குறுநகை போதுமடி! 20
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சியாமளா உடல் குளிர்ந்து கண்விழிக்க, மையை அப்பியது போல் வீடே இருளோ என்றிருந்தது. தன்னை ஒட்டிக்கொண்டு படுத்திருந்த பாவைக்கு சரியாகப் போர்த்திவிட்டுக் கணவனை அழைத்தாள்.
“கபீஷ்.. கபீஷ்”
பதிலில்லாது போக,
கைகளால் மொபைலைத் தேடி எடுத்துப் பார்க்க, பக்கத்தில் படுத்திருந்தவனைக் காணவில்லை.
‘மை காட்! மணி ஆறா, விளக்கேத்தற நேரத்துல…’
பரபரவென எழுந்து, முகம் கழுவி வெளியில் வர, கபிலன் வீட்டிலேயே இல்லை. ஆனால், கார், பைக் இரண்டுமே வாசலில் நின்றது.
விளக்கேற்றி, பாவைக்குப் பாலைக் காய்ச்சி, பாட்டிலில் எடுத்து வந்து தூங்கும் குழந்தையின் வாயில் வைக்க, உறிஞ்சிய வேகத்தில் அவளது பசி தெரிந்தது.
கபிலனின் அலைபேசிக்கு அழைக்க, அது ட்ரெஸ்ஸிங் டேபிளின் மேல் அதிர்ந்தது. மணி ஏழாகியும் ஆளைக் காணாததில், ஒருவேளை ஹாஸ்பிடல் போய் இருப்பானோ என யோசிக்க,
“மேம்(!), கபிலன் சார் கிட்ட பேசணும்…” என கிரிதரனே கால் செய்தான்.
‘எங்க போனார், எப்ப போனார்… ஒருக்கால் அந்த வீட்டுக்குப் போய் இருப்பாரோ’
மணி ஏழரையைத் தொடவும், சாரநாதனுக்கு அழைக்க, அழைப்பை ஏற்ற செண்பா “இங்க வரலியே. மதியம் உன்னோட போனதுதான். பாவை என்ன செய்யுறா?”
“இப்பதான் ஆன்ட்டீ எழுந்தா”
மேலும் அரை மணி செல்ல, சாரநாதன் நேரிலேயே வந்துவிட்டான்.
நன்கு உறங்கி ஃப்ரெஷ்ஷாக இருந்த பாவை தாத்தாவின் குரல் கேட்டதும் கைகளை விரித்துக்கொண்டு அவனை நோக்கி வேக நடைபோட்டாள்.
“ராசாத்தி தூங்கினீங்களா, பால் குடீச்சீங்களா… … தொப்பைல இருக்கா?” எனவும், பாவை தன் மேல் சட்டையைத் தூக்கித் தன் குட்டித் தொப்பையைத் தொட்டுக் காட்ட, தாத்தாவும் பேத்தியும் தலையை முட்டிக்கொண்டு சிரித்தனர்.
சியாமளாவைப் பார்த்த சாரநாதன் “கவலைப்படாதம்மா, அப்பு நம்ம தோட்டத்துலதான் இருக்கானாம். செக்யூரிட்டி சொன்னான்”
“இந்த நேரத்துல அங்க என்ன அங்கிள்…?”
“...”
“அங்கிள்…”
“நான் போய் பார்த்துட்டு வரேன். வண்டி சாவிய குடும்மா”
“நானும் வரேன் மாமா”
“நீயா… இந்நேரத்துல எதுக்குமா… புள்ளைய வேற தூக்கிட்டு”
“...”
அவன் சொல்லி முடிப்பதற்குள் தாத்தாவோடு வெளியில் செல்லத் தயாராகிவிட்ட பாவை, சியாமளாவிற்கு டாட்டா காட்டினாள்.
“எல்லாம் புரியுது என் ராசாத்திக்கு. சரிம்மா, வா போகலாம்”
*******************
“டாக்டர் முருங்கை தோட்டத்துப் பக்கம்தான் ஸார் போனாரு” என்ற காவலாளிகளின் பார்வையை அலட்சியம் செய்து, காரை நிறுத்திவிட்டுப் சாரநாதன், பாவைக்குக் கை நீட்ட , சியாமளா “பரவால்ல அங்கிள்”
“ஏன், அப்பு என்னை சத்தம் போடவா… இன்னும் அவன் இருக்கற இடம் வரை நடக்கணும் வேற… நீ வாடீ ராசாத்தீ”
ஆம்… சியாமளாவிற்கு இப்போது எண்பது நாளாகிறது. குந்தவையின் திருமணப் பரபரப்பில் கவனிக்காது போக, பந்தக்கால் நட்டு, சாமி கும்பிடும்போது தலைசுற்றித் தடுமாறி விழுந்ததில், அவள் கர்ப்பமாக இருப்பது நேரலையில் ஒளிபரப்பானது.
பாவையே இன்னும் தாய்ப்பாலை விடாதிருக்க, உண்ணவும் முடியாது, திருமணச் சடங்குகளின் நடுவே ஓய்வெடுக்கவும் முடியாது, களைப்பாகவே சுற்றினாள். இதில் நிச்சயம் ஆனதிலிருந்தே குந்தவை வீட்டில் இருந்துகொள்ள, சியாமளா மீண்டும் காஸ்மெடிக் ஃபேக்டரிக்கு வேறு செல்லத் தொடங்கி இருந்தாள்.
கபிலன் என்றாலாவது கையைப் பிடிக்கலாம், கடிந்து கொள்ளலாம். எதுவும் சொல்ல முடியாது சாரநாதனின் வேகத்திற்கு ஈடுகொடுத்து விறுவிறுவென நடந்ததில் சியாமளா குளிரிலும் வியர்த்தாள்.
கொட்டாரத்தை நெருங்க நெருங்க, ‘ர்ர்ர்ரூம்ப்ப்ட்…. த்ம்ச்சக்ட்’ என சத்தம் கேட்டது. ஆயிரத்து ஐநூறு சதுர அடியில் பரந்திருந்த கொட்டாரத்தில் வெகு மும்முரமாகக் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த கபிலன் கண்களுக்குப் பட, பார்த்த இருவரும் பதறிவிட்டனர்.
சியாமளா அவனை நோக்கி ஓட யத்தனிக்க, சாரநாதன் “ஏன்த்தா இப்டி… அங்கதான போறோம், மெதுவா நடம்மா” என்றான்.
தந்தையைக் கண்ட பாவை திமிறிக் குதித்து இறங்கி, “அப்பா… ப்ப்பா… என்று கத்திக்கொண்டே ஓட, ஒரு நொடி திகைத்த கபிலன், உதைத்த பந்து சென்ற திசையைக் கணித்து அதைக் கட்டுப்படுத்தியபடி அருகில் வந்தான்.
சிகை, முகம், தோள்கள் எல்லாம் வியர்வையில் பளபளக்க, அணிந்திருந்த கையில்லாத ஜெர்ஸி முழுவதும் நனைந்து உடலோடு ஒட்டி இருந்தது.
“பொம்ம” என்றவன், தூக்கச் சொல்லிக் கையை நீட்டியவளைத் தூக்காது, மகளிடம் பந்தை கொடுத்தவனை சியாமளா முறைத்து நிற்க, சாரநாதன்
“என்னப்பு இது, மாசமா இருக்குற பொண்ணுகிட்ட சொல்லிட்டு வர வேணாமா… அதோட இல்லாம, அடிபட்ட காலோட எத்தனை நேரம் விளையாடுவ?”
“அது… அவங்க ரெண்டு பேரும் நல்லா தூங்கிட்டு இருந்தாங்கப்பா, டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு
எழுப்பாம வந்துட்டேன். கால்ல ஒன்னும் ப்ராப்ளம் இல்லப்பா. போன மாசம் கூட மதுரை அகாடமிக்கு டெமோ மேட்ச் விளையாடப் போய்ட்டு வந்தேனே”
“அதுக்குன்னு மூணு மணி நேரமாடா?”
“அதெல்லாம் இல்லப்பா, ஒரு ரெண்டு மணி நேரம்…” சியாமளாவின் பார்வையில் பேச்சு நின்றுவிட, சிரித்த சாரநாதன்,
“நீ அவஞ்சட்டையப் புடிம்மா, நான் போய் என் ராசாத்தியோட பந்து விளையாடறேன்” என பாவையை அழைத்துச் சென்றான்.
கபிலன் “தொந்தூஸ், உக்காரு” என்றபடி குறட்டில் அமர்ந்தான். சியாமளா அமராமல் அவனையே ஏற, இறங்கப் பார்த்தாள்.
கண் சிமிட்டிய கபிலன் “ஆட்டோகிராஃப் வேணுமா?”
“உங்க கையெழுத்தை உங்களை விட நான் நன்னா போடுவேன்”
“ஃப்ராடு, ஃபோர்ஜரி, ஃபோர் ட்வென்ட்டி”
“தேங்க் யூ”
செண்பாவிடமிருந்து இரண்டு முறை அழைப்பு வந்துவிட, வீடு திரும்பினர். குளித்து விட்டு வந்து “நீ ஃப்ரஷ் ஆயிட்டு வா. நான் சமைக்கறேன்” என்ற கபிலன், அவள் வருவதற்குள் தக்காளி சட்னிக்கு வதக்கி, இட்லி ஊற்றி, நெய், சர்க்கரையுடன் மகளுக்கு ஊட்டிக் கொண்டிருந்தான்.
“கபீஷ், எனக்கு காஃபி வேணும்”
“முதல்ல சாப்பாடு, அப்புறம் காஃபி”
மாலையில் நன்கு உறங்கி இருந்ததில் பேட்டரி முழுதாக சார்ஜ் ஆகி ஏக சுறுசுறுப்பாக இருந்த பாவை உறங்கவே இரவு பன்னிரெண்டானது. அவள் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்று விட்டதை ஊர்ஜிதம் செய்துகொண்டு, தன் அருகில் வந்த கபிலனின் காலை, படிக்கும் விளக்கின் ஒளியில் ஆராய்ந்தாள் சியாமளா.
“ஒன்னும் இல்லடா தொந்தூஸ், நல்லாத்தான் இருக்கேன்”
“...”
“நம்புடீ”
“அப்புறம் ஏன் இந்த முரட்டுத்தனம்… நேத்திக்கு திடீர்னு உங்கப்பா செஞ்சதுல உங்களுக்கு ஏதாவது...”
“...”
“கபீஷ்…”
“ஷியா… நான் விளையாடினது அளவு கடந்த சந்தோஷத்துலன்னா நீ நம்புவியா?”
“!!?”
“என்ன, சொத்து வந்ததுல அவ்வளவு குஷியான்னு பாக்குறியா?”
“ம்ப்ச்… நோ வே”
“தேங்க்ஸ்…” என்ற கபிலன், சியாமளாவை அவன் விரும்பிய கோணத்தில் சாய்த்து அமரவைத்து, அவள் நெஞ்சில் முகம் புதைத்துப் படுத்துக்கொள்ள, அநிச்சையாக அரவணைத்த மனைவி,
“கபீஷ்… என்னடா?”
“...”
“...”
நீண்ட அமைதிக்குப் பின், எழுந்து அமர்ந்தவனின் கண்கள் சிவந்து, ஆனால் தெளிவாக இருந்தது.
சியாமளாவின் கையைப் பற்றிக்கொண்டவன் “தூக்கம் வருதாடா, நடந்தது கால் வலிக்குதா?”
“சொல்லுங்கோ கபீஷ், I’m all ears”
ஆழ்ந்து சுவாஸித்தவன் “உனக்குத் தெரியாம புதுசா என்ன… இந்த வீடு, ஹாஸ்பிடல், காஸ்மெடிக் ஃபேக்டரி, தோட்டம், ஹெர்பல் ஃபேக்டரி… இன்னும் சில சொத்துகள்… எல்லாம் எனக்குதான் வரும்னு எனக்குத் தெரியும். வரலை, தரலைன்னாலும் நான் கவலைப்பட்டிருக்க மாட்டேன்…”
“...”
“ஆனா, முதல்ல அப்பா இப்ப இருக்கற வீடு, திண்டுக்கல் ரோட்ல இருக்கற மலைவாழைத்தோப்பு, அதை ஒட்டின வீடு, அம்பது லட்ச ரூபா பணம், கோயமுத்தூர்ல இருக்க ஒரு வீடு, அப்பா காலம் வரைக்கும் தோட்டம், ஹெர்பல் ஃபேக்டரி வருமானத்துல வருஷத்துக்கு இத்தனைன்னு பங்குன்னு குந்தவைக்குக் குடுத்ததா பத்திரத்தை வாசிச்சபோது அமைதியா இருந்த காவேரியத்தை, எனக்கானதை படிச்சதும் ஆவேசமா எழுந்ததுமே, அப்பா ஒரு பதில் சொன்னாங்கள்ல… அதுதான்டீ எனக்குக் கிடைச்ச, இத்தனை வருஷமா நான் தேடின சொத்து…”
“...”
இருவருக்குமே முன்தினம் நடந்தவற்றின் நினைவுகள்.
சியாமளாவிற்கு மசக்கை என்பதாலும் மறுவீட்டு விருந்து முற்றிலுமாக அசைவம் என்பதாலும் பாவையுடன் வீட்டிலேயே இருந்துவிட்டாள். கபிலனே விருந்து முடிந்து வீட்டுக்கு வந்துவிட, சாரநாதன் மாலை ஐந்து மணிக்கு அழைத்து “உடனே வீட்டுக்கு வாங்க” என்றான்.
அங்கே வீட்டினர், புதுமணத் தம்பதி மற்றும் செழியன் தம்பதி மட்டுமே இருந்தனர். என்ன நினைத்தாளோ, சின்னு தன் புகுந்த வீட்டுக்குச் சென்றுவிட்டாள். இவர்கள் சென்ற சில நிமிடங்களுக்கெல்லாம் வக்கீல் பிரவேசித்தார்.
சாரநாதன் “நான் சொத்தை பிரிச்சு அவங்கவங்க பேருக்கு எழுதிட்டேன். வக்கீல் விவரம் சொல்லுவார்” என்றான். அவரும் அவரவருக்கானதை படித்தார்.
கூடவே, “தோட்டம், ஹெர்பல் ஃபேக்டரியோட உரிமை, வருமானம் எல்லாம் சாரநாதன் ஜீவிதராக இருக்கும் வரை என்ன செய்யவும் அவருக்குதான் முழு உரிமை. வங்கியில் உள்ள பணம், சேமிப்பு, வரவு செலவு, பங்குகளும் அப்படியே. சாரநாதனுக்கும் அவர் மனைவி செண்பகாவிற்கும் இந்த வீட்டில் கடைசி மூச்சு வரை வசிக்கும் உரிமை உண்டு. குடும்ப நகைகள் பெண்களின் விருப்பம்”
கபிலனுக்குப் பின் குந்தவையுடையதைப் படிக்கவும், செண்பா எதுவும் பேசாதிருக்க, பேத்தியின் திருமணத்தில் தன் வாதங்கள், வார்த்தைகள் எதுவும் எடுபடாமல் போன கடுப்பில் இருந்த காவேரி, இப்போது கிடைத்த வாய்ப்பை விடாது ஆட்சேபித்தாள்.
“அதென்ன தாத்தா சொத்து முழுசையும் அந்த ராங்கிக்காரி பெத்தவனுக்கே குடுக்குறது?”
தங்கள் மருமகள் மூலம் மகனுக்கு வந்த சொத்தின் அளவு தந்த பிரமிப்பில் இருந்த செழியனும் வள்ளியும் அமைதியாக இருக்க, விஜய்
“இந்த சொத்தை எதிர்பார்த்து நான் குந்தவையை கல்யாணம் செஞ்சுக்கலை” என்றான்.
வக்கீல் “சொத்து அவர் மகளுக்கானது. அவங்களோட உரிமை”
“அந்த உரிமையைதான் நானும் கேட்குறேன்” - காவேரி.
சாரநாதன் மனைவியின் முகத்தைப் பார்க்க, நிச்சலனமாய் இருந்தது. குந்தவையின் திருமண விஷயத்தில் கபிலன் காட்டிய தீவிரமும், ஈடுபாடும் இரண்டு பக்கமும் சமாதானமாகப் பேசிச் சரிகட்டியதும் செண்பாவை நெகிழச் செய்திருந்தது. அதைவிட, இந்தச் சொத்து விவகாரத்தை அவள் அதிகம் தலையில் ஏற்றிக் கொள்ளவில்லை என்பதே நிஜம். இன்று நடக்கப்போவதை இரண்டுநாள் முன்னரே சாரநாதன் மனைவியிடம் கூறிவிட்டான்.
“என் மக குந்தவைக்கு என்ன தரணும், நியாயம் செஞ்சிருக்கேனா இல்லையான்னு எனக்கும் என் மனைவி செண்பாவுக்கும், மகள் குந்தவைக்கும் தெரிஞ்சா போறுமானது”
“...”
“கபிலன் யாரோ ராங்கிக்காரி பெத்தவன் இல்லை. என்னை முறையா கட்டிக்கிட்டு வந்தவளுக்கும் எனக்கும் பொறந்தவன். சட்டப்படி, நியாயப்படி, தர்மப்படி என்னோட, இந்த வீட்டோட முதல் ஆண் வாரிசு. நீதானேக்கா சொன்ன, குந்தவை ஆம்பளைப் புள்ளையா இருந்தா கபிலனை உள்ள விட்டிருக்க மாட்டேன்னு… கபிலன்தான் எனக்கு ஆம்பளைப் புள்ளை. அது சரின்னா…இதுவும் சரிதான்”
“!!!”
“என்னென்னவோ நடந்து போச்சு… அதெல்லாம் இப்ப தேவையில்ல. எனக்கு என் ரெண்டு பசங்களும் ஒன்னுதான். வயசு, சந்தர்ப்ப, சூழலால நானும் தப்பு செஞ்சிருக்கேன். ஆனா, அதுல அதிகமா பாதிக்கப்பட்டது என் அப்புதான். அதுக்காக அவனுக்குத் தனியா பணத்தால எதையும் நான் இட்டு நிரப்பலை… அதை எம்புள்ளை விரும்பவும் மாட்டான். படிக்கும்போதே ஃபுட்பால் விளையாடி லட்சலட்சமா சம்பாதிச்சவன் அவன். எத்தனையோ பேச்சு கேட்டும் நம்மை விட்டுப் போகாம அவன் இங்க இருக்கக் காரணம்… நானும், எனக்கு உடம்பு சரியில்லாதபோது, நான் இல்லைன்னா உங்களை எல்லாம் அவன்தான் பார்க்கணும்னு நான் வாங்கிக்கிட்ட சத்தியமும். அப்ப அவனுக்குப் பதினஞ்சு வயசு, குந்தவைக்கு நாலு வயசு”
“...”
சாரநாதன் பேசப்பேச, இறுகிய கபிலனை அருகே நின்ற செழியன் தோளில் கை போட்டு அணைத்துக்கொள்ள, சியாமளா அழாதிருக்கப் பிரயத்தனப் பட்டாள்.
“அது மட்டும் இல்லாம… நீ கேட்டபடி, நம்ம அப்பா வெச்சுட்டுப் போன இந்த வீடு உன் மகளுக்கும் பின்னால உன் பேத்திக்கும்தான். அதேபோல, குந்தவைக்குக் கொடுத்த அந்த வாழைத்தோப்பே அவர் விட்டுப்போன தோட்டத்தை விட, ஆறு மடங்கு பெருசு. அது உள்பட, மீதி எல்லாம் என் உழைப்புல, நான் உருவாக்கினது. அதை யாருக்கு, எப்படி பிரிச்சுத் தரணுங்கறது என் விருப்பம். இதுல கேள்வி கேட்கவோ, கோபப்படவோ குந்தவைக்கு மட்டும்தான் உரிமை இருக்கு”
“...”
“அம்மு… அம்மா (நீலவேணி) உங்களுக்கு ஏதாவது கேட்கணுமா?”
செண்பா இல்லை என்பதாகத் தலையசைக்க, நீலவேணி “நீ செஞ்சா சரியாத்தான் இருக்கும் சாரநாதா” என்றார்.
“அம்மு, எல்லாருக்கும் குடிக்க, சாப்பிட ஏதாச்சும் குடு”
தேநீர், இனிப்பு மற்றும் காரப் பணியாரம் வந்தது.
குந்தவையும் விஜய்யும் இன்று அதிகாலை விமானத்தில் கோயம்புத்தூரில் இருந்து தேநிலவுக்கென மலேஷியா செல்வதால், இரவு உணவை விரைந்து முடித்துவிட்டுப் புறப்பட்டவர்களை கபிலனும் செழியனும் சென்று கோவை விமான நிலையத்தில் இறக்கிவிட்டுக் காலையில்தான் திரும்பி வந்தனர். இரவு சியாமளாவிற்குத் துணையாக இருந்தாள் வள்ளி.
குந்தவைக்கு தேநிலவுக்கான செலவும், பட்டுப்புடவை, மாப்பிள்ளைக்கு உடை, இருவருக்கும் மோதிரம், ஒரு ஹோண்டா Amaze கார் எனக் கல்யாணப் பரிசளித்தான் கபிலன்.
******************
“ஷியா… “
“ம்…”
“சின்ன வயசுல எனக்கு மட்டும் ஏன் இப்டின்னு நிறைய தோணும். இந்த நிலமை பழையபடி மாறிடாதான்னு ஏக்கமா இருக்கும். அம்மா, அப்பாவோட பிரிவை, அவங்களோட கல்யாணத்தை, மதுரை வீட்டை, புது பழக்கங்களை, சட்டங்களை மெதுவா ஏத்துக்கிட்டேன். அக்கான்னு கூப்பிட்டவங்களை அப்பாவோட மனைவியா…. கொஞ்சமும் எதிர்பார்க்கலை. ஆனா… அவங்களை நான் பார்த்ததே ரெண்டு தரம்தான்”
“...”
“நிலா, ஆதி, குந்தவை எல்லாரும்தான் எனக்கான ஆறுதல். நிலா அப்ப இப்படி இல்ல. குந்தவை பத்தி சொன்னாலே பொறாமைப் படுவா”
“...”
“என்னைத் தப்பா நினைக்காத ஷியா… லைஃப், லவ்வு, ஆண், பெண் பத்தின கேள்வி, தேடல், குறுகுறுப்பு வர வயசுல அப்பாவும் அம்மாவும்… சட்டப்படிதான்னாலும் வேற வேற துணையோட இருக்கறது… அதை சொல்லிப் புரிய வைக்க முடியாதுடீ…ஸ்கூல்ல, ஃபுட்பால் அகாடமில எத்தனையோ கேலி செய்வாங்க. அது தாங்க முடியாம விகரஸா (vigorous) விளையாடி ஆக்ஸிடென்ட் பண்ணிக்கிட்டேன். ஆபரேஷன் ஆச்சு. கவுன்ஸிலிங் கூட போனேன். அப்ப எங்க, அம்மாவும் அப்பாவும் எனக்காக சேர்ந்து நின்னது அப்டியே தொடராதான்னு இருந்தது”
சியாமளா, அழுகையை அடக்க முடியாது கபிலனை இழுத்து மூச்சு முட்டுமளவு தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். கபிலனே அவள் முதுகைத் தடவி சமாதானம் செய்தான்.
“அழாதடீ… இன்னைக்கு என்னமோ உங்கிட்ட எல்லாத்தையும் சொல்லணும்னு தோணுது… “
கண்ணைத் துடைத்துக்கொண்டு மூக்கை உறிஞ்சியவள் “அழ மாட்டேன், சொல்லுங்கோ”
“அம்மாவோட பெட்ரூமுக்கு சுதந்திரமா போக முடியாது. ஆதியோட அப்பா வீட்ல இருந்து யாராவது வந்துட்டா அந்த வீட்ல இருக்கவே எனக்குப் பிடிக்காது”
“...”
“கோவில்ல, ஹோட்டல்ல, ஃபோட்டோல… ரெண்டு பக்கமும் எங்கேயுமே ஒட்டாம நான் மட்டும் எப்பவும் எக்ஸ்ட்ராவா நிக்கற உணர்வுதான் எனக்கு”
“...”
“டிவோர்ஸுக்குக் காரணம் என்ன, யாரு, தப்பு யார் மேல, விட்டுக் குடுத்திருக்கலாம், பொறுமையா, பொறுப்பா இருந்திருக்கலாம்… எங்கம்மா, அப்பா மேல எத்தனையோ குத்தம், குறை சொல்லி இருக்காங்க. இன்னமும் சொல்றாங்க”
“...”
“ஏன், வாய்ப்பே கிடையாதுன்று தெரியும்தான். ஆனாலும், இந்த முப்பத்தி மூணு வயசுல, இப்பவும் எனக்கு ரெண்டு பேரும் சேர்ந்திருக்கணுங்கற ஆசை இல்லாம இல்லை”
“...”
“எங்கப்பாவோட கல்யாணத்தை ஈஸியா எடுத்துக்கிட்ட ஊர், இன்னமும் எங்கம்மா தனியா இருந்திருக்கணும்னுதான் சொல்லுது. ஏன், ஒரு வயசு வரை நானே பலமுறை அப்படி நினைச்சிருக்கேன். வயசாக, ஆகதான் அப்படின்னா பெண்கள் மறு கல்யாணமே செஞ்சுக்கக் கூடாதுங்கற இடத்துக்கே திரும்பிப் போயிடுவோம்னு புரிஞ்சது”
“...”
“அம்மாவும் அப்பாவும் அவங்களோட மறுகல்யாணத்துனால எனக்கு செய்ய வேண்டிய எதையும் செய்யாம இல்லை. முதல்ல புரிஞ்சுக்கத் தடுமாறினாலும் ஜெயச்சந்திரன் அப்பாவுமே எனக்கு சப்போர்ட்டா, என் மேல அக்கறையாதான் இருந்தார், இருக்கார”
“அம்மாவும் அப்பாவும் எனக்காக அவங்களோட புது வாழ்க்கையோட அழுத்தங்களை, தேவைகளை மீறியும் மீற முடியாமலும் பல நேரம் தடுமாறினது எனக்குத் தெரியும். என்னால ஆனது, அவங்களைத் தொந்திரவு செய்யாம இருக்கறதுதான்”
“...”
“அதையும் மீறி, அவங்களையும், அவங்களைச் சுத்தி இருக்கறவங்களையும் எமோஷனலா நான் பாதிச்சேன்.. பாதிக்கறேன்…”
“ஆனா ஒன்னுடா தொந்தூஸ்… தனிமனித சுதந்திரம், பிடிக்கலைன்னா ஃப்ரெண்ட்ஸாவே பிரிஞ்சுடணும், விவாகரத்து தப்பு இல்லை, ஆண், பெண் ரெண்டு பேருக்குமே இன்னொரு துணை அவசியம், பெண்களோட மறுமணம் காலத்தின் கட்டாயம்… இந்த முற்போக்கு கருத்துகள் எல்லாம் நடைமுறை ஆகும்போது அடி வாங்கறது யாரு தெரியுமா… என்னை மாதிரி முதல் திருமணத்துல பிறந்த குழந்தைகள்தான்”
“...”
“இங்க செண்பா அக்கா(!)வும் சரி, ஜெயச்சந்திரன் அப்பாவும் சரி, அவங்களுக்கான எதிர்பார்ப்பை மீறி நல்லவங்களா இருந்தாங்க. இந்த மாதிரி திருமணங்கள்ல வன்கொடுமைக்கு, செக்ஸுவல் ஹராஸ்மென்ட்டுக்கு பலியாகறவங்க எத்தனை பேரு தெரியுமா… அதிலும் பொண்ணா இருந்தா கேட்கவே வேண்டாம்…”
“...”
“எத்தனை வருஷமானாலும், அம்மா, அப்பாவோட சேர்ந்து இருக்கணுங்கற என் ஏக்கம், நான் இழந்த நாள்கள், சின்னவயசு எதிர்பார்ப்புகள்… இது எதுவும் நான் இருக்கற வரை என்னை விட்டுப் போகாது”
“கபீஷ்…”
“கேளு… நான் இருக்கற குழப்பமான சூழல்ல உன்னையும் இழுத்து விட எனக்கு விருப்பமில்லை. அதோட, எங்க நானும் ஏதாவது செஞ்சு, நம்ம உறவுல… விடு, இப்ப அதைச் சொல்லக்கூட எனக்குப் பிடிக்கலை.
“உன்னை அத்தனை புடிச்சிருந்தும் தள்ளித் தள்ளிப் போனேன். நீ ஒரு நாள் பேசலைன்னதும் அவ்வளவு ஆத்திரம் எனக்கு…”
சியாமளா சுவாரஸ்யமாக “தெரியும்”
“நீ பொம்மையை ப்ரெக்னென்ட் ஆனதும் திரும்பவும் எனக்கு பயம். ஸோ…”
“ஸோ?”
“டக் டக்னு ரெண்டு, மூணு குழந்தை பெத்துக்கிட்டு, சண்டை போடவே நேரமில்லாம, நம்மை பிஸியா வெச்சுக்கறதுன்னு முடிவு பண்ணி இருக்கேன்”
“போய்யா… பெரிய்ய்ய பாலிஸி டிஸிஷன்”
“ஆமாவா, ஆமாவா?” என்றவன் செய்த இம்சையில் சியாமளா குலுங்கிச் சிரித்தாள்.
“ஷியா பட்டர்… அந்தப் பாட்டு பாடேன்”
“இப்பதானே பாடி குட்டியைத் தூங்க வெச்சேன்?”
“எனக்காகடீ”
“மாடுமனை போனாலென்ன மக்கள் சுற்றம் போனாலென்ன
கோடிச்செம்பொன் போனாலென்ன கிளியே
குறுநகை போதுமடி கபிலன் குறுநகை போதுமடி!
சியாமளா - கபிலன் தம்பதிக்கு அந்த வள்ளிக் கணவன் சிறப்பானதொரு பரிசை வைத்திருப்பது தெரியாமலே இருவரும் உறக்கத்தில் ஆழ்ந்தனர்.
*********************
நான்கு வருடங்களுக்குப் பிறகு…
சாரநாதனுக்கு அன்று மணிவிழா. பரபரப்பாக இருந்தது வீடு. குந்தவையும் விஜய்யும் தங்கள் மகனோடு கனடாவிலிருந்து வந்திருந்தனர்.
சியாமளாவும் கபிலனும் வெகுவாகக் கேட்டுக்கொண்டதிலும், சாரநாதன் “செழியா, கால்ல வேணா விழட்டுமாடா?” என்றதிலும் செழியனும் வள்ளியும் அதே வீட்டைப் புதிப்பித்து வசிக்கின்றனர்.
வயோதிகம் காரணமாக நீலவேணி தவறி இருக்க, காவேரி வயதானாலும் குறையாத வாயுடன், அவ்வப்போது தன் இயல்பைக் காட்டியபடி இருக்கிறாள்.
அரக்கு நிறப் பட்டுப்புடவையில் செண்பா வெளியில் வந்து காத்திருக்க, பட்டுவேட்டி, சட்டையில் இருந்த சாரநாதனுடன் வந்த பாவை “வெக்கப்படாம வா தாத்தா” என்றாள்.
கையில் அறுபதாம் கல்யாணத்திற்கான திருமாங்கல்யத்துடன் வந்தவர்களை வரவேற்றுப் பேசியபடி அங்குமிங்கும் ஓடிய சியாமளா படு பிஸியாக இருக்க, கபிலன், சாரநாதனை ஜெராக்ஸ் எடுத்தது போன்ற இரண்டு ஆண் குழந்தைகளை மேய்த்துக் கொண்டிருந்தான்.
சியாமளா ஃபேக்டரிக்குச் செல்கையில், பள்ளிக்குச் சென்ற நேரம் போக, வள்ளியும் செண்பாவும்தான் மூவரையும் பார்த்துக் கொள்கின்றனர்.
விழா சிறப்பாக நடந்தது. மறுநாள் போக மறுநாள் ஆதியின் திருமணம் வேறு. அதற்கும் இருவரும்தான் அலைந்தனர்.
மண்டபத்திற்குக் கிளம்பும் முன், சியாமளா உறங்கிக் கொண்டிருந்தாள். மாளவிகா அங்கே இருப்பது தெரியாமல் “ஷியா பட்டர்…” என்றபடி கபிலன் உள்ளே வர…
“பாவம்டா அவ. இனிமே
பட்டர், பனீர்ன்ன பாத்துக்கோ…”
“நான் பாவம் இல்லையாம்மா?”
“நீதானே…நீ ஐய்யோ பாவம்!”
“ம்மா..!”
“நீ வரம் டா!”

Author: VedhaVishal
Article Title: குறுநகை போதுமடி! 20 - FINAL 3 AND EPILOGUE
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.