• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

குறுநகை போதுமடி! 15

VedhaVishal

Administrator
Staff member
Jun 17, 2024
89
383
53
Chennai
குறுநகை போதுமடி! 15

ரவின் ரகசியங்களின் மீது வெளிச்சம் பாய்ச்ச முயன்றது விடிவெள்ளி. பின்முற்றத்தில் சட சடவென விழுந்த கனத்த மழைத் துளிகளின் சத்தம் கேட்டுத் தூக்கம் கலைந்த கபிலனுக்குக் குளிரவும், தன்னிச்சையாகப் போர்வையை இழுக்கப் போக… காணவில்லை!

“டட்.. டட்…”

‘வாசக் கதவை யாரோ தட்டுறாங்களோ?’

கண்களை இருட்டுக்குப் பழக்கிப் பார்க்க, ஹால் கடிகாரம் மணி எட்டரை என்றது. ‘அட, மழை இருட்டுதானா!’

சியாமளாவைத் தேட, சற்றுத் தள்ளி மொத்த போர்வையையும் இழுத்துப் போர்த்திக்கொண்டு அதனுள் சு(உ)ருண்டிருந்தாள். அருகில் நகர்ந்து, ஆரஞ்சுத் தோலி போல் போர்வையை உரிக்க, அவனது டீ ஷர்ட் கண்ணுக்குப் புலப்பட்டது. அவள் தோளைப் பிடித்து உலுக்கினான்.

“தொந்தூஸ்… கெட் அப்”

“ப்ளீஸ் கபீஷ்… கொஞ்சம் தூங்கிக்கறேனே”

கதவு மீண்டும் தட்டப்பட்டது.

“யாரோ கதவைத் தட்டறாங்க பாரு”

“ம்ப்ச்… யாருன்னு பாருங்கோளேன்”

“சரி, என் சட்டையைக் குடு”

“...”

“ஹலோ க்யூன்” என பின்புறத்தில் ஒரு அடி போட்டான். அசராத சியாமளா,

“கேரளத்துல ஆம்பளை எல்லாம் சட்டை இல்லாமலே போய்க் கதவைத் திறக்கலாம், தெரியுமோ?”

“அடிங்க… என்னை அணில் கடிச்ச பழம் மாதிரி வெச்சு செஞ்சுட்டு ட்ரெஸ் கோட் (dress code) வேறயா?”

ஒற்றைக் கண்ணைத் திறந்து கபிலனைப் பார்த்தவள், ஒரே உருளலில் அவனருகே வந்து, அவன் கன்னத்தைக் கடித்துவிட்டு எழுந்து கொள்ள, கத்தப் போன கபிலன், அவள் அணிந்திருந்த ஸ்கர்ட்டைப் பார்த்து அமைதியானான்.

“எழுந்தாச்சா, இன்னைக்கும் அம்மைக்கு அழைக்கணுமோன்னு நினைச்சேன். சூடா சாப்பிடுங்கோ. மாப்ள எங்க?” என்ற பெண் குரல் கேட்டது.

இரண்டு நாள்களாக மதிய உணவை வாங்கக் கூட எழாது உறங்கி விட, அந்த மாமி சுனந்தாவை அழைத்து விட்டார்.

உணவுக் கூடையை டைனிங் டேபிளிலும், பால் பாட்டில்களை ஃப்ரிட்ஜிலும் வைத்து, மீண்டும் வந்து போர்வைக்குள் புகுந்தவளை, அதே வேகத்தில் கபிலன் தன்னோடு இறுக்க, சியாமளாவின் மொபைல் அழைத்தது.

சுனந்தாதான். நேரத்துக்கு எழுந்து, சாப்பிட்டு, உறங்கச் சொல்லிக் கூடவே கபிலனை கவனித்துக் கொள்ளச் சொல்லி, அவனிடமும் நலம் விசாரித்த பிறகே ஓய்ந்தார்.

“ஊஃப்… டைம் டேபிள் போட்டு ஹனிமூன் கொண்டாடற முதல் ஜோடி நாமதான்டீ”

“மென்ட்டர் பொண்ணை கல்யாணம் பண்ணின்டா அப்டிதான்”

“ஏன்டீ சொல்ல மாட்ட, ஸ்டாக்கிங் (stalking), சென்டிமென்ட், மெலோ ட்ராமா, வெளிநடப்புன்னு வருஷக்கணக்கா கார்னர் பண்ணி கல்யாணம் செஞ்சுக்கிட்டு ஹனிமூன்ங்கற பேர்ல என்னை ஹவுஸ் அரெஸ்ட்ல வெச்சு… நியாயமா உன் மேல நான் கேஸ் போடணும்”

“போடுங்கோளேன்… நம்மைப் போல… அதுவும் படுத்துடும்” எனக் கண் சிமிட்டியவளைக் கண்டு கபிலன் உரக்கச் சிரித்தான்.

“கபீஷா… எழுந்திருக்கலாமா?”

“என்ன அவசரம், ஆடாம அமைதியா இருடீ”

திருமணமாகி இன்று நான்காவது நாள். இரண்டு இரவுகளும் மூன்று பகல்களும் கடந்த வேகமே தெரியவில்லை. சியாமளாவிடம் எசகு பிசகான நிலையில் தன் காதலைச் சொன்ன பிறகு, மருத்துவமனை நாள்களில் நேரிலும், பின் அலைபேசியிலும் கூட இந்த இரண்டு மாதங்களில் அவர்கள் வெகுவாக எதையும் பேசி விடவில்லை.

கபிலனைப் பொறுத்தவரை பேச்சோ, விளக்கமோ தேவை என்றே அவனுக்குத் தோன்றவில்லை. முதல்நாளே அவனது ஈர்ப்பும் வேகமும் வேட்கையும் கண்ட சியாமளா சற்றே மிரண்டாள்.

“க்யூனு, ஒன்னும் சொல்லாதடீ, ப்ளீஸ்” என்றவனிடம் நறுக்கிய மாம்பழத் துண்டங்களை அரைகுறையாகக் கடித்துத் தனதாக்கிக்கொள்ளும் குழந்தையின் அவசரம் இருந்தது.

கபிலனின் காலை எண்ணி ஒடுங்கியவளிடம் “நான் ஒன்னும் உன்னைக் கடிச்சுத் தின்னுட மாட்டேன்” என்று வன்மையாக இதழில் பதிந்தவன், மென்மையும் ரசனையுமாக “தித்திப்புடீ நீ “ என்றதில் கிறங்கினாள் சியாமளா.

இயல்பாகவே இது விஷயத்தில் இருவரிடமுமே ஆதிக்கமும் ஆக்கிரமிப்பும் வெளிப்பட்டது என்பதே நிஜம்.

கபிலனின் தயக்கத்தையும் மனத் தடைகளையும் பெரும்பாலும் தகர்த்திருந்த சியாமளா, விரைவில் சகஜமாகித் தன் இயல்புக்கு மீண்டு, அவனை சீண்டத் தொடங்கினாள்.

“ஒத்து வராது, சரிப்பட்டு வராது, போ போன்னு சொல்லிட்டு, இதென்ன இப்டி?”

“...”

“ஆமா, யார் நீங்க? உங்களுக்குதான் என் மேல எந்த இன்ட்ரெஸ்ட்டும் இல்லையே”

“ஏய், வேணாம்…”

“அதைக் கூட விடுங்கோ. இதுவரைக்கும் என்னைப் புடிச்சிருக்குன்னு ஒரு தரமாவது சொல்லி இருக்கேளா?”

“சொல்லலைன்னா புடிக்கலைன்னு அர்த்தமா? எங்கேயாவது இரும்புக்கு என்னைப் புடிக்கலைன்னு மேக்னட் கவலைப்படுமா?”

“ஓ… அப்டி!”

“என்ன ஓ… அதான் டெஸ்ட்டிங்க்கு கிரிதரனை அனுப்பினேல்ல?”

“யாரு, நானா?”

“பாவம் டீ அவன். நமக்குக் கல்யாணம்னு தெரிஞ்சதும் அவன் முகம் போன போக்கு…”

“அவர் கிட்ட நான் பேசினேன்”

“தெரியும். நைஸ் ஆஃப் யூ டா”

*****************

இரண்டாம் நாள் இரவு குளித்துவிட்டு வந்த சியாமளா, மெத்தென நடுக் கூடத்தில் விரிக்கப்பட்டிருந்த படுக்கையையும்,
வலது காலை ஒரு கோணத்தில் வைத்து பேலன்ஸ் செய்தபடி, சுற்றி தலையணைகளால் அணை கட்டிக் கொண்டிருந்த கபிலனையும் கண்டு திகைத்தாள்.

அருகில் வந்தவள் குரல் உள்ளே போய்விட “கபீஷ், ஹால்லயேவா… என்னதிது?”

“வேலை, கவலை எதுவுமில்லாம, டிஸ்டர்ப் செய்ய யாரும் இல்லாம
இது போல ஒரு வீடு, தனிமை, சுதந்திரம்… எல்லாம் ஒரு சேர கிடைக்கறது கஷ்டம்டா திதிப்ஸ். பிலீவ் மீ. யூ வில் என்ஜாய் திஸ்”

“ஏன் கபீஷ் அப்படி சொல்றேள், இனிமே இங்க வர மாட்டோமா என்ன?”

“அஃப்கோர்ஸ் வருவோம், ஆனா ஸாரும் மேடமும் (நாராயணனும் சுனந்தாவும்) இருப்பாங்களே”

“ம்… ஆனா உங்க கால்…”

கபிலன் “ஏன், என் காலுக்கென்ன?” என காட்டமாகக் கேட்கவும், சியாமளா மேலே பேசவில்லை. கை வேலையை முடித்த கபிலன்,

“நான் என்ன சொல்லிட்டேன்னு, நீ இப்ப சோகமா இருக்க, போய் ட்யூப் லைட்டை அணைச்சுட்டு, நைட் லேம்ப்பை போட்டு வா”

அது சுனந்தாவின் சிறுவயதில் வாங்கிய விளக்கு. மிகச் சிறிய பல்புதான். ஆனால், ட்ரான்ஸ்ஃபார்மருடன் கூடிய விளக்கு. பழகியதும் பிரகாசமான வெளிச்சம் தரும்.

நல்ல அகலமும் நீளமுமான அந்தக்காலத்து மாம்பலகை ஊஞ்சலின் சங்கிலியில் சாய்ந்து கால் நீட்டி அமர்ந்திருந்த கபிலன், சியாமளாவைத் தன் மீது சாய்த்து அணைத்துக்கொண்டான். சரியாக இருந்த காலால் தரையை உந்தி, மிக மெதுவாக ஊஞ்சலை ஆட்டினான்.

“ஷியா”

“...”

“ஷியா பட்டர்”

“ம்…”

“எப்டி இருக்கு?”

கழுத்தைப் பின் பக்கமாக வளைத்து, கபிலனின் முகவாயில், கழுத்தெலும்பில் என வாய்க்கெட்டிய இடத்தில் முத்தம் கொடுத்த சியாமளா
“connoisseur டா நீ (ரசனைக்காரன்)” என முனகினாள்.

சீக்கிரமே விளக்கணைத்து, நீண்டு கிடந்த இரவை விழித்திருந்து மேலும் நீட்டித்தனர். விடியலின் சப்தங்களை, பொழுது புலர்வதை, ஊர் எழுவதை ரசித்துவிட்டு உறங்கினர்.

அன்று வெள்ளிக்கிழமை. குளிர் காற்று சிலுசிலுவென்றதில், பக்கத்தில் தேட, சியாமளாவைக் அங்கில்லை. ஃபில்டர் காபியின் மணம் வந்தது. திரும்பிக் குப்புறப் படுத்து, நிமிர்ந்து பார்த்தான். கொல்லைப் புறக் கதவு திறந்திருக்க, எழுந்து சென்ற கபிலன், தான் பார்த்த காட்சியில் திகைத்து, ஈர்க்கப்பட்டவனாக, பின் முற்றத்துத் திண்ணையில் அமர்ந்துகொண்டான்.

ஏனெனில், அந்நேரத்துக்கே குளித்திருந்த சியாமளா, தலையில் ஈரத் துண்டுடன் பவழமல்லி, செம்பருத்திப் பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தாள். கடைசியாக துளசிக் கதிர்களைப் பறித்துவிட்டு வீட்டை நோக்கி வந்தவள், கபிலனை அங்கே எதிர்பாராது திடுக்கிட்டு நிற்க, அவன் அவளை மேலும் கீழும் பார்த்து நமுட்டுச்சிரிப்பு சிரித்தான்.

“என்ன சிரிப்பு?”

“ இல்ல, இந்த தக்ஷின்சித்ரா, ரங்லா பஞ்சாப்னு வில்லேஜ் தீம் மியூஸியம் மாதிரி, ஹனிமூன் பேக்கேஜ்ல இந்த சீனும் இருக்கோன்னு…”

‘பக்’கெனச் சிரித்துவிட்ட சியாமளா “ஹேப்பி பர்த் டே கபீஷ். அப்பா கோவில்ல பூஜைக்கு சொல்லி இருக்காளாம். இங்கெல்லாம் சீக்கிரமே நடை சாத்திடுவா. அதான்…”

கபிலன் அணைக்க வர, சியாமளா அநிச்சையாக நகரவும் முகம் மாறியதைக் கண்டு,

“ஹலோ, நீங்க நினைக்கற மாதிரி ஒரு சுக்குமில்லை” என்றவள், குரலைத் தழைத்துக்கொண்டு “ம்… *******. வேணாம் கபீஷ், கருப்புசாமி கோவிலுக்கு வேற போகணும், ஒய் ரிஸ்க்?” எனவும் முகம் சிவந்த கபிலனின் வெட்கச் சிரிப்பு கோடி ரூபாய் பெறும்.

வேஷ்டி, சட்டையில் தயாராகி வந்த கபிலனைக் கண்ட சியாமளா கண் கலங்கி விட்டாள். ஏனென்றால், அவள் பரிசளித்த புதிய ஷர்ட்டை விடுத்து, அவள் முதல் முதலில் வாங்கி அனுப்பிய ப்ரின்ட் போட்ட கசவு ஷர்ட்டை முதல் முறையாக அணிந்திருந்தான்.

மென்மையாக அணைத்துக் கொண்டவன் “ஏய்… தொந்தூஸ், ஏன்டீ அழற, உனக்குப் புடிக்கும்னுதானே இதைப் போட்டேன்”

“...”

“ஷியா…”

“இது உங்க கிட்ட இன்னும் இருக்கும்னே நான் எக்ஸ்பெக்ட் பண்ணலை கபீஷ். நான்தான் உங்களை ஃபோர்ஸ் பண்ணிட்டே…”

ஒரு கையால் அவளது தாவாங்கட்டையை அழுத்திப் பிடித்து “உளறின… கொன்னுடுவேன்” என்றவன், பிரிந்த அவள் இதழ்களில் அதிவன்மையாகப் பதிய, சியாமளா திமிறினாள்.

“என்னடீ?”

“கருப்புசாமி…”

“எல்லாம் பரவால்ல. அவருக்குப் புரியும். இல்லைன்னா…”

“???”

“பெட்டர் ஹி அன்டர்ஸ்டாண்ட்ஸ்” என்ற கபிலனின் குரலில் இருந்த தீவிரத்தில் சியாமளா புன்னகையுடன் கார் சாவியைக் கையில் எடுத்தாள்.

முதலில் கொல்லங்கோடிலேயே இருந்த விசாலாக்ஷி உடனுறை விஸ்வநாதஸ்வாமி கோவிலுக்குச் சென்று ஏற்பாடு செய்திருந்த பூஜையை முடித்துக் கொண்டு, சிங்கஞ்சிறா கருப்புசாமி கோவிலுக்குச் சென்றனர்.

இடையில் சாரநாதன், குந்தவை, செழியன், மாளவிகா, ஜெயச்சந்திரன், ஆதி, மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்கள், சியாமளாவின் பெற்றோர், நவீன், அவன் மனைவி என வரிசையாக கபிலனின் பிறந்தநாளுக்கு வாழ்த்தினர்.

குந்தவையோடு இணைந்து கொண்டு வாழ்த்திய செண்பாவிற்கு, கபிலன் வெகு இயல்பாக நன்றி சொன்னான்.

இயற்கைச் சூழலில் படர்ந்த ஆலமரத்தின் கீழே கோவில் கொண்டுள்ள கருப்பஸ்வாமி அசாத்தியமான சான்னித்யத்துடன் இருந்தார். கூட்டம் அதிகம் இல்லாவிட்டாலும், வந்திருந்தவரில் பலரும் ஆடும் கோழியும் காணிக்கையாக வெட்ட, அங்கேயே அவற்றை சமைத்து உணவு பரிமாறினர்.

கபிலன் “க்யூன், இந்தக் கோவிலுக்கு நீங்க ரெகுலரா வருவீங்களா?”

“லீவுக்கு இங்க வரும்போதெல்லாம் அநேகமா ஒரு விஸிட் குடுத்துடுவோம். இது உங்க கால் சரியாகறதுக்காக அம்மாவோட ஸ்பெஷல் வேண்டுதல்” என்றவள், கோவில் அலுவலரிடம், காணிக்கைக்கென பெரும்பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொண்டாள்.

சியாமளாவின் பதிலையும் செயலையும் உள்வாங்கிய கபிலன், சிறிது இடைவெளிக்குப் பின் “ஆன்ட்டீ நிறைய மாறிட்டாங்க இல்ல?”

“அம்மாக்கு கபிலனா உங்களை எப்பவுமே பிடிக்கும் கேட்டேளா. இப்ப … மாப்ளை. ரொம்பவே ஸ்பெஷல்”

“ம்….”

“எங்கிட்ட அம்மாவோட ஆசை, எதிர்பார்ப்பு எல்லாம் வேற. அவாளையும் தப்பு சொல்ல முடியாது, இல்லையா?”

“ஹேய்… இப்ப எதுக்கு வக்கீல் அவதாரம் எடுக்கற, நான் சும்மாதான் கேட்டேன், கூல் மா”

தரிஸனம் முடிந்து, அங்கேயே மாமி கட்டிக் கொடுத்த மிளகாய்ப்பொடி இட்லியையும், கேசரியையும் உண்ட பின், பத்தரை மணிக்குள் வீடு திரும்பினர்.

வழியிலேயே உறங்கிவிட்ட கபிலனுக்கு வீடு வந்ததுமே மாத்திரைகளைக் கொடுத்து, வலுக்கட்டாயமாகத் தூங்க அனுப்பினாள்.

மதியம் மாமியின் வழக்கமான உணவை மறுத்திருந்த சியாமளா, மட்டர் பனீர், கபிலனுக்கு கத்தரிக்காய் பிடிக்கும் என்று அவனே சொன்னதால், ஸ்டஃப்ட் கத்திரிக்காய் மசாலா, மரச்சீனி ரோஸ்ட், ஸ்ப்ரௌட் சாலட், பைன் ஆப்பிள் ரசம், ரொட்டி, சாதம், தயிர், சுட்ட லிஜ்ஜட் அப்பளம் என விரிவாக சமைத்துக் குளித்து விட்டு வந்தாள்.

கபிலனை எழுப்ப, “எதுக்கு இத்தனை, தனியா ஏன் செஞ்ச?” எனக் கடிந்து கொண்டவன், சாப்பிட்ட பின்,

“ க்யூன், செமையா இருக்குடீ. ஃபைனலி, அந்த அவியல் பரேட்ல இருந்து இன்னிக்கு விடுதலை” என்றான் உற்சாகமாக.

முகம் வாடிய சியாமளா “புடிக்கலைன்னா சொல்லி இருக்கலாமே. நானே சமைச்சிருப்பேன்”

“வி ஆர் ஆன் ஹனிமூன் டா. அதோட, நானும்தான் இந்தத் தேங்காய் எண்ணெய் சமையலை ஒன்பது வருஷம் சாப்ட்டுருக்கேனே”

“கபீஷ்…”

“ம்…”

“கபீஷா”

“ம்…”

“நீங்க வேணா நைட் ஹோட்டலுக்குப் போய் நான்வெஜ் சாப்பிடறேளா?”

“...”

“கபீஷ்?”

“நீ எங்கிட்ட செமத்தியா வாங்கப் போற” என்றவன், கடகடவெனச் சிரித்தான்.

“என்னவாம்?”

“நான் யார் கிட்டயுமே இப்டி பேசினதில்லையா, அதான் எனக்கே ஆச்சரியமாகி சிரிச்சுட்டேன்”

அவன் மீது வசதியாகச் சரிந்து படுத்து “என்ன வேணா திட்டிக்கோ” என்றவள், உடனடி உறக்கத்திற்குள் சென்றாள்.
மாலையில் நவீன் ஆர்டர் செய்த கேக் வந்தது.

சிறிது நேரத்திற்கெல்லாம் ஒரு கார் வந்து நிற்க, அதில் வந்த தம்பதி கதவைத் தட்ட, சுசீலா மாமி பேசிக்கொண்டே உள்ளே நுழைந்தார்.

“நான் வருவேன்னு சுனந்தா சொன்னாளா, இத்தனை நாளா இங்கேயே இருந்துட்டு, உன் கல்மாணத்தும்போதுன்னு பார்த்து ஊர்ல இல்ல பாரு. பொண்ணுக்கு பிரசவம். டொரன்ட்டோல இருக்கா. மாட்டேன்னா சொல்ல முடியும்?”

சியாமளா காஃபி கலக்கச் சென்றுவிட, சுவாரஸியமாகக் கதை கேட்ட கபிலனிடம், “சன் டே லஞ்ச் எங்களோடதான். கண்டிப்பா வந்துடணும் மாப்ளை” என்றதை, வழிமொழிந்து வந்த கடமையை ஆற்றினார் மாமா.

***************

ஞாயிறு மதியம்….

சமையல் பிரமாதமாக இருந்தது.

சுசீலா மாமிக்கு கனடாவில் வசிக்கும் வேலையில்லாத மகள் அளவுக்கு உள்ளூர் கல்லூரியில் லெக்சரராக இருக்கும் மருமகளைப் பற்றிப் பெருமிதங்கள் ஏதுமில்லை என்று புரிந்தது. அதிலும் திருமணமாகி எட்டு வருடங்களாகக் குழந்தை இல்லாத மருமகள் வேறு. இளக்காரத்துக்குக் கேட்கவா வேண்டும்?

பேங்கில் ஆஃபீஸராக இருந்த மகன் ராகவன், கவிதை எழுதினான், வீணை வாசித்தான், கர்ட்டனுக்கு லேஸ் தைத்தான், விதவிதமாக பொம்மைகள் செய்தான்… மற்றும் பல…

புதியவர்கள், இளையவர்கள் என்ற எண்ணம் சிறிதுமின்றி, “இதைப் பார்த்தேளா. நேத்து ராத்திரி ரெண்டு மணி வரைக்கும் தூங்காதைக்கு இதைப் பண்ணி இருக்கான். இதையெல்லாம் அனுபவிக்க ஒரு குழந்தை இல்லையேன்னு இருக்கு. அந்த குருவாயூரப்பன் இன்னும் மனசு வைக்கலை, கேட்டயா?” என்ற சுசீலா மாமி, ஆணும், பெண்ணுமாய் சாக்பீஸை செதுக்கிச் செய்த இரண்டு பொம்மைகளைக் காட்டினார்.

வெற்றிலை பாக்கு வைத்துத் தர, சியாமளாவை உள்ளே அழைக்கவும், ராகவனிடம் தன் கார்டை கொடுத்த கபிலன், “டோன்ட் மிஸ்டேக் மீ ஸார், இந்த சூழல்ல இருந்து வெளில வாங்க. ஆல் வில் பீ குட்” என்றான்.

காரில் ஏறியதுமே சியாமளா, “பாவம் அந்த அக்கா. அந்த மாமி ஓவரா பேசறா” என,

“போடீ” என்ற கபிலன் அடக்க மாட்டாது சிரித்தான்.

“சொல்லிட்டு சிரிக்கறது!”

“சனிக்கிழமை ராத்திரி ரெண்டு மணிக்கு சாக்பீஸை சுரண்டினா குழந்தை பொறக்கறது கொஞ்சம் கஷ்டம்தான்” என மேலும் சிரித்தான்.

சியாமளா “ஒரு மார்க்கமா ஆயிட்டேள் கபீஷ்”

“எல்லாப் புகழும் உனக்கே”

********************

மாலையில் ரவா தோசைக்குக் கரைத்துக் கொண்டிருந்தவளை “இங்க வந்து உக்காரு” என கைப்பிடியாக இழுத்துக்கொண்டு, கொல்லைத் திண்ணைக்குச் சென்ற கபிலன், எதுவும் பேசாது, பவழமல்லியின் வாசனையை நுகர்ந்தபடி மௌனமாக இருக்க, சியாமளா பொறுமை இழந்தாள்.

“வேலையை முடிச்சுட்டு வரேனே. தோசை மாவு ஊறணும், சட்னிக்கு வறுத்து ஆறணும்”

“பேசறதுல பாதி மலையாளம். இதுல எதுகை மோனை வேற. நைட்டுக்கு நான் சமைக்கறேன், போதுமா, கொஞ்ச நேரம் கம்முனு இரு”

“...”

“க்யூனு, நாம ஏன் கேரளாலயே ஒரு வேலை தேடிட்டு செட்டில் ஆகக் கூடாது?”

இதை சற்றும் எதிர்பாராத சியாமளா, அதிர்ச்சியில் மொத்தமாக அமைதியாகிவிட, அதற்கும்

“எது சொன்னாலும் ஏறுக்கு மாறாதான் செய்வியா நீ?”

“...”

சியாமளாவிற்கும் கபிலனுக்கும் காதல், கல்யாணம் என்று தெரிந்ததுமே சியாமளாவிடம் பேசிய குந்தவை, கபிலனுக்கு அந்தக் கல்யாணத்தில் சிறிதும் விருப்பமில்லை என்றதோடு, அங்கு நடந்தவற்றை மேலோட்டமாகச் சொல்லி இருந்தாள். மீதத்தை யூகித்திருந்தவள் கபிலன் இந்த அளவிற்கு விலகி நின்று யோசிப்பான் என நினைக்கவில்லை.

‘பச்சக்’ கென அவள் கழுத்தில் முத்தம் தந்தவன் “ஏன், இந்த ஐடியா உனக்குப் புடிக்கலையா? இங்க இருந்தா ஸ்க்ராட்ச்ல இருந்து ஆரம்பிக்கணும். ஹாஸ்பிடல், ஃபேக்டரி எதுவும் கிடையாதுன்னு யோசிக்கிறியா?”

சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமின்றிப் பேசுபவனிடம் என்ன சொல்வது என்று புரியாமல் மாட்டிக்கொண்டு விழித்தாள் சியாமளா.

“எனக்குப் பிரச்சனை இல்லை கபீஷ். அங்கிள்ட்ட சொல்லிட்டேளா?”

“...”

“அங்கிள் பாவம் இல்லையா கபீஷ்?”

திரும்பி அவள் கண்களைக் கூர்ந்தவன் “நீ என்னைப் பத்தி மட்டும்தான் யோசிக்கணும், மனசிலாயோ?”

“ம்…”

சொன்னபடி அன்றைய இரவு உணவை கபிலனே சமைத்தான்.

****************

சீண்டலும் தீண்டலுமாய் பத்து நாட்கள் கழிய, செவ்வாயன்று மதியம் நாராயணனும் சுனந்தாவும் வந்துவிட்டனர்.
வந்ததுமே, கபிலனின் காலை பரிசோதித்த நாராயணன், திருப்தியாகத் தலையசைக்க, மகளின் முகத்தில் இருந்த புன்னகையும் பூரிப்புமே சுனந்தாவிற்குப் போதுமானதாக இருந்தது.

நாராயணன், சாரநாதனிடம் “நாங்களே வந்துடறோம் ஸார், எதுக்கு வீண் அலைச்சல்?” என்றிருந்தார். புறப்படும் தினத்தன்று காலை பெரியவர்களை நமஸ்கரித்தனர்.

நாராயணன், கபிலனுக்கு ஒரு வைர மோதிரமும் சங்கிலியும் அணிவித்தார்.

“எதுக்கு ஸார் இதெல்லாம்?”

“என் மாப்பிள்ளைடா நீ, உனக்குத் தராம… ஷாம்ளா, கபிலனை நான் ‘டா’ சொல்லலாமா?” எனச் சிரித்தார்.

நால்வரும் சிறுமலையை நோக்கிப் பயணித்தனர்.

******************

இது நாள்வரை எந்த நகையும் அணிந்திராத கபிலன்
நகைகளைக் கழற்ற முற்பட, சியாமளா தடுத்தாள். அவன் ஆசைப்பட்டதும் இல்லை, பெற்றோர் இருவரையும் கேட்டதும் இல்லை. தானே சம்பாதித்தும், மற்ற கால்பந்தாட்ட வீரர்கள் தங்கம், வெள்ளி பிளாட்டினம் என அணிந்தபோதும், அவன் தனக்கென எதையும் வாங்கிக்கொண்டதும் இல்லை.

கபிலனின் கழுத்தில், கையில் கிடந்தவற்றைப் பார்த்த சாரநாதனுக்குதான் உறுத்தியது.

‘சின்னதும் பெரிசுமா நினைச்சபோதெல்லாம் நுங்கம்மாக்கு நகை வாங்கும் எனக்கு, அப்புக்கு வாங்கணும்னு ஏன் தோணவே இல்ல?’

கபிலன் வேலை குறித்து என்ன குண்டு போடுவானோ என்ற சியாமளாவின் கவலையை, அவர்கள் வந்த இரவே மூச்சுத் திணறலுடன் தொண்ணூற்று மூன்று வயது சாலாட்சிக் கிழவியை நேரே, கபிலனின் வீட்டுக்கே அழைத்து வந்து தீர்த்துவைத்தார், அவரது எழுபத்தாறு வயது மகன்.

மறுபேச்சின்றி, இரவு இரண்டு மணிக்கு ‘நலம் ஆயுஷ்கேர்’ மருத்துமனைக்குள் நுழைந்து “தீபக், நர்ஸ், க்விக்” என்று சிகிச்சையைத் தொடங்கியவன், தன்னிச்சையாகத் தன் வேலையைத் தொடர்ந்தான்.

சாரநாதன் திட்டமிட்டபடி வரவேற்பும் விருந்தும் நன்றாகவே நடந்தது.

“ராசா, ராணி கணக்கா பொருத்தமா இருக்காக” என்றவர்களும் …

‘நம்ம சாதி சனத்துல பொண்ணு கிடைக்குமோ, கிடைக்காதோன்னு அவனே பாத்துக்கிட்டான் போல’ என்றவர்களும்…

‘இனிமேலாவது அந்தப் புள்ளை வீடு, வாசல், புள்ளை, குட்டியோட நிம்மதியா நல்லா இருக்கட்டும்’ என்றவர்களும்…

விருந்தை உண்டு விழாவைச் சிறப்பித்து விட்டுச் சென்றனர்.

கணேஷ் வழக்கம்போல் வரவேற்பு நிகழ்வுகளை மாளவிகாவிற்கு ஒலி-ஓளி பரப்பினான். இம்முறை கபிலனின் சம்மதத்தோடு!

இரவு…

கபிலனின் வீட்டில் சாரநாதன் தன் பங்கிற்கு அறையை அலங்கரித்து வைத்திருக்க, திருமணமான இரண்டாம் வாரத்தில் இரண்டாவது முதலிரவு!

*****************

மறுநாள் மதிய உணவிற்குப் பின் புறப்பட்ட நாராயணன் தம்பதியை வழியனுப்பி விட்டு வீடு திரும்பிய சாரநாதனை எதிர்நோக்கி புது பிரச்சனை மற்றும் புதுப் பஞ்சாயத்துடன் கோபாவேசமாகக் காத்திருந்தாள் காவேரி.

Note : Queen என்பதை கேரளத்தில் க்யூன் (Kyoon) என்று உச்சரிப்பர்.

Author: VedhaVishal
Article Title: குறுநகை போதுமடி! 15
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

S HEMA

New member
Mar 18, 2026
23
17
3
CHENNAI

க்யூட் க்யூன் ...
தொந்தூஸ் means???
உள்ளம் கேட்குமே மோர்.... கபிலனின் மறுபக்கம்
 
kothaisuresh

Active member
Jun 19, 2024
171
22
28
Chennai
டேக் கேர் மா,
கபிலன் இயல்பா இருப்பது ரொம்ப பிடிச்சிருக்கு
இப்ப என்ன ஆரம்பிக்கிறாங்க காவேரி
 
saradhavasan

Active member
Oct 3, 2024
105
28
28
சென்னை
இந்த காவேரி பிரச்சனை ஓய்வே ஓயாது?
சை தீர்க்க முடியாத தண்ணீர பிரச்சனை மாதிரி