குறுநகை போதுமடி! 19
சிறுமலைக்கும் கொல்லங்கோடுக்கும் வாராவாரம் கபிலன் ஷட்டில் ஓட்டுவதைப் பார்த்து பரிதாபப்பட்டோ என்னவோ, பாவைக்கு மூன்றாம் மாதம் முடிந்ததும் சுனந்தாவே,
“ஷாம்ளா, நீ கோந்தைக்குக் குளிச்சு விட , மஸாஜ் பண்ண, மருந்து விட நன்னாப் பழக்கினுட்டாய். தலையும் நின்னு குப்புறிக்க ட்ரை பண்றாளாக்கும் கோந்தை. நீயும் குட்டியும் எத்தரை நாள் இங்க இருந்தாலும் எங்களுக்குக் காணாது கேட்டயா, ஆனா, அந்தப்புள்ளை பாவம்டீ. அலையா அலையறான்” என்றார்.
சியாமளாவுமே தன்னால் தனியே குழந்தையை சமாளிக்க முடியும் என்ற திடம் வந்ததில் கணவனிடம் கோடிட்டுக் காட்ட, அவன் “நாளைக்கே என்னோட வத்துடறீங்களா?” என்றான்.
நாள், நட்சத்திரம் பார்த்து, குழந்தைக்கு நகைகள், வெள்ளியில் சங்கு, மூவருக்கும் புத்தாடைகள், லேகியம், கஞ்சி மாவு, பயத்தமாவு, பக்ஷணங்கள் என நீண்ட தயாரிப்பின் பின் மூன்று வாரங்கள் கழித்து சியாமளாவின் பெற்றோரே முறைப்படி கொண்டுவந்து விட்டனர்.
சியாமளாவிடமே “புள்ளையத் தூக்கிட்டு நேர நீ நம் வீட்டுக்குதான்த்தா வர்ற, அவென்(கபிலன்) சொல்றதைக் கேக்காத” என்ற சாரநாதனின் பேச்சைத் தட்டாது, அங்கேயே போய் இறங்கினர்.
செண்பாவும் குந்தவையும் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். குந்தவைக்குப் பிறகு இப்போதுதான் வீட்டில் குழந்தை என்பதால் அடுத்து பசிக்கு அழும் வரையில் கைக்கு கை தாவினாள் பாவை.
செண்பா “அப்படியே அத்தை (மாளவிகா) ஜாடை. இல்ல, மாமா?”
சாரநாதன் மோனலிஸா முகத்துடன் மெதுவே தலையசைக்க, சியாமளாவின் பெற்றோர் முன் காவேரி ஏதவது சொல்லிவிடுவாளோ என கபிலன் பார்த்திருக்க,
“அவ அப்பனப் பெத்த ஆத்தாளாச்சே… எங்கிட்டாச்சும் அந்தச் சாயல் இல்லாமப் போகுமா…” என தீர்ப்பளித்தார் நீலவேணி.
தன் அருகில் படுத்திருந்த நாராயணன் உறங்கியதை ஊர்ஜிதம் செய்து கொண்ட கபிலன், சியாமளாவிற்கு “அங்க ஆன்ட்டீ தூங்கியாச்சா?” என்று செய்தி அனுப்பி, விழித்திருந்த பாவையைக் கையில் அள்ளிக்கொண்டு முத்தமிட்டான். வயிற்றில் வாயை வைத்து புருபுருக்கவும் கிளுக்கிச் சிரித்தாள் பாவை.
“பொம்ம, அப்பா கிட்ட வந்துட்டீங்களா, நம்ம வீட்டைப் பாத்தீங்களா, புடிச்சிருக்கா?”
பாவை பதில் சொல்வதுபோல் ‘கா…வ்’ என்று சத்தமெழுப்பிச் சிரிக்கவும் புளகாங்கிதம் அடைந்தவனின் முகத்தில் ஆயிரம் வாட் வெளிச்சம்.
பக்கத்தில் அமர்ந்திருந்த சியாமளா கனைத்தாள்.
“நான் கூட நம்ம வீட்டுக்குதான் வந்திருக்கேன் கபீஷ்”
“தொந்தூஸ், உனக்கும் வேணா கிச்சுகிச்சு மூட்டவா?”
நாராயணன் மறுநாளே புறப்பட்டுவிட, சுனந்தா இரண்டு வாரங்கள் தங்கி, சியாமளாவிற்கு குழந்தையுடன் இடம், நேரம், வேலை எல்லாம் பழக்கிக் கொடுத்துவிட்டுக் கிளம்பியவரை, கபிலன்
நம்பிக்கையானதொரு டிரைவருடன் அனுப்பி வைத்தான்.
குழந்தையைப் பார்க்கவென பணமும் சர்க்கரையும் எடுத்துக்கொண்டு ஊர்க்காரர்களும் உறவுகளும் நினைத்த நேரத்தில் வந்தனர்.
சுனந்தா இருக்கும்வரை அவர் பார்த்துக்கொள்வார் என்று நினைத்த செண்பா, அவர் சென்றபின் தினம் ஒரு கீரை, பூண்டு வெந்தயக் கஞ்சி, மூளைகட்டிய பயிறு சுண்டல், வழக்கம்போல் பால், தயிர் என கொடுத்து அனுப்பினாள். சில நாள்கள் கபிலன் ஹாஸ்பிடலுக்குச் சென்ற கையோடு சியாமளாவையும் குழந்தையையும் சாரநாதன் வந்து வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிடுவான்.
“ராசாத்தீ…’” என்ற தன் அழைப்பில் பேத்தி தலையைத் திருப்பித் தன்னைத் தேடுவதில் அத்தனை பெருமிதம் அவன் முகத்தில்.
காரைக்குடியில் சொல்லி இடுப்புக்குத் தங்கச் சலங்கையும், கெட்டிக் காப்பும் முத்துக் கொலுசும் செய்து வாங்கிவந்தான்.
செண்பா தனிமையில் “இந்தக் குட்டி அத்தை சாயல்ல இருக்கறதால ஓவராதான் மாமா கொஞ்சுறீங்க” என்று கிண்டல் அடித்தாலும் அவளுமே இடுப்பில் இடுக்கிக்கொண்டுதான் அலைந்தாள்.
பின்னால் எப்படியோ தெரியாது. தற்சமயம், தன்னிடம் இருக்கும் பாவையை செண்பா தூக்கிவிட்டால் ‘வந்துட்டா சக்களத்தியக் கொஞ்ச’ என குழந்தையிடமே சொல்லிச் சிரித்தாள், காவேரி.
“விடிகாலைலதான் பொம்மை நல்லா சத்தம்போட்டு விளையாடறதுல தூக்கம் டிஸ்ட்ர்ப் ஆகி எந்திரிக்க லேட் ஆயிடுது” என்று கபிலன் சொல்லவும், அதைப் பார்க்கும் ஆசையில் குந்தவை ஓரிரு முறை இரவில் இங்கு வந்து தங்கினாள்.
பாவை சற்று தும்மினால் வீடே ஆவிபிடித்ததில், யூகலிப்டஸ் எண்ணெய் மணத்தது. பெரியாயி நீலவேணி தொடங்கி சுத்தத்தின் கோட்பாடுகளை மறுவரையீடு செய்தனர்.
மதுரைக்கு வரச்சொல்லி மாளவிகா அழைத்துக்கொண்டே இருக்க, குழந்தைக்கு ஆறுமாதம் முடியவும் சென்றனர். ஆதித்தன் “அண்ணியும் பாப்பாவும் இங்க கொஞ்சநாள் இருக்கட்டும்ணா, நீ வேணா போய் உன் வேலையைப் பாரு” என்றதை மற்ற இருவரும் பலமாக ஆமோதித்ததில் நான்கு நாளைக்கெனப் போனவர்கள் திரும்பி வர, பன்னிரெண்டு நாளானது.
ஏடுபோல் இருந்த பாவை வீடு முழுவதும் தவழ, குழந்தையின் முட்டி தேயாதிருக்க knee pads வாங்கி வந்த ஜெயச்சந்திரனை சியாமளா, வியப்புடனுடம் மரியாதையுடனும் பார்த்தாள்.
மீனாக்ஷி அம்மன் சன்னதியில் குழந்தையைக் கிடத்தினர். ஜெயச்சந்திரன் பாவைக்கு அழுத்தமான இரண்டு ஜோடி தங்க வளையல்கள் வாங்கித் தர, மாளவிகா, கபிலன் பிறந்தபோது அவளது பெற்றோரும் சாரநாதன் வீட்டிலும் போட்ட குழந்தை நகைகள் அனைத்தையும் சியாமளாவிடம் கொடுத்தாள்.
கபிலன் “பொம்மை உன்னை மாதிரியே இருக்கால்லம்மா?”
‘உங்க அத்தை, செண்பாவெல்லாம் குழந்தை என்னைப் போலவே இருக்கறதுக்கு ஒண்ணும் சொல்லலியா?’ என்ற கேள்வியைத் தனக்குள்ளேயே வைத்துக்கொண்டு “ம்… பார்த்தேன்” என்றவளின் புன்னகைக்கு நேர் மாறாகக் குரல் தழைந்து ஒலித்தது.
“....ம்மா?”
“பாவை எப்போதும் நல்லபடியா, நிம்மதியா, சந்தோஷமா இருக்கணும்டா கபிலா”
பன்னிரெண்டு நாள்களுக்குப் பின் “அடிக்கடி வரணும்” எனப் பிரிய மனமின்றி அனுப்பி வைத்தாள் மாளவிகா.
சியாமளாவையும் பாவையையும் சிறுமலையில் கொண்டுபோய் விட்ட ஆதி, கையோடு திரும்பிவிட்டான்.
******************
அடித்துப் பெய்த மழையில் மதியமே இருண்டு சில்லிட்டுக் குளிர, பேபி பிளாங்கெட்டுக்குள் கதகதப்பாக உறங்கிய மகளைத் தொடப் போன கபிலனின் கையைப் பிடித்தாள் சியாமளா.
“என்னடீ பிரச்சனை உனக்கு, இப்ப நான் தொட்டா என்ன?”
“கஷ்டப்பட்டுத் தூங்க வெச்சுருக்கேன். உங்களைப் பார்த்தா அவ தூக்கம் கோவிந்தாதான்”
“பத்து நாளாச்சுடீ பொம்மையப் பார்த்தே…”
“என்னைப் பார்த்தும்தான் பத்து நாளாச்சு”
“ம்… உன்னை நான் சரிய்ய்யா பார்த்து பத்து மாசமாச்சு”
“நானா வேண்டாம்னேன்?”
சியாமளா வந்தது முதலே இருவரும் தனியாக இருந்தாலுமே, இதுவரை அணைப்பு, முத்தம் என்ற எல்லையைத் தாண்டாத கபிலன்
“பாவம்னு பார்த்தா… எனக்கிது தேவைதான்…”
“உங்க பார்வைதான் டேஞ்சரே”
இருவரும் ஹஷ் ஹஷ் என கிசுகிசு குரலில் பேச, பதில் சொல்லாது, மனைவியை ஆழ்ந்து பார்த்தவன், சடாரெனத் தன்னிடம் இழுத்து இறுக்கினான். சற்றும் பிகு செய்யாமல் தன்னிடம் ஒன்றியவளின் இதழில் பதிய “மட்ட மத்யானத்துல…”
“...”
“யாராவது வந்தா?”
“...”
“கபீ…”
“ஒரு அரைமணி அமைதியாதான் இரேன்…”
அவளைப் பேசாதே என்றவனின் சர்வாங்கமும் பேசியது.
மழைக்குளிர், மெலிதான மின்விசிறிக் காற்றை மீறி வியர்த்தவன்
“தித்திப்ஸ்… ரொம்ப மிஸ் பண்ணேன்டா. அதுலயும் நீ இங்க இருந்துட்டு ஊர்ல இல்லாத இந்தப் பத்துநாள்… இப்பவே சொல்லி வை உங்கம்மா கிட்ட. அடுத்த டெலிவரி இங்கதான்”
“அதான் செரி”
நீண்ட மாதங்களுக்குப் பிறகு தன்னுடன் திளைத்து அயர்வும் நிறைவுமாக அடக்கமாட்டாது சிரித்துச் சில்லறையை சிதற விட்டவளின் புறம் திரும்பி அணைத்து முத்தமிட்டவன், தன் முதுகில் இரண்டு பட்டுக் கைகளின் மென் அழுத்தத்தை உணர்ந்து அதிர்வும் சிரிப்புமாக “பொம்ம…” என்றதில் “ப்ப்ப்பா… த்த்தா” என்றபடி, தந்தையில் முதுகில் கை பதித்து முட்டி போட்டு நின்றிருந்த பாவை, அவன் கை வழியே அம்மாவை எட்டிப் பார்த்துச் சிரிக்க…
சியாமளா கணவனை முறைத்தாள்.
கபிலன் “சும்மா இருந்தவனை சுரண்டி விட்டுட்டு… என்னை ஏன்டீ முறைக்கற…”
“இப்ப என்ன செய்யறது?”
“இன்னுமா… ஏய்… ஏன்டீ கிள்ற?”
மெதுவே எழுந்து அமர்ந்து மகளைக் கையில் தூக்கியவன், பாவை பார்த்துவிட்டாள் எனக் கவலை/ கூச்சப்பட்ட சியாமளாவை பார்த்துக் குலுங்கிச் சிரித்தான்.
“தொந்தூஸ், இதுபோல புரியாத ஸ்டேஜ்ல இருக்கற குட்டீஸ் எட்டிப் பார்த்தா உடனே அடுத்த குழந்தை வருமாம்…”
“நெஜமாவா கபீஷ்… நாம வேற…”
“நல்லதா போச்சு…. எப்டியும் என் கணக்குல ரவுண்டா அஞ்சு…”
சியாமளா படு சீரியஸாக “அதெல்லாம் முடியாது … மூணுதான்” எனவும் கபிலன் சத்தமாகச் சிரித்துவிட்டான்.
இருவருக்கும் டீயுடன் வந்தவள்,
“விஜய் கிட்ட பேசினேளா, அவன் சொன்னது குந்தவைக்குத் தெரியுமா… நாலு மாசத்துக்கு மேல ஆச்சு”
“ம்ப்ச்… எல்லாம் கோயம்புத்தூருக்கே போய்ப் பேசியாச்சு. தன்மானம் வேற. புடிவாதம் வேறன்னு புரியாதவன்…”
“அவன் கேட்டது அங்கிளுக்குத் தெரியுமா?”
“நான் சொல்லலைடா. அவன் பேசறது இப்ப எனக்கே பிடிக்கல”
“...”
“நீ கேட்டா உடனே பொண்ணைத் தூக்கிக் கொடுத்துடணுமா… இல்ல, தெரியாமதான் கேக்கறேன், லவ் பண்ணிட்டா இவன் கூப்பிட்ட உடனே அவ அப்பா, அம்மாவை, வீட்டை விட்டு வந்துடணுமா… ஒரு அப்பா எதுவுமே சொல்லக் கூடாதா? கஷ்டப்படாமலே காதலிக்கணும்னா எப்படி?”
“...”
“சரி, லவ் பண்ணின, திடுதிப்னு வந்து பொண்ணு கேட்ட. அது கூடச் சரின்னே வெச்சுக்க. அப்பா அடிச்சது தப்புதான். நான் மறுக்கலை… அதுக்காக?”
“அப்ப அடி வாங்கினாதான் காதல் சக்ஸஸ் ஆகுமா?”
“ஏய்….”
“அதை விடுங்கோ, கபிலன் ஸார் யார்கிட்ட அடி வாங்கினேள்?”
“...”
“ஹலோ…”
“எங்கிட்ட… ஏன், உனக்குத் தெரியாதா?” என்றவன் மலையிறங்க மூன்று மணிநேரம் பிடித்தது.
இரவு அடுப்பில் இட்லிப் பானை இருக்க, அடுக்களையிலேயே நின்று சட்னிக்குத் தேங்காய் துருவிய சியாமளாவின் பின்னே வந்து நின்ற கபிலன் குழந்தையை அவள் அருகே கொண்டு செல்ல, அது முத்தம் என்ற பெயரில் சியாமளாவின் கன்னம் முழுவதும் இகழைக் கீறி இருந்த ஒற்றப் பல்லால் கடித்து, நக்கி வைக்க, அவளது இன்னொரு பக்கம் குனிந்து மகளை நகலெடுத்தவன் “ஸாரி சொல்லு தொந்தூஸ்”
கொலைவெறியுடன் திரும்பியவள் கபிலன் கண்சிமிட்டவும் சிரித்துவிட்டாள்.
“அப்பா கிட்டயும் நுங்கம்மா கிட்டயும் பேசறேன், இப்ப பசிக்குதுடீ”
********************
காவேரி சில மாதங்களாகவே பார்வையில் ஏதோ மறைப்பது போல் இருப்பதாகக் கூறவும், திண்டுக்கல் அரவிந்த் கண் மருத்துவமனைக்குச் சென்றதில், இரண்டு கண்ணிலுமே புரை விழுந்து பழுத்திருப்பதாகவும், உடனடி அறுவை சிகிச்சை தேவை எனவும் கூற, அன்றே இடம் இருந்ததால் மதியம் இரண்டு மணிக்கு வலது கண்ணில் கேடராக்ட் ஆபரேஷன் செய்தனர்.
ஒரு கண்ணில் திரையும் கறுப்புக் கண்ணாடியுமாக இருந்தவளிடம் பாவையைத் தூக்கிச் சென்ற குந்தவை “டான் ஆச்சி பாருடா பட்டு” என, அதுவும் அவளைச் சுற்றி சுற்றி வர, ஒரே சிரிப்பு எல்லோருக்கும்.
விஷயம் கேள்விப்பட்டு தினமும் காவேரியின் புகுந்த வீட்டுச் சொந்தங்கள் யாரேனும் பார்க்க வந்தனர். குந்தவைக்கு அவரவர்களுக்குத் தெரிந்த நல்ல வரன்களைச் சொல்லி விட்டுச் செல்ல, மீண்டும் பற்றிக்கொண்டது கல்யாண ஜுரம்.
“வயசுப் பொண்ணை இன்னும் எத்தினி நாள் வீட்லயே வெச்சுக்கறது. காலா காலத்துல கட்டிக்குடுத்து நம்ம கடனைத் தீர்த்துக்கிட்டாதானே நிம்மதி“
“என்ன காவேரி இது, அத்த(நீலவேணி), நீங்களே பேசாம இருந்தா எப்படி… ஜோசியர பாத்தீங்களா… ஜாதகத்துல வம்பு, தும்பு எதுவும் இல்லையே”
விவகாரமான தன் நாத்தனாரின் விஷ(ம)மான கேள்வியில் காவேரிக்கு சுருக்கென, அவர்கள் சென்றதுமே தொடங்கிவிட்டாள்.
மாலையில் கபிலனும் சியாமளாவும் சென்றபோது இந்தப் பேச்சுதான் ஓடியது.
குந்தவை புரியாத மொழித் திரைப்படத்தைப் பார்ப்பதான முகபாவனையில் நிற்க, கபிலன் அவளைத்தான் பார்த்து நின்றான்.
தோட்டத்திலிருந்து வந்து உள்ளே நுழைந்த சாரநாதன் பேத்தியைக் கண்டதும் “ராசாத்தீ!” எனவும் ஆனையாடிக்கொண்டே சென்று அவன் கால்களைப் பிடித்து நின்றாள் பாவை.
“குளிச்சிட்டு வரேன்டா தங்கம்” எனப் புழக்கடைக்கு சென்றவனின் பின்னாலேயே தவழ்ந்து சென்ற மருமகளைப் பினதாடர்ந்தாள் குந்தவை.
சற்றுப் பொறுத்து “நுங்கு…” என்ற அழைப்புடன் தேடிச் சென்ற கபிலன்,
“அப்பா..”
துண்டால் தூடைத்தபடி “சொல்லப்பு”
“நாளைக்கு வெள்ளிக் கிழமை. காலைல ஹாஸ்பிடல் போய்ட்டு பதினோரு மணிபோல கோயம்புத்தூர் போகலாம்னு இருக்கேன்”
“எதுக்குடா?”
தங்கையைப் பார்த்தபடி “விஜய் கிட்டப் பேச”
“திரும்பவுமா… செழியன் கூட நழுவினாப்பலதான் பேசுறான்டா”
குந்தவை அமைதியாக நிற்க, கபிலன் “நீயும் வர்றியா நுங்கு?”
“வேணாம்ணா”
பாவையை வாங்கிக்கொண்ட சாரநாதன் எதுவும் பேசாது உள்நோக்கி நடக்க “அப்பா, குந்தவை மனசுல இருக்கறது என்னன்னு வீட்ல இருக்கறவங்களுக்குத் தெரியாம இல்ல. அப்படியே தெரியலைன்னா உடைச்சுப் பேசுங்கப்பா”
குந்தவை மீண்டும் “வேண்டாம்ணா”
கபிலன் “எது, கல்யாணமா, விஜய்யா?”
“...”
அங்கேயே நின்றவளை “நான் இருக்கேன்ல, உள்ள வா நுங்கு….” என இழுத்து வந்தான்.
செண்பா எல்லோருக்கும் கருப்பட்டி காஃபி போட்டுத் தந்தாள். காவேரியே கல்யாணப் பேச்சை விட்ட இடத்திலிருந்து தொடர, சாரநாதன் அவள் சொன்னது அனைத்தையும் பலமாக ஆமோதித்தான்.
“செஞ்சுடலாம் கா”
சியாமளா கபிலனைப் பார்க்க, கபிலன் “பொறு” என கண்ணைக் காட்டினான்.
செண்பா “அம்மா சொல்றது சரிதான் மாமா. வர ஒருத்தர் விடாதைக்கு அம்மா கண்ணை விட இவ கல்யாணத்தைப் பத்திதான் விசாரிக்குறாங்க. நாமளா மாட்டேங்குறோம்… அமையணும்ல…”
காவேரி “எனக்கு இருக்கற வேகத்துக்கு சட்டுபுட்டுனு ஒரு நல்ல மாப்பிள்ளையப் பார்த்து அடுத்த முஹூர்த்தத்துலயே கல்யாணத்தை நடத்திப்புட மாட்டோமான்னு இருக்கு…”
“...”
“அதட்டி மிரட்டி காரியத்தை சாதிக்கறதை விட்டு அப்பனும் ஆத்தாளும் ஒட்ட சாணுக்கு நிக்குற மவ பேச்சைக் கேட்டு ஆடறீங்க. சொன்ன பேச்சைக் கேட்ட எம்மவளே கடைசீல ரெண்டாவதாத்தான்…”
சாரநாதனின் முகத்தில் அக்காவின் பேச்சில் விளைந்த வருத்தம், சுணக்கம், ஒவ்வாமை, ‘எத்தனை வருஷமானாலும் இந்தப் பேச்சு போகாதா?’ என்ற அயர்வு எனக் கலவையான உணர்வுகள் பிரதிபலித்தது.
மகளைத் தன்னோடு ஒப்பிட்டதில் வெகுண்ட செண்பா “அம்மா, எதை எப்ப பேசறதுன்னே கிடையாதா ஒனக்கு?” என்று சீறினாள்.
நீலவேணி “இந்தக் கண்ணை வெச்சுக்கிட்டு இப்ப இந்த வேண்டாத பேச்சு தேவையா காவேரி…”
“நான் என்ன இல்லாததையா சொல்லிப்புட்டேன்… ஏதோ, எம் பேத்திக்கு ஒரு நல்லது நடக்காதான்னு…”
சாரநாதன் “இப்ப எம் மவளுக்கு என்ன வந்திடுச்சுன்னு இப்படி வாய்ல வந்ததைப் பேசுற… அவளைக் கட்டிக்கொடுக்க எனக்குத் தெரியும்”
“எல்லாம் எனக்குத் தெரியும்னு சும்மா இருந்தா…கண்ணுக்கு லட்சணமா நல்லா படிச்ச பையனா கொண்டாந்து நிப்பாட்டினா, தானா சரின்னுட்டுப் போறா…”
சாரநாயன் “ஏன், குந்தவைக்கும் விஜய்க்கும் பழக்கம் இருக்கறது தெரிஞ்சும் ஆயியும் மவளும் எங்கிட்ட சொல்லாம சும்மாதானே இருந்தீங்க?”
“மாமா!” - செண்பா.
“நீ சொன்னாப்பல தைரியமா வந்து நின்னானே ஒருத்தன்… நுங்கம்மாவுக்கு அவன் மேல பிடித்தம் இருக்குன்னு ஒரு கோடி காட்டி இருந்தா, இந்நேரம் கல்யாணம் முடிஞ்சே ரெண்டு வருஷம் ஆகி இருக்கும்”
காவேரி “அவ புடிச்சிருக்குன்னா அந்த வெத்துப் பயலுக்கு கட்டிக் குடுத்துடுவியா…
அப்புறம் என்னத்துக்கு அவனைப் போட்டு அடிக்கணும்?”
“தப்புதான்… நுங்கம்மாவோட மனசு தெரியாம அவசரப்பட்டு அடிச்சது என் தப்புதான்… போதுமா” என்று ஆத்திரத்துடன் உரத்த குரலில் தொடங்கவும், பாவை அவன் முகத்தைப் பற்றிக் குனிந்து பார்க்கவும் சட்டெனத் தணிந்தான்.
“ஒன்னுமில்லடீ தங்கம். தாத்தா இனிமே சத்தம் போடலை” என்று முத்தமிட்டான்.
“அவளுக்குப் புடிச்சிருந்தா… கட்டிக்குடுத்துட முடியுமா… என் நாத்தனா வேற ‘காவேரியண்ணி, உன் பேத்திக்குக் காதல், கீதல்னு எதுவும் இல்லையேன்னு கேட்டா…”
“...”
“எனக்குத் தெரிஞ்சு செவனேன்னு இருந்த எம்பேத்தி மனசைக் கலைச்சு அந்தப் பையன்தான் பூ குடுக்கறதும் கைய புடிச்சு ஒரண்ட இழுக்கறதுமா இருந்தான்”
அதற்கு மேல் பொறுக்க முடியாத சியாமளா “நீ ஏன் குந்தவை பேசாம இருக்க, என் கிட்ட சொன்னதை இங்க சொல்லு”
“...”
“நீதான் உங்க அப்பா, அம்மா கிட்ட பேசி கன்வின்ஸ் பண்ணணும்”
“...”
“அதை விட்டு நீயே குழம்பி நின்னா… ப்ளீஸ், அழாத, அழறது உன்னை இன்னும் பலவீனமாக்கும் குந்தவை. எப்ப அழணும் தெரியுமா, உங்க அப்பா, அம்மாவை, விஜய்யை, செழியன் அங்கிள் ஃபேமிலியை சரிக்கட்டி, கல்யாணம் ஆன அப்புறம்தான் அழணும். பீ ஸ்ட்ராங்க்”
சியாமளா வேலைக்கென இங்கு வந்து தங்கி இருந்தபோதும் சரி, கபிலனுடன் திருமணமான பிறகும் சரி, இதுவரை நேரிட்டு அவளை எதுவும் தவறாகப் பேசாத காவேரி, தன் பேத்தி விஷயத்தில் சியாமளா இடையிட்டதும், உள்ளிருந்த விஷம் பீறிட்டது.
“வாம்மா… வா. ஒழுங்கா இருந்த எம்பேத்தி இப்டி லவ்வு, கிவ்வுனு கெட்டுப் போனதே உன்னாலதான். ஒரு ஆம்பளைய வளைச்சுப் போடன்னே
ஊரை விட்டு ஊரு வந்து, எங்க வீட்லயே தங்கி… அதுவும் ரெண்டு நாள் முச்சூடும் யாருமில்லாமைக்கு அவனோட தனியா இருந்து… ஆத்தாடீயாத்தா அந்தத் தெகிரியம்…”
“நிறுத்துறீங்களா….”
கபிலன் போட்ட சத்தத்தில் சாரநாதனிடம் இருந்த பாவை மட்டுமின்றி, அவன் அருகில் நின்ற சியாமளாவுக்குமே தூக்கிவாரிப் போட்டது.
“அநாவசியமா அவளைப் பேசற வேலையெல்லாம் வேணாம்”
“என்ன தம்பி, உம் மவன் என்னை மிரட்டிப் பார்க்கறானா?”- காவேரி.
“எதானாலும் நேரா எங்கிட்டப் பேசுங்க. நுங்கம்மாவும் விஜய்யும் பேசி, பழகறாங்கன்னு உங்களுக்கு சந்தேகமாவோ உறுதியாவோ தெரிஞ்சபோதே நீங்க ஏன் அப்பா கிட்ட சொல்லல?”
“...”
“அவளை ரூமுக்குள்ள அடைச்சு வெச்சு… விஜய்யை அவமானப்படுத்தி, அப்பாவோட கோபத்தை இன்னும் உசுப்பிவிட்டு… பாவம் செழியன் மாமா… அவரா இருக்கப்போய் நாங்க கூப்பிட்டதும் ஃபங்ஷனுக்கு வந்தார்”
“...”
“உங்க கிட்ட காசு இருந்துச்சே, நீங்க சந்தோஷமா இருந்தீங்களா… இல்ல, நீங்க ஆசைப்பட்டதெல்லாம் நடந்துச்சா?”
“...”
“இத்தனை வருஷமா மதிப்பும் மரியாதையுமா நீங்க இங்க இருக்க உங்க காசு காரணமில்ல. எங்கப்பா காரணம். அவங்களோட பொறுமையும் பொறுப்பும் காரணம். இன்னும்… அவங்க இழந்த எத்தனையோவும் காரணம்…”
“அப்பு…” என்ற சாரநாதனின் குரலில் அத்தனை கனமும் உணர்வும் தளும்பிக் கிடந்தது.
அமைதியான மருமகனின் ஆவேச முகம் கண்டு காவேரியே அரண்டுதான் போனாள்.
கண்ணில் நீர் வழிய நின்றவனின் தோளில் சியாமளா கை வைத்து அழுத்தவும் “என்னை விடு ஷியா” என்றவன், காவேரியிடம்
“இங்க பாருங்க, இதுவரை எங்கப்பா கிட்ட கூட நான் சொல்லலை. நடந்து போனதுல உங்களை விட அதிகக் கோபத்துல இருக்கான் விஜய். எந்த அளவுக்குன்னா…”
“...”
தந்தையை ஒரு முறை ஆதூரமாகப் பார்த்தவன் “குந்தவை வீட்டை விட்டு வந்தா, கல்யாணம் செஞ்சுக்கறேன்னு சொல்ற அளவுக்கு…”
“அப்பு…”
“அடப்பாவி!” ‘ செண்பா.
“கருப்பா… நான் இன்னும் என்னெல்லாம் பார்க்கணுமோ?” - நீலவேணி.
“அண்ணா!” - குந்தவை.
“நாசமாப் போறவன்… அவனைத்தான் கட்டிக்கணும்னு
அப்படி என்னடீ வீம்பு உனக்கு… இன்னிக்கு வீட்டை விட்டு வரச்சொல்றவேன், நாளைக்கு சொத்து வேணாம்னு சொல்லுவானா?” - காவேரி.
“காட்! சொத்து… சொத்து…
நாளைக்கு நான் செழியன் மாமா வீட்டுக்குப் போய், ஒரு முறை பேசிப் பாக்கறேன்.
“...”
“நுங்கு, நீ விஜய்தான் வேணும்னு உறுதியா இருக்கியா?”
“...”
“ஏன் கேட்கறேன்னா, உங்க அம்மா, அப்பாவை விட்டுட்டு வான்னு என்னை யாராவது சொன்னா… நான் போடான்னு உதறிட்டுத் திரும்பிக் கூடப் பார்க்கமாட்டேன்.
“!!!”
“விஜய்யோட ஃபீலிங்ஸை என்னால புரிஞ்சுக்க முடியுது.
நம்ம கிட்ட அடிவாங்கி, அவமானப்பட்டு இருக்கான்ற ஒரே காரணத்துக்காகவும் உனக்காவும்தான் இந்த முயற்சி”
“...”
“இதுக்கு மேலயும் அவன் இறங்கி வரலைன்னு வை…”
“???”
“அப்பா பாக்கற பையனைக் கட்டிக்க ரெடியா இரு”
“அண்ணா”
“அப்பு, நானும் வரட்டுமா?”
“நீ ஒரு தரம் போய் பேசினதே போதும்ப்பா. நான் பாரத்துக்கறேன்”
கபிலன் மனைவி, மகளுடன் வீட்டுக்குக் கிளம்பியதும் நீலவேணி, காவேரியிடம் “அவனை யாருன்னு நினைச்ச, அழகர்சாமி பேரன்டீ” என மொத்தப் பெருமையையும் தன் கணவருக்குக் கொடுத்து விட்டார்.
மறுநாள் சாரநாதன் எத்தனை சொல்லியும் கேட்காது சியாமளாவையும் பாவையையும் தன்னுடன் கோவைக்கு அழைத்துச் சென்றுவிட்டான்.
*******************
காரில் பாவையை பாதுகாப்புக்காக பேபி கேரியரால் தன்னோடு பிணைத்துக்கொண்டு, நன்கு உறங்கி விட்ட சியாமளா, குளிரவும் விழித்துக்கொண்டு, காரின் ஏசியைக் குறைத்தாள்.
“கபீஷ், கோயம்புத்துர்ல எங்க போறோம்?”
“..”
“செழியன் அங்கிள் வீடு எந்த ஏரியால இருக்கு?”
“...”
“சிட்டி லிமிட் தாண்டிட்டோமா?”
“...”
“இன்னும் கோயம்புத்தூரே வரலையா கபீஷ், கூகுள்ல நாலு மணி நேரம்தானே…”
“ பத்து நிமிஷம் சும்மா இருந்தா தானே தெரியும். ஒரு சர்ப்ரைஸ் குடுக்க முடியுதா உனக்கு… அங்க பாரு” என்ற கபிலன், சற்று தூரத்தில் தெரிந்த பச்சை நிறப் பெயர்ப் பலகையைக் காட்டினான்.
“வால்பாறையா?”
“படிச்சதானே?”
ஏகப்பட்ட கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து, அடர்ந்த காடு போன்ற அமைதியான சூழலில், அருவியோ ஓடையோ சலசலக்கும் சத்தம் கேட்ட ஒரு இடத்தில், ஒரு ஹோம்ஸ்டேயின் உள்ளே நுழைந்து காரை நிறுத்தினான்.
சியாமளா இறங்கப் போக “வெய்ட்” என்றவன், பின்னால் இருந்த பையில் இருந்து ஒரு குட்டி ஸ்வெட்டரை எடுத்துக் கொடுத்தவன் “பொம்மைக்கு போட்டுவிட்டப்புறம் இறங்கு”
அறை சுத்தமாக, அழகாக, விஸ்தீரணமாக, இரண்டு பக்கச் சுவற்றில் பெரிய கண்ணாடிகளோடு இருந்தது.
பக்கத்தில் சின்னதாக கிச்சனெட் எனப்படும் மிகச்சிறிய சமையலறை இருந்தது.
“இங்கேயும் சமைக்கணுமா கபீஷ்?”
“ஆமா, பொம்மைக்கு நாமதான் சமைக்கணும். நமக்கு வேணும்னா சமைச்சுக்கலாம். சாப்பாடும் கிடைக்கும்”
டீ, பக்கோடா, கேக் வந்தது. இரவுக்கு கையில் கொண்டு வந்த ரொட்டி, சப்ஜியை சீக்கிரமே சாப்பிட்டு, குளிரில் மெதுவே சிறிது நடந்துவிட்டு வந்தனர்.
கபிலன் பாவையின் படுக்கை விரிப்புகள், கம்பளி அனைத்தையும் டிக்கியில் இருந்து எடுத்துவந்தான். கண்ணாடி ஜன்னல்களில் கனத்த திரைகளை இழுத்துவிட்டான். பயணக் களைப்பும் குளிரும் சேர, சியாமளாவிடம் ஒட்டிக்கொண்டு தாய்ப்பாலுக்கு சிணுங்கிய குழந்தை விரைவில் உறங்கியும் போனாள்.
கபிலன் விளக்குகளை அணைத்துவிட்டுத் திரைச்சீலையை சற்றே விலக்க, வெளியே வெகு சில மின் விளக்குகளே, அதுவும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் மஙகலாக எரிந்ததால், வானத்தின் இரவு வெளிச்சமும் வால்பாறையின் குளிரும் விரவி இருந்தது.
ஓய்வறையில் இருந்து இரவு உடைக்கு மாறி வந்த சியாமளா, வெடவெடவென நடுங்க, கபிலனின் மேல் உராய்ந்தபடி அமர்ந்துகொண்டாள். அவள் க கால்களை பரபரவெனத் தேய்த்தவன் “என்னடீ?”
“யாராவது நவம்பர் மாசத்துல குழந்தையோட வால்பாறைக்கு வருவாங்களா?”
“நாம வருவோம்”
“ரொம்ப குளூர்றது”
“அதுக்குதான் வந்திருக்கோம்”
“என்ன திடீர்னு?”
“ஹனி மூன்”
“பதினோரு மாசக் குழந்தையோடயா?”
“ஏன், கூடாதா?”
“...”
“சுத்தி ஒரே வார்த்தையும் இரைச்சலுமாவே இருக்கற ஃபீல்டா. அதான்…”
“சத்தம் உள்ளேயா, வெளிலயா?”
“...”
“கபீஷ்…”
அதற்குள் உறங்கி இருந்தான்.
அடுத்த இரண்டு நாள்கள் குழ்தையைத் தூக்கிக்கொண்டு நடப்பதும், ஆளரவம் இல்லாத, பாதுகாப்பான அழகான இடங்களில் காரை நிறுத்திவிட்டு அமர்ந்துகொள்வதுமாகச் சென்றது.
“உனக்கு எப்டி தொந்தூஸ் என்னைப் புடிச்சுது?”
“ஏன்?”
“தெரிஞ்சுக்கதான்…”
“ரொம்ப சீக்கிரம் கேட்டுட்டேள் கபீஷ்”
“சொல்லுவியா மாட்டியா?”
“உங்களை முதல் முதல்ல பழவங்காடி பிள்ளையார் கோவில்ல உங்கப்பாவோட பார்த்தேன். கொஞ்ச நேரத்துல எதிர்க் கடைல நீங்க ரெண்டு பேரும் சிரிச்சு பேசிண்டே டீ குடிச்சதையும் பார்த்தேன். அந்த வயசுல ஒரு பையன் அப்பாவோட கம்பெனிய அவ்ளோ என்ஜாய் பண்றது எனக்கு ஆச்சர்யமாவும் இன்ட்டரஸ்டிங்காவும் இருந்தது. நானும் நவீனும் கூட எங்கப்போவோட ஜாலியாதான் பேசுவோம். ஆனா நீங்க வேற மாதிரி தெரிஞ்சேள்…”
“...”
“மழை வரவும் என் ஃப்ரெண்ட் என்னைக் கிளப்பிண்டு போய்ட்டா. மழைல நனைஞ்சதும் டீ கிளாஸைத் தூக்கிக் குடிக்கற உங்களை ஃபோட்டோ எடுக்க எத்தனை ஆசையா இருந்தது தெரியுமா. ம்ப்ச்… ஜஸ்ட் மிஸ்ட்… பட், இன்னும் அந்த சீன் என் மனசுல இருக்கு. எனக்கு மட்டும் நன்னா வரையத் தெரிஞ்சா எப்பவோ ஸ்கெட்ச் பண்ணி இருப்பேன். இப்பவும் உங்க ரெண்டு பேரையும் பார்த்தா அதே ஃபீல்தான் எனக்கு”
“...”
மூன்றரை வயதிலிருந்து ஒவ்வொரு முறையும் தந்தையை சந்திக்கக் காத்திருந்த நாட்களின் நினைவில் கபிலனின் கண்களில் கலக்கம் தெரிந்தது.
எல்லோருக்கும் இயல்பாய், எளிதாய் இருப்பவை எட்டாமல் போனவனுக்குதானே அதன் அருமை தெரியும்?
அவனிடம் தாவி, சட்டைக் காலரைப் பிடித்து இழுத்த பாவையின் “...ப்ப்பா… ப்பா” என்ற முதல் அழைப்பில் எழுந்து மகளைத் தூக்கிப் போட்டுப் பிடித்தபடி நடந்தவன்,
“போகலாம் ஷியா, குளிருது”
*******************
கபிலனும் சியாமளாவும் வந்து மூன்று மணி நேரமாகிறது. முதலில் சற்று வேற்று முகம், வேறு இடம் என்பதால் முரண்டிய பாவை, சிறிது நேரத்திலேயே இயல்பாகி விட, செழியன், வள்ளி, விஜய் மூவரும் அவளையே சுற்றி வந்தனர்.
இவர்கள் வருவதை முன்பே தெரிவித்ததால் பாவைக்கு உடைகள், பொம்மைகள் எல்லாம் வாங்கி வைத்திருந்தனர்.
மதிய உணவு தயாராக இருந்தது. வள்ளி வைத்த கேரட், தக்காளி சூப்பைக் குடித்துவிட்டு நாக்கைச் சப்புக்கொட்டினாள் பாவை.
தொண்டையை செருமிக்கொண்ட கபிலன்
“விஜய்…”
“சொல்லுங்க மாமா”
“புதுசா என்ன சொல்ல… குந்தவை கிட்ட நீ பேசறதும் இல்ல. அவ மெஸேஜுக்கும் பதில் போடறது கிடையாது. அவளாலயும் சரி, எங்களாலயும் சரி எந்தப் பக்கமும் நகர முடியல. நான் சொல்லுறது புரியுதா…”
“...”
“உன் கோபம், ரோஷம் எல்லாம் சரிதான். எங்கப்பாவும் வந்து உங்கிட்ட பேசியாச்சு. வீட்டை விட்டு ஓடி வர இது என்ன சினிமாவா, நீ என்ன முன்னப் பின்னத் தெரியாதவனா? அப்படியே அவ வந்து நீங்க கல்யாணம் செஞ்சுக்கிட்டாலும், நம்ம ஊர்லதான் உன் மாமா இருக்காரு. சின்னுக்குப் புகுந்த வீடு அது. நாள பின்ன அங்க வர வேண்டாமா நீங்க?”
“...”
“வீட்ல பார்த்த பையனைக் கட்டிக்கத் தயாரா இருந்தவளைப் பேசிப் பேசியே உன் பக்கம் திருப்பினது நீதான். சின்ன வயசுல இருந்து அவளைப் புடிக்கும்னது இப்டி பேசாம கொள்ளாம தொங்கல்ல விடவா… பாவம்டா நுங்கு. யோசி. அத்த, மாமா… கொஞ்சம் சொல்லுங்க”
இதுவரை பேசியதே அதிகம் என்பது போல் கபிலன் அமைதியாகிவிட, சியாமளா மெச்சுதலாகக் கண் சிமிட்டினாள்.
“ஊருக்கு நாளைக்கு போய்க்கலாம் தம்பி. ஒரு நாள் பாப்பா இங்க இருக்கட்டும்” என்றாள் வள்ளி.
மாலையில் விஜய் “எங்கயாவது போகலாமா மாமா?”
மருதமலைக்குச் சென்றனர்.
சியாமளா “நைட் சமைக்க வேண்டாம் ஆன்ட்டீ” என்றிருக்க, அன்னபூர்ணாவில் டின்னரை முடித்துவிட்டு வீடு திரும்பினர்.
கபிலன் சியாமளாவிடம் “சின்ன பையன்தானே… அதே ஊருக்கு அடிச்சவர் வீட்டுக்கே மாப்பிள்ளையா போகணுமான்னு இருக்கு போல…. இதுல லவ்வையும் விட முடியல… இறங்கி சரின்னு சொல்ல ஈகோ தடுக்குது”
“ஆமாமா…. நான் லவ் சொன்ன மறு நிமிஷம் நீங்க ஒத்துனுட்டேள் பாருங்கோ”
“இப்ப வேணா ஒரு தரம் சொல்லேன்…”
“வால்பாறைல சொன்னதுக்கே என்னாகப் போறதோ?”
அந்த வார இறுதியில் விஜய் திருமணத்திற்கு சம்மதித்துவிட்டான் என்ற செய்தியுடன் செழியனும் வள்ளியும் சிறுமலைக்கு வந்து குந்தவைக்குப் பரிசம் போட்டுச் சென்றனர். தை மாதம் சிறுமலை வீட்டில் வைத்துத் திருமணம் என தேதி குறித்தனர்.
*********************
ஏ…யப்பா! வசதி, வசதியின்மையைத் தாண்டி மகனோ, மகளோ பெற்றோர் இருவரும் இசைந்து, இணைந்து நடத்தும் ஒரு திருமணத்திற்குதான் எத்தனை ஜோடிப்பு, ஏற்பாடு, நுணுக்கம், சடங்கு, சம்பிரதாயம், விசாரிப்பு… இன்னும் எத்தனை எத்தனை உணர்வுபூர்வமான தருணங்கள்…
அம்மாவையும் அப்பாவையும் ஓரிடத்தில் நிறுத்திக் கல்யாணம் முடிப்பதே கேள்விக்குறியாக இருந்த கபிலனுக்கு எல்லாமே வியப்பாக இருந்தது. இத்தனைக்கும் அங்கே நடப்பதை பாதிக்கு மேல் அவனுக்கு செய்திகள் வாசிப்பது சியாமளாதான்.
அவளிடம் சொல்ல “இந்த மாதிரி நமக்கு நடக்கலையேன்னு ஃபீல் பண்றேளா கபீஷ்?”
“யாருடீ இவ… உனக்கும் உங்க அம்மா, அப்பாக்கும் இருந்த சான்ஸை நான் கெடுத்துட்ட ஃபீல்”
சியாமளா “ஏன், குருவாயூர் கல்யாணத்துக்கென்ன கொறச்சல்?” என சண்டைக்கு வந்துவிட, கபிலன் “இவ்வளவு சூடானா ஷியா பட்டர் உருகிடும்டீ… கூல்…கூல்” என்று சரண்டரானான்.
விஜய் - குந்தவை திருமணம் சிறப்பாக நடந்தேறியது.
மறுவீடு முடிந்ததும் வீட்டு மனிதர்களும் செழியன் தம்பதியும் மட்டுமே இருக்க, சாரநாதன் தன் வக்கீலை வைத்துக்கொண்டு சொத்தை பிரித்திருப்பதாக அறிவித்தான்.

Author: VedhaVishal
Article Title: குறுநகை போதுமடி! 19 - FINAL 2
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.