• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

தன்முனைப்பு - வனிதா கண்ணன்

siteadmin

Administrator
Staff member
Feb 3, 2026
34
3
8
chennai
தன்முனைப்பு

“ இங்கே பாருங்கடா… நாளைக்கு கரெக்டா நாலரை மணிக்கு என் வீட்டு பின் வாசல் கதவை திறந்து வைக்கிறேன்.. உள்ளே நுழையறோம்… ஆளை தூக்குறோம்..” என பனி கொட்டும் மார்கழி மாதத்தில் அந்த மொட்டை மாடியில் கருப்பு நிற போர்வையில் கிசுகிசுப்பான குரலில் ஒரு உருவம் போனில் பேசிக் கொண்டிருந்தது.

அதன் எதிர்புறமோ “ ஏலேய்! நீ போடுற ப்ளான் எல்லாம் ஒர்க் அவுட் ஆகுமோ, ஆகாதோ தெரியல.. நாளைக்கு ஏதாச்சும் சொதப்பி நம்ம எல்லாம் மாட்டுனோம்.. உங்க அப்பாகிட்ட கைமா ஆகிருவோம்.. எதுக்கும் யோசிக்கோ…” என கூறியதும்

“ அடச்சீ! எதுக்குல நீ பம்முற. நீ பம்முறதும் இல்லாம என்னையும் பம்ம வைக்குற. பழிக்கு பழி வாங்கணும்ல. அப்பத்தேன் என் மனசு ஆறும். அந்த மரகதத்துக்கு நான் யாருன்னு காட்டுறேன்ல.. அப்பத்தான் என்னை அவ டார்ச்சர் பண்ண மாட்டால…” என தன் தலையை தேய்த்துக் கொண்டே கூறியது அந்த உருவம்.

“ ஏலேய்! நீ படிக்கணும்னு தான்ல அப்படி செஞ்சாங்க.நீ நிறைய கத்துக்கணும்.. அது மூலமா நீ நல்ல நிலைக்கு வரணும். அப்படின்னு நினைச்சது தப்பால..” என எதிர்ப்புறம் மரகதத்துக்கு கரிசனம் காட்ட அந்த உருவத்துக்கு பற்றிக் கொண்டு வந்தது.

“ செவுளை திருப்பி போடுவேன் ராஸ்கல்… நான் இப்படி செய்ய காரணமே அந்த மரகதம் தான்.. நீ வளவளன்னு பேசாம நாளைக்கு சொன்ன டைமுக்கு எங்க வீட்டுக்கு வர்ற..‌வைக்கட்டுமால…” என்று கூறி வைத்த உருவத்துக்கு தெரியவில்லை. மரகதம் மேலே வந்து அனைத்தையும் கேட்டு விட்டு சென்றதை.

அடுத்த நாள் காலை நாலு மணிக்கே அரைத்தூக்கத்தில் எழுந்து பல்லை விளக்கி முகத்தை கழுவி விட்டு வந்த வேளை தன் நண்பர்கள் வரும் சத்தம் கேட்டு பின் பக்க கதவை திறந்து வைக்க அதில் முதலாவது வந்தவன் சாக்குபையை திறந்து காட்ட அதில் இரண்டு பேர் அமரும் அளவுக்கு அந்த சாக்கு பெரிதாக இருந்தது.

“ என்னதுல இது? அந்த காப்படி கர்லாகட்டைக்கு இவ்வளோ பெரிய சாக்கா” என்றது அந்த உருவம்.

“ நீ முதல்ல ஆளு இருக்கற இடத்தை சொல்லுவே. அப்பறம் பாத்துக்கலாம்”

“ சரில. ஆளை மயக்குறதுக்கு குளோரோபார்ம் எதுவும் வாங்கியந்தீங்கலா.. ஆளு செம்ம கட்டை. கவனமா தூக்கணும்.”

“ நீ அதெல்லாம் பிளான்ல சொல்லல பக்கி பண்டாரம்”

“ அய்யய்யோ! மயக்க மருந்து இருந்தா தானே ஆளை கடத்த முடியும். பல்லை இளிச்சிட்டு கிட்னா நாயேன்னு சொல்ற சீனை அத்தனை வாட்டி பார்த்தும் மறந்துருக்கியேடா வெண்ண” என தலையிலடித்து கொண்டது அந்த உருவம்.

“ நான் சிரிச்சாலே அந்த கிழவி மயங்கிடும்ல.. அதை வேணா டிரை பண்ணவா?” என்றான் இரண்டாமவன்.

“ அடேய்! நீ சிரிக்கிறதை பாத்து கிழவி மயங்காம மர்கயா ஆகிட்டா என்னல பண்ணுவ. பரதேசி!” என கடிந்து கொண்டான் முதலாமவர்.

சிறிது நேரம் அங்கே மயான அமைதி நிலவியது . சட்டென்று குதுகலமான குரலில் “ ஹய்யா! ஒரு யோசனை வந்துருச்சு.”

“ என்னன்னு சொல்லுவே! கடைசி நேரத்தில சொதப்புறதே உனக்கு வேலையா போச்சுல… எடுபட்ட பக்கி..” என்றான் முதலாவதாக வந்தவன்.

“ எலேய்! எங்க அம்மா நேத்து மதியம் முள்ளங்கி சாம்பாரும், முட்டைக்கோஸ் பொரியலும் வச்சிருக்குல. அதை கொண்டாறேன். மோந்து பாத்தா நேரடியா சொர்க்கமே கண்ணுக்கு தெரியும்.”

“ என்ன ஒரு மட்டமான காம்பினேஷனுல. இதெல்லாம் எப்படில உங்க அம்மா செய்யுது”

“ ஹ்க்கும். எங்க அம்மா எங்கப்பனையும் அவரு ஆத்தாளையும் பழி வாங்குறேங்குறேனு பேருல செவ்வாய், வெள்ளி தவறாம இதை செஞ்சுபுடும்ல.” என பேசிக் கொண்டே போன நொடி ஞாபகம் வந்தது போல் “ எலேய்! டைம் ஆச்சுல .. சீக்கிரம் நான் போய் ரெண்டையும் கலந்துக் கொண்டாறேன். இருங்க..” என தனது வீட்டினுள்ளே பதுங்கி போனது.

எல்லாம் தயாராக இருக்க ஒரு கிண்ணத்தில் முள்ளங்கி சாம்பாரையும், முட்டைகோஸையும் கலந்து அதை மேகலாவின் மூக்கின் அருகே கொண்டு போன சமயம் அவளது முதுகு அரித்தது.

சட்டென்று நெளிந்து கொண்டே தனது இரு கைகளாலும் வலதுபக்கம் பாத்திரத்தை கொண்டு சென்ற நொடி “ இருங்கலே! இங்கே கொஞ்சம் சொரிஞ்சு விடுங்க..” என கூறிக்கொண்டே தனது சகாக்களை பார்க்க அங்கே நின்றிருந்த இருவரும் காணாமல் போயிருந்தனர்.

“ எலேய்! எங்கேலே போனீங்க. சீக்கிரம் வாங்க ” என தனது முதுகை நெளித்துக் கொண்டே கூற

“ ஒழுங்கு மரியாதையா என் மூஞ்சுக்கு நேரா இருக்கிற கையை எடுல.. ” என்று கர்ஜனையான குரலில் அதிர்ந்து போன அந்த உருவம் தன் மேலே இருந்த போர்வையை விலக்கிக் கொண்டு “ அப்பா” என்ற நொடி அதன் காதைப் பிடித்து திருகினார் அந்த வீட்டின் தலைவர் சிவவேல்.

“ எப்பா! எப்பா! ” என்ற அலறலோடு தன் காதைப் பிடித்திருந்த கையை விடுவிக்க அவரை ஒரு சுற்று சுற்றினாள் நம் கதை நாயகி மீனாட்சி.

அவள் அப்படி சுழல்கையில் அவளது கவனத்தில் பதிந்தது அங்கே கையைக் கட்டிக் கொண்டு அமைதியாக பார்த்திருந்த அவளது சித்தப்பா மகன்கள் இருவரையும் தான். கூடவே அவளது அப்பத்தாவான மரகதம் நக்கலோடு அவளைப் பார்த்து பல் தேய்த்து கொண்டிருக்க மீனாட்சிக்கு பற்றிக் கொண்டு வந்தது.

“ இந்தாடி சசி” என சிவவேலின் சத்தத்தில் அவரை இடிக்க வந்தவர் பின் நிதானித்து “ இவளை இங்கேயே நிக்க வை. நான் பாத்ரூம் போயிட்டு வந்துடுறேன்” என மீனாட்சியை முறைத்துக் கொண்டே சென்றார்.

“ எம்மோவ்” என நீட்டி அழைத்தவளை கண்டு முறைத்த சசி, “ என்ன?” என்று கடுப்பாக கேட்டார்.

“ இல்லை. உன் ஊட்டுகாரருக்கு எதுவும் மலச்சிக்கலா?” என அப்பாவியாக கேட்டு விட்டு நமட்டு சிரிப்பு சிரிக்க அவளுக்கு பதில் சொல்ல வாயை திறந்த சசிக்கு முன் அவளது அப்பத்தா மரகதம், “ என் புள்ளைக்கு எதுக்குடி அப்படி ஆகப்போவுது. நீ பண்ற அலப்பறையில எங்க எல்லாத்துக்கும் மனச்சிக்கல் ஆகமா இருந்தா சரிதான்..”

அவரது வார்த்தைகளில் வெகுண்டு எழுந்தவள் “ ஏய்! கிழவி உன்னால உன்னால தான் இப்ப பணச்சிக்கல் வரப்போகுது.. காப்படி சைஸூல இருந்துட்டு என்ன எப்படி எல்லாம் எங்கப்பன் கிட்ட போட்டு உடுற.. இன்னிக்கு நீ தப்பிச்சிட்ட. என்னிக்காச்சும் மாட்டுவ. அன்னிக்கு இருக்கு உனக்கு கச்சேரி..” என மூச்சு விடாது பேசியவளை ஒரு பார்வை பார்த்தவர் அவளது பின்னால் பார்த்தவாறே “ கேட்டுக்கடா மவனே! ” எனவும் பதறிக் கொண்டு திரும்பியவள் அங்கே யாருமில்லாததை கண்டு மரகதத்தை முறைத்தாள்.

இவர்களின் இந்த உரையாடலில் சசி, அனைவருக்கும் டீ போட்டு கொண்டு வர முதலில் மரகதத்துக்கு கொடுத்து விட்டு பின் தன் மைத்துனர் மகன்களுக்கு கொடுக்க தனக்கு தர வேண்டிய டீக்காக அவள் கை நீட்டிய வேளை அவளது கையை தட்டிவிட்டார் சசி.

“ ஏம்மா? இப்படி கையை தட்டி விடுற?”

“ உங்கப்பா உனக்கு கொடுக்க சொன்னா தர்றேன். அப்ப வேணா நீ டீ குடி..”

“ ஹ்க்கும். அப்படியே தான் உன் ஊட்டுகாரர் பேச்சை கேட்டு நீ நடந்துட்டு இருக்க பாரு” என கழுத்தை நொடித்தாள்.

அவளது கூற்றில் கடுப்பான சசி, “ அவர் சொன்ன சொல்லை நான் தவறி பார்த்துருக்கியாடி எருமை” என ஏகவசனத்தில் கடிந்தவரை ‘ ச்சுச்சு’ என உதட்டை குவித்து சத்தம் இட்டவாறே “ அப்பறம் ஏன் நீ அப்பாவுக்கு பிடிக்காத குழம்பை செய்யற..” என புருவம் தூக்கினாள்.

பதில் சொல்ல முடியாது திருதிருவென்று முழித்தவரை கண்டவள் “ உனக்காச்சும் ஆத்திரத்தை தீர்த்துக் கொள்ள சமையல் இருக்கும்மா. ஆனா எனக்கு ” என்று உதடு பிதுக்கினாள்.

அதற்குள் குளித்து முடித்து விட்டு வந்த சிவவேல், “ என்னல ப்ளான் பண்ணிங்க மூணு பேரும். ஒழுங்கு மரியாதையா சொல்லுங்கல” என மூவரையும் பார்த்து கண்டிப்பாக கேட்க மரகதம், “ ஏலேய் அய்யா! நீ ஊருக்கே தலைவனா இருந்துகிட்டு இந்த சிருக்கி கிட்ட என்ன பஞ்சாயத்து வேண்டிகிடக்கு. போய் சாப்புட்டு சோலிய பாத்து கிளம்பு” என விரட்ட தனது மகளை முறைத்தவாறே அறைக்குள் நுழைந்தார்.

அவர் போவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவளின் கையைப் பிடித்து இழுத்து தன் அருகே உட்கார வைத்தவர் திரும்பி தன் பேரன்களை பார்க்க அவர்களும் பக்கத்தில் வந்து அமர்ந்தனர்.

குபீரென்று சிரித்த மரகதத்தை பார்த்து “ இப்ப ஏன் கிழவி சிரிக்கிற?” என்று வெடுவெடுத்தாள் மீனாட்சி.

“ போடி பொசக்கெட்ட சிருக்கி.. ஒரு அறுவது வயசு கிழவியை தூக்க துப்பில்லை. நீ பெருசா பேச வந்துட்ட” என நக்கலாக கேட்க அவர் கேட்டதில் அதிர்ந்தவாறே “ உனக்கு எப்படி கிழவி இந்த விஷயம் தெரியும்?” என கேட்டுவிட்டு நாக்கை கடித்தாள்.

“ நீங்களும் உங்க திட்டத்தையும் தூக்கி என்னோட ஒனப்புதட்டுல தான் வைக்கோணும். வெறும் பேச்சுலேயே நேரத்தை கடத்திப்புட்டு எங்கிட்ட காயுறே?” என்றார் கிண்டலாக.

பேத்தி முகம் சுண்டுவதை காண சகிக்காமல் தனது பேரன்களை அழைத்தவர் “ ஏலே! என்ன விஷயம்ல..” என தணிவாக கேட்டார்.

அவர்கள் மீனாட்சி பக்கம் கையை காட்ட “என்னடி ஆத்தா! என் மேல என்ன கோபம் உனக்கு?” என அவளின் தாடையை பிடித்து கேட்க, மீனாட்சி வெடித்து விட்டாள்.

“ எதே! என்ன கோபமா? ஏன் கேட்கமாட்ட கிழவி. ஹான் உன் மக அதாவது என் அத்தை மகன் அதான் உன் பேரன் கலெக்டருக்கு படிக்கிறான். நாளைக்கு அவனுக்கு உன் பிள்ளையை கட்டிக் கொடுக்கணும்னா நீயும் கலெக்டருக்கு அவளை படிக்க வைன்னு நீதானே எங்கப்பா கிட்ட சொன்னே? ” என கடுப்பாக கேட்டாள்.

“ ஆமாடி ஆத்தா! நான் தான் சொன்னேன். இப்ப எதுக்கு சீடை மாதிரி வெடிக்கிற? நான் நல்லது தானே சொன்னேன்.யோசிச்சி பாரு..” என்றார் மரகதம்.

“ இன்ஜினியரிங் படிச்சிட்டு கலெக்டர் ஆகணும்னு நான் சொன்னேனா?” என கடுப்பாக கேட்ட சமயம் அவளது முன்னால் வந்து நின்ற சிவவேல், “ அப்பறம் நீ தாம்ல சொன்ன சின்ன வயசுல என்ன ஆகணும்னு கேட்டப்ப நீயும், என் தங்கச்சி மவனும் சேர்ந்து கலெக்டர் ஆக ஆசையா இருக்கு சொன்னீங்கள்ல? அதை நிறைவேத்த வேணாமா?” என அவளை பேச்சில் மடக்கினார்.

அவளின் மனதிலோ, ‘ ஹ்க்கும். விவரம் தெரியாத வயசுல எதையாவது கேட்க வேண்டியது. நாங்களும் குத்துமதிப்பா எதையாச்சும் சொல்லி வைச்சா அதை நிறைவேத்த கிளம்பிட வேண்டியது. இப்பெல்லாம் கேட்டா உஷாரா பதில் சொல்லிடுவேனு கேட்காத..’ என உதட்டை சுழித்தாள்.

அவளது எண்ணத்தை பற்றி அறியாமல் “ என் தங்கச்சி மவன் சொன்ன சொல்லை காப்பாத்த கலெக்டருக்கு படிக்கிறான். நீயும் சொன்ன சொல்லை காப்பாத்து. நாளைக்கு போய் அட்மிஷன் போட்டுட்டு வந்துரலாம்.” என கறாராக கூறிவிட்டு சென்றவரை பார்த்துக் கொண்டே ‘ எவ்ளோ சொல் சொல்லிருப்பேன். அதெல்லாம் காப்பாத்துனும்னா நான் என்ன கோட்டைசாமியா’ என கடுப்பாக வாய் விட்டு கேட்டாள் .

“ நீ கலெக்டர் ஆகி உன் அப்பனுக்கு பெருமை சேருடி ஆத்தா.” என்றார் மரகதம் வாஞ்சையாக.

“ எனக்கு கூட தான் நீ பொங்கல் போட்டில ஓடி ஜெயிச்சு எனக்கு பெருமை சேர்க்கணும்னு ஆசை. அதெல்லாம் நடக்குமா? உனக்கு ஓட டிரெயினிங் குடுக்கலாம்னு தான் ஃப்ளான் போட்டேன். எதுவும் நான் நினைக்கிறது இந்த ஜென்மத்துல நடக்காது போல. உங்க ஆசை எல்லாம் நிறைவேத்திட்டு நான் தியாகினு பெருமை படுவேன்னு கனவுல கூட நினைக்காத கிழவி!” என விழியோரம் வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டு தனது அறைக்குள் நுழைந்தாள்.

அடுத்த நாள் காலை, சென்னைக்கு பயணமாயினர் தந்தையும் மகளும். யாரிடமும் எதுவும் பேசாமல் தன் அத்தை மகன் படிக்கும் அகாடமியில் நுழைவுத் தேர்வு எழுதி பாஸாகியவள் அங்கே தங்கி படிக்க தன்னை தயார் படுத்திக் கொண்டாள்.

மகளிடம் காணப்பட்ட அமைதியைக் கண்டு சிவவேல், “ நீ படிப்புல மட்டும் கவனத்தை செலுத்து. பணத்தை பத்தி கவலைப்படாத. உன் அத்தை மவன் படிக்கிறப்ப நீயும் கூட சேர்ந்து படி. இரு. அவன்கிட்ட சொல்லிட்டு போறேன்” என காத்திருந்த சமயம் “ வாங்க மாமா. வந்து ரொம்ப நேரம் ஆச்சா?” என தணிவான குரலில் கேட்டான்.

“ இல்லைல சித்தார்த்து. நீ இனி இவக்கிட்ட பேசிக்கோ. நான் கிளம்புறேன்” என விரைந்து விட்டார்.

அவளை ஏறெடுத்துப் பார்த்தவனை “ ஹாய். ஐ அம். கௌதம் சித்தார்த். யு.பி.எஸ்.சி. மெயின் எக்ஸாம் எழுதி ரிசல்ட்காக வெயிட்டிங்.” என தன்னை அறிமுகப்படுத்தியவனிடம் “ ஹ்ம். ஐ அம் மீனாட்சி. இன்ஜினியரிங் முடிச்சிருக்கேன்.” என கூறியவளை “ லாங் டைம் நோ சீ… இப் யூ எனி டவுட் இன் லெஷன் கால் மீ .. ஐ வில் க்ளியர் ” என விடைப்பெற்றவனை பார்த்தவள் “ சொந்த காரனுக மூவாயிரம் கிலோமீட்டருக்கு அப்பாலே இருந்தாலும் அவனுகளுக்கு ஈக்குவலா ஸ்டேட்டஸ் மெயின்டெய்ன் பண்ற கோஸ்டிக நம்ம கோஸ்டிக தான்..” என நினைத்து விட்டு ஹாஸ்டலுக்குள் நுழைந்தாள்.

அடுத்த மூன்று மாதங்களில் சித்தார்த் இன்டெர்வியூ அட்டென்ட் பண்ணி டிரையினிங் போக மீனாட்சியிடம் அவனின் நோட்ஸை கொடுத்து படிக்க சொன்னான்.

ஆரம்பத்தில் வேண்டா வெறுப்பாக படிக்க ஆரம்பித்தவள் ஒரு கட்டத்தில் அவர்களது அகாடமியில் யு.பி.எஸ்.சி. பற்றிய கருத்தரங்கில் கலந்து கொண்டு நல்ல அறிவுரைகளை கேட்க அதிலிருந்து விடாது படித்தவள் இரண்டு அட்டெம்ப்ட் எழுதி தோல்வியுற்றாள்.

சிவவேல் மகளை புரிந்து கொண்டு ஏதும் கேட்காமல் இருக்க சித்தார்த் போன் செய்து அவளிடம் “ நான் செகண்ட் அட்டெம்ப்ட்ல பாஸாகிட்டேன். ஈஸின்னு நினைச்சி படி. ஜெயிப்ப” என அறிவுரை கூற அதில் கடுப்பானவள், “ எது ஈசியா மொத்தமா 2025 மார்க். ஆறு செமஸ்டரை ஒன்னு சேர்த்தா கூட அவ்வளவு வராது. முதல் அட்டெம்ப்ட்ல இங்கிலீஷ்ல வாசிச்சு முடிக்கவே பத்து நிமிஷம் ஆச்சு. சரி இரண்டாவது அட்டெம்ப்ட்ல மெயின் எக்ஸாம்ல போச்சு.. அதோட மனசு நொந்து போச்சு..” என சோகமாக கூறினாள்.

அவளது சோர்ந்த முகத்தைக் கண்டவன் “ யூ நோ ஒன்திங். வீரியமிக்கதே தன்னை பரிணமித்துக் கொள்ளும். உனக்கு புரியும் படி சொல்லணும்னா நீ விதைக்கற விதை பாத்து பாத்து கவனிச்சாலும் அது சில வேளையில முளைக்கும் சில வேளையில தெரியாது. ஆனா எங்கேயோ ஒரு ஓரத்தில யாரோ ஒருவர் அது பறவையா கூட இருக்கலாம், அது போடுற எச்சத்துல அந்த விதை விழுந்து மண் அதை மூடினாலும் அதை தகர்த்து மேலே விருட்சமா வளருதுல. அது போல தான் இப்ப உன்னோட நம்பிக்கையை டிபரெஷன்னு ஒரு மண்ணு மறைச்சிருக்கு. அதை தூக்கி போட்டுட்டு படி. ஜெயிப்ப…” என நீண்ட அறிவுரை கூறியவன் அவளுடன் காபி அருந்தி விட்டு விடைப் பெற்றான்.

அவனது வார்த்தைகளில் நம்பிக்கை கொண்டு விடாமுயற்சியுடன் தன்னை வருத்தி கொண்டு படித்தவளை காண மரகதம், தம் மகனுடன் அவளது ஹாஸ்டலுக்கு வந்தார். வந்தவர் தூர நின்று அவளைக் கண்குளிர பார்த்த நொடி அவளது இளைத்த தேகத்தை கண்டு கண்கலங்கி ஒரு முடிவுக்கு வந்தவராய் ஊருக்கு புறப்பட்டார்.

இந்த தடவை யு.பி.எஸ்.சி பரிட்சையில் பாஸாகி டிரெயினிங் முடித்து அசிஸ்டன்ட் கலெக்டராக சென்னையில் பணியாற்ற சித்தார்த் அவளது ஊரில் அசிஸ்டன்ட் கலெக்டராக பணியாற்றினான்.

பொங்கல் விழாவை முன்னிட்டு ஊருக்கு வருமாறு சிவவேல் அழைக்க, விடுப்பு எடுத்துக் கொண்டு ஊருக்கு வந்தவளை அனைவரும் ஆரவரத்தோடு வரவேற்றனர். நீண்ட நாள் கழித்து வீட்டுக்கு வந்தவளிடம் சிவவேல், சசி இருவரும் மனம் விட்டு பேசினர். எல்லோரிடமும் பேசினாலும் மரகதத்திடம் ஒரு வார்த்தை பேசாமல் அன்றைய நாளை கழித்தாள்.

அடுத்த நாள் நடந்த பொங்கல் போட்டியில் சித்தார்த் தலைமை தாங்க இவளும் மண்ணின் மகளாக மேடை ஏறினாள். ‘இப்போது ஓட்டப் பந்தயத்திற்கு பெயர் கொடுத்த பெண்கள் அனைவரும் வரிசையில் நிற்கவும் ’ என அறிவிப்பு வர அங்கே நின்றிருந்தவர்களை சுவாரசியமாக பார்த்தவள் கண்களில் மரகதம் வரிசையில் நிற்பதைக் கண்டு அதிர்ந்தாள்.

அவர் இவளைக் கண்டு கொள்ளாமல் போட்டி நடத்துபவரின் விசிலுக்காக காத்திருக்க மீனாட்சியின் மனதில் பதட்டம் வந்தது. திரும்பி சித்தார்த்தை பார்க்க அவனும் அதே நிலையில் தான் இருந்தான்.

விசில் சத்தம் கேட்டதும் அனைவரும் ஓடத் தொடங்க மரகதம் அனைவரையும் முந்திக் கொண்டு முதலாவதாக வந்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.

அதே சமயம் அங்கே ஓட்ட போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு கொடுக்க அவளை பணித்த சித்தார்த், அங்கே மரகதம் முதல் பரிசு என அறிவிக்கப்பட மைக்கை பிடித்தவர் எல்லோர் முன்பும் பேசத் தொடங்கினார்.

“ இந்த வயசில நான் இந்த ஓட்டப்பந்தயத்துல கலந்துக்க காரணம் என் பேத்தி தான். நான் சொன்ன வார்த்தைக்கு தன்னை வருத்திக்கிட்டு ஜெயிச்சு காட்டிட்டா. நீ எங்களை பெருமைப் படுத்தின மாதிரி நானும் உன்னை பெருமைப் படுத்தனும்லடி ஆத்தா.. ” என கூறியவரை கண்டு அதிர்ந்து போய் நின்றவளை ஒரு பார்வை பார்த்தவர் மேலும் பேசினார்.

“ இந்த நாலு வருசத்துல யாரையும் வந்து பாக்காம நீ எப்படி கஷ்டப் பட்டியோ, நானும் இந்த நிலத்துல மூச்சு வாங்க ஓடி கஷ்டப்பட்டுருக்கேன்டி ஆத்தா! உனக்கு கஷ்டத்தை கொடுத்துட்டு நான் ஜம்முன்னு இருப்பேன்னு நினைச்சியா?” என கூறியவரை “ அப்பத்தா” என்ற கதறலோடு அணைத்து கொண்டாள்.

“ எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு அப்பத்தா” என அவள் கைகளால் பரிசை வாங்கிகொண்டு அவளது கன்னத்தில் முத்தம் கொடுத்த மரகதம் அவளது காதில் “ அப்படியே உன் அத்தைமகனை கட்டிக்கோடி ஆத்தா. நீ இன்னும் பெருமைப் படலாம்” எனக் கூறினார்.

சட்டென்று அவளது குறும்புத்தனம் தலைதூக்க “ நீ ஒலிம்பிக்ல ஓடி தங்கப்பதக்கம் வாங்குனா இன்னும் பெருமைப் படுவேன்ல கிழவி” என வம்பிழுக்க “ ஆளை விடுடி ஆத்தா” என அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

********************************

வனிதா கண்ணன்
 
Author: siteadmin
Article Title: தன்முனைப்பு - வனிதா கண்ணன்
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

vidya

New member
Feb 3, 2026
1
0
1
Tamilnadu

Nice 👍