குறுநகை போதுமடி! 7
“குட் மார்னிங் மேம்”
“குட்மார்னிங் டாக்டர், சியாமளான்னே சொல்லலாமே”
“ஓஹ்.. ஓகே” என சினேகமாகப் புன்னகைத்த கிரிதரன்,
“இன் பேஷன்ஸ்ஸோட பிரச்சனை, ட்ரீட்மென்ட், அவங்க என்ன சாப்பிடலாங்கற விவரங்களை எல்லாம் அப்டேட் செய்யச் சொன்னீங்கன்னு கபிலன் ஸார் சொன்னார். இது சரியா இருக்கான்னு பாருங்க”
அவன் கையிலிருந்த MACBook Airல் இருந்த சார்ட்டை வாங்கிப் பார்த்துத் திருப்தியுடன் புன்னகைத்த சியாமளா “வாவ், ஸோ ஃபாஸ்ட். க்ரேட் ஜாப் டாக்டர். சரி, அவங்களை எங்க காணும்?”
சியாமளா அனுபமாவைப் பற்றிக் கேட்பதைப் புரிந்து கொண்ட கிரிதரன், சிறிது தயக்கத்துடன்
“ஐ திங்க், அனுபமா வர மாட்டாங்கன்னு நினைக்கறேன்”
“வாட், ஒய், ஏன் வர மாட்டாங்க?”
சியாமளாவிற்கு உணவு வழங்குவது குறித்துத் தான் சொன்னது சரிதான் என்றாலுமே, இங்கே வேலை செய்யும் தன் சீனியர், சக பெண் மருத்துவர் அனுபமா, தன்னால் முகம் வாடியதில், இன்று முகம் திருப்பினாலும் அவளுடன் பேசி சமாதானமாகப் போக வேண்டும், என்ற எண்ணத்தில் வந்தவளுக்கு, இப்போது கிரிதரன் கிச்சனில் நிற்பதற்கான காரணம் புரிந்தது.
கிரிதரனே “அது… அவங்க ஏதோ கோபத்துல…”
“என்னாலயா டாக்டர்?”
சியாமளாவை சங்கடப்படுத்த விரும்பாத கிரிதரனின் மெலிதான தோள் குலுக்கலில் ‘இதற்கு மேல் என்னிடம் கேட்காதே’ என்ற செய்தி இருந்தது.
கிரிதரனின் அலைபேசி எண்ணை கேட்டு சேமித்த கையோடு, ஒரு முறை அந்த எண்ணுக்கு அழைப்பு விடுத்துத் துண்டித்து “டாக்டர், உங்களுக்காக அவுட் பேஷன்ட்ஸ் வெய்ட் பண்றாங்க, நீங்க போங்க. இங்க நான் பார்த்துக்கறேன். மிஸ்ட் கால் குடுத்திருக்கேன். இந்த லிஸ்ட்டை எனக்கு இமெயில் ஆர் வாட்ஸ்ஆப்ல அனுப்பிவிடுங்க” என்ற சியாமளாவின் துரிதமும், அடுத்து என்ன என்ற முனைப்பும் கிரிதரனை வெகுவாகக் கவர்ந்தது.
‘ப்யூட்டி வித் ப்ரெய்ன்’ என தனக்குள் அவன் சிலாகித்துக் கொண்டு இருக்கும்போதே, காலை உணவு நேரம் 8.30 - 9.30 என்பதால், நேற்றும் இன்றும் புதிதாகப் பார்த்த சியாமளாவை யாரென அறிந்துகொள்வதில் பயனாளிகள் ஆர்வம் காட்ட, அவளே அவர்களிடம் அறிமுகம் செய்துகொண்டு பேசச் சென்றிருந்தாள்.
‘என்ன ஸ்பீடுடா சாமீ!’
பிறகு அன்றைய மதிய உணவுக்குத் தேவைப்படும் பொருள்கள், மளிகை சாமான்களின் கையிருப்பு, அவற்றை கொட்டி வைக்கும் பெரிய, சிறிய டப்பாக்களில் மாற்றப்பட வேண்டியவை, புதிதாக வாங்க வேண்டியவை, அதிலும் உடனடித் தேவை என ஒரு பட்டியலைத் தயார் செய்துகொண்டு, சின்னுவைப் பார்க்கச் சென்றாள்.
அங்கே வள்ளியும் சின்னுவின் கணவனும் இருந்தனர்.
“ வீட்டுக்கு எப்ப போகலாம்னு சொன்னாங்களா, ஆன்ட்டீ?”
“கபிலன் தம்பியதான் மா கேக்கணும்”
பிறந்து இருபத்துநான்கு மணிநேரம் கூட ஆகாத குழந்தையின் தூய்மையும் மென்மையும் ஈர்க்க, ஆசையுடன் ஒரு விரலால் வருடினாள்.
“புள்ளையைக் கைல தரவாம்மா, தூக்கத் தெரியுமா?” - வள்ளி.
“ம், தெரியும் ஆன்ட்டீ. அண்ணாக்கு ரெண்டு குட்டிப் பசங்க இருக்காங்க. ஆனா, இப்ப வேணாம் ஆன்ட்டீ, வீட்டுக்கு வரட்டும்”
அங்கிருந்து
கபிலனின் அறைக்குச் செல்லும் வழியில் செண்பாவும் சாரநாதனும் எதையோ விவாதித்தபடி நின்றனர்.
சியாமளா “சின்னுவைப் பார்க்க வந்தீங்களா?”
செண்பா “ஏன்த்தா சியாமளா, இந்த சின்னுவுக்கு வீட்லருந்து சமைச்சு கொண்டாந்த பத்தியம் போடலாம்னா கூடவே கூடாதாம். இவுரும் இவூரு மவனுக்குதேன் சப்போர்ட். நீதானே இங்க சத்தான சாப்பாடு குடுக்கன்னே வந்துருக்க, நீயாவது சொல்லேன்த்தா”
சியாமளா “ஸார் சொன்னா சரியாதானே ஆன்ட்டீ இருக்கும். இங்கயும் சாப்பாடு நல்லாவே இருக்கும். இன்னைக்கு லஞ்ச்ல கூட பீர்க்கங்காய் கூட்டும், மிளகு போட்ட புதினா தொகையலும் பண்ணி இருக்கா…ங்க. நீங்க கூட கொஞ்சம் டேஸ்ட் பாக்கலாமே?”
சாரநாதன் சிரிப்புடன் செண்பாவைப் பார்த்திருக்க, “ஆத்தீ, ஒன்னியப் போய் கேட்டேன் பாரு, என்னெச் சொல்லணும். நேத்து வந்த பொண்ணையும் சேர்த்து கெடுத்து வெச்சிருக்கான் அவன். ஏன்டா கல்யாணம் ஆகலைன்னா, நீயே கட்டிக்கன்ன மாதிரில்லத்தா பேசுற. எனக்கெதுக்கு அந்தச் சாப்பாடு?”
சியாமளாவிற்கு கபிலனிடமிருந்து அழைப்பு வர “இன்னும் ரெண்டு, மூணு நாள்தானே ஆன்ட்டீ, வீட்டுக்குப் போனதும் உங்க வழக்கம் போல செய்ங்கோளேன். நான் வரேன் அங்கிள், ஸீ யூ ஆன்ட்டீ” என்றவள்,
செண்பா “என் மவளுக்கு இங்க பிரசவம் பாக்க மாட்டேன் மாமா” என்றதைக் கேட்டதில் ஒரு சிரிப்போடு விலகி நடந்தாள்.
******************
கபிலன் கை காட்டிய நாற்காலியில் அமர்ந்த சியாமளா, தன் லேப் டாப்பை பிரித்து, கிரிதரன் கொடுத்த சார்ட்டில் இருந்த தரவுகளின் அடிப்படையில் அடுத்த ஒரு வாரத்திற்கான உணவு வகைகள் என்னென்ன , யார் யாருக்கு எவற்றை, எந்தெந்த அளவில் பரிமாற வேண்டும் என அவள் அப்டேட் செய்திருந்த மேலதிக விபரங்களை கபிலனிடம் காட்டி விவரித்தாள்.
“குட், கோ அஹெட் வித் திஸ்” - கபிலன்
“வாழை இலை…?”
“அதை அப்பா பாத்துப்பார். முதல்ல பஃபே சிஸ்டத்தை எப்பத்துல இருந்து எப்படி நிறுத்துறதுன்னு பார்க்கணும்”
கதவைத் தட்டி அனுமதி பெற்று , கிரிதரனும் சுபாஷும் உள்ளே வந்தனர்.
“பீ ஸீட்டட். நீங்களும் பாருங்க” என சியாமளாவின் கணினித் திரையைச் சுட்டியவன், அவளிடம் அதை அவர்கள் பக்கம் திருப்புமாறு சைகை செய்தான்.
சியாமளாவிடம் “கச்சிதமா இருக்கு மேம்” என்ற சுபாஷ், கபிலனிடம் “இதை இப்ப இருக்கற பேஷன்ட்ஸ் எல்லாரும் டிஸ்சார்ஜ் ஆகி போனதும்தான்
நடைமுறைக்குக் கொண்டு வர முடியும், இல்லையா ஸார்?”
கபிலனை முந்திக்கொண்ட சியாமளா “அது கஷ்டமாக்கும். பேட்ச் பேட்ச்சா, செட், செட்டா வெளில போக இதொன்னும் ஸ்கூல் இல்லையே. ட்ரீட்மென்ட் முடிஞ்ச பேஷன்ட்ஸ் டிஸ்சார்ஜ் ஆகி போறதும் புதுசா சிலபேர் அட்மிட் ஆகறதுமா ஓவர்லேப் (overlap) இருக்குமே?”
கபிலன் “ஷி ஈஸ் ரைட்”
“சட்டுனு சிஸ்டமை மாத்தினா குழப்பம் வராதா ஸார்?” - சுபாஷ்.
கிரிதரன் “இதுல என்ன குழப்பம், மதியம் வீட்டுல பரிமாறியும் ஈவினிங் பஃபே பார்ட்டிலயும் நாம மாத்தி மாத்தி சாப்பிடறது கிடையாதான்ன?””
சியாமளா “நீங்க சொல்றது சரிதான். ஆனா திடுதிப்புனு அளவு சாப்பாடுன்னு சொன்னா பேஷன்ட்ஸ் கிட்ட கண்டிப்பா ஒரு அதிருப்தி வரும். அவங்கதான் ட்ரீட்மென்ட்டுக்கு வந்திருக்காங்க. ஆனா, உதவிக்கு தங்கி இருக்கறவங்களுக்கும் அளவு சாப்பாடான்னு கேள்வி வரும்”
“அதைவிட நம்ம கிச்சன் ஸ்டாஃபுக்குதான், நீங்க சொல்ற குழப்பம் அதிகம் உண்டாகும். இது வரை பழக்கத்துல தெரிஞ்சிருக்கலாமே தவிர, பஃபே சிஸ்டம்ல பேஷன்ட் யாருன்னு அவங்களுக்குத் தெரிய வேண்டிய அவசியமில்லை. இப்ப அவங்களோட டீடெய்ல்ஸ் எல்லாம் முழுசா தெரியணும். ஸோ…”
“ஸோ, இது ஒத்து வராதுன்னு சொல்றீங்களா மேம்? முதல்ல குழப்பத்துல இருந்து நீங்க வெளிய வாங்க” என இடைமறித்த சுபாஷுக்குமே, கபிலன் அவளுக்கு அதிக முக்கியத்துவம் தருவதாகப் பட்டதில், அனுபமாவைப் போலவே சியாமளாவைப் பிடிக்கவில்லை.
சுபாஷின் எதிர்ப்பைக் கண்ட கிரிதரனும் கபிலனும் பார்த்துக் கொண்டனர்.
தன்னை நிதானித்துக் கொண்ட சியாமளா, தணிவான, ஆனால், தீர்மானமான குரலில் வார்த்தைகளைத்
தேர்ந்தெடுத்துப் பேசினாள்.
“ டாக்டர் சுபாஷ், நான் சொன்ன மாற்றத்தைக் கொண்டு வர, நம்ம கிச்சன் ஸ்டாஃப், பேஷன்ட்ஸ் ரெண்டு தரப்போடயும் பேசணும். இல்லை, பழைய சிஸ்டம்தான் சரி, அப்படியே இருக்கட்டும்னு சொன்னா, இங்க தனியா ஒரு டயட் & நியூட்ரீஷியனுக்கு வேலையே இல்லை. ஏன்னா, இன் பேஷன்ட்டுக்கு மட்டும்தான் இங்க சாப்பாடு. கிராமத்து மக்கள் அநேகமா ஹெல்த்தியாதான் சாப்பிறதால, எனக்குன்னு தனிப்பட்ட பேஷன்ட்ஸ் யாரும் வர மாட்டாங்க. டிஸ்சார்ஜ் ஆகி போறவங்கள்ல யாராவது டயட் சார்ட் கேட்டாதான் உண்டு. எனக்கு இங்க இருக்கற ஒரே வேலை கிச்சன்தான். ஐ நோ, நான் சொல்றதைதான் செய்யணும்னு உங்களுக்கு எந்த கட்டாயமும் இல்லை நீங்க என்ன முடிவு செஞ்சாலும் எனக்குப் பரவாயில்லை”
கபிலன் சியாமளாவை அவதானிக்க முற்பட, அவள் முகம் இயல்பாகவே இருந்தது.
கிரிதரன் சியாமளாவை சமாதானம் செய்யும் குரலில் “கூல் சியாமளா. நாம பேசி ஒரு முடிவுக்கு வரலாம். புதுசா எதை கொண்டு வந்தாலும் ப்ளஸ், மைனஸ் ரெண்டுமே இருக்கும்தானே?”
தொண்டையை செருமிக் கொண்டு, சியாமளாவை கை காட்டிய கபிலன் “சுபாஷ், மேடம் சொன்னதுல ஒரு மெடிகல் ரீஸனும் அக்கறையும் இருக்கு. இப்ப என்ன, நம்ம சிஸ்டமை கொஞ்சம் மாத்தப் போறோம், அவ்வளவுதானே? நாம எல்லாரும் கொஞ்சம் ஒத்துழைச்சா போதும்”
சுபாஷ் “ஆஸ் யூ விஷ் ஸார்…”
என்னதான் ‘உங்க முடிவு‘ என்றாலும், தான் திட்டமிட்ட சிறு சிறு மாற்றங்கள் பயனாளிகளின் நன்மைக்கே என்றாலும், சுபாஷினுடையது காரணமற்ற எதிர்ப்பு எனப் புரிந்தாலும், சியாமளாவினுள் சிறிதான ஒரு பதட்டமிருந்தது. கபிலன் தனக்காக நிற்கக் கண்டு, உள்ளூர இருந்த அவளது எதிர்பார்ப்பு நிறைவேறியதில் இறுக்கம் தளர்ந்தாள்.
கிரிதரன் “இதை எப்படி செய்யப் போறோம்னு ஏதாவது ஐடியா இருக்கா சியாமளா?”
கபிலன் “இது கேள்வி, சொல்லுங்க மேடம்”
சியாமளா “முதல்ல கிச்சன் கம் டைனிங் ஸ்டாஃபுக்கு நம்ம திட்டத்தை, அவங்க செய்ய வேண்டியதை சொல்லணும். அதேபோல பேஷன்ட்ஸ் கிட்டயும் பேசணும்”
அவரவர் தனக்குத் தோன்றியதைக் கூற, கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்த கணேஷ் “ஸார், அனுபமா மேடமும் அவங்க அப்பாவும் வந்திருக்காங்க” என அறிவித்தான்.
மூன்று மருத்துவர்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, கபிலன் “உள்ள அனுப்பு”
அனுபமா, தன் தந்தையுடன் வர, கபிலன் எழுந்து நின்று கை கூப்பி “வாங்க” எனவும் மற்றவர்களும் எழுந்து நின்றனர்.
அனுபமாவின் தந்தை ஒரு நாட்டு வைத்தியர். முறையான பயிற்சி கிடையாது. பரம்பரையாக செவிவழி வந்த அறிவின் அடிப்படையில் பச்சிலை, மூலிகை என வைத்தியம் பார்ப்பவர். அனுபவசாலி. சிறுவயதில் கபிலனின் தாத்தா அழகர்சாமியை தெரிந்தவர். அவரிடமே நேரடியாக மூலிகைகள் வாங்க இருக்கிறாராம்.
அவருக்கு நான்கு பெண்கள். அனுபமா இரண்டாவது பெண். அவளுக்கு படிப்பு நன்கு வரவும், தந்தையின் விருப்பமும் ஆர்வமும் சேர சித்த மருத்துவம் படித்தாள்.
அடிப்படையில் அனுபமா நல்ல பெண்தான். வளர்ந்த ஏழ்மையான கிராமத்து சூழலும் நகரத்தில் படித்தபோது கிடைத்த அனுபவங்களும், பார்த்த உலகமும் மனிதர்களும் ஒரு சேர அவளைக் குழப்பியதில் தாழ்வு மற்றும் உயர்வு மனப்பான்மைகளுக்கு இடையே ஊசலாடும் சுபாவம் கொண்டாள். ஆசை, ஆர்வம், அறிவு, அவசரம், துடுக்குத்தனம், ஈகோ, முன்கோபம் என எல்லாம் கலந்த கலவை அவள்.
கபிலனின் அறையில் சியாமளா உள்பட எல்லோரும் இருப்பார்கள் என எதிர்பாராத அனுபமா சுணக்கத்துடன் நிற்க, அவளது தந்தை பேசினார்.
“கபிலன் தம்பி, இந்தப் பொண்ணு இப்படி அவசரப்பட்டு கோச்சுக்கிட்டு வாரது இது மொத தடவையில்ல. வருஷக்கணக்கா வைத்தியம் பார்த்தும் நான் சம்பாதிக்காத அளவு சம்பளம் கொடுக்கறீங்க. இவ இங்க வேலைக்கு வந்த பிறகு மூணாவது பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணிட்டேன். கடைசி பொண்ணு டீச்சர் ட்ரெயினிங் படிக்குறா. இவளையும் கட்டிக் கொடுக்கணும்”
“...”
“பொம்பள புள்ளைக்கு பொறுப்பு வேணாமா, மனுசங்களைப் பொறுத்துக்காம வாழ முடியுமா தம்பி? ஆத்திரமும் அவசரமும் அரிசி வாங்க உதவுமா சொல்லுங்க”
“...”
“ஒவ்வொரு முறையும்
இவ திருப்பிக்கிட்டு வாரதுக்கு நான் வந்து முட்டுக்கொடுக்க வேண்டியதா இருக்கு. எனக்கு மட்டும் கூச்ச நாச்சம் கிடையாதான்ன, அவசரப்பட்டு தப்பு செஞ்சுட்டேம்ப்பான்னு அழுவுறா”
“...”
“கேக்கவே எனக்கு சங்கடமாதான் இருக்கு. எனக்காக இந்த ஒரு தரம் பெரிய மனசு பண்ணி சேர்த்துக்குங்க தம்பி”
கபிலனுக்கு அத்தனை முதியவர் தன்னிடம் கெஞ்சுவது பரிதாபமாகத்தான் இருந்தது.
இதில் “அவங்க குடும்ப நிலமையை யோசிடா. நான் வேணாம்னா கூட மூலிகைக்கு காசு குடுக்காம போக மாட்டாரு. போனாப் போவுதப்பு” என அப்பா சாரநாதனின் சிபாரிசு வேறு.
அதற்காக எத்தனை முறை பொறுத்துப் போவது? இதோ, நேற்று அவளை அதட்டி, அடக்கி அனுப்பி வைத்த சுபாஷுடன்தான் முதல் பிரச்சனையே.
கபிலன் அமைதியாக வேடிக்கை பார்க்க, கிரிதரனும் சுபாஷும் இது வழக்கம்தான் என்பதுபோல் அமர்ந்திருக்க,
சியாமளா சங்கடத்துடன் “எக்ஸ்க்யூஸ் மீ” என எழவும், கபிலன் உட்காரச் சொல்லி சைகை காட்டினான்.
சியாமளா ‘ப்ளீஸ், நான் வெளில போயிடறேனே‘ என கண்களால் வைத்த கோரிக்கையை கபிலன் சற்றும் மதிக்கவில்லை.
தந்தையின் தலையசைப்பில் அனுபமா “ஸாரி ஸார்”
“ஐயா, பரவாயில்லை. அவங்க இருக்கட்டும் நான் பார்த்துக்கறேன், நீங்க புறப்படுங்க” என கதவு வரை சென்று அவரை வழியனுப்பி விட்டு வந்த கபிலன்
“அனுபமா, நீங்க யோசிக்காம அவசரத்துல வார்த்தையை விட்டதுல இப்ப எல்லாருக்கும் சங்கடம். பத்தாததுக்கு உங்க அப்பாவை வேற என்கிட்ட வந்து பேச வெச்சு… அவர் வயசுக்கு அவருக்கு இதெல்லாம் அவசியமா, சொல்லுங்க”
“...”
“சண்டை போடறப்ப இருக்கற தைரியம் மன்னிப்பு கேட்கும்போதும் இருக்கணும். நீங்களே ஹேண்டில் செஞ்சு பழகுங்க”
“...”
சியாமளாவைக் காட்டி “மேடம் சொன்னதை நீங்க ஏன் பர்ஸனலா எடுத்துக்கறீங்க? சொல்லப்போனா, இது என் ஹாஸ்பிடல். என் சிஸ்டத்தை குறை சொன்னதுக்கு நான்தான் கோபப்படணும்”
“ஸாரி ஸார்”
“லீவ் இட். போய் வேலையைப் பாருங்க”
“யெஸ் ஸார்”
அனுபமாவுடன் கிரிதரனும் சுபாஷும் கூட எழுந்து சென்றனர்.
கடிகாரத்தைப் பார்த்த கபிலன் சியாமளாவிடம் “பதினொன்னரைதான் ஆகுது. நான் இப்ப ஃப்ரீதான். நாம காஸ்மெடிக்ஸுக்கு போகலாம்” என கார் சாவியுடன் எழுந்தான்.
இருவரும் இணைந்து நடந்ததைக் கண்ட பலரும் புருவம் உயர்த்தினர்.
சியாமளா “ஸாரி அண்ட் தேங்க் யூ”
எதற்கென கபிலனும் கேட்கவில்லை, அவளும் விளக்கவில்லை.
திடீரென கபிலன் “கிரிதரன் ஏன் உன்னை பேர் சொல்லிக் கூப்பிடறான்?”
சியாமளா “என்ன பேர்?”
“ம்… ரிப்பேர்”
******************
செய்வதற்கு எதுவும் இல்லாததால், கல்லாங்காய் விளையாடியபடி பேசிக்கொண்டிருந்த பணிப்பெண்கள் ஐவரும், சத்தமின்றி உள்ளே நுழைந்த கபிலனையும் சியாமளாவையும் கண்டு பட்டென எழுந்து நின்றனர்.
சியாமளா சொல்லி இருந்தபடி “இடத்தையும், அங்கிருந்த பொருள்களையும் சுத்தம் செய்து வைத்திருந்தனர். அது முன்பகுதி மட்டுமே. பின்னால் இருந்த மிகப் பெரிய கூடத்தில் அரவை இயந்திரங்களும் பெரிய கேஸ் பர்னர்களும், அதற்கேற்ற கனமான பாத்திரங்களும் இரண்டு விதமான பாக்கிங் மெஷினும், ஒரு நடுத்தர அளவிலான தொழிற்சாலைக்குத் தேவையான
இன்னும் என்னென்னவோவும் அங்கே பிரிக்கப்படாமலே இருந்தது.
பின்கதவு வழியே விர்ரென அந்தக் கூடம் வரை சென்று ஒருமுறை பார்த்து வந்த கபிலன், அந்தப் பெண்களைப் பார்த்து
“உக்காருங்க, அட, உக்காருங்கக்கா” என்றவாறு அந்த உள் புறத் திண்ணையில் அமர, சியாமளா அங்கேயே உள்புறமாக நகர்ந்து சம்மணமிட்டு அமர்ந்து, தன் மடிக்கணினியைத் திறந்திருந்தாள்.
இன்றே வேலையைத் தொடங்கினால் கூட, பொருள்கள் வெளியில் செல்லக் குறைந்தது இரண்டு இரண்டரை மாதங்களாகும்.
காலணியைக் கழற்றி விட்டு எதிரே இருந்த மரத்தூணின் அடியில் பாதங்களைப் பதித்துக் கால்களைக் குந்திட்டுக் கொண்டு வசதியாக சுவரில் சாய்ந்து கண்களை மூடியபடி “சொல்லு” என்றவனைப் பார்த்த சியாமளா பக்கெனச் சிரித்துவிட்டாள்.
“என்ன சிரிப்பு?”
“பண்ணையார் தூங்க பாட்டு வேணா பாடவா?”
“பாடேன், உங்க அண்ணாவோட எங்கேஜ்மென்ட்ல பாடினியே, அந்தப் பாட்டை பாடு. ஐ லைக்ட் தட் ரிதம்”
கபிலனின் குரலில் இருந்த தீவிரத்தில் திகைத்து “சீரியஸ்லி?” என முணுமுணுத்த சியாமளா,
“டு ஸ்டார்ட் வித், நாம என்னென்ன ப்ராடக்ட்ஸ், எத்தனை தயாரிக்கலாம், அதோட பேக்கேஜிங், லேபிளிங்னு நீங்க குடுத்த லிஸ்ட்படி…”
இருவரின் பேச்சும் கவனமும் கணினித் திரையில் இருக்க, அவர்கள் பேசியதில் பாதிக்கு மேல் ஆங்கிலத்தில் வேறு இருந்ததில், அதுவரை அவர்களைக் கவனித்திருந்த அங்கிருந்த பெண்கள் ஆர்வம் குறைந்து, பின் கதவு வழியே வெளியேறினர்.
இருபது நிமிடங்கள் கூடக் கடந்திருக்காது. கபிலனின் மொபைல் அழைக்க, மாளவிகா!
“சொல்லும்மா”
“...”
“அம்மா, என்னாச்சு, ஏம்மா அழற?”
“...”
“காட்! எந்த ஹாஸ்பிடல்?”
“ரிலாக்ஸ், ரிலாக்ஸ்மா… நான் வரேன். ரெண்டே மணி நேரத்துல அங்க இருப்பேன். ப்ளீஸ் மா, அழாத. ஆதி கிட்ட ஃபோனை கொடு”
ஆதித்தன் இப்போது மதுரை அரசு சட்டக்கல்லூரியில் இரண்டாம் வருடத்தில் இருந்தான்.
“ஆதி, வெளிய வந்து பேசுடா” என்றவன், பேசி முடித்து, தம்பியிடமிருந்து தெரிந்து கொண்டவற்றை மூளையில் ஓட்டிப் பார்க்க முயன்றபடி, எங்கோ கவனமாக எழுந்து காலணிகளுக்குள் தன்னைத் திணித்துக் கொண்டவனை சியாமளா குழப்பத்துடன் பார்த்தாள்.
‘யாருக்கு என்ன, எங்கே வருவதாகச் சொன்னான்?’
‘ஆதி யார்?’
‘இதோ, இங்க இருக்கற அம்மாவைப் பார்க்க ரெண்டு மணி நேரம் ஏன்?’
வாசல் படியருகே சென்ற கபிலன், திடீரென நினைவு வந்தவன் போல் திரும்பி வந்தான்.
“நீயும் கிளம்பு”
“எங்க?”
“வா, சொல்றேன்”
சியாமளாவின் கை பிடித்து இழுத்துக்கொண்டு ஓடாத குறையாக காரை நோக்கிச் சென்று காரில் ஏறினான்.
“நீ… நீ வேணா உங்க ஊருக்குப் போறியா?”
“வாட்?”
“இல்ல, நான் மதுரை வரைக்கும் போறேன். எப்ப திரும்பி வருவேன்னு தெரியல. அதான்…”
“...”
“நான் இங்க இல்லாம நீ… ஐ மீன்…”
கபிலன் வார்த்தைகள் வராது தடுமாறுவது சியாமளாவிற்கு சுவாரஸ்யமாக இருந்தது. அதைவிட அவன் சொல்ல வருவது இனித்தது. அவனது பதட்டம் கருதி, சீண்டும் ஆசையை அடக்கிக் கொண்டாள்.
“பரவாயில்ல, இங்க நான் பார்த்து இருந்துக்கறேன். நீங்க போயிட்டு வாங்கோ”
“ஷ்யூர்?”
“நான் வேணா உங்க கூடவே வந்துடவா?”
திரும்பி முறைத்தவனின் கைகளில் கார் குதிக்கவும் “ஓகே ஓகே, ஜஸ்ட் ச்சில் பேபி”
“...”
அந்த நிமிடத்தின் இறுதியில் வீட்டு வாசலில் காரை நிறுத்தியவன், தந்தை அந்நேரம்
வீட்டில் இருந்ததில் நிம்மதியானான்.
“என்னப்பு இந்த நேரத்துல?” - நீலவேணி.
“சும்மாதான் அப்பத்தா, தோட்டத்துப் பக்கம் போயிட்டு வரேன்”
தந்தையைத் தனியே அழைத்தவன் “அப்பா, நிலாப்பாவுக்கு நெஞ்சு வலின்னு ஹாஸ்பிடல்ல சேர்த்து இருக்காங்களாம். நான் இப்பவே மதுரைக்கு கிளம்பறேன். வர்றதுக்கு எப்படியும் ரெண்டு, மூணு நாளாவது ஆகும். ஹாஸ்பிடலை கொஞ்சம் பாருப்பா”
“என்னப்பு திடீர்னு, மனுஷன் நல்லாத்தானே இருந்தாரு. நீ பத்திரமா போய்ட்டு வாப்பு. இங்கன நான் பாத்துக்கிடறேன்”
“சரிப்பா…” என்றவன் தயங்கி நின்றான்.
“என்னப்பு யோசனை?”
“இல்லப்பா, சியாமளா… “
“அந்தப் பொண்ணுக்கு என்ன?”
“...”
“அப்பா பாத்துக்க மாட்டேனாப்பு?”
“ம்…”
“வரேன் பா” என்றவன், சியாமளாவிடம் தலையசைப்பில் விடைபெற்று, காரை நோக்கிச் செல்ல, உடன் நடந்தவள்,
“மதுரைல யாருக்கு என்ன?”
பதில் சொல்லாது காரில் ஏறி அமர்ந்தவன் “மதுரைலதான் எங்கம்மா இருக்காங்க…”
“?!”
“அவங்க ஹஸ்பண்டை ஹாஸ்பிடல்ல சேர்த்து இருக்காங்க. போதுமா?”
நின்ற இடத்தை விட்டு அசையாது பார்வையில் இருந்து மறையும் வரை சியாமளா பார்த்திருக்க, கபிலன் மதுரையை நோக்கிப் பயணித்தான்.

Author: VedhaVishal
Article Title: குறுநகை போதுமடி! 7
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.