• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

குறுநகை போதுமடி! 13

VedhaVishal

Administrator
Staff member
Jun 17, 2024
84
326
53
Chennai
குறுநகை போதுமடி! 13

செழியன் காரை செலுத்த, இலக்கற்ற பார்வையுடன் பயணித்த சாரநாதனுக்கு உள்ளுக்குள் பதறியது. கூடவே கபிலனின் இருப்பிடம் தெரிந்ததில் ஒரு நிம்மதியும் விரவியது.

மகனைப் பற்றித் தனக்குத் தெரிந்ததாகத் தான் நினைத்ததெல்லாம் அனைவரும் அறிந்த மேலோட்டமான தகவல்கள்தானோ, அவனைப் புரிந்து கொள்ளவே இல்லையோ என்ற கசப்பான கேள்வி உள்ளுக்குள் குடைந்தது.

என்னதான் வாய்விட்டுக் கூறா விட்டாலும், வீட்டில் மற்றவர்களிடம் இருந்த எதிர்பார்ப்பு தன்னிடமும் இருந்தது என்பதில் குற்றவுணர்வு மிகுந்தது.

‘காவேரியக்கா மட்டும் இல்லாம, இந்த செண்பா கூட என் அப்புவை என்னெல்லாம் பேசிட்டா?’

‘அவன் மானஸ்தன். கண் காணாம எங்கேயோ போய்த் தன்னையே வருத்திக்கிட்டான். நான் வெக்கமில்லாம, என் பொண்டாட்டிக்கு சாமரம் வீசி, சமாதானம் செஞ்சிக்கிட்டு இருந்திருக்கேன்’

சாரநாதனுக்கு அசை போடாமலே நினைவுகள் எதிர்க்களித்தன.

கபிலனிடம் பெண் பார்க்க கோவை செல்வதாகச் சொன்ன இரவில்…

நீலவேணி பேரனிடம் பெண்ணின் ஃபோட்டோவை காட்டச் சொல்ல, சாரநாதன், தன் மொபைலைத் திறந்து மகனிடம் நீட்ட, அலைபேசியைக் கையில் வாங்க மறுத்த கபிலன்,

“அப்பா, நுங்குக்கு மட்டும் சம்பந்தம் பேசுப்பா. எனக்கு இந்தக் கல்யாணம் வேணாம்”

செண்பா “ஏன், இந்தக் கல்யாணம் ஏன் வேணாம்?”

காவேரி “இந்த சம்பந்தத்துக்கு என்ன குறைச்சல்?”

நீலவேணி “ஏனப்பு, பொண்ணும் நல்லா இருக்கு. நல்ல, வசதியான இடம். உன் தங்கச்சிக்கும் அந்தப் பையனைப் புடிச்சிருக்கு…”

“அதனாலதான் அப்பத்தா நுங்குக்கு முதல்ல கல்யாணம் பேசி முடிப்போம்னு சொல்றேன்”

கபிலனின் எதிரே வந்து நின்ற செண்பா, வேகமான குரலில் “அதெப்படி தம்பி முடியும்? அவங்க கேட்டபோதே பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்கறதாதானே பேச்சே?”

“...”

நீலவேணி “அப்பு கிட்ட ஆவேசப் படாத கொஞ்சம் பொறுமையா பேசுத்தா”

சாரநாதன் “செண்பா, அப்புகிட்ட நான் பேசிக்கறேன். அப்பு, நல்ல சம்பந்தத்தை ஏம்ப்பா வேணாங்குற?”

“இது எனக்கு இது சரியா வராதுப்பா”

கபிலன் தொடர்ந்து மறுத்ததில் ஆத்திரமடைந்த காவேரி,

“ஏன் சரியா வராது, இல்ல.. ஏன் சரியா வராதுன்னு கேக்கறேன்?”

“...”

“எம் புள்ளைக்கு (பேத்தி குந்தவைக்கு) ஒரு நல்லது நடக்கறது உனக்கு பொறுக்கலை, அதானே?”

“அக்கா!” - சாரநாதன்.

“ஏத்தா காவேரி” - நீலவேணி.

“ஆச்சி” - குந்தவை.

செண்பா “நீங்கதான் பதற்ரீங்களே தவிர, உங்க மகன் எனக்கென்னன்னு திடமாதான் நிக்கிறான்”

காவேரி “ஏன் நிக்க மாட்டான், எல்லாம் நீ உன் சக்களத்தி மவனுக்கு கால் கழுவி வடிச்சுக் கொட்டினதுல வந்த ஏத்தம். அன்னைக்கே கிட்ட சேர்க்காதன்னேன். புருஷனும் பொண்டாட்டியும் கேட்டீயளா?”

கண் சிவந்து, முகம் கறுத்து, நரம்பு புடைத்து, இரும்பாய் இறுகி நின்ற கபிலனைக் கண்டு பதறிய சாரநாதன்,

“ரெண்டு பேரும் கொஞ்சம் பேசாம இருக்கீங்களா?”

செண்பா “நாங்க ஏன் மாமா பேசாம இருக்கணும்? நுங்கு, நுங்குன்னு உருகறதெல்லாம் சும்மா மெப்புக்குன்னு புரியலையா மாமா உங்களுக்கு? அவ மேல உண்மையான அக்கறை இருந்தா, உங்க மகளுக்கு அந்த மாப்பிள்ளைப் பையனை புடிச்சிருக்குன்னு தெரிஞ்சும் இவன் இப்படி முரண்டு பிடிப்பானா மாமா?”

காவேரி “இவ ஒருத்தி, அக்கர, இக்கரன்னுக்கிட்டு… அவன் ஆத்தாக்காரி புத்திதானே இவனுக்கும் வரும்… அவன் எப்படி அடுத்தவங்களுக்கு நல்லதை யோசிப்பான்?”

சாரநாதன் “போதும் கா. அப்பு கிட்ட நான் பேசிக்கறேன். இந்த இடம் வேணாம்னு சொல்ல அவனுக்கும் ஒரு காரணம் இருக்கும்ல?”

காவேரி “உம் மவன் காரணம் சொல்லி கல்யாணம் வேணாங்கற நிலமைலயா இருக்கான்?”

“...’

“அத்துக்கிட்டு போய் இன்னொரு கல்யாணம் கட்டி, புள்ளை பெத்துக்கிட்ட ஆத்தாக்காரிக்கு மொத கல்யாணத்துல பொறந்த புள்ளைக்கு எவன் பொண்ணைக் குடுப்பான்?”

“...”

“இதெல்லாம் தெரிஞ்சும், அத்தனை பெரிய மனுஷன் சம்பந்தம் பேசினதே, அவங்க புள்ளைக்கு எம் பேத்தியப் புடிச்சுப் போனதாலயும் ஏதோ, இவனும் டாக்டருக்கு படிச்சு, ஆஸ்பத்திரி வெச்சிருக்கானே, மரியாதைப்பட்ட குடும்பமாச்சேன்னுதான்”

சாரநாதன் “வேணாம் கா, பேச்சு எல்லை மீறிப் போகுது”

செண்பா “அம்மா சொல்றதுல என்ன மாமா தப்பு, ஒரு மாசமா எதுவும் சொல்லாம, கமுக்கமா இருந்துப்புட்டு, இப்படி கல்யாணத்தை உறுதி செய்யுற நேரத்துல காலை வாரினா என்ன மாமா அர்த்தம்?”

காவேரி “என்ன அர்த்தம்னு என்னைக் கேளு, சொல்றேன். சமயம் பாத்து கழுத்தறுக்கச் சொல்லி அவன் ஆத்தாக்காரி உசுப்பி விட்டுருக்கான்னு அர்த்தம்”

அதற்கு மேல் அங்கு நின்றால் எதுவும் பேசி விடுவோமோ என்ற பயத்தில் வாயிலை நோக்கி நகர்ந்த கபிலனை,

“பெத்தவளைச் சொன்னதும் தொரைக்குப் பொத்துக்கிட்டு வருதோ? உன்னைப் பார்க்கன்னு உங்கப்பன் வாராவாரம் காவடி எடுத்தபோது, நீ காலை ஒடச்சிக்கிட்டு அவன் பணத்துல வைத்தியம் பண்ணிக்கிட்டபோது, ரோக்கு ரோக்கா பணத்தைக் கட்டிப் படிக்க வெச்சபோது, ஆஸ்பத்திரி, அழகுக்கு பூசிக்கற பேக்டரின்னு கட்டிக்கிட்டபோது இந்த ரோஷம் ஊர் மேயப் போய் இருந்துச்சோ?”

சாரநாதன் “அக்கா, இத்தோட நிப்பாட்டுறியா, இல்ல, நானும் அவனோட வெளில போயிடவா?”

நீலவேணி “ஆத்தா காவேரி, ஏன் இப்டி வாய்க்கு வந்தபடி பேசுற, உந்தம்பி புள்ளைம்மா அது”

“எம் புள்ளைக்குப் பொறவுதான்மா தம்பியும் தம்பி புள்ளையும். அப்பன் காரன் என்னடான்னா கல்யாணம் கட்டி வருஷக்கணக்கா எம்மவளை வாழாம வெச்சிருந்தான். அவன் மவேன் எம் பேத்தி கல்யாணத்துக்குக் குறுக்க நிக்கிறான். நான் என்ன ****த்துக்கு இவனுங்களுக்குப் பாவம் பார்க்கணும்?”

மறுத்துப் பேச வாய் திறந்த சாரநாதனைக் கை நீட்டித் தடுத்த காவேரி,

“மவேன் சட்டையைப் புடிச்சுக் கேக்கறதை விட்டு என்னை நிப்பாட்டச் சொல்ற… வயசு வித்தியாசம் பாக்காம, ஒரு புள்ளைக்குத் தகப்பன்னு கூட யோசிக்காதபடி, வாரந்தவறாம உன் மொத பொண்டாட்டியையும் புள்ளையையும் நீ பார்க்கப் போறது தெரிஞ்சும் சொந்தத் தம்பியாச்சேன்னு எம் மவளைக் கட்டிக் கொடுத்ததுக்கு, எனக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும்”

கோபத்தில் சிவந்த சாரநாதனையும், கேள்வியாகப் பார்த்த மகளையும் கண்ட செண்பா “இப்ப ஏம்மா அதெல்லாம்?”

“ஆமாண்டீ, நீ கேக்க வேண்டியதை நான் கேக்கறேன் பாரு. எல்லாரும் என்னைத்தான் ஏசுவீக. மூத்தா மவனுக்கு ஆடும் கோழியுமா நல்லா ஆக்கிப்போடு. கொழுப்புல அவன் ஏறி மிதிக்கட்டும்”

“...”

“ஏன் தம்பி, உம் மவனுக்கு சின்னம்மா பெத்த தங்கச்சி மேலதான் பாசமில்லை. அப்பன்ற மருவாதியோ, பயமோ கூடவா இல்லை?”

உண்மையில் சாரநாதனிடமும் இந்தக் கேள்வி வேறு வடிவத்தில் இருந்தது. குந்தவையின் மேல் கபிலன் வைத்திருக்கும் அன்பை அவன் சந்தேகிக்கவில்லை. அப்படி இருந்தும், இந்த வரன் அவளுக்குப் பிடித்தம் என்று தெரிந்தும், கபிலன் ஏன் மறுக்கிறான்?

தொண்டையைக் கனைத்துக் கொண்டவன் “அப்பு, அவங்களை விடு. அந்தப் பையனை நம்ம நுங்கம்மாக்கு புடிச்சிருக்குன்னு உனக்குத் தெரியும்தானே?”

“...”

“அப்பு…”

காவேரி “அவன் ஏன் பேசப் போறான்? அவனுக்குத் தேவையானதெல்லாம் உன் பணமும் சொத்தும்தான். வெவரம் புரிஞ்சதும் வந்து ஒட்டிக்கிட்…”

“ஸ்டாப் இட்”

மேலே பேசிக்கொண்டே சென்ற காவேரியை இடைமறித்த கபிலனின் குரல் அன்று வரை யாருமே கேட்டிராத அளவில் அத்தனை உரத்து ஒலித்தது.

“அப்பா, எனக்கு திருப்பி பதில் குடுக்க அதிக நேரமாகாது. வேணாம்னுதான் பேசாம இருக்கேன்”

“அப்பு!”

“என்ன தம்பி, பயங்காட்டறானா ஒம்மவன்? பேசச் சொல்லேன், என்னதான் சொல்றான்னு கேட்டுருவோம்” - காவேரி எள்ளலுடன் சீறினாள். முயன்று அவளைப் பொருட்படுத்தாத கபிலன்,

“பொண்ணு பார்க்கறதுல இருந்து எல்லாத்துக்கும் எங்கம்மாவைக் கூப்பிடணும். அவங்களுக்கும் பொண்ணை புடிச்சா மட்டும்தான் கல்யாணம். சம்மதம்னா நீங்க யாரைக் காட்டினாலும் கல்யாணம் செஞ்சுக்க நான் ரெடி”

எல்லாரும் அயர்ந்து நிற்க, முதலில் மீண்ட காவேரி “அடி செருப்பால, அவளைக் கூப்பிட்டு சபைல நிக்க வெச்சா, நாளைக்குப் புகுந்த வீட்டுல என் பேத்தியை யாரு மதிப்பா?”

கபிலன் “அப்ப அவங்க பெத்த பையன் மாப்பிள்ளையானா மட்டும் பரவாயில்லையா, அவனுக்கு அங்க என்ன மரியாதை கிடைக்கும், அவனை யாரு, எப்படி மதிப்பாங்க? எல்லாம் தெரிஞ்ச இவங்களே இப்படிப் பேசும்போது, அவங்க வீட்ல நான் என்ன மரியாதையை எதிர்பார்க்க முடியும்? அதைவிட, அந்தப் பொண்ணு எப்படி எங்கம்மாவை மதிப்பா?”

“ஏனப்பு இப்படியெல்லாம் பேசற?” என்ற சாரநாதனின் குரலில் வருத்தமும் ஆதங்கமும் இயலாமையும் இணைந்து ஒலித்தது.

“அவங்க என்னைக் கேட்டதே உங்க சொத்துக்காகதான்னு உனக்குமாப்பா புரியலை? அவங்க யாருன்னே எனக்குத் தெரியாது. அவங்க யாரும் என்னைப் பார்த்தது கூட இல்லை. அப்படியும் பொண்ணைக் குடுக்கத் தயாரா இருக்காங்கன்னா, ஒண்ணு உங்க கிட்ட இருக்கற பணம், தோட்டம் காரணமா இருக்கணும்… இல்ல, எதுக்காகவோ நம்மை கட்டுப்படுத்தற ஐடியா இருக்கணும். இதுல என் மேலான ஈடுபாடோ, எனக்கான மரியாதையோ எங்கேயுமே இல்லையேப்பா”

“...”

“இங்க மட்டும் இல்லைப்பா. கடந்த ரெண்டு, மூணு வருஷமா அம்மாவுமே தினமும் ஏதாவது ஒன்னு, ரெண்டு பொண்ணோட ப்ரொஃபைலையும் ஃபோட்டோவையும் அனுப்பிட்டுதான் இருக்காங்க. போன மாசம் கோவில்ல வெச்சு திடுதிப்புனு ஒரு பொண்ணை பாக்கவே வெச்சிட்டாங்க”

“பெத்த அப்பன்ட்ட ஒரு வார்த்தை சொல்லாம ஏற்பாடு செஞ்சிருக்கா பாரு. அத்தனைத் திமிரு அந்தச் சிறுக்…”

கபிலன் சடாரெனத் திரும்பிப் பார்த்ததில் காவேரியின் பேச்சு தானாக நின்றது.

“அப்பா, எனக்கு கல்யாணம்னு ஒண்ணு நடந்தா என் அம்மா, அப்பா ரெண்டு பேரும் என் கூட இருக்கணும். அது அத்தனை சுலபமில்லைன்னு தெரியும். யாராவது ஒருத்தரை தள்ளி நிறுத்தினாதான் எனக்கு கல்யாணம் நடக்கும்னா அது தேவையே இல்லப்பா”

சாரநாதன் “என்னப்பு இது, நல்லதா பேசிப் பழகு” என்றான் அதட்டலாக.

காவேரி “ மூணு புருஷனும் நாலு பொண்டாட்டியும் வந்து விழாவை சிறப்பிக்க இதென்ன இங்கிலீஷ் காரவுக கல்யாணமா, பாக்கறவன் காரித் துப்ப மாட்டான்?”

கண்களை இறுக மூடித் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்ட கபிலன்,

“அப்பா, உங்களோட (செண்பாவை கை காட்டி) இவங்க வரலாம்னா, அம்மாவோட நிலா அப்பாவும் வரலாம்தானே?”

சாரநாதன் பேச்சற்று நிற்க, செண்பா,

“என்ன மாமா பேசாம நிக்கறீங்க, உங்க மவேன் போகாத ஊருக்கு வழி கேக்கறாப்பல… காலுக்கு உதவாத செருப்பை கழட்டி எறிஞ்சுட்டு, இப்ப நாம சம்பந்தி வீட்டுக்கு என்ன பதில் சொல்றதுன்னு யோசிங்க மாமா”

“ஏய், என்னடீ சொன்ன…” என சாரநாதன் கையை ஓங்கி விட,

காவேரி “அடி தம்பி, உன் மொத பொண்டாட்டியும் மவனும் ஆட்டி வைக்கும்போதெல்லாம் உங்கிட்ட அடிபடத்தானே எம்மவளைக் கட்டிக் குடுத்திருக்கேன். நல்லா அடி”

“...”

“மருமவனே, நல்லா வருவ போ. அப்பனோட சொத்து, சொகம் எல்லாம் வேணும். சொந்தம் மட்டும் வேணாம். அப்படித்தான?”

நடப்பதை அழுகையுடன் அமைதியாக வேடிக்கை பார்த்திருந்த குந்தவையின் முதுகில் ஆங்காரம் மிக, பலமாக ஒன்று வைத்த காவேரி,

“இவ மட்டும் ஆம்பளப் புள்ளையா பொறந்திருந்தா, உன்னை இந்த ஊருக்குள்ளயே விட்டுருக்க மாட்டேன். எல்லாம் என் விதி” என ஓங்கி, ஓங்கித் தலையில் அறைந்துகொண்டு அழ, கபிலனின் முகம் வேதனையைக் காட்டியது.

குந்தவையைத் தன்னிடம் இழுத்துக் கொண்டு,
தொண்டையை செருமியவன் “நுங்கு, நான் சொன்னது உனக்குப் புரியுதான்னு எனக்குத் தெரியல. உனக்காக இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்னா வாழ்க்கை முழுக்க நான் நானாவே இருக்க முடியாதுடா”

“உனக்கு அந்தப் பையனை அவ்வளவு புடிச்சிருந்தா, அவன்தான் வேணும்னு நீ நினைச்சா அவங்க வீட்ல போய் நானே பேசறேன்”

முதல் முறையாகத் தன்னைப் பிடிக்கிறதென்று சொன்ன ஆணின் முக வசீகரமும், அண்ணன் கபிலனின் மறுப்பும், ஆச்சியும் அம்மாவும் போடும் சண்டையும், ஆச்சி அடித்த அடியும் குந்தவையின் மனதை ஊசலாட வைத்ததில் குழப்பம் மிக, அந்தக் கணத்தில் அவளால் அழ மட்டுமே முடிந்தது.

செண்பா “என்னவோ ஒரே வயித்துல பொறந்த மாதிரி அண்ணா, அண்ணான்னு உசிரை விட்டேல்ல, இப்ப நல்லா அழு”

சாரநாதன் “அம்மு, நீ கொஞ்சம் சும்மா இருக்க மாட்ட? நுங்கம்மா, அழாதடா, அப்பா இருக்கேன்ல” என மகளை அணைத்துக் கொள்ள, தங்கையைப் பார்த்த கபிலன் குற்றவுணர்வில் இளகி, அவள் அருகில் சென்றான்.

மிகத் தாழ்ந்த குரலில் “நுங்கு, அந்தப் பையன் உனக்கு ஏதாவது மெஸேஜ் அனுப்பினானா… அது… நீயும் அவனும்…. லவ்…”

குந்தவை பலமாக இல்லை என மறுக்க, கபிலன் நிம்மதியானான்.

“ஸாரி டா நுங்கு” எனத் தங்கையின் தோளில் தட்டியவன் “ நான் வரேம்ப்பா” எனப் புறப்பட்டான்.

“படிச்ச படிப்பு, இருக்குற இடம், திங்குற சோறு, சொந்தமா ஆஸ்பத்திரி, ஃபேக்டரின்னு கொட்டிக் குடுக்க இப்படி ஒரு இளிச்சவாய் அப்பன் கிடைச்சா ஏன் பேச மாட்டான்? ஸாரியாம்ல ஸாரி… அம்மாவோட போறேன்ன அன்னிக்கே இந்தப் பயலயும் அத்து விட்டிருக்கணும்” என்று காவேரி கத்தியது வீதி வரை கேட்டது.

மறுநாள் காலை பத்து மணிக்கு மேல் கிரிதரனிடம் இருந்து கபிலனைக் கேட்டு ஃபோன் வந்தது. தோட்டத்தில் இருந்த சாரநாதன், கபிலனின் வீட்டிற்குச் சென்றான்.

கபிலனின் காரும் பைக்கும் வழக்கம்போல் வாசலில் நிற்க, கதவு பூட்டி இருந்தது. மேல் பிறையில் இருக்கும் சாவியை எடுத்துத் திறக்க, கபிலன் வீட்டில் இல்லை. அதாவது கபிலனைக் காணவில்லை.

சாரநாதன் பாஸ்வேர்ட் நீக்கப்பட்டு மேஜை மேல் இருத்த கபிலனின் லேப்டாப்புடன் வீடு திரும்பினான். தொடர்பு கொண்டதில் அவனது மொபைல் அணைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.

முப்பத்தி இரண்டு வயதை நெருங்கும் மகனைக் காணவில்லை எனில், எங்கே போய்த் தேடுவது, யாரிடம் போய் என்னவென்று கேட்பது? கேட்டால் ஊர் சிரித்துப் போகாதா?

அலைபேசி ஒலிக்க… மாளவிகா! மூன்று முறை எடுக்காது தவிர்த்தாகி விட்டது. இனி முடியாது.

“ஹலோ”

மாளவிகா எடுத்ததுமே படபடத்தாள்.

“கபிலனுக்கு என்னாச்சு, ஏன் ஃபோனை எடுக்க மாட்டேங்கறான்?”

“...”

“ஹலோ… இருக்கீங்களா, என்ன நடக்குது அங்க? கார், பைக் எல்லாம் அங்கேயே இருக்காம். ஹாஸ்பிடல், ஃபேக்டரி, வீடு எங்கேயுமே கபிலனைக் காணுமாம். எம்புள்ளைக்கு என்னாச்சு?”

“ஹலோ, அவன் எனக்கும்தான் புள்ளை. என்னாச்சு, என்னாச்சுன்னா…, உனக்குத் தெரிஞ்சதுதான் எனக்கும் தெரியும். சொல்லாம கொள்ளாம எங்கேயோ போய்ட்டான். மூணு நாளா ஆளைக் காணும். மொபைலை சுத்தமா அணைச்சு வெச்சிருக்கான். சிம் மையும் லொகேட் பண்ண முடியலை. போதுமா?”

“உங்க கிட்ட கூட சொல்லாம போய் இருக்கான்னா, அங்க என்னவோ நடந்திருக்கு. அவனை யாரு என்ன சொன்னா, உங்க அக்காவா, அம்மாவா… எம்புள்ளை மட்டும் முழுசா திரும்பி வரலை… ஒருத்தரையும் நான் சும்மா விடமாட்டேன்”

“உன்னால ஆனதை செய். இப்ப ஃபோனை வை”

பட்டென அழைப்பைத் துண்டித்த சாரநாதனுக்கு, விவாகரத்தாகி விலகிப் போய் இருபத்தியேழு வருடங்களான பின்பும், தன்னையும், தன் குடும்பத்தையும் மாளவிகா பீடித்து ஆட்டுவிப்பதான உணர்வு எழுந்ததில், தலையை உலுக்கிக் கொண்டான்.

இரண்டு முழு நாட்கள் செய்வதறியாது கழிய, சாரநாதன் வீட்டில் யாரிடமும் பேசாது, பேசப் பிடிக்காது, பித்துப் பிடித்தவன்போல் சுற்றினான். நீண்ட வருடங்களுக்குப் பின், முருங்கைத் தோட்டத்துக் கொட்டாரத்தில் ராத்தங்கினான்.

மருத்துவமனையில், ஃபேக்டரியில் விசாரிக்கத் தொடங்கினர். முன்பே சியாமளா இல்லாது தடுமாறிய காஸ்மெடிக்ஸ் ஃபேக்டரி, கபிலனும் இல்லாததில் இரண்டே நாள்களில் தத்தளிக்கத் தொடங்கியது.

மூன்றாவது நாள் காலை ஹாஸ்பிடல் செலவுக்கான பணத்திற்காக மீண்டும் கிரிதரன் அழைக்க, ஹாஸ்பிடல் தொடங்கியது முதல் அதன் வங்கிக்கணக்கு கபிலனுக்கும் சாரநாதனுக்கும் ஜாயின்ட் அக்கவுன்ட்தான் எனினும், சாரநாதன் அதை கையாள்வது இதுதான் முதல்முறை.

மருத்துவமனை சீராக நடக்கத் தொடங்கியதுமே ஆடிட்டரைக் கை காட்டி விட்டு ஒதுங்கிக்கொண்ட சாரநாதன், அவ்வப்போது வங்கி அறிக்கையைப் பார்ப்பது, கபிலனிடம் பொதுவான வரவு, செலவைக் கேட்டுக் கொள்வதோடு சரி.

கணேஷிடம் காசோலையில் கையெழுத்திட்டு அனுப்பிய பின், கபிலனின் மடிக்கணினியில், மருத்துவமனையின் அன்று வரையிலான அந்த மாத வரவு செலவை மேலோட்டமாக நோட்டமிட்ட சாரநாதன், ஒரு கணம் உருகி பின் உறைந்தான்.

ஏதோ தோன்ற, நலம் காஸ்மெடிக்ஸின் கணக்கையும் பார்த்தவனுக்கு எல்லாரையும், எல்லாவற்றையும் அடித்து நொறுக்கும் வேகம் வந்தது.

‘சொத்து மேல ஆசை, வந்து ஒட்டிக்கிட்டான்… திங்குற சோறு… காலுக்கு உதவாத செருப்பு… ஆத்தாளும் மவளும் இன்னும் என்னல்லாம் சொன்னாங்க’

‘என் அப்பு ஒத்தக் காசை எடுக்கலையே’

‘ஃபுட்பால் வெளையாடி லட்ச லட்சமா சம்பாதிச்சவனுக்கு, மெரிட் ஸீட்டுக்கு பணம் கட்ட முடியாதா? நான்தான் கட்டுவேன்னு புடிவாதம் செஞ்சது நான்தானே?’

‘இந்த ஹாஸ்பிடல் வேணாம், வேலைக்கு போறேன்னவனைத் தடுத்ததும் நான்தானே?’

‘மக்க மனுஷங்க குணத்தை என்னை விட அப்புதான் நல்லா புரிஞ்சு வெச்சிருக்கான்’

கபிலன் தன்னிடம் தன் இடத்தை, பணத்தை, உரிமையைப் பாராட்டாது விலகியே நின்றிருக்கிறான் என்பது அந்தத் தகப்பனுக்கு வெகுவாக வலித்தது.

நலம் மருத்துவனையின் மற்ற மருத்துவர்களைப் போலவே ஒரு டாக்டருக்கான சம்பளமும், கூடுதலாக நிர்வாகிக்கான சம்பளமும்தான் கபிலனின் தனிக் கணக்கில் சென்றிருந்தது. மற்ற அனைத்து வரவு செலவுமே உரிமையாளர் சாரநாதனின் பெயரில்தான் நடந்தது. காஸ்மெடிக் தொழிற்சாலையிலும் இதே கதைதான். இன்னும் சொல்லப்போனால், அங்கே சியாமளாவை விடவே கபிலனின் வருமானம் குறைவாக இருந்தது.

அன்று மாலையில் அழைத்த சம்பந்தி வீட்டினர், வெள்ளிக்கிழமை ஏற்பாடுகள் குறித்துக் கேட்க, மகனின் விருப்பமின்மையைக் கூறிய சாரநாதன் “எம் மகளுக்கும் உங்க மகனுக்கும் மட்டும் கல்யாணம் பேசலாமா?”

“வீட்ல கலந்து பேசிட்டு சொல்றேன்” என்றவர், உடனேயே காவேரியிடம் தனித்துப் பேசி, பெண்ணுக்கு என்ன செய்வார்கள், சொத்தில் பங்கு என்ன என்று விசாரிக்க, சாரநாதன் முறைத்த முறைப்பில் ஆயும் மகளும் வாயே திறக்கவில்லை.

மேலும் ஒரு நாள் விருதாவாகக் கழிய, காலையில் மாடு கறக்கும்போதே, தோய்க்கும் கல்லின் மேல் இருந்த அலைபேசி அழைத்தது.

‘அப்புவா இருக்குமோ?’

மாடு உதைத்து விடாத தொலைவில் பால் பாத்திரத்தை வைத்தவன், மொபைலை எடுக்க, சியாமளா!

‘இந்தப் பொண்ணா…, இவ்வளவு காலைல ஏன்…’

“ஹலோ அங்கிள், நான் சியாமளா. நான் சொல்றதை பதட்டப்படாம கேளுங்க” என்றவளின் குரலில் அதீத பதட்டம்.

“என்னாச்சும்மா?”

“அது… அங்கிள்… வந்து… கபிலன் சாருக்கு ஃபுட்பால் விளையாடும்போது கால்ல அடிபட்டு இங்க கொல்லங்கோடு ஹாஸ்பிடல்ல இருக்கார். எங்கப்பாதான் அங்கிள் ட்ரீட் பண்றார். பேசறேளா?”

“ஹலோ மிஸ்டர் சாரநாதன், நான் நாராயணன்…”

கூடவே கிளம்பிய குந்தவையை மறுத்துவிட்டு இறுக்கமும் கலக்கமுமாகக் கிளம்பியவனிடம் இருந்து பிடிவாதமாக சாவியைப் பிடுங்கி வண்டியை எடுத்தான் செழியன்.

இதோ, இன்னும் நாலரை கிலோமீட்டர்களில் கொல்லங்கோடு.

சாரநாதனின் மனதில் தற்சமயம் உழன்ற ஒரே கேள்வி:

கபிலன் ஏன் அல்லது எதற்காக சியாமளாவின் ஊருக்கு வந்தான்?

**********************

அன்று ஆருத்ரா தரிசனம். நாராயணன் அவசரம் என அதிகாலையில் கிளம்பிச் சென்ற சிறிது நேரத்திலேயே, களி, ஏழுகறிக் கூட்டு எனத் தன் வேலையைத் தொடங்கிவிட்ட சுனந்தா, மகளை எழுப்பினாள்.

“ஷாம்ளா, மார்கழி மாசம். திருவாதிரை. எழுந்து வாசல்ல கோலம் போடுடீ. நீ ஸ்னாநம் பண்ணிட்டு வந்தா நைவேத்தியம் பண்ணிடலாம்”

“அப்பா எங்கம்மா?”

“யாருக்கோ எமர்ஜென்ஸின்னு ஃபோன் வந்தது. ஹாஸ்பிடல் போய் இருக்கார்”

சுணக்கத்துடன் செய்தாலும், அம்மா சொன்னபடி செம்மண் இட்டுக் கோலம் போட்டவள், குளித்து வந்ததும் தாயும் மகளும் ஐந்தரை மணிக்கே கூட்டுக் களித்தனர்.

சியாமளாவின் மொபைல் ஒலிக்க, அறைக்குள் சென்று எடுப்பதற்குள் லேண்ட்லைன் அலறியது. சுனந்தா எடுத்தார்.

“சுனந்தா, ஷாம்ளாவை பேசச்சொல்லு… இல்ல.. அவளை உடனே ஹாஸ்பிடலுக்கு வரச்சொல்லு… ம்… அவ தனியா வர வேண்டாம், நீயும் வா, க்விக்” என்ற நாராயணன், காலை கட் செய்திருந்தார்.

நாராயணனின் அரதப் பழசான கைனடிக் ஹோண்டாவை (ஃபர்ஸ்ட் எடிஷன்!) தாஜா செய்து, அம்மா சுனந்தாவை டபுள்ஸ் ஏற்றிக்கொண்டு, மருத்துவமனையை நோக்கி விரைய, அங்கு சிறகொடிந்த பறவை போல் அரை மயக்கமாகப் படுத்திருந்த கபிலனைப் பார்த்த சியாமளா மட்டுமின்றி, சுனந்தாவுமே அதிர்ந்துதான் போனார்.

எதையோ கேட்க முயன்ற சுனந்தாவை அமைதியாக இருக்கச் சொன்ன மருத்துவர், இருவரையும் அறுவை சிகிச்சைக்கான விவாதத்தில் இருந்த நாராயணனிடம் அழைத்துச் சென்றனர்.

மகளைக் கண்டதும் எழுந்து வந்து, தோளோடு அணைத்துக் கொண்டவர் “ரிலாக்ஸ் டா. ஹி வில் பீ ஆல்ரைட். நாங்கள்லாம் எதுக்கு இருக்கோம்?”

“என்னாச்சுப்பா?”

“தன்னைத் தானே காயப்படுத்திக்க கடுமையா விளையாடி இருக்கான் (rigorous playing to self harm). ஒரு grafting ப்ரொஸீஜர் பண்ணனும். திஸ் ஈஸ் நாட் த ஃபர்ஸ்ட் டைம் யூ நோ. சின்ன வயசுல இதே கால்ல, இதே போல ஒரு மேஜர் சர்ஜரி ஆகி இருக்கு”

சியாமளாவிற்கு, கபிலன் கோட்டக்கல்லில் ஒரு முறை இதுபோல் பேய்த்தனமாக விளையாடியது நினைவிற்கு வந்தது.

நாராயணன் “ஷாம்ளா, கபிலனோட மொபைலை ஒபன் பண்ண முடியலை. அவன் அப்பாக்கு சொல்லணும். என் கிட்ட அவர் நம்பர் இல்லை. நீ கால் பண்ணு, நான் பேசறேன்”

சாரநாதனிடம் பேசியவர், மாளவிகாவிற்கும் தெரிவிக்கச் சொன்னார். ஆரம்ப அதிர்ச்சிக்குப் பின் மாளவிகா,

“கொல்லங்கோடா, அது உன் ஊர் இல்ல?”

கபிலனை அருகில் சென்று பார்க்க விரும்பியவளை
நாராயணன் மறுத்துவிட்டார்.

“இந்த நிலமைல தெரிஞ்ச முகங்களைப் பார்த்தா சங்கடப்படுவான் டா. முரண்டு புடிச்சு காலை உதறினா அனஸ்தேஸியா வேலை செய்யாது. சர்ஜரி ஆனதும் பார்க்கலாம். நீ இங்கேயே வெய்ட் பண்ணு, ஓகே?”

“ம்”

“இதுல ஒரு கையெழுத்து போடு” என அறுவை சிகிச்சைக்கான அனுமதி படிவத்தை நீட்ட, சியாமளா திகைத்தாள்.

‘நானா? எந்த உறவில், உரிமையில் போடுவது?’

நல்ல வேளையாக அதில் கையெழுத்து மட்டும்தான் போட வேண்டி இருந்தது. போட்டாள். கபிலன் வெளி வரக் காத்திருந்தாள்.

******************

Grafting எனப்படும் அறுவை சிகிச்சையில், பாதிக்கப்பட்ட எலும்பு, நரம்பு, தசை அல்லது தசை நார்களை உடலின் வேறொரு பாகத்திலிருந்தோ, வெளியிலிருந்தோ இணைத்துத் தைப்பர்.

முன் தயாரிப்பு, அறுவை சிகிச்சை நடந்த தொண்ணூறு நிமிடங்கள், மயக்கம் தெளிந்து, ஐசியூவிற்கு வர எடுத்துக் கொண்ட நாற்பது நிமிடங்கள், கபிலன் மருந்தின் கலக்கம் நீங்கி, மெலிதாகப் பதிலளிக்க எடுத்துக் கொண்ட நேரம் என முற்று முழுதாக ஐந்து மணி நேரக் காத்திருப்பிற்குப் பின் சியாமளா கபிலனைக் காணச் சென்றாள். அவள் பெற்றோர் அறைக்குள் ஓரமாகப் பின் தங்கி நின்றனர்.

“கபீஷ்…”

“...”

“கபீஷ்”

கண்களைத் திறந்து மூடிய கபிலன், மீண்டும் விழித்து “நீதான் போய்ட்டல்ல, இப்ப ஏன் வந்த?”

“என்னை விடுங்கோ, நீங்க ஏன் எங்க ஊருக்கு வந்தேள்?”

“ஏன், கொல்லங்கோடை யாராவது உன் பேர்ல எழுதி வெச்சிருக்காங்களா?”

“ம்ப்ச்… ஏன் இப்டி, அங்கிள் கிட்ட கூட சொல்லாம, ஃபோனை அணைச்சு வெச்சு…”

“நீயும்தான் சொல்லாம போய்ட்ட”

“நீங்கதானே போகச் சொன்னேள்?”

“சரி, போ”

“...”

“போன்னா போயிடு”

ஓரு முறை கபிலனின் மயக்கம் கலந்த விழிகளை நேராகச் சந்தித்த சியாமளா திரும்பி நடக்க, கபிலன்

“நான் போன்னா, என்னை விட்டுப் போயிடுவியாடீ?”

ஒரே பாய்ச்சலில் அவன் அருகே வந்தவள் “கபீஷ், கம் அகெய்ன்”

“You heard it right” என்ற கபிலன் சியாமளாவிற்குக் கையை நீட்டினான்,

கபிலன், சியாமளா இருவருமே நாராயணனைப் பார்க்க, அவர் சம்மதமாகத் தலையசைத்தார்.
சுனந்தாவின் விழிகள் கசிந்திருந்தாலும், மறுப்பாக எதையோ சொல்ல வர, நாராயணன் மனைவியின் கையைப் பற்றி அழுத்தி, வெளியே அழைத்துச் சென்றார்.

“சுனந்தா, நான் சொல்றதை பொறுமையா கேளு. இனிமேலும் அவாளை காக்க வைக்கறது சரியில்லை. இத்தனை ஸ்லோகம், பாட்டு பாடற. சியாமளான்னா யாருன்னு உனக்குத் தெரியும்தானே?”

“...”

“கரும்புல இருந்து வந்ததால இனிமையானவள். சியாமளா தேவி, மற்ற செல்வம், ஆரோக்கியத்தை விட அதிகம் மன அமைதியைத் தருபவள். இப்ப கபிலனுக்குத் தேவை சியாமளாவும் அவளால கிடைக்கற சந்தோஷமும். உனக்கு கபிலனைப் பிடிக்கும்னு எனக்குத் தெரியும். மனசார அக்ஸெப்ட் பண்ணிக்கோம்மா”

“உங்களுக்கு ஓகேவான்னா?”

“எம் பொண்ணுக்காக இங்க வரைக்கும் வந்திருக்கான். வேறென்ன வேணும்?”

இருவரும் உள்ளே பார்க்க, சியாமளாவின் கையைத் தன் நெஞ்சில் வைத்தபடி, வலி நிவாரணியின் பிடியில் கபிலன் உறங்கி இருக்க, சியாமளா தன்னை மறந்து ஒரு மாதிரி trance நிலையில் இருந்தாள்.

அரவம் கேட்டுத் திரும்ப, மாளவிகா, ஆதி, ஜெயச்சந்திரன் மூவரும் படியேறி வர, சாரநாதனும் செழியனும் லிஃப்ட்டிலிருந்து வெளிப்பட்டனர்.
 
Author: VedhaVishal
Article Title: குறுநகை போதுமடி! 13
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

SRD.Rathi

New member
Jun 19, 2024
7
9
3
Cumbum
காவேரி 🤬🤬 இப்படி அவனை எல்லோரும் போட்டு பாடா படுத்துவதற்கு அவனை சின்ன வயசுலேயே ஒரு orphanage la சேர்த்து..... அம்மா அப்பா இல்லாம.... கூட இருக்குற மாதிரி வச்சு அவனை ஒதுக்கி வைக்காம.... நிம்மதியா அவன் வேலையை பார்த்து அவன் இருந்திருப்பான்
 
saradhavasan

Active member
Oct 3, 2024
101
28
28
சென்னை
கபிலன் தன் மனிதர்களை சரியா ..சொல்லப்போனால் துல்லியமாக புரிஞ்சு அதை நடைமுறைப்படுத்த, தன் எல்லைகளை நிரூபித்துக் இருக்கான்.
நாளை பின்ன சொத்து பிரிச்சாலும் அதை கபிலன் வளர்த்து, பெருக்கிருக்கானே தவிர குறைவில்லை..ஆனால் அதை காவேரியும், செண்பாவும் ஒத்துக்கொள்ள மனம் இருக்காது..

படுபாவி எப்படில்லாம் பேசிட்டாங்க..
கபிலநை பொருத்தவரை எல்லாம் போலி உறவுகள்..

சியாமா..கெட்டியா பிடிச்சுக்கோ..
 
Last edited:
  • Love
Reactions: VedhaVishal

S HEMA

New member
Mar 18, 2026
21
17
3
CHENNAI
V

Very emotional epi. Well drawn. Painful. Kaveri and Shenbaa should be paid back for what they have sown
 
  • Love
Reactions: VedhaVishal