவன் “என்ன சமைப்ப?”
“உங்களுக்கு என்ன புடிக்கும்?”
“சொன்னா செய்வியா?”
“சொல்லுங்கோ, வில் ட்ரை”
“ஷ்யூர்?”
“ம்..ம்”
“சுவரொட்டி செய்”
“கம் அகெய்ன்”
“சு… வ… ரொ.. ட்… டி. கேட்டுச்சா?”
“போஸ்ட்..ட்டரோ…?”
சியாமளாவின் பதிலும் பாவனையும் கண்ட கபிலன் சிரித்த சிரிப்பில் அவனுக்குப் புரையேறிவிட்டது. தண்ணீரைக் குடித்தவன்
“நீ என்ன செய்யறியோ, அதே எனக்கும் போதும். இல்லாட்டாலும் ஐ வில் மேனஜ்”
என்ற கபிலன் ஹாஸ்பிடலுக்குப் போகும் முன்பே, சியாமளாவும் கபிலனும் அவனது வீட்டில் யாருமின்றித் தனித்திருப்பதும், அவள் சமைத்துத் தருவதும், இருவரும் சிரித்துப் பேசுவதும் கண், காது, மூக்கு மட்டுமின்றி பொட்டு பூவெல்லாம் வைத்து பரபரப்பான செய்தியாக (சிறு)மலைத்தளத்தில் வைரலாகி இருந்தது.
*******************
ஞாயிற்றுக்கிழமையும் மழையும் கூட்டணி போட்டதில் நலம் மருத்துவமனையில் இன்று பணியில் இருந்த செவிலியரையும், மற்ற சில உதவியாளர்களையும் தவிர, யாருமில்லை. காலையில் ஒருமுறை அனுபமா வந்து சென்றிருந்தாள். புதிதாக வேலைக்குச் சேர்ந்த தீபக் (ஆயுர்வேதம்) மருத்துவர்களின் அறையில் இருப்பது தெரிந்தது.
மழையினால் அறைக்கே உணவு வழங்கப்பட்டதில், பயனாளிகள் அனைவரும் குடிலுக்குள் முடங்கி இருக்க, கபிலன் அவர்களைத் தன் அறையில் இருந்தே இன்டர்காமில் விசாரித்தான்.
மருத்துவ மனையின் அத்தியாவசிய இணைப்புகளுக்கு சூரிய ஆற்றல் உற்பத்தியில் சேமிக்கப்பட்ட உயர் சக்தி ஜெனரேட்டர், தடையின்றி மின்சாரம் தந்தது.
சளி, காய்ச்சல் என வந்த சிலரைப் பார்த்த கபிலன், நேரம் இருந்ததால் மருத்துவமனை கணக்கு வழக்குகளைப் பார்த்தான்.
கேட்காமலே ஏலம், கருப்பட்டி, சுக்குப் போடி போட்ட சூடான பானகத்தை எடுத்து வந்த கணேஷ், தேவைக்கு அதிகமாகத் தன்னைப் பார்ப்பது போல் தோன்றியது.
“என்னடா?”
“ஒன்னுமில்லை ஸார்”
“தீபக்கை வரச் சொல்லு”
சியாமளாவின் வருகையை, உத்திகளை, புத்திசாலித் தனத்தை விரும்பாத, வரவேற்காத அனுபமாவிடமும் சுபாஷிடமும் அலுவல் தொடர்பான வேலை இருந்தால் தவிர தேவைக்கு மேல் ஒரு வார்த்தை பேசாத சியாமளா. ஒரு நாள் கபிலனிடம் வந்து எதையோ சொல்லத் தயங்கினாள்.
“என்ன?”
ட்யூட்டி நேரத்திலும் சரி, அதற்குப் பிறகும் சரி, அனுபமா சுபாஷிடம் அழுகையுடன் கெஞ்சியபடி பேசுவதை நாலைந்து முறைக்கு மேல் பார்த்திருந்த சியாமளா, நேரே கபிலனிடம் வந்து நின்றாள்.
“அவங்களுக்குள்ள ஏதோ சரியில்லை ஸார்”
“அதுக்கு நான் என்ன செய்ய முடியும்?”
“அனுபமாவோட ஃபேமிலி பத்தி சொன்னேளே. பாவம் அனுபமா. தங்கைளுக்காக அவங்கப்பா இவ உழைப்பை யூஸ் பண்ணிக்…”
“அப்படீன்னு அனுபமா உன்கிட்ட சொன்னாங்களா? கஷ்டப்பட்டு படிக்க வெச்ச அப்பாக்கு ஹெல்ப் பண்றது தப்பா?”
“ஓ பாய்! தப்புன்னு யார் சொன்னா, ஆனா… ம்… எப்டி சொல்ல… அனுபமாக்கு முப்பது வயசு. பொறாமைன்னு இல்ல.. ஒரு yearning (ஏக்கம்), ஆசை இருக்கும் இல்லையா, அதை சுபாஷ் கேபிடலைஸ் பண்றாரோன்னு தோண்றது”
கபிலன் “வாட் நான்சென்ஸ், சுபாஷுக்கு கல்யாணம் ஆகி மூணு வயசுல ஒரு பையன் இருக்கான்”
சியாமளா எழுந்து நின்றுவிட்டாள்.
“அடப்பாவி, கல்யாணம் ஆயிடுத்தா அவனுக்கு? போன வாரம் கூட நானும் குந்தவையும் அவா ரெண்டு பேரையும் திண்டுக்கல் தியேட்டர்ல பார்த்தோமே”
“நீ குந்தவையோட சினிமா பார்க்கப் போனயா?” - கபிலன்.
“ரொம்ப முக்கியம். நான் என்ன சொல்றேன்னா..”
“இதையெல்லாம் போய் நான் கேட்க முடியாது”
“அட்லீஸ்ட், அனுபமாவை கூப்பிட்டு வார்ன் பண்ணலாம் இல்லையா?”
கபிலன் “பார்க்கலாம்”
சுபாஷ் அனுபமாவுடன் அதிகம் பேசுவதும், அவளுக்கு அவன்தான் ஆதரவு என்பதுபோல் வக்காலத்து வாங்குவதும் கபிலன் அறியாததல்ல. பல சந்தர்ப்பங்களில் சுட்டியும் இருக்கிறான்.
இது பற்றி அனுபமாவிடம் பேசினால் அழுகையும் நாடகமும்தான் மிஞ்சும் என்பது தெரிந்த கபிலன் சுபாஷை அழைத்து எச்சரிக்க, முதலில் மறுத்து, பின் எதிர்த்து, ‘என் பர்ஸனல், என் இஷ்டம், நீயும்தான் புதுசா வந்த பொண்ணுக்கு ஓவரா சப்போர்ட் பண்ற’ என ஏக வசனத்தில் தூக்கி எறிந்து பேசவும், கபிலனின் பொறுமை பறந்து விட்டது.
“நீயா வேலையை விட்டுப் போனா கான்டக்ட் சர்ட்டிஃபிகேட் கிடைக்கும். பணமும் முழுசா செட்டில் ஆகும். ஒரு பொண்ணு பேரை இதுல இழுக்க வேண்டாம்னுதான் இதோட விடறேன். இல்லைன்னா டிஸ்மிஸ் ஆர்டர் கொடுத்துடுவேன். கெட் லாஸ்ட்” எனக் கடுமையாகத் திட்டிவிட்டான்.
சுபாஷ் வேலையை ராஜிநாமா செய்து விட்டுப் போக. இரண்டு மூன்று நாள் மருத்துவமனை பக்கமே தலையைக் காட்டாத அனுபமா, இப்போது மிகுந்த கவனத்தோடு வேலை செய்கிறாள். சுபாஷிற்கு மாற்றாக வேலைக்கு வந்தவன்தான் இந்த தீபக்.
மதியம் ஒரு மணி வரை வேலையில் மூழ்கி இருந்தவன், தன் வீட்டிற்குச் சென்று, படுக்கையில் கால்களைக் கீழே தொங்கவிட்டபடி, விட்டத்தைப் பார்த்துப் படுத்துக் கண்களை மூடிக்கொண்டான்.
சியாமளாவுடன் ஒரே வீட்டில் தனித்து (தனித் தனியாகத்தான்!) இருந்ததே குறுகுறுப்பைத் தர, முந்தைய இரவு முழுவதும் விழித்திருந்து, முற்றத்தைச் சுற்றி வந்தவன், உறங்கியபோது மூன்று மணிக்கு மேல் இருக்கும்.
காலையில் அவளுடன் பேசியதை, தனக்கு சம்பந்தமில்லாத வேலை என்று ஒதுங்காமல், தன்னை எழுப்பாமல், அவளே மாட்டுக்குத் தீவனம் வைக்க முனைந்தது வியப்பைத் தந்தது.
‘என்னை எழுப்ப மனசில்லாம அவளே செஞ்சிருக்கா!’
‘சற்றே சாரலில் நனைந்த உடையும், வியர்வை பூத்த முகமுமாய் அவள் நின்றிருந்த கோலம், ஸ்கர்ட்டைத் தூக்கிச் செருகி இருந்ததில் தெரிந்த இடது கால் கொலுசு (சலங்கையே இல்லை!), வேக்ஸிங் செய்யப்படாத கெண்டைக் கால் முடிகள்…’
கபிலன் திடுக்கிட்டுக் கண்களைத் திறந்தான்.
‘ இத்தனை கவனிக்கிறேனா அவளை?’’
‘டேய், நீ இன்னும் என்னன்ன கவனிச்சேன்னு உனக்குத் தெரியாது?’
இரண்டு கைகளாலும் முகத்தை அழுந்தத் துடைத்தவன், விருட்டென எழுந்து ஒரு குளியல் போட, மழைக்கு சில்லென்றிருந்தது தண்ணீர்.
*********************
அவியல், தக்காளி சாதம், ரசம், தன் அம்மா அனுப்பிய நேந்திரங்காய் வறுவல், தயிர், சாதம், நெய் ,ஊறுகாய் என தனித் தனிக் கிண்ணங்களில் போட்டு, ஒரு தட்டில் வைத்து எடுத்து வந்தாள் சியாமளா.
கபிலன் உண்ணத் தொடங்க, சியாமளா வழக்கம்போல் மாடிப்படியில் அமர்ந்திருந்தாள். உண்மையிலேயே சமையல் நன்றாக இருந்தது.
தொண்டையை செருமிக் கொண்டவன் “இத்தனை நேரம் என்ன செஞ்ச?”
“ம்… சமையல். தென், மழைல துணி தோய்க்க முடியல. பவர் இல்லாததால லேப்டாப்ல சார்ஜ் இல்ல. மொபைலை எமர்ஜென்ஸிக்குனு விட்டு வெச்சிருக்கேன். படு போர். ஹான்… செண்பா ஆன்ட்டியைத் தேடி யார் யாரோ லேடீஸ் வந்தா”
“...”
அவன் தட்டைப் பார்த்து,
“இன்னும் கொஞ்சம் சாதம் கொண்டு வரவா?”
“போதும்” என்றவனின் மொபைல் ஒலிக்க, அம்மா!
ஃபோனில் “ஹாய் மா….” என்றவன், சியாமளாவிடம் ‘சாப்ட்டியா?’ என சைகையில் கேட்கத் தலையசைத்தாள்.
“என்னடா, சன் டே அன்னைக்குக் கூட ஃபோன் பண்ண முடியாதா உன்னால?”
“...ம்மாஆ.. நேத்து நைட்டுல இருந்து நிக்காம மழை பெய்யுது. கரன்ட் இல்ல. ஹாஸ்பிடல் போயிட்டு இப்பதான் வீட்டுக்கு வந்தேன்”
“எந்த வீட்டுக்கு?”
“மா…” என்றவன் குடும்பமே ஊருக்குப் போய் இருப்பதைச் சொன்னான்.
“அந்தக் கேரளா பொண்ணோட நீ தனியா இருக்கியாம். அத்தனை பேச்சு பேசுற உங்கத்தை இதுக்கு எதுவும் சொல்லலையா? அவங்களுக்கு அவங்க வேலை ஆகணும், நீ எம்புள்ளைதானே?”
“...”
“அவங்களை விடு. உங்கப்பாக்கு ஏதாச்சும் இருக்கா? வயசுப் பொண்ணுக்கு உன்னைக் காவல் வெச்சுட்டுப் போய் இருக்காரே, இது ஊருக்குத் தெரிஞ்சா… இதை சகஜமா எடுத்துக்க அது என்ன சிகாகோவா, சின்சினாட்டியா, சிறுமலைடா”
பக்கென்று சிரித்த கபிலன் “போட்டுத் தாக்கறம்மா நீ, செம பஞ்ச், போ”
“டேய், நான் சீரியஸா பேசறேன். சிரிக்காதடா. ஏதாவது பிரச்சனைன்னா அந்தப் பொண்ணு அழுதுக்கிட்டே ஊரைப் பாக்கப் போயிடும். ஆனா, உன் ஹாஸ்பிடல், ஃபேக்டரி எல்லாம் அங்கதான். நான் சொல்றது விளங்குதா உனக்கு?”
“ஒரு அவசரம், வீட்ல மாடெல்லாம் வேற இருக்கு. புது இடத்துல ராத்திரி வேளைல திடீர்னு அவ… அவங்களைத் தனியா விட முடியுமாம்மா?”
“என்னவோ போ, நீ எப்படி இதுக்கு ஒத்துக்கிட்டன்னுதான் எனக்குப் புரியல”
தான் பேசுவது காதில் விழாத தொலைவில் பின் வாசல் அருகே நின்று மழையை வேடிக்கை பார்த்த சியாமளாவைப் பார்த்த கபிலன்,
“டோன்ட் ஒர்ரிம்மா, நான் பார்த்துக்கறேன், பை”
திறந்திருந்த வாசலில் நிழலாட, செல்வமும் அவனுடன் இன்னொருவனும்.
இவர்களிருவரையும் பார்த்துக்கொண்டே பின்பக்கம் சென்றனர். மீண்டும் பால் கறந்து வர, சியாமளா மலைத்தாள்.
மணி ஆறாக, நடுவில் குறைந்திருந்த மழை மீண்டும் வலுத்திருக்க, இருள் அடர்ந்தது. சுவரில் பொருத்தி இருந்த ரீசார்ஜபிள் விளக்கில் உயிரல்லாது போக, கபிலன் சாமி பிறையில் இருந்த விளக்கைத் தேடி ஏற்றினான்.
மின் வாரியத்திற்கு அழைக்க, இணைப்பு கிடைக்கவில்லை.
வெளியிலும் எங்கும் செல்ல இயலாத கபிலன் இருப்புக்கொள்ளாது நடை பயில, சிறிது நேர அமைதிக்குப் பின் குறுகுறுவென கபிலனைப் பார்த்த சியாமளா
“ஏன் டென்ஷன்?”
“ம்ப்ச்… நத்திங்”
“கபீஷ்….. நான் வேணும்னு எதையும் கேட்கலை. ஆனா, உங்கம்மா சொன்னது சரிதான். இன்னைக்கு செண்பா ஆன்ட்டிய பார்க்க சில பேர் அப்பப்ப வந்துது, நம்ப தனியா இருக்கறது தெரிஞ்சு வேடிக்கை பார்க்கதானோன்னு இப்ப தோண்றது”
“...”
சியாமளாவிடம் ‘கபிலன் சொல்லவில்லை எனில் ‘நாம தனியா இருக்கறது உங்கம்மாக்கு எப்படித் தெரியும்?’ என்ற கேள்வி இருக்க, மேலே எதுவும் பேசாது அமைதியாக இருந்தாள்.
சிறுவயது முதலே சந்தித்த சூழல்களும் அனுபவங்களும் தந்த அழுத்தத்தில் இரும்பாய் இறுகி நிற்கும் கபிலனை இளக்குவது அத்தனை சுலபமல்ல என்று புரிந்ததன் விளைவு அது.
கபிலனை நெருங்க அவள் சீண்டியது போக, இப்போது தன்னை விலக்கி நிறுத்த நக்கலும் சீண்டலும் செய்வது அவனல்லவா?
சியாமளா “நான் மாடிக்கு போய்ட்டு வரேன்”
சட்டென நின்றவன் “ஏன், எங்கூட இருக்க பயமா இருக்கா?”
“உங்க கூட இருக்க எனக்கென்ன பயம், அங்க எமர்ஜென்ஸி லேம்ப் இருக்கு. கொண்டு வரேன்”
தடதடவெனப் படியேறிச் சென்றவளைப் பார்த்தபடி நின்றவனை உவகையும் உணர்க்கையும் புரட்டியது.
அவனறிந்த வரையில் சியாமளா வெகு குறிப்பான, கலகலப்பான, நட்பான பெண். இருந்தும் எவரையும் ஒரு எல்லையில் நிறுத்திப் பழகுபவள். ஒத்துப் போகவில்லை எனில் ஒதுங்கிச் செல்பவள்.
‘எங்கிட்ட அப்டி என் இருக்குன்னு இப்படி சுத்தி சுத்தி வரா?’
‘இத்தனைக்கும் நான் சரியா பேசறது கூட இல்லை’
சியாமளாவின்பால் நெகிழத் தொடங்கிய மனதை இழுத்துப் பிடிப்பது கபிலனுக்கு இன்று வழக்கத்தை விடவே கடினமாக இருந்தது.
‘இன்னும் எத்தனை நாள் இப்படி?’
நிலாவின் திருமணம் முடிந்து ஓரிரு மாதங்கள் வரை அமைதியாக இருந்த அம்மா மாளவிகா, இப்போது மீண்டும் கல்யாணத்தைப் பற்றிப் பேசத் தொடங்கி இருந்தாள்.
இங்குமே அவ்வப்போது ஏதாவது ஒரு பெண்ணைப் பற்றிய விவரங்களைச் சொல்கிறார்கள்தான்…
இவன்தான் சியாமளாவைக் கடக்க முடியாது, தவிக்கிறானே?
பளீரென எல்ஈடி விளக்கு சகிதம் இறங்கி வந்த சியாமளா, “இந்தப் பாலை எல்லாம் என்ன பண்றது?”
“ஹாஸ்பிடலுக்குப் போகணும். வேன் இன்னும் வரலை. ஃபோனும் போகலை” - கபிலன்.
“காய்ச்சிடலாமா?”
சமையலறைக்குச் சென்ற கபிலன் பாத்திரங்களை உருட்டி, இரண்டு பெரிய அடுக்குகளில் பாலை ஊற்றி அடுப்பில் ஏற்றினான். கையில் எமர்ஜென்ஸி விளக்குடன் ஒளி பரப்பிய சியாமளாவின் உயரத்திற்கு, பாலை எட்டித்தான் பார்க்க வேண்டி இருந்தது.
பெரிய பர்னரில் இருந்த பால் பொங்கி வழியும்போல் இருக்க, சியாமளா “இளக்குங்கோ, அதை இளக்குங்கோ” எனப் பதற, அவள் பார்த்துத் தடுக்கும் முன், கபிலன் அவசரத்தில் பக்கத்தில் இருந்த ஒரு பெரிய சொம்பு நீரில் முக்கால்வாசியை அந்தப் பாலில் ஊற்றி இருந்தான்.
விளக்கை மேடையில் வைத்தவள், கபிலனின் கையில் இருந்த சொம்பைப் பிடுங்கினாள்.
“என்ன செஞ்சு வெச்சிருக்கேள் கபீஷ்?”
“நீதானே இளக்கு, இளக்குன்ன. அதான் தண்ணி ஊத்தி இளக்கினேன்”
“குருவாயூரப்பா! இளக்கச் சொன்னா யாராவது தண்ணி ஊத்துவாளா?”
“பின்ன, டைட்டா, ஐ மீன் கெட்டியா இருந்தா தண்ணி ஊத்திதானே இளக்கணும்?”
“ஓ ந்நோ! இளக்கறதுன்னா stir பண்றது… ம்… கிளர்றது”
“எந்த பாஷைல?”
“எங்க பாலக்காட்ல…” என்றவளின் குரல் மெலிந்து தழைந்து போய் “ஐ’ம் ஸாரி கபீஷ்”
“எதுக்கு?”
“...”
திடீரென எரிந்த பல்பில் கபிலன் “இட்’ஸ் ஓகே. இதுக்குதான் சொல்றேன். நீயே பாரு, ஒரு நாள்லயே நமக்குள்ள எத்தனை வித்தியாசம்?”
தட்டுகளைத் தேடிப் பால் பாத்திரங்களை மூடிய சியாமளா மௌனமாக வெளியேற, பின்தொடர்ந்த கபிலன்,
“எதுவுமே பேசாம போனா என்ன அர்த்தம்?”
அரை இருளில் திரும்பி நின்று முறைத்தவள் “இல்ல, தெரியாமதான் கேட்கறேன், சொந்தமா முருங்கைத் தோட்டம் இருந்தா, நெனச்சு நெனச்சு மரத்து மேல ஏறிப்பேளோ?”
முதலில் புரியாமல் திகைத்து விழித்தவன், பின் “நான் வேதாளமா?”
“அது எனக்குத் தெரியாது. ஆனா, நீங்க வேதாளம்னா, நான்தான் விக்ரமாதித்தன்”
“அடிப்பாவி!”
“யாரு, நானா? என்னடா, மார்னிங்ல இருந்து சரியா இருந்தேளேன்னு பார்த்தேன், வல்லடி வந்துடுத்து”
குரலை சமன்படுத்திக்கொண்ட கபிலன் “நான் சொல்றதைக் கொஞ்சம் கேளேன்… மை காட்!... உனக்கு எப்படிப் புரிய வைப்பேன்?”
“கபீஷ்...நீங்க சொல்லாமலே எனக்கு நிறைய புரியறது”
“அப்புறம் என்ன?”
“டாக்டர் ஸார், இந்த மீன் தெரியுமா, மீன்?
“ம்… வாரத்துல நாலு நாள் ஆத்து மீன் சாப்பிடறவனைப் பார்த்துக் கேக்கற கேள்வியா இது?”
“அதைத் தவிர மீன் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?”
“...”
“Love like a fish னு கேள்விப்பட்டிருக்கேளா?”
“...”
“மீனைச் சுத்தி உள்ளே, வெளிலன்னு எல்லாமே தண்ணிதான். தண்ணி இல்லாத ஒரு உலகம் எப்படி இருக்கும்னே அதுக்குத் தெரியாது. தண்ணில இருந்து மீனை வெளில எடுத்தாலும், தண்ணியை எடுத்தாலும் மீன் அவ்ளோதான்”
“...”
“எங்கம்மா சொல்லிச் சொல்லி நானும் ரெண்டு, ரெண்டரை வருஷம் உங்களைப் பத்தி எதையும் படிக்காம, தெரிஞ்சுக்க முயற்சி பண்ணாமத்தான் இருந்தேன்”
“...”
“பேப்பர்ல உங்க ஃபோட்டோவையும், நீங்க விளையாடப் போறேள்னும் பார்த்ததும்…. என்னால முடியல கபீஷ்”
“...”
“நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல இருக்கற வித்தியாசத்தை பெட்டி போட்டு விளக்காம, எனக்கு அட்வைஸ் பண்ணாம, என்னை உங்களுக்குப் புடிக்கலை, நீ போயிடுன்னு ஒரு தரம் நேரடியா சொல்லுங்கோ… தேடினாலும் கண்ல படமாட்டேன்”
கபிலனுக்குப் பேச்சே வரவில்லை. என்ன சொல்லுவான்? சியாமளாவைப் பிடிக்கவில்லை என்று மனதாரப் பொய் சொல்லவா முடியும்?
‘என்ன மாதிரியான அன்பு இது?’
எட்டரை மணிபோல் சப்பாத்தியும் ஏதோ ஒரு சப்ஜியும் கொண்டு வந்து வைத்தவள், எதுவும் பேசாது மேலே சென்றுவிட்டாள்.
இரவின் நீலத்தில் அவனும் சியாமளாவும் மீனாகவும் நீராகவும் மாறி மாறி அவதரித்தனர். நீந்தினர், உயிர்த்தனர்.

Last edited:
Author: VedhaVishal
Article Title: குறுநகை போதுமடி! 10
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.