குறுநகை போதுமடி! 18
சியாமளாவின் பூச்சூட்டல் விழா முடிந்தபின், அவளைப் பிரிய மனமின்றித் த(ய)ங்கிய கபிலன், மறுநாள் மாலை முதலே அவளது சோர்வை இனங்கண்டு கொண்டான். இரவு உணவில் அவளால் பாதியைக் கூட உண்ண முடியவில்லை.
நவீனின் குழந்தைகளுடன் பேசிக்கொண்டிருந்தவளை ஒன்பது மணிக்கெல்லாம் வலுக்கட்டாயமாக
அறைக்கு அழைத்து வந்துவிட்டான். படுக்கவும் முடியாது உட்காரவும் முடியாது அவஸ்தைப் பட்டாள். தன் மேல் சாய்ந்து கொண்டவளின் தோளை, முதுகை மெதுவே அழுத்திவிட்ட கபிலன்
“வலிக்குதாடீ, ஆன்ட்டிய கூப்பிடவா?”
“இல்ல கபீஷ்… என்னன்னு சொல்லத் தெரியல. ஹக் மீ டைட்” என்றவள், அவன் இறுக்கிய இரண்டாவது நொடி திமிறி விலகினாள்.
“ஷியா பட்டர், என்னடா செய்யுது?…”
“அன்ஈஸியா இருக்கு” என எழுந்து நடந்தாள்.
சிறிது நேரம் சென்று, கபிலன் போய் ஹாட் வாட்டர் பேக்கும், சூடான பாலும் கொண்டு வர வெளியில் செல்ல, சுனந்தா எழுந்து வந்துவிட்டார்.
“எதுக்கும் ஹாஸ்பிடல் போயிடலாம்” என்றவர், தேவையான பொருள்களை சேகரிக்க, நாராயணன், நவீன், கபிலன், சுனந்தா எல்லோரும் இரவு பன்னிரெண்டு மணிக்கு மருத்தமனைக்குப் புறப்பட்டனர்.
மழை வேறு பெய்து கொண்டிருக்க, சியாமளாவிற்கு செல்லும் வழியிலேயே சுளீரென முதல் வலி மின்னல் வெட்டயதில், உதிரம் படத் தொடங்கியது. அடுத்தடுத்து வலி வரவும் சியாமளா தாவுக்குக் கபிலனின் சட்டையைக் கொத்தாகப் பிடித்து “ரொம்ப வலிக்கறது கபீஷ்” என்றதிலிருந்து, லேபர் அறைக்குள் சென்று, அதிகாலை நாலு ஐம்பதுக்கு குழந்தை பிறக்கும் வரை கபிலனைப் புரட்டிய உணர்வுகளை அவன் மட்டுமே அறிவான்.
வீட்டை விட்டுப் புறப்படும் முன்பே தந்தைக்கும் அன்னைக்கும் அழைத்துச் சொல்லியிருக்க,மதியம்தான் மதுரை போய் சேர்ந்திருந்த மாளவிகா இடையிடையே அழைத்துக் விசாரித்தாள்.
சாரநாதன், செண்பா, குந்தவை மூவரும் நள்ளிரவே கிளம்பி விடியற்காலை நாலேகால் மணிக்கெல்லாம் வந்துவிட்டனர். சியாமளாவின் பெற்றோரும் நவீனும் அமர்ந்திருக்க, குறைந்தபட்ச விளக்குகளே எரிந்த காரிடாரில் ஒரு ஓரமாக நின்றவனிடம் “அப்பு” என்ற அழைப்புடன் அருகில் வந்த சாரநாதன், மகனின் தோளில் தட்டினான்.
கபிலனின் முகத்தில் தெரிந்த இறுக்கமும் அழுத்தமும் கண்ட செண்பாவே “டாக்டர் நீ, நம்மூர்ல நீயே மூணு, நாலு பிரசவம் பார்த்திருக்க, நீயே இப்படி பயந்தா எப்டி தம்பி?”
“...”
அடுத்த பதினைந்து நிமிடங்களில் ஒரு செவிலி வெளியில் வந்து “கங்கிராஜுலேஷன்ஸ் ஸாரே, நாலு ஐம்பத்தி ரெண்டுக்கு ஒரு பெண்குஞ்சு ஜனிச்சு” என்றாள். அதே நர்ஸ் சில நிமிடங்களில் துவாலையில் சுற்றிய புத்தம்புது குழந்தையுடன் வந்து “நிங்கட குஞ்சை நோக்கு ஸாரே” எனவும் குழந்தையை யார் முதலில் வாங்குவது என ஆண்களும் செண்பாவும் தயங்க, சிறியவள் என்பதால் குந்தவை ஆசை இருந்தாலும் தன் முறைக்குக் காத்திருக்க, டக்கென பேத்தியை ஏந்திக்கொண்டு “என்னடீ தங்கம், டயர்டா போச்சா?” என்றார் சுனந்தா. மகன் மூலம் முன்பே இரண்டு பேரன்கள் இருந்தாலும் தன் மகள் வலித்துப் பெற்ற பிள்ளையல்லவா?!
கபிலனின் கைக்கு மகள் வர, கடவுள் கொடுத்த பூங்கொத்து என்றே தோன்றியது. கடந்த எட்டரை வருடங்களில் இல்லாத, திருமணமான இந்த ஒன்றரை வருடத்தில், மனைவியுடன் கூடிக் களித்திருந்த பொழுதுகளில், சியாமளாவின் அண்மையில், அணைப்பில் அவளது அன்பையும் நேசத்தையும் துய்த்த எத்தனையோ சந்தர்ப்பங்களில் வராத பெருங்காதல் மனதில் தளும்பிக் கண் வழியே கசிந்தது.
சியாமளா கருத்தரித்த நாளாக அவன் மனதில் இருந்த குழப்பம், பயம், கவலை, பதட்டம், ஏக்கம், கடமையில் தவறி விடுவோமோ என்ற கேள்வியில் எழுந்த குற்றவுணர்வு என கபிலனின் மனக்கிலேசங்கள் அனைத்தும் அகன்று தன் மகவுக்கும் தனக்குமான பூர்வ ஜன்ம பிணைப்பை உணர்ந்த அந்தக் கணத்தில், அவனையறியாது
‘எப்போதும், எதுக்காகவும், யாருக்காகவும், யார் கிட்டயும் என் குழந்தையை விட்டுத்தர மாட்டேன்!’ என்ற உறுதி பிறந்தது.
குழந்தையை வாங்கிக்கொண்ட குந்தவையிடம் “நுங்கம்மா அத்தை ஆகிட்டீங்களோ?” என்ற சாரநாதன், “அப்பத்தாக்கு காட்ட
நல்லதா ஒரு ஃபோட்டோ எடப்பு” என்று அலைபேசியை நீட்டினான்.
கபிலன் தான் எடுத்த படத்தை தனக்கு அனுப்பிக்கொண்டு, தன்னிடமிருந்து அம்மாவிற்கும் அனுப்பியவன், மாளவிகாவிற்கு அழைத்து குழந்தை பிறந்த விஷயத்தைச் சொன்னான்.
“பொண்ணாடா, சூப்பர்… செகப்பா இருக்கா, முடி நிறையா இருக்கா, யாரை மாதிரிடா இருக்கு? இன்னைக்கே பொறந்துடும்னு தெரிஞ்சிருந்தா நான் இருந்துட்டே வந்திருப்பேன். அவங்க கிட்டல்லாம் நல்லா விடிஞ்சதும் பேசறேன்னு சொல்லு கபிலா” என மாளவிகா படபடத்ததை செண்பா, சாரநாதன், சுனந்தா எல்லோரும் கேட்டுக்கொண்டிருந்தனர்.
ஒருவருக்கொருவர் வாழ்த்துகள் பறிமாறிக்கொள்ள, வெளியில் வந்த மருத்துவர், “கங்கிராட்ஸ் டாக்டர் நாராயணன், நம் ஹாஸ்பிடல்ல இந்த வீக்ல பிறந்த ஒரே பெண் குழந்தை உங்க பேத்திதான்”
கபிலன் “டாக்டர், ஷியா…”
“அரைமணில ரூம்ல பார்க்கலாம்”
காத்திருந்த நேரத்தில் எப்போது டிஸ்சார்ஜ் செய்வார்களில் ஆரம்பித்து குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது, கபிலனும் சியாமளாவும் ஏற்கனவே பெயரை முடிவு செய்துவிட்டனரா, எப்போது விழா நடத்துவது, அவரவர் வழக்கம் என்ன, குலதெய்வம், மொட்டையடி, காதுகுத்து வரை போய்விட்டனர்.
“பத்தாம் நெம்பர் ரூமு. குஞ்சுக்கு ஃபீட் செய்த பின்னே போய்க் காணலாம்” என்று நர்ஸ் வந்து அறிவிக்க, சற்றுப் பொறுத்து எல்லோரும் சென்றனர். சியாமளாவை நலம் விசாரித்து, தொட்டிலில் இருந்த குழந்தையைத் தூக்கி நவீனின் மோதிரத்தைத் துடைத்து, அதில் சொட்டு தேனைத் தோய்த்து இரண்டு, பாட்டி தாத்தாக்களும் பேத்திக்கு செவ்வெண்ணெய் கொடுத்தனர்.
சுனந்தா “ஷாம்ளா என்ன சாப்பிடலாம்னு டாக்டரைக் கேட்கணும்” எனவும், தம்பதிக்குத் தனிமை கொடுத்து எல்லோரும் விலகிச் சென்றனர்.
சியாமளா, அத்தனை நேரமும் தன்னையே பார்த்தபடி அமைதியாக நின்ற கணவனுக்குக் கையை நீட்ட, கோர்த்துக் கொண்டான். புன்னகைத்தனர்.
இருவருக்குமே வாழ்க்கை முழுமையாகி, தாங்கள் இருவரும் இன்னும் இறுக்கிப் பிணைக்கப்பட்டு, பொறுப்புகள் கூடிய உணர்வு மேலிட்டது.
சியாமளா சிரிப்புடன் “அப்பா…”
“ஏய்… உனக்கில்ல, என் பொம்மைக்குதான் அப்பா”
“அது யாரு?”
“தொந்தூஸ்… ஷி லுக்ஸ் எக்ஸாக்ட்லி லைக் மை மாம்”
“அப்டியா, நான் சரியாவே பார்க்கலை கேட்டேளா” என எழப் போனவளைப் பிடித்துப் படுக்க வைத்தான்.
“மெதுவாடீ… இரு, நான் தூக்கிக் காட்டறேன்”
“உங்களுக்குத் தூக்கத் தெரியுமா கபீஷ்?”
“ம்… ஆதியைத் தூக்கி இருக்கேன்”
கபிலன் லாகவமாக மகளைத் தூக்கிப் பிடித்துக் காட்ட, இருவரும் தங்களின் நிழலை, நீட்சியை, அன்பின் அடையாளத்தை, நேசத்தின் பிரதிமையை ரசித்தனர். மகளின் முகத்தைக் கையால் வழித்து விரல்களை முறித்துத் திருஷ்டி கழித்த சியாமளா,
“நம்ம குழந்தைன்னு வந்தா
சிரிப்பா, மூடநம்பிக்கையா தெரிஞ்சதெல்லாம் சரிதான்னு தோணிடுமா கபீஷ்?”
“ம்… அப்டிதான் போல”
கைகளையும் பின்னியிருந்த கால்களையும் பின்பக்கத்தோடு தூக்கி சோம்பல் முறித்த குட்டியை கபிலன் குனிந்து நுகர்ந்து, ஆழ்ந்து ஸ்வாசித்தான். சாவ்லான், பேபி சோப், பேபி பவுடர், புதுக் குழந்தை வாசனை எல்லாம் சேர்ந்து அந்த பிராண்ட் நியூ தகப்பனைப் பித்தாக்கி, மதி மயங்கி, கள்வெறி கொள்ளச் செய்தது.
“பொம்ம, you are Intoxicating” என்றவனைப் பார்த்துச் சிரிப்புடன் முறைத்த சியாமளா,
“அப்றம்?”
“இரு, வரேன்” என மீண்டும் குழந்தையைத் தொட்டிலில் இட்டு வந்து,
குரல் கரகரக்க “எப்ப ஊருக்கு வர?” என்றவனின் கையில் சியாமளா பலம் கொண்ட வரை நகத்தால் கிள்ளி விட்டுத் தடவியும் கொடுத்தாள்.
“ஆசைதான்… டெலிவரி ஆகி முழுசா ரெண்டுமணிநேரம் கூட ஆகலை”
“சும்மாடா… நல்ல ரெஸ்ட் வேணும் உனக்கு. எத்தனை தையல்?”
“டாக்டர் ஏழுன்னு சொன்னா”
“... ஃபீட் பண்ணியா, வலி இருந்ததா, பொம்மை கம்ஃபர்ட்டபிளா இருந்தாளா?”
கபிலனின் கேள்விகளில் சியாமளா கூச்சத்துடன் தலையசைக்க “டாக்டர்டீ நான்” எனச் சிரித்தான்.
கதவு தட்டப்பட, கபிலன் குனிந்து சியாமளாவின் இதழில் அழுந்தப் பதிந்து விலக, அதை எதிர்பாராது திகைத்தவள்,
“இதுக்கெல்லாம் இப்ப தடா தெரியுமா, இன்ஃபெக்ஷன்…”
“போடீ… இன்ஃபெக்ஷனெல்லம் அலோபதிலதான்… இது ஆயுர்வேத முத்தம்” என்று கண்சிமிட்டியவன், சென்று கதவைத் திறந்தான்.
மீண்டும் எல்லோரும் உள்ளே வந்தனர். நவீன் வீட்டுக்குக் கிளம்ப, கபிலன் “நீங்க எல்லாரும் போய் குளிச்சு, சாப்ட்டு வாங்க, நான் இங்க இருக்கேன்” என்றான். நவீனைத் தவிர, நால்வர் மட்டுமே போகமுடியும் ஆதலால், சாரநாதன் “அப்புவோட நான் இருக்கேன்” எனவும் கபிலனும் சாரநாதனும் சியாமளாவுடன் அறையில் இருந்தனர்.
மாளவிகா, ஜெயச்சந்திரன், ஆதித்தன் மூவரும் வீடியோ காலில் வந்தனர். வெளியேற யத்தனித்த தந்தையை ‘இங்கேயே இரு’ எனக் கை அமர்த்திய கபிலன், காணொளியில் முதலில் சியாமளாவைக் காட்ட, நலம் விசாரித்தவர்கள், குழந்தையைக் காட்டச் சொல்ல, கபிலன் எதிர்ப்புறம் இருந்த தொட்டிலின் அருகே நகர, சாரநாதன் சியாமளாவின் கட்டிலுக்குப் பின்னே இருந்த ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தபடி நின்றுகொண்டான்.
மாளவிகா “பாப்பாவை சரியா காட்டுடா. அச்சோ… எவ்ளோ குட்டியா இருக்கு பாரு…”
ஆதி “குட்டியா இல்லாம… அது என்ன ஜுராஸிக் பேபியாம்மா, பாவம், இப்பதான் பொறந்திருக்கு.
கபிலன் “...மா.., யாரை மாதிரி இருக்குன்னு சொல்லு பாப்போம்”
“எனக்கு சரியா தெரியலைடா கபிலா, நேர்ல வந்து பார்த்துட்டு சொல்றேன்”
மாளவிகா பேசுவதைக் கேட்ட சாரநாதன் ‘அப்டியே மல்கோவாதான்’ என முணுமுணுத்ததை சியாமளாவகக் தெளிவாகக் கேட்டிருந்தாள்.
********************
நலம் காஸ்மெட்டிக்ஸின் இயந்திரங்கள் அனைத்தும் சுழல, ஒருபுறம் ராட்சத சைஸ் கன்டெய்னரில் கரிசலாங்கண்ணி, கறிவேப்பிலை, மருதாணி, நெல்லிக்காய், செம்பருத்தி, ரோஸ்மேரி, தேங்காய் எண்ணெய் எல்லாம் சேர்ந்து மரகதப் பச்சை நிறத்தில் கொதித்தது.
இன்னொருபுறம் இதன் மணத்தை மீறி வெட்டிவேர், சிவப்பு சந்தனம், அதிமதுரம், மஞ்சிஷ்டாதி, தசமூலம் போன்றவற்றைக் காய்ச்சி, பாதியாகக் குறுக்கிய கஷாயத்தில் நல்லெண்ணெயும் குங்குமப்பூவும் கலந்து காயும் மணம் காற்றில் விரவி இருந்தது.
ஒரு பெரிய அரவை இயந்திரம் இட்லி மாவு போல் பாதாம் பருப்பை அரைத்தது.
ஏழெட்டு பெண்கள் முந்தைய நாள் தயாரிக்கப்பட்ட தாழம்பூ குங்குமத்தை டப்பாக்களில் பேக் செய்து கொண்டிருந்தனர்.
நான்காவது முறையாக ஃபேக்டரியை சுற்றி வந்த குந்தவையின் முகம் சற்றே வாடி, யோசனையில் இருந்தது. தன் இருக்கைக்கு வந்து, அலைபேசியைத் திறந்து பார்த்தாள். அவள் எதிர்பார்த்த செய்தி வராததில் உதட்டைக் கோணலாக்கி ஒழுங்கு காட்டியவள், அடுத்து அழைப்பு விடுக்க, எடுக்கப்படாது தவறிய அழைப்பானது. புலனத்தில் ஆன்லைன் என்று காட்ட, இவள் ஒரு செய்தியைத் தட்டிவிட்டதும் ஆஃப்லைன் போனதில் எரிச்சலாகி, அலைபேசியை மேஜை மேல் விட்டெறிந்தாள்.
‘இந்த விஜய் ஏன் இப்டி பண்றான்? ஃபோனையும் எடுக்க மாட்டேன்றான், மெஸேஜுக்கும் பதில் போட மாட்டேன்றான். ஸ்டேட்டஸ் மட்டும்… உயிர் உங்களது தேவியாம்’
‘அப்பா, அண்ணாவோட கோயம்புத்தூருக்கு அவங்க வீட்டுக்கு நேர்ல போய்ப் பார்த்தே நாலு மாசம் ஆச்சு’
‘இவன்தான் இப்புடின்னா, இந்தச் சின்னு… அவனை ஏத்தி விடறதே அவதான்’
‘நான் பாட்டு செவனேன்னுதானே இருந்தேன்? என்னென்னவோ சொல்லிப்புட்டு, பழசெல்லாம் கிளறிவிட்டு…’
‘சின்னு காலேஜ்ல சேர்ந்த பொறவு, ஒருநாள் அப்பாங்கள பார்க்கப் போறேன்னு வீட்டுக்குத் தெரியாம மதியமே கிளம்பிப் போய், நல்ல மழைல முருங்கை கொட்டாரத்துல நானும் அவனும் இருட்டுற வரை தனியா மாட்டிக்கிட்டது…’
‘நான் எட்டாவது படிக்கும்போது அப்பாவும் செழியன் மாமாவும் திண்டுக்கல்லுல இருக்குற வாழத்தோப்புக்குள்ள போனதும், நான், சின்னு, விஜய் மூணு பேரும்இந்த பம்புசெட்ல குளிக்கையில, வலைய மீறி குரங்குங்க வரவும் சின்னு மொத ஆளா குதிச்சு மோட்டர் ரூமுக்குள்ள ஓடிட்டா. தொட்டிக்கு வெளிய போய்ட்ட விஜய், கைல ஒரு கொம்பையும் பொறுக்கிட்டு ‘குண்டம்மா, என்னக் கட்டிக்கிறேன்னு சொல்லு, அப்பதான் குரங்கையெல்லாம் வெரட்டுவேன்’ னதும், தான் சரின்னதும்…’
‘ப்ளஸ் ஒன் படிக்கும்போது ஸ்கூல் டான்ஸுக்காக ரெண்டு மணிநேரம் போட எதுக்கு புதுசு வாங்கணும்னு சொல்லி வள்ளி அத்தை, அவனோட ப்ளூ ஜீன்ஸையும் கறுப்பு ஷர்ட்டையும் கொண்டு வந்து தர, அதை நான் போட்டதை எனக்குத் தெரியாம அவன் ஃபோட்டோ எடுத்தது…’
‘அவன் இன்ஜினீயரிங் காலேஜ்ல சேர்ந்து, ஹாஸ்டல்ல இருந்து மொத வாட்டி இங்க வந்துட்டு திரும்பிப் போற முன்ன ‘உன்னத்தான் ரொம்ப மிஸ் பண்றேன்னு சொன்னது…’
‘பி.காம் கடைசி வருஷம் படிக்கும்போதே யாரொ பொண்ணு கேட்டாங்கன்னு அப்பா சொல்லவும், செமஸ்டர் லீவுக்கு வந்தவன், தோட்டத்துக் காய்கறிய கூடைல பிரிச்சு போட்டுகிட்டே, நிமிர்ந்து என்னை முறைச்சது…’
ஆயா, அம்மாச்சி, அப்பா தரும் சலுகைகளில் திளைத்த குந்தவையின் ரிப்பனை, ரப்பர் பேண்டை உருவி விடுவதும், எதற்கெடுத்தாலும் சீண்டி, வம்பிழுத்து, உரத்து சண்டையிடுவதுமாக இருந்த விஜய் ஏதோ ஒரு புள்ளியில் அமைதியும் ஆகிருதியுமாக மாறிப்போனான்.
அவன் கடைசி வருடம் பொறியியல் படிக்கையில் ஆடி அமாவாசை, ஞாயிறன்று, குலதெய்வமான தேனி மாளிகைப்பாறை கருப்புசாமி கோவிலுக்குச் சென்றிருந்தனர். அத்தனை கூட்டம். எத்தனை புனிதமான தினமாக இருந்தாலும், கூட்டத்தின் போர்வையில் பெண்களை வருடவும் உரசவுமே வருபவர்கள் உண்டே.
தள்ளு முள்ளு நடந்ததில், முன்னும் பின்னுமாக பிரிந்து நடந்தனர். பக்கவாட்டில் நடந்த விஜய், திரும்பிப் பார்க்க குந்தவையின் முக மாற்றத்திலேயே அவளிடம் யாரோ வாலாட்டியதைப் புரிந்துகொண்டான்.
பட்பட்டென யாரோ, யாரையோ அடிக்கும் சத்தம் கேட்க, திரும்பினால், விஜய் யாருடனோ சண்டையிடுவது தெரிந்தது. குந்தவை முன்னே நடந்த சாரநாதனை அழைக்க, சண்டையை விலக்கி விஜய்யை இழுத்துச் சென்று, தலைக்குத் தலை ‘முன்னப் பின்னத் தெரியாதவனோட உனக்கென்னடா தகராறு, மொரட்டுப் பய…’ எனத் திட்டித் தீர்க்க, நடந்ததை சொல்ல வாயெடுத்தவளைப் பார்வையாலேயே தடுத்து விட்டான்.
இங்கு சாப்பிட வந்தால், குந்தவையிடம் வெகு இயல்பாக “டபுள் ஆம்லெட் போடு, முட்டை தோசை ஊத்து” என்பவனைக் கண்டாலே காவேரி வெறுக்கத் தொடங்கினாள்.
“அதென்ன வெச்ச ஆளாட்டம், அத்தனை அதிகாரமா கேக்குறது” என முணுமுணுப்பாள். கூப்பிட்ட குரலுக்கு வந்து உதவும் திடகாத்திரமான வாலிபன், ஏவும் வேலையைத் தட்டாமல் செய்பவன், ரொம்பவும் பகைத்துக்கொள்ள முடியாதே!
விஜய் விடுமுறையில் சிறுமலை வந்திருக்கையில், எத்தனையோ நாள், காவேரியின் விருப்பமின்மையை மீறி குந்தவையை திண்டுக்கல்வரை சென்று கல்லூரிக்குக் கொண்டுபோய் விட்டுக் கூட்டி வந்திருக்கிறான்.
அவளது சினேகிதிகள் கூட “உன் பாடிகார்ட் வந்தாச்சுடீ” எனக் கேலி செய்வர்.
அப்போதெல்லாம் அவனது பேச்சில் இருந்த ஈடுபாட்டை அக்கறை, பாதுகாப்பு என்றே புரிந்து கொண்டாள்.
விஜய் மணிகண்டனின் சிறுவயது சீண்டல்களை, ஆர்வத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாது, அம்மாச்சி காவேரியின் உறவில் வந்த வரனை நேரிலும் பார்த்த குந்தவை, தன்னியல்பில் திருமணத்திற்குத் தலையசைத்திருந்த நேரம் அது.
அதுவரை இருவருடைய அலைபேசி எண்ணும் இருவரிடமும் இருந்தாலும், விஜய் அவளுக்கு பண்டிகை, பிறந்தநாளுக்கு வாழ்த்து அனுப்புவதோடு சரி. குந்தவையின் பேச்சு வழக்கெல்லாம் சின்னுவுடன்தான்.
திடீரென அழைத்தவன், எடுத்த எடுப்பில் “இந்தக் கல்யாணத்துக்கு யாராவது உன்னைக் கட்டாயப் படுத்தறாங்களா?”
“இல்லையே, ஏன்?”
“அப்புறம் ஏன் சம்மதிச்ச?”
“ஏன் அப்டிக் கேக்குற?”
“உனக்கு எதுவுமே ஞாபகம் இல்லை, நான் உன்கிட்டக் கேட்டதையெல்லாம் நீ சீரியஸாவே எடுத்துக்கல, அப்படித்தானே?”
“உனக்கு என்னாச்சு விஜய்?”
நீ என்ன பேசறேன்னே எனக்குப் புரியல…”
“புரியாதுடீ, உனக்கெல்லாம் புரியாது…. பையன் உங்க அம்மாச்சியோட ஒறவாமே… சிறப்பு… கும்பலா சேர்ந்து காசையே கட்டிக்கிட்டு அழுங்க…”
“ …”
விஜய்யின் கோபத்திலும், நீண்ட வருடங்களுக்குப் பின் டீ போட்டுப் பேசியதும் அவன் சொன்ன செய்தியும்… திகைத்துப்போன குந்தவை செயலற்று நிற்க,
“காலை கட் பண்ணு”
“அவங்க வீட்டுப் பொண்ணையே அண்ணாக்கும் பேசறாங்க…”
“அதை எதுக்கு எங்கிட்ட சொல்றவ?”
என்ன பேசுவதென்று தெரியாமல் சில நொடிகள் மௌனித்த குந்தவை, அவன் ஃபோனை வைப்பதுபோல் தெரியாததால், தானே அழைப்பைத் துண்டித்தாள்.
“குந்தவை, எங்க இருக்க?” என்று அலறிய அம்மாவிடம், “பாரும்மா இந்த …” என்று சொல்லப் போனவள், நல்லவேளையாக வாயை இறுக மூடிக்கொண்டாள்.
அந்தத் திருமண ஏற்பாடு நின்றதும், அந்த வார இறுதியிலேயே சிறுமலைக்கு வந்த விஜய், சின்ன வயது சினேகம் தந்த உரிமையில் முதலில் குந்தவையை சரமாரியாகத் திட்டினான்.
“இப்ப என்ன நடந்து போச்சுன்னு மொகத்த இப்படி வெச்சுக்கிட்டு இருக்க, அந்தாள் மேல அம்புட்டு ஆசையோ?”
“...”
“ரெண்டு மாசம் கல்யாணப் பேச்சு ஓடினதுக்கே இம்புட்டு ஃபீலா… சின்ன வயசுல இருந்து எத்தனை தரம், என்னென்ன விதமா உன்னைப் புடிச்சிருக்குன்னு சொல்லி இருப்பேன்… என்னைப் பாத்தா கேனக் கிறுக்கனாட்டம் இருக்காடீ ஒனக்கு?”
“...”
“கபிலன் மாமா சொன்னதுல என்ன தப்பு… உங்க சௌகரியத்துக்கு அவரை கல்யாணம் செஞ்சுக்க சொல்லிக் கிடுக்கிப்புடி போட்டதுல, மனுஷன் பாவம் ஓடியே போயிட்டார்…”
“இல்ல… அம்மாச்சிதான்…”
“இத்தனை வழக்கும் அவங்களாலதான். இங்க பாரு, நம்ம விஷயத்துல ஒன் அம்மாச்சி குறுக்க புகுந்து ஏதாச்சும் பண்ணிச்சுனு வெச்சுக்க… ”
“எதே, நம்…ம விஷயமா…?”
“நடிக்காதடீ… ஐடி கம்பெனிக்காரன், சாஃட்வேர்… அந்தப்பக்கட்டா ஒதுங்கிப் போயிடுவான்னு நெனைக்காத… ஒன்னியக் கொன்டேபுடுவேன்”
அடுத்து வந்த நாள்களில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் தனது காதலை ஓரங்கட்டி வைத்துவிட்டு, குந்தவையைத் தேற்றுவதற்காகவே அலைபேசினான்.
******************
அண்ணன் கபிலனின் மறுப்பில் அந்தக் கல்யாணப் பேச்சு நின்று, அவன் காணாமல் போய், காலில் அடிபட்டு, சியாமளாவுடன் கல்யாணம் நிச்சயம் ஆனதும், வீட்டைப் பூட்டிக்கொண்டு ஜவுளி, நகைகள் வாங்கும் சாக்கில் மதுரைக்கும் கோவைக்கும் குடும்பத்தோடு சென்று நான்கு நாள்கள் விஜய்யின் வீட்டில் தங்கினர்.
முதல்நாள் வரவேற்றதோடு கண்டுகொள்ளாமல்
நின்றவன், மறுநாள் அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்துக்கொண்டு எல்லோரையும் ப்ரூக் ஃபீல்ட் மாலுக்கு அழைத்துச் சென்றான்.
மாலையில் கோணியம்மன் கோவிலுக்குச் சென்றனர். சாரநாதனும் செழியனும் அம்மனுக்கு மாலை வாங்க, பூக்காரப் பெண்மணி கட்டிக்கொண்டிருந்த செண்பகப் பூவிலிருந்து இரண்டைக் கேட்டு வாங்கிய விஜய், அதைக் குந்தவையின் கையில் கொடுத்ததும், அவள் முகர்ந்து பார்த்துப் புன்னகைத்ததும், அவன் தலையில் வைத்துக்கொள்ளச் சொல்லி ஜாடை காட்டியதும், குந்தவை சற்றுப் பொறுத்துப் பூவைத் தலையில் செருகிக்கொண்டதும் காவேரியின் கண்களில் தப்பாமல் பட்டது.
மறுநாள் மதியத்திற்கு மேல் சிறுமலைக்குக் கிளம்புவதாக இருக்க, அன்றும் வீட்டில் இருந்த விஜய், முதலில் பைகளையும் வயதானவர்களையும் வண்டியில் ஏற்றி விட்டு மேலே வந்தவன், மாடிப் படியில் இறங்கிக்கொண்டிருந்த குந்தவையின் கையில் இருந்த பையை வாங்கியவன், சட்டென துப்பட்டாவிற்குப் பின்னே இருந்த அவள் முழங்கையைப் பிடித்துத் தன்னைப் பார்க்க வைத்துத் தலையசைத்ததை காவேரி, செண்பா இருவருமே பார்த்திருந்தனர்.
கபிலன் - சியாமளாவின் திருமணத்திற்குக் காவேரி வராது போக, அந்தப் பயணம்,
இருவரின் நட்பையும் நேசமாகப் பரிணமிக்கச் செய்தது.
எந்த அளவிற்கெனில்,
“பேசாம நாமளும் இன்னைக்கே, இங்கிட்டே கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன?” எனக் குந்தவையே கேட்கும் அளவிற்கு.
கபிலன்- சியாமளாவின் வரவேற்பு முடியும் வரை ஒர்க் ஃப்ரம் ஹோம் என விஜய் சிறுமலையிலேயே தங்கித் தன் காதல் பயிரை வளர்க்க, அதற்கு உரம் போட்டாள் சின்னு.
வரவேற்பு தினத்தன்று நீல நிறப் பட்டுப் புடவையில் வந்து நின்ற குந்தவையுடன் இடைகழியில் நின்று பேசியவன், கோணலாக இருந்த அவளது கல் வைத்த பொட்டை சரி செய்வதைப் பார்த்த செண்பா, மகளைக் கடிவதற்கு அது சமயமில்லை என்பதால், அமைதியாகச் சென்றுவிட்டாள்.
வரவேற்புக்கு வந்த சுற்றமும் நட்பும் ஆளுக்கொரு மாப்பிள்ளை பற்றிப் பிரஸ்தாபிக்கவும், ஆத்திரத்தில் குதித்தவனிடம்,
“அவசரப்பட்டாத விஜய், , இப்ப வேணாம், கொஞ்சம் பொறுமையா இரு , நான் மெதுவா எங்கப்பா கிட்ட பேசறேன்’ என்ற குந்தவையிடம் தலையை ஆட்டியவன், மறுநாளே சின்னுவுடன் பரிசம் போட வந்து அதிரச் செய்தான்.
வரிசைத் தட்டோடு வந்து நின்றவனைக் கண்டதுமே, காவேரி செண்பாவிடம் சொல்லி பேத்தியை அறைக்குள் அனுப்பிவிட்டாள்.
சியாமளாவின் பெற்றோரை வழியனுப்பிவிட்டு வந்த சாரநாதனின் விரலும் குரலும் பேசியதில் அதன்பின் நடந்த எதுவும் யார் கட்டுப்பாட்டிலும் இல்லாது போனது.
அம்மாச்சியின் குணமும், அவள் கூட்டும் ஸ்ருதியும் தரும் அழுத்தத்தில் அம்மா செண்பா அவருடன் சேர்ந்திசைப்பாள் என்பது தெரிந்த குந்தவை, அவள் மலைபோல் நம்பி இருந்த தந்தையும் அதே பாட்டைப் பாடுவான் என கிஞ்சித்தும் எதிர்பார்க்கவில்லை. அதைவிட அதிர்ச்சி, செழியன் மாமாவையும் வள்ளி அத்தையையும் ஊரை விட்டே போகுமளவிற்குத் துச்சமாகப் பேசியது.
அந்தக் கல்யாணப் பேச்சு வார்த்தை நின்று போனதும் குந்தவையை உற்சாகப்படுத்தி, மாமனார் தரும் சொத்தை எதிர்பார்க்கும் ஒருவன் அவளைப் போன்றதொரு பெண்ணை நினைக்கவே அருகதையற்றவன் என்பதை, அவர்களது சிறுவயது ஞாபகங்களை, அவளது அருமையை, அவள் மற்றும் அவர்களது எதிர்காலத்தை, மொத்தப் பேச்சிலும் ஊடுபாவாக அவனது காதலைப் பேசிப் பேசியே அவள் மனதை செப்பனிட்டுக் குடியேறி இருந்த விஜய்…
அப்பா, அம்மா, அம்மாச்சி மூவரும் அடித்து அவமானப் படுத்தி வெளியேறியதில் இருந்தே தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்று விட்டான்தான். நடந்தவை தந்த குற்றவுணர்வில் தவித்த குந்தவை, அவன் தன் எண்ணை பிளாக் செய்யாததே பெரிது என்று எண்ணி அவனை அழைக்கவோ, தகவல் அனுப்பவோ தயங்கித் தவிர்த்ததில் இருவருக்குமான இடைவெளி அதிகரித்ததுதான் மிச்சம்.
அண்ணா கபிலனிடம் சொல்லக் கூச்சமும் கொஞ்சமே கொஞ்சம் பயமும் தடுத்தது.
அன்று ‘குந்தவை எங்கே?’ எனக் கேட்ட அண்ணி சியாமளா கர்ப்பம் தரிக்கவும், கபிலன் இல்லாத சமயங்களில் வீட்டிலும், மசக்கையின் காரணமாக ஃபேக்டரியிலும் தன்னுடன் இருந்த நாத்தியின் முகவாட்டத்தை, அடிக்கடி மொபைலைத் திறந்து பார்த்து விசனப்படுவதைக் கவனித்துக் கேட்டதில், குந்தவை தன் மனதைத் திறந்தாள்.
பிறகு, அப்பாவும் அண்ணாவும் அண்ணியின் சீமந்தத்திற்கு அழைக்கவென செழியன் மாமா வீட்டிற்கு அழைத்துச் சென்றது ஒரு இனிய அதிர்ச்சி எனில்,
விஜய்யின் வீட்டுக்கே நேரில் சென்று நின்ற தன்னை, அங்கே யாருமே அல்லது எதுவுமே இல்லை என்பதுபோல் பார்த்து வைத்ததோடு, இதோ, இந்த நொடி வரை, இவளது அழைப்புகளையும் ஏற்காது, தகவல்களுக்கும் எதிர்வினையாற்றாது அழிச்சாட்டியம் செய்கிறான்.
நட்பைப் புதுப்பிக்கவே இந்தப்பாடு… இதில் இன்னும் இரண்டு குடும்பமும் இணங்கி, இணைந்து, கல்யாணம் பேசி…
‘அடப் போடா!’
குந்தவை ஆழ்ந்து மூச்செடுத்தாள்.
*********************
சியாமளா எண்ணெய் தேய்த்துக் குளிக்கச் சென்றிந்தாள். பிள்ளை பெற்றவளுக்கு உதவ, அடர்ந்து, பரந்த கூந்தலில் சீயக்காய்த் தேய்க்கவென சுனந்தாவும் உடன் சென்றிருக்க, நாற்பது நிமிடங்களாக தோளில் மகளுடன் கூடத்தில் நடைபயின்ற கபிலன், நின்று தூங்கியாச்சா என்று கையில் பிடித்துப் பார்க்க, முழுதாகக் கண்ணை விழித்துப் பார்த்தது குழந்தை.
மாளவிகாவும் ஜெயச்சந்திரனும் வருகிறார்கள், நீலவேணி அப்பத்தாவும் காவேரியும் குழந்தையைப் பார்க்க விரும்பினர், செழியனும் வள்ளியும் வருகிறர்கள், குழந்தை பிறந்து ஒரு மாதமாகிறது, பெயர் சூட்டும் விழா என ஏதோ ஒரு சாக்குடன் வாரம் ஒரு தடவை ஓடி வந்து விடுகிறான். வந்தவர்கள் இருப்பதென்னவோ அரைநாள்தான். இதில் சுனந்தாவிடம்,
“ஸாரி ஆன்ட்டீ, ரொம்ப டிஸ்டர்ப் பண்றேன், இல்ல?” என்ற கேள்வி வேறு.
குழந்தை மருத்துவர் தந்த மருந்துகளைத் தவிர, மஸாஜ் எண்ணெய், உரைமருந்து, ஜீரணத்திற்கு, வாயுத் தொல்லைக்கு, சளிக்கு என தானே மருந்துகளைத் தயார் செய்து வந்து தந்தவன் “என்னை நம்பி இதை யூஸ் பண்ணுங்க ஆன்ட்டி. சேஃப்தான். நிச்சயமா கெடுதல் செய்யாது. எதுவும் வேலை செய்யலைன்னா மட்டும் டாக்டர் கிட்ட போங்க” என்றான்.
இந்த முறை தமிழகத்தின் இரண்டு முக்கிய விஐபிக்கள் ஒரே நேரத்தில் பஞ்சகர்மா மற்றும் ரஸாயனா சிகிச்சைக்காக இருபத்தியோரு நாள்கள் நலம் மருத்துவமனையில் தங்கி இருந்ததில் இங்கு வரமுடியாமல் தவித்த கபிலன், வாரநாள் என்றும் யோசியாது, கிரிதரனிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, சாரநாதனுக்குச் சொல்லிவிட்டு, நேற்று அவர்களை டிஸ்சார்ஜ் செய்த கையோடு பாலக்காட்டை நோக்கி வண்டியை எடுத்துவிட்டான்.
பாவை! தேடித் தேடி மகளுக்கு கபிலன் வைத்த பெயர். சாரநாதன் வீட்டிலும், மாளவிகாவின் வீட்டிலும் பெயரைச் சொன்னதுமே பிடித்துவிட, சியாமளாதான்
“அப்டீன்னா?”
“பொம்மை, goddessனு அர்த்தம். கண் மணின்னும் சொல்லலாம். திருப்பாவை, திருவெம்பாவைன்னு பாட்டெல்லாம் கூடப் பாடுவாங்களே… கொல்லிப்பாவைன்னு பெண் தெய்வம் கூட இருக்கு. ‘என் கண்ணின் பாவையன்றோ’ன்னு உங்கம்மா தினமும் பாடறாங்கள்ல, அந்தப் பாவை”
சியாமளா “அடேங்கப்பா, கபீஷ்பீடியாவான்னா இருக்கு!”
நாராயணனுமே “கபிலன் இத்தனை நீளமா நீ பேசி இன்னிக்குதான் நான் கேக்கறேன்” என்று சிரித்தார்.
சியாமளா கபீஷ் என்று அழைப்பது, இப்போது இங்கு எல்லோருக்கும் பழகிவிட்டது.
கபிலன்தான் “நீ பாட்டு வழக்கம்போல வேற வேற டோன்ல (tone) கூப்பிட்டு மானத்த வாங்கிடாதடீ” என்றிருந்தான்.
அவனது பொம்மைக்கு இப்போது ஐம்பது நாளைத் தாண்டியிருக்க, மனைவியையும் மகளையும் தன்னோடு அழைத்துக்கொள்ள விரும்பினான். நாராயணன் தம்பதியிடம் இந்தப் பேச்சை எப்படித் தொடங்குவது என்று புரியவில்லை.
‘ஒருவேளை பெரியவங்கதான் பேசணுமோ?’
‘அப்படியே இருந்தாலும், அவங்களா சொல்லாதபோது, சியாமளாவைக் கூப்பிடச் சொல்லி நானே எப்டி சொல்றது?’
‘யார் கிட்ட சொல்றது, அம்மா கிட்டயா, அப்பா கிட்டயா?”
‘ஏன்டா, லவ் , கல்யாணம் எல்லாம் உங்க இஷ்டம்… இதுக்கு மட்டும் அம்மா, அப்பா வரணுமோ?’
சுனந்தா பார்த்துப் பார்த்துக் கவனிக்க, சிறுமலை வீட்டில் தனியே கொண்டுபோய் வைத்து சியாமளாவிற்கோ, குழந்தைக்கோ ஏதேனும் நலக்குறைவு என்றால், அதற்குள் என்ன அவசரம் என்ற கேள்வி வருமே?
பக்கத்திலேயே பெரியவர்கள் இருக்கிறார்கள்தான்… அவசியமெனில் வந்தோ, கூட்டிச்சென்றோ பார்த்துக்கொள்வார்கள்தான். ஒரு ஃபோன் அடித்தால் நானே ஓடி வந்து விடுவேன்தான். இருந்தாலும்… அநேகப் பொழுதுகள் சியாமளா குழந்தையுடன் தனியாகத்தானே இருக்கவேண்டி வரும்?
நடையாய் நடந்த கபிலனை சியாமளா பிடித்து நிறுத்தினாள்.
“உங்க பொம்மை சிணுங்கறது கூட தெரியாம அப்டி என்ன ஆழ்ந்த யோசனை?” என்றவள், குழந்தையுடன் உள்ளே சென்று, அமுதூட்டி உறங்க வைத்த பின், கணவனை உள்ளே அழைத்தாள்.
“நீ சாப்ட்டியா தொந்தூஸ்?”
“ம்”
பிள்ளை பெற்றிருப்பதால் ஜீரணத்திற்கென காஃபி, சாப்பாடு, லேகியம் என எதை சாப்பிட்டாலும் கட்டாயமாக நாலைந்து வெற்றிலைகளைப் பாக்குடன் போடுவதில் உதடுகள் சிவந்திருக்க, நெய்யும் பாலும் கெட்டித் தயிரும் பத்திய சாப்பாடுமாய் சற்றே சதை போட்டு உடம்பு சேர்ந்திருக்க, பாலூட்டுவதில் தனி சோபையுடன், வெளியில் வாசலில் அலையாது நிழலில் இருப்பதில் இன்னுமே நிறம் கூடித் தெரிந்தவளின் வாளிப்பும் வனப்பும் கண்ட கபிலனால் சியாமளாவிடமிருந்து பார்வையை அகற்ற முடியவில்லை.
“கபீஷ்… குந்தவை எப்டி இருக்கா?”
“...”
“ம்ப்ச்… கபீ….ஷ், என்ன இப்டி பாக்கறேள், அம்மா வரப்போறா”
“அதுக்குதான், நாம நம்ம வீட்டுக்குப் போயிடலாம்னு சொல்றேன்… முடியலடீ”
“அடப்பாவி! நான் என்ன கேட்க வந்தா, நீங்க என்ன சொல்றேள்?”
“சரி, கேளு”
“குந்தவை எப்டி இருக்கா, விஜய் என்ன சொல்றான்னு செழியன் அங்கிளைக் கேட்டேளா?”
கபிலன் உதட்டைப் பிதுக்கி இடம் வலமாகத் தலையசைத்தான்.
“அங்கிள் (சாரநாதன்) என்ன சொல்றார்?”
“அப்பா கிட்ட என்னன்னு கேட்குறது, நான் சொன்னதைக் கேட்டு செழியன் அங்கிள் வீட்டுக்கு குந்தவையோட போய்ட்டு வந்தாச்சு. அவளோட விருப்பத்தையும் அப்பாகிட்ட சொல்லியாச்சு. இந்த விஷயத்தை அப்பா இன்னும் வீட்ல உடைச்சுப் பேசின மாதிரித் தெரியல… இந்த விஜய் பயலும் முறுக்கிட்டு கெடக்கான்”
“...”
தொடர்ந்து கபிலனே “அவனைச் சொல்லியும் தப்பில்லை. என்ன அடி, எத்தனை பேச்சு… நானா இருந்தா வீட்டுக்குள்ளயே விட்டிருக்க மாட்டேன்”
“குந்தவை கிட்ட பேசுங்கோளேன்… பாவம் அவ”
“ம்…”
மாலையில் செழியனே அழைத்து “சின்னுவும் மாப்ளையும் வந்திருக்காங்க கபிலா. நாளைக்கு நாங்க எல்லாரும் பாப்பாவைப் பார்க்க சியாமளா வீட்டுக்கு வர்றோம். நீ அங்க வருவியா ”
“அங்கதான் இருக்கேன் மாமா, வாங்க”
சியாமளாவிடம் சொல்ல “நீங்க பேசாம குந்தவையைக் கூட்டிண்டு வந்திருக்கலாம்”
கபிலனுக்கு நுங்கம்மாவின் வாடிய முகமே மனதில் நின்றது. அதிகாலை மூனரை மணிக்கே அவனது பொம்மை அலாரித்ததில், பசியாற்றியதும் சியாமளா உறங்கிவிட, மகள் உறங்கும் வரை கையில் வைத்துக் கொண்டிருந்தான்.
மறுநாள் விஜய்யைத் தவிர எல்லோரும் வந்தனர். தனிமையில் கபிலன் செழியனிடம்
“விஜய் எங்க மாமா?”
“அவனுக்கு இன்னும் அடிவாங்கி, அவமானப்பட்ட ஆத்திரம் அடங்கலை கபிலா. உங்க அளவுக்கு எனக்கு பெரிய மனசு இல்லைப்பான்றான். வளர்ந்த பையன். என்ன சொல்றதுன்னு தெரியலடா”
சிறிது நிதானித்த கபிலன் “குந்தவை?”
“பாப்பா முன்னால வந்து எனக்கும் விஜய்யை பிடிச்சிருக்கு, நானும் அவனை விரும்பறேன்னு சொல்லாததுல அவனுக்குக் கோவம்”
“மாமா, நுங்கம்மாவையே உங்க வீட்டுக்குக் கூட்டிக்கிட்டு வந்து அப்பா பேசிட்டாங்க. மன்னிப்பும் கேட்டாங்க…”
“இதெல்லாம் நான் சொல்லாம இருப்பேன்னா நினைக்கற கபிலா…?”
“அவனுக்கு என்னதான் வேணுமாம் மாமா?”
“...”
“மாமா…”
“என்னைக் கேக்காத கபிலா… சொல்லவே வருத்தமா இருக்கு. குந்தவையை வீட்டை விட்டு வரச் சொல்லு, நான் கட்டிக்கிறேங்கறான் டா”
“!!&%₹#@!?”

Author: VedhaVishal
Article Title: குறுநகை போதுமடி! 18 - FINAL 1
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.